PDA

View Full Version : விடுதலை..



rambal
09-07-2003, 05:06 PM
விடுதலை..

மானிடப் பிறப்பின்
சராசரி சிக்கல்களில்
சிக்கித் தவிக்கிறேன்
சிலந்தியின்
வலையில் அகப்பட்ட
சிறு பூச்சி போலும்..

சிறு புழுவிற்கு
ஆசைப்பட்டு
தூண்டில் முள்ளில்
சிக்கி சீரழியும்
சிறு மீனைப் போலும்..

எவனோ எதற்கோ
விரித்த வலையில்
எதிர்பாராமல் மாட்டி
உயிர் நடுங்க காத்துக்
கொண்டிருக்கிறேன்
ஒரு புள்ளிமானாய்..

தற்போதைய
தேவையெல்லாம்
தற்காலிக
சிறு விடுதலை..

விட்டு விடுதலையான
கூட்டுக் கிளியாகவோ..
கூடை உடைத்து
வெறி கொண்டு
வெளியேறும் லார்வாகவோ..

Nanban
09-07-2003, 05:13 PM
தற்போதைய
தேவையெல்லாம்
தற்காலிக
சிறு விடுதலை..

--------

சிறிய சிறிய
விடுதலைகளே
எல்லோருக்கும்
கிட்டுவது -
மனித முயற்சி கொண்டு
கிட்டுவது.
நிரந்தர விடுதலை
இறைவன் ஒருவனால் மட்டுமே
கொடுக்க முடியும்.

இச்சிறிய விடுதலைக்கே
நிறைய போராட்டங்கள் -
தளைகளை உடைத்தெறிய
பிரத்யேகமான முயற்சிகள் -
சிலர் அறிந்தே செய்கின்றனர்.
சிலர் அறியாமலே செய்கின்றனர்.
அறிந்து செய்பவர் தன்னை உணர்கிறார்.
அறியாது செய்பவரோ
காலமெல்லாம் தன்னைத்
தேடிக் கொண்டேயிருக்கிறார்.........

rambal
09-07-2003, 06:05 PM
அதற்காகத்தான் தற்காலிக சிறுவிடுதலைகள்
கூண்டை விட்டு வெளியேறும் கிளியைப் போலவோ
அல்லது
வெடித்துச் சிதறும் லார்வாகவோ இருக்க வேண்டும் என்றேன்..
இந்த போராட்டம் என்னை அறிந்து செய்வது..
நன்றி நண்பன் அவர்களே..

gankrish
10-07-2003, 05:00 AM
மீண்டும் ராம்பாலின் கை வண்ணத்தில் அருமையான கவிதை.. அதற்க்கு நண்பனின் எதிர் கவிதையும் அருமை.

prabha_friend
10-07-2003, 06:25 AM
விரைவில் சுதந்திர தினத்தை கொண்டாட வாழ்த்துக்கள் .

karavai paranee
10-07-2003, 07:02 AM
அருமையான கவிதை

சிறகு முளைத்தநாளில் இருந்து
சிறை உடைக்க விரும்புகின்றோம்
உடைக்க உடைக்க புதிதுபுதிதாய்
தடைகள் வருகின்றன
சோர மாட்டோம்
விடுதலை கைக்கெட்டும் து{ரத்தில்தான்
ஆனால் விரல்கள்நகா;த்த இப்போதும் யோசனைதான்

poo
10-07-2003, 07:55 AM
யோசித்துக்கொண்டேயிருந்தால்
நகராத விரல்கள் அழுகிக்கொண்டிருப்பதாய்
ஆர்ப்பரிப்பார்கள்.. அதற்காகவேணும்..


-நல்ல கவிதை ராம்.. அடிக்கடி எழுதவேண்டுகிறேன்!!!

karikaalan
12-07-2003, 12:23 PM
தடைகள், தளைகள் இருப்பதுதான் வாழ்க்கைக்கு சிறப்பு சேர்க்கிறது!
முறித்தெறிய, முறித்தெறிய மேலும் மனம் வலிமையடைகிறது;
புத்துணர்வு பெறுகிறது; அடுத்த விடுதலையை விரும்பி நோக்குகிறது.

கவிதை அருமை ராம்பால்ஜி. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்