PDA

View Full Version : உயிர்த்துளி பருக வாருங்கள்.

பிரியன்
12-04-2008, 07:25 AM
உயிர்த்துளி பருக வாருங்கள்....

என்னையும் என் கவிதைத்தொகுப்பையும் அறிமுகப்படுத்தும் நெகிழ்வில் நான்.

முதல் தொகுப்பு. அதைவிட இது என் உயிர்த் தொகுப்பு

சின்னச் சின்ன கனவுகளாக, சிறுகச் சிறுகச் சேர்த்த உணர்வுகளை கவிதையாக்கி வாழ்ந்திருக்கிறேன். வாழ்ந்து முடித்திருக்கிறேன்.

இதுவும் ஒரு காதல் தொகுப்ப்புதான். கற்பனைகள் என்றாலும், கனாவுகள் என்றாலும் என் உயிரை அதில் கரைத்திருக்கிறேன்.

என் காதலைப் பற்றியும் நிறைய பேசலாம். ஆனால் இப்போது மெளனமாய் இருப்பதே பிடித்திருக்கிறது. தேவையுமாய் இருக்கிறது. காதல் எனக்குக் கற்றுக் கொடுத்திருப்பது எல்லையற்ற அன்பையும், அதைச் சொல்லக் கூடிய எல்லைகளையும்

என்னைப் பொறுத்தவரை
காலத்தால்
உறவின் பெயர்களை மட்டுமே
மாற்ற முடியும்
அன்பை அல்ல.

கவிதை என் நெடுநாளைய விருப்பம். பதினான்கு பதினைந்து வயதுகளில் என் மைத்துனனும், உயிர் நண்பனுமான செல்வகுமாரோடு ஆரம்பித்த தேடுதல் இன்றூ தொகுப்பாய் மலர்ந்திருக்கிறது. அவனும் நானும் கவிதை பேசி கழித்த இரவுகளின் ஈரமின்னும் எனக்குள் அப்படியே இருக்கிறது.

எழுதிய கணத்திலிருந்து என்னை ஊக்கப்படுத்தும் அப்பா தி.முத்துவுக்கும் நான் சொல்வதையெல்லாம் ரசிக்கும் அம்மா மு.முத்தம்மாளுக்கும் எனது அன்பையும், நன்றிகளையும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. எனது எந்த விருப்பத்துக்கும் தடை சொல்லாத அவர்களது அன்பு, இந்த உலகில் எனக்குக் கிடைத்தற்கரிய செல்வம்.

துபாய், என்வாழ்க்கையை சோலையாக்க்கியிருக்கும் பாலை. நல்ல நண்பர்களை,உறவுகளை எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. எனது தேடல்கள், சிந்தனைகள் ஒரு வடிவம் பெற்றிருக்கிறது. என் பயணத்தை பற்றிய தெளிவை தந்திருக்கிறது. இந்த பாலைப் பிரதேசத்திற்கு என் ஈர முத்தங்கள்.

என் கவிதைகளுக்கு களமாகவும், சோர்ந்த பொழுதில் தாங்கிப் பிடித்த தமிழ்மன்றம்.காம் இணைய தளத்திற்கும், உற்சாக வார்த்தைகளால் என்னை ஊக்குவித்த இளசு அண்ணாவிற்கும், சக குடும்பத்தினராக அன்பு செலுத்திய மன்ற உறவுகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிறமொழி கலப்புகளைத் தவிர்த்து, இனிய தமிழில் கவிதைகள் எழுதிடத் தூண்டுகோலாய் இருந்த 'துவக்கு' இலக்கிய அமைப்பிற்கும், இ.இசாக், கவிமதி, நண்பன், ந.தமிழன்பு மற்றும் நூலாக்கத்தில் துணை நின்ற ஜாபர்சாதிக் பாக்கவி, கடற்கரய் ஆகியோருக்கும் எனது நன்றிகள்

சனங்களின் மொழியை கவிதை மொழியாக்கிய சனங்களின் கவிஞர் த.பழமலய் அவர்கள் இத்தொகுப்பிற்கு அணிந்துரை அளித்திருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. அவரின் அன்புக்கு நன்றிகள்

