PDA

View Full Version : ஐபிஎல்-கிரிக்கெட்



அறிஞர்
16-04-2008, 10:54 PM
ஐபிஎல் 20/20 கிரிக்கெட்

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த விலையுயர்ந்த ஆட்டம் தொடங்குகிறது.. அது பற்றிய செய்திகளை இங்கு கொடுப்போம்.
-----------------------

புதுடெல்லி, ஏப். 16-
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் அமைப்பின் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நாளை கோலாகலமாக தொடங்குகின்றன. பெங்களூரில் நடக்கும் முதல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

கபில்தேவின் ஐ.சி.எல்-லுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். என்ற அமைப்பை துவக்கியுள்ளது. இதன் சார்பில் 20 ஓவர் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகள் நாளை மறுநாள் (18-ம் தேதி) பெங்களூரில் துவங்குகிறது. 45 நாட்கள் நடக்கும் இந்த அதிரடி கிரிக்கெட் திருவிழாவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்த தொடரில் சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், மொகாலி ஆகிய 8 அணிகள் மோதுகின்றன. இந்த அணிகளுக்கு டோனி, டிராவிட், சச்சின், கங்குலி, சேவாக், லட்சுமண், கில்கிறிஸ்ட், யுவராஜ் ஆகியோர் கேப்டன்களாக உள்ளனர்.
ஒவ்வொரு அணியிலும் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்கள் இடம் பிடித்துள்ளனர். பான்டிங், சைமண்ட்ஸ், ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, மாலிக், அப்ரிடி, காலீஸ், கிப்ஸ், ஓரம், வெட்டோரி மற்றும் இந்திய அணி வீரர்கள் என மொத்தம் 128 பேர் இதில் விளையாடுகிறார்கள். ஐ.பி.எல். அணிகளை அம்பானி, டெக்கான், பிரீத்தி ஜிந்தா, ஷாருக்கான் உள்ளிட்டோர் ரூ.144 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளனர். டோனியை மட்டும் ரூ.6 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது. இந்த தொடரால் பிசிசிஐ மட்டும் ரூ.7 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறது.

நாளை மறுநாள் நடக்கும் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டி மும்பையில் ஜூன் 1-ல் நடக்கிறது. போட்டிகள் பெரும்பாலும் இரவு 7 மணிக்கே நடக்கிறது. இதை சோனி டிவி நேரடி ஒளிபரப்பு செய்கிறது. தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.12 கோடி. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.4.8 கோடி கிடைக்கும்.

2-ம் இடம் பெறும் அணிக்கு ரூ.2.4 கோடியும், அரை இறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூ.1.2 கோடியும் கிடைக்கும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் 5-வது இடத்துக்கு ரூ.80 லட்சம், 6-வது இடத்துக்கு ரூ.70 லட்சம், 7-வது இடத்துக்கு ரூ.50 லட்சம், 8-வது இடத்துக்கு ரூ.40 லட்சம் பரிசாக கிடைக்கும். உலகின் முன்னணி வீரர்கள் பெரும்பாலானோர் இந்த தொடரில் கலந்து கொண்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-நன்றி தமிழ் முரசு
------------------
போட்டி நடைபெறும் நாட்கள் அணிகள் இடங்கள்

ஏப்.18 பெங்களூர்-கொல்கத்தா பெங்களூர்
ஏப்.19 பஞ்சாப்-சென்னை மொகாலி
டெல்லி-ராஜஸ்தான் டெல்லி
ஏப்.20 கொல்கத்தா-ஐதராபாத் கொல்கத்தா
மும்பை-பெங்களூர் மும்பை
ஏப்.21 ராஜஸ்தான்-பஞ்சாப் ஜெய்ப்பூர்
ஏப்.22 ஐதராபாத்-டெல்லி ஐதராபாத்
ஏப்.23 சென்னை-மும்பை சென்னை
ஏப்.24 ஐதராபாத்-ராஜஸ்தான் ஐதராபாத்
ஏப்.25 பஞ்சாப்-மும்பை மொகாலி
ஏப்.26 சென்னை-கொல்கத்தா சென்னை
பெங்களூர்-ராஜஸ்தான் பெங்களூர்
ஏப்.27 பஞ்சாப்-டெல்லி மொகாலி
மும்பை-ஐதராபாத் மும்பை
ஏப்.28 பெங்களூர்-சென்னை பெங்களூர்
ஏப்.29 கொல்கத்தா-மும்பை கொல்கத்தா
ஏப்.30 டெல்லி-பெங்களூர் டெல்லி
மே 1 ராஜஸ்தான்-கொல்கத்தா ஜெய்ப்பூர்
ஐதராபாத்-பஞ்சாப் ஐதராபாத்
மே 2 சென்னை-டெல்லி சென்னை
மே 3 பெங்களூர்-ஐதராபாத் பெங்களூர்
பஞ்சாப்-கொல்கத்தா மொகாலி
மே 4 மும்பை-டெல்லி மும்பை
ராஜஸ்தான்-சென்னை ஜெய்ப்பூர்
மே 5 பெங்களூர்-பஞ்சாப் பெங்களூர்
மே 6 சென்னை-ஐதராபாத் சென்னை
மே 7 மும்பை-ராஜஸ்தான் மும்பை
மே 8 டெல்லி-சென்னை டெல்லி
கொல்கத்தா-பெங்களூர் கொல்கத்தா
மே 9 ராஜஸ்தான்-ஐதராபாத் ஜெய்ப்பூர்
மே 10 சென்னை-பஞ்சாப் சென்னை
மே 11 ஐதராபாத்-கொல்கத்தா ஐதராபாத்
ராஜஸ்தான்-டெல்லி ஜெய்ப்பூர்
மே 12 பஞ்சாப்-பெங்களூர் மொகாலி
மே 13 கொல்கத்தா-டெல்லி கொல்கத்தா
மே 14 மும்பை-சென்னை மும்பை
மே 15 டெல்லி-ஐதராபாத் டெல்லி
மே 16 மும்பை-கொல்கத்தா மும்பை
மே 17 ராஜஸ்தான்-பெங்களூர் ஜெய்ப்பூர்
டெல்லி-பஞ்சாப் டெல்லி
மே 18 கொல்கத்தா-சென்னை கொல்கத்தா
ஐதராபாத்-மும்பை ஐதராபாத்
மே 19 பெங்களூர்-டெல்லி பெங்களூர்
மே 20 கொல்கத்தா-ராஜஸ்தான் கொல்கத்தா
மே 21 மும்பை-பஞ்சாப் மும்பை
சென்னை-பெங்களூர் சென்னை
மே 22 டெல்லி-கொல்கத்தா டெல்லி
மே 23 பஞ்சாப்-ஐதராபாத் மொகாலி
மே 24 சென்னை-ராஜஸ்தான் சென்னை
டெல்லி-மும்பை டெல்லி
மே 25 ஐதராபாத்-பெங்களூர் ஐதராபாத்
கொல்கத்தா-பஞ்சாப் கொல்கத்தா
மே 26 ராஜஸ்தான்-மும்பை ஜெய்ப்பூர்
மே 27 ஐதராபாத்-சென்னை ஐதராபாத்
மே 28 பெங்களூர்-மும்பை பெங்களூர்
பஞ்சாப்-ராஜஸ்தான் மொகாலி
மே 30 முதல் அரை இறுதி மும்பை
மே 31 2வது அரை இறுதி மும்பை
ஜூன் 1 இறுதிப் போட்டி மும்பை


------
சென்னை கிங்ஸ் ஆடும் ஆட்டங்கள் அட்டவணை

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 14 லீக் போட்டிக்கான அட்டவணை விவரம் வருமாறு;


தேதி அணிகள் இடம் நேரம்

ஏப்.19 பஞ்சாப்-சென்னை மொகாலி மாலை 5 மணி
ஏப்.23 சென்னை-மும்பை சென்னை இரவு 8 மணி
ஏப்.26 சென்னை-கொல்கத்தா சென்னை மாலை 4 மணி
ஏப்.28 பெங்களூர்-சென்னை பெங்களூர் இரவு 8 மணி
மே 2 சென்னை-டெல்லி சென்னை இரவு 8 மணி
மே 4 ராஜஸ்தான்-சென்னை ஜெய்ப்பூர் இரவு 8 மணி
மே 6 சென்னை-ஐதராபாத் சென்னை இரவு 8 மணி
மே 8 டெல்லி-சென்னை டெல்லி மாலை 4 மணி
மே 10 சென்னை-பஞ்சாப் சென்னை இரவு 8 மணி
மே 14 மும்பை-சென்னை மும்பை இரவு 8 மணி
மே 18 கொல்கத்தா-சென்னை கொல்கத்தா மாலை 4 மணி
மே 21 சென்னை-பெங்களூர் சென்னை இரவு 8 மணி
மே 24 சென்னை-ராஜஸ்தான் சென்னை மாலை 4 மணி
மே 27 ஐதராபாத்-சென்னை ஐதராபாத் இரவு 8 மணி

அறிஞர்
18-04-2008, 01:48 PM
பெங்களூர்-கல்கத்தா போட்டியை.. சாப்கேஸ்ட் மூலம் பார்க்கலாம்


http://sopcastcricketlinks.blogspot.com/ (http://sopcastcricketlinks.blogspot.com/)

http://cricket-live-sopcast.blogspot.com/ (http://cricket-live-sopcast.blogspot.com/)
----------
http://www.cricketu.com/ இந்த தளத்தில் நடந்து முடிந்த போட்டிகளின் தொகுப்பை பார்க்கலாம்.

அறிஞர்
18-04-2008, 02:13 PM
போட்டி ஆரம்பத்தை...ஐபிஎல் அதிகார தளத்திலும் ஒளிபரப்புகிறார்கள்

பாருங்கள் http://iplt20.com/#
-----
இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி டாஸ் வெற்றி பெற்றுள்ளது...

அறிஞர்
18-04-2008, 03:10 PM
போட்டி ஆரம்பத்தை...ஐபிஎல் அதிகார தளத்திலும் ஒளிபரப்புகிறார்கள்

பாருங்கள் http://iplt20.com/#
-----
இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி டாஸ் வெற்றி பெற்றுள்ளது...
இந்த தளத்தில் நேரடி ஒளிபரப்பு அருமையாக உள்ளது...

அனுராகவன்
18-04-2008, 03:30 PM
இந்த தளத்தில் நேரடி ஒளிபரப்பு அருமையாக உள்ளது...
நானும் பார்த்துக்கொண்டுள்ளேன்..
மிக்க நன்றி

அறிஞர்
18-04-2008, 04:02 PM
மிக விறு விறுப்பான ஆட்டம்...

கொல்கோத்தா அணி 222/3 - 20 ஓவர்

தனிப்பட்ட முறையில் மெக்குல்லாம் 158 ரன் எடுத்து சாதனை..

SathyaThirunavukkarasu
18-04-2008, 04:39 PM
பெங்கலுர் 3 விக்கட் போனது

மீனாகுமார்
18-04-2008, 04:46 PM
பெங்களூரு டரியலாகிவிட்டது. ஹிஹி.

அனுராகவன்
18-04-2008, 04:56 PM
பெங்களூரு டரியலாகிவிட்டது. ஹிஹி.
பெங்களூர் 38-6 காலி...
ஆட்டம் விறுவிறுப்பாக போகுது..

அறிஞர்
18-04-2008, 05:10 PM
இப்படி உப்பு சப்புமில்லாத ஆட்டமாக ஆடிவிட்டது பெங்களூரு...

58/8

மதி
18-04-2008, 07:13 PM
அபார வெற்றி பெற்ற கொல்கத்தா அணியினருக்கு வாழ்த்துகள்.

அறிஞர்
18-04-2008, 07:31 PM
ஆட்டத்தை ரசிக்க
http://www.youtube.com/watch?v=LyjPC5lLt40

அறிஞர்
18-04-2008, 07:32 PM
மற்றொரு கிளிப்
http://www.youtube.com/watch?v=mDbrVucgj64

அன்புரசிகன்
18-04-2008, 07:42 PM
மக்கலும் மற்றும் ஹஃபீஸ் அருமையாக ஆடினார்கள். T20 ஆட்டத்திற்கு முதலாவதாக திராவிட் ஐ அனுப்பும் போதே தோல்விக்கு அறிகுறி தோன்றிவிட்டது. பௌச்சரும் வெளியேறியவுடன் அனைத்தும் தவிடுபொடியாகியது. இன்றய அணியின் அனுசரணையாளர் மிகவும் சந்தோசமாகவே இருந்தார்.

விகடன்
18-04-2008, 10:21 PM
ஆரம்பமே படு சூப்பர்தான்.
அரங்கில் சாருகானின் ஆட்டமும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்ட விதமும் இரசிக்கக்கூடியதாக இருந்தது.
இனி 1,1/2 மாதமும் படு கொண்டாட்டமாகத்தான் இருக்கப்போகிறது.

ராஜா
19-04-2008, 07:28 AM
http://www.cricinfo.com/db/PICTURES/CMS/89500/89572.jpg

துவக்கவிழாவில் வாணவேடிக்கைகள்..

இதைவிட பெரிய வேடிக்கையை பிரென்டன் மெக்கல்லம் நிகழ்த்தினார்.. ( 158 ஓட்டங்கள்.. 20/20 வகையில் புது சாதனை..!)

ராஜா
19-04-2008, 07:31 AM
1st match: Bangalore Royal Challengers v Kolkata Knight Riders at Bangalore - Apr 18, 2008
Kolkata Knight Riders won by 140 runs
Kolkata Knight Riders 222/3 (20/20 ov); Bangalore Royal Challengers 82 (15.1/20 ov)
_______________________________________________________________________
இன்றைய போட்டி..!
2nd match: Kings XI Punjab v Chennai Super Kings at Mohali - Apr 19, 2008
Match scheduled to begin at 17:00 local time (11:30 GMT)

ராஜா
19-04-2008, 07:53 AM
நேற்று படுதோல்வி அடைந்த "பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்" அணியின் புரவலர் விஜய் மல்லையா..!

(போட்டிக்கு முன் எடுக்கப்பட்ட படம்..!)


http://www.cricinfo.com/db/PICTURES/CMS/87300/87320.jpg

ராஜா
19-04-2008, 08:13 AM
http://img.cricinfo.com/SERIES/2007-08/IPL/chennai_110x97.gif

அணியின் பெயர் : சென்னை சூப்பர் கிங்ஸ்.

அணித்தலைவர் : மகேந்திர சிங் தோனி.

பயிற்சியாளர் : கெப்ளர் வெசல்ஸ். [தெ.ஆ.]

புரவலர் : இந்தியா சிமெண்ட்ஸ்.

புரவலர் ஏலத் தொகை : 91 மில்லியன் டாலர்கள்.

அறிஞர்
19-04-2008, 08:17 AM
இன்றைய போட்டி...

சென்னை சூப்பர் கிங்ஸ்--- கிங்க்ஸ் பஞ்சாப்

ஆட்டம் 5 மணிக்கு... விறு விறுப்பாக இருக்கும் என எண்ணுகிறேன்.

ராஜா
19-04-2008, 08:19 AM
http://img.cricinfo.com/SERIES/2007-08/IPL/bangalore_125x118.gif

அணியின் பெயர் : பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்.

அணித்தலைவர் : ராகுல் திராவிட்.

பயிற்சியாளர் : வெங்கடேஷ் பிரசாத்.

புரவலர் : யு.பி. குழுமம்.

புரவலர் ஏலத் தொகை : 111.6 மில்லியன் டாலர்கள்.

ராஜா
19-04-2008, 08:33 AM
http://img.cricinfo.com/SERIES/2007-08/IPL/hyderabad_110x110.gif

அணியின் பெயர் : டெக்கான் சார்ஜர்ஸ்.

அணித்தலைவர் : வி.வி.எஸ்.லக்ஷ்மண்.

