PDA

View Full Version : அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி மூலம் அரசு அறிவித்தல்



shibly591
17-04-2008, 09:31 AM
வீரகேசரி நாளேடு 4/17/2008 9:19:17 AM - அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடைமுறை நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது என்று வர்த்தக மற்றும் வாணிபத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதன் பிரகாரம் சம்பா அரிசி 70 ரூபாவிற்கும் ,சிவப்புபச்சை அரிசி 58 ரூபாவிற்கும், வெள்ளைபச்சை அரிசி 55 ரூபாவிற்கும், நாட்டரிசி 65 ரூபாவிற்கும் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படும்.

இதேவேளை மொத்தவிலையில் சம்பா அரிசி 63 ரூபாவிற்கும் ,சிவப்பு பச்சை அரிசி 65 ரூபாவிற்கும், வெள்ளை பச்சை அரிசி 48 ரூபாவிற்கும், நாட்டரிசி 58 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.

சில்லறை விலை ரூபா மொத்த விலை ரூபா

சம்பா அரிசி 70 63 சிவப்பு பச்சைஅரிசி 58 65

வெள்ளை பச்சை அரிசி 55 48

நாட்டரிசி 65 58

கொழும்பில் நேற்று மாலை நடத்திய அவசர ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார். இந்த நடைமுறையை மீறுவோருக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தின் மூலமாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாட்டில் நிலவுகின்ற அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

நன்றி-வீரகேசரி