என் உயிர்த்துளியைப் பருக வழிவிட்டு விடைபெறுகிறேன்

(நூலுக்கான என்னுரை)

**
இனிய மன்ற உறவுகளுக்கு, ஒரு அன்பான அழைப்போடு நீண்ட இடைவெளிக்குபின் மன்றத்தில் நான். நமது மன்றத்தில் பிரியன் என்ற பெயரில் நான் உளறல்கள் என்னும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதைகள் இப்போது கவிதை தொகுப்பாக மலர்ந்திருக்கிறது. உளறல்கள் தீபங்கள் பேசுமாகி திருத்தப்பட்டு இறுதியாக ''உயிர்த்துளியாக உங்கள் முன்னே வந்திருக்கிறது. தமிழ்மன்றத்தை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பனின் ''விரியக்காத்திருக்கும் உள்வெளி''யோடு துபாயில் கவிஞர் இன்குலாப் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள, 18-04-2008 அன்று, கராமா எஜுஸ்கேன் அரங்கில், சிறப்புற இந்த விழா நடைபெறவிருக்கிறது. இதற்கான விழா அழைப்பிதழ் என் வலைப்பூவில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற அன்புடன் அழைக்கின்றேன்…

இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

பிரியன்

ஆதி
12-04-2008, 07:55 AM
விழாவும் கவிதை தொகுப்பும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் ப்ரியன்

ஆதவா
12-04-2008, 07:56 AM
ப்ரியன்........

உங்கள் உயிர்த்துளிகளைப் பருக எமக்கு அளவுகடந்த ஆவல்.

உங்களின் இந்த வெளியீட்டிற்கு எமது வணக்கத்திற்குரிய வாழ்த்துகள்.

உங்கள் மனதிலிருந்து உரித்தெடுத்த காதல் கவிதைகளை அள்ளி எடுத்துத் தொகுப்பாக்கி நூலாகப் பார்க்கும் போது ஏற்படும் பரவசம், நிலவை எட்ட நினைக்கும் மனிதன், நிலவில் கால்வைத்ததைப் போன்ற மகிழ்ச்சிக்கு ஒப்பாக இருக்கும்.

தமிழ்மன்ற நினைவுகூறல்...... தாய்க்காற்றும் நன்றிக்கடன். ஆனால் அதை கடன் என்று கூறிவிட முடியுமா? இல்லை. அது தாய்க்கு இடும் முத்தம்.

துவண்டுகிடக்கும் மனிதனுக்கு ஆகாரம் இடும் உபசரிப்பாக உங்களிருவரின் திரிகளும் எமது கலைப்பசிக்குத் தீனி. அல்ல அல்ல. தீனியல்ல அது.. ஒரு முழுமையடைந்த கவிஞனின் பேனா துளிகள்.

அத்துளிகள் எம்மை மேலும் நனைக்க வேண்டுமென்பது எமது ஆவலும்......

உங்கள் உயிர்த்துளியும் நண்பனின் உயிர்வெளியுமான கவிதைத் தொகுப்பு இந்தியாவில் கிடைக்குமா ? அவ்வாறாயின் எமக்கு அதை தெரிவியுங்கள். வாங்கி என் மனம் சஞ்சரிக்கும் பிரபஞ்சக் கூட்டுக்குள் பத்திரப்படுத்துகிறேன்.

நன்றியுடன்
ஆதவன்

meera
12-04-2008, 08:18 AM
வாழ்த்துகள் அண்ணா. கவிதை மலர் அழகாய் மலர வாழ்த்துகள்.

பாரதி
12-04-2008, 08:22 AM
மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரியன்.

நீங்கள் ஏற்றி வைத்த தீபங்கள் தமிழ்மன்றத்தில் என்றும் பேசும்.

நண்பர் நண்பனின் அழைப்பில் கூறியது போல உங்கள் அழைப்பைக் கண்டும் அளவற்ற ஆனந்தமும், பெருமையும் அடைகிறேன்.