பயிற்சியாளர் : ராபின் சிங்.

புரவலர் : டெக்கான் குரோனிகிள் செய்தித்தாள்.

புரவலர் ஏலத் தொகை : 107.01 மில்லியன் டாலர்கள்.

ராஜா
19-04-2008, 08:33 AM
http://img.cricinfo.com/SERIES/2007-08/IPL/delhi_125x77.gif

அணியின் பெயர் : டெல்லி டேர் டெவில்ஸ்.

அணித்தலைவர் : வீரேந்திர ஷேவாக்.

பயிற்சியாளர் : கிரேக் ஷிப்பெர்ட்.

புரவலர் : ஜி.எம்.ஆர். கோல்டிங்ஸ்.

புரவலர் ஏலத் தொகை : 84 மில்லியன் டாலர்கள்.

ராஜா
19-04-2008, 08:54 AM
http://img.cricinfo.com/SERIES/2007-08/IPL/mohali_125x111.gif

அணியின் பெயர் : கிங்ஸ் XI பஞ்சாப்.

அணித்தலைவர் : யுவராஜ் சிங்.

பயிற்சியாளர் : டாம் மூடி.

புரவலர் : நடிகை பிரீத்தி ஜிந்தா உள்ளிட்டோர்.

புரவலர் ஏலத் தொகை : 76 மில்லியன் டாலர்கள்.

ராஜா
19-04-2008, 08:59 AM
http://img.cricinfo.com/SERIES/2007-08/IPL/kolkat_110x85.gif

அணியின் பெயர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

அணித்தலைவர் : சவுரவ் கங்குலி.

பயிற்சியாளர் : ஜான் புச்சானன்.

புரவலர் : ரெட் சிலீஸ் என்டெர்டெய்ன்மெண்ட்..

புரவலர் ஏலத் தொகை : 79.09 மில்லியன் டாலர்கள்.

அறிஞர்
19-04-2008, 09:06 AM
http://www.cricketu.com/ இந்த தளத்தில் நடந்து முடிந்த போட்டிகளின் தொகுப்பை பார்க்கலாம்.

அறிஞர்
19-04-2008, 09:09 AM
முதல் போட்டியின் மொத்த தொகுப்பையும் காண

http://www.criclove.com/ipl-1st-match-kolkata-knight-riders-vs-royal-challengers-banglore-full-highlights/

பயர்பாக்ஸில் மட்டுமே காண இயலும்

ராஜா
19-04-2008, 09:55 AM
http://img.cricinfo.com/SERIES/2007-08/IPL/mumbai-indians_125x89.gif

அணியின் பெயர் : மும்பை இந்தியன்ஸ்.

அணித்தலைவர் : சச்சின் டெண்டுல்கர்.

பயிற்சியாளர் : லால் சந்த் ராஜ்புத்.

புரவலர் : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்..

புரவலர் ஏலத் தொகை : 111.9 மில்லியன் டாலர்கள்.

ராஜா
19-04-2008, 10:01 AM
http://img.cricinfo.com/SERIES/2007-08/IPL/rajasthan_110x85.gif

அணியின் பெயர் : ராஜஸ்தான் ராயல்ஸ்.

அணித்தலைவர் : ஷேன் வார்னே.

பயிற்சியாளர் : ஷேன் வார்னே (*________v*??).

புரவலர் : எமெர்ஜிங் மீடியா..

புரவலர் ஏலத் தொகை : 67 மில்லியன் டாலர்கள்.

ராஜா
19-04-2008, 01:07 PM
போட்டி எண் 2.

சென்னை X பஞ்சாப்.

சென்னை அணி 240 ஓட்டங்கள் குவிப்பு..!

மைக்கேல் அஸ்ஸி 116*

ஓவியன்
19-04-2008, 02:59 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தம் முதல் போட்டியில் வெற்றியை தமதாக்கிக் கொண்டனர்...

240 என்ற பெரிய இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் XI பஞ்சாப் அணியினர் ஜேம்ஸ் ஹோப்ஷின் நம்பிக்கை தந்த துடுப்பாட்டத்தினால் நல்ல நிலையில் இருந்தாலும், முரளிதரன், ஜேக்கப் ஓரம் போன்ற அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்களின் இறுதி பந்துப் பரிமாற்றங்களில் அதிக ஓட்டங்களைக்(207) குவிக்க முடியாமல் வெற்றியை இழந்தனர்....

அதிரடியாக ஆடி ஹோப்ஸ் விட்ட இடத்தை நிரப்ப முயன்ற சங்ககாரவின் (54) விக்கெட்டை முரளிதரன் வீழ்த்திய கணத்திலேயே போட்டி சென்னை கிங்ஸின் கைக்குள் வந்து விட்டது...

ராஜா
19-04-2008, 03:13 PM
இன்றைய போட்டியில், ஆறு கோடி அற்புதம் தோனியின் பேட்டிங் வழிசல்..!

கீப்பிங்... செம வழிசல்..!!

அன்புரசிகன்
19-04-2008, 04:00 PM
இரண்டு அவுஸ்திரேலிய வீரர்களும் பிரகாசித்தார்கள் என்று சொல்லவேண்டும். தவிர பத்ரிநாத் ரெஹ்னா இன் ஆட்டம் பிரமாதம்.

ராஜா
19-04-2008, 04:16 PM
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு நேர்ந்து விட்ட கோழி என்று நினைக்கிறேன்.. எல்லோரிடமும் FREE HIT (தர்ம அடி ) வாங்கும் போலிருக்கிறது..!

ராஜா
19-04-2008, 04:44 PM
ராஜஸ்தான் அணி 129 ஓட்டங்கள் எடுத்துள்ளது..

டெல்லி அணி எளிதாக 130 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெறக்கூடும்..

SathyaThirunavukkarasu
19-04-2008, 05:40 PM
கம்பீர் ஆட்டம் அற்புதம்

ராஜா
19-04-2008, 05:56 PM
டெல்லி அணி வெற்றி..

9 விக்கெட் வேறுபாட்டில் ராஜஸ்தானை வீழ்த்தியது..!

ராஜா
20-04-2008, 02:50 PM
இன்றைய ( 20-04-08 ) ஆட்டம்..

கொல்கத்தா ?X _ டெக்கான் அணிகளுக்கிடையே நடைபெற்றது. வீச்சாளர்களுக்கு ஆதரவளிக்கும் களத்தில், லட்சுமண் தலைமையேற்ற, மிக அதிகமான சூப்பர் ஸ்டார்களைக் கொண்ட டெக்கான் அணி 110 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய கங்கூலி தலைமையிலான கொல்கத்தா அணி மிகவும் போராடி வெற்றி கண்டது. கொல்கத்தாவுக்கு இது இரண்டாவது வெற்றியாகும். என்றாலும் முந்தைய வெற்றியைப் போன்று எளிதாக வந்ததல்ல..!

ராஜா
20-04-2008, 06:03 PM
மற்றொரு போட்டியில் முதலில் மட்டை பிடித்த "மும்பை இந்தியன்ஸ்" அணி 165 ஓட்டங்கள் குவித்தது..

பின்னர் ஆடிய ராகுல் திராவிடின் "ராயல் சேலஞ்சர்ஸ்" அணி, 5 விக்கெட் வேறுபாட்டில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. மும்பை அணி வீச்சாளர் "அள்ளி வழங்கி" ஆஷிஷ் நெகரா, அவ்வப்போது பந்து வீசி பெங்களூரு அணி வெற்றிபெற பெரிதும் உதவினார்..!

கடைசி நேர மாறுதலாக இன்று சச்சின் விளையாடாததற்கும், அவர் அணி தோல்வியுற்றதற்கும் தொடர்பு உண்டா என்று தெரியவில்லை..!

அன்புரசிகன்
20-04-2008, 06:36 PM
ஆட்டம் பெரிதாக சோபிக்கவில்லை. நேற்றய சென்னையணியினதும் முந்தயநாள் நைட்ரைடரினதும் ஆட்டம் (ஹஸி மக்கலும்) ஒப்பிடும் போது மிகக்குறைவுதான்.... வெற்றிபெற்ற அணிக்கு வாழ்த்துக்கள்.

ஷீ-நிசி
21-04-2008, 01:10 AM
வீடியோ தொகுப்புகளுக்கு நன்றி அறிஞரே
தகவல் தொகுப்புகளுக்கு நன்றி ராஜா சார்..

கொல்கட்டா அணிதான் மிக வலிமையாக இருக்கிறது தற்போதைய சூழ்நிலையில்!

ஓவியன்
21-04-2008, 01:55 AM
ம்ஹூம், நான் நிரம்பவும் எதிர்பார்த்த அவுஸ்திரேலியக் கில்லி ஆடும் அனியினர் வெற்றி பெறவில்லையே....:frown:

சரி, சரி அடுத்த போட்டிகளைப் பார்ப்போம்....

_________________________________________________________________________________________________

ஹிப்ஷூம் அப்ரிடியும் வந்து இணைவார்களா....??

ஓவியன்
21-04-2008, 02:01 AM
கொல்கட்டா அணிதான் மிக வலிமையாக இருக்கிறது தற்போதைய சூழ்நிலையில்!

பஞ்சாப் அணியும் நல்ல அணிதான், பஞ்சாப் அணியின் அடுத்த போட்டிகளில் இது வெளிப்படலாமென நம்புகிறேன்......

சென்னையை அவர்கள் சேஸ் பண்ணிய விதம் அருமை... .

அன்புரசிகன்
21-04-2008, 02:08 AM
சென்னை அணியின் ஆட்டம் (துடுப்பு) பலரினதும் திறமையின் வெளிப்பாடாக அமைந்தது. ஆனால் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணியினது அவ்வாறல்ல... ஒருவரது ஓட்ட எண்ணிக்கை தான் அங்கு மேலோங்கி இருந்தது. மற்றவர்கள் வருவதும் போவதுமாகவே இருந்தார்கள். சென்னை அணிக்கு இருக்கும் பிரச்சனை பந்து வீச்சு தான். மற்ற அணியில் இருப்பது போல் பந்துவீச்சாளரர்கள் குறைவு.

aren
21-04-2008, 03:07 AM
நம் இந்திய வீரர்களுக்கு இவ்வளவு பணம் கொடுத்துள்ளார்கள், ஆனால் அவர்கள் ஆட்டம் மிகவும் மோசமாக இருக்கிறது. இஷாந்த் ஷர்மா மட்டுமே வாங்கிய பணத்திற்கு விளையாடுகிறார் என்று நினைக்கிறேன்.

வெளியேயிருந்து வந்தவர்கள் திறமையாக ஆடுகிறார்கள் குறிப்பாக ஹஸி சகோதர்கள், சாமிந்தா வாஸ், ஜேம்ஸ் ஹோப் ஆகியோர்.

வெறும் வத்தல் என்று நினைத்த ஒரு சில லோக்கல் பார்டிகள் நன்றாகவே எதிர்த்து விளையாடுகிறார்கள், குறிப்பாக சுரேஷ் ரைனா, பத்ரிநாத், டிண்டா, வினய்குமார், சாஹா ஆகியாரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அறிஞர்
22-04-2008, 05:45 PM
இன்று சேவாக்கின் ஆட்டம் வெகு சிறப்பாக இருந்தது.

முடிந்தால் வீடியோ இணைக்கிறேன்.

அனுராகவன்
23-04-2008, 04:34 PM
சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங் V மும்பை இண்டியன்ஸ் இடையே நடக்கிறது..
இப்போது முதலில் பத்தடித்த சென்னை சூப்பர் கிங் --ஐந்து விக்கெட் இழப்பிற்கு 208 எடுத்து உள்ளது..(208-5)
அதில் ஹைடன் -81;சுரேஷ் ராயனா-53;தோனி-30
இப்போது இன்னிங்ஸ் பிரேக்..
அடுத்து மும்பை இண்டியன்ஸ் வெல்வார்களா?
பொருத்து இருந்து பார்போம்..

அக்னி
23-04-2008, 06:26 PM
வெற்றி பெற்ற சென்னை அணிக்கு வாழ்த்துக்கள்...
விறுவிறுப்பான போட்டியாக இருந்தது. சூப்பர்...

மதி
23-04-2008, 06:36 PM
போட்டியின் விறுவிறுப்பு கடைசி வரை குறையவில்லை...
ஜோகிந்தர் சர்மா.. மீண்டும் ஒரு முறை தன் பௌலிங்கை நிரூபித்துவிட்டார்..
வெற்றி பெற்ற அணியினருக்கு வாழ்த்துகள்

அறிஞர்
23-04-2008, 07:58 PM
வாவ் வெகு அருமையான போட்டி.. ரசித்து பார்த்தேன்..

கடைசி 2 ஓவரில் மும்பை அடித்துவிடுவார்கள் என்றே எதிர்பார்த்தேன்..

முரளிதரனும், ஜோகிந்தர் சர்மாவும் அருமையாக பந்து வீசி சென்னைக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர்.

அறிஞர்
23-04-2008, 08:00 PM
சேவாக்கின் ஆட்டம் 41 பந்தில் 94 ரன்கள் (ஒரு ஓவரில் 30 ரன்கள் உட்பட). கண்டு ரசியுங்கள்.

http://www.youtube.com/watch?v=nHGjLIyUzqk

அறிஞர்
23-04-2008, 08:05 PM
சென்னை ஆட்டம்
http://www.youtube.com/watch?v=vD9DLGbmQuk

மும்பை ஆட்டம்
http://www.youtube.com/watch?v=jeWrlApJrUc

அனுராகவன்
24-04-2008, 04:21 PM
ஹைத்திராபாத்தில் நடக்கும் 9வது போட்டில் டக்கன் சார்ஸஸ்க்கும் V ராஜஸ்த்தான் ராயல்ஸ் இடையே நடக்கிறது..
இதில் முதலில் பத்தடித்த டக்கன் சார்ஸஸ் --ஐந்து விக்கெட் இழப்பிற்கு 214 எடுத்து உள்ளது..(214-5)
அதில் ஆக அதிகமாக ஆட்டமிலக்காமல் சைமன்ஸ் -117;சர்மா-36
இப்போது இன்னிங்ஸ் பிரேக் முடிந்து களத்தில் ராஜஸ்த்தான் ராயல்ஸ் ஆடிக்குக் கொண்டு வருகிறது..
அந்த அணி-(14-0) ஓவர்-2

அறிஞர்
25-04-2008, 01:46 PM
9வது ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்து வார்னே தன் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்

அந்த பர பரப்பான ஓவரை ரசியுங்கள்

http://www.youtube.com/watch?v=hf0OzSLeidk

aren
25-04-2008, 02:05 PM
லஷ்மன் ஒரு மட்டமான காப்டன் என்று இதிலிருந்து நன்றாகவே தெரிகிறது. இதுவரை டெக்கான் ஆடிய மூன்று ஆட்டங்களுமே சொதப்பல்தான். அதில் கில்லி, சைமண்ட்ஸ், ஆஃப்ரிதி, வாஸ் ஆகியோர் இருந்தும் இப்படி ஆடுகிறார்களே என்று வருத்தமே மிஞ்சுகிறது.

அறிஞர்
25-04-2008, 03:19 PM
லஷ்மணுக்கு ஒரு நாள் போட்டியிலே இடம் கிடையாது.

இதில் 20 ஓவர் போட்டிக்கு கேப்டன் என்றால்.. எப்படி?????

அனுராகவன்
25-04-2008, 04:16 PM
மொகாலில் பஞ்சாப் அணி முதலில் பந்தடித்து 20 ஓவரில் 182/10 ...அதில் சங்ககாரா-94(அவுட்)
அடுத்து மும்பை வெல்வார்களா

ஓவியன்
25-04-2008, 05:22 PM
மும்பை இண்டியன்ஸ் அணியினர் கொஞ்சம் திணறுவதாகத் தெரிகிறது, ஜெயசூர்யாவின் விக்கெட்டை பிரட்-லீ எடுத்த விதம் அருமை...

