PDA

View Full Version : புதிய நிர்வாக குழு



அறிஞர்
14-04-2008, 02:51 PM
மன்ற உறவுகளுக்கு.. வணக்கம்.

இன்று முதல், நிர்வாக குழுவில் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என எண்ணுகிறோம்.

இது வரை பணியாற்றி விடைபெறும் ஆலோசகர்களுக்கும், மின்னிதழ் குழுவினருக்கும் நன்றிகள் பல. தங்களுடைய பணி மன்றத்திற்கு பெரிதும் உதவியது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

திஸ்கி பதிப்புக்களை மாற்ற சில உதவியாளர்களை நியமிக்கலாம் என எண்ணுகிறோம். விருப்ப படும் இன்னும் இருவர் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

தற்காலிகமாக அமைக்கப்பட்ட மின்னிதழ் குழுவை சீரமைக்கும் வண்ணம், தற்பொழுது இருக்கும் குழுவை கலைக்கிறோம். புதிய குழுவில் விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம் (அதற்கு தனி அறிவிப்பு கொடுக்கிறோம்).

புதிய நிர்வாக குழு

நிர்வாகி - அறிஞர்
பொறுப்பாளர்கள் - அமரன், அக்னி, ஆதவா, பென்ஸ், ஓவியன், அன்புரசிகன்
ஆலோசகர்கள் -இளசு, இராசகுமாரன், தாமரை, பாரதி, ஆரென், மன்மதன், மனோஜி
உதவியாளர்கள் - செல்வா, சுகந்தப்ரீதன், விராடன், சூரியன்

அமரன்
15-04-2008, 02:49 PM
சிறப்பாகச் செயலாற்றி விடைபெற்றுச்செல்லும் வழிகாட்டிகளான பிரதீப், பப்பி அவர்கள், இனியன் அவர்கள் மூவருக்கும் நன்றி.

புதிதாக நிர்வாகக்குழுவில் இணைந்துள்ள உதவியாளர்களான செல்வா, சுகந்தப்ரீதன் இருவருக்கும் வாழ்த்துகளும் வரவேற்புகளும்.

உதவியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கப்போகும் நெஞ்சங்களுக்கு முன்வாழ்த்துகள்..

புதிய குழுவினர் அனைவரும், மன்றம் மென்மேலும் மெருகேற, அர்ப்பணிப்புடன் உழைப்போம்.

ஆதவா
15-04-2008, 03:39 PM
புது நிர்வாகக் குழுவினருக்கு எமது வாழ்த்துகள்.

புதிதாக இணைந்த செல்வா சுகந்தப்ரீதன் ஆகியோருக்குச் சிறப்பு வாழ்த்துகள்...

நாம் அனைவரும் இணைந்து மன்றத்தைச் சிறப்புடன் நடத்துவோம்.........

அக்னி
15-04-2008, 03:49 PM
மன்றத்தின் நிர்வாகக்குழுவிலிருந்து, சிறந்த பணியாற்றிய அன்பு உறவுகளுக்கு நன்றிகள்...
புதிய உதவியாளர்கள் இருவருக்கும் வரவேற்புக்கள்...
அவர்களுடன் இணைந்து கொள்ளவிருக்கும் அன்பர்களுக்கும் முற்கூட்டிய வரவேற்புக்கள்...
அனைத்து மன்ற உறவுகளும் சேர்ந்தே, மன்றத்தை வளர்ப்போம்...

ஷீ-நிசி
15-04-2008, 03:54 PM
புதிய நிர்வாக குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்!

மதி
15-04-2008, 04:03 PM
புது நிர்வாக குழுவிற்கு என் வாழ்த்துகள்.

நாகரா
15-04-2008, 04:10 PM
விடை பெறும் தமிழ் மன்ற ஆலோசகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும், புதிய நிர்வாகக் குழுவிற்கு என் வாழ்த்துக்களும்.

அன்புரசிகன்
15-04-2008, 04:11 PM
புதுதாய் வரவிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்....

பிரதீப் அண்ணர் வரவே மாட்டாரா........ பப்பி என்பருக்கு இளசு அண்ணர் ஒரு திரி ஆரம்பித்து பாட்டுப்பாட்டாக எடுத்துவிட்டாரே.... பலனேதுமில்லியா??? :(

சுகந்தப்ரீதன்
15-04-2008, 04:18 PM
நிர்வாக குழுவில் என்னையும் ஏற்று இணைத்துக் கொண்ட நிர்வாகி அவர்களுக்கும் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசகர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..!!