உங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள்...

நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெறவும், மென்மேலும் எழுதி புத்தகங்களை வெளியிடவும் வாழ்த்துக்கள்.

மனோஜ்
12-04-2008, 09:01 AM
அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாய் அமைந்து
கவிதை நூல் வெளிவர வாழ்த்துக்கள்

முயற்சிகள் என்றும் வினாவதில்லை
கவிதைகள் என்றும் கரைந்து பொவதில்லை
பலருக்கு என்றும் பயணாய் அமைய வாழ்த்துக்கள்

சிவா.ஜி
12-04-2008, 09:08 AM
மன்ற நந்தவனத்தின் மூத்த பறவைகள் கவிச்சிறகுடன் பறக்கும் காட்சியைக்காண மனம் மகிழ்கிறது. பிரியன் உங்கள் கவிதைகளில் கலந்திருக்கும் காதலை மிக ரசித்தவன் நான். இன்று நூலாகும் உங்கள் கவித்தொகுப்பு தமிழ்கூறும் அனவரையும் மகிழ்விக்குமென்பது நிச்சயம். வாழ்த்துகள் பிரியன்.

kavitha
12-04-2008, 09:24 AM
அன்பு பிரியன் சொல்லிலடங்காத மகிழ்ச்சியோடு இப்பதிவை வாசிக்கிறேன். ஒரு கலைஞன் தன் படைப்பை வெளியிடுவது என்பது எத்தகைய இன்பம்! இதை மறவாமல் எங்களோடு பகிர்ந்துக்கொண்டமைக்காக நன்றிகள் பல. நண்பன் காட்டிய பாதையில் நானும் ஒரு வழிப்பாதை சிறு நெருஞ்சிப்பூ என்பதில் பெருமிதம் கொள்கிறேன். குன்றின் மேலிட்ட விளக்காய் உங்கள் தீபங்கள் பேசும்- உயிர்த்துளி பேச வாழ்த்துகள் பல.
தொடர்ந்து எங்களோடு இருங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

நாகரா
12-04-2008, 11:41 AM
வெளிவர இருக்கும் உம் "உயிர்த்துளி" தொகுப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், பிரியன்

ஓவியன்
12-04-2008, 02:34 PM
அன்பான பிரியன்..!!

இணையத்தில் ஆங்காங்கே உதித்த கவிதைத் துளிகள், உயிர்த்துளியாக பொங்கிப் பிரவாகிப்பதில் கொள்ளை மகிழ்சி...!!

நூல் வெளியீடு இனிதே அமைந்திட என் மனதார்ந்த வாழ்த்துகளும்..!!

ஷீ-நிசி
13-04-2008, 12:15 AM
வாழ்த்துக்கள் ப்ரியன் அவர்களே.. ஒவ்வொரு கலைஞனுக்கும் அவன் படைப்புகள் வெளிவரும் அந்நாள் மறக்கமுடியாத ஒன்று. உங்கள் படைப்புகளும் வெளிவந்து நீங்கள் புகழ்பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அனுராகவன்
13-04-2008, 12:25 AM
என் வாழ்த்துக்களும் நண்பரே!!
தொடர்ந்து உஙகளுக்கு மகிழ்ச்சி பொங்கட்டும்..
என் நன்றி!!

பிரியன்
14-04-2008, 07:54 AM
விழாவும் கவிதை தொகுப்பும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் ப்ரியன்

நன்றி ஆதி. அமீரகத்தில் இருக்கும் மன்ற உறுப்பினர்கள் தங்கள் வருகையையும் உறுதி செய்யலமே:)

பிரியன்
14-04-2008, 07:59 AM
ப்ரியன்........

தமிழ்மன்ற நினைவுகூறல்...... தாய்க்காற்றும் நன்றிக்கடன். ஆனால் அதை கடன் என்று கூறிவிட முடியுமா? இல்லை. அது தாய்க்கு இடும் முத்தம்.