ஓவியன்
25-04-2008, 06:17 PM
66 ஓட்டங்களினால் பஞ்சாப் அணியினர் இன்று வெற்றியீட்டினர்....

சங்ககாரா அருமையாக ஆடி இருந்தார், சங்காரவுடனான நேர்முகம் மற்றும் சில முக்கிய காட்சிகள் இதோ...!!

http://www.youtube.com/watch?v=S9HaKBA_zQY

http://www.youtube.com/watch?v=gRPk93K5G_0

அன்புரசிகன்
25-04-2008, 07:15 PM
ஏனோ ஸ்ரீஷாந் விம்மி விம்மி அழுதாரே... என்ன காரணமோ????

ஷீ-நிசி
26-04-2008, 01:02 AM
ஏனோ ஸ்ரீஷாந் விம்மி விம்மி அழுதாரே... என்ன காரணமோ????

அப்படியா? எப்பொழுது....

அன்புரசிகன்
26-04-2008, 05:03 AM
அப்படியா? எப்பொழுது....

அனைவரும் பவிலியன் திரும்பும் போது. விஷேடமாக ப்ரீத்தி ஸிந்தா ப்ரட்லீ ஐ கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தபோது... :D

ராஜா
26-04-2008, 05:11 AM
ஏனோ ஸ்ரீஷாந் விம்மி விம்மி அழுதாரே... என்ன காரணமோ????

ஸ்ரீசாந்தை மும்பை அணித்தலைவர் பஜ்ஜி அறைந்தார் என்றும், அது மீடியா மற்றும் நிர்வாகத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டதாகவும் தகவல்..!

அன்புரசிகன்
26-04-2008, 05:14 AM
என்னமோ... கை வைத்தது தப்பு... பார்ப்போம்.... மலிந்தால் கத்தரிக்காய் சந்தைக்கு வராமலா போய்விடும்.

அன்புரசிகன்
28-04-2008, 06:05 PM
சென்னை அணி மீண்டும் வெற்றியை நிலைநாட்டியுள்ளது.

உண்மையில் தோனி ஒரு திறமைவாய்ந்த ஒரு தலைவன் என மீண்டும் நிரூபித்துள்ளார். 20 - 20 விளையாட்டில் வெற்றி ராஜாவாக தோனி உருவகித்துள்ளார் என சொல்லலாம். காரணம் இன்று சென்னை அணி தோல்வியை தழுவும் நிலையிலேயே இருந்தது. பாரிய இணையாட்டத்தை உடைத்தெறிந்ததன் மூலம் வெற்றியை அடைந்துள்ளது...

பெங்களுர் அணி மண்ணை கவ்வியது. ட்ராவிட் ஆட்டமிழப்பு இல்லை என்றாலும் அதுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது என கூறமுடியாது...

சென்னை ராஜாக்களுக்கு வாழ்த்துக்கள்.

அறிஞர்
28-04-2008, 06:56 PM
ஸ்ரீசாந்தை மும்பை அணித்தலைவர் பஜ்ஜி அறைந்தார் என்றும், அது மீடியா மற்றும் நிர்வாகத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டதாகவும் தகவல்..!
11 போட்டிகளுக்கு தடா.... பாஜிக்கு ஒரு நல்ல பாடம்.

அறிஞர்
28-04-2008, 06:58 PM
சென்னை அணி மீண்டும் வெற்றியை நிலைநாட்டியுள்ளது.

உண்மையில் தோனி ஒரு திறமைவாய்ந்த ஒரு தலைவன் என மீண்டும் நிரூபித்துள்ளார். 20 - 20 விளையாட்டில் வெற்றி ராஜாவாக தோனி உருவகித்துள்ளார் என சொல்லலாம். காரணம் இன்று சென்னை அணி தோல்வியை தழுவும் நிலையிலேயே இருந்தது. பாரிய இணையாட்டத்தை உடைத்தெறிந்ததன் மூலம் வெற்றியை அடைந்துள்ளது...

பெங்களுர் அணி மண்ணை கவ்வியது. ட்ராவிட் ஆட்டமிழப்பு இல்லை என்றாலும் அதுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது என கூறமுடியாது...

சென்னை ராஜாக்களுக்கு வாழ்த்துக்கள்.
ஹிஹி.. தோனிக்கு ரொம்ப லக்குப்பா..
தோற்கவேண்டிய போட்டி.. வெற்றி பெற்றுவிட்டார்கள்...

மூம்முர்த்திகள் (ஹைடன், ஹூசே, ஓரம்) கிளம்புகிறார்கள்.. இனி சென்னையால் சாதிக்க இயலுமா..

பொறுத்திருந்து பார்ப்போம்.

அறிஞர்
28-04-2008, 07:01 PM
ஹைதராபாத் அணியின் கில்கிறிஸ்ட் 100 ரன்கள் (42 பந்துகளில்)

http://www.youtube.com/watch?v=QEhBVQNPeiQ

sarathecreator
29-04-2008, 07:19 AM
நேற்று நடந்த சென்னை Vs பெங்களூரு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் ஆட்டத்தில் 13 ஓட்டங்களை எடுக்கத்தவறி அனைத்து ஆட்டக்காரர்களையும் இழந்து தோல்வியடைந்தது ராகுல் தலைமையிலான பெங்களூரு அணி.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது வெற்றியை நேற்று பதிவு செய்துள்ளது.

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் அந்த அணி 13 ரன் வித்தியாசத்தில் பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

டாஸ் வென்று முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்தது. கேப்டன் தோனி அதிகபட்சமாக 65 ரன்களை சேர்த்தார்.

பின்னர் ஆடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 19 புள்ளி நான்கு ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களையே எடுத்தது.

பெங்களூருரில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் நேற்று செ*ன்னை சூப்பர் கிங்ஸ் அணி திராவிட் தலைமை*யிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

பூவா தலையா வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தோனி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.

பார்த்தீவ் படேல் 2 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 21 ரன்களையும், மேத்யூ ஹெய்டன் 13 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு சுரேஷ் ரெய்னாவும் மைக்கேல் ஹஸ்ஸியும் இணைந்து 30 பந்துகளில் 41 ரன்களை சேர்த்தனர். 17 பந்துகளை சந்தித்த ரெய்னா 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஹஸ்ஸியுடன் தோனி இணைந்தார். இருவரும் இணைந்து 7 ஓவர்களில் 95 ரன்களை விளாசினர். 30 பந்துகளை சந்தித்த தோனி 9 பவுண்டரிகள் 3 சிக்சர் சகிதம் 65 ரன்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். மைக் ஹஸ்ஸி மீண்டும் ஆடிய ஒரு அபார இன்னிங்சில் 47 ரன்களை எடுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்தது.

பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி வாசிம் ஜாபர் (50), ராஸ் டெய்லர் (53) ஆகியோரது அபார ஆட்டத்தால் 11வது ஓவரில் 102 ரன்களை எட்டினர். ஆனால் அதன் பிறகு ஆடவந்த திராவிட், காலிஸ், பவுச்சர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்கவே கடைசி 8 விக்கெட்டுகளை வெறும் 63 ரன்களுக்கு பறி கொடுத்து 19.4 ஓவரில் 165 ரன்களுக்கு சுருண்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மன்ப்ரீத் கோனி 3 விக்கெட்டுகளையும், பலனி அமர்னாத், ஜொஹிந்தர் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல்-மீண்டும் பெங்களூரை புரட்டிய சென்னை அணி
பெங்களூர்: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்,டோணியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக வென்றது. இதன் மூலம் ஆடிய நான்கு ஆட்டங்களிலும் வென்று அசைக்க முடியாத அணியாக டோணியின் சென்னை அணி உருவெடுத்துள்ளது.

ஐபிஎல் டுவென்டி 20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. இதுவரை ஆடிய 3 ஆட்டங்களிலும் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பெங்களூரில் நடந்த போட்டியில் வீழ்த்தி அட்டகாசம் செய்துள்ளது டோணி தலைமையிலான சென்னை அணி.

நேற்றைய போட்டியில், முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்கார்ரகளான பார்த்திவ் படேல் 21 ரன்களும், மாத்யூ ஹைடன் 13 ரன்களும் சேர்த்தனர்.

அதன் பின்னர் இறங்கிய ஹூஸே 47 ரன்களைக் குவித்தார். ஆனால் கேப்டன் டோணியின் ஆட்டத்தில் தான் அணல் பறந்தது. அதிரடியாக ஆடிய அவர் 30 பந்துகளில் 65 ரன்களைக் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடக்கம்.

சுரேஷ் ரெய்னாவும் தன் பங்குக்கு 28ரன்களைக் குவித்தார். இறுதியில் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை சேர்த்தது ெசன்னை அணி.

இதையடுத்து ஆடிய பெங்களூர் அணி தொடக்க வீரர் சிப்ளியை 8 ரன்களுக்கு இழந்தது. இருப்பினும் வாசிம் ஜாபரும், டெய்லரும் சிறப்பாக ஆடினர். இதனால் அணிக்கு வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியது.

ஜாபர் 50 ரன்களும், டெய்லர் 53 ரன்களும் சேர்த்தனர். ஆனால் அதற்குப் பின்னர் வந்த வீரர்கள் சரிவர ஆடவில்லை. கல்லிஸ் 14 ரன்களும், பெளச்சர் 4 ரன்களும் சேர்த்தனர். டிராவிட் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

19.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களில் சுருண்டது பெங்களூர் அணி. இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. இப்போட்டித் தொடரில் படு மோசமாக விளையாடி வருவது மும்பை அணி மட்டுமே. இன்றைய ஆட்டத்தில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா அணியை மும்பை எப்படி சமாளிக்கப் போகிறது என்று தெரியவில்லை.

தோனி சிறந்த கேப்டன்: ஓரம் பாராட்டு

மகேந்திர சிங் தோனி சிறந்த கேப்டன்களில் ஒருவர். அவரிடம் இருந்து தான் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டிருப்பதாக, நியூசிலாந்து வீரர் ஜேக்கப் ஓரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தோனியின் அணுகுமுறை தன்னை மெய்சிலிர்க்க வைக்கிறது என்றார்.

மைதானத்தில் பதற்றமின்றி அமைதியாக தோனி காணப்படுவதாகவும், ஆனால் அவர் எடுக்கும் முடிவுகள் மிகவும் புத்திசாலித்தனமாக இருப்பதாகவும் ஓரம் பாராட்டினார்.

சென்னை அணியில் இருந்து ஹைடன் ஹசி ஆகியோர் இடையில் விலகுவதால் அணி பலவீனம் அடையும் என்பதை மறுத்த ஓரம், நிட்னி- மோர்கல் ஆகியோரின் வருகை இக்குறையை போக்கும் என்றார்.

கொல்கட்டா அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றததிற்கு ஜேக்கப் ஓரத்தின் அபார பந்து வீச்சும் ஒரு காரணம். இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

courtesy : http://tamizh2000.blogspot.com

ஓவியன்
30-04-2008, 08:15 AM
நேற்று மும்பை இந்தியன் அணியினர், பொலக்கின் தலமையில் பலமான கல்கத்தா நைட்ரைடர்ஸ் அனியினரை வெற்றி கொண்டனர், இந்த வெற்றிக்கு 'ஜெயசூர்யா'வின் பந்து வீச்சு முக்கிய காரணியாக அமைந்தது...
இதே வேளை ஹர்பஜன்சிங் மும்பை அணித் தலைவராக இருந்து விளையாடித் தோல்வியுற்ற முதல் மூன்று போட்டிகளிலும் ஒரு பந்து பரிமாற்றத்தையேனும் ஜெயசூர்யாவுக்கு வழங்காமை குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடான போட்டியில் மும்பை அணியின் எட்டு பேரை பந்து வீச அழைத்த ஹர்பஜன் ஜெயசூர்யாவுக்கு ஒரு பந்து பரிமாற்றத்தையேனும் வழங்காததன் காரணம் என்னவோ...??

அமரன்
30-04-2008, 12:07 PM
பொதுவாக இடதுகை சுழல்/குறைவேகப் பந்துகளை எதிர்கொள்வது சற்றுக் கடினமானது. அதிலும் ஜெயசூர்யா வீசும் குக்லிப்பாணி பந்து விக்கட்டை வீழ்த்தும் சாத்தியம் அதிகம். அவரைப்பயன்படுத்தி இருக்கவேண்டும். சுழல்பந்து வீச்சுக்கு ஹர்பஜன் இருந்ததால் பயன்படுத்தவில்லைப் போலும்.

அறிஞர்
30-04-2008, 01:41 PM
இன்று பெங்களூரு, தில்லியுடன் மோதுகிறது..

தில்லிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

ஓவியன்
30-04-2008, 03:44 PM
சுழல்பந்து வீச்சுக்கு ஹர்பஜன் இருந்ததால் பயன்படுத்தவில்லைப் போலும்.

ஜெயசூர்யாவின் பந்து வீச்சு சுழல் பந்து வீச்சென்பதனால் தான் அழைக்கவில்லை போலும்......!! :rolleyes:

மயூ
01-05-2008, 05:42 AM
கிரிக்கட்டில் அவளவு ஆர்வம் இல்லை! ஆனாலும் இந்த பிரீமியர் லீக் என்னை கட்டிப் போட்டுவிட்டது. ஆட்டம் சுவார்யமாக இருக்கின்றது. சென்னை சுப்பர் கிங்ஸ் கலக்கல்!

உதயசூரியன்
01-05-2008, 08:44 AM
இது போல் 20 க்கு 20 ஆட்டம் ஆட மிக பெரிய ஜாம்பவான்கள் தேவையில்லை.. சென்னை திருவல்லிகேணியில் உள்ள சிறுவர்கள் போதும்.. எனக்கு கிரிக்கெட் பிடிக்கும்.. நம்ம அணி வீரர்களின் ஆட்டத்தை விட.. சின்ன சின்ன மைதானங்களில் குறுக்கும் நெருக்குமாய் ஆடும் நம்ம பசங்களின் ஆட்டம் எனக்கு இன்னும் மிக பிடிக்கும்..

அதை தான் இப்போ அரங்கேற்றியும் இருக்கிறார்கள்..

அதற்கு காரணகர்த்தா.. கபிலுக்கு வாழ்த்துக்கள்..

ஆனால் ஐ.பி.எல்லில் மிக பெரிய சோகம்.. ஆடுபவர்களில் 90 சதம் சொந்த ஊர்காரர்கள் இல்லை.. அதனால் என்ன தான் சென்னை டீம் என்றாலும் ஒட்ட மாட்டுது..

கபிலின் டீமில்.. தமிழக இளம் வீரர்கள் 50 சதத்துக்கு மேல் சொந்த மண் காரர்கள்..இருந்தார்கள்...

ஏற்கனவே காசு பார்த்து கொண்டிருக்கும்.. அனைத்து பெரிய ஜாம்பவான்களையும்.. இதில் இழுத்து போட்டது தவறு.. அதை விட.. பார் டான்ஸ்.. கேளிக்கை விடுதியாகிவிட்டது..

புதுமுகங்களை தேர்ந்தெடுக்கும் விதமாக இது அமைந்திருக்க வேண்டும்..

அதை விடுத்து...
ஒரு அரசு துறை விளையாட்டு அமைப்பு .. காசுக்கும் காமத்துக்கும் அலைகிறது.. வருத்தமே..

எனக்கு தேவையான் விறுவிறுப்பை.. 10 ஓவர் மேட்சிலும் கிடக்கும் சாலையோரத்தில்.. அது போதும்...

எல்லாவற்றிர்கும் ஆதரவு தருவதை நிறுத்துவோம்...



வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

மயூ
01-05-2008, 10:20 AM
ஏனோ ஸ்ரீஷாந் விம்மி விம்மி அழுதாரே... என்ன காரணமோ????
ஹர்பஜான் கன்னத்தில் வைத்தாராம் கையை.. இது பற்றி ஸ்ரீ ஷாந்த் சொல்கையில்,
"நாங்கள் சகோதரர்கள் மாதிரி. அவர் பிழையான இடத்தில் கைகொடுத்து விட்டார்1"

ஓவியன்
01-05-2008, 11:47 AM
ஹர்பஜான் கன்னத்தில் வைத்தாராம் கையை.."

ஹர்பஜனின் கன்னத்தில் ஹர்பஜன் கை வைத்தால் ஸ்ரீ ஏன் அழவேண்டும் மயூ.....??? :icon_rollout:

மயூ
01-05-2008, 12:00 PM
ஹர்பஜனின் கன்னத்தில் ஹர்பஜன் கை வைத்தால் ஸ்ரீ ஏன் அழவேண்டும் மயூ.....??? :icon_rollout:
வந்த உடனேயே ஆரம்பிச்சீட்டீங்களா... சரி சரி நடத்துங்க!

ஓவியன்
04-05-2008, 05:19 AM
யுவராஜ் தலமையிலான பஞ்சாப் அணியினர் வங்கப் புலியின் கல்கத்தா அணியினரை நேற்று வெற்றி கொண்டனர்...

போட்டியின் இறுதித் தருணங்கள் மிக விறுப்பாக இருந்தது , விறுப்பூட்டிய துடுப்பாட்டக் காரர்கள் டேவிட் ஹசி மற்றும் சஹா...
ஆனால் வெற்றியின் விளிம்புக்கு வந்தும் சாருஹானின் அணியினரால் வெற்றியீட்ட முடியவில்லை.

aren
04-05-2008, 05:28 AM
பாவம் ஹைதராபாத் அணி. அம்பெயர் இருவரும் பெங்களூர் அணிக்கு ஆடிவிட்டார்கள். இல்லையென்றால் லஷ்மன் அணி வெற்றி பெற்றிருக்கும்.

பாவம் ஹைதராபாத் அணி, இப்படி மூன்று ஆட்டங்களை குறைந்த ரன் வித்யாசத்தில் இழந்துவிட்டார்கள்.

அமரன்
04-05-2008, 10:13 AM
ரன்னிங்க் கமென்றி கொடுத்து கடுப்பேத்துறாங்கப்பா.. பார்க்க முடியாமல் தவிக்கும் எனக்கு நீங்கள் செய்வது நல்லதா? கெட்டதா? சொல்லுங்கப்பா...

ஓவியன்
04-05-2008, 02:44 PM
ரன்னிங்க் கமென்றி கொடுத்து கடுப்பேத்துறாங்கப்பா....

ஹீ, ஹீ சந்தோசமா இருக்கு...

எல்லாமே சொனிமேக்ஸின் புண்ணியம் தான்...!! :)

logini
05-05-2008, 06:58 AM
நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தப் பற்றி யாருமே பேசலையே...... ஏன்?
தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டிருந்த அணி இப்போது தொடர்ந்து தோல்வியை தழுவுகிறது.

aren
05-05-2008, 07:26 AM
சென்னை மிகவும் சொதப்பலாக ஆடியது நேற்று. பாவம் பிளம்மிங்கை அநியாயமாக அவுட் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.

தோனி - வார்ன் பந்த என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்லிப்பில் காட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஓவியன்
05-05-2008, 08:21 AM
ஹசி மற்றும் ஹைடனின் வெறுமை நன்றாகவே வெளிப்படுகிறது சென்னை அணியினரின் விளையாட்டில்...

aren
05-05-2008, 08:40 AM
இதிலிருந்தே தெரிகிறது யாருக்கு அதிகமாக பணம் கொடுக்கவேண்டும் என்று. அடுத்த முறை காண்டிராக்ட் போடும்பொழுது எல்லாம் தலைகீழாக மாறும் என்று தெரிகிறது.

aren
05-05-2008, 08:41 AM
எப்படி ஆடுகிறார்களோ அதற்குத் தகுந்தமாதிரி பணம் கொடுக்கப்படலாம். டக்வொர்த் லூயிஸ் கணக்குமாதிரி ஏதாவது ஒன்று வரும் என்று தெரிகிறது.

ஓவியன்
05-05-2008, 08:50 AM
எப்படி ஆடுகிறார்களோ அதற்குத் தகுந்தமாதிரி பணம் கொடுக்கப்படலாம். டக்வொர்த் லூயிஸ் கணக்குமாதிரி ஏதாவது ஒன்று வரும் என்று தெரிகிறது.

அப்படி எதாவது ஒன்று வந்தாலே நலம், அப்போதுதான் ஒவ்வொருவரும் திறமையாக விளையாட முயற்சிப்பார்கள்.

தாமரை
05-05-2008, 10:47 AM
ஐ பி எல் என்பது வியாபாரம் தானே!!!

1. மூன்று வருடக் காண்ட்ராக்ட் வாங்கிச் சரியாக விளையாடாதவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. அவர்களுக்கு முழு பணமும் செட்டில் செய்யலாம்.. மன்சாட்சி உள்ளவர்கள் (??) என்றால் தானாகவே ஓய்வு பெற்று விட வேண்டும்

2. ஒரு வருடம் காண்ட்ராக்ட் பெற்றவர்கள், நன்கு விளையாடி இருந்தால் அடுத்த வருடம் அதிர்ஷ்ட லட்சுமி கதவைத் தட்டுவாள்.

3. அடுத்த வருடம் இன்னும் சில புது முககங்களும். இன்னும் சில சர்வதேசப் புள்ளிகளும் கிடைப்பார்கள்.. எனவே ஏலத் தொகை இவ்வளவு இருக்காது.. கம்பெனிகள், மூக்கணாங்கயிற்றை இறுக்கிப் பிடிக்கும்

4. அணிகள், ஒரு பௌலருக்கு பதிலாக பேட்ஸ்மேனையோ, இல்லை விக்கெட் கீப்பரையோ மாற்றிக் கொள்ளக் கூடும். இந்தப் பரிவர்த்தனை அடுத்த வருடம் ஆரம்பித்து வைக்கப் படலாம்.

5. குறைந்த பணம் பெறுவதாக என்னூம் சில பெரிய வீரர்கள், 3 வருட காண்ட்ராக்ட் பணத்தைக் கட்டி விட்டு, மறுபடி தன்னை விற்றுக் கொள்ளக் கூடும்..

6. அடுத்த வருடம், கோச் அதிக நாள் வேலை செய்ய வேண்டியதாய் இருக்கும். அணியில் மாற்ற முடியாத வீரர்கள் தவிர என்னக் குறை, யார் யாரை அடுத்த வருடம் இழுக்க வேண்டும் எனப் பிளான் செய்ய வேண்டியது இருக்கும்.

7. அடுத்த வருடமும் புது வீரர்களை டீம்கள் ஒரு குறிப்பிட்ட அடிப்படைத் தொகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என ட்ராஃப்ட் இருக்கும். அனில் கும்ப்ளே, திராவிட் போன்ற மூத்தவர்கள் ஓய்வு பெற, இளம் இரத்தங்கள் பாய்ச்ச படும்.

8. லீக் சில வருடங்களில் இரண்டாய் பிரிக்கப் படும். டெவலப்மெண்ட் லீக், ப்ரொஃபெஷனல் லீக் என.. மொத்தம் 30 வீரர்களை ஒரு அணி வைத்துக் கொள்ளலாம். 15 பேர் ஆடும் லிஸ்டிலும் 15 பேர் டெவலப்மெண்ட் லிஸ்டிலும் இருப்பார்கள். ஆக, 15 பேரில் யாருக்காவது அடிபட்டால் ஆள் தேடி அலைய வேண்டியதில்லை. டெவலப்மெண்ட் அணியில் உள்ள இளரத்தங்கள், முறைப்படி பயிற்றுவிக்கப் படுவார்கள், குறைந்த ஸ்டைஃபண்ட் உடன்.

9. அதற்குச் சில வருடங்களுக்குள், வீரர்கள் சில மேட்சுகளைத் தோற்க கைக்கூலி பெற ஆரம்பிப்பார்கள். சிலருக்கு திடீரென வயிற்றுப் போக்கும், தலைவலியும் வரும்..

10. அடுத்த உலகக் கோப்பை போட்டிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க, ஐபிஎல் அணி உரிமையாளர்கள், உச்ச பட்ச நெருக்கடித் தருவார்கள்,,

இன்னும் பற்பல விஷயங்களை எதிர்பார்க்கலாம் ஆரென்..

பாரதி
05-05-2008, 11:21 AM
ஐரோப்பிய நாடுகளின் உதைபந்தாட்ட ரசிகர்களைப் போல மட்டைப்பந்து ரசிகர்களையும் மாற்றும் வணிக யுத்தி!

ஹும்... ஃபாஸ்ட் ஃபுட் விரும்புபவர்கள் அதிகமாகி விட்ட காலமிது.

அறிஞர்
05-05-2008, 07:14 PM
போட்டிகள் வெகுநாட்கள் இருப்பதால்..
அடுத்த வருடம் விறுவிறுப்பு குறைய வாய்ப்புள்ளது.

அறிஞர்
06-05-2008, 01:02 PM
தொடர்ந்து இருமுறை தோற்ற சென்னை இன்று வெற்றிக் காணுமா..
ஹைதராபாத் அணியை வெல்லுவது எளிது தான்....

ஓவியன்
06-05-2008, 01:28 PM
உண்மைதான், ஆனால் இந்த தடவை டெக்கான் அணியினர் ‘தப்பித் தவறி' (:D) வென்று விட்டால் சென்னை அணியினரின் பாடு திண்டாட்டமாகி விடும்...!!

அறிஞர்
06-05-2008, 02:11 PM
அனிரூதா இந்த போட்டியில் முதல் முறையாக களம் இறங்குகிறார்.

தாமரையின் பையன் என்று எண்ணிப்பார்த்தால்... நம் பழைய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் பையன் அனிரூதாவாம்...

ஷீ-நிசி
06-05-2008, 02:14 PM
அனிருத் பேட்டிங்கை பார்க்கும் ஆவலில் நானும்!

அறிஞர்
06-05-2008, 02:58 PM
அனிருத் பேட்டிங்கை பார்க்கும் ஆவலில் நானும்!
அனிரூதா... 1 ரன்னில் அவுட்...
சரியாக விளையாடவில்லை....

அன்புரசிகன்
06-05-2008, 03:10 PM
யாருமே சரியாக விளையாடவில்லை. பத்ரிநாத் கூட தேவையற்ற அகலப்பந்திற்கு துடுப்பை கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறிவிட்டார். தோனியின் கையில் இன்றய ஆட்டம்.....

ஷீ-நிசி
06-05-2008, 11:58 PM
சோலி முடிஞ்சது

அனுராகவன்
07-05-2008, 12:51 AM
சென்னை அணியின் தொடர்ச்சியான மூன்றாம் தோல்வி..
தொடர்வெற்றி போயி இப்ப தலைகீழ்...

ஓவியன்
07-05-2008, 02:10 AM
பத்ரிநாத் கூட தேவையற்ற அகலப்பந்திற்கு துடுப்பை கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறிவிட்டார்..

ஆனால் பதிரிநாத்தின் பந்தை ஹிப்ஸ் பிடியெடுத்த விதம் அருமை...

டெக்கான் அணியினரின் நேற்றைய வெற்றிக்கு நேற்றைய அணித்தலமைதான் காரணமோ....???
லக்ஸ்மன் தலமையில் சொதப்பிய அணியினர், ஹில்கிறிஸ்ட் தலமையில் பிச்சு உதறிட்டாங்களே...???

அன்புரசிகன்
07-05-2008, 02:15 AM
பார்த்தளவில் நேற்று கோனி என்ற பந்துவீச்சாளர் மட்டுமே ஓரளவு சிறப்பாக ஆடினார். அவரது அதிரடி ஓட்டம் இல்லாவிட்டால் நேற்று 13 வது பந்துப்பரிமாற்றத்திலேயே அவர்கள் வென்றிருப்பர்.

parimaala
07-05-2008, 03:40 AM
தோனி தலைமையிலான சென்னை அணி இப்படி அடி மேல் அடி வாங்கக்கூடாது. தோனி தனது பேட்டிங்கையையும் சிறப்பாக செய்ய வேண்டும்

அன்புரசிகன்
07-05-2008, 01:47 PM
தோனி தலைமையிலான சென்னை அணி இப்படி அடி மேல் அடி வாங்கக்கூடாது. தோனி தனது பேட்டிங்கையையும் சிறப்பாக செய்ய வேண்டும்

உங்களை அறிமுகம் செய்து கொள்க. (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) பகுதியில் உங்களை அறிமுகம் செய்யுங்கள். நிர்வாகப்பகுதியில் உள்ள தமிழ் மன்ற விதிகளை படித்து அதன் படி உங்கள் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் தாருங்கள்.

மன்மதன்
07-05-2008, 02:34 PM
சோலி முடிஞ்சது

அட இன்னும் 7 போட்டிகள்தான் இருக்கே..:rolleyes:

arun
07-05-2008, 06:10 PM
அட இன்னும் 7 போட்டிகள்தான் இருக்கே..:rolleyes:

அது என்னவோ சரி தான் ஆனால் தற்போது சென்னை அணி சற்று தொய்வாக தான் காண படுகிறது

துவக்க வீரர்களை மாற்றினால் ஏதும் பலன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது :icon_b::icon_b:

கண்மணி
08-05-2008, 02:11 AM
ஒரு ஆடுகளத்தில் வாரம் ஒரு மேட்ச். பிட்ச் பிச்சிகிட்டு போவுது.. போகப் போக ரன்ரேட் குறைஞ்சுகிட்டே போகுதே கவனிச்சீங்களா?

வருஷத்துக்கு 30 மேட்ச் மிக அதிகம் என்று சொன்னவரெல்லாம், இரண்டு மாசத்தில 14 மேட்ச் ஆடறாங்க..

வர வர முதலில் பேட் செய்யறது கஷ்டம் ஆகிட்டே வருது..

இந்த நிலை நீடிச்சா அப்புறம் கம்முன்னு டாஸ் ஜெயிச்ச டீமை ஜெயிச்சதா சொல்லிட்டு போய்ட்டே இருக்கலாம்..

என்ன நாஞ்சொல்றது!

ஷீ-நிசி
08-05-2008, 02:30 PM
வென்றுட்டோம்ல.... வென்றுட்டோம்ல....

ஓவியன்
10-05-2008, 05:20 PM
வென்றுட்டோம்ல.... வென்றுட்டோம்ல....

ஆனால், இன்று வெற்றி கொஞ்சம் சிக்கலாகும் போலுள்ளது....

182 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிக் கொண்டிருக்கும் பஞ்சாப் அணியின் ஆரம்ப ஆட்டக் காரராக வந்த ஷோன் மார்ஸ் பிளந்து கட்டுகிறார்....!! :)

ஷோன் மார்ஸ் அவுஸ்திரேலியரானாலும் இன்னமும் அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்காதவர்...!!

இளையவர்தான் ஆனால் அழகாக ஆடுகிறார்...! :)

ராஜா
10-05-2008, 05:54 PM
சென்னை அணி வெற்றி..!

ஓவியன்
10-05-2008, 06:03 PM
இறுதி பந்துப் பரிமாற்றத்தில் பாலாஜி ஹட்ரிக் வீழ்த்தியிருந்தார்...


பதான்
சவ்லா
வி.ஆர்.வி சிங்


பதான் இறுதி நேரத்தில் அசத்தலாகத் துடுப்பெடுத்தாடி (18 பந்துகளில் 40 ஓட்டங்கள்) விறு விறுப்பூட்டினார்....

அன்புரசிகன்
10-05-2008, 07:20 PM
20 - இருபது போட்டியில் முதலாவது முத்தரசாதனையை பாலாஜி தனதாக்கிக்கொண்டுள்ளார்.... வாழ்த்துக்கள் பாலாஜிக்கு....

