PDA

View Full Version : விளையாட்டும் வினையும் ............. முற்றியது.



செல்வா
16-04-2008, 11:12 PM
புகு முன் : எல்லாரும் கதை எழுதுறாங்கனு நானும் கதை எழுத ஆரம்பிச்சன்:eek::eek:.
(என்னடா இது மன்றத்துக்கு வந்த சோதனைனு மலரு புலம்புறது கேக்குது)
இவன் கூட கதை எழுத ஆரம்பிச்சுட்டான் பாருங்கற ஆத்திரத்தில மன்ற மென்பொருள் ஒட்டு மொத்தமா பத்துநாள் பதிவுகளை அழிச்சுடுச்சு. ஏண்டா இந்த வம்பு அப்படின்னு கதை எழுதுற எண்ணத்த அப்படியே உட்டாச்சு. ஆனா இந்த மனசு இருக்கே அது இப்படித்தான் அப்பப்ப கதை எழுது கதை எழுதுண்ணு வேற எந்த வேலையும் பாக்க உடுறதில்ல. அதுலயும் சிவா அண்ணா கதை எழுதுற வேகத்த பாத்ததும். அடேய் இனிமே சிவா அண்ணானு சொல்லிட்டு அவர் பின்னால போவ. அண்ணன் எழுதுறதுல பாதியாவது தம்பி எழுத வேணாமானு ஒரே நச்சரிப்பு சரி.. மன்ற மக்கள் தான் எதையும் தாங்கும் இதயமாச்சே (இதயம் மொறைக்கிறாரு பாருங்க.. அட உங்கள இல்லீங்க:p). எழுதித்தான் பாப்பமேண்ணு அழியாம தப்பிச்ச பகுதிய இங்க போடுறேன்;). முடிச்சுடுவங்குற நம்பிக்கையில தான் எழுதுறன்... பாக்கலாம்.
********************************************************************************************************
பீப் ….. பீப்…..பீப்……………..

எதிரே தெரிந்து கொண்டிருந்த இயற்கையில் மனம் தொலைத்திருந்த அவன் சத்தம் கேட்டு கலைந்தான். கை அனிச்சையாக அலைபேசியைத் தேடிப்பிடித்தது. பார்த்தான் குறுந்தகவல் வந்துள்ளதாகக் காட்டியது அலைபேசி.

“நான் வந்துவிட்டேன் …. எங்கே போய்த் தொலைந்தாய்…..?”
அவள் தான் அனுப்பியிருந்தாள்…..

“உங்கள் ஊரின் வனப்பு என் கண்களை கட்டிப் போட்டு விட்டது, உனக்குப் பின்னால் தான் இருக்கிறேன் வருகிறேன்”
பதில் அனுப்பிவிட்டு மெதுவாக எழுந்து திரும்பினான். அதற்குள் அடுத்த பீப்…பீப்.

இவளால் மட்டும் எப்படி இத்தனை வேகமாக அலைபேசியில் தட்டச்ச முடிகிறது… மறுபடியும் மனதிற்குள் அந்த வியப்பு

“யார சைட் அடிச்சிட்டு இருக்க….”

“இயற்கையை…….நீயும் வா .. சேர்ந்தே சைட் அடிக்கலாம்….”

ஐந்தடி நடப்பதற்குள் மறுபடியும் பீப்…பீப்…..

“அடி இடி மாதிரி விழும். பசில உயிர் போகுது… நீ காத்திருப்ப சேர்ந்து சாப்பிடலாமென்று வேகவேகமா வந்தா … அடசீ வாடா.”
அலைபேசியைப் பூட்டி பைக்குள் போட்டுவிட்டு நடையைத் துரிதமாக்கினான்……

காத்திருந்த வெளிர்பச்சை நிற ஹோண்டா சிட்டி யின் முன் பக்க கதவைத் திறந்து இருக்கையை ஆக்ரமித்தான்.

கையில் வைத்திருந்த… பாலித்தீன் பையை அவளிடம் கொடுத்தான். சில இனிப்பு வகைகள்.
ஆவலோடு வாங்கி வைத்துவிட்டு.
தன் மடியிலிருந்த குழந்தையை அவன் மடிக்கு மாற்றினாள்.

குழந்தையை வாங்கும் சாக்கில் தேவைக்கு அதிகமாகவே அவள்மேல் உராய்ந்தான்.

“புள்ளய தூக்குண்ணா தூக்காம என்ன பண்ணிகிட்டுருக்க….. “
அவன் எழாமல் அப்படியே இருக்க தலைமுடியைப் பிடித்து… தூக்கினாள்….

“போதும் எழும்பு நான் வண்டி ஓட்டணும் பசிக்குது….. என்ன சாப்பிடுற… “

என்று கேட்டவாறே வண்டியைக் கிளப்பினாள்….

யாரோ முடியைப் பிடித்து இழுத்ததுப் போல் சுரீரென்று வலித்தது……

நினைவுகளிலிருந்து மீண்டவள் மடியிலிருந்த குழந்தையைச் சரிசெய்தாள்.

குழந்தைதான் முடியைப் பிடித்திழுத்திருக்கிறது. சுற்றும் முற்றும் பார்த்தாள் நிலையம் வெறிச்சோடிப் போயிருந்தது. எங்கும் அமைதி. மொத்தமாகப் பார்த்தால் ஐந்து பேர் இருக்க மாட்டார்கள். எதிர் திசையில் பார்த்தாள். ரயில் வர இன்னும் நேரமிருக்கிறது.

இந்த நிலையத்தில் தான் அவனுடனான மூன்றாவது சந்திப்பு. அந்த நினைவுகளில் இருந்தவளைத்தான் குழந்தை இழுத்துப் பிடித்து நிகழ்காலத்திற்கு கூட்டி வந்திருந்தது…..

தொடர்ச்சி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=342159&postcount=12)

அக்னி
16-04-2008, 11:20 PM
உங்கள் புதுப் பிரவேசத்திற்கு,
முதல்வனாய்,
முதல்வனாய்ப் புகழ் பெற
வாழ்த்துகின்றேன்...

செல்வா
16-04-2008, 11:25 PM
அடடே அதுக்குள்ள வாழ்த்துக்கள்... நன்றி அக்னியாரே


உங்கள் புதுப் பிரவேசத்திற்கு, முதல்வனாய்,
நல்லவேள பிரதேசத்திற்கு முதல்வனாய்னு சொல்லாம விட்ட இல்லண்ணா பெரிய அரசியல் பிரச்சனையே உண்டாகியிருக்கும்:icon_ush:

ஓவியன்
17-04-2008, 02:14 AM
அட நம்ம செல்வா கதையா இது ?, அடச்சே எல்லாம் தப்பித் தப்பாகவே வருது செல்வா எழுதின கதைனு சொல்லப் போக, நாக்குத் தவறி...........

மன்னிச்சுக்கோங்கோ செல்வா.........!!! :icon_rollout:

ஆரம்பமே அசத்தலா இருக்கு (உண்மையாகத் தானுங்கோ..!! :)), தொடர்ந்து அசத்த என் வாழ்த்துகள்..!!

மதி
17-04-2008, 03:18 AM
செல்வா...
கலக்கல் ஆரம்பம்.. இதை ஏற்கனவே மன்றத்தில் பதிச்சீங்களா...?
படித்ததாய் ஞாபகம்..

மேலும் வினைகளை அறிய ஆவல். உங்கள் விளையாட்டுகளைத் தொடருங்கள்..

ஓவியன்
17-04-2008, 04:14 AM
படித்ததாய் ஞாபகம்..

நினைவுப் பேளை மதி வாழ்க..!!! :rolleyes:

ஆதி
17-04-2008, 04:14 AM
காணாமல் போனப் பத்துநாள் பதிப்புக்களில் இதுவும் ஒன்று.. மீண்டும் இந்தக் கதையை துவயங்கியமைக்கு வாழ்த்துக்கள்.. தொடர்க..

இதயம்
17-04-2008, 05:23 AM
ஒரு முக்கிய அறிவிப்பு...! முன்பு ஒரு முறை மன்றத்தில் கதை எழுதி, நம் மன்றத்தின் பத்து நாள் பதிவுகளையும் காணாமலடித்த இ.சோ. செல்வா மீண்டும் மன்றத்தில் அதே கதையை (அட தேவுடா..!!) போட்டுள்ளதால், மிகவும் கஷ்டப்பட்டு படைப்புகளை அளித்த மன்ற மக்கள் தங்கள் பதிவுகளை நகலெடுத்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..!! இந்த எச்சரிக்கையை புறக்கணிப்பவர்கள் பிறகு மன்றத்தில் அவரவர்களின் பதிவுகளை இழந்தால் அதற்கு மன்றம் பொறுப்பாகாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்..!!

பதிவுகள் போன பின் அவருக்கு பரிசு கொடுக்க விரும்புபவர்கள் என்னை தாராளமாக தொடர்பு கொள்ளலாம். எனக்கு அவர் இருப்பிடம் தெரியும்..!!! (போக்குவரத்து செலவு இலவசம்..!)

(ஏதோ என்னால முடிஞ்சது செல்வா..!!! ஹி..ஹி..!!)

சிவா.ஜி
17-04-2008, 05:44 AM
அசத்தலான இந்தக் கதை, காணாமல்போனது போனதுதானா என்ற ஏக்கமிருந்தது. மீண்டும் தொடங்கிவிட்டார். ஆனால் ஏற்கனவே பதிந்தது. இதெல்லாம் கட்டுப்படியாகாது. அடுத்தடுத்த பாகங்களை உடனே கொடுக்கனும். ஆஃபீஸுக்கு லீவ் போட்டுட்டாவது எழுதனும்...ஆமா...

கலக்கலா போகுது...தொடருங்க செல்வா...கூடவே வரோம்.

ஓவியன்
17-04-2008, 05:54 AM
ஆஃபீஸுக்கு லீவ் போட்டுட்டாவது எழுதனும்...

அதுக்கு ஏன் மொத்த ஆபிஷூக்கே லீவ் போடணும், நம்ம செல்வா மட்டும் லீவ் போட்டால் போதாதா சிவா..?? :rolleyes:

சுகந்தப்ரீதன்
17-04-2008, 06:17 AM
ஆரம்ப கதை நன்றாக இருக்கிறது செல்வா..வாழ்த்துக்கள்..தொடருங்கள்..!!

ஆமா..இந்த கதை முடிஞ்சிடுச்சா..? இல்லை இன்னும் தொடருமா..? முடி(வி)ல்லாம மொட்டையா நிக்கிற மாதிரில்ல இருக்குது..?!

செல்வா
17-04-2008, 06:22 AM
வாந்தி எடுப்பது போன்ற அந்த சத்தம் வந்ததும் திடுக்கிட்டு குழந்தையைப் பார்த்தவள்…. குழந்தையின் வாயில் சிக்கியிருந்த முடியை உருவினாள். தன் முடியை இழுத்தபோது குழந்தையின் கையில் சிக்கிய முடியோடு குழந்தை வாயில் கை வைத்திருந்தாள். குழந்தையின் வாயைத் துடைத்து விட்டு கையில் சிக்கியிருந்த முடியை உருவி எறியும் முன் பார்த்தாள்.

“ம் பரவால்ல கொஞ்சம் நீளமாகவே வளந்திருக்கிறது” முனகிக் கொண்டாள். இதுவும் அவனுக்காக….

அவளுக்கு தலையில் பாரம் இருப்பதே பிடிக்காது. கொஞ்சம் வளர்ந்தாலே வெட்டி விடுவாள். ஆனால் அவனுக்கோ நீளமான தலைமுடி ரொம்பப் பிடிக்கும்.

“தூங்குவதற்கு தலையணைத் தேவையில்லை உன் கூந்தலை சுருட்டி தலைக்கு வைத்துத் தூங்கிக் கொள்வேன்” என்பான்.

“அப்டிண்ணா நீ என் தங்கையைத் தான் காதலிச்சுருக்கணும்” என்பாள் அவள்.
அந்த சம்பாசனை நினைவுக்கு வர இதழோரம் புன்னகை.

இந்த புன்னகை பூத்த முகத்தைக் கண்டால் மயங்கி விடுவான். குழைவான். அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பான். அவளுக்குத் தான் வெட்கத்தில் கன்னங்கள் சிவக்கும்.

“டேய் அப்படிப் பாக்காதடா “ என்று சிணுங்குவாள்.

“அட உனக்கு வெட்கம் கூட வருமா?” என்று சீண்டுவான்.

மறுபடியும் நினைவுகள். நினைவால் கன்னங்கள் மறுபடியும் சிவந்தது. ஆனால் பார்த்து சிரிக்கவோ இல்லை சீண்டவோ அவன் அருகில் இல்லை.
வெட்கம் மாறி கண்களில் ஒரு கலக்கம். உடலில் ஒரு நடுக்கம் பரவியது….

“நான் தான் தவறு செய்து விட்டேனோ?” மனதிற்குள் கேள்வி….. பெருமூச்சு ஒன்று அவளறியாமல் வெளிவந்தது…. சற்று நினைவுகள் கலைந்து எதிர்ப்புறம் பார்த்தாள்
இரயில் வந்துகொண்டிருந்தது……..

பரபரப்பாய் எழுந்து குழந்தையைத் தோள் மேல் சாய்த்துக் கொண்டு பெட்டிகளை தூக்குவதற்கு ஏதுவாய் எடுத்து வைத்தாள்.

இரயில் வந்து நின்றதும் தானியங்கிக் கதவுகள் தானாகத் திறந்து கொள்ள உள்ளிருந்து இருவர் இறங்க வழிவிட்டு. பெட்டியையும் இழுத்துக் கொண்டு உள்ளே செல்ல முயற்சித்தாள்.
பெட்டியின் சக்கரம் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
நல்ல வேளையாகப் பக்கத்து பெட்டியிலிரந்து இறங்கிய ஒருவர் வந்து உதவிசெய்தார். “நன்றி” என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு. இருக்கையில் அமர்ந்தாள். மனதிற்குள் கவலை மறுபடி குடிகொண்டது.

குழந்தை அழத் தொடங்கினாள். தோள் பையைத் திறந்து கலக்கி வைத்திருந்த பால்குப்பியைச் சப்ப கொடுத்தாள்.
குழந்தை அமைதியாகப் பால் குடிக்கத் துவங்கியது. குழந்தையின் தலையை வருடிக் கொடுத்தபடி முகத்தைப் பார்த்தாள்.

குழந்தைகளின் முகத்தைப் பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று. கள்ளங்கபடமில்லா அந்த பிஞ்சு முகங்களைப் பார்க்கும் பொழுது. நம் கவலைகள் எல்லாம் ஒரு நிமிடம் மறந்து குழந்தைப் பருவத்திற்கு நாமும் செல்வது…. நம்மால் தடுக்க முடியாத ஒன்று. இந்த உலகத்தில் தன் குழந்தைப் பருவத்தை நினைத்து ஏங்காத மனிதர்களே இல்லை எனலாம்.

அவளுக்கும் அப்படியே…. இந்த குழந்தைக்காகத் தானே அவள் வாழ ஆரம்பித்தாள். இந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் அவள் சோகம் மறைந்து மனதில் குதூகலம் பொங்குமே. குழந்தையும் அவள் இல்லை என்றால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஊரைக்கூட்டி விடுமே. அம்மா கூட சலித்துக் கொள்வார்கள்.

“இந்தா உன் பொண்ண நீயே வச்சுக்க… உன்ன விட்டு யாருகிட்டயும் இருக்க மாட்டிங்குறா” பெருமையாக இருக்கும் அப்போதெல்லாம்.

“என் செல்லம்” என்று மார்போடு அணைத்துக் கொள்வாள்.

செல்லம் …. அவன் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. அவன் கொஞ்ச ஆரம்பித்து விட்டான் என்றால் …

அப்பப்பா… உடல் சிலிர்த்தது இப்போதும். காதுக்குள் கேட்கும் அவன் குரல்

“செல்லம், செல்லக் குட்டி “ என்று ஆரம்பிப்பவன் “பண்ணிக் குட்டி …. லூசுக் குட்டி “ என்று கொண்டு நிறுத்துவான்.

அவளுக்கு மெல்ல கோபம் ஏறும்.

“போடா நீ தான் பண்ணி… நாய் என்று திட்டுவாள்.” கையில் கிடைத்ததைத் தூக்கி எறிவாள் அவன் மீது.

நினைவுகள் விட்டுச் சென்ற புன்னகை உதட்டோரத்தில்.

குழந்தை பால்குடித்து முடித்திருந்தாள். தூங்கிப் போயிருந்தாள். பால்குப்பியை வாயிலிருந்து எடுத்து பைக்குள் போட்டுவிட்டு குழந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

குழந்தையின் முகம் மறுபடி அவனை நினைவுக்கு இழுத்து வந்தது. அவனோடு கூட கடைத் தெருவிற்கு சென்றிருந்த போது ஒரு பெரியவர் அவனையும் குழந்தையையும் பார்த்து விட்டு

"மகாலட்சுமியே உனக்கு வந்து பிறந்திருக்கிறாள் பா"
என்று வாழ்த்திவிட்டுச் சென்றது இன்னமும் காதில் ஒலித்தது.

அவளுக்குப் புரியாத விசயங்களில் இதுவும் ஒன்று.
அவனுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத இந்தக் குழந்தைக்கு அவனது சாயல் எப்படி வந்தது என்பது….?

தொடர்ச்சி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=342375&postcount=15)

ஓவியன்
17-04-2008, 06:22 AM
அதுலயும் சிவா அண்ணா கதை எழுதுற வேகத்த பாத்ததும். அடேய் இனிமே சிவா அண்ணானு சொல்லிட்டு அவர் பின்னால போவ. அண்ணன் எழுதுறதுல பாதியாவது தம்பி எழுத வேணாமானு ஒரே நச்சரிப்பு சரி....


முடி(வி)ல்லாம மொட்டையா நிக்கிற மாதிரில்ல இருக்குது..?!

நம்ம சிவா எழுதுறாருனு செல்வாவும் எழுதின கதை இல்லே - அதுதான் அப்படி..!! :aetsch013:

மதி
17-04-2008, 04:57 PM
வித்தியாசமான நடை.. வர்ணனை...விவரிப்பு...
கடைசியில சின்னதாய் ஒரு சஸ்பென்ஸ்..

தொடருங்க அண்ணா..

செல்வா
18-04-2008, 01:31 AM
இரயில் அறிவிப்புடன் அங்குலம் அங்குலமாக நகரத் துவங்கியது.
சன்னலுக்கு வெளியே பார்வையைத் திருப்பியவளின் கண்களுக்கு இயற்கை அன்னை வாரிக்கொட்டியிருந்த மலேசியாவின் அழகு மனதிற்கு சிறிது அமைதி அளித்தது.
எங்கு நோக்கினும் பச்சைப் பசேலென்று… பட்டுக் கம்பளம் விரித்தார் போன்ற கண்ணிற்கு குளிர்ச்சியான காட்சிகள்.
இரயில் இப்போது வேகமாகச் செல்ல ஆரம்பித்தது.
சன்னலுக்கு வெளியே மரங்களின் வேகமான ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாத கண்கள் களைப்படைய … இமைகள் மெள்ள மூடின.
மீண்டும் அவள் கண்திறந்து பார்க்கும் போது ரவாங் நிலையத்தில் இரயில் நின்று கொண்டிருந்தது.
வேகமாக குழந்தையையும், பெட்டிகளையும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.
கே.எல் சென்ட்ரல் நிலையத்திற்கு செல்ல இங்கிருந்து அடுத்த வண்டியைப் பிடிக்க வேண்டும்.
நடைபாதை வழியாக தண்டவாளங்களைக் கடந்து எதிர்ப்பக்கத்திற்குச் செல்லவேண்டும்.
குழந்தையையும் வைத்துக் கொண்டு பெட்டிகளையும் இழுத்துச் செல்வது மிகக் கடினமாக இருந்தது. அண்ணணிடம் கேட்டிருக்கலாம் கே.எல் சென்ட்ரல் நிலையத்தில் இறக்கிவிட. இல்லை அவன் கண்டு கொள்ளவே மாட்டான். வீட்டிற்கு அவன் வருவதே உணவருந்தவும் உறங்கவும் மட்டும் தான். மற்ற நேரங்களில் என்ன செய்கிறான் எங்கு செல்கிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

அப்பாவிடம் கேட்டிருக்கலாம் கொண்டும் விட்டிருப்பார் ஆனால்…. அவரால் தான் இத்தனைப் பிரச்சனைகளும். ஒரு தந்தையின் இடத்திலிருந்து செய்ய வேண்டிய எத்தனை கடமைகளைத் தான் அவர் செய்தார். மாலையானால் கோல்ப் விளையாடப் போகிறேன் என்று கிளப்பில் சென்று மூக்கு முட்ட குடித்துவிட்டு வீட்டிற்கு வரவேண்டியது.

அம்மா …. ஆம் அவர்கள் குடும்பத்தையே தனது உழைப்பால் தாங்கிக் கொண்டிருப்பவள் அவள். அம்மாவுக்கு அவள் போவது சற்றும் பிடிக்கவில்லை.
நாளை முதல் அம்மா தனியாகக் கஷ்டப்படப் போகிறாள். என்ன செய்வது? ஆனால் சமீபகாலமாக அப்பாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவது சிறிது நம்பிக்கையளிக்கிறது.
அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் இனிமேல் அதைப்பற்றி கவலைப் பட்டு எதுவும் ஆகப்போவதில்லை. வேண்டுமென்றால் வேலைக்கு யாரையாவது வைத்துக் கொள்ளட்டும்.

சிந்தித்த படியே ஒருவழியாக பெட்டியை இழுத்துக் கொண்டு வந்து நடைபாதையில் இருந்த மரப்பலகையில் அமர்ந்தாள். நல்ல வேளையாக touch & go அட்டையைக் கொண்டுவந்திருந்ததால் பயணச்சீட்டுக்காக அலையவேண்டிய வேலை இல்லை. இரயில் வர இன்னும் நேரமிருக்கிறது.

குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு தூங்க வைப்பதற்காக தட்டிக் கொடுத்த படி காத்திருக்க ஆரம்பித்தாள். நடந்து வரும்போது விழித்த குழந்தை மறுபடியும் தூங்க ஆரம்பித்தது.

ராஸா நிலையத்தை விட ரவாங் நிலையம் சற்று பெரிய நிலையம். எப்போதும் ஆள் நடமாட்டமகவே இருக்கும். இரண்டாவது முறையாக அவனைச் சந்தித்த இடமிது.

எவ்வளவோ எதிர்பார்ப்புகளோடு அவனது மலேசிய வருகை இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு அவனோடு உரையாடவோ அவனைச் சந்திக்கவோ முடியவில்லை. கடைவேலை மிக அதிகம் அந்த நேரம் பார்த்து. வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவரும் நின்று விட அனைத்து வேலைகளும் அவள் தலையில் இதனால் வேலையை விட்டு விட்டு அவனைப் பார்க்க அடிக்கடி போகமுடியவில்லை.

ஆனால் பட்டு குகை முருகனை தரிசிக்க அவன் வருவதாகச் சொன்னதும் தான் தோன்றியது அந்த எண்ணம்.

ஆசையாசையாய் சந்திக்க வந்து விட்டு சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்து போன அந்த இரண்டாவது சந்திப்பு அவள் நினைவுக்கு வந்தது.

தொடர்ச்சி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=342905&postcount=29)

செல்வா
18-04-2008, 01:35 AM
அட நம்ம செல்வா கதையா இது ?, அடச்சே எல்லாம் தப்பித் தப்பாகவே வருது செல்வா எழுதின கதைனு சொல்லப் போக, நாக்குத் தவறி...........

மன்னிச்சுக்கோங்கோ செல்வா.........!!! :icon_rollout:

ஆரம்பமே அசத்தலா இருக்கு (உண்மையாகத் தானுங்கோ..!! :)), தொடர்ந்து அசத்த என் வாழ்த்துகள்..!!

தவறும்லே தவறும்.. தங்கைக்கிட்ட சொல்லி நாலு சாத்து சாத்த சொன்னா நாக்கு மட்டுமில்ல அப்புறம் விரல் கூட தவறாது.

வாழ்த்துக்கு நன்றிங்கோ...

செல்வா
18-04-2008, 01:37 AM
செல்வா...
மேலும் வினைகளை அறிய ஆவல். உங்கள் விளையாட்டுகளைத் தொடருங்கள்..

என்னோட விளையாட்டு இல்லீங்க என் கற்பனையின் விளையாட்டுக்கள்ங்கோ.... நன்றி மதி.

செல்வா
18-04-2008, 01:39 AM
இந்தக் கதையை துவயங்கியமைக்கு வாழ்த்துக்கள்.. தொடர்க..
துவங்குறது பிரச்சனை இல்லடா..... முடிக்கிறது தான் பிரச்சனை... ம் முயற்சி பண்றேன். வாழ்த்துக்கு நன்றி.

செல்வா
18-04-2008, 01:53 AM
(ஏதோ என்னால முடிஞ்சது செல்வா..!!! ஹி..ஹி..!!)

:sauer028::sauer028::sauer028::sauer028:

செல்வா
18-04-2008, 01:55 AM
ஆஃபீஸுக்கு லீவ் போட்டுட்டாவது எழுதனும்...ஆமா...

ஆகா.... விட்டா வேலக்கி உல வச்சுடுவாங்க போலருக்கே... செல்வா எஸ்கேப்...

நன்றி அண்ணா... எல்லாம் உங்களப் பாத்து வந்தது தானே... முயற்சி பண்றன் சீக்கிரம் முடிக்க. நன்றி அண்ணா.

செல்வா
18-04-2008, 01:57 AM
ஆரம்ப கதை நன்றாக இருக்கிறது செல்வா..வாழ்த்துக்கள்..தொடருங்கள்..!!

ஆமா..இந்த கதை முடிஞ்சிடுச்சா..? இல்லை இன்னும் தொடருமா..? முடி(வி)ல்லாம மொட்டையா நிக்கிற மாதிரில்ல இருக்குது..?!

நன்றி சுகந்தன். அடுத்த பாகத்த எழுதிட்டு தான் தொடரும் போடுறது என்னோட வழக்கம்..:icon_ush:

செல்வா
18-04-2008, 01:59 AM
தொடருங்க அண்ணா..

என்னாது அண்ணா..வா......:eek::eek: அலோ.. இது சிவா அண்ணா தம்பி செல்வாவோட திரி.... தப்பா தப்பா எல்லாம் பேசக்கூடாது.

மதி
18-04-2008, 02:12 AM
என்னாது அண்ணா..வா......:eek::eek: அலோ.. இது சிவா அண்ணா தம்பி செல்வாவோட திரி.... தப்பா தப்பா எல்லாம் பேசக்கூடாது.

அதான் அண்ணா...
எல்லோருக்கும் நான் சின்னவன்ல... ஹிஹி :D:D:D:D

சும்மா சொல்லக்கூடாது... அசத்தலா எழுதறீங்க..
சுஜாதா ஒரு கதையில் முதல் முப்பது பக்கத்திற்கு எழுதியது யாருக்குமே புரியாது...ஒரு அத்யாயத்தின் இறுதியில் "சுழன்று கொண்டிருந்த டேப் நின்றது"னு முடிக்கறப்போன்னு சொல்லும் போது தான் புரிய ஆரம்பிக்கும்.

அதே மாதிரி உங்க கதையும் சுத்தமா புரிந்ததுன்னு சொல்லமாட்டேன். ஆனா என்னவோ இருக்கு இதுலன்னு எதிர்பார்ப்ப உண்டாக்கிடுச்சு. மேலும் என்னவா இருக்கும்னு யோசிக்கவும் வைக்குது. மேலும் தொடருங்கள்...:icon_b:

ஓவியன்
18-04-2008, 03:05 AM
செல்வா மூன்றுபாகத்தையும் மறுபடி முழுமையாகப் படித்தேன், மதி கூறியது போல முழுமையும் புரிந்ததாகக் கூறமுடியாது, ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக புரிகிறது. குழந்தையில் தான் எதோ சூட்சுமம் இருப்பதாகத் தெரிகிறது. சரி, சரி தொடருங்க பார்ப்போம்.

lolluvathiyar
18-04-2008, 05:22 AM
இந்த கதை போட்டதால மன்றத்துல ஏதும் கலவரம் நடந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லீங்க.

கவலை படாதீங்க எந்த கலவரம் வந்தாலும் நான் பொருப்பேற்று அதை தீர்த்து சமரசம் செய்து சுமுகமான முடிவை ஏற்படுத்தி வைக்கிறேன்.

அப்பா என்னடா நம்ம செல்வா கதைக்கு ஓவர் பில்டப் கொடுக்கிறார் என்று நினைத்து படிக்க ஆரம்பித்தால் ஆகா இது வழக்கமான செல்வாவின் நகைசுவை படைப்பு போல அல்ல ஏதோ சீரியசான கதை அல்லவா ஓடி கொன்டு இருக்கிறது. (ஆனாலும் நகைசுவை நடை குரையவில்லை) விரைவில் அடுத்த பாகங்களை எழுதுங்கள். காத்திருகிறேன்

சிவா.ஜி
18-04-2008, 06:06 AM
சுறு சுறுப்பாய் மூன்று பாகங்களையும் கொடுத்துவிட்டீர்கள். தெளிவான நடையில் அழகாகப் பயணிக்கிறது கதை. தேர்ந்த எழுத்தாளரின் திறமை எழுத்துக்களில் தெரிகிறது. கலக்குங்க செல்வா. கூடவே நாங்க எல்லாரும் வரோம்.

செல்வா
19-04-2008, 12:36 AM
அப்பா என்னடா நம்ம செல்வா கதைக்கு ஓவர் பில்டப் கொடுக்கிறார் என்று நினைத்து படிக்க ஆரம்பித்தால் ஆகா இது வழக்கமான செல்வாவின் நகைசுவை படைப்பு போல அல்ல ஏதோ சீரியசான கதை அல்லவா ஓடி கொன்டு இருக்கிறது.
ஆகா... பில்டப்பு எல்லாம் இலல்லண்ணா.... :confused::confused:
நன்றி வாழ்த்துக்களுக்கு அண்ணா:)

செல்வா
19-04-2008, 12:37 AM
கூடவே நாங்க எல்லாரும் வரோம்.
நன்றி அண்ணா... நீங்க குடுத்த தைரியத்துல தான் எழுதுறேன்.

செல்வா
20-04-2008, 01:52 AM
கையிலிருந்த அலைபேசி ஒலியுடன் குறுந்தகவல் வந்துள்ளதாகத் தெரிவித்தது. மனதிற்குள் நினைத்தான். எப்படித்தான் இவளால் இத்தனை குறுஞ்செய்திகள் அனுப்ப இயலுகிறதோ?

மலேசியா வருவதற்கு முன்பே சொல்லி விட்டாள்.
வந்ததும் முதல் வேலையாக DIGI நிறுவனத்தாரின் SIM card வாங்கிக்கோ அதுல நண்பர்கள் எண்கள் பதிவுசெய்து வைத்துக் கொண்டால் குறுஞ்செய்திக்கு 1 சென்ட் (காசு) தான். நான் வேலையிலிருப்பதால் அதிகமாக பேச முடியாது. குறுஞ்செய்தி தான் அனுப்புவேன் என்று சொன்னாள். அதே போன்று வந்ததும் 8வெள்ளி கொடுத்து இணைப்பு வாங்கிக் கொண்டான்.

மூன்று நாட்களுக்குள் வந்து சேர்ந்த குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை 400ஐத் தொடப்போகிறது.

கணிணி விசைப்பலகையிலேயே… நான்கு விரல்களால் தட்டச்சும் இவனுக்கு அலைபேசி விசைப்பலகை எந்தளவுக்குத் தான் வசப்பட்டிருக்கும்?

