PDA

View Full Version : முடிந்தவனும் முயன்றவனும்



நாகரா
14-04-2008, 05:14 PM
வருந்துயர் எண்ணி
அடுத்த அடி வைக்கத்
தவறியவன்.

எது வரினும்
என்னால் சாதிக்க முடியுமென்று
எடுத்த அடி நிறுத்தாது
தொடர்ந்தவன்................

முடங்கியவனுக்கு
போகம் செத்தது.

முயன்றவனுக்கு
சோகம் செத்தது.

மாயப் பிறந்தவனென்று
வாழப் பயந்தவன்
தேய்ந்தான்.

வாழப் பிறந்தவனென்று
மாயத் துணிந்தவன்
வளர்ந்தான்.

எட்ட முடியாதென்று
எண்ணஞ் சிதைந்து
மண்ணை நோக்கியவன்
மண்ணில் புதைந்தான்.

என்னால்
எட்ட முடியாதது
எதுவுமில்லை என்று
எண்ணஞ் சிறக்க
விண்ணை நோக்கியவன்
வீழ்ச்சியை வென்று
மண்ணிருந்து
மறுபடி எழுந்தான்.

முடியாதென்றவன்
முடிந்தான்.

முடியுமென்றவன்
முயன்றான்.

முடிந்தவன் மடிந்தான்.

முயன்றவன்
மனிதனாய்
மண்ணில் விடிந்தான்.

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

சுகந்தப்ரீதன்
15-04-2008, 09:08 AM
எண்ணங்களே
எல்லையாகின்றன
முயன்றவனுக்கு..!!

எல்லைகளே
எண்ணமாகின்றன
முடிந்தவனுக்கு..!!

விழித்தவனுக்கு விடியல்
துவண்டவனுக்கு துயில்..!!

வாழ்த்துக்கள் அண்ணா...!!
எண்ணங்களை எளிதாக கவிதையின் வரிகளாக்கி தரும் உங்களுக்கு..!!

meera
15-04-2008, 10:02 AM
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்று ஒரு பழமொழி சொல்ல்வார்கள். அது நிஜம். உங்கள் கவிதை ஒரு புது பலத்தை தருகிறது அண்ணா.

தொடர்ந்து தர வாழ்த்துகள்.

நாகரா
15-04-2008, 10:35 AM
எண்ணங்களே
எல்லையாகின்றன
முயன்றவனுக்கு..!!

எல்லைகளே
எண்ணமாகின்றன
முடிந்தவனுக்கு..!!

விழித்தவனுக்கு விடியல்
துவண்டவனுக்கு துயில்..!!

வாழ்த்துக்கள் அண்ணா...!!
எண்ணங்களை எளிதாக கவிதையின் வரிகளாக்கி தரும் உங்களுக்கு..!!

உம் வாழ்த்துக்களுக்கும் அருமையான பின்னூட்டக் குறுங்கவிக்கும் நன்றி பல தம்பி.

நாகரா
15-04-2008, 10:36 AM
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்று ஒரு பழமொழி சொல்ல்வார்கள். அது நிஜம். உங்கள் கவிதை ஒரு புது பலத்தை தருகிறது அண்ணா.

தொடர்ந்து தர வாழ்த்துகள்.

உம் ஊக்க வரிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி பல தங்காய்.