PDA

View Full Version : நீ



நாகரா
13-04-2008, 06:37 AM
உன் விழி விரிசல்
அதில்
விடியலின் சுடுவரிகள்

உன் மொழியமுதம்
அதில்
ஜீவனின் புது வடிவம்

உன் இதழதரம்
அதில்
காமத்தின் மதுப்படிகம்

உன் முகப்பளிங்கு
அதில்
காதலின் ஒளித்துடிப்பு

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

ஆதி
13-04-2008, 02:20 PM
ரசித்தேன் ஐயா, அழகிய காதல் கவிதை..

அதுவும் சுடுவரிகள், மொழியமுதம், இதழதரம், மதுப்படிகம், முகப்பளிங்கு இந்த வார்த்தைப் பயன்பாடும் அமுதம் + அழகு ஐயா..

பாராட்டுக்கள் ஐயா..

நாகரா
13-04-2008, 02:36 PM
உமது ஊக்க வார்த்தைகளுக்கு நன்றிகள் பல ஆதி.

நாகரா
13-04-2008, 04:05 PM
காலத் துடிப்போடு
கலந்த
காம மௌனம்.

விரல்கள் மீட்டாமலும்
மனத்தில் ஒலிக்கும்
மோகனம்.

ஒலி
வரி
வடிவமின்றி
உணர்ச்சி நிலையில்
இயங்கும் மொழி.

என்னைத் தவிர
எதுவுமே இல்லாத
ஒரு நாத்திகக் கோயில்.

என் தமிழருவியின்
ஜீவ முகடு.

கயமை களைந்த
கருத்தின் கரு.

என் எண்ண வேரைத்
தாங்கும்
மண்ணகம்.

விளையும் விடியலை
ஏற்கும்
விண்ணகம்.

விழிப்பு மயக்கம்.

படைக்கும் இயக்கம்.

வீர மனித விடியல்.

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

சுகந்தப்ரீதன்
15-04-2008, 07:35 AM
காலத் துடிப்போடு
கலந்த
காம மௌனம்.

விரல்கள் மீட்டாமலும்
மனத்தில் ஒலிக்கும்
மோகனம்...

காலத்திற்க்கு
கட்டுப்படாத காமம்..!!
நாதத்தில்
முற்றுப்பெறாத மோகம்..!!
நிறைந்திருக்கும் நெஞ்சம் முழுதும்
என்னைபோல் அல்லவா நீ..!!

வாழ்த்துக்கள் நாகரா அண்ணா..!!

நாகரா
15-04-2008, 07:56 AM
காலத்திற்க்கு
கட்டுப்படாத காமம்..!!
நாதத்தில்
முற்றுப்பெறாத மோகம்..!!
நிறைந்திருக்கும் நெஞ்சம் முழுதும்
என்னைபோல் அல்லவா நீ..!!

வாழ்த்துக்கள் நாகரா அண்ணா..!!

உம் வாழ்த்துக்களுக்கும் பின்னூட்டக் கவிதைக்கும் நன்றி பல, நீ எனக்குப் ப்ரீதமான சுகந்தத் தம்பி