ஊரில் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்புவதற்கு ஆகும் நேர விரயத்தை வெறுத்து காசு போனாலும் பரவாயில்லை என்று அழைத்தே பேசிவிடுவான் ஆனால் இங்கே அதற்கு வழிஇல்லை, அழைத்தாலும் பேச இயலாது. மாற்றி மாற்றி முயன்றதில் கண்ணாமூச்சி காட்டிய விசைப்பலகை கொஞ்சம் கைவசப் பட்டிருந்தது.
அப்புறம் 400 குறுஞ்செய்திகளுக்கு பதிலனுப்புவது என்பது சாதாரண விசயமா? அவனைப் பொறுத்தவரை கின்னஸ் சாதனைக் கொத்த விடயம் அது.

அதிலும் இந்த அலைபேசி விசைப்பலகையை பயன்படுத்துவதற்கு மிகுந்த பொறுமை வேண்டும். S என்ற எழுத்து வேண்டுமென்றால் ஒரே விசையை நான்கு முறை அழுத்த வேண்டும் அதில் ஒன்று அதிகமாகி விட்டால் அழித்து விட்டு மறுபடியும் முதலிலிருந்து வரவேண்டும்.

அப்பப்பா.. இந்த காதலில் வெற்றி பெறுவதை விட அலைபேசியோடு மல்லுக்கட்டுறது ரொம்ப கடினம் போலருக்கே !
உஸ்ஸ்… என பெருமூச்சு விட்டுக் கொண்டே அலைபேசியைப் பார்த்தான்.
அதற்குள் மறுபடியும் அலைபேசி அதிர்ந்தது.

மற்றொரு குறுந்தகவல் அப்பப்பா… சலிக்கவே மாட்டா போலிருக்கே.

“எங்கடா போய் தொலஞ்ச தகவலனுப்பி எவ்ளோ நேரமாகுது… எங்கருக்க?” இது இரண்டாவது செய்து

“நான் கடையிலிருக்கன். எங்கருக்க? சாப்டாச்சு. நீ என்ன சாப்ட்ட” இது முதல் செய்தி.

“பட்டு குகைகள் முருகனைப் பார்த்து உனக்கு நல்ல புத்தி கொடுக்க சொல்லலாம்னு வந்துருக்கேன். அதோட முக்கியமான சந்தேகம் கேக்கணும் அவர்கிட்ட” – இது அவன் பதில்.

இரண்டுக்கும் கால இடைவெளி வெறும் மூன்று நிமிடங்கள். இதுக்கே தகவலனுப்பி எவ்ளோ நேரமாச்சுண்ணு கேள்வி வேற…

“முதல்ல உனக்கு புத்தி வாங்கிக்க அப்புறம் மத்தவங்களுக்கு நல்ல புத்தி கேக்கலாம். ஆமா அது என்ன சந்தேகம்.” – அடுத்த கேள்வி

“சொன்னா நீ உதைப்ப…” – இது பதில்

“பரவால்ல நான் உதைக்காம வேற யாரு உன்ன உதைக்குறது சொல்லு..” அவள்

“நீ ஒருத்தி பண்ற அட்டகாசமே என்னால தாங்க முடில… எப்படித்தான் இந்த மனுசன் வள்ளி தெய்வானைனு ரெண்டு பேத்த கல்யாணம் பண்ணி கிட்டாருணு. கேக்க நெனச்சன்.” – அவன்

“இதெல்லாம் ரொம்ப பழைய சிரிப்பு புதுசா எதாவது சொல்லு… கொஞ்சம் வேலை அப்புறமா கூப்பிடுறன்” – அவள்

“சரி நானும் பட்டு குகைகள் சுத்திப்பாக்கணும் “ பதிலனுப்பிவிட்டு அலைபேசியின் புகைப்படக் கருவியை இயக்கினான்.

செல்வா
20-04-2008, 02:38 AM
பட்டுக் குகைகள் இதன் பெயர்க்காரணம் தெரியவில்லை. ஆனால் மலேசியாவிற்கு சென்றால் தமிழர்கள் சென்று பார்க்க வேண்டிய இடம். ஒரு குன்று முழுவதையுமே தமிழ் கடவுளுக்காக அர்ப்பணித்துள்ளார்கள். குன்றிற்குள் முருகன் குடியிருக்க அடிவாரத்தில் சிவனும் பெருமாளும் குடியிருக்கின்றனர்.

அடிவாரத்தில் இருந்து குன்றிற்கு மேல் ஏறும் இடத்தில் ஒரு பெரீய்ய்ய்ய்ய்ய்யயயயயயய முருகன் சிலை நம்மை வரவேற்கிறது. தங்க நிறத்தில் ஜொலிக்கும் அந்த சிலையை நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாமென்று தோன்றும். அருமையான கலைவண்ணம்.

மனதிற்கு மிகவும் பெருமையாக இருந்தது. எங்கோ இருந்த தமிழ் மன்னர்கள் அந்த காலத்திலேயே… கடல்கடந்து வந்து இங்கெல்லாம் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி விட்டு சென்றிருக்கிறார்கள். அத்தகைய வழியில் வந்த அவனுக்கு இந்த கோயில்களைப் பார்ப்பது அதிலும் வரலாற்றில் ஆர்வம் கொண்ட அவன் மனம் நெகிழ்ந்து போனான்.

நல்லவேளை தனியாக வந்திருந்தான். அதனால் ஒவ்வொரு இடங்களிலும் நின்று நிதானமாக பார்வையிட்டபடி நடந்து கொண்டிருந்தான். அவ்வப்போது கையிலிருந்த அலைபேசியின் புகைப்படக் கருவியால் படமெடுத்துக் கொண்டிருந்தான். மனதுக்குள் நினைத்துக்கொண்டான் மறுமுறை இங்கு வரும்போது நல்ல புகைப்படக்கருவி வாங்கிக் கொள்ள வேண்டுமென்று.

எந்தப்பக்கம் பார்த்தாலும் மலேசியாவின் பச்சைப் பசேலென்ற இயற்கை அழகியின் வனப்பு கண்களைக் கட்டிப்போட்டது. மழைமேகம் கதிரவனை மறைத்துக் கொள்ள குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. எப்போது வெயிலடிக்கும் எப்போது மழைபொழியும் என்றே சொல்ல இயலாத ஒரு காலநிலை மலேசியாவினுடையது. மழைவளம் குன்றாத பூமியாகையால் பூமியெங்கும் பச்சைப்பட்டு விரித்தார் போன்று செடிகொடிகள் பரந்து கிடந்தது.

ஒரு பக்கம் பார்க்க பார்க்க பொறாமையாகக் கூட இருந்தது.
வானம் பார்த்த பூமியாக இருந்து கடவுளையும் மழைமேகத்தையும் நம்பி வாழ்க்கை நடத்தும் தமிழ்நாட்டின் விவசாய குடும்பத்திலிருந்து வந்தவன் பொறாமைப் பட்டதில் ஆச்சரியமேதுமில்லையே…
(இந்த இடத்தில் பட்டுகுகையைப் பற்றியும் அதன் வனப்பைப் பற்றியும் மேலும் மேலும் எழுதவேண்டும் என எனதுள்ளம் விழைந்தாலும் அதிகமாகிப்போன விவரிப்புகளால் அதைவிடுக்கிறேன்)

இவ்வாறாக பலவித சிந்தனைகளிலும் ஆழ்ந்தவனாக குகைக்கோயிலினுள்ளெ ஒரு மூலையில் நின்றபடி அங்குமிங்கும் குதித்து விளையாடி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த குரங்குகளின் விளையாட்டில் மனம் லயித்திருந்தவனை மறுபடியும் எழுப்பியது அலைபேசியின் அதிர்வு.
சலித்துக்கொண்டே… குறுஞ்செய்தியைப் பார்த்தவனின் முகத்தில் பளிச்சென பிரகாசம்.

"அங்கருந்து கிளம்பி பேருந்து ஏறி ரவாங் வந்து விடு, 2மணிக்கு அங்கு உன்னை சந்திக்கிறேன். " அவள் தான் அனுப்பியிருந்தாள்.

மறுசந்திப்பு எப்போதோ என எண்ணி ஏங்கிக் கொண்டிருந்த அவன் எதிர்பாராத இந்த அழைப்பால் உள்ளமெங்கும் மகிழ்ச்சி வெள்ளமாய் பரவ. எதிரே இருந்த முருகபெருமானுக்கு மகிழ்ச்சியோடு நன்றி கூறிவிட்டு வெளியே வந்தான்.
படியிறங்கி கீழேவரும் வழியில் இருட்டுக் குகை என்ற தகவல் தடுத்து நிறுத்த போகவா வேண்டாமா என்று மனதில் பட்டிமன்றம் நடைபெற்றது. மணியைப் பார்த்தான் 12 தான் ஆகியிருந்தது.
ராவாங் எந்தபக்கம் இருக்கிறது …. எப்படி போவது எதுவுமே தெரியாது. எனவே இருட்டுக் குகை பார்ப்பதை ஒத்தி வைத்து விட்டு குகையிலிருந்து அடிவாரம் நோக்கி நடந்து வர ஆரம்பித்தான்.

அடிவாரத்தை அடையும்போது பசி வயிற்றைக்கிள்ளியது. காலையிலேயே சாப்பிடாதது வேறு நினைவுக்கு வந்தது. அவளைச் சந்திக்க செல்லவிருப்பதால் அவளோடு சேர்ந்து சாப்பிட்டுக்கொள்ளலாம் இப்போது தாகத்தை மட்டும் தீர்த்துக் கொள்ளலாம் என நினைத்து தண்ணீர் வாங்கிவிட்டு எவ்வளவு என்று கேட்டவன் அதிர்ந்தான்.

2 வெள்ளி என்று கடைக்காரர் சொன்னார். வெளியில் கடைகளில் விற்பதை விட இரண்டு மடங்கு அதிகம் விலை.

உலகெங்கிலும் இப்படித்தானோ? சுற்றுலாத் தலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வது?
வேறுவழி! கேட்ட காசை கொடுத்து விட்டு தண்ணீர் குடித்துக் கொண்டே வெளியே வரும்போது எதிர்ப்பட்ட ஒருவரிடம் கேட்டான்.
"இங்கிருந்து ரவாங் எப்படிப் போகவேண்டும் "

தொடர்ச்சி... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=343271&postcount=34)

மதி
20-04-2008, 03:42 AM
கொஞ்சமாக புரிகிறது...அசாத்திய எழுத்துத் திறமை உங்களுக்கு...
வாழ்த்துகள்..செல்வா

செல்வா
20-04-2008, 04:07 AM
கொஞ்சமாக புரிகிறது...அசாத்திய எழுத்துத் திறமை உங்களுக்கு...

என்னது இது என்னோட பேரு மாதிரி பதில் சொல்றீங்க...:D:D

சிவா.ஜி
20-04-2008, 04:25 AM
ஒரே நாளில் ரெண்டு பதிவா? அசத்துங்க. பட்டு குகைகளைப்பற்றி அறியத்தந்ததற்கு நன்றி. மாற்றி மாற்றி அலை பேசியே வருகிறதே. எப்போது சந்திக்கப் போகிறார்கள்? ரவாங்கிலா? தொடருங்கள் செல்வா. வாழ்த்துகள்.

செல்வா
21-04-2008, 07:38 PM
“இங்கிருந்து வர்த்தா சென்று அங்கிருந்து பேருந்தில் ரவாங் செல்லலாம் “ என்றார் அந்த நபர்
“எவ்வளவு இங்கிருந்து வர்த்தாவுக்கு” எனக்கேட்டான்.
“பக்கத்தில் தான் ஆனால் வாடகை வண்டி தேடினால் அதிக வாடகை கேட்பார்களே… சரி வாருங்கள் நானே உங்களை கொண்டு விடுகிறேன்”…
முன்வந்து உதவும் உள்ளத்திற்கு நன்றி சொல்லி அவரோடு வர்த்தா வந்து சேர்ந்தான்.

மனதிற்குள் ஒரு பக்கம் புதிய ஊர் புதிய மக்கள் புதிய இடத்திற்கு தனியாகச் செல்லும் பதட்டத்தை அவளைச் சந்திக்கப் போகின்ற குதூகலம் அடக்கிக் கொண்டிருந்தது.

ரவாங் செல்லும் பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்தான். பேருந்து ரவாங் நோக்கிய தன் பயணத்தைத் தொடர்ந்தது.
எவ்வளவு நேரம் பயணமோ ? அவள் வந்திருப்பாளோ? எங்கே இறங்க வேண்டுமோ?
ரவாங் எவ்வளவு பெரிய ஊரோ?
மனதிற்குள் இத்தனை கேள்விகள் குடைந்து கொண்டிருந்ததால் வழியெங்கும் மீண்டும் தெரிந்த இயற்கைக் காட்சிகளில் அவன் மனம் இலயிக்க வில்லை.

ஆயினும் இடங்களைப் பார்க்கும் போது ஒரு முறை கேரளத்திற்கு அவன் சென்ற பயணம் தான் ஞாபகம் வந்தது.

அவளது வீட்டிற்கு அருகிலிருந்த சற்று பெரிய நகரம் ரவாங் தான். பட்டு குகைகளிலிருந்தும் அங்கு வருவது மிக எளிது. எனவே தான் அவனை அங்கு வரச் சொல்லிவிட்டு கடைக்கு பொருட்கள் வாங்கச் செல்லுவதாக வீட்டில் சொல்லிவிட்டு கிளம்பி விடலாம் என எண்ணியிருந்தாள். இரண்டு மணிக்குள் ரவாங் போய்விடலாம் என எண்ணிய போதே அவனிடமிருந்து குறுஞ்செய்தி

“ரவாங் பேருந்தில் நான்”
என்னது இது சினிமா தலைப்பு போல என அந்த அலுவலிலும் மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.

“சரி பேருந்து இறுதியாக நிற்கும் நிலையத்தில் வந்து நில் நான் வருகிறேன்…” என பதிலனுப்பி விட்டு கிளம்ப ஆயத்தமானாள்.

அப்போது பார்த்து தானா அது நடக்க வேண்டும்.

இரண்டு வண்டிகள் வேகமாக வந்து கடைக்கு முன் நின்றன. மளமளவென்று 25 பேர். கடைக்குள் வந்து அமர்ந்து விட்டனர்.
பக்கத்தில் கெர்லிங் முருகன் கோயிலுக்கு குடும்பமாக வந்தவர்கள் வழியில் கடையைப் பார்த்ததும் சாப்பிட்டு விட்டு போகலாம் என நினைத்து உள்ளே வந்து விட்டனர்.

வேறு வழியில்லை தேடி வந்து விட்டனர் சாப்பாடு போட்டுத்தான் ஆகவேண்டும்.

அடுத்த ஒரு மணிநேரத்திற்கு நிற்பதற்கும் நேரமில்லை.
பம்பரம் போன்று சுழன்று கொண்டே இருந்தாள்.
கடிகாரத்தை பார்க்கும் போதெல்லாம் மனது அடித்துக் கொண்டது. காத்திருப்பானே.. காத்திருப்பானே..
சாப்பிட்டானோ என்ன வோ?

காலையில் சாப்பிட்டதாக பதில் சொல்ல வில்லை. கண்டிப்பாக சாப்பிட்டுருக்க மாட்டான்.

இப்படி மனதிற்குள் கவலைகள் பல. வேகவேக மாக வந்தவர்களை அனுப்பி வைத்து விட்டு. நிமிரும் போது
கடிகாரம் மணி 2ஐ காட்டியது.

கிளம்புவதற்கு ஆயத்தமாக்க, சென்று குழந்தையை தூக்கினவள் அதிர்ந்தாள்

செல்வா
21-04-2008, 07:43 PM
குழந்தையின் உடல் அனலாகக் கொதித்தது.
காலையில் கடைக்கு வரும்போது இலேசாக வெப்பமிருந்தது லேசாக மருந்து கொடுத்து தூக்கி வந்தாள். வேலை களேபரத்தில் சரியாக கவனிக்க இயலவில்லை. அவ்வப்போது குழந்தையைப் பார்த்து பால் புட்டியை குடிக்க கொடுத்துவிட்டு வந்திருந்தாள்.

இப்போது வெப்பநிலை மிக அதிகமாகி விட்டது.
ரவாங் தான் செல்கிறோம். அப்படியே மருத்துவரிடம் காமிக்கலாம் எனநினைத்தபடி குழந்தைக்கு தேவையான பால் மற்றும் துணிகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

“சாப்பிடாமப் போறியேடி… சீக்கிரம் வந்துடு சாயங்காலம் வேலை இருக்கு…”
அம்மா உள்ளிருந்து கூவுவது கேட்டது.

சட்டை செய்யாமல் வண்டி சாவியை எடுத்து வந்து ஓட்டுநர் இருக்கையின் பக்கத்து இருக்கையில் இருந்த குழந்தையின் தொட்டில் போன்ற இருக்கையில் குழந்தையை படுக்க வைத்து விட்டு. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவள். கதவை மூடப்போகையில் தான் அலைபேசி எடுக்காமல் போவது உறைத்தது.

மீண்டும் இறங்கிச் சென்று மேசையிலிருந்த அலைபேசியை எடுத்தாள்.
10 குறுந்தகவல். 7 அழைப்புகள் என்றிருந்தது.
முதல் தகவல் வந்து அரை மணி நேரமாகியிருந்தது.
“ரவாங்கில் இறங்கி விட்டேன். நீ எங்கிருக்கிறாய்? “

“வந்து விட்டாயா? நான் எங்கே வரவேண்டும்..”

அதற்கு மேல் வாசிக்காமல்

“அங்கேயே இரு கிளம்பி விட்டேன்… வந்து கொண்டிருக்கிறேன். “ என்று பதிலனுப்பிவிட்டு
பக்கத்திலிருந்த குளிரூட்டியிலிருந்து ஒரு பழச்சாறு குடுவையை எடுத்துக் கொண்டு வந்து வண்டியின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தாள்.

மிகுந்த அயர்ச்சியாக இருந்தது.
ஒரு பக்கம் தூக்கமின்மை. நேற்று இரவு கடையிலிருந்து செல்லும் போது மணி 10 ஆகி விட்டது. பின் வீடு சென்று குளித்து ஒருவழியாக தூங்க செல்லும் போது மணி ஒன்றாகி விட்டது.

மீண்டும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து குழந்தையையும் கவனித்து கடைக்கு வந்து இதோ இந்த நிமிடம் வரை ஓயாமல் வேலை செய்ததால்;

உடல் ஓய்வு ஓய்வு என்று கெஞ்சியது.
வயிறு உணவு உணவு என்று குடைந்தது.
கண்கள் தூக்கம் தூக்கம் என்று கலங்கியது.

பழச்சாறு குடுவையை உடைத்து கொஞ்சமாக குடித்தவள் இருக்கைக்கு நேர் மேலே இருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள்.
முகம் முழுக்க களைப்பைக் காட்டியது. தலைமுடி கலைந்திருந்தது. கண்களுக்கடியில் தூக்கமின்மையால் லேசான கருவளையம் தென்பட்டது. கன்னத்திலும் கழுத்திலும் வேர்வை வடிந்து முடிகள் ஒட்டியிருந்தது.

பையிலிருந்த சீப்பை எடுத்து தலையை லேசாக வாரிக்கொண்டவள். துண்டால் முகத்தைத் துடைத்தாள். இப்போது முகம் கொஞ்சம் தெளிவாயிருந்தது. நாக்கால் உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டாள்.

மறுபடியும் துண்டை எடுத்து கழுத்துப் பகுதியை துடைத்தாள். கழுத்தின் வலப்பக்கத்தை துடைக்கும் போது... கைகள் சற்று நிதானித்தது.

கடந்த முறை சந்தித்த போது அவன் முத்தமிட முனைந்து பக்கத்தில் வரும் போது தள்ளிவிட ,
காரின் மேல்பாகம் அவன் தலையில் இடிக்க ஆ என்று அவன் அலறியதும். சாரிடா என்று
வேகமாக அவன் தலையை தன்பக்க மாக இழுத்து தடவும் போது
அவன் கழுத்தில் முத்தமிட்டு விட்டான்.
போடா என்று மறுபடியும் தள்ளி விட்டாள்.
குறும்பாக கண்களைப் படபடவென்று அடித்தபடி பழிப்புக் காட்டி சிரித்தான் அவன். அப்போது தான் தெரிந்தது அவன் கத்தியது நாடகமென்று.

குறுகுறுவென குத்திய மீசைமுடிகளின் குறுகுறுப்பு அவள் உடலை சிலிர்க்கச் செய்தது இப்போதும்.

எண்ணவோட்டங்களால் கன்னக்கதுப்புகளில் மறுபடியும் சிவப்பு இரத்த வோட்டம்.
புன்னகை இதழில் பரவ..
சற்று கண்மூடினாள்.

மூடிய கண்களுக்குள் வந்து மறுபடியும் முத்தமிட்டான் அவன்.

தொடர்ச்சி... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=351427&postcount=52)

மதி
22-04-2008, 01:46 AM
இப்போது நல்லாவே புரியுது...
தொடருங்க செல்வா ஆவலுடன் காத்திருக்கிறோம்.

சிவா.ஜி
22-04-2008, 04:26 AM
ம்...நடக்கட்டும்...நல்லாவே கொண்டு போறீங்க கதையை. இப்பதான் மதி சொன்ன மாதிரி புகைமூட்டத்துக்குள்ளேயிருந்து கதாநாயகி வெளியே வர்ற மாதிரி கதை வெளியே தெரிய ஆரம்பிச்சிருக்கு.. அசத்துங்க.

நதி
22-04-2008, 07:09 AM
(கண்ணாமூச்சி) விளையாட்டு முடிந்து வினை துவங்கும் காலம்.
தொடருங்கள் செ(ல்)வாக்கா(னவ)ரே....ரே...ரே...ரே...

logini
22-04-2008, 08:18 AM
செல்வா அண்னா 12B படம் பார்ப்பது போல இருக்கு. ஆனால் சுவரசியமாக இருக்கு. கெதியாக அடுத்த பகுதியை கொடுத்திடுங்கள்

சுகந்தப்ரீதன்
22-04-2008, 09:58 AM
ஏனெப்பா செல்வா அண்ணா..!! இத்தனை நாளா எதுக்காக உங்க திறமையெல்லாம் வெளிப்படுத்தாம் இருந்தீங்க.. சும்ம்மா சொல்லக்கூடாது ஒரு தேர்ந்த எழுத்தாளரை போன்ற எழுத்து நடை சற்றும் பிசிறுதட்டாமல்..!! நாவலாசிரியர் ஆகும் வாய்ப்பு உங்களுக்கு மிகமிக பிரகாசமாக இருக்கிறது... அதற்கு எனது வாழ்த்துக்கள்...!!

ஆனா இதை படிக்க படிக்க எனக்கு இது உங்க சொந்தக்கதை மாதிரி தோனுது... ஏன் தெரியுமா செல்லம் செல்லம்ன்னு கொஞ்ற இடத்துல எல்லாம் எனக்கு செல்வா ஞாபகம்தான் வருது.. (ஒருவேளை உண்மையா இருக்குமோ என்னோட உள்ளுணர்வு..??)

செல்வா
22-04-2008, 10:18 AM
இப்போது நல்லாவே புரியுது...
தொடருங்க செல்வா ஆவலுடன் காத்திருக்கிறோம்.
புரிய ஆரம்பிச்சுருச்சா...:D தொடரும் உங்கள் பின்னூட்ட ஆதரவுக்கு மிக்க நன்றி மதி.

செல்வா
22-04-2008, 10:20 AM
கதாநாயகி வெளியே வர்ற மாதிரி கதை வெளியே தெரிய ஆரம்பிச்சிருக்கு...
:sprachlos020::sprachlos020: அண்ணா.... கதாநாயகி தான் முதல்பாகத்திலேயே வந்துட்டாங்களேண்ணா.... :D:D

செல்வா
22-04-2008, 10:31 AM
ஆனா இதை படிக்க படிக்க எனக்கு இது உங்க சொந்தக்கதை மாதிரி தோனுது... ஏன் தெரியுமா செல்லம் செல்லம்ன்னு கொஞ்ற இடத்துல எல்லாம் எனக்கு செல்வா ஞாபகம்தான் வருது.. (ஒருவேளை உண்மையா இருக்குமோ என்னோட உள்ளுணர்வு..??)

முதல்ல வாழ்த்துக்கு மிக்க நன்றி சுகந்தன். அதென்ன அண்ணா....:eek::eek:
எந்த ஒரு படைப்பும் படைப்பாளரின் மனதைப் பாதித்த அல்லது கவர்ந்த சம்பவங்களிலிருந்து தான் வருகிறது என்பது என் வாதம். அப்படி இல்லையாயின் அதில் உயிரிருக்கும் என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. அதற்காக எழுதுவதெல்லாம் அவனது சொந்தகதையாக (சொந்த வாழ்க்கைக் கதை) இருக்கவேண்டும் என்ற அவசியமில்லையே....
இல்லையா சுகந்தா... :)

செல்வா
22-04-2008, 10:32 AM
(கண்ணாமூச்சி) விளையாட்டு முடிந்து வினை துவங்கும் காலம்.
தொடருங்கள் செ(ல்)வாக்கா(னவ)ரே....ரே...ரே...ரே...
:lachen001::lachen001::lachen001: நன்றி ரவுத்திரனவர்களே...

செல்வா
22-04-2008, 10:34 AM
செல்வா அண்னா 12B படம் பார்ப்பது போல இருக்கு. ஆனால் சுவரசியமாக இருக்கு. கெதியாக அடுத்த பகுதியை கொடுத்திடுங்கள்
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி லோஜினி.


கெதியாக அடுத்த பகுதியை கொடுத்திடுங்கள்
இது மட்டும் எங்கிட்ட கேக்க கூடாத ஒண்ணு :)... இல்லையா சிவா அண்ணா :icon_rollout:

சிவா.ஜி
22-04-2008, 11:29 AM
இது மட்டும் எங்கிட்ட கேக்க கூடாத ஒண்ணு http://www.tamilmantram.com:80/vb/... இல்லையா சிவா அண்ணா http://www.tamilmantram.com:80/vb/
ஆமா...கெதியா வேணுமெண்டு கேட்டா அவர் அதே கதியாக்கெடக்கவேணும். அப்பத்தான் கதையைத் தருவார். ஆனால் அது அவரால ஏலாது. கனக்க ஜோலி கிடக்கு அவரண்டை.

செல்வா
22-04-2008, 12:12 PM
ஆமா...கெதியா வேணுமெண்டு கேட்டா அவர் அதே கதியாக்கெடக்கவேணும். அப்பத்தான் கதையைத் தருவார். ஆனால் அது அவரால ஏலாது. கனக்க ஜோலி கிடக்கு அவரண்டை.
:eek::eek::eek: முடி.............................ல :icon_rollout::icon_rollout:

சுகந்தப்ரீதன்
22-04-2008, 01:05 PM
முதல்ல வாழ்த்துக்கு மிக்க நன்றி சுகந்தன். அதென்ன அண்ணா....:eek::eek::)
அதுவா தம்பி...:fragend005: எல்லாம் சும்மா ஒரு மருவாதைக்குதேன்....:lachen001:


. அதற்காக எழுதுவதெல்லாம் அவனது சொந்தகதையாக (சொந்த வாழ்க்கைக் கதை) இருக்கவேண்டும் என்ற அவசியமில்லையே....
ம்ம்ம்... அவசியமில்லதான்...:icon_b:


இல்லையா சுகந்தா...
இருக்குறேனுங்கோ.. அடுத்த பாகத்துக்கு காத்துக்கிட்டு...:icon_rollout:

Keelai Naadaan
22-04-2008, 04:05 PM
செல்வா அவர்களே, உங்கள் கதையை இப்போதுதான் படித்தேன். சுவாரஸ்யமாய் செல்கிறது. பாராட்டுகள்.
பட்டு மலையைப் (பத்து மலை..? பத்து மலைத்திரு முத்து குமரனை பார்த்து களித்திருப்போம் என ஒரு திரைப்பட பாடல் உண்டு) பற்றி இன்னும் கொஞ்சம் வர்ணித்திருக்கலாம்.
திரு அகிலனின் "பால் மரக் காட்டினிலே" என்ற கதை மலேசியாவில் தமிழர்களின் அந்த நாளை படம் பிடித்து காட்டும். நீங்கள் இன்றைய நிலையை விளக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிகள்.

செல்வா
22-04-2008, 04:28 PM
சுவாரஸ்யமாய் செல்கிறது. பாராட்டுகள்.

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி கீழை நாடன் அவர்களே...



திரு அகிலனின் "பால் மரக் காட்டினிலே" என்ற கதை மலேசியாவில் தமிழர்களின் அந்த நாளை படம் பிடித்து காட்டும். நீங்கள் இன்றைய நிலையை விளக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இல்லீங்க அந்தளவுக்கு மலேசியாவைப் பத்தி எதும் தெரியாதுங்க. நான் மலேசியாவில் இருந்த காலம் வெறும் ஒரு வாரம் மட்டுமே... அதிலும் பாதிநாட்கள் அலுவலிலேயே கழிந்து விட்டது.

செல்வா
16-05-2008, 11:29 AM
(பணிப்பளு காரணமா கொஞ்சம்... இல்ல இல்ல ரொம்பவே தாமதமாயிடுச்சு... மன்னிச்சுக்கோங்க நண்பர்களே...)


நினைவுகளின் கனவுகளில் மூடியிருந்த கண்களைத் திறந்தாள் .

கே.எல். சென்ட்ரல் செல்லும் வண்டி வந்து நின்று கொண்டிருந்தது. பையையும் குழந்தையையும் தோளில் மாட்டிக்கொண்டு. கையில் பெட்டியை இழுத்துக் கொண்டு நின்று கொண்டிருந்த மின்தொடர்வண்டிக்குள் சென்று அமர்ந்தாள்.

முத்தமிட்ட அவன் நினைவுகளின் எச்சம் இன்னும் மனதை ஆக்கிரமித்திருந்தது. குழந்தை இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். ஆதரவாய் குழந்தையின் தலையை வருடிக் கொடுத்தாள்.

வாழ்வில் எப்போதும் பிரிக்க முடியாத பந்தமாய் ஒட்டிக் கொண்ட நினைவுகள். அவளைச் சுற்றி இருக்கும் எதைப் பார்த்தாலும் அதிலெல்லாம் அவன் இருந்து அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான். அவனைப் பிரிந்த இத்தனை நாட்களில் கரைந்து போய்விடும் என்று அவள் நினைத்த நினைவுகள் மேலும் மேலும் சுனாமி அலைகள் போல் வளர்ந்து வந்து அவள் உள்ளத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
நாம் எதை மறக்க நினைக்கிறோமோ… அந்த நினைவுகள் தான் இன்னும் அதிகமாக நம் மனதில் வலம் வந்து கொண்டிருக்கும்.

சற்று தலையை உலுக்கி நினைவுகளிலிருந்து மீள விரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். வண்டியில் ஏறவந்தவர்களும் இறங்கியவர்களுமாய் ஒரே கலகலப்பாக இருந்தது நடைமேடை.

மக்கள் கூட்டங்களை பார்ப்பது எப்போதும் அவனுக்கு பிடித்த ஒன்று. ஒவ்வொரு மனிதரையும் அவர்களது பழக்க வழக்கங்களையும் சற்று அதிகமாகவே கவனிப்பான். அவளைச் சந்திக்க வரும் முன்பு இணையம் வழியாக உரையாடும் போதே அவளது குரல் ஏற்ற இறக்கங்களை கூர்ந்து கவனித்து அவளைப் போன்றே பேசுவான். குரலை வைத்தே அவள் இயல்பாக இருக்கிறாளா இல்லையா என்பதை உணர்ந்து கொள்வான். ஏதாவது ஒரு வாக்கியத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு வட்டார மொழிகளில் பேசி மகிழ்ச்சியூட்டுவான்.

அவனுடன் பேசும் போது கலகலப்பாக நேரம் போவதே தெரியாது… அவன் இருக்கும் இடத்திற்கும் அவள் வசிக்கும் இடத்திற்கும் 5 மணிநேர வித்தியாசம். இரவுதான் உரையாடுவார்கள் இருவரும். பேசி பேசி நேரம் போவது தெரியாது.
பேசிக்கொண்டிருக்கும் போது தற்செயலாக மணி பர்த்தால் கடிகாரம் அதிகாலை 2 என்று சொல்லும்.