அனுராகவன்
11-05-2008, 12:10 AM
அபாரமாக பந்து வீசிய பாலாஜிக்கு மீண்டும் மெயின் அணியில் இடம் கிடைக்குமா..அருமையான பந்து வீச்சு..
அனல் பறந்தது..பலே சென்னை அணி..

சுட்டிபையன்
11-05-2008, 06:01 AM
20 - இருபது போட்டியில் முதலாவது முத்தரசாதனையை பாலாஜி தனதாக்கிக்கொண்டுள்ளார்.... வாழ்த்துக்கள் பாலாஜிக்கு....

இது இருபது20 இல் முதல் தடவை அல்ல ஐபில் தொடரில்தான் முதல் தடவை

Twenty20 matches

Hat-tricks


Player Match Victims
Dimitri Mascarenhas Hampshire v Sussex, Hove, 2004 MJG Davis, Mushtaq Ahmed, JD Lewry
Dominic Cork Lancashire v Nottinghamshire, Old Trafford, 2004 KP Pietersen, MA Ealham, SR Patel
Zeeshan Khan M Tigers v K Zebras, Lahore, 2004-05 Javed Qadeer, Shahid Latif, Atif Maqbool
James Anyon Warwickshire v Somerset, Birmingham, 2005 WJ Durston, GM Andrew, AR Caddick
RD Abeydeera Sinhalese SC v Badureliya, Colombo, 2005-06 RPAH Wickramaratne, ASA.Perera, PS Liyanage
Mohammad Aslam P Panthers v M Tigers, Karachi, 2006-07 Shabbir Ahmed, Imranullah Aslam, Mohammad Irshad
Nathan Rimmington Queensland v Tasmania, Toowoomba, 2006-07 GJ Bailey, DG Wright, LR Butterworth
Jeremy Snape Leicestershire v Yorkshire, Grace Road, 2007 TT Bresnan, JA Rudolph, RM Pyrah
Ryan McLaren Kent v Gloucestershire, Edgbaston, 2007 HJH Marshall, SJ Adshead, ID Fisher
Brett Lee Australia v Bangladesh, Cape Town, 2007 Shakib Al Hasan, Mashrafe Mortaza, Alok Kapali
Lennox Cush Guyana v Jamaica, Antigua, 2008 DP Hyatt, WW Hinds, XM Marshall
NE Mbhalati Eagles v Titans, Kimberley, 2008 JA Rudolph, HH Dippenaar, RT Bailey
CK Langeveldt Titans v Cape Cobras, Centurion, 2008 RE van der Merwe, F du Plessis, F Behardien
L Balaji Chennai v Punjab, Chennai. 2008 IK Pathan, PP Chawla, VRV Singh

The following players have taken hat-tricks in unclassed Twenty20 matches

AJ.Hollioake (for International XI v Asia XI - Tsunami Appeal) at The Oval 2005 - R.Dravid, WPUJC Vaas, A Kumble MJ Clarke (for Australians v P.C.A.Masters XI) at Arundel Castle 2005 - PD Collingwood, KP Pietersen, GP Swann

அனுராகவன்
11-05-2008, 06:35 AM
இது இருபது20 இல் முதல் தடவை அல்ல ஐபில் தொடரில்தான் முதல் தடவை
source (http://http://stats.cricinfo.com/ci/content/current/records/305868.html)
சுட்டி அவர்களே!!
பகிர்வுக்கு என் நன்றி!!

ராஜா
11-05-2008, 06:05 PM
இன்று நடந்த இரு வேறு போட்டிகளில், கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றன.

aren
12-05-2008, 10:35 AM
பெங்களூர் அணியின் விஜய் மல்லையா அவர்கள் கொஞ்சம் காரமாக பேசியிருப்பதால் இன்றைய பஞ்சாப் - பெங்களூர் ஆட்டத்தில் நிச்சயம் பெங்களூர் வெற்றி பெரும் என்று தெரிகிறது. தோற்றால் திராவிட் நிலை பரிதாபமாக இருக்கும், ஆகையால் உயிரைக் கொடுத்து ஆடி வெற்றி பெருவார்கள் என்றே தோன்றுகிறது.

ராஜா
12-05-2008, 05:17 PM
இன்றும் திராவிட் அணியின் நிலை பரிதாபமாகத்தான் இருக்கிறது.. அனேகமாக அரை இறுதியிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும் முதல் அணி பெங்களூருவாகத்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது..!

அறிஞர்
12-05-2008, 05:44 PM
பாலாஜி ஹாட்ரிக் இங்கே....

http://www.youtube.com/watch?v=mrwt1IWbR50&session=K7v_sDYyvTSLJJP9LmDrykOn8RtLRcyW7fGzLEI8W2QkGBGlrf1DHZpaZDpkeEjvts8aaLi9tPDoAUMT1NqlJI3ZyE5mXHxlTT8xBhgN8nFOs0MAZ2-e81Xp3Ko_4iUmHipfuZcQoJtQsH1Cevya-g5znTLrY6-yWXzsBxXZCCp9_CZbVCaU-wWfqSNDoolHPFMctPpOHW-ESs6E-INsgJDn0xIb1NtAtmxroaw2Xq7eHLM5L7buxLIxBsg6o6sYC1LdaBMyyNxHB7omdhCN-Rh7riHp0ww7x8TmJ-oks0APCXv5pgl00Q45xXrBA34C

அறிஞர்
12-05-2008, 05:45 PM
பெங்களூர் அணியின் விஜய் மல்லையா அவர்கள் கொஞ்சம் காரமாக பேசியிருப்பதால் இன்றைய பஞ்சாப் - பெங்களூர் ஆட்டத்தில் நிச்சயம் பெங்களூர் வெற்றி பெரும் என்று தெரிகிறது. தோற்றால் திராவிட் நிலை பரிதாபமாக இருக்கும், ஆகையால் உயிரைக் கொடுத்து ஆடி வெற்றி பெருவார்கள் என்றே தோன்றுகிறது.
ஹிஹி.. எப்படி உயிரை கொடுத்தாலும்... தோல்வியை தடுக்க இயலவில்லை...

பஞ்சாப் எளிதில் வெற்றி.. மார்ஷ் 74 ரன்கள்.

ஓவியன்
13-05-2008, 02:26 PM
பஞ்சாப் எளிதில் வெற்றி.. மார்ஷ் 74 ரன்கள்.

மார்ஷ் பிச்சு உதறுகிறார், ஐ பி எல் இந்திய இளைஞர்களுக்கு தேசிய கிரிக்கட் அணிக்கு வழி காட்டுகிறதோ இல்லையோ மார்ஷ் போன்ற வேற்று நாட்டவர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

இனி மார்ஷின் துடுப்பாட்டத்தினை அவுஸ்திரேலிய அணி சார்பாக காணும் காலம் வரும்...!! :)

அறிஞர்
13-05-2008, 02:56 PM
அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கு....

"அப்பா ஆட்டமே சிறந்தது என மார்ஷ் கூறியுள்ளார்....

ஓவியன்
13-05-2008, 03:03 PM
உண்மைதான் அண்ணா, அன்றைய கால தந்தை மார்ஷின் ஆட்டங்களை அவ்வளவாக பார்த்திராத என்னைப் போன்றோருக்கு தனயன் தானே தன் தந்தையின் ஆட்டத்தைக் காட்ட வேண்டும்....

_________________________________________________________________________________________________

வங்கப்புலியின் அணியினர் இன்று வெற்றி பெறுவார்களா...???

இப்போது ப்ரீ ஹிட் ஒன்றுக்கு கங்குலி சிக்கசர் ஒன்று அடித்துள்ளார்...!! :)

ராஜா
13-05-2008, 03:14 PM
தாதா அவுட்.. ரசிகர்கள் மயான அமைதி..!

arun
13-05-2008, 06:37 PM
23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

முதல் போட்டியிலேயே சொயப் அக்தர் கலக்கலாக பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதினை தட்டி சென்றார்

ஸ்கோர்

கொல்கத்தா 133/6
டெல்லி 110/10

ஷீ-நிசி
14-05-2008, 12:38 AM
நான் இதுவரை பார்த்த 20/20 ஆட்டங்களிலேயே மிகவும் ரசித்த போட்டி நேற்று நடந்த கொல்கத்தா V டெல்லி போட்டி. என்னா மேட்ச்!! அக்தரின் அனல் பறக்கும் பந்து வீச்சு, பேட்ஸ்மேன்களின் திணறல். சுக்லாவின் துல்லியமான ரன் அவுட்.. கிரேட் ஃபீல்டிங்.. மற்றும் ஒரே ஓவரில் 3 விக்கெட், கங்குலியின் பிரமாதமான கேப்டன்ஷி. ரசிகர்களின் உச்சபட்ச கூச்சல். ரொம்ப ரொம்ப பொழுதுபோக்காக இருந்தது.

ஓவியன்
14-05-2008, 01:48 AM
சுக்லா கவனிக்கப்பட வேண்டியவர், அழகாக அருமையாக ஆடுகிறார்...!! :)

-------------------------------------------------------------------------------------

பரிசளிப்பின் போது அக்தரின் மேல் ஷாருக் தாவி ஏறி விட்டாரே...??!! :aetsch013:

அன்புரசிகன்
14-05-2008, 02:18 AM
வேகமானதும் லாவகமானதுமான பந்துவீச்சு அக்தரிடம் அதுவும் நீண்டகாலத்தின் பின்.... நேற்று அவரை அவத்து மைதானத்தில் ஒரு படமே இயக்கிவிட்டார் ஷாருக்கான்... ஆனாலும் சிறந்த ஆட்டக்காரரிடம் இந்த பாட்சா பலிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஷீ-நிசி
14-05-2008, 04:43 PM
வேகமானதும் லாவகமானதுமான பந்துவீச்சு அக்தரிடம் அதுவும் நீண்டகாலத்தின் பின்.... நேற்று அவரை அவத்து மைதானத்தில் ஒரு படமே இயக்கிவிட்டார் ஷாருக்கான்... ஆனாலும் சிறந்த ஆட்டக்காரரிடம் இந்த பாட்சா பலிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஷேவாக், காம்பிர், சிறந்த ஆட்டக்காரர்கள் இல்லையா ?!! :confused:

அன்புரசிகன்
14-05-2008, 04:47 PM
ஷேவாக், காம்பிர், சிறந்த ஆட்டக்காரர்கள் இல்லையா ?!! :confused:

உண்மையாவா????

அறிஞர்
14-05-2008, 05:00 PM
ஜெயசூர்யா... இன்று வானவேடிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்..

சென்னை பவுலர்கள் பாவம்.

ஓவியன்
14-05-2008, 05:48 PM
நீண்ட நாட்களுக்குப் பின்னர் சனத்தின் (48 பந்துகளில் 114 ஓட்டம், 11 சிக்கசர்கள், 9 பவுண்டரிகள் உள்ளடங்கலாக..) அதே பழைய கால அதிரடி ஆட்டம் காண முடிந்தது....!!

மைதானமெங்கும் சிக்சர் மயம்...!!

கடைசியாக பந்து வீசிய கபூகெதர உண்மையில் பாவம்....!! :aetsch013:

அன்புரசிகன்
14-05-2008, 05:56 PM
உண்மையில் முரளியும் பாவம் தான். காரணம் சில சனத்தின் ஆட்டமிழப்புக்கள் தவறவிடப்பட்டன.... ஆரம்பத்திலேயே விட்ட தவறு... சச்சின் வருகையால் சனத்தின் மீதான பொறுப்பு குறைந்துவிடவே நிம்மதியாக சனத் விளையாடினார். இதை அவரே செவ்வியின் போது கூறியிருந்தார்.

arun
14-05-2008, 06:42 PM
உண்மையாவா????

என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்,இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் காம்பிர் தான் முதலிடம்,அதிக ஸ்ட்ரைக் ரேட்டும் ரன் குவிப்பிலும் சேவாக் காம்பிருக்கு அடுத்த படியாக உள்ளார்

ஆனாலும் ஒரே ஆட்டத்தில் வைத்து அக்தரை கணித்து விட முடியாது பொறுத்திருந்து பார்ப்போம் :icon_b: :icon_b:

அறிஞர்
14-05-2008, 07:10 PM
ஜெயசூர்யாவின் ஆரம்ப வான வேடிக்கையை இங்கு கண்டு மகிழுங்கள். முழு வானவேடிக்கையையும் பிறகு தருகிறேன்.

http://www.youtube.com/watch?v=SYad4VJOVZA

அனுராகவன்
16-05-2008, 06:32 AM
தொடரும் ஹாட்ரீக் சாதனைகள்!!

பந்து வீச்சாளர்கள் தங்கள் சாதனைகள் தொடர்ந்து செய்கின்றனர்..
அதில இந்திய பந்து வீச்சாளர்கள் ...
சிலதினங்களுக்கு முன்பு பாலாஜி பிறகு..
டெல்லி சுழல்பந்து வீச்சாளர் மிஸ்ரா இரண்டாவது ஹாட்ரீக்கை ஐபிஎல் தொடர் போட்டியில் நிகழ்த்தியுள்ளார்..

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் சோயப் அக்தர் தன்னுடைய முதல் மூன்று ஓவரிலேயே நான்கு விக்கட்டுகளை வீழ்த்தியதும், ( அவர் நான்காவது ஓவர் வீசவேயில்லை, அதற்குள் டெல்லி அணியினர் முழுவதுமாய் ஆட்டமிழந்து விட்டனர்..) டெல்லி அணியின் சுழல் பந்து வீச்சாளர் நேற்று இரவு ஆட்டத்தின் இறுதி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் மூன்று விக்கட்டுகள் சாய்த்து ஹாட்ரிக் சாதனை படைத்ததும் புதிது.. இவரும் மொத்தம் ஐந்து விக்கட்டுகள் வீழ்த்தினார்.

இந்தியாவின் சுழல்வீச்சு ஹர்பஜனிடமே இருக்கிறது என்பதான மாயையை மிஸ்ராவும், சாவ்லாவும் உடைத்து வருகின்றனர்... நன்றிகள் ஐ.பி.எல்லுக்கு....

aren
16-05-2008, 06:39 AM
உண்மையாவா????

இது கொஞ்சம் லொள்ளுதான்!!!

aren
16-05-2008, 06:39 AM
ராஜஸ்தான் ராயல்ஸ்தான் கொஞ்சம் பிடி கொடுக்காமல் ஆடுகிறார்கள். அனைவரையும் கதி கலங்க வைக்கிறார்கள். பார்க்கலாம் இனி வரும் ஆட்டங்கள் எப்படியிருக்கும் என்று.

ஓவியன்
16-05-2008, 05:05 PM
பலமான (!!!) கல்கத்தா அணியினரை வெறும் 67 ஓட்டங்களுக்குள் முடக்கி 5.3 பந்து பரிமாற்றத்தில் 68 ஓட்டங்களை எட்டி அபார வெற்றியீட்டிய மும்பை அணியினர், அணிகளின் தரவரிசையில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளனர். இன்றைய போட்டியிலும் சனத் 17 பந்துகளில் 48 ஓட்டங்களை விளாசியிருந்தார்....

ஷாருக்கான் ஆடி, அடங்கி பாவமாக உட்காந்திருந்தார்...!! :rolleyes:

ஷீ-நிசி
17-05-2008, 01:49 AM
சோயப் அக்தரின் 2 வது ஓவரில்

உத்தப்பா ஒரு ரன் அடிக்க மற்ற 5 பாலில் சனத் அடித்து கிழித்துவிட்டார்

1 4 6 2 4 6

சோயப் அக்தரின் பந்துவீச்சை நொறுக்கியதன் மூலம் ஜெயசூர்யாவின் தன்னம்பிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கும், இனி அவருக்கு பந்து வீசும் பவுலர்களின் நிலைதான் பரிதாபத்திற்குள்ளாகும்.