துவண்டுகிடக்கும் மனிதனுக்கு ஆகாரம் இடும் உபசரிப்பாக உங்களிருவரின் திரிகளும் எமது கலைப்பசிக்குத் தீனி. அல்ல அல்ல. தீனியல்ல அது.. ஒரு முழுமையடைந்த கவிஞனின் பேனா துளிகள்.

அத்துளிகள் எம்மை மேலும் நனைக்க வேண்டுமென்பது எமது ஆவலும்......

உங்கள் உயிர்த்துளியும் நண்பனின் உயிர்வெளியுமான கவிதைத் தொகுப்பு இந்தியாவில் கிடைக்குமா ? அவ்வாறாயின் எமக்கு அதை தெரிவியுங்கள். வாங்கி என் மனம் சஞ்சரிக்கும் பிரபஞ்சக் கூட்டுக்குள் பத்திரப்படுத்துகிறேன்.

நன்றியுடன்
ஆதவன்

வாழ்த்திற்கு நன்றி ஆதவன். வெளியீட்டு நிகழ்ச்சிக்குபின் புத்தகம் கிடைக்கும் இடத்தை தெரியப்படுத்துகிறேன்.

மன்றத்தை நினைவுகூர்ந்தது இயல்பானதே! என்னை எனக்கு மீட்டுக் கொடுத்ததில் மன்றமும், அப்போதைய உறவுகளின் அன்பும் அளவிட இயலா பங்களிப்பைச் செய்திருக்கின்றது. அந்த உண்மையை எங்கும் எந்த சூழலிலும் சொல்வதில் தயக்கமேதுமில்லை. முன்பே தெரிவித்தது போல விலகியிருத்தல் என்பது நல்லெண்ணத்தின்பால் எடுத்த முடிவே!

பிரியன்
14-04-2008, 08:00 AM
வாழ்த்துகள் அண்ணா. கவிதை மலர் அழகாய் மலர வாழ்த்துகள்.

நன்றி மீரா.

பிரியன்
14-04-2008, 08:01 AM
மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரியன்.

நீங்கள் ஏற்றி வைத்த தீபங்கள் தமிழ்மன்றத்தில் என்றும் பேசும்.

நண்பர் நண்பனின் அழைப்பில் கூறியது போல உங்கள் அழைப்பைக் கண்டும் அளவற்ற ஆனந்தமும், பெருமையும் அடைகிறேன்.

உங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள்...

நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெறவும், மென்மேலும் எழுதி புத்தகங்களை வெளியிடவும் வாழ்த்துக்கள்.

வாழ்த்திற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி. அமீரகத்தில் இருந்தால் அவசியம் கலந்து கொள்ளுங்கள்

பிரியன்
14-04-2008, 08:01 AM
அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாய் அமைந்து
கவிதை நூல் வெளிவர வாழ்த்துக்கள்

முயற்சிகள் என்றும் வினாவதில்லை
கவிதைகள் என்றும் கரைந்து பொவதில்லை
பலருக்கு என்றும் பயணாய் அமைய வாழ்த்துக்கள்

நன்றி மனோஜ்.

பலருக்கு பயனாய் என் எழுத்துக்கள் இருக்க வேண்டுமென்பதே என் அவா!

பிரியன்
14-04-2008, 08:02 AM
மன்ற நந்தவனத்தின் மூத்த பறவைகள் கவிச்சிறகுடன் பறக்கும் காட்சியைக்காண மனம் மகிழ்கிறது. பிரியன் உங்கள் கவிதைகளில் கலந்திருக்கும் காதலை மிக ரசித்தவன் நான். இன்று நூலாகும் உங்கள் கவித்தொகுப்பு தமிழ்கூறும் அனவரையும் மகிழ்விக்குமென்பது நிச்சயம். வாழ்த்துகள் பிரியன்.

