PDA

View Full Version : சும்மா

ஆதி
14-04-2008, 12:13 PM
சும்மாவுக்கும் நமக்கும்
இடையிலான உறவு
'சும்மா' இல்லை..

இந்த சும்மாவிற்குள்
அடைக்கலம் புகுந்துதான்
தெரிந்தறிந்து செய்யும்
எத்தனையோ தவறுகள்
தப்பித்துக் கொண்டிருக்கின்றன..

வரையறைகளைக் கடக்கிற
வார்த்தைகளை உச்சரித்தப்
பிறகு உதடுகள்
பூசிக்கொள்கிறச் சாயம்
'சும்மா' சொன்னேன்..

தனிமைகளைத் தகர்க்க
தரிக்கப்படுகிற
அலைப் பேசி
அழைப்புகளின் வெற்றலைகளில்
நிரப்பப்படுவது
'சும்மா'தான் கூப்பிட்டேன்..

எதிர்ப்பார்ப்புகளை
எழுப்பிவிட்டு ஏமாற்றி
எள்ளி நகைக்கும் கேலிகளின்
கீறல்களில் களிம்பு தடவும்
'சும்மா' விளையாடினேன்..

தற்செயலாய் நேரும்
சந்திப்புகளில் உசாவப்படும்
கேள்விகளின் விடைகளாய்
கிறுக்கப்படுகிறது
'சும்மா'தான் இருக்கேன்..

அங்கிங்கெனாதபடி
எங்கும் 'சும்மா'வாய்
ஏளனம் செய்யப்படுகிறது வாழ்க்கை..

சிவா.ஜி
14-04-2008, 01:14 PM
சும்மாவின் ஆதிக்கம் நம் அன்றாட வாழ்வில் மிக அதிகம். சும்மா என்ற சொல் செய்யக்கூடிய பெரும்பாலான காரியங்களைப் பட்டியல் படுத்தி அந்த சும்மாவை சும்மா இருக்க விடாமல் சும்மா புகுந்து விளையாடிவிட்டாய் ஆதி.
(இந்த சும்மாவிற்குள்
அடைக்களம் புகுந்துதான்)இதை ல வாக மாற்றனும்

வாழ்த்துகள் உண்மையாகவே...(சும்மா இல்லை)

ஆதி
14-04-2008, 01:21 PM

திருத்திவிட்டேன் அண்ணா, உண்மைதான் அண்ணா சும்மாவின் போர்வையில்தான் பலவற்றை செய்து கொண்டிருக்கிறோம்..

வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா..

ஷீ-நிசி
14-04-2008, 03:46 PM
"சும்மா" கவிதை போடறீங்களே :)
சும்மாவுக்கான கவிதை சும்மா சூப்பராவே இருக்கு..... ஆதி!

நாகரா
14-04-2008, 03:47 PM
சொல்லறச் சும்மா இருக்கும் ஆதி அருவம்
உச்சரிக்கும் நற்சொல்லே பகவனாம் உருவம்
அந்த ஆதியும் நீரே!
அந்த பகவனும் நீரே!
ஆதி சிவத்தில்
பகவற் சக்தி
எப்போதும் வேரூன்றியே
தன்மையாம் ஒருமையில் சும்மா தனக்குள்ளே இருந்தும்
முன்னிலையாம் இருமையில் சும்மா திடீரென எழுந்தும்
படர்க்கையாம் பன்மையில் சும்மா மளமளவென வளர்ந்தும்
இவ்வாறாக சும்மா செய்யும் திருவிளையாடலைப் போல்
ஆதியாம் நீரும் சும்மா செய்த இந்த அசத்தல் கவிதை
சும்மா சொல்லக் கூடாது
மெய்யாகவே அருமை.
(கீறல்கள் ஆறவே களிம்பு தடவும் விரல்கள்
சும்மா இருக்க முடியாமல்.
அவ்விரல்கள் போல் என் விழிகளும்
எழுத்துப் பிழை கண்டு
சும்மா இருக்க முடியாமல் சுட்டும்.
எழுத்துப் பிழை திருத்தாமல்
சும்மா நாம் இருந்தால்
அம்மெத்தனம் நமக்கு அழகல்ல)
நல்லதோர் கவிக்கு நன்றி ஆதி.

ஆதி
15-04-2008, 06:58 AM
"சும்மா" கவிதை போடறீங்களே :)
சும்மாவுக்கான கவிதை சும்மா சூப்பராவே இருக்கு..... ஆதி!

