PDA

View Full Version : காத்திருக்கிறேன்



நம்பிகோபாலன்
16-04-2008, 06:57 AM
உன்னை பற்றி
நினைவுகளே நாள்தோரும்
என் மனதில்

" வர போறவ
எப்படி இருக்க வேண்டும் " என்று
கேட்க்கும் பொழுதெல்லாம்
மனதில் ஒருவித
புரியாத மகிழ்ச்சி
சந்தோஷம்

உன்னை எதிர்பார்த்து
காத்துகொண்டுயிருக்கிறேன்
எந்தவித எதிர்பார்ப்பும்
இல்லாமல்

உனக்கும் இப்படித்தானோ ?
உனக்காவது
எதிபார்ப்புகள் இருக்கட்டும்
ஏமாற்றாமல் இருக்கசெய்ய
எனக்கது ஊன்றுகோலாய்
மாறி உழைக்கசெய்யும்

என்றும் நிழலாய்
உன்னுடன் பயணிக்க
நிஜத்தில் ஆவலோடு
காத்திருக்கிறேன்...

நம்பிகோபாலன்
17-04-2008, 07:27 AM
காத்திருக்கிறேன் - 2

பாலைவனத்தில்
ஒட்டகம் நீரை
தேடுவதை போல
உன்னுள் காதலை
நான்
தேடிகொண்டியிருக்கிறேன்
என் விழிநீர்
கானல் நீராய்
உனக்கு
தெரியாமல் போனதோ

என்றூ
உன்னை பார்த்து
என்னை தொலைத்தேனோ
அன்று முதல்
உன்னை தேடியே
என் வாழ்க்கை
பயணிக்கிறது
என்னை கண்டுபிடிக்க

நீ என்னை
மறுத்தாலும்
மறந்தாலும்
உன் நினைவுகளில்
வாழ முடிவுசெய்து
விட்டேன்

என்றாவது
என்னை பற்றி
புரிந்து கொள்வாய்
என்ற ஆவலோடு...

நம்பிகோபாலன்
22-04-2008, 09:51 AM
காத்திருக்கிறேன்-3

முதன்முதலாய்
உன்னை பார்த்த முதல்
என்னுள் உன்னை சுவாசிக்க
ஆரம்பித்து விட்டேன்...
நீ என் கண்களில்
மறைந்த பொழுதெல்லாம்
உலகமே இருண்டுபோவதாய்
உணர்கின்றேன்...
பிழை
கண்களின் மீதா
இல்லை
கண்களில் வாழ்கின்ற
உன் உருவத்தின் மீதா
விடைக்காக காத்திருக்கிறேன்
உனக்காக....