மற்றும் என்னுடன் பணியாற்ற போகும் செல்வாவுக்கும் வரவிருக்கும் மற்ற இரு மன்ற உறவுகளுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..!!

மரம் வளர்ப்பதைப் போல் மன்றத்தையும் வளர்ப்போம் வாருங்கள் நண்பர்களே..!!

க.கமலக்கண்ணன்
15-04-2008, 05:28 PM
மன்றத்தை திறம்பட நடத்திட புதிதாக இணைந்திருக்கும்

மன்றத்தின் நிர்வாக உதவியாளர்கள் செல்வா, சுகந்தப்ரீதன் இருவருக்கும்

மனமார்ந்த வாழ்த்துக்கள்...

விகடன்
15-04-2008, 08:47 PM
மன்றத்தை இன்றுவரை வழப்படுத்தியவர்களில் ஒருவராக இருந்து விடைபெறும் நண்பர்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்,

புதிதாய் களமேறும் நண்பர்களுக்கு அவர்கள் பணியை செவ்வனே செய்து மன்றத்தை மேலும் வளப்படுத்த எனது வாழ்த்துக்கள்.

சூரியன்
20-04-2008, 07:52 AM
புதிய நிர்வாக குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.

பிச்சி
22-04-2008, 04:51 PM
புதிய நிர்வாக குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்

பிச்சி

SathyaThirunavukkarasu
22-04-2008, 08:46 PM
புதிய நிர்வாக குழுவிற்கு வாழ்த்துக்கள்
புதுப்புது அறிவிப்புகளும் நிகழ்வுகளையும் எதிர்பார்க்கிறோம்
நன்றி

ஓவியா
22-04-2008, 09:02 PM
புதிய நிர்வாக குழு

நிர்வாகி - அறிஞர்
பொறுப்பாளர்கள் - அமரன், அக்னி, ஆதவா, பென்ஸ், ஓவியன், அன்புரசிகன்
ஆலோசகர்கள் -இளசு, இராசகுமாரன், தாமரை, பாரதி, ஆரென், மன்மதன், மனோஜி
உதவியாளர்கள் - செல்வா, சுகந்தப்ரீதன்

விடைபெறும் அன்பு தம்பி பிரதீப்பிற்க்கும், :traurig001::traurig001:
நண்பர் பப்பிக்கும் :D:D நன்றிகள் பல.

புதிதாக இணைந்த அண்ணன் செல்வா :):) மற்றும் தம்பி சுகந்தப்ரீதன் :p:pஆகியோருக்கு அன்பான வாழ்த்துக்கள்.

பணியினை தொடரும் மற்ற சான்றோர்களுக்கும் பாராட்டுக்கள்.

மீதியுள்ளா இரண்டு உதவியாளர்கள் பொருப்பினை செவ்வென செய்ய ஐந்து மன்ற உருப்பினர்களின் பெயரை சிபாரிசு செய்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் இடத்தினை நிரப்புங்கள் நண்பர்களே.


பூமகள், விராடன், சாம்பவி, சிவாஜி, யாவனிகா.



**********************************************************************

சிபாரிசில் பெயர் இல்லதவர்கள் உங்கள் எழுத்துக்களை நான் கட்டிபோட விரும்பவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
ஆமாம் 33% பெண்களுக்குனு உள்ள ஒத்துக்கீடு எங்கே!!!???? :eek::eek:

விகடன்
22-04-2008, 09:21 PM
மிக்க நன்றி அக்கா.

எனக்கும் மன்றத்தில் ஒரு அங்கமாக இருப்பதினை விடுத்து அதற்கு ஏதாவது செய்யவேண்டுமென்ற நினைப்பு அடிக்கடி வந்ததுண்டு.

உதவியாளன் பொறுப்பிற்கு தகுதியானோர் எத்தனையோபேர் இருக்கலாம்.
அதேவேளை,


உதவியாளன் பொறுப்பு கிடைத்தால் அதற்குண்டான மரியாதையை அளித்து செயற்படுவேன்.

அறிஞர்
24-04-2008, 07:15 PM
சூரியன், விராடன் இருவரும் நிர்வாக குழுவில் இன்று முதல் பங்கெடுக்கிறார்கள்..