சரியான நேரத்தில் ஃபார்மிக்கு வந்திருக்கிறார் ஜெயசூர்யா...

ஓவியன்
17-05-2008, 01:56 AM
சரியான நேரத்தில் ஃபார்மிக்கு வந்திருக்கிறார் ஜெயசூர்யா...

ஜெயசூர்யாவின் இந்த ஃபார்ம் மும்பை அணியின் நிகர ஓட்ட வீதத்தினை மற்றைய அணிகளிலும் கூடியதாக (+0.658) வைத்திருக்க பெருமளவில் உதவியுள்ளது...

prady
17-05-2008, 02:11 AM
மும்பை அணி உண்மையிலேயே திறமையால்தான் வெல்கிறதா?

அல்லது சச்சினின் அணியை தொடரில் நிலைத்து வைத்திருந்து அதன்மூலம் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்களை ஈர்ப்பதற்கு போட்டி முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்றனவா?

ஏனெனில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் - ஏனைய அணிகளை எதிர்கொண்டபோது இவ்வளவு மோசமாக விளையாடியிருக்கவில்லை. அதுமட்டுமல்ல - ஏற்கனவே மும்பை அணியை எதிர்கொண்டபோது அந்த அணிகளின் ஆட்டம் எவ்வாறிருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால்...

கொல்கத்தா வெறும் 67 ஓட்டங்களுக்குள் சுறுண்டது.. நம்ப முடியவில்லை!!

கிரிக்கெட் போட்டிகளில் முடிவுகள் எந்தக் கணத்திலும் மாறுமென்றாலும் சென்னை அணி பந்துவீச்சாளர்கள் short பந்துகளை அடுத்தடுத்து வீசி (அனைத்து பந்துவீச்சாளர்களும் - முன்னைய போட்டியில் ஹாட்ரிக் எடுத்த பாலாஜிகூட) ஓட்டங்களை அள்ளிக் கொடுத்தது ஏன்??????

சச்சின் மீது மதிப்பு அனைவருக்கும் இருக்கும். அதையெல்லாம் தாண்டி - இந்த வெற்றிகளுக்கும் மும்பை அணி முன்னைய போட்டிகளில் ஆடிய ஆட்டத்துக்கும் ஒப்பீடு செய்து பாருங்கள்......

ஓவியன்
17-05-2008, 02:16 AM
அணித்தலமை ஹர்பஜனிடமிருந்து ஷோன் பொலக்கிடம் வந்ததுமே மும்பை அணி நன்கு ஆடத் தொடங்கி விட்டனரே பிரடி...???

மும்பை அணியை முன்னிறுத்த கல்கத்தா அணியினர் இந்தளவு மோசமாக தோற்றிருப்பார்களா, ஏனென்றால் அவர்களது அணி தொடர்ந்து நிலைப்பது கூட ஐபிஎல் க்கு நலமானதே...

ஷாருக்கான் தலைமையில் விளம்பரங்களில் முன்னின்றது கொல்கத்தா அணியினர் தானே.... :confused:

ஓவியன்
17-05-2008, 02:52 PM
இன்று ராஜஸ்தான் அணி இன்னும் ஒரு வெற்றியினை பெங்களூர் அணிக்கு எதிராக பெற்று தனது முதலிடத்தை வலுவாக்கியுள்ளது.....
________________________________________________________________________________________________

அது சரி, 19 வது பந்துப் பரிமாற்றத்தில் பெங்களூரின் ரசாக் பிடி கொடுத்த போது, தொலைக்காட்சி மீளாய்விலும் அது சரியான பிடியெடுப்பாகத் தெரிந்தும் மூன்றாம் நடுவர் அதனை ஆட்டமிழப்பல்ல எனத் தீர்மானித்தது ஏன்...??? :confused: :confused: :confused:

அமரன்
17-05-2008, 05:07 PM
பாருங்க... பாருங்க... பார்த்துக்கிட்டே இருங்க..
வீணா அலட்டிக்காதீங்க.
முத்தினால் எல்லாம் மலிவு விலையில் சந்தைக்கு வரும்..

ஓவியன்
18-05-2008, 02:05 AM
நேற்றைய இரண்டாம் போட்டியில் மழையுடன் இணைந்த பஞ்சாப் அணியினர் டில்லி அணியினரை வெற்றி கொண்டனர்.... :rolleyes:

ஷீ-நிசி
18-05-2008, 02:41 AM
மும்பை அணி உண்மையிலேயே திறமையால்தான் வெல்கிறதா?

அல்லது சச்சினின் அணியை தொடரில் நிலைத்து வைத்திருந்து அதன்மூலம் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்களை ஈர்ப்பதற்கு போட்டி முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்றனவா?

ஏனெனில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் - ஏனைய அணிகளை எதிர்கொண்டபோது இவ்வளவு மோசமாக விளையாடியிருக்கவில்லை. அதுமட்டுமல்ல - ஏற்கனவே மும்பை அணியை எதிர்கொண்டபோது அந்த அணிகளின் ஆட்டம் எவ்வாறிருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால்...

கொல்கத்தா வெறும் 67 ஓட்டங்களுக்குள் சுறுண்டது.. நம்ப முடியவில்லை!!

கிரிக்கெட் போட்டிகளில் முடிவுகள் எந்தக் கணத்திலும் மாறுமென்றாலும் சென்னை அணி பந்துவீச்சாளர்கள் short பந்துகளை அடுத்தடுத்து வீசி (அனைத்து பந்துவீச்சாளர்களும் - முன்னைய போட்டியில் ஹாட்ரிக் எடுத்த பாலாஜிகூட) ஓட்டங்களை அள்ளிக் கொடுத்தது ஏன்??????

சச்சின் மீது மதிப்பு அனைவருக்கும் இருக்கும். அதையெல்லாம் தாண்டி - இந்த வெற்றிகளுக்கும் மும்பை அணி முன்னைய போட்டிகளில் ஆடிய ஆட்டத்துக்கும் ஒப்பீடு செய்து பாருங்கள்......

ஆரம்பிச்சிட்டாங்கப்பா..... :lachen001:

ஒருவேளை இப்படி இருக்குமோ?! :mini023: ஒருவேளை அப்படி இருக்குமோ?! :mini023:

aren
18-05-2008, 02:54 AM
இதில் உண்மையில்லை. ஒவ்வொருவரும் மும்பை அணியில் திறமையுடன் ஆடுகிறார்கள்.

சொத்தை என்று சொல்லப்பட்ட ராஜஸ்தான் இப்படி ஆடுகிறதே.

அனுராகவன்
18-05-2008, 02:56 AM
ஆரம்பிச்சிட்டாங்கப்பா..... :lachen001:

ஒருவேளை இப்படி இருக்குமோ?! :mini023: ஒருவேளை அப்படி இருக்குமோ?! :mini023:
என்ன அப்படி,இப்படி..
விளையாட்டு தானே!!

ஓவியன்
18-05-2008, 03:31 AM
இதில் உண்மையில்லை. ஒவ்வொருவரும் மும்பை அணியில் திறமையுடன் ஆடுகிறார்கள்.

சொத்தை என்று சொல்லப்பட்ட ராஜஸ்தான் இப்படி ஆடுகிறதே.

என் எண்ணமும் அதுவே, நல்ல டீம் ஸ்பிரிட் உள்ள எந்த அணியும் இலகுவில் வெல்லும்...
ராஜஸ்தானிடம் அது கொஞ்சம் நிறைய இருக்கின்றது... :rolleyes:

சூரியன்
18-05-2008, 07:23 AM
இன்று மதியம் 3.00மணிக்கு சென்னை சூப்பகிங்ஸ் vs கொல்கத்தா ரைடர்ஸ்.

ஓவியன்
21-05-2008, 02:13 PM
மும்பை அணியினரை யுவராஜ் தலமையிலான பஞ்சாப் அணியினர் ஒரு ஓட்டத்தினால் மாத்திரம் வெற்றியீட்டினர்....

ஆட்டத்தின் கடைசிப் பந்தே வெற்றியாளரைத் தீர்மானிக்க போட்டி மிக, மிக விறு விறுப்பாக இருந்தது...

அறிஞர்
21-05-2008, 02:15 PM
கடைசியில் பிரமாதம்...

கடைசி ஓவரை விஆர்வி சிங்கிடம் கொடுத்தது.. மிகப்பெரிய தவறு....

மும்பை, சென்னை, டில்லி.. யார் அரையிறுதிக்கு செல்வார்கள்....

ஓவியன்
21-05-2008, 02:23 PM
இன்றைய போட்டியில் அபாரக் களத்தடுப்பினாலேயே பஞ்சாப் அணியினர் வெற்றியீட்டினர்...

கடைசி ஓவரின் நான்காவது பந்தை டில்கார விளாசி அடிக்க அது பவுண்டரி ஆகும் தருணத்தில் அதனை சிறிவஸ்தா டைவ் அடித்துத் தடுக்க தடுத்த பந்தை விரைவாக அங்கே வந்து மகேல விக்கட் காப்பாளரிடம் பரிமாற அங்கே அது நிகராவின் ரன் அவுட்டுக்கு வழிகோலியது...

அறிஞர்
22-05-2008, 03:36 PM
சேவாக் நிலை இன்று பரிதாபம்... அவருடைய அணி இன்று வெற்றி பெற்றால் தான் அரையிறுதியை பற்றி சிந்திக்க இயலும் என்ற நிலை இருந்தது..

ஆனால் மழை பெய்து அவர் நம்பிக்கையை கெடுக்கிறது.

கொல்கோத்தா கங்குலியும் இன்று வெற்றி பெறலாம் என கனவு கண்டார். ஆனால் இன்று அவர் நம்பிக்கையும் குறைகிறது.

aren
23-05-2008, 03:34 AM
எனக்குத் தெரிந்தவரை மும்பை அணி அரையிருதிக்குச் செல்லும் என்று தெரிகிறது.

சென்னை எப்படி விளையாடப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இரண்டு ஆட்டத்தில் ஒரு ஆட்டம் வென்றால் அவர்கள் நிச்சயம் அரையிருதிக்கு சென்றுவிடுவார்கள்.

டெல்லி - கொஞ்சம் பரிதாபமான நிலையில் இருக்கிறது. அது சென்னை அடுத்த இரண்டு ஆட்டத்திலும் தோற்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஓவியன்
24-05-2008, 02:14 AM
ஆரென் அண்ணா கூறியது போல, சென்னை இரண்டு ஆட்டத்திலும் தோல்வியுற்றாலே டெல்லிக்கு வாய்ப்புக் கிட்டும்....

நேற்று காயத்தினால் மீண்டு வந்த சங்ககார பஞ்சாப் அணியினருக்காக துடுப்பாட்டத்தில் விளாசினார்....

மொத்தத்தில் பஞ்சாப் அணி, ஒரு துடுப்பாட்ட அணியாகவே இருக்கின்றது...

பந்துவீச்சில் இன்னும் கவனம் செலுத்தினால் அவர்களுக்கு இன்னமும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும்....

aren
24-05-2008, 02:34 AM
பஞ்சாப் அணி ஃபீல்டிங்கில் கவனம் செலுத்தவேண்டும். ரொம்பவும் சொதப்புகிறார்கள் இந்த விஷயத்தில்.

aren
24-05-2008, 02:36 AM
கோப்பையை வெல்லும் அணி எதுவாக இருக்கும்.

ராஜஸ்தான் வெல்லாது என்று எனக்குத் தோன்றுகிறது.

மும்பய் அல்லது பஞ்சாப் வெல்லும் என்று நினைக்கிறேன். சச்சின் பெரிய ஆட்டங்களில் சொதப்புவார், ஆகையால் மும்பய் அவரைத் தவிற மற்றவர்களின் ஆட்டத்தையும் எதிர்பார்க்கவேண்டும்.

டெல்லி அரையிருதிக்கு வந்தால் கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிறது.

aren
24-05-2008, 02:39 AM
விஜய் விடி மாதிரி Wild Card Round
கிடையாதா?

ஓவியன்
24-05-2008, 09:03 AM
விஜய் விடி மாதிரி Wild Card Round
கிடையாதா?

ஹா, ஹா..!! :D:D:D

அப்படி ஒன்று இருந்தால் ஹைதராபாத் அணிக்கும் பெங்களூர் அணிக்கும் கொண்டாட்டம் தான்...

சுட்டிபையன்
24-05-2008, 11:33 AM
விஜய் விடி மாதிரி Wild Card Round
கிடையாதா?

:lachen001::aetsch013::D
ராஜஸ்தான் 12 ஓவர் முடிவில் ஒரு விக்கட்டை இழந்து 137 ஓட்டங்கள், சென்னை வெல்லுமா?

சுட்டிபையன்
24-05-2008, 12:14 PM
ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5விகட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களௌ பெற்றது, அதிக ஓட்டங்களை பெறுமென எதிர்பார்க்கப்பட்ட போதும் தென்னாபிரிக்காவிம் கோர்க்கள் மற்றும் நிட்டினி ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சில் இறுதி 2 ஓவர்களில் 13ஓட்டங்களையே பெற முடிந்தது

aren
27-05-2008, 01:39 AM
டெல்லி அரையிருதிக்கு தேர்வாகிவிட்டது. மும்பையா அல்லது சென்னையா? இன்று தெரிந்துவிடும் என்று நினைக்கிறேன்.

கையில் இருந்த மாட்சுகளை கோட்டைவிட்டுவிட்டு இப்பொழுது சென்னை இப்படியாகிவிட்டதே.

டெல்லி கோப்பையை கைப்பற்றுமா? யுவராஜ் இதுவரை அடிக்கவில்லை. அவர் அடித்தால் பஞ்சாப் வெற்றி பெரும் என்று நினைக்கிறேன். அரையிருதியில் அவர் சோபிப்பாரா அல்லது சோதிப்பாரா

ஓவியன்
27-05-2008, 02:08 AM
உண்மைதான் யுவராஜ் இன்னமும் நன்றாக சோபிக்கவில்லை, மார்ஷூம் சங்ககாரவும் நல்ல தொடக்கத்தைக் கொடுக்க அதை யுவராஜூம் மகேலவும் நன்றாக பயன்படுத்திக் கொண்டால் பஞ்சாப் அணியினருக்கு வெற்றி வாய்ப்புக் கிட்டும்....

________________________________________________________________________________________________________

ராஜஸ்தான் அணியில் தன்வீர் விக்கெட்டுகளாகக் குவித்துக் கொண்டிருக்கின்றாரே....?!! :eek:

aren
27-05-2008, 02:11 AM
தன்வீர் காட்டில் மழை என்றே தெரிகிறது. எப்படி கையை சுழற்றிப் போட்டாலும் பந்து ஸ்டம்பை நோக்கியே வருகிறது.

ஏதாவது மாஜ்க்காக இருக்குமோ?

அறிஞர்
27-05-2008, 02:51 PM
தன்வீர் காட்டில் மழை என்றே தெரிகிறது. எப்படி கையை சுழற்றிப் போட்டாலும் பந்து ஸ்டம்பை நோக்கியே வருகிறது.

ஏதாவது மாஜ்க்காக இருக்குமோ?
6 வருடம் ஸ்பெஷல் ட்ரைனிங்க் எடுத்ததாக பேட்டியில் கூறினாருங்கோ... :cool::cool:

அறிஞர்
27-05-2008, 02:52 PM
இன்றைய ஆட்டத்தில் சென்னை சாதிக்குமா...

முதல் இரண்டு விக்கெட்டுகளை டெக்கான் அணி இழந்துள்ளது.

ஓவியன்
27-05-2008, 02:55 PM
தன்வீர் காட்டில் மழை என்றே தெரிகிறது. எப்படி கையை சுழற்றிப் போட்டாலும் பந்து ஸ்டம்பை நோக்கியே வருகிறது.