“ஐயயோ.. மணி 2 ஆச்சு… போடா தடியா உங்கிட்ட பேசுனா நேரம் போறதே தெரியாது நான் தூங்க போறேன் “ என்று பதறுவாள்.

“சரி சரி மறக்காம நல்ல உறுதியான கயிறு எடுத்துட்டு போ “
அவளுக்கு சட்டென்று புரியாது….

“கயிறு எதுக்குடா…. ?”

“தூங்குறதுக்கு……. “

“ஈஈஈஈஈஈஈ உன்ன…..
இராத்திரி 2 மணிக்கி மொக்க போடுற ஒரே மனுசன் நீ தாண்டா…..
சே… சே… தப்பா சொல்லிட்டன் மனுசன் இல்ல நீ எரும எரும….
இரு இரு நல்ல உறுதியான கயிறு உனக்கு தான் வேணும்.
மூக்கணாங் கயிறு போட…
சரி டா … வா.. தூங்கலாம்….. சாரி உறங்கலாம்“

“போடி நான் அங்க வர மாட்டேன் …. நீ இங்க வா….”

“ஏன்…”

“அங்க மணி இப்பவே 2 ஆயிடுச்சு ஆறு மணிக்கி அத்தை வந்த எழுப்பி விட்டுடுவாங்க..
நீ இங்க வா… அப்பதான் ரொம்ப நேரம் தூங்க முடியும்….”

“ஆமா…. ஆமா… அங்க வந்தா தூங்கினாப்புல தான்….. ஓடிப்போடா…
யாரும் எங்கயும் வரவேண்டாம்…. நான் தனியா நிம்மதியாத் தூங்குவேன்..”

“நிம்மதியாத் தூங்குவியா….. தூங்க விட்டா தானே கனவுல வந்து தொல்லை பண்ணுவேன்.. ஹி..ஹி”

“போடா… போடா…. எனக்கு கனவே வராது……. நான் தான் நிம்மதியாத் தூங்க போறேனே… “

இப்படி பேசியே அடுத்த அரைமணி நேரம் ஓடிவிடும்…. தூங்கவேண்டும் நாளை காலை வேலை இருக்கிறது என்பது மனதிற்குள் அலாரம் அடிக்கும். அனால் அவனுடன் பேசுவதை விட்டு போக மனமிருக்காது…
வலுக்கட்டாயமாக மனதை கடினப்படுத்திவிட்டு தூங்கச் செல்வாள்…

“சரிடா கண்ணா… நான் கெளம்புறன்…. பை டா… “

“அதுக்குள்ள எங்க போற… “

“அதுக்குள்ளயா தடியா…. மூணரை மணி நேரமாச்சு நாம பேச ஆரம்பிச்சு… காலைல வேல இருக்குடா”

“சரி சரி ….. புலம்பாத… போய் தூங்குடா… செல்லம்… குட்நைட்”

என்று விடைகொடுப்பான்……..

கடைசியாக அவனிடம் இப்படி விடைபெற்று நான்கு மாதங்கள் ஓடிவிட்டன… மீண்டும் அவனைச் சந்திக்கும் போது இதே காதலுடன் பேசுவானா? தெரியவில்லை….
நினைவுகளால் கனத்த மனதை இலேசாக்க…
நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டு …. நனவுலகுக்கு வந்தாள்.

வண்டி புத்ரா நிலையத்தில் நின்று கொண்டிருந்தது…. இன்னும் இரண்டு நிலையங்கள் தான்… கே.எல் சென்ட்ரல் நிலையம் வந்து விடும்…. பெட்டியை பக்கத்தில் இழுத்து வைத்துக் கொண்டாள்..
இறங்கும் போது …. எடுக்க வசதியாக..

தொடர்ச்சி... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=351645&postcount=55)

ஆதி
16-05-2008, 12:18 PM
பல நாட்களுக்குப் பிறகு தொடர்ந்தாலும் அதேப் பழைய ஆர்வத்துடன் வந்து கதையை சுவைக்க வைக்கிற வலிமை உன் எழுத்துக்களுக்கு இருக்கு டா.. கதை ரொம்ப சுவாரஸ்யமா போகுதுடா..

பாராட்டுக்கள்..

செல்வா
16-05-2008, 06:26 PM
ரொம்ப நன்றிடா ஆதி ..... ஆமா மாங்கனி என்ன ஆனாள்?

செல்வா
18-05-2008, 04:13 AM
வண்டி கே.எல் சென்ட்ரல் நிலையம் வந்து சேர்ந்தது.

இறங்கியவள் தானியங்கிப் படிக்கட்டுகள் வழியாக மேல்ப்பக்கம் வந்தாள். இங்கிருந்து கே.எல். பன்னாட்டு விமானநிலையம் செல்வதற்காக அதிவேக தொடர்வண்டி விட்டிருக்கிறார்கள். அதைப் பிடிக்க வேண்டும். சென்று பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு அதிவேக தொடர்வண்டி வந்து செல்லும் நடைபாதைக்குச் சென்று… காத்திருந்த வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

மனதிற்குள் குறுகுறுப்பு. கவலை என்று கூடச் சொல்லலாம். இதற்கு முன் ஒருமுறை குடும்பத்தோடு இந்தியா சென்றிருந்தாள். அப்போது எல்லா வேலைகளையும் அப்பாவும் அண்ணாவும் பார்த்ததால் இவள் எதுவும் செய்யவேண்டியிருக்கவில்லை. ஆனால் இப்போது எல்லாமே இவள் தான் செய்தாக வேண்டும்.

புறப்பட்ட நேரத்திலிருந்து புதிய இடத்திற்கு புதிய விசயங்களைத் தேடிப் போகும் போது இருக்கும் பதட்டம் இருந்து கொண்ட இருக்கிறது. .

வண்டி ஓடத்துவங்கியது….

அது ஒரு அதிவேக தொடர்வண்டி… அத்தனை வேகத்திலும் வண்டிக்குள் அமர்ந்திருப்பவர்களுக்கு வண்டி செல்லும் வேகம் பற்றிய உணர்வே இருக்காது.

ஒவ்வொரு இடமும் தாண்டும்போதும் அவள் மனத்தில் சொல்ல முடியாத உணர்வுகள்.

இயற்கை அன்னையின் செல்லப் பிள்ளை போன்று விளங்கும் இந்த மலேசியாவின் அழகு ..
திரும்பிய பக்கமெல்லாம் பசுமை .. அதிலும் பன்னாட்டு விமானநிலையத்தை நகரத்திலிருந்து மிகத் தொலைவில் அமைத்திருக்கிறார்கள். போகின்ற வழிகளில் இன்னும் நகரம் விரிவடையாத காரணத்தால்… நகர வாழ்க்கையின் சிமென்ட் அரக்கன் வாயில் இயற்கை இன்னும் இறந்து விடாமல் அப்படியே… இருந்தது.

மனம் முழுக்க அவனைக் காண செல்லும் மகிழ்ச்சி ஒருபக்கம். அவனது வரவேற்பு எப்படி இருக்குமோ… இன்னும் என்னன்ன பிரச்சனைகள் காத்திருக்கிறதோ என்ன கலக்கம் ஒரு புறம். பிறந்து இத்தனை காலம் வாழ்ந்த இந்த மண்ணைப் பிரிந்து செல்கிறாள் மீண்டும் எப்போது வருவோமோ… என்ற ஏக்கம்…. ஒரு புறமாக … அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

எந்த இடத்திலும் நிலையாக நில்லாமல் ஊர்ந்து கொண்டே இருக்கும் எறும்புகளைப் போன்று … மனம் ஒவ்வொன்றாக எண்ணி எண்ணி நிலைகுலைந்து கொண்டிருந்தது.

எண்ணங்களின் மறுதல் அவள் எவ்வளவு தான் முயன்றாலும் மறைக்க முடியாதவாறு முகத்திலும் பல பல மாறுதல்களைக் கொண்டு வந்து கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட பலவாறான எண்ணங்களினூடாக அவள் பயணித்துக்கொண்டிருக்கும் போதே… தொடர்வண்டி தன் பயணத்தை முடித்துக் கொண்டது. இனிமையான பெண்குரல் ஒன்று நிலையம் சேர்ந்து விட்டதற்கான அறிவிப்பை மலேய மொழியிலும் ஆங்கிலத்திலும் அறிவித்தது.

எண்ணவோட்டத்தை அறுத்துக் கொண்டு திறந்து விட்ட தானியங்கி கதவுகள் வழியாக பெட்டியையும் இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

வெளியே மின்னணு காட்சிக் கருவிகள் விமானங்கள் புறப்படும் நேரம். விமானத்தில் ஏறவேண்டிய வாசல் எண்கள். போன்ற இன்னும் பல விபரங்களை அழித்து அழித்து காட்சிப்படுத்திக் கொண்டிருந்தன.

அவற்றைப் பார்த்து விபரமறிந்தவள் மின்தூக்கி வழியாக மேல் மாடிக்கு வந்து. பயணச்சீட்டு…. மற்றும் குடியுரிமைத் தொடர்பான வேலைகளை முடித்தாள். கையிலிருந்த கொஞ்சம் பணத்தை எடுத்து இந்திய ருபாய்களாக மாற்றிக் கொண்டாள்.

பெட்டியை சுமைகளோடு போட்டு விட்டதால். ஒரு பாரம் குறைந்தது போல் இருந்தது. கையிலிருந்த பாரம் குறைந்து விட்டது. ஆனால் மனதிலிருக்கும் நினைவுகளின் பாரம்...?

விமானநிலையத்தின் அறிவிப்புகளின் ஓசையும் மனிதர்களின் நடமாட்டமுமாக குழந்தை விமான நிலையத்தை அடைந்ததுமே விழித்துவிட்டது.

புதிய சூழல் விதவிதமான மனிதர்கள். விதவிதமான ஓசைகள் எல்லாம் புதியதாக இருந்ததால் அகன்ற பெரிய விழிகளை உருட்ட மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தது.

விமானத்திற்கு போக இன்னும் நேரமிருந்ததால் சற்று இளைப்பாறலாம் என நினைத்து எதிரிலிருந்த கடையிலிருந்து சிறிது உணவு குழந்தைக்கும் தனக்குமாக வாங்கி வந்து குழந்தைக்கும் ஊட்டியவாறு தானும் உண்ண ஆரம்பித்தாள்.

தொடர்ச்சி... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=353521&postcount=57)

ஆதி
19-05-2008, 07:04 AM
கதையில் லேச எதோ மாற்றம் தெறிக்கிறது.. எழுது தொடர்ந்துப் படித்துத் தெரிந்து கொள்கிறேன்..

வாழ்த்துக்கள்..

செல்வா
28-05-2008, 07:57 PM
உண்டு முடித்தவள் சென்று கைகளை கழுவிவிட்டு குழந்தையின் வாயையும் கழுவி துவாலையால் துடைத்து விட்டு வந்து அமர்ந்தாள்.
இன்னும் நேரமிருந்தது. பசியாறிய குழந்தை அவள் கன்னத்தைப் பிடித்து விளையடியது…
ஆதுரத்துடன் குழந்தையின் தலைமுடியை கோதிவிட்டாள்..

மனதிற்குள் ரவாங்கில் வைத்து அவள் தலையை கோதிவிளையாடிய அவன் கரங்கள் நினைவிற்கு வந்தது…

பாதியில் மறந்து போயிருந்த அந்த நிகழ்ச்சி மறுபடி நினைவுக்கு வந்தது….

வண்டிச் சுக்கானில் சாய்ந்தபடி மூடிய கண்களுக்குள் முத்தமிட்ட அவன் முகத்தை நினைத்தவள் களைப்பின் விளைவால் அப்படியே தூங்கிப்போனாள்….

தட்…தட்டென்று யாரோ தோளைத் தட்டி உலுக்க திடுக்கிட்டு விழித்தவள்….
திரும்பிப் பார்த்தாள்…

அம்மா தான் தோளைத்தட்டி எழுப்பிக் கொண்டிருந்தார்கள்…

“என்னடி ஆச்சு உக்காந்து தூங்குற..”

தூக்கம் கலைந்த அதிர்ச்சியில் மலங்க மலங்க விழித்தவள் புத்திக்கு… அப்போது தான் உறைத்தது…

ராவங்கில் அவனைச் சந்திக்க செல்வதற்காக வண்டியில் வந்து அமர்ந்தவள்… அப்படியே தூங்கிப்போனது…

மணியைப் பார்த்தாள்… தூக்கி வாரிப்போட்டது முக்கால் மணி நேராமாக தூங்கியிருக்கிறாள்…

“சரிமா நான் வரேன்” என்று கூறிவிட்டு வேகமாக வண்டியைக் கிளப்பிய மகளைப் வித்தியாசமாகப் பார்த்தாள் அம்மா…

“பார்த்துப் போடி….” அம்மா முடிப்பதற்குள் வண்டி தெருமுனையைத் தொட்டிருந்தது….

ரவாங் வந்து சேர்ந்தவன்…

பேருந்திலிருந்து இறங்கினான்… எங்கு போவது … அவள் எங்கே வருவாள் எதுவுமே தெரியாததால் குறுந்தகவல் அனுப்பி விட்டு வந்த பதிலிலிருந்து அவள் வருவதற்கு இன்னும் நேரமிருப்பதைத் தெரிந்து கொண்டதால் என்ன செய்வதென தெரியவில்லை.
சுற்றும் முற்றும் பார்த்தான்…

இவன் காத்திருப்பது போல் கதிரவனையும் யாரும் காத்திருக்க வைத்துவிட்டார்களோ என்னவோ.. உச்சியிலிருந்து அனலாகத் தகித்துக் கொண்டிருந்தான்.

சுற்றுமுற்றும் அமர்வதற்கு கூட ஏதும் இடம் இருப்பதாக தெரியவில்லை…
தயங்கினான்.

சற்று மேலே தெரிந்த … மேட்டுப் பகுதி புல்வெளி போன்று இருந்ததால் பூங்கா ஏதாவது இருக்கும் என நினைத்தவன் மேட்டுப் பகுதியை நோக்கி கடைவீதி வழியாக நடக்க ஆரம்பித்தான்….

நடக்க நடக்க வழி போய்க்கொண்டே இருந்தது போல் தோன்றியது…
வரிசையாக இருந்த கடைகளின் ஊடே சாலை சென்றது…

மோட்டர் வாகனங்கள்… அவற்றின் பாகங்கள் விற்கும் கடைகள் ஒரு பக்கம்…

மின்னணுச் சாதனங்கள் விற்கும் கடைகள் ஒருபக்கம்…
உடைகள் … அலங்காரப் பொருட்கள் என வரிசையாக …. இருந்தன..

அலைபேசி விற்பனைக் கடைகள்…

இடையிடையே இருந்த உணவகங்கள் வேறு… காலையிலிருந்து உணவருந்தாததைச் சுட்டிக்காட்டியபடி இருந்தது..

அவள் வந்த பிறகு சேர்ந்து உண்ணலாம் என நினைத்தவன்… அதுவரை
தாகமாவது தணிக்க எண்ணியவனாய்
வழியில் பார்த்த ஒரு பல்பொருள் அங்காடியில் புகுந்தான்..
தண்ணீர் வாங்கி விட்டு சற்று கடைக்குள் உலவியவன்… இருந்த இனிப்பு வகைகளில் சிலவற்றை எடுத்து அவளுக்கு கொடுப்பதற்காக பத்திரப்படுத்திக் கொண்டான்.

எவ்வளவு என்று ஆங்கிலத்தில் கேட்டான்… அங்கிருந்த பெண்.. மலாயில் சொன்னாள்…
இவனுக்குப் புரியவில்லை …

கறுப்பாக இருந்த இவனைக் கண்டதும் மலேசியன் என்று நினைத்தாளோ என்னவோ.. இவன் மலாய் தெரியாது என ஆங்கிலத்தில் கூறவும் ஆங்கிலத்தில் விலையைக் கூறினாள்

அழகானப் பெண்ணொருத்தி முன்னால் நின்ற போதும்… எந்த உணர்வுமின்றி எந்த முகமாறுதலுமின்றி பையிலிருந்து பணத்தை எண்ணிக் கொடுக்கும் அவனை வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டே..

“எந்த ஊர் ?“ என்று கேட்டாள்..

“இந்தியா.. “ என்று கூறியபடி அவள் கொடுத்த மீதிப்பணத்தை வாங்கி பையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தான்…

மீண்டும் தூரத்தே தெரிந்த புல்வெளி மேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்….
இடையிடையே… குறுந்தகவல் அனுப்பினான் …. அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை..

சற்று நேரத்தில் சற்று பெரிய இருவழிச்சாலை ஒன்று குறுக்கிட்டது… அதைக்கடந்து சென்றான்… மேலும் மேலே செல்ல விருப்பமின்றி..

சாலை திரும்பும் முனையில் இருந்த பிசா ஹட் அருகில் சென்று நின்றான்…
பக்கத்தில் ஒரு வயதான தமிழ்ப் பெண்மணி வடை மற்றும் சில பண்டங்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தாள்..

உள்ளே பிசாஹட் அதன் வாயிலில் வடைமுதலான பண்டங்கள்…

இரண்டுமே நன்றாக வியாபாரமாகிக் கொண்டிருந்தது.. முரணாகத் தெரிந்தது அவனுக்கு இதாவது பரவாயில்லை
மஸ்ஜித் இண்டியா சங்கீதா உணவகம் இருக்கும் அதற்கு வெளியே இன்னுமொரு நடைபாதை உணவகம் இருக்கும்.. இரண்டுமே இந்திய உணவுகள். வித்தியாசமாகத் தெரிந்தது அவனுக்கு.

ஒருமுறை மஸ்ஜித் இண்டியாவில் நண்பனோடு சுற்றிவிட்டு உணவுக்காக சாங்கீதா போக வேண்டும் என்று நண்பன் அழைக்க இந்த நடைபாதை உணவகத்தைப் பார்த்ததும் அங்கே போய் தோசை உண்ண வேண்டும் என்று சொல்லிவிட்டான்.

நண்பனோ தூய்மையிருக்காது என எண்ணிக் கொண்டு இந்த மாதிரி நடைபாதை உணவகங்களில் சாப்பிடுவதில்லை. இவனோ கவலைப்படாமல் போய் தோசை சொல்லிவிட்டு உட்கார்ந்து விட்டான்.

வேறு வழியில்லை அவனும் இவனோடே உண்ண வேண்டியதாயிற்று. உண்டு முடித்து விட்டு விடுதி வந்து தூங்கிப் போகும் வரை சுத்தம் பற்றி புலம்பிக் கொண்டே இருந்தான் நண்பன்.

அடுத்தவனை புலம்ப விடுவது அல்லது… வெட்டி வேலை செய்ய வைப்பது வெறுப்பேற்றுவது இவனுக்கு ஒரு பொழுது போக்கு..

தொடர்ச்சி..... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=355513&postcount=59)

அறிஞர்
28-05-2008, 08:35 PM
கதாசிரியர் செல்வா.. எங்கு எங்கோ அனைவரையும் இழுத்து செல்கிறார்.

கலக்குங்கள்.. செல்வா..

செல்வா
08-06-2008, 07:12 PM
அதிலும் தெரிந்தவர்களிடம் , நன்கு பழகியவர்களிடம் அவன் பேசும் பேச்சை கேட்டால் நாகாக்க என்ற வள்ளுர் தற்கொலை செய்து விடுவார். ஆனால் இத்தனையும் நன்கு பழகியவர்களிடம் மட்டும் தான். புதியவர்களிடம் பேசும்போது ஏதோ கொஞ்சம் இடம் பொருள் பார்த்து தான் பேசுவான். அந்த மட்டில் இதுவரை அடிவாங்காமல் தப்பித்துக்
கொண்டு வருகிறான்.

இப்போது… இப்படி ஓரிடத்தில் ஒரு மணி நேரமாக நின்று கொண்டிருப்பது அவனுக்கு மிகவும் சவாலாகத் தான் இருந்தது.

பலகாரம் விற்றுக் கொண்டிருந்த பெண்மணியும் அனைத்தும் விற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

பாழாய்ப் போன இந்த காதல் மனிதனை என்ன பாடு படுத்துகிறது.

அமரவும் வழியின்றி நிற்கவும் நிலையின்றி தவித்துக் கொண்டிருந்தவன் முகம் சட்டென்று மலர்ந்தது. ஆம் வண்டியிலிருந்து கைகளை ஆட்டிக் கொண்டிருந்தாள் அவனைப் பார்த்து.

ஆகா… ஒருவர் மற்றவரைக் கண்டதும் இருவர் கண்களிலும் தான் என்ன ஒரு ஒளி…. ஓராயிரம் நிலவுகள் சேர்த்தாலும் இத்தகைய உயிருள்ள ஒளியைக் கொடுக்க இயலுமா?

களைத்து வந்தவளின் களைப்பு போன இடம் தெரியவில்லை … தவித்து நின்றவனின் தவிப்பு நின்ற சுவடு தெரியவில்லை…

சென்று வண்டியை நிறுத்திமிடத்தில் நிறுத்திவிட்டு வந்தாள். சாப்பிடலாம் என்று பிசாஹட்டினுள் சென்று அமர்ந்தனர்.

வாடா செல்லம் என்று குழந்தையை அவள் கரங்களிலிருந்து வாங்கியவன் அதிர்ந்தான்…..

“என்னடி இது இப்பிடி சூடா இருக்கு உடம்பு…”

“காச்ச..டா… சாப்டுட்டு மருத்துவமனைக்கி போணும்..”

“மண்ணு… பைத்தியம்… முதல்ல வா மருத்துவர்ட்ட போலாம்” என்று எழுந்தான்..

“பரவால்லடா நான் மருந்து குடுத்தன்.. நீ சாப்பிடு சாப்டுட்டு போலாம்..”

“மயிரு… எழும்புடி முதல்ல புள்ள வளக்குற லட்சணம்…” என்ற படியே வாயிலை நெருங்கிவிட்டான்…

அவளும் எழுந்து பின்னால் வந்தாள்..

“சாப்பாடாம் சாப்பாடு… முதல்ல புள்ளக்கி என்னானு பாக்கலாம்..”
என்று திட்டிக் கொண்டே… முன்னால் வேகமாகச் செல்லும் அவனை ஆர்வமுடன் பார்த்தபடியே அவனோடு ஓடினாள்.

அவனையும் அழைத்துக் கொண்டு… மருத்துமனையில் பதிவுசெய்து விட்டு மருத்துவரைச் சந்திப்பதற்காக காத்திருக்கும் இடத்தில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தனர் இருவரும்.

குழந்தையை மடியில் கிடத்தியபடி குழந்தையின் தலையை கோதிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

காதலியைச் சந்திக்க வந்த இடத்தில் அவள் குழந்தைக்கு வைத்தியம் பார்க்க அழைத்துப் போகும் அவனை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் குழந்தையின் மீது அவன் காட்டும் பாசம் அவன் மீதிருந்த காதலை இன்னும் அதிகப் படுத்தியது.

இவனைச் சரியாக புரிந்து கொள்ளாமல் விலக்கிப் போய்விட்டோமே என்ற எண்ணம்… மனதிற்குள்.. தோன்றியது. மனதெங்கும் அதிர்வலைகள்…

கண்களில் நீர் திரண்டது…

முகத்தைச் திருப்பி திரண்ட கண்ணீரை மிகுந்த கடினத்துடன் மறைத்துக் கொண்டாள்.

மேலும் அவளை கலங்க விடாமல் அவளைக் காப்பாற்றுவதற்காகவே செவிலி வந்து அழைத்தாள்.

எழுந்து குழந்தையை வாங்கிக் கொண்டு மருத்துவர் அறைக்குச் செல்ல திரும்பினாள்.

பின்னாலே அவனும் எழுவதைப் பார்த்தவள். அருகில் வந்து நீ இங்கேயே இரு… மருத்துவர் தெரிந்தவர் உன்னைக் கண்டால் யார் என்ன என்று வினவுவார்… என்று கூறி

அவனை இருத்திவிட்டு உள்ளே சென்றாள்.

தொடர்ச்சி.... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=366698&postcount=66)

செல்வா
08-06-2008, 07:18 PM
கதாசிரியர் செல்வா.. எங்கு எங்கோ அனைவரையும் இழுத்து செல்கிறார்.

கலக்குங்கள்.. செல்வா..

ஆஹா.... இந்த கதையில் உங்கள் முதல் பின்னூட்டம். வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா..

யவனிகா
08-06-2008, 07:43 PM
செல்வாவின் நடையில் தனி ஒரு அழகும் ஈர்ப்பும் இருக்கும் எப்போதும்...
அது நிரூபணமாகிறது மீண்டும்...இன்னும் பெரும்பாலான பகுதிகள் படிக்கவில்லை....படித்து விட்டு பின்னூட்டம் இடுகிறேன்....

சின்ன நெருடல்...பேச்சு வழக்கு அழகாக இருக்கிறது...கதை மாந்தரின் போக்குக்கேற்ப...டாக்டர் வினவுவார் என்ற இடத்தில் தூய தமிழ் கதையோட்டத்தில் இடறுகிறது...

கதை முழுதும் படித்து விட்டு வருகிறேன் செல்வா...

சிவா.ஜி
09-06-2008, 04:32 AM
நிஜமான காதல் தன்னலம் பார்க்காது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது இந்தக் கதையின் காதல். காதலியின் பிள்ளைக்கு சுகமில்லை எனும்போது உணவையும் மறுத்து செல்லும் காதலனின் உள்ளம் உயர்ந்து தெரிகிறது. தொடருங்கள் செல்வா. அழகாக கதை நகர்கிறது.

இளசு
12-07-2008, 05:25 PM
அன்பு செல்வா

இதுவரை வந்த 11 பாகங்களும் முதல் முறையாக முழுமையாக ஒரே மூச்சில் இன்று வாசித்தேன்.

முதலில் என் வாழ்த்துகள்!

ஒரு வாரம் மட்டும் பார்த்த மலேசியா
ஒரு முறை மனதில் பதிந்த நபர்கள்/ சம்பவங்கள்..

இத்தனை நேர்த்தியாய் எழுத முடிவது - ஓர் அசாத்தியத் திறமை!

மின் தூக்கி, அலைபேசி, நடைமேடை என உறுத்தாமல் நல்ல தமிழை
தூவிய சிறப்புக்கு தனியாய் ஒரு வாழ்த்து!

ஆதுரம், மறக்க நினைக்கும் எதுவும் முகிழ்க்கும் என கவிதைத்துவ வரிகளும்...

வாயில் சிக்கிய முடி, வாயில் வந்த வசவுச்சொல் முடி என நுணுக்கமான விவரிப்புகளும்..

நாகாக்க, தூங்கக்கயிறு என நகைநடையும்..

ஈரப்படுத்தப்பட்ட உதடு, கன்னச்சிவப்பு என கவன ஈர்ப்புமாய்..

மிக நல்ல கதாசிரியரைக் கண்டுகொள்ள வைத்த கதை!

சிக்கலான முறையில் கதையை தெளிவாய்ச் சொல்லி வரும் செல்வா-
சிரமம் பார்க்காமல் முழுமை செய்யச் சொல்லி வாழ்த்துகிறேன்..

தீபா
12-07-2008, 06:24 PM
அசந்தேன்...

மலேசியா சென்றதில்லை. சென்ற உணர்வைலையை மனதுக்குள் புகுத்தி எழுதத் தெரிந்த அசாத்திய திறமை உமக்கு திரு.செல்வா. கொஞ்சமும் அலுப்புதட்டாமல் எங்கெங்கும் தங்குதடையிலாதபடி கதைப்போக்கு அழுத்தி அழைத்துச் செல்லுகிறது.

வசனங்கள் எதார்த்த விரல் பிடித்து அந்தி சாயும் பொழுதொன்றில் சிறு குழந்ததயை தகப்பன் பிடித்துச் செல்லுவதைப் போல, கொண்டு செல்கிறது.

எழுத்து நிரையில்லாமல் செல்வது கண்ணோட்டத்திற்குக் கெடுதியாக இருக்கிறது செல்வா. ;) அக்குறை களைந்து நிறைஅடைய வாழ்த்துகிறேன்.

மனமாழ்ந்த பாராட்டுக்கள்.
தென்றல்.

mukilan
12-07-2008, 08:56 PM
செல்வா இன்றுதான் இத்திரியைக் கண்டேன். ஏற்கனவே நம் நண்பர்கள் சொன்ன அனைத்தையுமே வழி மொழிகிறேன். ஒரு நாவல் என்பது திரைப்படம் போல எல்லாவற்றையும் கண் முன் விளக்க வேண்டும். கதை மாந்தர் உருவமைப்பு,அவர்களின் செய்கைகள், கதைக்களத்தின் அமைப்பு என அனைத்தையும் வர்ணித்து மலேசியாவைக் கண்முன் கொண்டு வர நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.
சற்று முன்னர் நடந்த நிகழ்வுகளையும் நிகழ் காலத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளையும் கொண்டு எழுதும் பொழுது குழப்பம் வராமல் எழுதுவது சிரமம். அதையும் திறமையாகக் கையாண்டிருக்கிறீர்கள்.
காதலர்கள் பரிமாறிக் கொள்ளும் வார்த்தைப் பிரயோகங்கள் அழகு! அழகான ராட்சசியும், காதல் பிசாசுக்களும், அழகிய அசுரன்களும் கொஞ்சல் வார்த்தைகள் ஆனதில் என்ன ஆச்சர்யம்! அது போலவே லூசுக்குட்டியையும், பன்னிக் குட்டியையும் ரசித்தேன்.

புனைவென்றாலும் யதார்த்தத்தோடு ஒத்துப் போவதால் மிகவும் அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

செல்வா
15-07-2008, 11:46 PM
ஆஹா... மன்றத்து ஜாம்பவான்களின் ஆசிகள் பெற உண்மையிலேயெ கொடுத்து வைத்தவன் தான் நான்.


செல்வாவின் நடையில் தனி ஒரு அழகும் ஈர்ப்பும் இருக்கும் எப்போதும்...
அது நிரூபணமாகிறது மீண்டும்...இன்னும் பெரும்பாலான பகுதிகள் படிக்கவில்லை....படித்து விட்டு பின்னூட்டம் இடுகிறேன்....


மிக்க நன்றி அக்கா ... தங்கள் பாராட்டுக்களுக்கு.


தொடருங்கள் செல்வா. அழகாக கதை நகர்கிறது.

ரொம்ப நன்றி அண்ணா. கதை எழுதுவதே நான் தங்களிடமிருந்துக் கற்றுக்கொண்டது தானே. உங்கள் கதைகளைப் படிக்கும் போதெல்லாம் மனதுக்குள் ஒரு உத்வேகம் வரும் தங்களளவிற்கு இல்லை என்றாலும் அதில் பாதிபொறுமளவிற்காவது கதைகள் எழுதவேண்டும் என. உங்களது வாழ்த்துக்கள் கண்டிப்பாக எனக்குத் தேவை அண்ணா...


அன்பு செல்வா

இதுவரை வந்த 11 பாகங்களும் முதல் முறையாக முழுமையாக ஒரே மூச்சில் இன்று வாசித்தேன்.

முதலில் என் வாழ்த்துகள்!
சிரமம் பார்க்காமல் முழுமை செய்யச் சொல்லி வாழ்த்துகிறேன்..

ஆஹா... என்ன ஒரு ஆச்சரியம். இளசு அண்ணாவின் பின்னூட்டம் எனது கதைக்கா. ஒரு முறைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். நனவு தான் கனவில்லை....
தங்களது பின்னூட்டம் பெற்றபின்னும் வெட்டியாயிருக்க மனம் விடுமா அண்ணா... கண்டிப்பாக முயற்சித்து முடித்து விடுகிறேன்.



எழுத்து நிரையில்லாமல் செல்வது கண்ணோட்டத்திற்குக் கெடுதியாக இருக்கிறது செல்வா. ;) அக்குறை களைந்து நிறைஅடைய வாழ்த்துகிறேன்.