ஓவியா
24-04-2008, 07:41 PM
சூரியன், விராடன் இருவரும் நிர்வாக குழுவில் இன்று முதல் பங்கெடுக்கிறார்கள்..


இரண்டு தம்பிகளுக்கும் என் வாழ்த்துக்கள். :D:D
(ஒன்ஸ் எகேன் மை டீம் ;);))

மனோஜ்
24-04-2008, 07:54 PM
வாழ்த்துக்கள் விராடன் மற்றும் சூரியன் சுகந்தா

விகடன்
24-04-2008, 09:22 PM
சூரியன், விராடன் இருவரும் நிர்வாக குழுவில் இன்று முதல் பங்கெடுக்கிறார்கள்..

நன்றி அறிஞரே,

விகடன்
24-04-2008, 09:23 PM
இரண்டு தம்பிகளுக்கும் என் வாழ்த்துக்கள். :D:D
(ஒன்ஸ் எகேன் மை டீம் ;);))
நன்றி அக்கா.


வாழ்த்துக்கள் விராடன் மற்றும் சூரியன் சுகந்தா

நன்றி மனோஜ்

அமரன்
25-04-2008, 07:45 AM
விராடன், சூரியன் இருவருக்கும் வாழ்த்துகள்.

ஓவியன்
25-04-2008, 08:19 AM
விராட சூரியர்களுக்கு என் மனதார்ந்த வாழ்த்துகளும்...!! :icon_b:

பாரதி
25-04-2008, 08:21 AM
விராடன், சூரியனுக்கு இனிய வாழ்த்துடன் கூடிய வரவேற்புகள்.

அன்புரசிகன்
25-04-2008, 09:59 AM
விராடன் மற்றும் சூரியனுக்கு வாழ்த்துக்களும் வரவேற்புக்களும்.... அனைத்தும் சிறப்பாக அமையட்டும். அமையும்.

mania
25-04-2008, 10:03 AM
புதிய நிர்வாக குழுவிற்கு எனது வாழ்த்துகள்
அன்புடன்
மணியா

சுகந்தப்ரீதன்
26-04-2008, 05:46 AM
அண்ணன் விராடனையும் தம்பி சூரியனையும் வருக வருகவென வரவேற்கிறேன்...!!

நிர்வாக குழுவில் இணைந்த உங்கள் இருவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..!!

விகடன்
03-05-2008, 09:43 PM
விராடன், சூரியன் இருவருக்கும் வாழ்த்துகள்.
நன்றி அமர்


விராட சூரியர்களுக்கு என் மனதார்ந்த வாழ்த்துகளும்...!! :icon_b:

நன்றி ஓவியன்

விராடன், சூரியனுக்கு இனிய வாழ்த்துடன் கூடிய வரவேற்புகள்.

நன்றி பாரதி

விராடன் மற்றும் சூரியனுக்கு வாழ்த்துக்களும் வரவேற்புக்களும்.... அனைத்தும் சிறப்பாக அமையட்டும். அமையும்.

நன்றி அன்பு

புதிய நிர்வாக குழுவிற்கு எனது வாழ்த்துகள்
அன்புடன்
மணியா

மிக்க நன்றி மணியா அண்ணா. தயவு செய்து மன்றத்திற்கு அடிக்கடி வாங்கோ. இப்போதெல்லாம் தாங்கள் வருவது அரிதாக காணப்படுகிறது. உங்களைப் போன்ற சிகரங்கள் மன்றத்தில் இருந்தால் எங்களுக்குத்தான் பெருமை என்பதை மறந்திடாதீர்கள்.


அண்ணன் விராடனையும் தம்பி சூரியனையும் வருக வருகவென வரவேற்கிறேன்...!!

நிர்வாக குழுவில் இணைந்த உங்கள் இருவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..!!

