PDA

View Full Version : உயிர்மெய்



நாகரா
14-04-2008, 05:09 PM
மரத்தில் எழுந்தால் பெயர் இலை
மண்ணில் விழுந்தால் பெயர் சருகு
மரத்தில் எழுந்து மண்ணில் விழுந்து
மண்ணில் விழுந்து மரத்தில் எழுந்து
பெயர்களில் அடைபடாதும்
இயக்கம் தடைபடாதும்
சுதந்திரமாய்ச் சுழலும் மெய்ப்பொருள்
எப்போதும் உயிர்த்தே இருக்கிறது
எங்கும் எதிலும்

ஓவியன்
17-04-2008, 06:43 AM
எங்கும் எப்போதும் உயிர்த்தே இருப்பதால் தானே அது மெய்ப்பொருள், பாராட்டுகள் நாகராஜன் அவர்களே..!!

நாகரா
19-04-2008, 02:11 AM
உம் பாராட்டுகளுக்கு நன்றி ஓவியன்