PDA

View Full Version : தீண்டாமை கொடிது!!!



lenram80
14-04-2008, 06:41 PM
ரோஜாப் பூவில் வண்டு!
அவள் உதட்டில் மச்சம்!

நிலவில் நீர் துளி!
அவள் நெற்றியில் வியர்வைத் துளி!

மத்தாப்பாய் அவள் சிரிப்பு!
வருடம் முழுதும் எனக்குத் தீபாவளி!

அவள் உதட்டில் ஐஸ்க்ரீம்!
வழிகிறது என் இதயம்!

நான் அவளைப் பார்க்க ஆசைப் பட்டதால்
பொழுது விடியும் இந்த பூமி!

நான் விட்ட மூச்சுக் காற்றால்
அவள் மேல் மழை பொழியும் மேகம்!

எனக்குப் போட்டியாக அவளுக்கு நகை செய்ய
கடல் நீரை தங்கமாக்கும் மாலைச் சூரியன்!

அவள் பேச்சைக் கேட்ட பிறகு
குயில்களுக்கு ஒரு சந்தேகம்!
அவை குயிலினமா? மனித இனமா? என்று!
குயிலினம் என்றால், அது பரிமாண வளர்ச்சி!
மனித இனம் என்றால், அது பரிணாம வளர்ச்சி!

சொர்க்கத்தைத் தொட்ட பூக்கள்!
அவள் கைவிரல்கள் பட்ட பூக்கள்!
சொர்க்கத்தில் பூத்த பூக்கள்!
அவள் கூந்தல் கொண்ட பூக்கள்!

திடீரென்று அல்லி பூக்களில் வாசமில்லை!
அவள் இதுவரை அந்தப் பூவை தொட்டதில்லையாம்!
கொடிது! கொடிது! தீண்டாமை கொடிது -
என அவளுக்கெதிராய் அல்லிப் பூ நடத்தும்
மணம்தராப் போராட்டம் தான் காரணமோ?

இதை எப்படியோ தெரிந்து கொண்ட என் வீட்டு உப்பு
"அவள் வந்து என் பூவைத் தொடவேண்டும்"
என்று ஒரே உப்பாய் கரிக்கிறது!
"நீ உண்மையில் பூ இல்லை" என்றால்,
"பொய் சொல்லாதே. அப்பறம் என் பெயர் எப்படி பூ
என்று முடிகிறது?" என்கிறது!
அட, பெயர் வைத்த பெரியோர்களே!
காரணம் என்னவென்று சொல்லுங்களேன்!

அதே சமயம்,
என் வீட்டு அடுப்புக்கு மட்டும் அதன் பூவான
நெருப்புவின் மேல் ஒரு வித வெறுப்பு!
அவள் தொடாமலிருந்தும்
"தீண்டாமை கொடிது" என்று சொல்ல முடியாததால்!

மழை காய்க்கும் மேகம்!
மேகக் குலைகளாய் அவள் தேகம்!
தேகத்தில் - தேன் சரிபாதி பாகம்!
எல்லா உயிருக்கும் அவள் மீது மோகம்!
தூதுக்கு கிடைக்கவில்லையே எனக்கொரு காகம்!

சோழர் கால காவிரியாய் என் ஆசைகள்!
கட்டிப் போட்ட கல்லணையாய் அவள் வெட்கம்!

அவள் ஒரு- உடைகளுக்குள் நிரப்பப்பட்ட இனிய அமுதம்!
அதைத் தின்னத் துடிக்கிறது என் இதயக் குமுதம்!

அவள் ஒரு - தலையில் பூச்சூடி மணக்கும் மலர் மாலை!
அவளை மணக்க என்று மலரும் எனக்கொரு காலை?

சாம்பவி
14-04-2008, 07:13 PM
வாவ்.... ஸூபர்ப்.... !
அசத்தல் கவிதை......!
அசராத வார்த்தைப் ப்ரயோகம்...
அழகாய் அமைந்து உயிரை உருக்கும்... !