மிகுந்த நன்றிகள் தங்கள் பாராட்டுக்களுக்கு நண்பரே. மேலே நீங்கள் சொல்லியிருப்பதுச் சரியாகப் புரியவில்லை. சற்று விளக்கமாகச் சொன்னீர்கள் என்றால் குறைகளைவேன். நன்றி



புனைவென்றாலும் யதார்த்தத்தோடு ஒத்துப் போவதால் மிகவும் அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
ஆஹா... முகிலன் அண்ணாவின் கதைகளுக்கு நான் அடிமை என்றே கூறிவிடலாம். அவரிடமிருந்து பாராட்டு. மிகுந்த நன்றி அண்ணா. நீங்களெல்லாம் உடனிருக்கும் போது எனக்குக் கவலை ஏது அண்ணா. கற்றுக் கொள்ளும் முயற்சிகள் தானே எனது கதைகள் அனைத்தும்.

செல்வா
15-07-2008, 11:52 PM
மருத்துவரைச் சந்தித்து விட்டு அவள் வந்ததும். விரைவாக எழுந்து அவளிடம் சென்றுக் குழந்தையை வாங்கிக் கொண்டான்.

“என்னாச்சு ? மருத்துவர் என்னச்சொன்னார்?”

“ஒன்றும் கவலைப்பட வேண்டாம்…. மருந்து எழுதிக் கொடுத்திருக்கிறார்…”

என்று அவனையும் அழைத்துக் கொண்டு … அந்த மருத்துவமனையோடு இணைந்திருந்த மருந்தகத்தில் சென்று மருந்துச் சீட்டைக் கொடுத்தாள்.
அவள் பணம் கொடுப்பதற்காக பையைத் திறந்தாள். இவன் அவளைத்தடுத்து விட்டு தனதுப் பணப்பையைத் திறந்து அவளிடம் கொடுத்தான். அவன் பணத்தை வாங்க மறுத்தாள். முகத்தில் கோபம் காட்டி எடுத்துக் கொடு என்று கூற பின் மறுக்காமல் எடுத்துக் கொடுத்தாள்.
பார்த்துக் கொண்டிருந்த இருவரும் கையிலிருந்த மருந்தைக் காட்டி மலாயில் ஏதோக் கூறினர். அவள் குறுக்கிட்டுச் சிரித்தபடி அவருக்கு மலாய் தெரியாது எனக் கூறிவிட்டு. அவளேக் கேட்டுக் கொண்டாள் மருந்துக் கொடுப்பதுப் பற்றிய விபரங்களை.
மருந்துகளை அவள் பையில் வைத்துக் கொண்டு பணப்பையை இவன் கையில் கொடுத்தாள். குழந்தையை இடது தோளில் சாய்த்துக் கொண்டு வலது கையை அவளது தோளைச் சுற்றிப் போட்டபடி நடக்கத் துவங்கினான் வாசலை நோக்கி…
சற்றுத் தூரம் நடந்தவன் தற்செயலாக ஏதோ உணர்ந்துப் தலையைத் திருப்பி பின்னால் பார்த்தான். மருந்தகத்திலிருந்த இரு பெண்களும் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். இவன் பார்ப்பதைப் பார்த்ததும்
“நல்ல அருமையான ஜோடி என்பதாகக் கையால் சைகை செய்தனர்… “

மனதிற்குள் மகிழ்ச்சி மத்தாப்பு வெடிக்க வெளிச்சம் முகத்தில் தெறித்து உதடுகளில் புன்னகையாய் விரிந்தது….

வெளியே வந்து பிசா சாப்பிட்டு விட்டு …. காரில் சென்று அமர்ந்தனர்…
அவள் ஓட்டுனர் இருக்கையில் அமர… குழந்தையை மடியில் வைத்தபடி பக்கத்து இருக்கையில் இவன் அமர்ந்து கொண்டான்.
வண்டியை இயக்கி…. வெளியே கொண்டு வந்தாள்… இரண்டுச் சிறியச் சாலைகளைக் கடந்து … பெரியப் பிரதானச் சாலையை அடைந்துவண்டி வேகமெடுத்தது…

எங்கே போகிறாய் என்று இவனும் கேட்கவில்லை.. எங்கே செல்கிறோம் என்று அவளும் சொல்லவில்லை…

வண்டிச் சென்று கொண்டிருந்தது…
அவளையே கண்இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான்…
ஓரத்திலிருந்து பார்க்கும் போது மிகுந்த அழகாகத் தெரிந்தாள். கன்னங்கள் மென்மையாக இருந்தன. காதுக்கு முன்பிறமிருந்த முடிக்கற்றை காதோடு ஒட்டிய படி கன்னத்தில் விழுந்திருந்தது… பார்ப்பதற்கு மஞ்சள் வெண்மை நிறக் கன்னத்தில் கறுப்புக் கோடுகளால் வரைந்த ஓவியம் போன்று இருந்தது.
கவனமாக வண்டி ஓட்டுவதாகக் காட்டிக் கொண்டு… அவன் பார்ப்பதை கடைக்கண்ணால் அவளும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க மாட்டாமல். வலது கையால் அவள் தலையை வருடிக் கொடுத்தான்.
முன் நெற்றியிலிருந்து... கூந்தலை ஒதுக்கியபடி… கன்னத்திலிருந்த ஓவியத்தைக் கலைத்து புதுப் புது ஓவியங்கள் உருவாக்கத் துவங்கின அவன் விரல்கள்.

செல்வா
15-07-2008, 11:56 PM
கன்னங்களில் வரையும் அவன் விரல்கள். அவ்வப்போது காது மடல்களைத் தீண்ட…
மயிர்க்கூச்செரியக் கூசியது அவளுக்கு. தலையைச் சாய்த்து அவனது உள்ளங்கையில் அழுத்தி மேலும் வரைய விடாமல் தடுத்தாள்.
அழுத்திய அவள் கன்னங்களின் மிருதுத் தன்மை அவனுக்குப் பிடித்திருந்தது. சாய்த்து அழுத்தியிருந்த கன்னங்களைச் சற்று வருடிக்கொடுக்கவாரம்பித்தான்.

தலையைச் சாய்த்து அவள் பக்கமாகத் திருப்பி முத்தமிட நெருங்கினான். கடைக்கண்ணால் அவன் நெருங்குவதைக் கண்டும் காணாதவள் போல் அவனுக்கு உதவுவதற்காக.. சாய்த்திருந்த தலையை உயர்த்தி நேராக்கினாள்.

அவனுடைய மூச்சுக்காற்று அவள் குழல் கலைத்தது… வெப்ப மூச்சுக் காற்றுப் பட்டதும் கன்னங்கள் சிவந்தன.
நூலிழை இடைவெளியில் உதடுகள் கன்னங்களை உரசவிருந்த வேளையில்…

திடீரெனச் சற்றும் எதிர்பாராத விதமாய் குழந்தை சிணுங்கி தான் அங்கிருப்பதை உணர்த்தியது. குழந்தையின் சிணுங்கலால் தன்னிலை மீண்டவன்… அவளிடமிருந்து விலகி.. குழந்தையை மடியில் வைத்துத் தட்டிக் கொடுக்கவாரம்பித்தான்.

அவளும் நிலைகலைந்து குழந்தையைப் பார்த்தவள்
“பசி வந்துருச்சு பாப்பாக்கு “ என்றபடியே.. பால் குப்பியை எடுத்து அவனிடம் கொடுத்துக் குழந்தைக்குப் புகட்டச் சொன்னாள். புகட்டினான்…
குழந்தையும் அமைதியாகக் குடிக்கத் துவங்கியது.

தனிமையிலிருக்கும் போது கண்ட இனிமையன கனவு இடையிலேயே கலைந்து விட்டால் எப்படி இருக்குமோ… அப்படி இருந்தது இருவருக்கும். கனத்த மொளனம் இருவர் உதடுகளில் ஆனால் உள்ளங்களோ அந்த மொளனத்தையே மொழிகளாக்கித் தமக்குள் சத்தமின்றி உரையாடிக்கொண்டிருந்தன.

சாலை மிக விசாலமாக இருந்தது… நடந்த நிகழ்வுகளால் வண்டியின் வேகம் மட்டுப்பட்டிருக்க மிதமான வேகத்திலேயேச் சென்றுகொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் மழை பெய்யத் துவங்கியது. சாரலாகத் துவங்கியது… சட்டென்று பெருமழையாகியது…

“ஆஹா… அருமையான மழை…” அவன் மொளனத்தைக் கலைத்தான்.
மொளனம் கலைந்ததும்….அவள் மனதில் குறும்பு வந்துக் குடிபுகுந்தது…

“ஆமா உனக்கென்ன சொல்றதுக்கு… சும்மா உக்காந்து ஜொள்ளு விட்டுட்டு வர.. வண்டி ஓட்டுற எனக்கில்ல தெரியும்.. எவ்ளோ கஷ்டம்னு…”

“சரி அப்படின்னா நிறுத்து… மழைய நல்லா இரசிச்சுட்டு மழை விட்டதும் கெளம்பலாம்”

“ஆமா… மழைய இரசிக்கதான் இவரு நிறுத்தச் சொல்லுறாரு…” முனகல் ஒலியை மழையின் ஓசை உண்டுவிட

“என்னடி முனகுற சத்தமாச் சொல்லு….” என்றிரைந்தான்.

“ஆமா உனக்கென்ன ஊர் சுத்திப்பாக்குறதுக்குண்ணே வந்துருக்க…. எனக்கு ஆயிரத்தெட்டு வேலை தலைக்கு மேல இருக்கு… மழைய இரசிக்குறாங்க.. மழைய” சலித்துக் கொண்டபடியவள்.

“அதெப்படி அவ்வளவு சரியா ஆயிரத்தி எட்டுனு சொல்ற… எண்ணி வச்சிருக்கிறியா…”

“என்னது எண்ணி வச்சிருக்கிறன்?”

“பேன்… பேனைத் தானே சொன்ன. தலைக்கு மேல ஆயிரத்தெட்டு வேலைணு… “

“ஆஆஆஆஆ…… பொறுக்கி உன்ன…. “

“என்னால முடியாதுபா பொறுக்குறதுக்கு….”

“என்ன பொறுக்குறதுக்கு…?”

“பேனைப் பொறுக்குறதுக்கு அதத்தானே பொறுக்கச் சொன்னா…”

“அடிங்கோ….. “

என்று கூறியபடி மண்டையில் குட்டனாள்….

“ஆ.. வலிக்குதுடி…. பைத்தியம்… “ என்றபடி அவளைக் குட்ட கை
ஓங்கினான்…

இவனது குட்டுக்கு விலகுவதாக நினைத்துக் கொண்டு அவள் விலக…

அவளோடு சேர்ந்து வண்டியும் விலகியது … பாதையை விட்டு.

செல்வா
09-02-2009, 12:26 PM
(எழுதணும் எழுதணும்னு நெனைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு இடைஞ்சல் வந்துகிட்டே இருக்கு என்னாங்க பண்றது... குடும்பம் வேலை எனப்பார்க்கும் பொது அவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதாகிறது...)

அத்தியாயம் 14 :

விரைந்து செயல்பட்டு வண்டியைக் கட்டுக்குள் கொண்டுவந்தாள். நல்ல வேளையாக மிதமான வேகத்திலேயே வண்டி சென்று கொண்டிருந்ததால் விளையாட்டு வினையாகாமல் தப்பித்தனர். வண்டியை நிலைப்படுத்தி ஓட்ட ஆரம்பித்தவள் பொய்க்கோபத்தோடு அவனை அர்ச்சனை செய்யவும் ஆரம்பித்தாள்.
"கைய கால வச்சிகிட்டு ஒழுங்கா வரதில்ல.... இப்ப பாரு குடும்பத்தோட பரலோகம் போயிருப்போம்."
"நான் என்ன பண்ணேன். நீதான் ஒழுங்கா பாத்து ஓட்டணும்...."
...................................................
இப்படி பலவிதமான களேபரங்களுடன் பேசி பேசி வண்டியிலேயே.... அமர்ந்தபடி ஊரைச்சுற்றிக்கொண்டிருந்தனர்.
தற்செயலாக கரத்திலிருந்த கடிகாரத்தைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.
நேரம் காலம் தெரியாமல் பேசிக்கொண்டே ஊரைச்சுற்றியதில் மணி மாலை 7ஐக் காட்டியது. புறப்பட்ட இடத்திலிருந்து கிட்டத்தட்ட 30 - 40 கி.மீ. தூரத்தில் இருந்தனர். அவளுடைய அம்மா விரைவாக வரச்சொன்னது நினைவுக்கு வந்தது. சரியான நேரத்திற்கு வீட்டிற்குச் செல்லவில்லை என்றால் இப்போது இருக்கும் மகிழ்ச்சிக்கும் சேர்த்து மொத்தமாக மூட்டைகட்டி விடுவார்கள் அம்மா. நாளை மாலை கடையை அடைக்கும் வரை இதே வார்த்தைகளால் சாகடித்து விடுவார்கள்.

இத்தகைய நினைவுகளால் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தவள் திடீரென்று அமைதியானாள். மனதிலிருந்த கவலை அவளைப் பேசவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. பேச்சை முடித்து விட்டு வண்டி ஓட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தாள். ஆனால் இவை எதுவும் அறியாதவனாய் அவன் அவளைத் தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்தான். கொஞ்ச நேரம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் எதுவும் வராததால் திரும்பி அவளைப் பார்த்தான். அவளோ வாகனம் ஓட்டுவதிலேயே குறியாக இருந்தாள்.
சிறிது கோபம் வந்தது....
"என்ன கேட்டுட்டே இருக்கன் பதிலே வரல..."
அப்போதும் பதில் வராமல் போகவே... கையை மடக்கி கன்னத்திற்கு அருகில் குத்துவது போல் காட்டிக்கொண்டே மறுபடியும் கேட்டான்....
அனிச்சையாய்... கையிலிருந்து தப்பிக்க தலை சாய்த்து விலக...

"சும்மா இருங்க.... விளையாட்டு எல்லாம் போதும்...." நேரத்தைக் கவனிக்காம இருந்துவிட்டோமே என்று தன்மீதே இருந்த கோபம் எரிச்சலாக மாறியதால் வெடுக்கென்று வெளிவந்த வார்த்தைகள் சுருக்கென்றுத் தைத்தது அவனை...

சுருங்கிய உள்ளம் சுருக்கியது கைகளை.... குழந்தையைச் சரியாக இருத்தியபடி.. இந்தப்புறமாக வெளிப்பக்கம் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.

மறுபடி மெளனம் ஆட்சி செய்யத்துவங்கியது.. ஆனால் இந்த மெளனத்தில் அமைதி இருக்கவில்லை.. அனல் வீசவாரம்பித்தது.

எத்தனை தான் நெருங்கிய உள்ளங்கள் என்றாலும் ஒரு சிறுபொழுதில் புரிதல்கள் மாறும் பொழுது... பிரிவு வந்து விடுகின்றது. அதைப் புரிந்து கொண்டு இதயம் திறக்க மறுக்கும் போது வைராக்கியம் குடிகொண்டு விடுகிறது. அதுவே பின் நானா நீயா என்ற வம்பாகவும் மாறி... ஒட்டாத துருவங்களாய் விலகிப்போய் விடுகிறது.

சூழலை விளக்க வேண்டும் என்று அவளும் நினைக்கவில்லை...

புரிந்து கொள்ள அவனும் நினைக்க வில்லை... அவளது குணம் என இருந்து விட்டான் அவன்.

"எங்கே இறங்கிக்கிற..." அவள் சாதாரணமாகத்தான் கேட்டாள் அவனுக்கோ.... அது அசாதாரணமாகப் பட்டது.

"எனக்கு என்ன மயிரு தெரியும். எங்க விடத்தோணுதோ அங்க விடு... வேணும்னா இந்த ரோட்டுலேயே இறங்கிக்கிறென். நீ உன்வழில போகலாம்"
தேவையில்லாத வார்த்தைகள். முன்பின் தெரியாத ஒருவரிடம் பெரும்கோபம் கொள்ளும் நேரத்திலும் பதுங்கிக் கொள்ளும் வார்த்தைகள்...
நெருங்கிய ஒருவரிடம் சிறுகோபம் கொள்ளும் போதோ பாய்ந்து வந்து கொல்லுகின்றன.

வார்த்தைகள்..... கத்தி போன்றது மருத்துவர் கையில் இருப்பது உயிரைக் காக்கவும் போர்முனையில் நிற்பவர் கையிலிருப்பது உயிரை அழிப்பது போலவும். இருதுருவாய் இருக்கும் இதயங்களை இணைத்து ஒருதுருவாக்கவும் ஒருதுருவாய் இருக்கும் இதையங்களைப் பிரித்து இருதுருவாய் ஆக்கவும் வல்லமையுள்ளது வார்த்தைகள். அதனால் தானோ வள்ளுவன் சொல்லைப்பற்றியும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது பற்றியும் பலப்பல எழுதியுள்ளான்.

மறுபடியும் அமைதி ஆட்கொண்டது இருவரையும்.

"சரி ராசா ஸ்டேசன்ல இறக்கிவிடுறேன்... அங்கருந்து ரவாங் போய் வேற வண்டி எடுக்கணும்"

எந்தப் பதிலும் வரவில்லை அவனிடமிருந்து.

அதற்கு மேல் அவளும் பேசவில்லை.....

வண்டி ராசா நிலையத்தை அடைந்தது. குழந்தையைக் கையில் வாங்கியவள் ஏதும் பேசவில்லை...

இறங்க எத்தணித்தவன் இறங்கும் முன் நிதானித்து அவள் முகத்தைப் பார்த்தான்.. ஏதோ நினைவில் இருந்தவள்
"என்ன பார்வை இறங்குங்க நேரமாச்சு...."

வேகமாக இறங்கினான்..... இறங்கி வண்டியை முன்பக்கமாகச் சுற்றிக் கொண்டு அவள் அமர்ந்திருந்த இடத்திற்கருகே வந்தவன்...

குனிந்து மிகத் தெளிவாக மெதுவாக அவளிடம் சொன்னான்.....

"இனிமே நீ எப்படித்தான் கூப்பிட்டாலும் மலேசியாவ விட்டுப் போறது வரை உன்னப் பாக்க வரமாட்டேன் "

சொல்லிவிட்டு விருட்டென்றுத் திரும்பிச் சென்றுவிட்டான்.

ஆத்திரமும் கோபமும் கண்ணை மறைக்க இருவரும் தங்கள் வழிகளில் வேகமாகச் செல்ல ஆரம்பித்தனர்....
இருவர் இதயங்களும் ஒன்றாய்த் துடிப்பதை அறியாமலேயே....

செல்வா
14-02-2009, 05:19 AM
அத்தியாயம் 15 :

நாம் ஒன்று நினைக்கக் காலம் ஒன்று நினைக்கும் எனச் சொல்வர்கள். அப்படித்தான் இனிமேல் உன்னைப் பார்க்க வரவேமாட்டேன் என அவன் சொன்னான் ஆனால் அவன் அவளை அடுத்தநாளேப் பார்க்க வைக்கும் சூழலைக் காலம் அதற்குள் உருவாக்கியிருந்தது.

அவனை இறக்கி விட்டு விட்டுத் திரும்பியவள் வீட்டிற்குச் செல்லும் அவசரத்தில் வண்டியைச் சற்று வேகமாகச் செலுத்தினாள். என்றாலும் அவனுக்கு வண்டி கிடைத்ததோ இல்லையோ என அறியும் எண்ணத்தில் அலைபேசியை எடுத்து ஒருகையால் தட்டச்சினாள்.
"எங்கருக்க வண்டி கிடைத்ததா?"
அனுப்பி விட்டு சற்று நேரம் பொறுத்துப் பார்த்தாள் பதில் ஏதும் வராததால்.
"மன்னிச்சிருடா.... ரொம்ப நேரம் ஆயிடுச்சி அவசரமா வீட்டுக்குப் போகணும் அந்த அவசரத்தில சரியா பேசல.... தப்பா நெனச்சுக்காத. எங்கருக்க.... இப்போ?"

மறுபடியும் அவனிடமிருந்து பதில் வரவில்லை....

சற்று நேரம் பொறுத்துப் பார்த்தவள். அழைத்துப் பார்த்து விடுவதென நினைத்து எண்களை அழுத்தி காதில் வைத்தாள்.

பக்கத்து இருக்கையிலிருந்து சத்தம் வந்தது.....
திரும்பிப் பார்த்தவள் அதிர்ந்து பின் சிரித்தாள்.......
அங்கே அவன் இருந்த இடத்திற்குக் கீழே அவனது அலைபேசி விழுந்திருந்தது.

கையிலிருந்து ஏதோ நழுவியது போல் தோன்றவும் திடுக்கிட்டு கீழே பார்த்தாள். குழந்தை தூங்கியிருந்தது. விளையாடுவதற்காக அவள் கையிலிருந்த அலைபேசியை வைத்திருந்தாள் அதைத் தூக்கத்தில் குழந்தை நழுவவிட்டிருந்தாள். குனிந்து அலைபேசியை எடுத்தவள் குழந்தையையும் சரிப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள்.
விமானம் தயாராக இருப்பதாகவும் பயணிகள் விமானத்தில் சென்று அமருமாறும் வந்த விமானநிலையப் பணியாளரின் அறிவிப்பைத் தொடர்ந்து குழந்தையைத் தூக்கித் தோளில் சாய்த்து விட்டு இன்னொரு கையில் கைப்பையையும் எடுத்துக் கொண்டு விமானப் பணிப்பெண்ணின் புன்னகை வரவேற்பைப் பெற்றுக் கொண்டபடியே... இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்புக்கான விளக்கப் படங்களைத் தொடர்ந்து விமானம் பறக்கத்துவங்கியது.
விமானம் நிலையான உயரத்தில் பறக்கத்துவங்கியதும் குழந்தைக்கு அதற்கென கொடுக்கப் பட்ட இருக்கையில் கிடத்திவிட்டு இருக்கையைச் சாய்த்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள்.

யார் இவன் ? இவனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? நாடுவிட்டு நாடு அவன் என்னைத் தேடி வருவதற்கும் ? நான் அவனோடு வாழ எண்ணி அவனைத் தேடிச் செல்வதற்கும்? நேரில் பழகாமல் பார்க்காமல் என்மீது இத்தனை காதல் கொள்ள முடியுமா? சினிமாவில் தான் இத்தனையும் சாத்தியம் என எண்ணியிருந்தேன். ஆனால் உண்மையிலும் சாத்தியம் என்று நிரூபித்தவன் அவன்... ஆனால் நான்?
என்னால் தான் இத்தனைப் பிரச்சனையும். அவனது காதலை உணராமல் போய்விட்டேனே...
ஹ்ம்ம்.... பெருமூச்சுடன் சாய்ந்தவள் கண்களை மூடினாள்.
அவன் தன் காதலைச் சொன்ன அந்த தருணம் நினைவிலாடியது.

செல்வா
14-02-2009, 05:20 AM
அத்தியாயம் 16 :

இணையம் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுகளின் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் நிற்பது. இன்று இணையமிருந்தால் எதுவும் செய்யலாம் என்ற நிலைக்கு மாந்தர் தள்ளப்பட்டுள்ளனர். அன்றாட உணவுப்பொருட்கள் வாங்குவது முதல் வெடிகுண்டுகளை வைத்து அழிவு ஏற்படுத்துவது வரை இணையத் தொடர்பால் சாதிக்கும் காரியங்கள் ஏராளம்.

இணையத்தில் இறைந்து கிடக்கும் பொழுதுபோக்குத் தளங்களில் ஒன்றில் தான் அவளுக்கும் அவனுக்குமான அறிமுகம் நிகழ்ந்தது. இவனுக்கு முன்பே இணையத்தில் நுழைந்திருந்தவள் அவள். வெட்டி அரட்டை ஒன்றையேக் குறிக்கோளாகக் கொண்டு ஏராள நண்பர்களோடு முகம் பார்க்காது குரல் கேட்காது தினமும் அரட்டையடிக்கும் நவீன இணைய யுகத்துப் பிரதிநிதி அவள்.

இவனோ இப்போது தான் இணையத்தின் எல்லைக் கோட்டைத் தொட்டிருந்தான். நாட்டிலிருந்து பணிநிமித்தமாக வெளிநாட்டுக்கு வந்திருந்தவன் தொடர் இணைய இணைப்பால் செய்திகள் வாசிக்க என மெதுவாக காலடி வைத்தவன். தொடர்ந்து திரைப்படங்கள், பாடல்கள் பதிவிறக்குவது என வளர்ந்து அரட்டைத் தளங்களில் மேலோட்டமாகப் பார்வையிடுவது பதிவிடுவது என்ற நிலைக்கு வந்திருந்தான்.

அவளை முதலில் கவர்ந்தது அவனது பெயர் தான். அவனது பெயரைப் பார்த்ததும் ஒரு வித ஆர்வத்தில் அவனுக்கு தகவல் அனுப்பினாள். அவனும் பதிலனுப்ப சிறிய சிறிய விசாரிப்புகளோடு முடிந்து விட்டது தொடர்பு.

ஒரு நாள் தனியரட்டைக்கு வரச்சொல்லும் பொறுட்டு அவனது மின்னஞ்சல் முகவரி கேட்டு தகவலனுப்பியிருந்தான்.
"எதற்காக அரட்டை முகவரி நான் எல்லோருக்கும் கொடுப்பதில்லை. நண்பர்களுக்கு மட்டும் தான்"

"ஏன் நான் உங்கள் நண்பி இல்லையா?"

"இன்னும் இல்லை.... நாம் சந்தித்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை.. உங்களைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது என்னைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. எந்தவிதத்தில் நாம் நட்பாக இருக்க முடியும். ஒரு வேளை நாம்மிடையே நட்பு உருவானால் தருகிறேன்."

அடிபட்டதாக உணர்ந்தாள் அவள். இதுவரை அவளாகக் கேட்டு யாரும் மறுத்ததில்லை. அவளை வலியவந்து அழைத்தவர்கள் தான் அதிகம். அதோடு விட்டுவிட்டாள்.

அவளுக்குப் பதில் அனுப்பிவிட்டான் முடியாது என்று ஆனால் அவள் வருந்துவாளோ என்று இவன் வருந்திக்கொண்டிருந்தான்.

அதைத் தொடர்ந்து ஒரு வாரமாக அவளை அந்தத் தளத்தில் காணவில்லை...

முதலில் அலட்சியப்படுத்தியவன் இரு நாட்களில் அவளைத் தேடவாரம்பித்தான்.

தகவலனுப்பிப் பார்த்தான் ஒன்றும் பதிலில்லை....

ஒரு வாரமாக தேடிப் பார்த்தவன் அவளைக் காணாத போது மெல்ல மெல்ல மறந்து கொண்டிருக்கும் நிலையில்.

ஒரு நாள் காலை அலுவலகம் வந்ததும் கணிணியை இயக்கி இணையத் தொடர்பை ஏற்படுத்தியதும் முதல் முதலாக அந்தத் தளத்தில் நுழைந்தவன் அதிர்ந்தான்.

அங்கே அவன் கண்ட செய்தி அவனை உலுக்கியது.

செல்வா
21-02-2009, 09:18 PM
அவள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக அவளது நண்பன் ஒருவனால் பதியப் பட்டிருந்தது.

நட்பும் இல்லை எதுவும் இல்லை என்றிருந்தவனின் இதயத்தின் ஒரு மூலையில் துவங்கிய வலி... சிறிது நேரத்தில் மனம் முழுக்கப் பரவியது.... வேலையில் மனம் லயிக்கவில்லை... எழுந்து வெளியே வந்தான்.
அவனை அறியாமலேயே மனம்..... "கடவுளே அவளுக்கு ஒன்றும் ஆயிடக்கூடாது...." செபிக்கத் துவங்கியிருந்தது.

சற்று நேரம் நடந்தவன்... திரும்ப வந்து அவளுக்கு செய்தி அனுப்ப ஆரம்பித்தான்.

'வெகுநாளைக்குப் பின் மனமுருகி கடவுளிடம் வேண்டினேன் உங்களுக்காக.....
விரைவில் உடலும் மனமும் குணமடைந்து நலமே திரும்ப பிரார்த்திக்கிறேன்.
- நட்புடன்
-----------------' என்று முடித்திருந்தான்.

ஒரு வாரத்திலேயே... குணமாகித் திரும்ப வந்திருந்தாள். முந்தைய அளவிற்கு அவளது பங்களிப்பு இல்லை என்றாலும் தினமும் வந்து போய்க்கொண்டிருந்தாள்...

இவனது செய்தி கண்டு மிகுந்த நன்றிகளைச் சொல்லியிருந்தாள்... அதோடு நட்பை ஏற்றுக்கொண்டிருந்ததற்காக... சிறப்பு நன்றிகளையும் சொல்லியிருந்தாள்.

மறுபடி சகஜமாகப் பேசவாரம்பித்தனர் இருவரும். இதற்கு முன் இருந்த தடை இல்லாமல் இன்னும் நெருக்கமாகப் பேசவாரம்பித்தனர்.

வெறும் வாக்கிய உரையாடலாக இருந்தது விரைவிலேயே... ஒலி உரையாடலாக மாறியது....
அந்த நேரத்தில் அவனது வேலை இரவு நேரத்திற்கு மாற்றப்பட்டது. அவன் மட்டும் தனியாக இருப்பான். இது இவர்களது உரையாடலை இன்னும் நீளப்படுத்தியது....

மெள்ள மெள்ள அவளைச் சந்திக்காத நாட்களை வெறுக்க வாரம்பித்தான்.
அவளோடு பேசாத நாட்கள் அவனது நாட்காட்டியில் துக்கதினமாக மாறியது.
கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தன் உணர்விலேக் கலக்கவாரம்பித்தான்.

ஒலி உரையாடல் மெள்ள மெள்ள வளர்ந்து ஒரு நாளில் ஒலியும் ஒளியுமாக மாறியது....

நிழல்படக் கருவி வழியாக அவளைப் பார்த்துக்கொண்டே பேசிக் கொண்டிருப்பான்....

சில நாட்களில் அவளைப் பார்க்கும் போதெல்லாம் மனம் குதூகலமடைந்தது....

அவளைப் பார்க்கப் பார்க்க அவனுள் இராசாயான மாற்றங்கள் நிகழத்துவங்கியது...

வேலைகளை எல்லாம் விட்டு விட்டு அவள் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருப்பான்.

"ஏய் என்ன பதிலையேக் காணோம்....."

"ஒண்ணுமில்ல உன் முகத்தைப் பார்த்திட்டுருந்தேன்...."

"ஏன் முகத்தில என்ன தெரியிது...."

"ஒண்ணும் தெரியல... ஆனாப் பாக்க பாக்க பயமாருக்கு...."

"பயமா ஹா...ஹா.... ஏன்...."

"இப்படியே பாத்திட்டுருந்தா எங்க உன்னைக் காதலிச்சுடுவனோனு... பயமாருக்கு......"
ஏற்கெனவே காதலித்துக்கொண்டிருப்பதைத்தான் இப்படி எதிர்காலமாக்கிச் சொன்னான்...

சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தவன் திடீரென்று இப்படிச் சொல்லவும் அதிர்ந்தாள்......

அவனோ இவள் பதிலுக்காக நகங்கடித்துத் துப்பியபடிக் காத்துக்கொண்டிருந்தான்.

சிவா.ஜி
22-02-2009, 06:23 AM
நாங்களும்தான் காத்துக்கிட்டிருக்கோம். நட்பு காதலாய் மாறும் ரசாயன மாற்றத்தைப் பார்க்க. தொடருங்க செல்வா. ரொம்ப நாளைக்குப் பிறகு இந்த தொடரை தொடர ஆரம்பித்திருக்கிறீர்கள். அப்படியே தொடர்ந்து எழுதுங்க.