பின்னூட்டத்திற்கு நன்றி ஷீ

சுகந்தப்ரீதன்
15-04-2008, 07:54 AM
'சும்மா' கூட
சுகம்தான் ஆதி...
சூழ்நிலைகள் சுகமாய்
இல்லாத பட்சத்தில்..!!

ஒற்றை வார்த்தையை
கருவாக்கி உருவாகும்
உன் கவிதைகளுக்கு எனது
வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!!

ஆதி
15-04-2008, 10:11 AM
சொல்லறச் சும்மா இருக்கும் ஆதி அருவம்
உச்சரிக்கும் நற்சொல்லே பகவனாம் உருவம்
அந்த ஆதியும் நீரே!
அந்த பகவனும் நீரே!
ஆதி சிவத்தில்
பகவற் சக்தி
எப்போதும் வேரூன்றியே
தன்மையாம் ஒருமையில் சும்மா தனக்குள்ளே இருந்தும்
முன்னிலையாம் இருமையில் சும்மா திடீரென எழுந்தும்
படர்க்கையாம் பன்மையில் சும்மா மளமளவென வளர்ந்தும்
இவ்வாறாக சும்மா செய்யும் திருவிளையாடலைப் போல்
ஆதியாம் நீரும் சும்மா செய்த இந்த அசத்தல் கவிதை
சும்மா சொல்லக் கூடாது
மெய்யாகவே அருமை.

நல்லதோர் கவிக்கு நன்றி ஆதி.

சும்மாவில் ஜென் தத்துவங்களைப் புகுத்தாலாம் என்றே எண்ணினேன் ஐயா எடுத்தக் கருத்து வேறு பாதையில் பயணித்துவிடக் கூடாது என்பதால் ஆன்மீகத்தை அப்படியே விட்டுவிட்டேன் ஐயா..

பிழைத்திருத்திவிட்டேன் ஐயா..

பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல ஐயா..

ஆதவா
15-04-2008, 10:30 AM
சும்மா - சோம்பேறித்தனம்.

வாழ்க்கை சும்மா ஒன்றும் 'சும்மாவாக' ஏளனம் செய்யப்படுவதில்லை. அதை சும்மா வைத்திருப்பதால்
ஏளனம் செய்யப்படுகிறது. ஆனால் சும்மா' இல்லாமல் நாம் இல்லை.

வெற்றிக்குப் பின்னே கோப்பை உருட்டல், மன்னர்களின் வழக்கமாக இருக்கும். கேள்வி கேட்க
இயலாவிடினும் விடை என்னவோ ' சும்மா தான்'. தவறுகளின் பிண்ணனியில் 'சும்மா' இருப்பது சும்மா தான். ஒவ்வொரு தவறுக்குப் பின்னே சுயநலம் சும்மாவாக ஒளிந்திருக்கிறது. தெரிந்து அறிந்து, புரிந்து செய்யும் தவறுகள் தப்பிக்கலாம். செய்தவனுக்கு ஆதாயமில்லாமல் இல்லை. (எதுவும் சும்மா இல்லைங்க. ஏதாச்சும் இருக்கும்)

சொல்லப்படும் வார்த்தையாவது, பூசிக்கொள்கிற சாயமாக உருப்படுத்தியது சுத்தமான கவிதைத் தனம். சும்மா சொல்லலீங்க.........

சும்மா கூப்பிடுவது./ (கடலை வறுக்க முயல்பவர்கள்/ வறுப்பவர்கள் அதிகம் உபயோகிப்பது.)

ஆக மொத்தத்தில் சும்மா' சற்று வித்தியாசமாக இருந்தாலும் அழுத்தமாக இல்லை. வரையறை கடந்து பேசக்கூடியதும், தெரிந்தறியும் தவறுகளும், மற்றைய கேலிகளும், நெருக்கமானவர்களிடம் மட்டுமே 'சும்மா' சொல்லக் கூடியதாக இருக்கும். உங்களின் ஒவ்வொரு பத்தி 'சும்மாவும்' மூன்றாம் நபரிடம் சொல்லக் கூடியதாக இல்லை.

உசாவப்படும்??

வேலையின்மை - சும்மா'தான் இருக்கேன்...... இறுதியிரு பத்தியில் உள்ள அழுத்தம் ஏனையவற்றை விழுங்குகிறது என்று சொல்லலாம்.

ஆக மொத்தத்தில் ஒரு வித்தியாசப் பாதை நோக்கி உங்கள் பாதை செல்வதைக் காணமுடிகிறது.. அதில் தொடர்ந்து பயணிக்க.

ஆதவன்.