ஷேன் வார்ன், தன்வீரின் காதுகளில் ஏதோ குசு குசுப்பதும், அதற்கு அடுத்த பந்தில் தன்வீர் விக்கெட்டுகளை விழுத்துவதும் மைதானத்தில் தொடர்கிறது...

ஆறு வருட உழைப்பு வீண் போகவில்லைதான், விக்கெட்டுகளாகக் குவிகிறதே...

அறிஞர்
27-05-2008, 02:56 PM
ஷேன் வார்ன், தன்வீரின் காதுகளில் ஏதோ குசு குசுப்பதும், அதற்கு அடுத்த பந்தில் தன்வீர் விக்கெட்டுகளை விழுத்துவதும் மைதானத்தில் தொடர்கிறது...

ஆறு வருட உழைப்பு வீண் போகவில்லைதான், விக்கெட்டுகளாகக் குவிகிறதே...
இது போன்ற வித்தியாசமான பவுலர்கள் இந்தியா.. இலங்கையில் உருவாவதில்லை.. என்ற வருத்தம் உள்ளது.

மன்மதன்
27-05-2008, 03:06 PM
விஜய் விடி மாதிரி Wild Card Round
கிடையாதா?


நல்ல ஐடியா..:D

மன்மதன்
27-05-2008, 03:08 PM
இன்றைய ஆட்டத்தில் சென்னை சாதிக்குமா...

முதல் இரண்டு விக்கெட்டுகளை டெக்கான் அணி இழந்துள்ளது.

சாதித்துதான் ஆகணும்...இன்னும் 1 விக்கெட் எடுத்தால் குறைந்த ரன்னில் அடக்கலாம்,..

ஓவியன்
27-05-2008, 03:19 PM
சாதித்துதான் ஆகணும்...இன்னும் 1 விக்கெட் எடுத்தால் குறைந்த ரன்னில் அடக்கலாம்,..

மூன்றாவது விக்கெட்டாக, முரளிதரனால் போல்ட் செய்யப் பட்டு ஸ்ரைரீஸ் ஆட்டமிழந்தார்...

அமரன்
27-05-2008, 03:24 PM
சென்னையின் சாம்பியன் கனவு ஆட்டங்காணாதுங்கிறீங்களா ஓவியன்..

ஓவியன்
27-05-2008, 03:33 PM
சென்னையின் சாம்பியன் கனவு ஆட்டங்காணாதுங்கிறீங்களா ஓவியன்..

அப்படித்தான் தெரிகிறது, ஆனால் இந்த ஆறு கோடியை நம்ம முடியாது...
எப்போது அடிப்பார், எப்போது அவுட்டாவார் என்று அவருக்கும் அவர் கையிலிருக்கும் மட்டைக்கும் தெரியாது...!! :)

அமரன்
27-05-2008, 03:35 PM
ஓ... சென்னையின் சாம்பியன் கனவுக்கு (மற்றவங்க)ஆட்டங் காணாதுன்னு சொல்றீங்களா?

ராஜா
27-05-2008, 05:44 PM
சென்னை அணி அரையிறுதியில் நுழைந்தது..!

அறிஞர்
27-05-2008, 06:33 PM
அப்படி இப்படின்னு.. மும்பையை வெளியேற்றி.. சென்னை அரையிறுதியில்...

இரண்டு முறை சென்னையிடன் தோல்வி கண்ட பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.....

சற்று கடினமான போட்டிதான்.. சென்னை வெல்லுமா...

மற்றொரு அரையிறுதியில் ராஜாஸ்தான், டெல்லியை எதிர்கொள்கிறது.. டெல்லி வெற்றியடையும் என எதிர்பார்க்கிறேன்.

aren
28-05-2008, 02:45 AM
பெருந்தலைகள் தலைமையேற்ற டீம் எதுவும் அரையிருதிக்கு வரவில்லை * டெண்டுல்கர், திராவிட், கங்குலி மற்றும் லஷ்மன். ஒரு ஆறுதல் வார்ன் தலைமையேற்ற டீம் வந்துவிட்டது.

யுவராஜ், தோனி மற்றும் ஷேவாக் * யார் சிறந்த கேப்டன். தெரிந்துவிடும் இன்னும் கொஞ்சம் நாட்களில்.

aren
28-05-2008, 02:45 AM
எனக்குத் தெரிந்து டெல்லி கோப்பையை கைப்பற்றும் என்று நினைக்கிறேன்

ராஜா
28-05-2008, 12:13 PM
எனக்குத் தெரிந்து டெல்லி கோப்பையை கைப்பற்றும் என்று நினைக்கிறேன்


டெல்லி கோப்பையை கைப்பற்றினால்.... உங்களுக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும் "தெரியற மாதிரி"தான் கைப்பற்றும்..!

அதில ஒன்னும் ஒளிவு மறைவு இருக்காதுன்னுதான் நினைக்கிறேன் மாட்டிரிக்ஸ்..!

மன்மதன்
28-05-2008, 12:22 PM
அப்படி இப்படின்னு.. மும்பையை வெளியேற்றி.. சென்னை அரையிறுதியில்...

இரண்டு முறை சென்னையிடன் தோல்வி கண்ட பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.....

சற்று கடினமான போட்டிதான்.. சென்னை வெல்லுமா...

மற்றொரு அரையிறுதியில் ராஜாஸ்தான், டெல்லியை எதிர்கொள்கிறது.. டெல்லி வெற்றியடையும் என எதிர்பார்க்கிறேன்.


இறுதிப்போட்டியில் ராஜஸ்தானை வென்று சென்னை கோப்பை வெல்லும்...;)

அறிஞர்
28-05-2008, 09:35 PM
சென்னை தவிர மற்ற மூன்று அணிகளும் பலமாக உள்ளது...

ஆனால் தோனிக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் அதிகம்...

ராஜா
29-05-2008, 03:57 AM
சென்னை தவிர மற்ற மூன்று அணிகளும் பலமாக உள்ளது...

ஆனால் தோனிக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் அதிகம்...


சென்னை அணியின் பலவீனங்கள்...

1. துவக்க இணை பட்டையை கிளப்பும் அளவுக்கு மட்டை வீசாமல் இருப்பது..[பார்த்தீவின் ஸ்ட்ரைக் ரேட் கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஃப்ளெமிங் இன்னும் மாத்யூ கெய்டனின் இடத்தை நிரப்பும் வகையில் விளையாடாதது]

2. பந்துவீச்சு மற்ற அணிகளுக்கு இணையான தரத்தில் இல்லாதது..[ அதிலும் முரளி இன்னும் தன் திறனுக்கேற்பவும் தகுதிக்கேற்பவும் இன்னும் சாதிக்காதது..]

3. பயிற்சியாளர் கெப்ளரின் பழமைவாதமான அணுகுமுறை.. [ புதிய முயற்சிகள் எதையும் சோதித்தே பார்க்காதது.]

4. தோனி, திரும்பத் திரும்ப லாங் ஆன், லாங் ஆஃப் ஆகிய இடங்களில் பிடி கொடுத்து ஆட்டமிழப்பது.. [ தோனியை ஆட்டமிழக்கச் செய்வது எதிரணிக்கு சவாலாக இல்லை.. ஸ்லோயர் பந்தை வீசினால் அலைந்துகொண்டுவந்து பிடி கொடுத்து விடுகிறார்.]

5. இனி சொந்த மண்ணில் போட்டிகள் இல்லாதது..

6. உள்ளூர் ஆட்டக்காரர்கள் எவரும் குறிப்பிடத்தக்க அளவுக்கு திறமையைக் காட்டாதது.

7. தென்னிந்திய அணி ஒன்று கோப்பையை வெல்லுவதை வடவர்கள் நிரம்பிய நிர்வாகம் ஏற்குமா என்னும் சந்தேகம்.

8. கெய்டனும், [Hayden] கசியும் [Hussy] இல்லாதது..

ஓவியன்
29-05-2008, 05:12 AM
பஞ்சாப் அணியினரை வீழ்த்துவது சென்னைக்கு மிகப் பெரிய சவாலாவகவே இருக்கும்...

இப்போது அரையிறுதிக்கு நுளைந்த அணிகளில் பஞ்சாப் அணியினரின் துடுப்பாட்ட வரிசை, மிக நீண்டது + மிகப் பலமானது...

மார்ஷ், சங்ககார, ஜெயவர்த்தனா, யுவராஜ், ஹோப்ஸ் போன்றவர்கள் இப்போது ஃபோர்மிலே இருப்பது சென்னைக்குத் தலை வலிதான்....

சென்னையின் வேகப் பந்து வீச்சாளர்கள் மார்ஷினைக் கட்டுப் படுத்துவார்களா...?

மார்ஷின் துடுப்பாட்டத்தைப் பார்த்தால் அவரொன்றும் சாதாரண மட்டையாளரில்லை என்பது புரிகிறது, அவரது ஒவ்வொரு அடிகளும் ஒவ்வொரு தினுசு...
எனக்கென்னவோ அவர் சென்னையின் வேகப் பந்து வீச்சாளர்களைத் திணறடிக்கப் போகிறார் என்றே படுகிறது..

இதுவரை துடுப்பாட்டத்தில் சொதப்பிய யுவராஜ் நேற்றைய ராஜஸ்தானுடனான ஆட்டத்தில் பிளந்து கட்ட அரையிறுதியில் இன்னும் எதிர்பார்ப்புக் கூடியுள்ளது....

முரளிதரன் சங்ககாரவையும் மகேலவையும் கட்டுப் படுத்தினால் பஞ்சாப்பின் மத்திய வரிசையின் பலம் குறையும். ஆனால் சங்ககாரவை குறைத்து மதிப்பிட முடியாது, தொடர்ச்சியாக ஃபோர்மினைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர் அவர், அவரது துடுப்பு பஞ்சாப் அணியினருக்கு மிகப் பலமே...

இரண்டு தடவை நாம் வென்ற அணிதானே என்ற கவனக் குறைவுடன் சென்னை களம் இறங்கினால் மிகப் பெரிய சவாலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்....

அதிரடியாக அடித்து ஓட்டம் சேர்க்கும் ஆரம்ப துடுப்பாட்டக் காரர்கள் இல்லாது சென்னை அணியினர் கொஞ்சம் திணறுவதாகவே தெரிகிறது. பட்டேலுக்குப் பதிலாக மொக்ரலை பிளேமிங்குடன் ஆரம்ப துடுப்பாட்டக் காரராக இறக்கிப் பார்த்தால், நல்ல பலன் கிட்டலாம்...

aren
30-05-2008, 05:11 AM
சென்னை அணியினர் அனிரூத் ஸ்ரீகாந்தை களத்தில் இறக்குவார்கள் என்று நினைக்கிறேன். அவருக்கு சரியாக பந்து மட்டையில் பட்டுவிட்டால் 40 - 50 ரன்கள் எளிதில் எடுத்துவிடுவார். பின்னால் வரும் மக்கள் எளிதில் ஆடுவதற்கு அது ஏதுவாக இருக்கும்.

முரளி இதுவரை சரியாக சோபிக்கவில்லை. அரையிறுதியில் சோபிப்பார் என்றே நினைக்கிறேன்.

கண்மணி
30-05-2008, 06:39 AM
1. ஃபிளெமிங் தாய் நாடு சென்றுவிட்டார். எனவே அடுத்து வரும் போட்டிகளில் ஆடமாட்டார். அவருக்கு குழந்தை பிறக்கப் போகுதில்ல.

2. பார்த்திவ் படேல் துவக்க ஆட்டக்காரராய் இருக்க வேணுமெனில் அடுத்த பக்கம் அதிரடி வீரர் இருக்க வேண்டும். வித்யூத் சிவராமகிருஷ்ணன் அதனால் இடம் பெறும் வாய்ப்பு அதிகம். அனிருத் எப்படி ஆடுவார் எனத் தெரியவில்லை. பயிற்சிகளில் முன்னேற்றம் காட்டி இருந்தால் வாய்ப்பு இருக்கலாம்.அபினவ் முகுந்த் எப்படி ஆடுவார் என்பதும் புரியவில்லை,

பஞ்சாப் வெல்லும் என்பது லாஜிக், சென்னை வென்றால் அது மேஜிக்..

ஓவியன்
30-05-2008, 08:34 AM
அனிரூத் கிடைத்த சந்தர்ப்பத்தில் நன்றாக ஆடவில்லை, அவரை அரையிறுதியில் இறக்குவது நலம் தானா..??? :confused:

shibly591
30-05-2008, 08:43 AM
பஞசாப் கோப்பை வெல்லும்....பொறுத்திருந்து பாருங்கள்

ஷீ-நிசி
30-05-2008, 02:07 PM
சென்னை அணி பஞ்சாபை இரண்டு முறை வீழ்த்தியுள்ளது லீக் பிரிவில்.

ராஜா
30-05-2008, 02:12 PM
முதல் அரையிறுதி..

டெல்லி டேர் டெவில்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்


ராஜஸ்தான் அணி பேட்டிங்..

6 ஓவர் முடிவில் 58 / 0

ஸ்வப்னில் அஸ்நோத்கர் 38* [18]

ராஜா
30-05-2008, 03:49 PM
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH
15 ஓவர் முடிவில் ... ராஜஸ்தான் அணி..
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

142 - 4

ஆட்டமிழந்தோர்..

க்ரேம் ஸ்மித்,

ஸ்வப்னில் அஸ்நோத்கர்,

சோகைல் தன்வீர்...

ஷேன் வாட்சன்..

ராஜா
30-05-2008, 04:18 PM
20 ஓவர் முடிவில்...

ராஜஸ்தான் ராயல்ஸ் : 192 - 9

அஸ்நோத்கர் : 39

யூசுஃப் பத்தான் : 45

ஷேன் வாட்சன் : 52
___________________________

பர்வீஸ் மகரூப் 34/3

வாங்கடே மைதானத்தின் அதிக பட்ச ஸ்கோரான 192 ஐ துரத்திப் பிடிப்பார்களா வீருவின் பசங்கள்..?

காத்திருங்கள்.

ராஜா
30-05-2008, 04:37 PM
வீரு 3 ஓட்டம் மட்டுமே எடுத்து அவுட்..!

டெல்லி 10/1

1.2 ஓவர்களில்..

கம்பீர் கைகொடுப்பாரா..? கம்பி நீட்டுவாரா..?

ராஜா
30-05-2008, 04:51 PM
இன்றைய ஆட்டநாயகன் ஷேன் வாட்சனுக்கு இரண்டாவது விக்கெட்..!

கம்பீர் 11 ஓட்டங்களில் வீழ்ந்தார்..

டெல்லி திணறுகிறது..

23 / 2

4 ஓவர் முடிவில்...

ராஜா
30-05-2008, 05:02 PM
டெல்லி அணி தோல்வியியின் பிடியிலிருந்து மீளுமா..?

28 - 4

6.1 ஓவர் முடிவில்...!

ராஜா
30-05-2008, 05:19 PM
55 - 5

அன்புரசிகன்
30-05-2008, 06:05 PM
டெல்லி அணி 16.2 பந்து பரிமாற்றங்களில் 87 ஓட்டங்களுடன் சுருண்டது. 193 என்ற இலக்கை நோக்கி துடுப்பாட்டத்தை தொடங்கிய அணியின் ஆரம்ப ஆட்டக்காரர் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் திக்குமுக்காயினர். வாட்ஷனின் அபாரப்பந்து வீச்சால் ஆரம்ப ஆட்டம் சரிந்தது. பின்னர் பட்டேல் சிறப்பாக பந்து வீசியிருந்தார்.

இன்றய ஆட்டத்தை ராஜஸ்தான் அணி 105 ஓட்டங்களால் டெல்லியணியை வெற்றிகொண்டது...

aren
31-05-2008, 12:00 PM
டெல்லி மகா மட்டமாக ஆடியது.