செல்வா
22-02-2009, 07:58 AM
நாங்களும்தான் காத்துக்கிட்டிருக்கோம். நட்பு காதலாய் மாறும் ரசாயன மாற்றத்தைப் பார்க்க. தொடருங்க செல்வா. ரொம்ப நாளைக்குப் பிறகு இந்த தொடரை தொடர ஆரம்பித்திருக்கிறீர்கள். அப்படியே தொடர்ந்து எழுதுங்க.
என்ன அண்ணா பண்றது நானும் முடிச்சிடலாம்னு தான் பாக்குறன்.... ஆனால் முடியமாட்டிங்கிது... அவள் பயணம் போறவ போய்க்கிட்டே இருக்கா.... எங்கயாவது ஒரு இடத்தில நின்னாதானெ கதையும் முடியும். சரி பயணம் போறவதான் ஒழுங்கா போக வேண்டியது தானெ... இடையில வேண்டாததெல்லம் யோசிச்சிகிட்டே போய்க்கிட்டுருக்கா....
சீக்கிரமே பயணத்த முடிச்சிடுவாண்ணு உங்கள மாதிரியேத்தான் நானும் நம்பிட்டுருக்கேன்.... :)

ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தத் திரியில பின்னூட்டம். பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நான்றி அண்ணா.

SivaS
04-03-2009, 03:45 AM
ரொம்ப அருமையாக தொடர்கிறீர்கள்,
தொடர்ந்து காக்க வைக்காது தாருங்கள் நண்பரே.


"தேவையில்லாத வார்த்தைகள். முன்பின் தெரியாத ஒருவரிடம் பெரும்கோபம் கொள்ளும் நேரத்திலும் பதுங்கிக் கொள்ளும் வார்த்தைகள்...
நெருங்கிய ஒருவரிடம் சிறுகோபம் கொள்ளும் போதோ பாய்ந்து வந்து கொல்லுகின்றன."

உண்மையான வரிகள்

பாரதி
08-04-2009, 05:12 AM
நாங்களும்தான் காத்துக்கிட்டிருக்கோம். நட்பு காதலாய் மாறும் ரசாயன மாற்றத்தைப் பார்க்க. தொடருங்க செல்வா. ரொம்ப நாளைக்குப் பிறகு இந்த தொடரை தொடர ஆரம்பித்திருக்கிறீர்கள். அப்படியே தொடர்ந்து எழுதுங்க.

சிவா சொல்வதை வழி மொழிகிறேன்.

செல்வா
02-05-2010, 06:08 AM
சிவா சொல்வதை வழி மொழிகிறேன்.

சரி சரி... கோச்சுக்காதீங்க அண்ணா......

இதோ ஆரம்பிச்சுட்டேன்..

மிகச் சரியாக ஓரு ஆண்டுகளின் முடிவில் மீண்டும் தொடருகிறேன் இந்தக் கதையை.

இந்த ஒரு ஆண்டுக்குள் வாழ்வில் எத்தனையோ மாற்றங்கள்..

ஆனால் எப்போதும் என் மனதின் ஒரு மூலையிலிருந்து இவர்களது விளையாட்டுத் தொடர்ந்து கொண்டே இருந்தது...

இந்த முறை விடுவதாயில்லை... அவர்களை இறக்கி வைத்துவிட்டுத் தான் அடுத்த வேலை பார்ப்பது என்று களமிறங்கி விட்டேன்...

இவன் இப்படித்தாண்டா... எப்பவும் இப்படியேச் சொல்லிட்டு பாதில ஓடிப்போயிடுவான் என்று ... மனதிற்குள் திட்டிக் கொண்டே நீங்கள் ஊக்கப் படுத்தலாம் ஒன்றும் தப்பில்லை...

செல்வா
02-05-2010, 06:10 AM
ஆண்களுடன் சகஜமாகப் பழகுபவள். பல ஆண் நண்பர்களைக் கொண்டிருக்கும் அவளுக்கு அவனது இந்தத் திடீர் கேள்வி அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும் பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தவில்லை….

அவன் சொல்வது உண்மையா? பொய்யா?

இந்த இணையக் காதல் சரியா? தவறா?

என்ற கேள்விகளுக்குள் போகும் மனநிலையில் அவள் அப்போது இல்லை…

விளையாட்டாகவே அவனோடு பேசிக்கொண்டிருந்தவள்… அவனது உணர்வின் தீவிரத்தை அறியாமல். அவனுடன் விளையாட முடிவுசெய்து விட்டாள்.

“காதலிக்கணும்னு தோணுச்சுண்ணா காதலிக்க வேண்டியது தானே..”

சற்று நேரத்திற்கு அவள் கூறியது அவனது மூளைக்குள்
பதிவாகவில்லை….

அவனுக்குத் தேவையாக இருந்தது அந்தப் பதில் தான் என்றாலும்.

அப்போது அந்தப் பதிலை அவன் எதிர்பார்க்க வில்லையாதலால். ஒரு கணம் தடுமாறித்தான் போனான்.

மீண்டும் மீண்டும் அவளுடையப் பதிலைப் படித்து உறுதிப்படுத்திக் கொண்டான் என்றாலும் மறுபடியும் அவளையேக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பி.

“அப்போ நீங்களும் என்னைக் காதலிக்குறீங்களா?”

நேரடிக் கேள்வி…..

நேரடிக்கேள்வியும் நேரடிப் பதிலும் உண்மையானவர்களால் மட்டுமே

உண்மையான மனதினால் மட்டுமே கொடுக்க இயலும்.

ஆனால் அவளோ சமாளிக்க வேண்டிய நிலையில் இருந்தாள். இது அவளுக்குப் பெரிய காரியமும் இல்லை.

காதலிக்கிறேன் என்றோ காதலிக்கவில்லை என்றோ நேரடிப்பதில் அவளிடமிருந்து வரவில்லை…

“உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்….”

முதல் பதிலிலேயே மூழ்கிவிட்டவன் இரண்டாவது பதிலின் மறைமுகத்தன்மையையோ.. அல்லது அதில் விடுபட்டுப் போனக் காதலையோ உணரும் நிலையில் இல்லை….

உணர்வுகள் எழுப்பிய அலைகளில் மூழ்கிப் போனபடி கனவுகளில் அவன் மிதக்க…

அவளோ அவளது பழைய நண்பர்களுடன் பேசவாரம்பித்து விட்டாள்.

இப்படியாகப் பலநாட்கள் உரையாடல்களில் கரைந்து கொண்டிருந்தன.

முழுக்காதலில் அவன் உருகுவதும்

ஆரம்பத்தில் பட்டும் படாமலும்… அவள் பேசிக்கொண்டிருந்தாலும் ஒரு
நேரம் அல்லாது ஒரு நேரத்தில் அவளும் காதலிப்பதாகக் கூறிக் கொண்டு உரையாடத் துவங்கினர்.

அந்த நேரத்தில் தான் அவளது வாழ்க்கையில் வந்து சேர்ந்தான் இன்னொருவன்….

இந்த இன்னொருவனின் வரவு அவளது வாழ்வை எந்தளவில் பாதிக்கப் போகிறது என்பது அப்போது அவளுக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை..

அவளது வாழ்வை மட்டுமா அது புரட்டியது அவனது வாழ்வையும் சேர்த்தல்லவா புரட்டியது.

செல்வா
02-05-2010, 06:14 AM
எதேச்சையாக நடந்தது தான் அந்தச் சந்திப்பு.

அவளது நண்பர்களில் ஒருவன் இணையம் வழியாக அறிமுகப்படுத்தி வைத்தவன் தான் இந்தப் புதியவன்.

புதியவன் என்றாலும் வெகு இயல்பான மற்றும் கலகலப்பான பேச்சில் பிறரைக் கவரக்கூடியவன் இயல்பாக அவள் மனதில் புகுந்ததிலும் ஆச்சரியம் ஏதும் இல்லை…

இவனோடுப் பேசும் போது பல நண்பர்களுடன் அவள் நிகழ்த்தும் உரையாடல்களைப் பற்றிச் சொன்னவள் ஏனோ புதியவனைப் பற்றி மட்டும் அவனிடம் சொல்லாமல் இருந்தாள்.

சில நாட்களாகவே அவளது பேச்சில் அவனுடன் பேசும் குதூகலம் குறைந்ததையும் … இரவு வெகுநேரத்திற்குப் பின் வீடு வருவதும், வந்ததும் கடமைக்காக ஏதோ பேசவேண்டுமே என்று பேசுவதும், அவன் சொல்லும் போது வேறு ஏதேனும் ஒன்றில் மனத்தை வைத்துக் கொண்டு அசிரத்தையாக இருந்ததும் அவனுக்குள் எரிச்சலை ஊட்டியது.

அதோடு பலவித சந்தேகங்கள் அவன் மனதில் தோன்றவாரம்பித்தது என்றாலும் அப்படி எல்லாம் இருக்காது என்றே நம்பி தொடர்ந்து பேசி வந்தான்.
அவளது பாராமுகத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமலே…

திடீரென்று ஒரு நாள் அவளாகவே புதியவனைப் பற்றிச் சொன்னாள். அவளுடைய பல நண்பர்களைப் பற்றிப் பேசுவது போலத்தான் அவனைப் பற்றியும் சொல்கிறாள் என்ற எண்ணத்தில் அதைச் சரியாகக் கவனிக்கவில்லை…

ஆனால் அதன் பிறகு சில நாட்களில் அவள் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

முன்பு போல் இணையத்தில் அதிக நேரம் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவனுடன் உரையாடுவது கிடையாது. ஏதாவது நண்பர்களுடன் அவள் பேசிய உரையாடல் தொகுப்பு அல்லது கடிதங்களை இவனுக்கு அனுப்பி வைத்தாள்.

ஆனால் அவளாக இவனுடன் பேசுவது குறைந்தது. நாள் முழுவதும் காத்திருந்து காத்திருந்து இறுதி நேரத்தில் அவள் வருவதும் வந்தாலும் அவனுடன் பேசுவதில் அத்தனை அக்கறை காட்டாமலும் இருந்தது அவன் மனதைக் காயப் படுத்தியது என்றாலும் அவள் கூறியக் காரணங்களை அவன் நம்பினான்.

‘அவள் வளர்ந்த சூழல் அப்படி அதனால் தான் இப்படி இருக்கிறாள். எனது காதல் புரிந்தால் கண்டிப்பாகத் திரும்பி வருவாள்’ என்று எண்ணினான்.

அதுவரை அவளைச் சந்தேகப் படுவதோ அவளைக் குறைகூறுவதோ தவறு என்று மனதிற்குள்ளேயே முடிவும் செய்து கொண்டான்.

என்றாலும் அது அத்தனை சுலபமாக இல்லை… ஒரு கட்டத்தில் அவளது புறக்கணிப்பு சற்று அதிகமாகவே இருந்தது. மேலாகப் பார்த்தால் அவள் எப்போதும் போல் இருப்பதாகத் தெரிந்தாலும். எப்போதும் அவளையே நினைத்துக் கொண்டு தொடர்ந்து அவளுடன் உரையாடிக்கொண்டிருந்த அவனுக்கு அவள் முன்பு போல் இல்லை என்பதைக் கண்டுபிடிப்பது பெரிய காரியமல்ல.

இத்தகையச் சூழலில் தான் திடீரென்று ஒருநாள் காணாமல் போனாள். ஒருநாள் முழுவதும் அவனுடன் தொடர்பிலிருந்தே விலகிவிட்டாள். அலைபேசியில் அழைத்தாலோ அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவே தகவல் வந்து கொண்டிருந்தது.

குறுஞ்செய்தி அனுப்பினாலும் போய்ச்சேரவில்லை. பைத்தியம் பிடித்தவன் போல் அழைப்புகளாகவும் குறுஞ்செய்திகளாகவும் அனுப்பிச் சலித்துப் போனான். அன்று முழுக்க இணையத் தொடர்பிலும் இல்லை அவள். என்னாயிற்றோ ஏதாயிற்றோ என்ற தவிப்பில் அன்றிரவு சரியாகத் தூங்கவும் முடியவில்லை அவனால்.

ஒருவழியாக மறுநாள் வந்து சேர்ந்தாள். என்னாயிற்றோ ஏதாயிற்றோ என்று அழைத்தவனுக்கு. அமைதியாகச் சொன்னாள்.

“வாழ்க்கையில் சில முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தது அதனால் நண்பரைக் கலந்தாலோசிப்பதற்காக மலைப்பகுதிக்குப் போயிருந்தேன்.”
இவனுக்கு மனதுக்குள் ஏதோ தன்னைப் பற்றிய முடிவுதான் என்று மனம் அதை அறியும் ஆவலில் துள்ளியது.

அவளோ அதற்குமேல் அதைப் பற்றி இவனிடம் பேசுவதற்கு ஆர்வம் காட்டவில்லை.

இவன் திரும்பக் கேட்ட பிறகும் சரியாகப் பதிலளிக்காமல் பேச்சைத் திசை திருப்பிவிட்டாள்.

ஆனால் அன்று தான் அவள் மீது இவன் கொண்டிருக்கும் காதலுக்கு முதல் எச்சரிக்கை மணி அடிக்கப் பட்டது என்பதைப் பிறகு தான் தெரிந்து கொண்டான்.

அதை அவன் தெரிந்து கொள்ள நேர்கையில் விதியின் விளையாட்டு வினையாக மாறியிருந்தது.

செல்வா
03-05-2010, 07:47 AM
எண்ணங்களினூடு ஊர்ந்தவாறு அந்தரத்தில் பறந்தபடியேத் தூங்கிக் கொண்டிருந்தவள் திடீரென்று கேட்ட குழந்தையின் அழுகையால் விழித்தாள்.

எழுந்து விமானங்களில் குழந்தைகளுக்காக வழங்கப்படும் தொட்டில் கூடையில் பார்த்தாள். குழந்தையைத் தூக்கினாள் குழந்தை படுக்கையிலேயே ஒன்றுக்குப் போயிருந்தது. குழந்தையைத் தூக்கிக் கொண்டு கழிப்பறைக்குச் சென்று அணிந்திருந்த ஆடையை மாற்றிக் கழுவிவிட்டு புதிய ஆடையை உடுத்திக் கொண்டு வெளியே வந்து இருக்கையில் அமர்ந்தாள்.

பணிப்பெண்ணிடம் வெந்நீர் கேட்டு பால்பொடியைக் கலக்கி குழந்தையின் குவளையில் ஊற்றி மடியில் கிடத்தியபடி குழந்தையின் வாயில் வைத்தாள்.

குழந்தை பால்குடிக்கும் ஆவலில் மலர்ந்த முகத்துடன் சிரித்தபடியே அவள் முகத்தைப் பார்த்தபடியே பால் குடித்துக் கொண்டிருந்தது.
அவள் விரல்கள் தன்னிச்சசையாக குழந்தையின் குழல்களில் அலைந்து கொண்டிருந்தது…

அந்த சுகத்தில் பால் குடித்தபடியே குழந்தை மறுபடியும் விழி மூடியது.
சிறிது நேரம் குழந்தையின் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தையின் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்குக் கழிப்பறைச் செல்லவேண்டும் போல் தோன்றியதால் குழந்தையை மெதுவாகத் தொட்டிலில் கிடத்திவிட்டு. எழுந்து கழிப்பறைக்குச் சென்றுவிட்டு வந்தாள்.

வந்து அமர்ந்தவள் சன்னல் வழியாக விரையும் பஞ்சுப் பொதி மேகங்களை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள். மனம் நிலையின்றி அலைந்து கொண்டிருந்தது. பின்னே விரையும் மேகங்கள் போலவே மனதில் பல பல எண்ணங்களும் எழுந்து எழுந்து மறைந்து கொண்டிருந்தன.

காதல் … இந்த மூன்று எழுத்துகள் உருவாக்கும் அதிர்வுகள்… அலைகளை ஒரு மனிதனுக்குள் உருவாக்க வேறு எதனாலும் இயலாது. எத்தனை அணுகுண்டுகள் சேர்ந்தாலும் கூட.

திரைப்படங்களில் பார்ப்பது போல் காதல் ஒன்றும் ஒரு முறை மட்டும் மலரும் மலரல்ல. அதே போன்று ஒரே நேரத்தில் பல இடங்களில் பூப்பதுவுமல்ல. இது உலகிலுள்ள எந்த கலாச்சாரத்திற்கும் பொருந்தும்.
தன் காதலனும் அவன் காதலும் தான் ஒருத்திக்கு மட்டுமே உரியதாக இருக்கவேண்டும் என்பதும் தன் காதலியும் அவள் காதலும் தான் ஒருவனுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதும் உலகிலுள்ள அனைத்து காதலர்களின் எதிர்பார்ப்பும் ஏக்கமும்.

இங்கே அடிபட்டாலும் உதைபட்டாலும் காதல் என்பது தியாகம் என்று போதிக்கிறார்கள். அங்கே தனது உணர்வுகளுக்கோ தனது உரிமைக்கோ பங்கம் வரும் போது உதறிப் போட்டு விட்டு எழுந்து விடுகிறார்கள். என்பதைத் தவிர வேறு வித்தியாசங்கள் ஏதும் இல்லை.
காதலும் கடவுளும் ஒன்று என்று ஆன்மீக வர்ணம் பூசுவதும்... அதையே சந்தைக் கடை வியாபாரமாக்குவதும் ஆகிய இரண்டுமே ஒழிக்கப் படவேண்டியவை.

இன்னுமொன்று நாம் சாதாரணமாகக் கேட்பதும் பேசுவதும்… காதல் இருந்தாலே பொறாமை நம்பிக்கையின்மை அதிகரித்து விடுவது. காதலி நின்றால் குற்றம், இருந்தால் குற்றம். காதலன் அழைக்கும் போது அவள் கைபேசி வேறு அழைப்பில் இருந்து விட்டால் குற்றம். இதே போன்று காதலன் கதியும் சாதாரணமானதல்ல… தவறிக் கூட வேற்று மகளிரைப் பார்த்து விடக் கூடாது. ஒரு பாடல் கூட இருக்கிறது. அன்னைத் தெரசாவைத் தவிர பிறரிடம் பேசக் கூடாது என்று. கேட்டால் அதீத காதல் இப்படித்தான் பொறாமைப் படவைக்குமாம். என்ன ஒரு நகை முரண் பாருங்கள். இதில் இன்னும் கொடுமை என்ன வென்றால் இவற்றை எல்லாம் சகித்துக் கொண்டால் தான் உண்மையானக் காதல் என்று பட்டம் வேறு.

இத்தகையக் காதலில் தான் நமது கதாநாயகியும் சிக்கிக் கொண்டாள். புதுக்காதலன் படிப்படியாக அவள் மனத்தை மட்டும் ஆக்கிரமிக்க வில்லை… அவளது அன்றாட நடவடிக்கைகள், அவளது கைபேசி அழைப்புகளிலிருந்து அவளது வங்கிக் கணக்குகள் வரை அவனது கரம் நீண்டது.

அவனது கரங்களுக்குள் சிக்குண்டவளிடம் இருந்த கொஞ்ச நஞ்சத் தொடர்பும் இற்றுப் போனது இவனுக்கு. காதல் எத்தனை எத்தனை இன்பத்தைக் கொடுக்கிறதோ அதைவிடப் பலமடங்குத் துன்பத்தைக் கொடுக்கக் கூடியது.

மனிதனின் மனம் விசித்திரமானது. எப்போதும் ஒன்று கடினமாக இருந்தது என்றால் உடனே இன்னொன்றைத் தேடிச் சென்று கெரண்டிருக்கும். கவலையை மறக்கப் புகைக்கு அடிமையாகினான். நல்ல வேளையாக இவன் இருந்தது சவுதி அரேபியா. மதுவின் உபயோகம் முற்றாகத் தடைசெய்யப் பட்டிருந்த இடம். மறைமுகமாக வாங்கிப் பருகுமளவிற்கு அவனுக்கு அப்போது தைரியமும் இல்லை தொடர்புகளும் இல்லை. அதனால் மது என்னும் அரக்கனுள் அமிழாமல் புகை என்ற பகைவனின் பிடிக்குள் இருந்தான்.

அந்த நேரத்தை இவன் அவனது இருண்டகாலம் என்றேச் சொல்லுவான். பணியில் பளு மிக அதிகமானது. காலையில் 8:30க்கு அலுவலகம் சென்றால் மதியம் 2 மணிக்கு உணவருந்த பல நாட்களில் இது 4 மணி கூட ஆகியிருக்கிறது. உணவுக்குப் பின் அமர்ந்தால் மீண்டும் இரவு உணவு 9 லிருந்து பத்து மணிக்குள் மீண்டும் வந்து பணியில் அமர்ந்து எழுந்து வீடு செல்லும் போது எப்படியும் அதிகாலை 2 மணியாகிவிடும்.
கடுமையான பணிப்பளு எதற்குப் பயன்பட்டதோ தெரியாது இவன் அவளை மறக்கப் பெரிதும் உதவியது இந்தப் பணிப்பளுதான். பணியில் நுழைந்து விட்டால் வேறு எண்ணங்களே எழுவதில்லை. அவ்வப்போது ஆசுவாசப் படுத்திக் கொள்ளும் சிறு இடைவெளியில் அவள் நினைவு ஓடிவந்து கொல்லும். அந்த நேரத்தில் ஓய்வு கொடுக்க புகை உதிவியாக இருந்தது. அவனுக்கு இருக்கும் ஒரே பிரச்சனையே இரவு படுக்கச் செல்லும் நேரம்தான். அதுவரை ஒதுங்கிக் கிடக்கும் நினைவுகள் அனைத்தும் படையெடுத்து வந்து மூளையை ஆக்ரமிக்கத் துவங்கும்.
ஆனாலும் நாட்கள் செல்லச் செல்ல மெல்ல மெல்ல அவள் நினைவுகளின் பாதிப்பிலிருந்து மீண்டான்.

சிறிதி நாளிலேயே பணிப்பளுவும் சற்று குறைய… நல்ல தூங்கும் நேரம். சரியான நேரத்திற்கு உணவு என்று ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு வந்தான். புகையும் அரிதாகவே என்றாலும் அதை விட்டு விடுவது அத்தனைச் சுலபமாக இருக்கவில்லை.

இப்படிச் சுமார் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியிருக்கும். இடையில் அவளைப் பற்றியத் தகவல்களே சுத்தமாக இல்லை. உண்மையில் சொல்லப் போனால் அவளது நினைவுகள் தனிமையில் முழ்கி அவன் தத்தளிக்கும் பொது சற்றுத் தலை தூக்கிப் பார்த்துவிட்டுப் போவதுண்டு. அவனை அலைக்களித்து மூழ்கடிப்பதில்லை. முற்றாக இல்லை என்றாலும் அவளை மறந்திருந்தான்.

இந்தகையச் சூழலில் தான் ஒரு நாள் காலையில் வந்து இணைய உலாவியைத் திறந்து மின்னஞ்சல்களைப் பார்வையிட்டவன் பார்வை மேலே நகராமல் ஒரு அஞ்சலிலேயே நிலைகுத்தியிருந்தது.
ஒரு வருடத்திற்கும் மேலாகக் காத்திருந்தும் வராதக் கடிதம் ஒன்று அவள் பெயரைத் தங்கியபடிக் காத்திருந்தது. பட படக்கும் இதயத்தோடு விரல்கள் நடுங்க அந்தக் கடிதத்தின் மீது சுட்டினான்.

சிவா.ஜி
03-05-2010, 09:23 AM
சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் தொடங்கியதற்கு முதலில் வாழ்த்துக்கள் செல்வா. இணையக் காதலின் உண்மையான முகமும், பொய்யான முகமும் நன்றாகவே தெரிகிறது. ஆரம்ப அத்தியாயங்களின் தொடர்பு மெள்ளத் தெரிகிறது.

காதலைப் பற்றியக் கருத்துக்கள் மிக ஆழமாய்...அப்பட்டமாய் இருக்கிறது. ரொம்ப சிந்திச்சீங்களோ..

மன உணர்வுகளை அழகாக செதுக்கியிருக்கிறீர்கள். காதலியின் இன்றையநிலையை சொல்லிவிட்டீர்கள்....அந்தக் காதலனின் துரோகம்....என்ன என்பதை இனி சொல்லுவீர்கள் என நினைக்கிறேன். தொடருங்கள்....ஆவலுடன் உடன் வருகிறேன்.

செல்வா
03-05-2010, 09:52 AM
எழுதுறதே அரைவேக்காட்டு எழுத்து...

அதையும் ரெண்டு வருசமா எழுது எழுது னு... எழுதிட்டுருக்கேன்...

ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு... எழுதும் போதும்
தொடர்ந்து படித்து நீங்கள் கொடுக்கும் ஊக்கம் அளப்பரியது அண்ணா...

கண்டிப்பாக மன்றத்தில் மட்டுமே சாத்தியம் இது.

தலைதாழ்ந்து வணங்குகிறேன்..

ஹா...ஹா.. காதலைப்பற்றிச் சொல்லியது.... அப்படியே ஒரு புளோல வந்திருச்சு...

சர்ச்சைக்குரியத தொடுறோம் என்ன விமர்சனம் வருமோங்கிற எண்ணம் இருந்து கொண்டே இருந்துச்சு...

உங்கள் விமர்சனம் ஊக்கமளிக்குது...

மன்றத்தின் கதைநாயகர் கையிலிருந்து முதலூக்கப் பின்னூட்டம் என்றால் என் மகிழ்ச்சிக்கு அளவுமுண்டோ...

நன்றி அண்ணா.

சிவா.ஜி
03-05-2010, 10:06 AM
என்னது புளோல வந்துடிச்சா.....இதப்பார்றா.....ஒண்ணு ரொம்ப ரொம்ப யோசிச்சு எழுதியிருக்கனும்....இல்லன்னா.....ரொம்ப நாளாவே உங்க மனசுல இருந்தக் கருத்தா இருக்கனும்...இல்லன்னா....இவ்ளோ அருமையா சொல்ல முடியாது. நிஜமாவே நல்லா எழுதியிருக்கீங்க செல்வா.

(இதுல அரைவேக்காட்டு எழுத்துன்னு....உடான்ஸ் வேற....)

செல்வா
04-05-2010, 06:27 AM
“யுவதிகளே, கனவான்களே நாம் இன்னும் சிறிது நேரத்தில் தரையிறங்க வேண்டியிருப்பதால், அனைத்துப் பயணிகளும் தத்தமது இருக்கைகளில் சென்று அமரவும். இருக்கையை நேராக வைப்பதுடன் இருக்கைப் பட்டியையும் அணிந்து கொள்ளுங்கள்… நன்றி” அந்த அழகிய பணிப்பெண்ணின் இனியக் குரலில் எழுந்த ஆங்கில அறிவிப்பைத் தமிழ்ப்படுத்தினால் இப்படித்தான் இருக்கும்.

மேற்கண்ட அறிவிப்பைத் தொடர்ந்து தலைக்கு மேல் இருந்த விளக்குகளில் இருக்கைப் பட்டி அடையாள விளக்குகள் ஒளிர்ந்தன. பணிப்பெண்கள் சுறுசுறுப்பாக இங்கும் அங்கும் ஓடியபடி எல்லா கழிவறைகளும் காலியாக்கப் பட்டுச் சாத்தப் பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்த்தனர். பொழுதுபோக்குக்குக் கொடுக்கப்பட்ட கருவிகைளைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். சன்னல் கதவுகளை மேலே ஏற்றி விட்டுக் கொண்டனர்.

இதற்குள்ளாக அந்த மிகப் பெரிய இயந்திரப் பறவையின் பெரும் இரைச்சல் அடங்கியிருக்க. விமானம் 10 கி.மீ உயரத்திலிருந்து படிப்படியாக உயரமிழந்து கொண்டிருந்தது.

இவளும் குழந்தையையும் சீராக்கிவிட்டு தன் இருக்கைப் பட்டியையும் அணிந்து கொண்டாள். விமானத்தின் உயரம் குறையக் குறைய இவளது இதயத் துடிப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது.

காதுகள் அடைத்துக் கொண்டன. ஒலிகள் எல்லாம் எங்கோ தூரத்தில் கேட்பவை போல் இருந்தன. கொட்டாவி விடும் போது திறந்து கொண்ட காதுகள் சிறிது நேரத்தில் மீண்டும் அடைத்துக் கொண்டது.

திறமையான விமானி சீராக விமானத்தைத் தாழ்த்திக் கொண்டிருந்தார். சில நேரங்களில் இராட்டினத்திலிருந்து வேகமாகக் கீழிறங்கும் போது ஏற்படும் உணர்வுத் தோன்றியது.

உடல் சிலிர்த்தாள்.

மேகக் கூட்டங்களைக் கிழித்து இறங்கும் போது விமானம் குலுங்கியது. எங்கும் பனிமயம் சுற்றிலும்.

சட்டென்று ஒளிக் கீற்றுப் பரவியது. விமானம் மேகக் கூரையைக் கிழித்து இறங்கிவிட்டது. சாய்ந்தபடி விமானம் திரும்பிய போதெல்லாம் திருவனந்தபுரத்தின் செழுமை கண்ணில் பட்டது. எங்கு பார்த்தாலும் தென்னைமரக் கூட்டங்கள். அவற்றைச் சுற்றி மிகப்பெரிய கால்வாய் வெட்டி நீர்ப் பாய்ச்சியது போல் கடல் நீர் சூழ்ந்திருக்க இயற்கையன்னை அள்ளிக் கொடுத்திருக்கும் கேரள பூமியின் அழகின் மிகச்சிறு துளி அவள் கண்களில் காணக் கிடைத்தது.

விமானம் சுற்றியபடியேத் தாழ்ந்து தாழ்ந்து இறங்கியது…
தீப்பெட்டிகளாகத் தெரிந்த கட்டிடங்கள் இப்போது அட்டைப் பெட்டிகளாயின. தீக்குச்சிகளாகத் தெரிந்த தென்னைகள் பெரிதாயின.
இன்னும் இன்னும் கீழே செல்லச் செல்ல… சாலையில் வாகனங்கள்…

இன்னும் கீழே….

மைதானங்களில் விளையாடும் சிறுவர்கள், இளைஞர்கள்… சாலைகளில் நடக்கும் மனிதர்கள் என அனைவரும் கண்ணுக்கிலக்கானார்கள்.
பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிறிய உருவாயிருந்தவை(வர்)கள் சுயஉருக்கொள்ளத் துவங்கின.

தாழ்வடைந்த விமானம் தன் பின்னங்கால்களால் நிலமகளைத் தொட்டுத் தடவியது…. வேகமாகத் தாழ்ந்து தன் முன்னங்கால்களாலும்

முத்தமிட்டது.

வேகம் மற்றும் உராய்வின் காரணமாக அதன் உடல் அதிர்ந்து அடங்கியது. முழு வேகத்தையும் இழந்த அந்த இயந்திரப் பறவை சாதுவானப் பூனைபோல் உருண்டு நடமாடும் நிலைய வாயில் நோக்கிச் சென்றது.
“யுவதிகளே, கனவான்களே நாம் இப்போது திருவனந்த புரம் பன்னாட்டு விமானநிலையத்தை வந்தடைந்துள்ளோம். நேரம் இப்போது 10 மணி 13 நிமிடங்கள். வெளியே வெப்பநிலை 25டிகிரி செல்சியஸ். உங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக” இப்படித்தான் இருந்திருக்கும் அந்தத் கொஞ்சுக்குரலின் தமிழாக்கம்.

விமானத்தின் இயக்கம் முற்றாக நின்றதும் பக்கவாட்டில் உருண்டு வந்தப் படிக்கட்டுகள் விமானக் கதவுகளோடு இணைந்து கொள்ள.

பணிப்பெண்கள் விமானக் கதவைத் திறந்தனர்.

மாதக் கணக்கில் வருடக் கணக்கில் தாய்மண்ணைப் பிரிந்திருந்த பயணிகள் விமானம் தரையிறங்கியதுமே தாங்கள் எழுந்து நின்றபடி உடமைகளைக் கையில் எடுத்துக் கொண்டபடி காத்திருக்கத் துவங்கினர்.

அதற்குள்ளாகவே கைபேசி வழியாகத் தங்கள் உறவுகளைத் தொடர்பு கொண்டு உரையாடத் தொடங்கியவர்களும் இருந்தனர்.

“எல்லாரும் போகட்டும்பா போகலாம் என்ன அவசரம் மெதுவாவே போய்க்கலாம்” என்றபடி இன்னும் இருக்கையை விட்டு அசையாத திண்மையுடையோரும் இருந்தனர்.

