PDA

View Full Version : காதல் பிரிவின்போது நண்பனின் கண்ணீர்



shibly591
16-04-2008, 06:37 AM
காதல் பிரிவின்போது நண்பனின் கண்ணீர்
எனது நண்பனின் காதலிக்கு
இன்னொருவனுடன் திருமணம் என்றானபோது
எனது கண்களும் அழுது தீர்க்கின்றன...
ஒரு ஆச்சர்யம்
அவனை விடவும்
நான்தான் அதிகம் அழுகிறேன்..
அவனது அழுகையில் சத்தமேயில்லை
நானோ குலுங்கிக்குலுங்கி..
புரியவேயில்லை
ஒருவேளை அவளை நானும்
காதலித்துத்தொலைத்தேனோ............?

ஓவியா
16-04-2008, 11:17 AM
அடடே,
நண்பனின் காதலியை 'லவ்' பண்ணலாமா!!! :eek::eek::eek:


நண்பனின் காதலி என்று சொன்னால் எப்படி அவளிடம் காதல் பிறக்கும்??
நண்பனின் காதலியை லவ் பண்ணினா அது தூய நட்பாகாதே!!
இது துரோகமாச்சே!! :eek:

shibly591
16-04-2008, 11:30 AM
அப்படியில்லை நண்பி....நண்பனை விரும்ப முன் நான் அவளை காதலித்து பிறகு நண்பனுக்காக தனது காதலை தியாகம் செய்த நிலையையே கவிதை சுட்டுகிறது....(சத்தியமாக அனுபவம் இல்லை...அதன் விளைவாக கவிதை திசை மாறியிருக்கலாம்......

ஓவியா
16-04-2008, 11:41 AM
அப்படியில்லை நண்பி....நண்பனை விரும்ப முன் நான் அவளை காதலித்து பிறகு நண்பனுக்காக தனது காதலை தியாகம் செய்த நிலையையே கவிதை சுட்டுகிறது....
(சத்தியமாக அனுபவம் இல்லை...அதன் விளைவாக கவிதை திசை மாறியிருக்கலாம்......


தான் கத்லித்த பெண், பின் நன்பனுக்காக தியாகம் செய்தவள் என்றால்....
இந்த வார்த்தைகள் எப்படி வரும்??


ஒருவேளை அவளை நானும்
காதலித்துத்தொலைத்தேனோ

ஒருவேளை என்றால் தான் அறிந்து செய்ததாக பொருள் படவில்லையே அண்ணா!! :D:D

இப்ப என்னா பண்ணுவீங்க :sport-smiley-002:இப்ப என்னா பண்ணுவீங்க

shibly591
16-04-2008, 11:49 AM
வசமாக மாட்டிக்கொண்டேன் போல விளங்குது..அவள்தான் நண்பனுக்கும் இல்லையே...பிறகு இதைப்பற்றி பேசுவது அவளது கணவனுக்கு செய்யும் துரோகமோ...இதை விடுத்து எனக்கு ஒரு சிறிய உதவி செயவீங்களா?

ஓவியா
16-04-2008, 11:55 AM
வசமாக மாட்டிக்கொண்டேன் போல விளங்குது..
அவள்தான் நண்பனுக்கும் இல்லையே...பிறகு இதைப்பற்றி பேசுவது அவளது கணவனுக்கு செய்யும் துரோகமோ...
இதை விடுத்து எனக்கு ஒரு சிறிய உதவி செயவீங்களா?



சீபீஐ ஓவியாவ இன்று நீங்களும் கண்டாச்சி.

சரி ஏதோ போனா போவுதுனு மன்னிச்சி விட்டுடுறேன்.
இனி என்னை எங்கு பார்த்தாலும் ஒரு கும்புடு போடனும். அதான் தண்டனை. :lachen001::lachen001:


சொல்லுங்கள் அண்ணா, யாம் என்ன உதவி செய்ய வேண்டும்.

shibly591
16-04-2008, 12:03 PM
முதலாவத உதவி நான் உங்களுக்கு அண்ணாவாக இருக்க வாய்ப்பில்லை..தம்பி என்றே அழைக்கவேண்டும்(வயதை கண்டுபிடிப்பதில் நான் சிஐடி?????)...மற்றைய பெரிய உதவி தமிழில் யுனிகோட் இல் இலகுவாக தட்டச்சு செய்வத எங்கனம்?நான் பயன்படுத்துவது சுரதா.கொம்.இதில் வேகமான டைப் செயவது கடினமாக உள்ளது.மேலும் நான் பாமினி எழுத்துருவையே பயன்படுத்தி பழகிவிட்டேன்.இதுவே போதும்.ஆனால் வேறு வழிகள் ஏதும் உள்ளதோ??

ஓவியா
16-04-2008, 12:18 PM
முதலாவத உதவி நான் உங்களுக்கு அண்ணாவாக இருக்க வாய்ப்பில்லை..தம்பி என்றே அழைக்கவேண்டும்(வயதை கண்டுபிடிப்பதில் நான் சிஐடி?????)...மற்றைய பெரிய உதவி தமிழில் யுனிகோட் இல் இலகுவாக தட்டச்சு செய்வத எங்கனம்?நான் பயன்படுத்துவது சுரதா.கொம்.இதில் வேகமான டைப் செயவது கடினமாக உள்ளது.மேலும் நான் பாமினி எழுத்துருவையே பயன்படுத்தி பழகிவிட்டேன்.இதுவே போதும்.ஆனால் வேறு வழிகள் ஏதும் உள்ளதோ??

சரி அண்ணன் தம்பியாக இருக்கலாம். :)
என் வயது இங்கு யாருக்கும் தெரியாது.
நான் ஒரு மாணவி. அக்கா என்று அழையுங்கள். :)

மற்ற கேள்விகளுக்கு மன்ற உதவியாளர்கள் உதவுவார்கள்.

அல்லிராணி
16-04-2008, 12:52 PM
அவன் அவளைக் காதலிக்க
நானும் காதலித்தேன்
அவர்களின் காதலை!!!

shibly591
16-04-2008, 01:13 PM
நன்றி அல்லிராணி..உங்கள் 300 வது பதிவு எனக்காக என்பதில் மகிழ்ச்சி..தொடர்க எழுத்துப்பணி

ஓவியன்
17-04-2008, 06:14 AM
அவன் அவளைக் காதலிக்க
நானும் காதலித்தேன்
அவர்களின் காதலை!!!

நச்...!!!
_________________________________________________________________________________________
காதலைக் காதலித்தேன்
வாழ்க்கையைக் காதலிப்பதால்...

ஓவியா
21-04-2008, 08:56 PM
அவன் அவளைக் காதலிக்க
நானும் காதலித்தேன்
அவர்களின் காதலை!!!

ஆமாம் அந்த 'குடுமிக்' காதல் தானே!! :):D:D