வாடா சுகந்தா..
வரவேற்பிற்கு மிக்க நன்றி, சந்தோஷம்.
--------------------------------------------------------------------------
உதவியாளனாக வந்ததிலிருந்து மன்றம் வரும்போது பெரும்பகுதியை ஒருங்குறியாக்கத்தில் செலவழித்துவிட்டதால் உங்கள் வாழ்த்துக்களை கவனிக்க தவறிவிட்டேன். முதலில் அதற்கு எனது மன்னிப்புக்கள்.
தயவு கூர்ந்து தாமத நன்றி நவிலலிற்கு மன்னிக்க..
உங்களைப் போன்றோரின் ஊக்கமும் வாழ்த்துமே என்னை நன்றாக வழப்படுத்த அத்திவாரமாக அமையும். ஆதலால் மீண்டும் ஒரு தடவை எனக்கு வாழ்த்து சொல்லிவைத்திட்ட அன்பு நெஞ்சங்கள் மனமார்ந்த நன்றிகள்.

மலர்
04-05-2008, 12:15 PM
புதிய நிர்வாககுழுவிற்கு வாழ்த்துக்களும் வரவேற்புகளும்........!!!!! :icon_35::icon_35:

சூரியன்
04-05-2008, 01:27 PM
வாழ்த்திய உள்ளங்களுக்கு எனது நன்றிகள்.:)

சூரியன்
21-05-2008, 12:46 PM
அண்ணன் விராடனையும் தம்பி சூரியனையும் வருக வருகவென வரவேற்கிறேன்...!!

நிர்வாக குழுவில் இணைந்த உங்கள் இருவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..!!

நன்றி அண்ணா.

நுரையீரல்
21-05-2008, 01:19 PM
புதிய நிர்வாக உதவியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

நேசம்
21-05-2008, 03:11 PM
நிர்வாக குழுவில் புதிதாக இடம்பெறும் அனைவ்ருக்கும் வாழ்த்துகள்

Narathar
23-05-2008, 10:35 PM
மன்றத்தின் பொறுப்புக்களை புதிதாக சிரமேற்றிருக்கும் அன்பர்களுக்கும்...........
பல காலமாக தோள் கொடுத்துக்கொண்டிருக்கும் அன்பர்களுக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சுஜா
26-05-2008, 08:21 AM
என்னை உங்கள் குழுவில் புதியவராக சேர்த்துகொள்விர்களா?

சுட்டிபையன்
26-05-2008, 08:36 AM
மன்றத்தின் புதிய நிர்வாக குழுவினருக்கு வாழ்த்துக்கள், மன்றத்தின் செயற்பாடுகள் மென்மேலும் உயர மேலும் வாழ்துக்கள்

அமரன்
26-05-2008, 08:53 AM
என்னை உங்கள் குழுவில் புதியவராக சேர்த்துகொள்விர்களா?
மன்றத்தில் பதிவு செய்த நாளிலிருந்து குழுவில் நீங்களும் சேர்ந்துவிட்டீர்கள். மன்றவிதிகளை கடைப்பிடித்து, சிறப்பாக செயலாற்றுவதன் மூலம் மென்மேலும் உயரலாம். ஆதலால், வெள்ளமெனப் பாயட்டும் உங்கள் பங்களிப்பு.

பூமகள்
15-07-2008, 04:10 PM
உதவியாளராக புதிய நிர்வாகக் குழுவில் எம்மையும் இணைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்..!!

இனிய மன்ற உறவுகளோடு எனது பணியை செவ்வனே செய்ய சித்தமாயிருக்கிறேன்.

என்னை இணைத்த நிர்வாகிக்கும் மன்றத்தின் சான்றோருக்கும் பணிவான நன்றிகள். :)

அறிஞர்
15-07-2008, 04:19 PM
அன்பு உறுப்பினர் பூமகள் இன்று முதல் உதவியாளர் குழுவில் இணைகிறார். அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்..
------
அறிவிப்புக்கு முன் முந்திக்கொண்டு நன்றி சொல்லிவிட்டார்...

கலைவேந்தன்
15-07-2008, 04:26 PM
வாழ்த்துகள் பூமகள்!

ஓவியன்
15-07-2008, 04:28 PM
வாழ்த்துக்கள் பூமகள்...!! :)

Keelai Naadaan
15-07-2008, 04:39 PM
------
அறிவிப்புக்கு முன் முந்திக்கொண்டு நன்றி சொல்லிவிட்டார்...

அது தான் பூமகள். மன்றத்தின் மீது அவருடைய ஆர்வம் பாராட்டுக்குரியது.
மன்றத்தின் முந்தைய நிர்வாக குழு உறுப்பினர்கள் தற்போதைய நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.