கெட்டுப்பட்டு கிடந்த நீர் வாய்க்கால் வெட்டியதும் வழிந்தோடுவது போன்று நின்றுகொண்டிருந்தவர்களின் கூட்டம் கதவைத் திறந்து செல்ல அனுமதி கிடைத்ததும் வடியத் துவங்கியது.

ஓரளவிற்கு நெரிசல் குறைந்ததும் தோள்பையை மாட்டிக் கொண்டு குழந்தையையும் தூக்கியபடி வாயிலுக்கு வந்தாள்.

குழந்தை இப்போது விழித்திருந்தது. மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டிருந்தது.

வாயிலில் நின்ற பணிப்பெண் குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தபடி கன்னத்தை நிமிண்டி “ நன்றி” என்று முகமன் கூறி அனுப்பினாள்.

அவளுக்குச் சிறிய புன்னகையையும் தலையசைப்பையும் பதிலாகக் கொடுத்துவிட்டு விமானத்தை விட்டு படியில் இறங்கித் தரையில் கால் வைத்தாள்.

அவளை வரவேற்கக் காத்திருந்தது போல் சுகமானக் கடற்காற்று ஓடிவந்து அவளையும் குழந்தையையும் அணைத்துக் கொண்டது.

செல்வா
04-05-2010, 06:35 AM
திருவனந்தபுரம் விமான நிலையம் ஒரு காலத்தில் எப்போதும் பரபரப்பாகக் காணப்பட்ட நிலையம். கொச்சி மற்றும் கோழிக்கோடு விமானநிலையங்களின் வரவால் இப்போது பரபரப்புக் குறைந்திருந்தது.

கேரளம் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலுள்ள பயணிகள் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தி வந்த காரணத்தால் முன்பிருந்ததை விட கணிசமாகப் பயணிகள் குறைந்திருந்தனர்.

பாதுகாப்பு மற்றும் குடியுரிமைச் சோதனைகளில் அதிகக் கெடுபிடிகள் இல்லை. வெளிநாட்டினர் வருகைக்காக காத்திருந்த வரிசையிலும் குறைந்த நபர்களே இருந்ததால் விரைவாக வெளிவந்து பெட்டியின் வருகைக்காக தள்ளுவண்டியொன்றை இழுத்து பக்கத்தில் நிறுத்திக் கொண்டு காத்திருக்க வாரம்பித்தாள்.

இன்னும் பெட்டிகள் வந்தபாடில்லை… மனதுக்குள் பெட்டிகள் ஏதும் தொலையாமல் வந்து சேர்ந்திருக்குமோ என்ற பயம் வந்து சென்றது.

இதுவும் அவனது பாதிப்புதான்…

அவனைப் பற்றி அறிமுகப் படுத்திய நேரங்களில் அவன் சொல்லியவற்றுள் இதுவும் ஒன்று.

எதிர்மறையாகச் சிந்தித்தல் அவனுடன் பிறந்த ஒன்று என்று சொல்லலாம். பலரும் ஆஹோ ஓஹோ என்று கூறிப் பாராட்டும் ஒன்றை இவன் இன்னொரு பார்வையில் குதர்க்கமாகப் பேசிக் கொண்டிருப்பான்.

மலைவாசஸ்தலம் சென்று பள்ளத்தாக்கில் நீட்டிக் கொண்டிருக்கும் பாறையில் நின்ற படி பள்ளத்தாக்கின் அழகைப் பலரும் இரசித்துக் கொண்டிருக்கும் போது இவன் மட்டும் இங்கிருந்து விழுந்தால் உடல் என்னாகும் எப்படிச் சிதறும் என்று எண்ணிக் கொண்டிருந்து அந்த எண்ணத்தால் உடல் திடுக்கிட்டு ஓடி வந்திடுவான்.

எந்த அலுவலகம் சென்றாலும் புதிய மனிதர்களைச் சந்தித்தாலும் அவன் மனதில் ஒரு பயம் வந்து தொற்றிக் கொள்ளும். அது புதிய இடம் என்று இல்லை…

பணி நிமித்தமாகப் பல இடங்களுக்கும் பயணம் செய்திருந்தாலும் இன்றும் அவன் விமான நிலையத்துக்குள் நுழையும் போது பயம் மனதை ஆக்ரமித்திருக்கும் விரல்கள் நடுங்கிக் கொண்டிருக்கும்.

இது அவன் அவளிடம் சொன்னது. இப்படித்தான் அவனைப் பற்றி
எல்லாவற்றையும் அவளிடம் தன் காதலைச் சொன்ன சில தினங்களிலேயே உளறி முடித்துவிட்டான்.

ஆனால் அவளோ?

இந்த நினைவு வந்ததும் நீண்ட பெருமூச்சு அவளிடமிருந்து வந்தது…

அவனிடம் பெயரளவில் சில அவளைப் பற்றிச் சொன்னாள்….

முழுமையான காதலோ நம்பிக்கையோ அவனிடம் இல்லாததால் அவள் எதுவும் சொல்லுவதில்லை…
அதிலும் அவளது ஆண்நண்பர்கள் பற்றியும் அவளது இதற்கு முன்னான வாழ்க்கைப் பற்றியும் எதுவும் சொன்னதில்லை.

மலேசியாவுக்கும் தமிழகத்திற்கும் இருந்தக் கலாச்சார இடைவெளியும் அதற்குக் காரணமானது.

சிறுவயதிலிருந்தே எதைப் பற்றியும் கவலைப்படாமல் எப்படியும் வாழும் இயல்பு கொண்டிருந்த தற்கால மலேசியத் தமிழ் இளம் தலைமுறையின் ஒரு பருக்கையவள்.

இவர்களுக்கு படிக்கும் போதே வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடவேண்டும் என்ற முனைப்பு. மேற்கிலிருந்து எதைக் கற்கிறார்களோ இல்லையோ டேட்டிங் டிஸ்கோ போன்ற இரவு வாழ்க்கையை மட்டும் கண்டிப்பாகக் கற்றுக் கொள்கிறார்கள்.

ஆடிமுடித்து ஒரு கட்டத்தில் நின்று திரும்பிப் பார்க்கும் போது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியிருக்கும்.

சட்டென்று கண்களில் நீர் நிறைந்தது…

கேள்விக் குறியாக நின்றிருந்தவளை ஆச்சரியக் குறியில் ஆழ்த்தி மாற்றி வைத்தவன் இவன்.

யாரும் பார்க்காவண்ணம் கண்களைத் துடைத்து நிமிர்ந்தவள் அவளது பெட்டி வரிசையில் வருவதைப் பார்த்து அருகே வந்ததும் எடுத்துத் தள்ளுவண்டியில் தூக்கி வைத்தாள்.

அதைத் தள்ளியபடியே விமான நிலையத்தின் வெளியே வந்து பலாப்பழத்தில் குவிந்த ஈக்கள் போல் மொய்த்த வாகன ஓட்டுனர்களின் மத்தியில் நன்றாகத் தமிழ் பேசிய ஒருவரைத் தேர்வு செய்து திங்கள் சந்தை போகவேண்டும் என்று சொல்லி அவள் முன்னே நடக்க அவர் பின்னால் தள்ளுவண்டியை இழுத்து வந்து பெட்டியை வண்டியின் பின்னால் வைத்து விட்டு. பின் பக்க கதவை அவளுக்காகத் திறந்து விட்டு இருக்கையில் அமர்ந்து வாகனத்தைக் கிளப்பினார்.

நெரிசல் மிகுந்த சாலைகளைத் தாண்டி கடற்கரைச் சாலையைத் தொட்டதும் வண்டி வேகமெடுத்தது.

சாய்ந்து அமர்ந்த படி வெளியே வேடிக்கைப் பார்க்கத் துவங்கியவளின் மனதில் புழுதிச் சாலையில் செல்லும் வண்டியின் பின்னே பயணிக்கும் தூசுகள் போல் அடங்கிக் கிடந்த நினைவுகள் பறக்கத் துவங்கின.

கலையரசி
04-05-2010, 04:31 PM
இன்னும் கதையைப் படிக்க ஆரம்பிக்கவில்லை. விரைவில் படித்து விட்டுப் பின்னூட்டம் எழுதுவேன்.

மதி
04-05-2010, 04:33 PM
அண்ணே.. இவ்ளோ வேகமா பதிஞ்சுக்கிட்டே போனா... கொஞ்சம் பொறுமையாவே.. படிக்கறேன்.. :D

செல்வா
04-05-2010, 06:23 PM
இன்னும் கதையைப் படிக்க ஆரம்பிக்கவில்லை. விரைவில் படித்து விட்டுப் பின்னூட்டம் எழுதுவேன்.


அண்ணே.. இவ்ளோ வேகமா பதிஞ்சுக்கிட்டே போனா... கொஞ்சம் பொறுமையாவே.. படிக்கறேன்.. :D

:D:D:D

சரிங்க சின்ன தலை...

படிச்சி முடிச்சிட்டே சொல்லுங்க...

அப்புறமா அடுத்த அத்தியாயத்த போடலாம்... :cool::cool:

Akila.R.D
05-05-2010, 04:30 AM
இன்றுதான் படிக்க ஆரம்பித்தேன்....

எல்லா பாகத்தையும் ஒரே மூச்சில் படிச்சாச்சு...

கதை நல்லா போகுது...

வாழ்த்துக்கள் செல்வா...

கீதம்
05-05-2010, 05:40 AM
இன்றுதான் முதலிலிருந்து படித்தேன்.
பாராட்டுகள் செல்வா. இந்தக்கதையில் என்னைக் கவர்ந்த விஷயங்கள் பல.

1. தேர்ந்த எழுத்து நடை.
2. தூய தமிழ் வார்த்தைப் பிரயோகம்
3. கதாநாயகன், கதாநாயகி பெயர் சொல்லாமலேயே இத்தனைப் பாகங்களையும் நகர்த்திய சாமர்த்தியம். (அவர்களுக்கு மட்டுமல்ல; இதுவரை எந்தப்பாத்திரத்திற்குமே பெயரிடப்படவில்லை என்பது ஆச்சர்யம்)

"முன்பின் தெரியாத ஒருவரிடம் பெரும்கோபம் கொள்ளும் நேரத்திலும் பதுங்கிக் கொள்ளும் வார்த்தைகள்...
நெருங்கிய ஒருவரிடம் சிறுகோபம் கொள்ளும் போதோ பாய்ந்து வந்து கொல்லுகின்றன.

வார்த்தைகள்..... கத்தி போன்றது மருத்துவர் கையில் இருப்பது உயிரைக் காக்கவும் போர்முனையில் நிற்பவர் கையிலிருப்பது உயிரை அழிப்பது போலவும். இருதுருவாய் இருக்கும் இதயங்களை இணைத்து ஒருதுருவாக்கவும் ஒருதுருவாய் இருக்கும் இதையங்களைப் பிரித்து இருதுருவாய் ஆக்கவும் வல்லமையுள்ளது வார்த்தைகள்."

4. இதுபோல் அவ்வப்போது எழும் ஆழ்ந்த எண்ணவோட்டங்கள்.

மனந்திறந்த பாராட்டுகள். இதே சூட்டோடு கதையைத் தொடருங்கள்.

செல்வா
05-05-2010, 09:30 AM
கதை நல்லா போகுது...

வாழ்த்துக்கள் செல்வா...

பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி அகிலா.

செல்வா
05-05-2010, 09:33 AM
மனந்திறந்த பாராட்டுகள். இதே சூட்டோடு கதையைத் தொடருங்கள்.

மிக நுண்ணிய அவதானிப்பு உங்களுடையது.

இப்போது தெரிகிறது நீங்கள் எப்படி இத்தனை நுண்ணிய கதைகள் எழுதுகிறீர்கள் என்பது.

நுண்ணிய அவதானிப்புடன் கூடிய இந்தப் பின்னூட்டங்கள் உண்மையாகவே மிகுத்த ஊக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.

மிக்க நன்றி கீதம் உங்களது ஊக்கப் பின்னூட்டத்திற்கு.

சிவா.ஜி
05-05-2010, 12:20 PM
உண்மையிலேயே கீதம் அவர்களின் அவதானிப்பு ஆச்சர்யப்படுத்துகிறது.

கதை நன்றாகப் போகிறது. விமானத்தின் உள் நிகழ்வுகளை ரொம்ப அழகா, விளக்கமா சொல்லியிருக்கீங்க(அந்தக் காது அடைபடும் சமாச்சாரம்) அதோடு, விமானம் இறங்கும்போது தெரியும் ஜன்னல்வழிக் காட்சிகளை அருமையா வர்ணிச்சிருக்கீங்க செல்வா.

திங்கள் சந்தையினை நோக்கிப்போகும் நாயகியின் பயணம்...இன்னும் என்னவெல்லாம் ஆச்சர்யங்களை அளிக்கப்போகிறதோ.

(இந்தக் கதையின் நாயகனை மட்டும் நானறிவேன். நாயகியைப் பற்றி கொஞ்சமேத் தெரியும். ம்..ம்...நடத்துங்க)

செல்வா
05-05-2010, 12:46 PM
தொடரும் உங்கள் பின்னூட்ட ஊக்கம் மிகுந்த உற்சாகம் தருகிறது அண்ணா.



(இந்தக் கதையின் நாயகனை மட்டும் நானறிவேன். நாயகியைப் பற்றி கொஞ்சமேத் தெரியும். ம்..ம்...நடத்துங்க)

:eek::eek: இது என்ன புதுக்கதை... :confused::confused:

சிவா.ஜி
05-05-2010, 12:59 PM
இதுப் புதுக்கதையா பழையக்கதையான்னு அப்புறம் தெரியும்....தொடருங்க.

செல்வா
05-05-2010, 01:02 PM
இதுப் புதுக்கதையா பழையக்கதையான்னு அப்புறம் தெரியும்....தொடருங்க.

பழைய கதைதான். இதிலென்ன சந்தேகம்

ரெண்டு வருசமா எழுதிட்டுருக்கேன் அப்புறம் புதுக்கதையாவா இருக்கும் :D:D

சரி சரி... நான் எஸ்கேப்... அடுத்த அத்தியாயத்தோட சீக்கிரம் வரேன்... :icon_rollout:

செல்வா
05-05-2010, 03:20 PM
தனிமையின் நினைவுகளும் அவை கொடுக்கும் உணர்வுகளும் அதீதமானவை. நமது நினைவுகளைக் கலைத்துப் போடப்பட்ட நூல்களுக்கு ஒப்பிடலாம். எதையோ யோசித்துக் கொண்டிருக்கையில் ஏதொ ஒரு முடிச்சில் பாதை மாறி வேறு எதைப்பற்றியோச் சிந்தனை சென்று கொண்டிருக்கும்.

அது போல் இவள் எதைப்பற்றி நினைக்க ஆரம்பித்தாலும் நினைவுகள் இவள் கட்டுக்குள் இல்லாமல் தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தன. இந்தியா வந்து சேர்ந்தாயிற்று. எத்தனையோ மைல் தூரம் தாண்டி கடல் கடந்து வந்தாயிற்று. ஏதோ ஒரு அசட்டு தைரியம் குழந்தையையும் தூக்கிக் கொண்டு வந்து விட்டாள். எந்தப் பிரச்சனையும் வந்து விடக் கூடாதே கடவுளே என்ற எண்ணமும் பயமும் மனதுக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஆனாலும் அவள் அனுப்பிய கடிதத்திற்குப் பிறகு அவன் காட்டிய கரிசனம் அவளுக்குள் இன்னும் நம்பிக்கை விதைத்துக் கொண்டே இருந்தது.

ஆம் படபடக்கும் இதயத்துடன் அவளனுப்பிய கடிதத்தில் சுட்டியவன். அந்தக் கடிதத்தில் கண்டிருந்த செய்தியை வாசித்து முடித்தான். வாசித்ததும் கடிதத்தின் கனம் இவன் மனதில் ஏறி அமர்ந்து கொண்டது.
வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. வெளியேச் சென்று தொடர்ச்சியாக இரண்டு மார்ல்பரோ வெள்ளையைப் புகைத்து முடித்து விட்டு உள்ளே வந்து மறுபடியும் ஒரு முறை வாசித்தான்.

டியர்……
கண்டிப்பா நீ என் மேல ரொம்ப கோபமா இருப்பனு தெரியும். நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன். உன்ன ரொம்ப மிஸ் பண்ணுறேன். உங்கூட பேசணும் போல இருக்கு. என் வாழ்க்கையில என்னென்னவோ நடந்திருச்சு. நாளை மாலை உனக்காக இணையத்தில் காத்திருப்பேன்.
உன்னுடைய
……………

மறுநாள் வரை அவன் மனதில் ஒரு பெரிய போராட்டமே நிகழ்ந்து கொண்டிருந்தது. “உன்னிடம் பேசுவதை விட அவனோடிருக்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறேன்” என்று சொன்னவள்.
இப்பொது உன்னோடு பேச வேண்டும் என்றுச் சொல்கிறாள்.

பேசலாமா..? வேண்டாமா..? என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் ஆனால் அந்தக் கடிதத்தில் கண்டிருந்த அவளது கையறு நிலை இவனைக் கலைத்தது. இணையத்தில் சென்று அவள் வரவுக்காகக் காத்திருந்தான்.

“ஹாய்…” என்றபடியே வந்தாள்.

‘நீங்க வரமாட்டீங்கனு நெனச்சேன் “ என்றாள்.

“எப்படிருக்க?” என்று இவன் கேட்டான்

“ஏதோ இருக்கேன்..”

கேட்டதும் கலங்கி விட்டான்! என்னதான் அவள் இவனை விட்டுச் சென்றாலும் அவள் மீதுள்ள காதல் இவன் அடிமனதில் இன்னும் கனன்றபடியே தானே இருக்கிறது.

“என்னாச்சுடா கண்ணா..?” பொங்கிவிட்டான் அவன்.

“போச்சு வாழ்க்கையே போச்சு…”

சுற்றி வளைத்து இவனைக் கெஞ்ச விட்டு இறுதியாக அவள் சொன்ன கதையின் சுருக்கம் இது.

இரண்டவதாக இவர்களுக்கிடையே வந்தவன் மீது இவளும் காதலில் விழுந்தாள். அவனோடே பலநாட்கள் சுற்றியிருக்கிறாள். இருவரும் கிட்டத்தட்ட சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். அவன் ஒரு இந்தியத் தமிழன். அவனது நடவடிக்கையைக் கேள்விபட்ட பெற்றோர் விடுமுறைக்கு இந்தியாவிற்கு வரும்போது பெண்பார்த்து கட்டிப் போட முடிவெடுத்து நிச்சயம் செய்து விட்டார்கள். அவனோ இவளிடம் நீ மலேசியாவில் இரு எப்படியும் எனக்கு வேலை அங்கே தான் அங்கே நாம் சேர்ந்து வாழ்வோம் என்று சொல்லவும்.

இவள் கோபத்தில் 'என்னப் பத்தி என்ன நெனச்சிட்டுருக்க... உனக்கு ஒருத்தி கெடச்சான்னு நீ போன.. என்ன கல்யாணம் பண்ணிக்க யாரும் கெடைக்க மாட்டாங்கனு நெனச்சிக்கிட்டயா? என்னாலும் ஊரறிய ஒருத்தனுக்கு மனைவியாய் வாழ முடியும்' என்று சொல்லிவிட்டாள். அதோடு நிற்காமல் அவனது கல்யாண நாளுக்கு முன்னாலே தனக்கும் கல்யாணம் ஆகிவிடவேண்டும் என்று வீட்டில் சொல்லி சொந்த மாமன் மகனைக் கல்யாணம் செய்து கொண்டாள்.

மாமன் மகனுக்கு இவள் மேல் பெரிய ஆசை, காதல் எதுவும் கிடையாது. சொத்துக்காகவும் வீட்டுத் தொல்லைக்காகவும் இவளைக் கல்யாணம் செய்துகொண்டான்.

படிப்பைப் பாதியில் தொலைத்துவிட்டு ஊர்சுற்றவும். கிடைக்கும் வேலைகளைச் செய்து விட்டு மதுவோடும், பெண்களோடும் பார்ட்டி என்று டிஸ்கொதே என்றும் சுற்றிக் கொண்டிருக்கும் சராசரி மலேசியத் தமிழ் இளைஞர்களின் ஒரு சோறு பதம் இவன்.

இவளைப் பற்றி முன்பே தெரிந்திருந்தாலும் அவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. முதலில் சில மாதங்கள் ஏதும் பிரச்சனை இல்லாமல் சென்றது. ஆனால் அதன் பின் இருவருக்குள்ளும் பல கருத்து வேற்றுமைகள் உரிமை மீறல் பிரச்சனைகள்.

குழந்தை பிறந்ததும் இது இன்னும் அதிகமாகிவிட்டது. ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாகி இப்போது இருவரும் விவாகரத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவள் சொல்லி முடித்துவிட்டாள். ஆனால் கேட்டவன் அயர்ந்து அமர்ந்து விட்டான்.

கிட்டத்தட்ட பாலச்சந்தரின் திரைப்படம் ஓடுவதைப் போல இருந்தது அவள் கூறிய கதை. என்ன நடந்தது என்ன நடக்குது எதுவும் மண்டைக்குள் ஏறவில்லை....

ஒரு பக்கம் அவள் காதல், அவளது மீதுள்ள ஆசை. இன்னொரு பக்கம் அவள் கூறிய கதை. அவளது பழைய பொய்கள் பலவும் மனதில் வந்து துருத்தியதால் நம்பவா வேண்டாமா என்ற அவநம்பிக்கை வேறு. எல்லாமாகச் சேர்ந்து கலவையாகி மூளையைக் கட்டிப்போட்டிருந்தான்.

சரி அவள் ஏற்கெனவே நொந்து போய் வந்திருக்கிறாள் அவளை மேலும் நோகடிக்க வேண்டாம் என்பதற்காக. எதுவும் இவன் கேட்கவில்லை.

அவளோடு பேசத் துவங்கினான். ஆறுதலாகப் பேசினான்.

அவள் வாழ்வில் மீண்டும் இவனதும் இவன் வாழ்வில் அவளதுமான அத்தியாயங்கள் மறுபடித் திறக்கவாரம்பித்தன.

செல்வா
06-05-2010, 04:06 PM
சென்று கொண்டிருந்த வண்டி திடீரென்று அதிர்ந்து நின்றது.

“ஏடோ புல்லே கண்ணு காணுனில்லே…?”

வண்டிக்கு முன்னே தடுமாறி நின்றவனைப் பார்த்து ஓட்டுனர் கத்திவிட்டு அவன் நகர்ந்ததும் வண்டியை நகர்த்தினார். ஊரின் பெயர் புல்லுவிளை என்று கடந்து சென்ற பெயர்ப் பலகைக் காட்டியது.

குழந்தை இப்போது விழித்திருந்தாள். இவளது உடையைக் கையால் பிடித்திழுத்தபடி விளையாடிக் கொண்டிருந்தாள். இன்னும் சற்று நேரத்தில் பசிக்கும் அழுது விடுவாள் என்று நினைத்தவள்.

“சேட்டா குழந்தைக்குப் பால் வாங்கணும். ஹோட்டல் இருந்தா நிறுத்துங்க”

சரி என்றவர் அடுத்துத் தெரிந்த சிறிய சாயாக் கடை முன்பு வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று குழந்தை இருப்பதைக் காட்டிப் பேசினார்.
எல்லோருக்கும் இருந்த பாலில் சர்க்கரைப் போட்டு கலக்க எத்தணித்தவர். குழந்தையுடன் அவள் இறங்குவதைப் பார்த்ததும் வீட்டுக்குள் சென்று இன்னொரு பாத்திரத்தில் பால் எடுத்து வந்து ஆற்றினார்.

அவளை அழைத்து பக்கத்திலிருந்த பெஞ்சில் அமரவைத்து பாலையும் பாத்திரத்தையும் கொடுத்தவர். பால் குப்பியைக் கழுவக் கொஞ்சம் வெந்நீரும் கொடுத்தார்.

குழந்தைக்குப் பாலும் ஊட்டிவிட்டு கொஞ்சம் பிஸ்கட்டைப் பொடித்து குழந்தையின் வாயில் ஊட்டியவள். அவளும் ஒரு டீக்குடித்து விட்டு எழுந்தாள்.

டீக்குப் பணம் வாங்கியவர் பாலுக்குப் பணம் வாங்க மறுக்க இன்னொரு பிஸ்கட் பாக்கட் வாங்கி பணத்தைக் கொடுத்துவிட்டு சென்று வண்டியில் அமர்ந்தாள்.

வண்டி மெதுவாக நகரத்துவங்கியதும் குழந்தையை பக்கத்தில் இருத்திவிட்டு வெளியே வேடிக்கை பார்க்கத் துவங்கினாள்.
தமிழக கேரள எல்லையில் இருப்பதால் தமிழ் எழுத்துக்களும் ஆங்காங்கேத் தெரிந்தன.

இருபக்கமும் தென்னைமரங்கள் அணிவகுத்திருந்தன. அவற்றின் இடையில் சிறு சிறு கடைகளும் வீடுகளும் இருந்தன. புழுதி என்பது எங்குமிருந்தது. கான்கிரீட் கட்டடங்களுக்கு இடையே இன்னும் ஒட்டியிருந்தன ஓட்டு வீடுகள்.

பழமையும் புதுமையும் கலந்த வீடுகள்… முற்றங்களிலிருந்த சுற்றுச் சுவர்களில் படிந்திருந்த பச்சையம் மழைவளத்தைக் காட்டியது. பூக்கள் இல்லாத முற்றங்களே இல்லை…

நீண்ட கூந்தல் கொண்ட பெண்கள் அடிக்கடிக் குறுக்கிட்டுக் கொண்டிருந்தனர். நீண்ட கூந்தலைக் கண்டதும் அவனது ஞாபகம் மறுபடி வந்து சென்றது.

தென்னைத் தோப்புகளுக்கிடையேத் தெரிந்த இடைநிலங்கள் தூரத்தே தெரிந்த நீலக்கடலைக் கண்களில் காட்டியது.

தொடர்ந்து பார்க்க இயலவில்லை… ஆயாசமாக இருந்தது. நீண்ட பயணத்தின் களைப்பு கண்களை அழுத்தியது. கண்களை மூடினாள். ஆனால் தூக்கம் வரவில்லை… மாறாக தூங்கியிருந்த நினைவுகள் விழித்து வழிந்து கொண்டிருந்தன.

இருவருக்கும் இடையில் ஆரம்பித்த இந்த இரண்டாவது ஆட்டம் நன்றாகவேதான் சென்று கொண்டிருந்தது. தயக்கம் களைந்து வெகுவிரைவில் அவனும் அவளை மனதார அணைத்துக் கொண்டான். குழந்தையையும் ஏற்றுக் கொண்டான்.

இருவரும் இரவில் மணிக்கணக்கில் மறுபடியும் பேச வாரம்பித்தனர். இப்போது இன்னும் அதிக நெருக்கத்துடன்.

இந்த நெருக்கம் துவக்க அத்தியாயங்களில் நாம் பார்த்த அவனது மலேசியப் பயணத்தால் இன்னும் கெட்டிப்பட்டது.

எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஏப்ரல் 1 வரை.

செல்வா
06-05-2010, 04:14 PM
ஏப்ரல் 1.

இரவு அவளிடம் வெகுநேரம் பேசிவிட்டு அதன் பிறகு மடிக்கணிணியில் படம் பார்த்துவிட்டுத் தூங்கியவன் ….

அருகேயிருந்த அலைபேசி அழைப்பில் அலறியடித்து எழுந்தான்.

“ஹலோ….”

………………………

“அப்படியா? எனக்கு 15 நிமிடங்கள் கொடுங்கள்…. வந்து விடுகிறேன்…”

……………

“ஓ…. சரி சரி… இதோ ஐந்தே நிமிடங்கள் வந்துவிடுகிறேன்…”

தூக்கம் முற்றும் கலைந்து போக… மணி 8:00 என்பதைப் பார்த்தவன் அதிர்ந்து … ஓடினான் குளியலறை நோக்கி…

5 நிமிடங்களில் முகம் கழுவி குளித்ததாகப் பாவனைக்குத் தலையில் தண்ணீரைத் தெளித்து தலைவாரி…

துணி தேய்த்து வைக்காத தன் சோம்பேறித்தனத்தை நொந்தபடி நேற்று கழட்டிப்போட்ட அதே உடைகளை அணிந்து கிளம்பி வீட்டை விட்டு வெளியே வந்தான்.

வெளியே வானமெங்கும் புழுதி மூட்டம். கோடைகாலத்திற்கு கட்டியங் கூற வருவது போல் வீசும் புழுதிப் புயல் ஆரம்பித்துவிட்டதோ எனும் படிக்கு கதிரவனை மறைத்திருந்தது புழுதிப் புயல்.

மங்கலாய் எரிந்தான் கதிரவன். காற்றின் வேகம் கூடுவதும் குறைவதுமாய் கண்ணா மூச்சி ஆடிக்கொண்டிருந்தது.

இங்கேயே இத்தனை வலுவானப் புழுதிக் காற்று என்றால் வடகிழக்கே பாலைவனப் பகுதியில் பெரும் புழுதிக் காற்று வீசவேண்டும்.
மனதிற்குள் நினைத்துக் கொண்டான். அதற்குள் அடுத்த அழைப்பு வர ….

சிற்றுந்திற்காக காத்திருக்கும் எண்ணத்தை மாற்றி புழுதிக் காற்றைப் பொருட்படுத்தாமல் நடக்கவாரம்பித்தான்.

சாதாரணமாக 15நிமிடங்களாகும் தூரத்தை ஒன்பது நிமிடங்களில் கடந்து. அலுவலகத்தில் நுழைந்தவன் அதிர்ந்தான்.

மூன்று தொலைபேசிகளும் விடாமல் கதறிக் கொண்டிருந்தன. இவனுடன் பணிபுரிபவர்கள் இருவரும் இவனுக்கு முன்னே வந்திருந்தனர் ஒரு கணிணியின் முன் கவனத்தைக் குவித்திருந்தனர்.

இவர்களது மென்பொருள் மிக மிக மெதுவாக வேலை செய்கிறது. பல நேரங்களில் வேலையே செய்யாமல் அப்படியே தொங்கிவிடுகிறது.
காலையில் வரிசையாக நோயாளிகள் வந்து கொண்டிருக்க மருத்துவமனையே ஒருவித அவசரநிலையில் இருந்தது.

வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் இவர்களது மென்பொருளில் பதிவுசெய்யப்பட்டால் மட்டுமே மருத்துவரால் அடுத்த பணிகள் செய்ய இயலும். எனவே வந்திருக்கும் நோயாளிகளுக்கு எந்த வசதியும் செய்ய முடியாமல் ஸ்தம்பித்த நிலையில் இருந்தது.

சர்வரை இணைத்துப் பார்த்தால் சர்வரை இணைக்கவே முடியாத நிலையில் சர்வர் மிக மெதுவாக இயங்கிக் கொண்டிருந்தது.

மருத்துவமனை மேலாளர்களிடமிருந்து அழைப்புகள் வேறு…

இத்தகைய சூழ்நிலையில் இயங்குவது தான் மென்பொருள் துறையில் பெரிய சாபமே. என்ன பிரச்சனை என்பதைக் கண்டுபிடிப்பதே கடினமான காரியம்.

ஏனென்றால் நம்மை எதிர்பார்த்து பலரும் காத்திருப்பர். அதிலும் மருத்துவமனை என்றால் நோயாளிகள் உடல்நலம் சார்ந்தது என்பதால் உடனடியாகத் தீர்வு கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் தற்காலிக நிவாரணமாவது கொடுக்க வேண்டும்.

கணிணி முன் குவிந்தவர்களை விலக்கி விட்டு அமர்ந்தான்.

புராசசர் செயல்பாடு 100 சதத்தைக் காட்டியது.

ஆரக்கிளை இயக்கி தொடர்ந்து அதிக வேலை வாங்கிக் கொண்டிருக்கும் இணைப்புகளைக் கண்டறிந்து ஒவ்வொன்றாக வெட்டிவிட ஆரம்பித்தான்.

தவறுதான் ஆனால் இப்போதைய நிலையில் வேறு வழியில்லை.
நான்கைந்து அதிக வேலை வாங்கிக் கொண்டிருந்த இணைப்புகளை வெட்டி விட்டதுமே சற்று மூச்சு விட ஆரம்பித்தது சர்வர்.

