PDA

View Full Version : ஹாரி பாட்டர் யாருக்குச் சொந்தம்



shibly591
17-04-2008, 05:17 AM
ஹாரி பாட்டர்' என்ற கற்பனைப் பாத்திரம் யாருக்குச் சொந்தம் என்பதில் இரு தரப்பு மோதிக் கொண்டிருக்கிறது. 1986-ம் ஆண்டு "ட்ரோல்' என்ற திரைப்படம் வெளியானது.
ஜான் ப்யூச்லர் என்பவரது இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில், ஹாரி பாட்டர் ஜூனியர் என்ற சிறுவன் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருந்தது. படம் சரியாக ஓடவில்லை.

இதற்கிடையே, 1990-களின் மத்தியில் ஜே.கே.ரோலிங் என்ற பெண் எழுத்தாளர், ஹாரிபாட்டர் நாவலை எழுதி வெளியிட்டார். இந்தப் புத்தகம் பரபரப்பாக விற்பனையாகவே, இந்த நாவலை படமாக்கும் உரிமையை "வார்னர் பிரதர்ஸ்' நிறுவனம் பெற்றது.

ஜே.கே. ரோலிங்கின் நாவல்கள் பல பகுதிகளாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது போல, அதை மையமாக வைத்து வார்னர் பிரதர்ஸ் தயாரித்த திரைப்படங்களும் வசூலைக் குவித்தன.

இந்த நிலையில், தனது "ட்ரோல்' படத்தை மீண்டும் உருவாக்க (ரீமேக்) ஜான் அறிவித்தார். இது வார்னர் நிறுவனத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாரி பாட்டர் கதாபாத்திரத்தின் உரிமை தங்களிடம் உள்ளதாகவும், அதனால், ஜான் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கிடையே, புதிய "ட்ரோல்' படத்தில் ஹாரி பாட்டர் வேடத்தில் நடிப்பதற்காக குழந்தை நட்சத்திரத்தை தேடும் பணியில் ஜான் ஈடுபட்டுள்ளார்.

இந்தப் பணியில் அவருக்கு ஆதரவாக பீட்டர் டேவி என்ற தயாரிப்பாளர் இருக்கிறார்.

முதல் முதலாக ஹாரி பாட்டரை உருவாக்கியது ஜான்தான் என பீட்டர் டேவி உறுதியாகக் கூறி வருகிறார். அவர் உருவாக்கிய ஹாரிபாட்டருக்கும் ரோலிங் உருவாக்கிய ஹாரி பாட்டருக்கும் அனேக ஒற்றுமைகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால் ட்ரோல் படத்தை இதுவரை தாம் பார்த்ததில்லை எனக் கூறிவரும் ஜே.கே.ரோலிங், ஹாரி பாட்டர் தனது சொந்தப் படைப்பு என்கிறார்.


நன்றி :- விடுப்பு

ஓவியன்
17-04-2008, 05:27 AM
ஹரிப்போட்டர் தன் கதாபாத்திரமென்றால் ஜான், ரோலிங்கின் முதலாவது புத்தகத்தின் போதே பிரச்சினை எடுத்திருக்க வேண்டும். அதனை விடுத்து ஒரு பிரபலமான கதாபாத்திரத்தின் கதை நிறைவடைந்த பின்னர் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பது ஏனோ..??