பூமகள்
15-07-2008, 05:01 PM
ஹா ஹா.. மன்னிச்சிருங்க அறிஞர் அண்ணா... ஆர்வக் கோளாரில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்...

இருந்தாலும் ஒரே வீட்டுக்குள்ளே என்ன ஃபார்மாலிட்டிஸ்... அதான் நானே நன்றி முன்னமா சொல்லிட்டேன்...

வாரி அனைச்ச தமிழ் தாய்... கூப்பிடும் வரை... குழந்தை நிக்கனுமா என்ன??!!

-----------------------------------------------------

என்னை இனிதே வாழ்த்தி வரவேற்ற நிர்வாகி அறிஞர் அண்ணா, கலை வேந்தன் அண்ணா, ஓவியன் அண்ணா, கீழை நாடான் அண்ணா ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். :)

mukilan
15-07-2008, 05:23 PM
புதிய உதவியாளர் பூமகளுக்கு என் பாராட்டுக்கள். மன்றத்தை வழிநடத்தும் மகத்தான பணியை திறம்பட செய்ய வாழ்த்துகள்.

பூமகள்
15-07-2008, 05:30 PM
மிகுந்த நன்றிகள் முகில் அண்ணா.
உங்க ஆசியோடு களமிறங்குகிறேன்..!! :)

இளசு
15-07-2008, 06:10 PM
தங்கைக்கு அண்ணனின் வாழ்த்தும் அன்பும்..

எல்லாம் செவ்வனே நடக்க ஆசியும் ஆதரவும்..

மதுரை மைந்தன்
15-07-2008, 06:52 PM
புது நிர்வாகக் குழுவினருக்கு எமது வாழ்த்துகள்.

புதிதாக இணைந்த செல்வா சுகந்தப்ரீதன் ஆகியோருக்குச் சிறப்பு வாழ்த்துகள்.

வாழ்த்துகள் பூமகள்!

சிவா.ஜி
15-07-2008, 07:21 PM
நிர்வாகக்குழுவில் இணைந்த தங்கை பூவுக்கு.....மனமார்ந்த பாராட்டுகள். தன் பணியை செவ்வனே செய்வாரென மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

அக்னி
15-07-2008, 11:12 PM
புதிதாக உதவியாளராக இணைந்து கொண்ட பூமகள் அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றேன்...
உங்கள் பணிகள் சிறக்கட்டும்...

ஓவியா
15-07-2008, 11:18 PM
கொடுத்த வார்த்தையை காப்பாற்றிவிட்டாயே தங்கை, நெகிழ்ந்தேன். :):)

பூ, உங்களை போன்ற திறமைமிக்க எழுத்தாளர்கள் இங்கு உதவியாளர்கள் பணியில் இருப்பது நன்று.

எனது வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் வளர்க உங்கள் தொண்டு.

அமரன்
15-07-2008, 11:27 PM
புதிய உதவியாளர் பூமகளுக்கு வாழ்த்தும் வரவேற்பும். மன்றத்தின் மீதான உங்களது அதீத அன்பு உங்கள் மேலாண்மையை அதிகரித்து மன்றத்தை மென்மேலும் வளப்படுத்தட்டும்.

aren
16-07-2008, 02:58 AM
வாழ்த்துக்கள் பூமகள். நீங்கள் இன்னும் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

மறத்தமிழன்
16-07-2008, 03:52 AM
ஹா ஹா.. மன்னிச்சிருங்க அறிஞர் அண்ணா... ஆர்வக் கோளாரில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்...

இருந்தாலும் ஒரே வீட்டுக்குள்ளே என்ன ஃபார்மாலிட்டிஸ்... அதான் நானே நன்றி முன்னமா சொல்லிட்டேன்...

வாரி அனைச்ச தமிழ் தாய்... கூப்பிடும் வரை... குழந்தை நிக்கனுமா என்ன??!!

-----------------------------------------------------

என்னை இனிதே வாழ்த்தி வரவேற்ற நிர்வாகி அறிஞர் அண்ணா, கலை வேந்தன் அண்ணா, ஓவியன் அண்ணா, கீழை நாடான் அண்ணா ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். :)

வாழ்த்துக்கள் சகோதரி.

ஒரே குடும்பத்துக்குள் எதுக்கு போமாலிட்டீஸ் என்றுவிட்டு எதுக்காம் நன்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறையள்....