கொஞ்சம் நிலமை சீரடைந்தாலும் இன்னும் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை… எனவே தொடர்ந்து அதிகளவு வேலைவாங்கக்கூடிய கட்டளைகளை எடுத்து அவற்றை வேகமாக இயங்கும் வகையில் மாற்றிக்கொண்டிருந்தான்.

மிக பரபரப்பான அந்தச் சூழலில் அருகிலிருந்த அலைபேசி குறுஞ்செய்தி வந்திருப்பதைக் காட்டியது.

அனுப்பியது அவள் என்றதும் உடனடியாகத் திறந்து பார்த்தான்.

“நான் இப்போ ஒருத்தரோட இருக்கேன் … யாருன்னு கண்டுபிடி பார்ப்போம்?”

ரொம்ப முக்கியம் என்று முனகிக் கொண்டே அலைபேசியை வைத்துவிட்டு வேலையில் மூழ்கிவிட்டான்.

அவன் வாழ்வின் இக்கட்டான பணி நேரங்களில் அடுத்து வந்த சில மணிநேரங்களும் ஒன்று.

என்னதான் கட்டளைகளை மாற்றி மாற்றிப் பார்த்தும் சர்வர் நிலைக்கு த் திரும்பவில்லை… சற்றுநேரம் நன்றாக ஓடும் மீண்டும் பழைய படி நிலைமாறிவிடும்.

மேலாளரோ இவனை அழைப்பதாகச் சொல்லவும்…
எழுந்து சென்று தொலைபேசி ஒலிவாங்கியை கையில் வாங்கினான்.

இவன் ஹலோ எனச் சொல்வதற்குள்ளேயே...

“என்ன நடக்குது அங்கே…?

முழு மருத்துவமனையும் ஒரு மணிநேரமா ஸ்தம்பிச்சுப் போயிருக்குது…
என்ன வேலை பாக்குறீங்க…
……………………………………..
இன்னும் ஐந்து நிமிடத்தில் நீங்கள் இங்கே இருக்க வேண்டும்…
என்ன நடந்தது என்பதை விளக்க…”

என்று சொல்லிவிட்டு துண்டிக்க. கடுமையான வார்த்தைகளில் சற்றுத் திணறித்தான் போனான்…

தவறு யார்…? என்ன நடந்தது என்பது தெரியாமலேயே.. எரிந்து விழுபவர்களுக்கு என்ன பதில் சொல்வது…

மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது…

பிரச்சனையை சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஒருபுறம். என்ன

பிரச்சனை என்றேத் தெரியாமல் எப்படி சரிசெய்வது…

பயனர்கள் வேறு ஒருபக்கம் தொலைபேசி வாயிலாக துக்கம் விசாரிப்பது போன்று அழைத்துக் கொண்டே இருந்தனர்…

எல்லா எரிச்சல்களையும் மனதுக்குள் புதைத்தபடி …

“கொஞ்ச நேரம் தான் எல்லாம் சரியாயிடும்…”

“இதோ பாத்திட்டுருக்கோம் … சரியாயிடும்..”

“மன்னிக்கணும் … கொஞ்சம் பொறுத்துக்கோங்க… “

“சர்வர் பிரச்சனை சரிபண்ணிட்டுருக்காங்க..”

பதில்கள் அனிச்சையாய் ஆளுக்குத் தகுந்தபடி விழுந்து கொண்டிருந்தது…
இன்னொரு பக்க மூளை மும்முரமாக யோசித்துக் கொண்டிருந்தது என்ன பிரச்சனை என்று…

சட்டென்று மின்னல் வெட்டியது போல் ஒரு பளிச்…

பேசிக்கொண்டிருந்த தொலைபேசியை தூக்கி எறிந்து விட்டு ஓடிச் சென்று
எதிரே இருந்த கணிணி முன்னமர்ந்தான்…

சிவா.ஜி
06-05-2010, 04:31 PM
கேரளக் கரையிலிருந்து தமிழகம் வரும்போதான காட்சி விவரிப்புகள்...மிக அழகு. சேச்சிகளின் கூந்தல் நீளம், சேட்டன்மாரின் சாயாக்கடை...அதில் தெரியும் குழந்தைப் பாசம் என அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் செல்வா.

(அதுசரி தமிழ் தெரிந்த ஓட்டுநரையல்லவா நாயகி தேர்ந்தெடுத்தாள்...பின் அண்ணே என அழகாய் விளிக்காமல் சேட்டா என பறைஞ்சது ஏனோ)

ஒரு ஸ்தம்பித்த மருத்துவமனையின் பரபரப்பை நன்றாகக் காட்டியிருக்கிறீர்கள். சொந்த அனுபவம் அல்லவா...அதான் சரளமா வந்திருக்கு.

காதல் கதையிலும்....சின்ன சஸ்பென்ஸை வைத்து அடுத்த அத்தியாயத்தை எதிர்பார்க்க வைத்துவிட்டீர்கள். தொடருங்கள்.

செல்வா
06-05-2010, 05:10 PM
(அதுசரி தமிழ் தெரிந்த ஓட்டுநரையல்லவா நாயகி தேர்ந்தெடுத்தாள்...பின் அண்ணே என அழகாய் விளிக்காமல் சேட்டா என பறைஞ்சது ஏனோ)


தமிழ் தெரிந்தவர் ஆனால் மலையாளி...
அதனால் உதவி என்று கேட்கும் போது தனக்குத் தெரிந்த கொஞ்சம் மலையாளத்தில் கேட்க நினைத்து கேட்டிருப்பாநு என நினைக்கிறேன் :)
;) ;)
சரியா சமாளிச்சனா இல்லையா?

தொடரும் உங்கள் பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக மிக நன்றி அண்ணா...

அரைகுறையா எழுதியிருந்தாலும் தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்துவதில் உங்களுக்கிணை யாருமே இல்லையாண்ணா.

கீதம்
06-05-2010, 10:11 PM
“நான் இப்போ ஒருத்தரோட இருக்கேன் … யாருன்னு கண்டுபிடி பார்ப்போம்?”

கண்டுபிடித்துவிட்டேன். குழந்தைதானே அது?

ஆற்றுவெள்ளத்தில் அழகாகப் பயணிக்கும் படகுபோல் நகருகிறது கதை. துடுப்பு உங்கள் கையில்! போய்ச்சேருமிடம் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்

செல்வா
06-05-2010, 10:26 PM
துடுப்பு எங்கங்ங என்னோட கையில இருக்கு..... முத அத்தியாயத்தில பிரயாணம் ஆரம்பிச்சவா...

போறா போறா.. போய்கிட்டே இருக்கா.... நானும் ஒரு இடத்தில நின்னுருவாணு பாக்கிறேன்.. நிக்க மாட்டிங்குறா...

எங்க போய் நிக்க போறாளோ...? எப்படி நிக்க போறாளோ.. ?

உங்கள மாதிரிதான் நானும் ஆவலோட காத்திட்டுருக்கன்.

தொடரும் உங்கள் பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி கீதம்.

மதி
07-05-2010, 04:14 AM
அண்ணே.... அசத்தலா எழுதிக்கிட்டே போறீங்க போல.. மன்னிச்சுக்கோங்க... இன்னும் முழுசா படிக்கல... செமஸ்டர் ஆரம்பிச்சுடுச்சு.. இதுக்கு நடுவில தினமும் சொந்த சமையல் வேற.. நாளைக்கு கண்டிப்பா படிச்சுடறேன்.. ஹிஹி..

சிவாண்ணா சொல்றத பாத்தா சொந்த அனுபவம்னா.. அப்போ கல்யாணமாகலேன்னு ச்சுத்திட்டு இருக்கறது.. ஹாஹா

செல்வா
07-05-2010, 06:45 AM
சிவாண்ணா சொல்றத பாத்தா சொந்த அனுபவம்னா.. அப்போ கல்யாணமாகலேன்னு ச்சுத்திட்டு இருக்கறது.. ஹாஹா

அடப்பாவிகளா?

இதுக்குதான் கதையைப் படிக்காம விமர்சனம் எழுதக் கூடாதுனு சொல்றது.

அவரு அனுபவம்னு சொல்றது மருத்துவமனை - மென்பொருள் - சர்வர் வேலை நிறுத்தம் பகுதி மட்டும்.

மத்தபடி நான் அப்பாவிங்க...

மதி
07-05-2010, 06:48 AM
அந்த+பாவிய.. அப்பாவின்னும் சொல்லலாம்..

இல்லேன்னா... அப்பாவிய அப்பா+வி ன்னும் சொல்லலாம்.. ஹிஹி

செல்வா
07-05-2010, 04:27 PM
இது தான் தன்வினை தன்னைச் சுடும்கிறது....

சரி சரி இன்னும் யாராவது வந்து பிரிச்சி மேயிறதுக்குள்ள அடுத்த அத்தியாயத்தப் போட்டுடுறேன்.

செல்வா
07-05-2010, 04:37 PM
டாஸ் கட்டளைகள் இயக்கும் சன்னலிற்குச் சென்றவன். சர்வருக்குத் தகவல் அனுப்பி இணைப்பு நிலையை சோதிக்கும் கட்டளையை இயக்கினான்.

வரி வரியாக இணைப்பு பற்றிய தகவல்கள் தோன்ற ஆரம்பித்தது…
பத்து வரிகள் சரியாகச் சென்றிருக்கும் தகவல் இழப்பு என்ற பிழைச்செய்தி வந்தது…

மீண்டும் ஒரு பதினைந்து வரிகள் சரியாகச் சென்றிருக்கும் தகவல் இழப்புச் செய்தி வந்தது..

“அடங்கொக்க மக்கா… சர்வருக்கானத் தொடர்பு சரியாக இல்லை…” மனதிற்குள் சொல்லிக் கொண்டவன். அருகிலிருந்த தொலைபேசியை எடுத்து வன்பொருள் மேலாண்மை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு நிலையைச் சொன்னான்.

கணிணி இணைப்புக்கான கம்பி மற்றும் அட்டைகளைச் சரிபார்க்கச் சொன்னான்.

சொல்லிவிட்டு அமரவும்

அடுத்த குறுஞ்செய்தி வந்தது… எடுத்தான்

“என்ன சார் பதிலையே… காணோம்…?”

“என்னானு சொல்லித் தொலை…. “ என்று தட்டச்சிக் கொண்டிருக்கும் போதே… மேலாளர் மறுபடி அழைப்பதாக தொலைபேசியைக் கொடுத்தார் பக்கத்திலிருந்தவர்…

“என்னய்யா. பண்ணிட்டிருக்கிற.. அங்க.. உன்ன இங்கல்ல வரச்சொன்னேன்…”

“இல்ல சார் பிரச்சனை என்னானு கண்டு பிடிச்சிட்டோம்… வன்பொருள்.. துறை..”

“நான் உன்னை இங்க வரச்சொன்னேன்…
எனக்கு ஒரு காரணமும் தேவையில்ல…
நீ மேலாளரா …. நான் மேலாளரா…
உடனடியா இங்க வந்து சேரு….”

இவனை எதுவும் பேச விடாமல் தொலைபேசியை அறைந்து சாத்தும் சத்தம் கேட்டது…

ஒரு கணம் ஆடித்தான் போனான். இதுவரை இப்படி ஒரு நிலைக்கு வந்ததில்லை.

ஆத்திரம், கோபம்… ஆற்றாமை.. ஆனால் ஏதும் செய்ய இயலா கையறு நிலையில்… தட்டச்சிய செய்தியை அனுப்பாமலே அலைபேசியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

இவன் பணிசெய்யும் அலுவலகத்திற்கும்… மருத்துவமனைக்கும் 5கி.மீ. தூரம். இரண்டிற்கும் இடையே சிற்றுந்து வசதி செய்யப்பட்டுள்ளது. அது 15நிமிடங்களுக்கு ஒருமுறை புறப்படும். அவன் வெளியே வருவதற்கும் உந்து புறப்பட்டுச் செல்வதற்கும் சரியாக இருந்தது.

மனதுக்குள் சபித்தபடியே… இனி அடுத்த 15வது நிமிடம் தான் உந்து கிளம்பும். இடையில் ஒரு சந்திப்புச் சாலை அங்கே போய் சேர எப்படியும் 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடும். எனவே சிறிது தூரம் நடந்து பிரதானச் சாலைக்குச் சென்று வாடகை வண்டி மூலம் மருத்துவமனை செல்ல முடிவெடுத்து நடக்கத் துவங்கினான்.

பிரதான சாலையை வந்தடைந்தவன். எந்த வண்டியையும் காணாமல் சற்று காத்திருந்தான். எதிர்ப்பக்க சாலையில் தொலைவில் ஒரு வண்டி வருவதைப் பார்த்து கையைக் காட்டி நிறுத்தினான்.

வண்டி வந்து நின்றது.

இவன் இந்தச் சாலையை கடந்து எதிர்ப்பக்கம் செல்ல வேண்டும்.
வண்டி வருகிறதா என்பதைப் பார்த்துக் கொண்டே நடக்க எத்தணிக்கையில் அவன் கையிலிருந்து அலைபேசி அலறி புகைப்படம் தாங்கிய செய்தி ஒன்று வந்திருப்பதாகத் தெரிவித்தது.

அந்த அவசரத்திலும் சற்று நிதானித்தவனின் பழக்கப்பட்ட விரல்கள் அலைபேசியை இயக்கி செய்தியைத் திறக்கச் சென்றது.

*****************************************************************

டமா……..ல்.......... ட....மார்.............

சற்று தூரத்தில் கேட்ட வெடிச்சத்தம் கண்கள் மூடி நினைவுகளில் ஆழ்ந்திருந்தவளை அதிரச் செய்து நனவுக்குக் கொண்டுவந்தது.
அந்த பதட்டத்தில் வேகவேகமாகப் பக்கத்திலிருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.

வண்டி ஒரு ஆற்றைத் தாண்டி பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
பின்னால் பார்க்கும் கண்ணாடி வழியாக அவள் பதற்றத்தைப் பார்த்த ஓட்டுனர்…

“பயப்படாதீங்க.. “

“இது கோயில்ல வெடிக்கிற வெடி.. வெடிவச்சான் கோயில்னு ஆத்தங்கரைல இருக்கு. இந்தக் கோயில்ல நேர்த்திக்கடனா வெடி வெடிக்கும்… அதான் அந்தச் சத்தம்”
கதையைக் கேட்டுச் சற்று ஆசுவாசமானவள்… தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

“இப்போ எங்க வந்திருக்கிறோம்…”

“குழித்துற வந்திருக்குது வண்டி…”

“இன்னும் எவ்வளவு தூரம் திங்கள் சந்தைக்கு…”

“இன்னும் ஒரு 25 – 30கி.மீ இருக்கும் … ஒரு மணிநேரத்தில போயிடலாம்”

வெயிலின் உக்கிரம் குறைந்து விட்டிருந்தது. பள்ளி விட்டு குழந்தைகள் சாரி சாரியாய் சீருடையுடன் சென்று கொண்டிருந்தனர்.
வண்டி குழித்துறை தாண்டி மார்த்தாண்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது..

நகரம் துவங்குவதற்கான அறிகுறிகள்… வரிசை வரிசையாகக் கடைகள் தென்பட்டன.

சிறுநகரமாக இருந்தாலும் குமரி மாவட்டத்தின் வணிக மையத்தில் ஒன்றாக இருப்பதால் மார்த்தாண்டம் எப்போதும் மக்கள் கூட்டமாகவே இருக்கும்.

வெளியூர்களிலிருந்து பொருட்கள் வாங்க வரும் மக்களும் மலைகளில் விளையும் பொருட்களை விற்கவருபவர்களுமாக சந்தடியாகவே இருக்கும்.

குறிப்பாக மலைப்பகுதியிலிருந்து வரும் வாழை, கமுகு, பாக்கு, கிழங்கு, மூங்கில் பொருட்கள் மற்றும் கடற்கரையிலிருந்து கொண்டு வந்து விற்கப்படும் மீன் இவற்றிற்கு மார்த்தாண்டம் சந்தை மிகப் பிரசித்தம்.

திருவனந்தபுரம் – நாகர்கோவில் நெடுஞ்சாலையில் இருக்கும் மார்த்தாண்டம் நாகர்கோயிலுக்கு அடுத்த முக்கிய நகரமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

மெல்ல ஊர்ந்த வண்டி நகர எல்லையைக் கடந்ததும் வேகமெடுத்துஓடத்துவங்கியது.

முன்பக்கம் சாய்ந்து கண்ணாடி வழியாக இருபக்கமும் வேடிக்கைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தவள் முதுகில் வலி தெரிந்ததும் நிமிர்ந்து இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தாள்.

வண்டி ஒரு மருத்துவமனையைக் கடந்தது.

மருத்துவமனையைப் பார்த்ததும் அந்த ஏப்ரல் ஒன்று நிகழ்வுகள் மீண்டும் அவள் நினைவிலாடின.

சிவா.ஜி
08-05-2010, 05:55 AM
சாலையைக் கடப்பதையும், வெடிவெச்சான் கோவிலையும் இணைச்சிருக்கிறது ரொம்ப நல்லாருக்கு செல்வா. மார்த்தாண்டத்தின் சிறுகுறிப்பு அழகா வரைஞ்சிருக்கீங்க. அந்த ஏப்ரல் ஒண்ணு....யாரை முட்டாளாக்கிச்சுன்னு பாக்க ஆவலா இருக்கு.

தொடருங்க..அருமையா போகுது.

செல்வா
08-05-2010, 11:19 AM
தொடரும் உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி அண்ணா.

செல்வா
10-05-2010, 11:47 AM
இரண்டு அத்தியாயங்களுக்கு முன்னால் பார்த்த அதே ஏப்ரல் 1 விடிகாலை.. மலேசிய நேரம். படுக்கையில் படுத்தபடியே விழித்திருந்தவள் கண்கள் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. விழித்ததுமே அவன் நினைவு ஓடிவந்து நெஞ்சில் புகுந்தது. நேற்று இரவு வெகுநேரம் வரையிலும் அவனோடு பேசியிருந்து விட்டு மிக தாமதமாகவேத் தூங்கச் சென்றாள். என்றாலும் வழக்கமாக எழும் நேரத்திற்கு எழுந்து விட்டாள்.

எழுந்து கடைக்குச் சென்று வேலைகளைக் கவனிக்க வேண்டும். அம்மா இருமுறை வந்து கதவைத் தட்டிவிட்டுச் சென்றுவிட்டாள். எழுவதற்கு மனமின்றி சோம்பலாக இருந்தது. முன்தின உரையாடல்கள் வேறு மனதில் வந்து முகத்தில் செம்மையைப் பரப்பியது. காதுகளுக்குள் கொஞ்சிய அவனது குரல்கள் இன்னும் எதிரொலித்துக் கெண்டிருந்தன, அவளுக்கு மட்டுமே கேட்கும் வகையில் மானசீகமாய்.

பெருமூச்சான்றை வெளியிட்டபடியேத் தூக்கத்தில் புரண்ட குழந்தையைப் பார்த்தாள். நிமிர்ந்து எதிரே இருந்த கடிகாரத்தைப் பர்த்தாள் மணி5:30 ஆகியிருந்தது தேதி ஏப்ரல் 1 எனக் காட்டியது. முட்டாள்கள் தினம். நினைத்ததுமே முகத்தில் முறுவல் வந்தது. அவனை ஏமாற்ற வேண்டும் என்றுத் தோன்றியது. என்ன செய்யலாம்..? என்ன சொல்லி ஏமாற்றலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு சட்டென்று ஒரு பொறி … ஏதொ கிடைத்து விட்ட மகிழ்வில் முகத்தில் புன்முறுவல் பூத்தது.

அவனை ஏமாற்றி வழியவைத்து பார்ப்பது என்ற எண்ணமே புளகாங்கிதமடையச் செய்த்து. அவனாடு விளையாடுவது அவனைச் சீண்டுவது அவளுக்குப் பிடித்தமான ஒன்று. இந்த ஆவல் தோன்றியதும் தூக்கமும், சோர்வும் தூரப் பறக்க.

‘இப்பாது நன்றாகத் தூங்கிக் காண்டிருப்பான் காலையில் அவன் எழும் நேரத்திற்கு அவனை ஏமாற்ற வேண்டும்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள். எழுந்து சீட்டியடித்தபடியேக் காலைக் கடன்களை முடிக்கச் சென்றாள்.

அடுத்த நான்கைந்து மணிநேரங்கள் மிகப்பரபரப்பாகக் கழிந்தது. கடையில் அன்றும் நல்ல கூட்டம். நிற்கக் கூட நேரமில்லாமல் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தாள். இடையிடையேக் குழந்தையைக் கவனித்தபடியே வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த அவசரத்தில் அவனைப்பற்றிய நினைவேச் சுத்தமாக மறந்து விட்டது. திடீரென்று யாரோ தூரத்தில் ஏப்ரல் ஃபூல் எனக் கத்தும் சத்தம் கேட்டு நினைவுக்கு வந்தவள். சென்ற அத்தியாயத்தில் நாம் அவன் அலைபேசியில் பார்த்த செய்திகளை அனுப்பினாள். அவனிடமிருந்து பதில் வராமல் போகவே.. அவனுடன் இன்னும் விளையாடும் பொருட்டுத் தனது கைப்பையிலிருந்து பழைய நினைவக அட்டை ஒன்றைத் தேடி எடுத்து அலைபேசியினுள் நுழைத்தாள். அதிலிருந்து ஒரு நிழல் படத்தை தரிவுசெய்து முகத்தில் புன்னகை தவள குறும்புச் சிரிப்புடன் அவனது அலைபேசிக்கு அனுப்பிவைத்தாள்.

அந்த நேரம் பார்த்து இருவர் சாப்பிட வரவும் தகவல் அனுப்பியதை மறந்து விட்டு அலைபேசியை கைப்பைக்குள் போட்டுவிட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டாள்.

**************************************************

செய்தியைத் திறந்தவன் உச்சகட்ட அதர்ச்சி ஒன்று சட்டென்றுத் தாக்கியது. படத்தில் அவளும் அவளுடைய மாஜிகாதலனும் தோளோடு தோள் சேர்த்து நின்று கொண்டிருந்தனர்.

ஏற்கெனவே இருந்த ஆத்திரம் கோபம் அனைத்தும் மொத்தமாக அவள் மீதுப் பாய்ந்தது.

இன்று ஏப்ரல் ஒன்று என்பதோ.. அவள் இப்படிச் செய்திருக்க மாட்டாள் என்பதோ… விளையாடுகிறாள் என்பதோ எதுவுமே நினைக்க கூடிய நிலையில் அவன் இல்லை.

என்ன நெஞ்சழுத்தம் இருந்தால் இநதப் படத்தை எனக்கு அனுப்புவாள்…?

இன்னும் இவள் இந்தப் படங்களை அழிக்கவில்லையா? போன்ற கேள்விகள் மனதை அம்புகளாய் மாறி ஊடுருவிக் கொண்டிருந்தன.

மூளை கிட்டத்தட்ட செயலிழந்து விட்டது போல் இருந்தது.

காலையிலிருந்தே சாப்பிடாமல் சுற்றியது… சர்வர் தொல்லையால் வாங்கிய ஏச்சுகள்… இப்படி தலைவலியில் இருநதவன் மனதிற்குள் ஆங்காங்கே அடைபட்டுக் கிடந்த சின்ன சின்ன சந்தேகக் கண்கள் பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைத்தன.

மிகுந்த அவமானத்திற்காளானவன் போல் அவன் முகம் சிறுத்துப் போனது. ஆத்திரத்தில் அந்த படத்தை உடனடியாக அழித்தவன். “தே……….. நீ இன்னும் திருந்தலையாடி” என்ற கொடூரமான கெட்டவர்த்தையுடன் நிமிர்ந்தவன்; எதிர்ப்பக்கம் காத்திருந்த வாடகை வண்டியிலிருந்து இவனையேப் பார்த்துக் கொண்டிருந்த ஓட்டுனரைப் பார்த்ததும் வேக வேகமாக ரோட்டைக் கடக்க இறங்கினான்.

தான் இருப்பது சவுதி அரேபியா என்பதை மறந்தவனாக…

இடதுபக்கம் வண்டி ஏதும் வருகிறதா என்பதைப் பார்ப்பதற்குப் பதிலாக வலது பக்கம் பார்த்தபடி சாலயின் குறுக்கே… நடுரோட்டை அடையும் போது.

க்...ரீ……ச்………………..

டமா….ல்…..

அந்தப் பிரதானச் சாலையின் நடுவே அதிவேகமாக வந்து காண்டிருந்த ஜி.எம்.சி வேனின் உச்ச கட்ட தாக்குதலில் தரையிலிருந்து 5அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு அதைத் தாடர்ந்து வந்து கொண்டிருந்த ஹம்மர் வண்டியின் சக்கரங்களுக்கிடையேச் சிக்கினான்.

அலைபேசி தெறித்து விழுந்து சுக்கு நூறாகக் கிடந்தது.

இரு வண்டிகளும் நிற்காமல் பறந்து விட கால்கள் இரண்டும் கூழாக

இர த்தம் பெருக்கெடுத்து சாலையை நனைக்க…

அந்த உச்சிப் போதில் உக்கிரச் சூரியன் சாட்சியாக மயங்கிப்போனான்.

சிவா.ஜி
10-05-2010, 12:16 PM
கதையின் தலைப்பை இத்தனைக் கொடூரமாய் பொருத்துவீர்களென எதிர்பார்க்கவில்லை செல்வா. அவனை முட்டாளாக்க நினைத்து முடவனக்கியதை என்னவென்று சொல்ல*...

காட்சிகளின் அழுத்தம் எழுத்திலும் இருக்கிறது. வாசிப்பவரை சரக்கென உள்ளுக்கிழுத்துக்கொள்ளும் சக்தி கதைக்கு இருக்கிறது. பதட்டத்தோடு அடுத்த அத்தியாய*த்தை எதிர்பார்க்க வைத்துவிட்டீர்கள். தொடருங்கள்.

செல்வா
11-05-2010, 06:35 AM
பின்னாலிருந்து விசும்பல் ஒலி வர துணுக்குற்ற வண்டி ஓட்டுனர் பின்னால் பார்க்கும் கண்ணாடி வழியாகப் பார்க்கும் போது அவள் விழிகள் வழியே கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. எத்தனையோ முறை அழுது அழுது வற்றிய கண்களிலும் நினைக்கையில் எல்லாம் எங்கிருந்துதான் உருவாகிறதோ கண்ணீர் வழிந்து விடுகிறது. கண்ணீரினூடே… அந்த நாளின் நினைவுகளும் வழிந்து கொண்டிருந்தன.

தான் தகவல் அனுப்பி வெகுநேரமாகியும் அவனிடமிருந்து பதில் ஏதும் வராததால் குறுஞ்செய்திகள் அனுப்பினாள். அதற்கும் பதிலில்லை… அழைத்த போதோ அவனது அலைபேசி அணைத்து வைக்கப் பட்டிருப்பதாக அரபியைத் தொடர்ந்து வந்த ஆங்கில அறிவிப்புச் சொல்லியது.

கோபத்திலிருப்பான் என நினைத்தாள். இரவு அழைத்தாள்… அணைக்கப் பட்டிருந்தது. குறுஞ்செய்திகள் அனுப்பினாள்.. எதற்கும் பதிலில்லை.

தொடர்ந்த வேலை மற்றும் குழந்தை பராமரிப்பில் களைப்படைந்திருந்தவள் அதற்குமேல் ஏதும் செய்ய இயலாமல் தூங்கிப் போனாள்.

திடீரென்று குறுஞ்செய்தி வந்திருப்பதாகக் காட்டும் மணியடிக்கவும் விழித்தவள் மணியைப் பார்த்தாள் மணி விடியற்காலை நான்கு என்றிருந்தது. அலைபேசியை ஆவலோடு எடுத்தவள்…. பார்த்த செய்திகளெல்லாம் அவள் அவனுக்கு அனுப்பியவை.

அவனைது அலைபேசிக்குச் செய்தியைச் சேர்க்க முடியவில்லை என்றுத் திரும்பி வந்திருந்தன. மீண்டும் அழைத்துப் பார்த்தாள்… அணைத்து வைக்கப் பட்டிருந்தது.

இப்படியே ஒரு வாரம் சென்றிருக்கும். இவள் மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் அழைப்புகள் செய்து சலித்திருந்தாள். எத்தனையோ மன்னிப்புக் கடிதங்கள். உள்ளம் உருக்கும் வார்த்தைகள் தாங்கிய செய்திகள் அனைத்தும் பிரிக்கப்படாமல் அவளிடமே திரும்பி வந்தன. அவன் அவளை விட்டு விட்டுப் போய் விட்டான் என்று தான் நினைத்திருந்தாள் அவள்.

இரவு தனிமையில் அவன் நினைவுகள் அவளை வாட்டும். பகலில் வேலையிலும் மாலையில் குழந்தையினாலும் ஓரளவிற்கு மட்டுப்படும் அவன் நினைவுகள் குழந்தை தூங்கியபின் படுக்கையில் படுத்து தூக்கம் வருவதற்கு முன் அவள் மனதைப் பிசைவது வாடிக்கையாகிவிட்டது. எப்பொழுதும் அவனை வம்புக்கிழுத்து கலாட்டா செய்து அவனை வெறுப்பேற்றி மகிழ்பவள் அவன் இல்லாத போது தான் அவன் மீதான தன் காதலை உணர்ந்தாள்.

இனிமேல் தன்னை அவன் தேடி வரமாட்டான் என்றே முடிவுசெய்தாள். இருவருக்கும் பொதுவான ஒரு தோழியிடமிருந்து மின்னஞ்சல் வரும்வரை.

மின்னஞ்சலிலிருந்தது ஒரு இணையச் செய்தித்தளத்தின் சுட்டி. அதிலே சவுதி அரேபியாவில் நிகழ்ந்த அந்த விபத்தைப் பற்றியப் பெட்டிச் செய்தி ஒன்று வந்திருந்தது.

அதிலிருந்த தான் நடந்த விபத்தைப் பற்றித் தெரிந்து கொண்டாள். என்றாலும் அவனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இன்னும் எந்த பதிலும் இல்லை அவனிடமிருந்து அலைபேசியும் இல்லை மின்னஞ்சலும் இல்லை.

இன்னும் சவுதியில் தான் இருக்கிறானா ? அல்லது ஊருக்குச் சென்று விட்டானா? என்று விடையில்லாத பல கேள்விகள் அவள் மனதைக் குடைந்து கொண்டிருந்தன.

துளிகள் மணிகளாகி

மணிகள் நாட்களாகி

நாட்கள் மாதங்களாகின…

ஏறக்குறைய அவனை இனித்தன் வாழ்வில் சந்திப்போம் என்ற நம்பிக்கையை இழந்து விட்டவள். சற்று மனதைத் தேற்றிக் கொண்டு தன் வழக்கமான வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் கடைக்கு உணவருந்த வந்தார் அவர்.

சிவா.ஜி
11-05-2010, 07:04 AM
மிகவும் சங்கடமான நேரங்களை நாயகி கடந்திருக்கிறாள். சங்கடங்களின் பாரம் வரிகளாய்...வலிகளாய் விழுந்திருக்கிறது. "கண்ணீரோடு அந்த நாளின் நினைவுகளும் வழிந்து கொண்டிருந்தன" அழகாய் எழுதியிருக்கிறீர்கள்.

சாப்பிட வந்த 'அவர்' யார்...ஆவலுடன் அடுத்த அத்தியாயத்தை எதிர்பார்த்து.......

செல்வா
11-05-2010, 08:38 AM
நன்றி அண்ணா.... உங்கள் தொடரூக்கத்திற்கு.

உங்கள மாதிரியே.. நானும் ஆவலுடன் காத்திட்டுருக்கேன் யாரந்த அவர்னு பார்க்க. :)

xavier_raja
11-05-2010, 08:57 AM
உணர்வுகளின் வலிகளை அழகாக சொல்லி இருகிறேர்கள்... பாராட்டுகள்..