ராஜஸ்தான் அணிக்கு அப்படியே வெற்றியைத் தூக்கி கொடுத்துவிட்டது.

aren
31-05-2008, 12:02 PM
இன்று சென்னை என்ன செய்கிறது என்று பார்க்கலாம்.

சென்னை அணியில் அனிரூத் உள்ளே வருவார் என்று எதிர்பார்க்கிறேன். சொதப்பாமல் அவர் ஆடினால் நன்றாக இருக்கும்.

aren
31-05-2008, 12:03 PM
பார்தீவ் படேலுக்கு பதிலாக வித்யூதை களத்தில் இறக்கலாமே.

aren
31-05-2008, 12:06 PM
1. அனீருத்
2. வித்யூத்
3. ரைனா
4. தோனி
5. மோர்கல்
6. பத்ரிநாத்
7. கபூகேடரா
8. பாலாஜி
9. கோனி
10. முரளி
11. நிட்டினி

இவர்களை களத்தில் இறக்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படி பாட்டிங் கொஞ்சம் அதிகம் தேவையென்றால் பாலாஜிக்கு பதில் பார்த்தீவ் படேலை டீமில் வைத்திருக்கலாம்.

மன்மதன்
31-05-2008, 12:43 PM
கபூகேடரா எதற்கு?

ஓவியன்
31-05-2008, 02:14 PM
யுவராஜ் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று, தாம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்..!!

அன்புரசிகன்
31-05-2008, 06:15 PM
முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியின் ஆரம்பத்தில் மார்ஷ் ஐ தவிர யாரும் சோபிக்கவில்லை. 10 பந்து பரிமாற்றங்களில் 45 ஓட்டங்களுக்கு ஆறு துடுப்பாட்டவீரர்களை இழந்த நிலையிலிருந்த அணியை பின்னர் மோத்தா சௌலா பவார் ஆகியோர் ஓரளவிற்கு நிலைநிறுத்தி இருபது பந்து பரிமாற்றங்களில் எட்டு விக்கட்டுக்களை இழந்து 112 ஓட்டங்களை பஞ்சாப் அணி பெற்றது.

113 என்ற ஓரளவு இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 14.5 பந்து பரிமாற்றங்களில் 116 ஓட்டங்களை பெற்று 9 விக்கட்டுக்களால் இறுதிப்போட்டிக்குக்கான தகமையை தனதாக்கிக்கொண்டது. இதில் பட்டேல் மற்றும் ரெய்னா ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டம் கொண்டு தமது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

இதில் ஆரம்ப ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச்செய்த நிட்டினி இன்றய ஆட்டக்காரனாக தெரிவுசெய்யப்பட்டார்....

இறுதிப்போட்டி எவ்வாறாக அமையவிருக்கிறது என்பதை நாளை வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

aren
01-06-2008, 01:26 AM
நம்ம பசங்க தேறிட்டாங்க இந்த ஆட்டத்தில். நம் மக்களின் பந்துவீச்சு அருமையாக இருந்தது. அதுபோல் பீஃல்டிங்கும் நன்றாகவே இருந்தது.

பார்த்தீவ் படேலும் சுரேஷ் ரைனாவும் நன்றாக விளையாடினார்கள்.

ஆனால் ராஜஸ்தான் அணியை வெல்வது என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. வார்ன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான யுக்தி வைத்திருக்கிறார்.

ஓவியன்
01-06-2008, 02:08 AM
நேற்றைய ஆட்டத்தில் தானாகவே ஆட்டமிழப்பை ஏற்று மைதானத்தை விட்டு வெளியேறி கிரிக்கெட் கனவான்களின் ஆட்டம் தான் என மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் சங்ககார...!! :)

_____________________________________________________________________________________________________________________________

அரையிறுதியில் ஆடிய களைப்புடனேயே சென்னை இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது...

ராஜஸ்தானின் பலமான பந்துவீச்சினை சென்னை அணியினர் சமாளிப்பார்களா..??, முக்கியமாக தன்வீர்...??? :confused:

அரையிறுதி வெற்றிக்குக் காரணமான நிட்னியை ஸ்மித் அடித்து நொறுக்கும் வாய்ப்புள்ளது...

சூரியன்
01-06-2008, 05:18 AM
http://chennaisuperkings.com/wallpaper/Group-Wallpaper_1024x768.jpg

நேற்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் இன்று நடக்கும் இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதுகின்றது.

shibly591
01-06-2008, 05:29 AM
சங்கக்கார ஒரு சட்டத்துறை வல்லனர்.இலங்கையின் உயர்தரப்பரீட்சையொன்றில் அகில இலங்கையின் 03 வது மாணவனாக சிவ்வியடைந்தவர்.கிரிக்கெட்டுக்காக கிடைத்த வக்கீல் தொழிலை விட்டு விலகியவர்.அற்புதமான மனிதர்களுள் அவருக்க தனியிடம் உண்டு.இலங்கையில் அவரக்க இருக்கும் மதிப்பு பாரியது.கனவான்கள் எப்போதும் கனவான்களே................

சூரியன்
01-06-2008, 05:33 AM
புதிய தகவலாக உள்ளதே.
தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.

shibly591
01-06-2008, 05:33 AM
ராஜஸ்தான் வெல்லும்போல விளங்குது...சென்னையும் லேசுப்பட்ட அணியில்லை...ம்ம்ம்ம்ம்...சவால் காத்திரக்குது..பார்க்கலாம்

சூரியன்
01-06-2008, 05:35 AM
போட்டி இந்திய நேரப்படி 6.30 மணிக்கு ஆரம்பம்.

ஓவியன்
01-06-2008, 08:14 AM
ராஜஸ்தான் வெல்லும்போல விளங்குது...சென்னையும் லேசுப்பட்ட அணியில்லை...ம்ம்ம்ம்ம்...சவால் காத்திரக்குது..பார்க்கலாம்

சென்னைக்கு ராஜஸ்தான் அணியின் தன்வீர், வட்சன், ஸ்மித் போன்றோர் மிகப் பெரிய சவாலாகவே இருப்பர்...!!

தங்க கம்பி
01-06-2008, 12:03 PM
ஸ்மித் காயம் காரனமாக விளையாடப்போவதில்லை.

அறிஞர்
01-06-2008, 12:10 PM
ஸ்மித் விளையாடவில்லை என்பது.. சென்னைக்கு சந்தோசமான செய்தி....

தன்வீரை சமாளிப்பது கடினமே....

வாட்சன் எல்லா துறைகளிலும் கலக்குகிறார்...

இவையெல்லாவற்றையும் சென்னை சமாளிக்குமா...

ராசியான கேப்டன் என்ற பெயரை டோனி தக்க வைப்பாரா...

அறிஞர்
01-06-2008, 12:12 PM
போட்டி இந்திய நேரப்படி 6.30 மணிக்கு ஆரம்பம். இரவு 8 மணி என்று தானே போட்டிருக்கிறது...

அது என்ன 6.30 மணி

shibly591
01-06-2008, 12:17 PM
ஸ்மித் இல்லாவிட்டாலும் ராஜஸ்தான் பலம்தான்...இதற்ககு நிறைய போட்டிகளை சொல்லலாம்

ஓவியன்
01-06-2008, 01:53 PM
இன்று இறுதிப் போட்டி மைதானத்தில் சென்னை அணியினர் எப்படி ஆடப் போறாங்களோ தெரியலை, ஆனா சமிரா ஷெட்டியும் தியா மிர்ஷாவும் நல்லாவே ஆடுறாங்க...!! :D:D:D

சூரியன்
01-06-2008, 01:58 PM
இரவு 8 மணி என்று தானே போட்டிருக்கிறது...

அது என்ன 6.30 மணி

தவறாக நேரத்திற்கு மன்னிக்கவும்.

ராஜா
01-06-2008, 03:06 PM
ராஜஸ்தான் டாஸ் வெற்றி.. சென்னையை மட்டையடிக்கப் பணித்திருக்கிறது..

ராஜா
01-06-2008, 07:14 PM
ராஜஸ்தான் அணி கோப்பையை வென்றது..!

அக்னி
01-06-2008, 07:28 PM
சுவாரசியமான, விறுவிறுப்பான போட்டியாகத்தான் அமைந்தது.
வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள்...
ஆனாலும், ராஜா அண்ணாவின் ரசிகர்களை ஏமாற்றும் இந்தியக் கிரிக்கெட்! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10118) நினைவாடுவதைத் தவிர்க்க முடியவில்லை...

அமரன்
01-06-2008, 07:40 PM
நான் நினைத்தது நடந்துவிட்டது. சென்னை ராஜாவை வீழ்த்தி கோப்பையை கையகப்படுத்திய ராஜ(ஜா)ஸ்தான்(ன) அணிக்கு வாழ்த்துக்கள்.

அறிஞர்
01-06-2008, 07:42 PM
கடைசியில் சென்னை பாலாஜி, கப்பகேந்திராவினால் தோற்றது........

17,18,19 ஓவர்களில் சென்னை பேட்டிங்கில் சரியான ரன் எடுக்கவில்லல....

பாலாஜி 39 ரன்களை தானம் வார்த்தது கொடுமை....
---------
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வாழ்த்துக்கள்...

அந்த அணிக்கு ஓட்டு போட்ட இருவருக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

ஓவியன்
02-06-2008, 01:48 AM
முற்று முழுதாக யூசப் பதான் நேற்றைய போட்டியில் செல்வாக்கு செலுத்தியிருந்தார், பாராட்டுக்கள் பதானுக்கும் ராஜஸ்தான் அணியினருக்கும்....

அன்புரசிகன்
02-06-2008, 02:02 AM
பந்துகளும் ஓட்டங்களும் சமமாக இருக்கும் பட்சத்தில் கடைசி பந்துபரிமாற்றத்தில் அகலப்பந்து வீசுவது நகைப்பிற்குரியது. சரி கிடைத்த கடைசிப்பந்தில் ஆட்டமிழக்க செய்திருக்கலாம். பந்துவீச்சாளர் பந்தை வீசமுன் ஆட்டக்காரர் நடு மைதானத்திற்கு வந்துவிட்டார். நேற்றய தோல்விக்கு முக்கியமாக பதானின் இரு தவறவிடப்பட்ட பிடிகள் மற்றும் கடைசி நேர அகலப்பந்து.

இராஜேஷ்
02-06-2008, 04:07 AM
நேற்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. கடைசி பந்துவரை யார் ஜெயிப்பார்கள் என்று யூகிக்க முடியவில்லை. ராஜாஸ்தான் அணியினருக்கு என் வாழ்த்துக்கள்

aren
02-06-2008, 04:58 AM
நம் சென்னை ஆட்டக்காரர்கள் நன்றாக ஆரம்பித்து நடுவில் சொதப்பி விட்டார்கள். அதுவும் கடைசி ஐந்து ஓவர்களில் நம் மக்கள் சரியாக மட்டையடிக்கவில்லை. கபூகேதரா கொஞ்சம் நன்றாகவே சொதப்பினார். இன்னும் 20 ரன்கள் எடுத்திருக்கவேண்டும்.

சுரேஷ் ரைனா பூசுப் பத்தானின் காட்சை கோட்டைவிட்டது விபரீதமாகிவிட்டது.

ராஜா
02-06-2008, 05:20 AM
உங்களுடைய திறனாய்வுக்கெல்லாம் அப்பாற்பட்டது நேற்றைய நாடகம்..

உதாரணம்..

ஷேன் வார்ன் தூக்கிவிட்ட பந்தை , அது கீழே விழும் வரை காத்திருந்து பத்ரிநாத் எடுத்துப்போட்ட நகைச்சுவை..

கடைசி ஓவரில் சோகைல் தன்வீர் சொதப்ப, பாலாஜி சிரித்துக்கொண்டே வந்து வைட் பால் வீச, அதை பார்த்தீவ் தடவி 2 ரன்களை [ பொழைச்சுப் போங்கடா என்று] விட்டுக்கொடுத்த பெருந்தன்மை.

பிடிகளையும், ரன் அவுட் வாய்ப்புகளையும் இடைவிடாது ஏற்படுத்தித் தந்து யூசுஃப் பத்தான் சென்னை அணியை சோதித்த கொடுமை..

முடிவை ஏற்கணவே அறிந்தவர்போல் தோனி ரிலாக்சாக சிரித்துக்கொண்டே களத்தில் உலவிய வி(பரீ)தம்..

இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது, ஆட்டத்தை த்ரில்லிங்காக அமைக்க பாடுபட்ட அவர்களின் உழைப்பு எனக்கு புரிகிறது.. உங்களுக்கு..?

மன்மதன்
02-06-2008, 01:05 PM
இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது, ஆட்டத்தை த்ரில்லிங்காக அமைக்க பாடுபட்ட அவர்களின் உழைப்பு எனக்கு புரிகிறது.. உங்களுக்கு..?

:rolleyes: :rolleyes: யோசிக்க வைச்சிட்டீங்க.. :rolleyes:

கண்மணி
02-06-2008, 01:25 PM
நம் சென்னை ஆட்டக்காரர்கள் நன்றாக ஆரம்பித்து நடுவில் சொதப்பி விட்டார்கள். அதுவும் கடைசி ஐந்து ஓவர்களில் நம் மக்கள் சரியாக மட்டையடிக்கவில்லை. கபூகேதரா கொஞ்சம் நன்றாகவே சொதப்பினார். இன்னும் 20 ரன்கள் எடுத்திருக்கவேண்டும்.

சுரேஷ் ரைனா பூசுப் பத்தானின் காட்சை கோட்டைவிட்டது விபரீதமாகிவிட்டது.

கப்பு கெட்றா என்ற பேரை வச்சு வார்னிங் கொடுத்தார். கப் வாங்கும் வாய்ப்பைக் கெடுத்திடுவார்னு புரிஞ்சிக்காதது உங்கத் தப்பு!

ஓவியன்
02-06-2008, 01:31 PM
கப்பு கெட்றா என்ற பேரை வச்சு வார்னிங் கொடுத்தார். கப் வாங்கும் வாய்ப்பைக் கெடுத்திடுவார்னு புரிஞ்சிக்காதது உங்கத் தப்பு!

ஹா, ஹா...!! :D:D:D

இந்தப் பெயருடன் இவர் இருக்கும் வரை இலங்கை அணிக்கும் ஒரு கப்பும் கிட்டாது போலிருக்கே - முதலில் இவர் பெயரை மாற்றணும்..!! :aetsch013:

கண்மணி
02-06-2008, 01:56 PM
ஆமாம் ஆமாம் கொஞ்சம் மாத்திப் படிச்சாலும் கப்புக்கெதிரா ன்னு வருது. கட்டாயம் மாத்தணும்..

"கப்பைக் கொட்றா" ன்னு சின்ன மாறுதல் பாருங்க.. அப்புறம் கப்பு கப்பா குவிச்சிருவீங்க..


டாக்டர். கண்மணி (நேமாலஜி)

ஓவியன்
02-06-2008, 02:02 PM
"கப்பைக் கொட்றா" ன்னு சின்ன மாறுதல் பாருங்க.. அப்புறம் கப்பு கப்பா குவிச்சிருவீங்க..

அப்புறம் கைக்கு வந்த கப்பை கவுத்துக் கொட்டிட மாட்டாரா..?? :confused:

கண்மணி
02-06-2008, 02:05 PM
கைக்கு வந்த பின் கொட்டினா என்ன முட்டின என்னா?

கொட்றா - கொட்டுறா இரண்டுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் கொஞ்சம் மங்கலாத் தெரியுதா? ஸ்டெடியாத்தான் இருக்கீங்க.

ராஜா
02-06-2008, 04:56 PM
கபுகேதரா பெயர் விளக்கம் அருமை கண்மணி..!

சுட்டிபையன்
04-06-2008, 05:20 AM
கப்புகெதர
கப்பு = காகம்
கெதர = வீடு
காக்க வீடு
:D:D:D