நாகரா
15-04-2008, 10:32 AM
சும்மாவில் ஜென் தத்துவங்களைப் புகுத்தாலாம் என்றே எண்ணினேன் ஐயா எடுத்தக் கருத்து வேறு பாதையில் பயணித்துவிடக் கூடாது என்பதால் ஆன்மீகத்தை அப்படியே விட்டுவிட்டேன் ஐயா..

ஆதி
நீங்கள் சும்மா இருந்து
எடுத்த நற்கருத்துக்கு சுதந்திரம் தந்து
அதுவே தன் பாதையைத் தேர்ந்தெடுத்து
அது உமக்குப் பழக்கமில்லாத வேறு பாதையாயினும்
அதை அனுமதித்து
நற்கருத்து
உம் வழியே
கருப்பு எழுத்தாக விழும்
வெறும் ஊடகமாக
நீர் சும்மா இருந்தால்
ஆன்மீகத்தை அப்படியே
விட்டுவிட வேண்டியதில்லை.
இக உலக வாழ்க்கையையுந் தான்.

இது என் பணிவான கருத்து, உமது புதிய பரிமாணத்தை ஒரு பரிணாமப் பாய்ச்சலிலே பெற என் கருத்து உமக்கு உதவலாம். தவறாகக் கொள்ள வேண்டாம். நன்றி.

kavitha
15-04-2008, 11:17 AM
இந்த சும்மாவிற்குள்
அடைக்கலம் புகுந்துதான்
தெரிந்தறிந்து செய்யும்
எத்தனையோ தவறுகள்
தப்பித்துக் கொண்டிருக்கின்றன.. அகராதியில் இந்த வார்த்தை இருக்கிறதோ இல்லையோ... (யாமறியேன் பராபரேமே...) இனி இதை உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்பதை இக்கவிதை சொல்லிவிட்டது ஆதி. நன்றி. :)

இனி 'சும்மா' இருக்கும் வேலையில்லா பட்டதாரிகளும் 'வேலைதேடிக்கொண்டிருக்கிறேன்' என்று சொல்லிக்கடவது.

ஆதி
15-04-2008, 12:04 PM
ஒற்றை வார்த்தையை
கருவாக்கி உருவாகும்
உன் கவிதைகளுக்கு எனது
வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!!

பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல சுகந்தா..

ஆதி
15-04-2008, 12:18 PM
ஆக மொத்தத்தில் சும்மா' சற்று வித்தியாசமாக இருந்தாலும் அழுத்தமாக இல்லை. வரையறை கடந்து பேசக்கூடியதும், தெரிந்தறியும் தவறுகளும், மற்றைய கேலிகளும், நெருக்கமானவர்களிடம் மட்டுமே 'சும்மா' சொல்லக் கூடியதாக இருக்கும். உங்களின் ஒவ்வொரு பத்தி 'சும்மாவும்' மூன்றாம் நபரிடம் சொல்லக் கூடியதாக இல்லை.

உசாவப்படும்??

நீங்கள் சொன்னதை நானும் உணர்ந்தேன் ஆதவா, கவிதையில் அழுத்தமில்லை தான், தற்செயலாய் பொறியில் தெறித்தது கரு, உடனே மன்றத்தில் தட்டச்சிவிட்டேன்.. கொஞ்சம் நேரமெடுத்து யோசித்திருந்தால் கவிதையை மெருகேற்றிப் பதித்திருக்கலாம்.. எதிர்காலக் கவிதைகளில் இதைக் கவனத்தில் கொள்கிறேன் ஆதவா..

உசாவப்படும் - உசாவுதல்

உசாவுதல் - வினவுதல், விசாரித்தல்

ஆதி
16-04-2008, 01:28 PM
இது என் பணிவான கருத்து, உமது புதிய பரிமாணத்தை ஒரு பரிணாமப் பாய்ச்சலிலே பெற என் கருத்து உமக்கு உதவலாம். தவறாகக் கொள்ள வேண்டாம். நன்றி.

தவறென்று எண்ண என்ன இருக்கிறது.. என்னைத் தெளிய வைத்த ஞான அமுதத்திற்கு நன்றி ஐயா..

அனுராகவன்
17-04-2008, 07:55 AM
சும்மா என்பது சும்மா இருப்பதில்லை..
அதற்கு சோம்பேறி தனம்தான் வரும்..
சிலர் சும்மா என்று தேவையில்லாத செயல் செய்து வருந்துவர்..
தியானம் என்பது கூட சும்மா இருப்பதுதான்..
ஆனால் இருந்தால் அது சிரந்தது..
அதே தவறான செயலை செய்து சும்மா என்றால் அதற்கு செய்யாமல் இருக்கலாம்.
நன்றி ஆதி..