PDA

View Full Version : பெயர்க் காரணம்!!!



அல்லிராணி
16-04-2008, 12:55 PM
அரைவயிற்றுக் கஞ்சி குடித்து
காசு சேர்த்துப் பேரனுக்குப் போட்டேன்
தங்கத்தில் அரைஞாண்!

சிவா.ஜி
16-04-2008, 12:59 PM
முழு வயிறு கஞ்சிகுடிப்பவரே வெள்ளியில் போடும்போது, அரைவயிறுக் குடித்து, தங்கத்தில் போட்டிருப்பதால்...இது குறையில்லா நிறைஞாண்.

நல்ல சொல்லாடல். வாழ்த்துகள் அல்லிராணி.

shibly591
16-04-2008, 01:06 PM
வாரே வாவ்

ஷீ-நிசி
16-04-2008, 02:40 PM
அட நல்லாருக்கே! வாழ்த்துக்கள்!

ஓவியன்
17-04-2008, 06:00 AM
தங்கத்தில் போட்டாலும்
தங்கத்துக்கு போட்டாலும்
நிறைஞாணாக முடியாமல்
அரைஞான்...!!

____________________________________________________________________________________

அசத்தலாகீது அல்லி மாமி (நன்றி சாம்பவி) !!! :)

அமரன்
21-04-2008, 09:20 PM
தே(க)சத்தில்
தினமும் துக்க தினம்.
-அரைக்கம்பத்தில் கொடி!

அல்லிராணி
22-04-2008, 02:04 AM
கால்வயிறு
அரையாடை
முக்கால்
முழுமனிதன்
காந்தி!

ஓவியன்
22-04-2008, 05:25 AM
ஆள் பாதி
ஆடை பாதி
இதிலேது
வயிற்றுக்கிடம்..??:mini023::mini023::mini023:

meera
22-04-2008, 10:16 AM
அல்லியக்கா, அதனாலதான் அந்த கயிறுக்கு அரைஞாண் கயிறு என்று பெயர் வந்ததா??அதைகூட தங்கத்தில் போட்டால் தான் தாத்தாவுக்கு மதிப்பு

நல்ல கவிதை.

கண்மணி
22-04-2008, 01:36 PM
ஆள் பாதி
ஆடை பாதி
இதிலேது
வயிற்றுக்கிடம்..??:mini023::mini023::mini023:

வயிறில்லாத ஆளா?