SathyaThirunavukkarasu
16-07-2008, 04:25 AM
புதிய மன்ற நிர்வாகத்தினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் வரவேற்பையும் உரித்தாக்குகின்றேன்

meera
16-07-2008, 04:33 AM
பூ, உன் பணி மென்மேலூம் சிறக்க வாழ்த்துகள்.

mania
16-07-2008, 05:14 AM
பாராட்டுகள் பூ மகள். எனது வாழ்த்துகளும் கூட.:D
அன்புடன்
மணியா..:)

சூரியன்
16-07-2008, 04:55 PM
வாழ்த்துக்கள் பூமகள் அக்கா.

அகத்தியன்
16-07-2008, 05:02 PM
பூமகளுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்

சுகந்தப்ரீதன்
17-07-2008, 01:58 PM
வாழ்த்துக்கள் பூமகள்..!!

தமிழ்மன்றத்தை நிர்வகிக்க தரமான தமிழ்மகள்தான் தாங்கள்..!!

இணைந்தது தாமதமென்றாலும்... இதுவும் நல்ல தருணம்தான்...!!

தொடரும் உங்கள் அர்பணிப்பு.. தமிழுக்கும்..தமிழ்மன்றத்திற்க்கும்..!!

lolluvathiyar
18-07-2008, 08:46 AM
சிறப்பாக பனியாற்றிய மற்றும் பனியாற்றி கொன்டு இருக்கும் அனைவடுக்கும் நன்றி. புதிதாக உதவியாளராக வருபவர்களுக்கு வாழ்த்துகள்

மதி
18-07-2008, 08:49 AM
வாழ்த்துகள் பூமகள்..

பூமகள்
18-07-2008, 02:40 PM
இந்த குட்டிப் பூவை சீராட்டி பாராட்டி வளர்த்து வரும் தமிழ் மன்ற சொந்தங்களான...

மயிலிறகு மனசுக்காரர் பேரன்பு மிகுந்த பெரியண்ணா,
மதுர மண்ணின் பாசமிகு சகோதரர் மதுரைவீரன் அண்ணா,
செல்லத் தங்கையாக எனைத் தாங்கும் சிவா அண்ணா,
அன்பின் மெல்லிசை ஏற்படுத்தும் அக்னி அண்ணா,
காணாமலே தங்கைக்கு சீரனுப்பிய பாசமிகு ஓவியா அக்கா,
சின்ன சொல்லில் விரிவான பாசம் காட்டும் சகோதரர் அமரன் அண்ணா,
அன்பின் வலிமை உணர்த்தும் பாசமிகு சிங்கார சகோதரர் ஆரென் அண்ணா,
உரிமையோடு தங்கையிடம் சுட்டிக் காட்டி வாழ்த்தும் மறத்தமிழன் அண்ணா,
தனது சகோதரியின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் அன்புச் சகோதரிகள் சத்யா மற்றும் மீரா அக்கா,
மன்றத்தின் 'தலை' எங்கள் அனைவரின் பாசமிகு சகோதரர் மணியா அண்ணா,
அன்புத் தம்பி சூரியன்,
பாசமிகு சகோதரர் அகத்தியன்,
அன்புமிக்க மன்ற உறவான சுகந்தப்ரீதன்,
பாசமிகு மன்றத்தில் நல்ல வாத்தியார் அண்ணா,
மன்றத்தின் 'வெங்காய பாய்ஸ்' புகழ் மதி,

அனைவரின் அன்புக்கும் தலை வணங்குகிறேன்..!! :) (மறத்தமிழன் அண்ணா நன்றி தானே சொல்ல கூடாதுன்னு சொன்னீங்க..!! ஹீ ஹீ..!! :D:D)

விகடன்
18-07-2008, 09:10 PM
உதவியாளராக வந்திட்ட பூமகளிற்கு வாழ்த்துக்கள்.
தங்களின் அதீத கதியிலான பணிகளிற்கு பாராட்டுக்கள்.

க.கமலக்கண்ணன்
19-07-2008, 04:20 AM
புதிய உதவியாளர் பூமகளுக்கு இனிய வாழ்த்துக்கள்...

தீபன்
19-07-2008, 04:52 AM
வாழ்த்துக்கள் பூமகளக்கா..! (எல்லாரயும் அண்ணாவாக்கி உங்க வயச குறச்சுக்க பாகிறிங்களா...)