செல்வா
11-05-2010, 10:50 AM
நன்றி சேவியர் இராஜா அவர்களே...

செல்வா
11-05-2010, 11:11 AM
அவர்கள் கடைக்குப் பக்கத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பின் கட்டிடப் பணிக்காக புதிதாக வந்து சேர்ந்தவர்களில் ஒருவர் அவர்.

வேலை இல்லாத நேரங்களில் அவள் கடையருகே வந்து அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் ஒருநாள் அவர் சொன்ன ஊரின் பெயர் அவள் கவனத்தைத் திருப்பியது. அது அவனது ஊர்.

மறுநாள் அவர் மட்டும் தனியாக வரும்போது அவரது ஊரைப் பற்றிக் கேட்டாள். அவனது ஊர் தான்.

அவள் இதயம் துடிக்கத் துவங்கியது.

இதயம் படபடக்க… வார்த்தைகள் சிக்க ஒரு வழியாகக் கேட்டுவிட்டாள்…
அவர் சொல்லத் துவங்கினார்.

“அவன எனக்கு நல்லாத் தெரியும். சின்ன வயசிலிருந்தே விடுமுறை நாளெல்லாம் வீட்டுச் செலவுக்கும், படிப்புச் செலவுக்கும் எங்கூட கொத்த வேலைக்கு வருவான்.
நல்லா பேசுவான் புத்திசாலி” என்றவர்.

ஒரு சிகரட்டைப் பற்றவைத்துக் கொண்டே
“நல்லாப் படிச்சி மெட்ராசில ஒரு நிறுவனத்தில வேலையிலிருந்தான்னு சொன்னாவ…
அதுக்குப் பொறவு அவனைப் பத்திக் கேள்விப்படல…”

“அவனுக்கு மெட்ராசுல வேல கெடச்ச பொறவு அந்தளவு கஷ்டமில்ல வீட்டுல”

“மாடி வீடு கட்டுனாவ. அவன் வீட்டுக்கு நான் தான் வேலை பாக்கணும்னு கேரளாவிலருந்து அதே சம்பளத்துக்கு ஊர்ல வேலை பார்க்கச் சொன்னான். நான் மட்டும் இல்ல அவங்கூட கொத்த வேலை பாத்த எல்லாரையும் அவன் வீட்டு வேலைக்கி கூப்டுருக்கான்”

“அங்க வேலக்கி போச்சில தான் அவன் வெளிநாட்டுலருக்கான்னு தெரியும். ஆனா அத்தன வசதியிலயும் பழசு எதுவும் அவன் மறக்கல… அவனுக்கா இந்த கதினு நெனக்கச்சில.…” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் குரல் கம்மியது.

அவள் கண்களிலும் நீர் வழிந்தது…

சற்று நேரம் நிறுத்தி எங்கோப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவள் மனம் என்னாயிற்று என்று கேட்க நினைத்தது ஆனால் அவரது நிலை கண்டு கேட்க வாய் வரவில்லை…

அவள் மனம் கலங்கியது. அவரது மனக் குமுறலிலிருந்து அவன் மீது எத்தகைய பாசம் வைத்திருக்கிறார் என்பது புரிந்தது.

இருவருக்குமிடையே கனத்த மெளனம் நிலவியது.

கரைந்து கொண்டிருந்த சிகரெட் கைகளைச் சுட கடைசியாக இழுத்து விட்டு சிகரெட்டைத் தூக்கி எறிந்தவர். மீண்டும் சொல்லத் துவங்கினார்.

“அவனுக்கு ரொம்ப பயந்த சுபாவம். வீட்ட விட்டு எங்கயும் போவ மாட்டான். ஆரம்பத்தில வேலைக்கு வரும்போது சாரத்தில் ஏறுறதுக்கே நல்லா பயப்படுவான். நாங்கல்லாம் கிண்டல் பண்ணுவோம்.”

“இதுக்காக மதியம் சாப்பிட்டுட்டு எல்லாரும் படுக்கச்சில இவன மட்டும் காணாது…”

“மதியம் மதியம் எங்கடா போறான்னு நாங்க… ஒரு நாள் இவனுக்குப் பின்னாலே போய் பார்த்தோம்.”

“இவன் பின்னால போய் அங்க போட்டிருந்த சாரத்தில ஏறி உச்சிக்கிப் போறதும் எறங்கிறதுமா தாவிக்கிட்டிருந்தான்”

“அதுக்கப்புறம் ஊர் திருவிழாவுக்கு நாடகம் போடுறது மேடையில திரைச் சீலைகள் கட்டுறது எல்லாமே இவன் தான்.”

“என்ன எங்க எப்ப பாத்தாலும் அண்ணாச்சி நல்லாருக்கீங்களானு கேட்டு டீ காப்பி வாங்கி தருவான் வீட்டுல பிள்ளயளுக்கு பண்டம் வாங்கித் தருவான்..”

சற்று நிறுத்தியவர் மீண்டும் … துவங்கினார்…

“கொஞ்ச நாள் எனக்கு உடம்பு சரியில்லம போக டாக்டர் வேலை செய்யக் கூடாதுண்ணு சொல்லிட்டாரு என்ன செய்றதுனு வீட்டுல இருக்கும் போது… ஊருக்கு வந்திருந்தவன் விசயம் கேள்விபட்டு தேடி வந்து 50,000 ருபாவ தந்து பெட்டி கடை வச்சுக்கோங்க அண்ணானு சொல்லி தந்தான்”

“அந்தப் பெட்டிகடைய வச்சி தான் எங்க வீட்டு அடுப்பே எரிஞ்சுது… அப்டிருக்கும் போது தான் ஒரு நா… ஊர்ல ஒரு சண்டைல ஒருத்தன் தீயக் கொளுத்தி என் கடையில போட்டுட்டான்”

“நான் ஊர்ல இல்ல… இராத்திரி பத்து பதினோரு மணி இருக்கும். தீ பயங்கரமா எரிஞ்சிருக்கு…”

“சத்தம் கேட்டு அவிய வீட்டுலருந்து ஓடி வந்திருக்கான். வந்து பாத்தா தீ எரிஞ்சிட்டுருக்கு… எல்லாரும் பாத்துட்டு சும்மா நிக்கியாவ என வீட்டுக்காரி அழுதுட்டு நிக்கியா என்ன செய்யதுக்குனு தெரியாம… யாருக்கும் தீய அணைக்கணும்னு தோணல…”

“இவந்தான் சத்தம் போட்டு எல்லாரையும் கூட்டி பக்கத்து வீட்டுலருந்து கொடத்த வாங்கி ஆத்துலருந்து வரிசையா நிக்க வச்சி மாத்து நட போட்டு தண்ணி கோரி ஊத்தி அணச்சிருக்காவ…”

“அண்ணக்கி இவன் ஓடி சாடி வேலை பாத்தத… ஊர்ல எல்லாரும் இண்ணக்கும் சொல்லுவாங்க தெரியுமா……”

.........

“அப்படியாப்பட்ட புள்ளக்கி இண்ணக்கி… இண்ணக்கி…”

அவர் குரல் கமறியது… வார்த்தைகள் தடுமாறின

அவர் கூறியதைக் கேட்டவள் இப்படியே பூமி பிளந்து தன்னை விழுங்கிவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நினைத்தாள்.

“அப்படியாப்பட்ட புள்ளக்கி இண்ணக்கி… இண்ணக்கி….....”

“ரெண்டு … ரெண்டு… காலும் நடக்க முடியாமப் பண்ணிட்டான் புள்ளே இந்த கடவுளு…
இரண்டு காலும் இல்லாமப் பண்ணிட்டான் இந்தக் கடவுளு…”

பெருங்குரலெடுத்து அழுதபடியே... கதறியவர்...

சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டு நடந்தவற்றை அவளிடம் சொல்லி முடித்தார்.

ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டாள். கண்களில் கண்ணீர் வற்றியிருந்தது. வெறித்துப் பார்த்தபடியே நின்றிருந்தாள். முகம் வெளிறிப் போயிருந்தது. சற்றும் எதிர்பார்க்கவில்லை…
எதையும் நினைக்க முடியவில்லை… மூளை உறைந்து விட்டது போலிருந்தது.

எவ்வளவு நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தாள் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவள் மகளின் அழுகை அவளை உலுக்கி நினைவிற்குக் கொண்டு வந்தது.

நடந்து சென்று குழந்தையை தூக்கியவள் குழந்தையை எடுத்துக் கொண்டு “நான் வீட்டுக்குப் போறேன் “ என்று அம்மாவிடம் கூறியபடி வண்டியில் சென்று அமர்ந்து எப்படியோ வீடு வந்து சேர்ந்து விட்டாள்.

தன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுவிட்டு குழந்தையைத் தொட்டிலில் கிடத்திவிட்டு கட்டிலில் விழுந்தவள் அலைபேசியிலுள்ள அவனது நிழல் படத்தைப் பார்த்தாள்…

பார்க்க பார்க்க அழுகை பொத்துக் கொண்டு வந்தது…

“ஐயோ… எல்லாம் என்னால தானே… நான் தான் பாவி… நான் தான் பாவி”

“எப்படிடா இருக்க…. என்ன மன்னிச்சிருடா…செல்லம்… என்ன மன்னிச்சிருடா… ஐயோ… கடவுளே…”

“எவ்வளவு கஷ்டப் பட்டியோ… எப்படிடா தாங்கிக்கிட்ட…என் செல்லமே….”

புலம்பியவாறே

முகத்தைத் தலையணையில் புதைத்துக் கொண்டு தலையிலடித்தபடி ..ஏங்கி ..ஏங்கி அழுது கொண்டிருந்தாள்.

சிவா.ஜி
11-05-2010, 12:30 PM
ஊரிலிருந்து வந்தவர் சொன்ன பழங்கதையைப் படிக்கப் படிக்க அந்த முகம் தெரியா பையனிடம் மரியாதை மிகுகிறது. அங்காடித் தெரு படத்தில் ஆரம்பத்தில் காலில் துவங்கி...கிளைமேக்ஸை காலிழப்பில் இணைத்ததைப்போல.....ஓடியாடி, சாரம் ஏறி....தாவியக் கால்கள் இன்று இல்லாமல் போனக் கொடுமையைச் சொன்னபோது நிஜமாவே பகீரென்றது.

மிக அருமையான எழுத்து செல்வா. இத்தனை அருமையானக் கதையை ஏன் யாருமே இன்னும் அதிகம் எட்டிப் பார்க்கவில்லையென் நினைக்கும்போது ஆதங்கமாக இருக்கிறது.

விளையாட்டின் வினை...மிகப் பரிதாபமாக இருக்கிறது. தொடருங்கள் செல்வா...அவளின் திங்கள் சந்தை வரவைக் காண ஆவலாய் இருக்கிறேன்.

மதி
11-05-2010, 01:14 PM
மிக அருமையான எழுத்து செல்வா. இத்தனை அருமையானக் கதையை ஏன் யாருமே இன்னும் அதிகம் எட்டிப் பார்க்கவில்லையென் நினைக்கும்போது ஆதங்கமாக இருக்கிறது.

எட்டி பாத்துட்டு தான் இருக்கேன் சிவாண்ணா.. என்ன பண்ண.. ஒருநிலைப்படுத்தி படிக்க தான் நேரமில்ல.. கண்டிப்பா மொத்தமா படிச்சு... பதிலிடறேன்... அதுவரை மன்னிச்சுக்கோங்க...செல்வாவோட எழுத்த படிக்க கசக்குமா என்ன? :icon_b:

செல்வா
11-05-2010, 01:49 PM
விளையாட்டின் வினை...மிகப் பரிதாபமாக இருக்கிறது. தொடருங்கள் செல்வா...அவளின் திங்கள் சந்தை வரவைக் காண ஆவலாய் இருக்கிறேன்.

தொடரும் உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி அண்ணா...

நாளையோடு பயணத்த முடிச்சிடுவான்னு நெனக்கிறேன்... பாக்கலாம்.

செல்வா
11-05-2010, 01:50 PM
எட்டி பாத்துட்டு தான் இருக்கேன் சிவாண்ணா.. என்ன பண்ண.. ஒருநிலைப்படுத்தி படிக்க தான் நேரமில்ல.. கண்டிப்பா மொத்தமா படிச்சு... பதிலிடறேன்... அதுவரை மன்னிச்சுக்கோங்க...செல்வாவோட எழுத்த படிக்க கசக்குமா என்ன? :icon_b:

ஹா..ஹா.. கவலைப்படாதீங்க.. மதி மொத்தமா வாசிச்சுட்டே பதில் போடுங்க. :)

சிவா.ஜி
11-05-2010, 02:33 PM
பரவால்ல மதி. நேரம் கிடைக்கும்போது படிச்சு பின்னூட்டம் போடுங்க. இங்கதானே இருக்கப்போகுது.

உங்கப் பின்னூட்டம் பளிச்சுன்னு இருக்கும்......பொளேர்ன்னும் இருக்கும். அதைப் பாக்காத ஆதங்கம்தான் வேறென்ன?

செல்வா
11-05-2010, 03:45 PM
நாகர்கோவில் திருவனந்த புரம் நெடுஞ்சாலையில் பயணித்த வண்டி அழகிய மண்டபம் சந்திப்பில் வலதுபக்கமாகத் திங்கள் சந்தைக்குச் செல்லும் பாதையில் திரும்பியது.

பின்னிருக்கையில் இப்போது விசும்பல்களொடு மூக்குச் சீந்தும் ஒலியும் அதிகமாகக் கேட்க. என்னாச்சும்மா… எதாச்சும் பிரச்சனையா என்று பரிவோடு அந்த முதிய ஓட்டுனர் கேட்கவும்.

சற்றுத் தெளிந்தவள் நிமிர்ந்து பரவால்லண்ணா கொஞ்சம் ஓரமா வண்டிய நிறுத்துங்க.. கொஞ்சம் முகங்கழுவிக்கிறேன்.

நிற்க இறங்கி முகம் கழுவியவள்.

சற்று கூந்தல் மற்றும் ஆடைகளைச் சரிப்படுத்திவிட்டு மீண்டும் வண்டியில் அமர்ந்தாள்.

“இன்னும் எவ்ளோ தூரங்கண்ணா?”

“இன்னும் 6 – 7 கி.மீ தாம்மா போயிடலாம்”

வண்டி அதற்குள் திருவிதாங்கோடு வந்திருக்க…
பர்தா அணிந்த பெண்களும் … குழந்தைகளுமாக கடைத்தெரு கலகலப்பாக இருந்தது.

சூரியன் மேற்குப் பக்கத்திலிருந்து கூரைகளுக்கு தங்க வர்ணம் பூசிக்கொண்டிருந்தான்.

மனிதர்களை வேடிக்கைப் பார்க்கும் போது மனம் லேசாகியது…
வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தாள்..

ஓட்டு வீடுகள்

காரைவீடுகள்

இடையிடையே குடிசைகளும்.

எங்கும் தென்னந்தோப்புகள்

நடுவில் குளங்கள்…

குளங்களில் நிறைய தாமரைகள்….

மழைக்காலம் என்பதால் சாலைகள் சேற்றில் குளித்திருந்தன…

சரியாகப் பராமரிக்கப் படாத சாலைகள்..

வண்டி குலுங்கிய படியேப் பயணித்துக் கொண்டிருந்தது.

நினைவுகளின் தொடர்ச்சி மறுபடியும் அவளை ஆட்கொண்டது…

மறுநாளும் அதற்கடுத்த நாளும் அவரைப் பார்க்க முடியவில்லை. அடுத்த நாள் அவர் வந்தபோது அவரிடம் பேசி அவனுடன் பேச முடியுமா அலைபேசி எண் கிடைக்குமா என்று கேட்டாள்.
என்னிடம் இல்லை ஊரில் கேட்டு சொல்கிறேன் என்று சொன்னவர் மறுநாள் வந்து.

“அவங்கிட்ட தொலைபேசி இல்லியாம்மா…
அவன் இப்ப அவங்க வீட்டில இல்லை
அவன் பாட்டி வீட்டில் தங்கிருக்கானாம்…
அங்க எந்த எண்ணும் இல்லை… ஆனா அவங்க ஊரும் விலாசமும் தெரியும்.”

சரி என்று அவனுடைய பாட்டி வீட்டு முகவரியைக் கொடுங்கள் என்று எழுதி வாங்கிக் கொண்டாள்.

முகவரி வாங்கும் போது கடிதம் எழுத என்று தான் வாங்கினாள். ஆனால் அதன் பின் என்ன நினைத்தாளோ …

இதோ இப்போது அவனைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறாள்…

செல்வா
11-05-2010, 03:59 PM
"இது தாம்மா .. திங்கள் சந்தை இங்கே எங்க போகணும்…?"

"பட்டர் விளை… என்று கேளுங்கள் அண்ணா…"

வழிகேட்டு ... சொன்ன வழியில் பிரதான சாலையிலிருந்து பிரிந்த மண்சாலையில் வண்டி பயணிக்கத் துவங்கியது.

இது ஆற்றின் கரைச் சாலை…

மறுபக்கம் கண்ணுக் கெட்டிய தூரம் வரை வயல் வெளிகள்… அங்கே நெல்லும், வாழையும், மரவள்ளிக் கிழங்கும் தென்னந் தோப்புகளும்…

இருபக்கமும் வயல் வெளிகளுக்கு நடுவே இருந்தச் சாலையில் வண்டி பயணித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் ஊர் இருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை…

எங்கும் வயல்கள் வாய்க்கால்கள்..

சூரியன் அஸ்தமன நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். கொக்குகள் எழுந்து பறக்கத் துவங்கின.

கொஞ்ச தூரம் ஆளில்லாத சாலையில் பயணித்த பின் ஒன்றிரண்டு வீடுகள் தென்பட்டன.

சற்று உள்ளேச் செல்லச் செல்ல இன்னும் பல வீடுகள் வரிசையாய்…

பிரதான சாலையில் போகும் யாரும் உள்ளே இப்படி ஒரு ஊர் இருப்பதாய் சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள்.

வண்டியை நிறுத்தி… அவன் பாட்டி பெயர் சொல்லி கேட்டாள்…

அந்தப் பாட்டியைத் தேடி வண்டியில் வந்தவர்கள் கேட்பதை ஏதோ அதிசயம் போலவே பார்த்த மக்கள்… உற்றுக் கவனிக்கத் துவங்கினர்.

வண்டி ஒரு மேட்டை அடைந்தது. அந்தச் சாலையின் இறுதியில் போய் நின்றது. அதற்குப் பின் சாலை இல்லை.

இறங்கி விசாரித்தாள். பேன்ட்டும் சட்டையும் அணிந்திருக்கும் அவளை வித்தியாசமாகப் பார்த்தபடியே கூட்டம் வழி சொன்னது. அதற்குள் இரண்டு சிறுவர்கள்..

பாட்டி உங்களைத் தேடி ஆளுவந்திருக்காங்க என்று கத்தி கட்டியம் கூறியபடி ஓடினர்.

காசு கொடுத்து வண்டியை அனுப்பியவள். ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து சென்றாள் குழந்தையைத் தூக்கியபடி. பின்னால் இரண்டு சிறுவர்கள் அவள் சொல்லச் சொல்ல கேட்காமல் அவள் பெட்டியை இழுக்க முடியாமல் ஒருவன் முன்னிருந்து இழுக்க ஒருவன் பின்னிருந்து தள்ள வந்து கொண்டிருந்தார்கள்.

அந்த வழி வீட்டின் பின்பக்கத்தை அடைந்தது. சுற்றிக் கொண்டு முன்பக்கம் வந்தாள்.

பழைய ஓட்டு வீடு அது.

வெளியேத் திண்ணை..

முற்றம் விரிந்திருந்தது. நன்றாக சாணமிட்டு மெழுகப் பட்டிருந்தது.

ஒரு பக்கத்தில் வைக்கோல் குவித்து வைக்கப் பட்டிருந்தது.

வெளியே கட்டில் போட்டு அதில் அமர்ந்திருந்தாள் பாட்டி.

தென்னந்தோப்புகளுக்கு நடுவே இருந்த அந்த வீட்டிற்கு எப்போதும் காற்றிற்குப் பஞ்சமில்லை என்பதை உணர்ந்து கொண்டாள்.

நேராகப் பாட்டியிடம் சென்று தான் மலேசியாவிலிருந்து வருவதாகவும். அவனைப் பார்க்க வந்திருப்பதாகவும் சொன்னாள்.

பாட்டி சற்று நேரம் திகைத்துப் போனாள்.

என்ன கேட்க..? என்ன சொல்ல..?
என்று தெரியவில்லை…

ஒரு வாறு தன்னைச் சமாளித்தவள்…

"இரு பிள்ளே" என்று சற்று நகர்ந்து இடம் விட்டாள்.

தோளில் தூங்கிக் கொண்டிருந்தக் குழந்தையை மடிக்கு இடம் மாற்றியபடி அமர்ந்தாள்.

என்ன சொல்வதென்று இருவருக்கும் தெரியவில்லை…

கனத்த மெளனம்….

மீண்டும் பாட்டிதான் எதாவது சாப்புடிறயா.. என்றபடி அவள் வேண்டாம் பாட்டி என்றதையும் பொருட்படுத்தாமல் உள்ளேச் சென்று செவ்வாழைப் பழம் இரண்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

சாப்பிட்டு முடித்து கொண்டு வந்திருந்த தண்ணீரை குடித்தவள் சற்று ஆசுவாசமடைந்து…

அவன் எங்கே.. என்று கேட்டாள்…

பாட்டி கையைக் காட்டினாள்…. வீட்டிற்கு வெளியே…

குழந்தையைப் பாட்டி வாங்குவாளென்று எதிர்பார்த்தாள் எதுவும் சொல்லாததால் அவளாகவே கட்டிலில் ஒரு ஓரத்தில் குழந்தையைக் கிடத்தினாள்.

பாட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். எதுவும் சொல்லவில்லை..

குழந்தையைக் கிடத்திவிட்டு எழுந்து பாட்டி கைகாட்டிய திசைப் பக்கம் சென்றாள்.

பாட்டியின் வீட்டிற்கு முன்னால் பரந்திருந்தன வயல்கள்.

எங்குப் பச்சைப் பசேலென்றிருந்தது.

தூரத்தில் வரப்பில் முதுகு காட்டிய படி அமர்ந்திருந்தான் அவன்.

எழுந்து நடந்து வரப்பைத் தாண்டப் போனாள். அவளது செருப்பைப் பார்த்த பாட்டி வயலுக்குள்ள போற செருப்ப கழட்டிட்டுப் போ என்றாள்.
செருப்பை கழட்டிவிட்டு நடந்தாள்.

வரப்புகளில் புற்கள் காலில் குறுகுறுப்பை உண்டாக்கியது.

மனதிலோ அவனே எதிர்பார்க்காமல் அவனுக்குத் தரும் அதிர்ச்சி வைத்தியம்…

இன்னும் படபடப்பு ஏற்றுக் கொள்வானோ என்னமோ என்று…

சூரியன் மிக பூமி மட்டத்திற்கு விழுந்து விட்டான் இருள் மெல்லத் துவங்கிக் கொண்டிருந்தது.

காலுக்குக் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சிறு மீன்களை கவனித்துக் கொண்டிருந்தவன்…

யாரோ வரும் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

அவனால் நம்ப முடியவில்லை…

அவளா அது உண்மையா… அல்லது கனவா…

சற்று கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தான்.

ஒயிலாக நின்று சிரித்துக் கொண்டிருந்தாள் அவனைப் பார்த்து.
இருவரும் பேச வில்லை…

இருவர் கண்களும் ஏதேதோ பேசின...

அவனை நேராகப் பார்க்க இயலாமல் தலைகுனிந்து கொண்டாள் அவள்.

அவன் ஒரு கையை நீட்டினான்…

நிமிர்ந்தவள்... மெல்ல நடந்து ..
அவன் பக்கத்தில் இருந்த தாங்குக் கட்டைகளைத் தூக்கி அப்பால் வைத்து விட்டு.
அருகே அமர்ந்தாள்.

“எப்படிடா இருக்க…. “ ஒரே நேரத்தில் துவங்கிய வார்த்தைகளை முடிக்கவில்லை இருவரும்.

இருவர் கண்களிலும் கண்ணீர்… ஆறாக வழிந்தது.

*****************************

குழந்தை விழித்தது…

அங்கும் இங்கும் புரண்டது…

பாட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்.

லேசாகச் சிணுங்கிய குழந்தை சற்று நேரத்தில் அழவாரம்பித்தது.

பாட்டி எழுந்து அவளைத் தேடினாள்

அங்கேத் தூரத்தில் … வயல் வரப்பில்
இருவரும் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்திருக்கும் காட்சியை கதிரவன் தன் கறுப்புக் கதிர்களால் எழுதிக்கொண்டிருந்தான்.

சற்று நிதானித்த பாட்டி என்ன நினைத்தாளோ… குழந்தையைத் தூக்கி தோளில் போட்ட படி .

வெகுகாலத்திற்கு முன் அவனுக்காகப் பாடிய அதே தாலாட்டுப் பாட்டை பலவருடங்களுக்குப் பின் பாடவாரம்பித்தாள்.

ஆராரோ…. ஆரீராரோ… என் கண்ணே… நீ கண்ணுறங்கு…
அத்தை அடிச்சாளோ… என் கண்ணே உன்ன அரளிப்பூச் செண்டாலே..
மாமன் அடிச்சானோ.. என் கண்ணே.. உன்ன மல்லிகைப்பூச் செண்டாலே..
ஆரரோ… ஆரீராரோ…

குழந்தை நிம்மதியாய் மறுபடித் தூங்கத் துவங்கியது...

பாட்டி மெல்லத் தன் குரலைக் குறைத்து பாட்டை நிறுத்த...

வெள்ளி நிலா வெளிச்சத்தில்

அழகிய அமைதி ஒன்று அங்கே குடிபெயர்ந்தது....!

**************************************************************************

அப்பாடா...............

கிட்டத்தட்ட ரெண்டு வருசமா எழுதுறன் எழுதுறன்னு இழுத்து இழுத்து இப்போ.... ஒரு வழியா எழுதி முடிச்சாச்சு....

இதிலருந்து ரெண்டு விசயம் கத்துக்கிட்டேன்.

ஒண்ணு என்னாலயும் தொடர்கதை எழுத முடியும்கிறது.

ரெண்டு இனிமேல் தொடர்கதையே எழுத கூடாதுங்கிறது. :D

இதுவரை உடனிருந்து ஊக்கமளித்த அனைத்து மன்ற உறவுகளுக்கும் நன்றிகள்.

குறிப்பா எல்லா அத்தியாயங்களையும் உடனுக்குடன் வாசிச்சு பின்னூட்டம் எழுதி ஊக்கப் படுத்திய சிவா. அண்ணா. பாக்கும் போதும் பேசும் போதும் கதை என்னாச்சு என்று கேட்டு கேட்டு எழுத வைத்த
பாரதி அண்ணா, மதி , ஆதி எல்லாருக்கும் நன்றி.

கண்டிப்பா வாசிச்சு உங்களோட கருத்துகளைக் கொடுங்க...

குறைகளைச் சுட்டுங்கள்.

மிக்க நன்றி.

(இதுதான் என் 2000மாவது பதிவும் கூட)

சிவா.ஜி
11-05-2010, 04:28 PM
கடைசிவரைக்கும் பேரையே சொல்லாம சாதிச்சுப்புட்டீங்களே செல்வா....

சரி விடுங்க....இனி அவனுக்கு இவள்தான் தாங்குக்கட்டைகளாக இருப்பாள். எத்தனையோ சூறாவளியிலும், சுழலிலும் சிக்கித்தவித்த இருவரின் வாழ்க்கைப் படகும்...இனி அந்தப் பச்சைப் புல்வெளிக்கடலில் அமைதியாகப் பயணிக்கும்.

அழகான எழுத்துநடையில், சிலாகிக்கவைக்கும் கருத்துக் குவியல்களுடன்....நெஞ்சம் நிறைத்த காதல்கதை. மனமார்ந்த வாழ்த்துக்கள் செல்வா.

இத்தனை அலைக்கழிப்புக்களுக்குப் பிறகு சேரும் இருவரின் சங்கமம்....கொஞ்சம் கனம் குறைவாயிருக்கிறதோ..பட்டென்று முடிந்(த்)த உணர்வு.

இருந்தாலும்...சுவைக் குறையா உணவு.

Akila.R.D
12-05-2010, 04:06 AM
கடைசிவரைக்கும் பேரையே சொல்லாம சாதிச்சுப்புட்டீங்களே செல்வா....

நானும் இதைத்தான் சொல்லனும்னு நினைத்தேன்...

ஒரு நல்ல காதல் கதை படித்த திருப்தி...

வாழ்த்துக்கள் செல்வா...


ரெண்டு இனிமேல் தொடர்கதையே எழுத கூடாதுங்கிறது

என்ன இப்படி சொல்லிப்புட்டீங்க...

கீதம்
12-05-2010, 04:40 AM
கதையின் பாதையை சரியாகக் கணக்கிட்டு முடிக்கவேண்டிய இடத்தில் முடித்திருக்கிறீர்கள். இடையில் எழுதுவதை விட்டிருந்தாலும் கதையில் தொய்வு இல்லை என்பது உண்மை.

இனிமேல் தொடர்கதை எழுதமாட்டேன் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை.
முதல் முயற்சி வெற்றி பெற்றபிறகு அடுத்தடுத்த படிகளில் கால் வைப்பதுதானே பெருமை. எனவே தொடர்ந்து எழுதுங்கள். வாசகர்களாகிய எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.

நீங்கள் தொடராமல் போயிருந்தால் ஒரு நல்ல கதையை நாங்கள் இழந்திருப்போம். கதையைத் தொடர்ந்தமைக்கு நன்றி. தொடர்ந்து பல படைப்புகள் படைக்க வாழ்த்துகள்.

செல்வா
12-05-2010, 06:50 AM
கடைசிவரைக்கும் பேரையே சொல்லாம சாதிச்சுப்புட்டீங்களே செல்வா....

இத்தனை அலைக்கழிப்புக்களுக்குப் பிறகு சேரும் இருவரின் சங்கமம்....கொஞ்சம் கனம் குறைவாயிருக்கிறதோ..பட்டென்று முடிந்(த்)த உணர்வு.

இருந்தாலும்...சுவைக் குறையா உணவு.

எனக்கும் தோன்றியது அண்ணா... உண்மையில் நாடகத்தமாக ஏதும் நீட்டிக்கொண்டிருக்கும் எண்ணமில்லை...

முதலில் எழுதியதில் இரண்டே வரிகளில் முடித்திருந்தேன். பின் இன்னும் கொஞ்சம் எழுதலாம்னு எழுதினேன்.

முடிவு இன்னும் திருப்தியில்லைதான்.

உங்கள் தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி.

செல்வா
12-05-2010, 06:53 AM
நானும் இதைத்தான் சொல்லனும்னு நினைத்தேன்...

ஒரு நல்ல காதல் கதை படித்த திருப்தி...

வாழ்த்துக்கள் செல்வா...



நன்றி. அகிலா அவர்களே.

மதி
14-05-2010, 07:09 AM
அண்ணே.. உங்ககிட்ட சொன்னமாதிரி.. இன்னிக்கு முழுசா... படிச்சு முடிச்சுட்டேன்.... இவ்ளோ அழகா உணர்வுகளையும் நிகழ்வுகளையும் காட்சிப்படுத்த முடியுமான்னுஅதிசயிக்கறேன்... ஆரம்பம் முதல் இறுதிவரை அவள் பயணமும்.. அவன் நினைவுகளும் என மாறி மாறி சொல்லி..அவள் அதிரும்போது எங்களையும் அதிர வைத்து.. இறுதிக் காட்சி..நச்..

நல்ல சினிமா எடுக்கலாம் இந்த கதையை வைத்து... அவ்ளோ டச்ச்சிங்கா இருந்தது... உங்கள் வார்த்தைப் பிரயோகங்களும்.. தெளிவான சுத்த தமிழ் நடையும்... அவ்ளோ அழகு.. நீங்க இன்னும் நிறைய எழுதணும்...