அக்னி
15-04-2008, 12:06 AM
ஒவ்வொரு வரிகளிலும் மலைப்பு. திகட்டாத தித்திப்பு...
கவிதை முழு சுகம். நானோ அதன் வசம். பரவுது பரவசம்...

வருடுது லெனினின் கவிப்பூ...
தருகுது நினைவில் சிலிர்ப்பு...
நெருடுது,


நெறுப்பு
மட்டும்...

மிகுந்த பாராட்டுக்கள்...

lenram80
15-04-2008, 12:55 AM
நன்றி சாம்பவி & அக்னி. நெறுப்பில் என்ன நெருடல் அக்னி?
அவள் நெறுப்புவை தொடுவதில்லை. இருந்தும் அடுப்பு அவளை எதிர்த்து போராட்டம் நடத்துவதில்லை. ஏனென்றால், நெறுப்பு சுடும்.

அக்னி
15-04-2008, 01:04 AM
நன்றி சாம்பவி & அக்னி. நெறுப்பில் என்ன நெருடல் அக்னி?
அவள் நெறுப்புவை தொடுவதில்லை. இருந்தும் அடுப்பு அவளை எதிர்த்து போராட்டம் நடத்துவதில்லை. ஏனென்றால், நெறுப்பு சுடும்.
நெறுப்பு அல்ல நெருப்பு என்பதே சரியான வார்த்தையாகும்.
அதனையே அவ்வாறு குறிப்பிட்டேன் அன்றி பொருளையல்ல...

lenram80
15-04-2008, 01:38 AM
நெறுப்பு அல்ல நெருப்பு என்பதே சரியான வார்த்தையாகும்.
அதனையே அவ்வாறு குறிப்பிட்டேன் அன்றி பொருளையல்ல...

ஓ! மாற்றிவிட்டேன் அக்னி!!! (அக்னியின் மறு பெயரான "நெருப்பில்" பிழை செய்து விட்டதால், அக்னிக்கு தான் எவ்வளவு தீக் கோபம்? :) )

நன்றி அக்னி!!!

ஷீ-நிசி
15-04-2008, 01:52 AM
லெனின்.... கவிதை நன்று!
நெருப்பு, உப்பு போன்றவை கவிதையில் புது சமாச்சாரங்கள்,,,
மற்றபடி நிலவு, பூ, கடல்நீர் இவையெல்லாம் படித்து படித்து பழகிப்போன சமாச்சாரங்களையே நினைவூட்டுகின்றன....

ஏராளமாய் கவித்திறமை புதைந்துகிடக்கிறது உங்களுள்ளே!
தாராளமாய் இங்கே வழியவிடுங்கள்... வாழ்த்துக்கள்!

சுகந்தப்ரீதன்
15-04-2008, 07:12 AM
திடீரென்று அல்லி பூக்களில் வாசமில்லை!
அவள் இதுவரை அந்தப் பூவை தொட்டதில்லையாம்!
கொடிது! கொடிது! தீண்டாமை கொடிது -
என அவளுக்கெதிராய் அல்லிப் பூ நடத்தும்
மணம்தராப் போராட்டம் தான் காரணமோ?

பூக்களிலே நானுமொரு
பூவாய்தான் பிறப்பெடுத்தேன்..!!
ஆனால்
பொன்விரல் தீண்டலையே
பூமகள் என்மீது...!!

அன்றே யாரோ
அல்லியை பற்றி சொல்லியதிது..!!



சோழர் கால காவிரியாய் என் ஆசைகள்!
கட்டிப் போட்ட கல்லணையாய் அவள் வெட்கம்!


மிகவும் ரசித்தேன்...
வாழ்த்துக்கள் லெனின் அண்ணா..!!

lenram80
18-04-2008, 12:00 PM
நன்றி ஷி-நிசி & சுகந்தப்ரீதன்!!!