நன்றி சிவா.ஜி

பிரியன்
14-04-2008, 08:04 AM
அன்பு பிரியன் சொல்லிலடங்காத மகிழ்ச்சியோடு இப்பதிவை வாசிக்கிறேன். ஒரு கலைஞன் தன் படைப்பை வெளியிடுவது என்பது எத்தகைய இன்பம்! இதை மறவாமல் எங்களோடு பகிர்ந்துக்கொண்டமைக்காக நன்றிகள் பல. நண்பன் காட்டிய பாதையில் நானும் ஒரு வழிப்பாதை சிறு நெருஞ்சிப்பூ என்பதில் பெருமிதம் கொள்கிறேன். குன்றின் மேலிட்ட விளக்காய் உங்கள் தீபங்கள் பேசும்- உயிர்த்துளி பேச வாழ்த்துகள் பல.
தொடர்ந்து எங்களோடு இருங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி கவிதா. ஆதவனுக்கான பதிலிலே குறிப்பிட்டிருக்கிறேன். மன்றத்தை நினைவு கூர்ந்தது இயல்பான ஒன்றே! உங்களுடைய கவிதைகளையும் நூலாக காணும் ஆவல் அதிகரிக்கிறது. விரைவில் அந்த ஆவலை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்

பிரியன்
14-04-2008, 08:04 AM
வெளிவர இருக்கும் உம் "உயிர்த்துளி" தொகுப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், பிரியன்

வாழ்த்திற்கு நன்றி நாகரா

பிரியன்
14-04-2008, 08:05 AM
வாழ்த்துக்கள் ப்ரியன் அவர்களே.. ஒவ்வொரு கலைஞனுக்கும் அவன் படைப்புகள் வெளிவரும் அந்நாள் மறக்கமுடியாத ஒன்று. உங்கள் படைப்புகளும் வெளிவந்து நீங்கள் புகழ்பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

வாழ்த்திற்கு நன்றி ஷீ-நிசி.

பிரியன்
14-04-2008, 08:06 AM
அன்பான பிரியன்..!!

இணையத்தில் ஆங்காங்கே உதித்த கவிதைத் துளிகள், உயிர்த்துளியாக பொங்கிப் பிரவாகிப்பதில் கொள்ளை மகிழ்சி...!!

நூல் வெளியீடு இனிதே அமைந்திட என் மனதார்ந்த வாழ்த்துகளும்..!!

வாழ்த்திற்கு நன்றி ஓவியன்

பிரியன்
14-04-2008, 08:08 AM
என் வாழ்த்துக்களும் நண்பரே!!
தொடர்ந்து உஙகளுக்கு மகிழ்ச்சி பொங்கட்டும்..
என் நன்றி!!

நன்றி அனு.

புதிய உறவுகளின் உற்சாகமும், அன்பும், வாழ்த்துகளும் மனதிற்கு இதமாகவும் நெகிழ்வாகவும் இருக்கிறது.

உறவுகளுக்கு என் நன்றிகள்

சுகந்தப்ரீதன்
14-04-2008, 08:11 AM
மேலும் பலக் கவிதை தொகுப்புகளை தந்து அனைவருக்கும் தமிழை பருக தாருங்கள் நண்பரே..!!

உங்களின் 'உயிர்துளி' வெளியீட்டு விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் நண்பரே..!!

நம்பிகோபாலன்
14-04-2008, 08:15 AM
உங்களின் "உயிர்துளி' வெளியீட்டு விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் "

அமரன்
14-04-2008, 06:50 PM
அன்பு பிரியன்...
உங்கள் உயிர் துளி அனைவரையும் சென்றடைய இந்நூல் சிறந்த ஊடகமாக அமைய வாழ்த்துகிறேன். இந்நூலிலிருந்து ஆரம்பிக்கும் கவிதைகளின் அச்சுப்பயணம் தொடர வேண்டுகிறேன்.

kavitha
15-04-2008, 11:03 AM
வெளியீட்டு நிகழ்ச்சிக்குபின் புத்தகம் கிடைக்கும் இடத்தை தெரியப்படுத்துகிறேன்
நன்றி பிரியன். நிகழ்ச்சிகள் எதிர்பார்த்தைவிட சிறப்பாக நடைபெறவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். உங்கள் அடுத்த பதிவைக்காணும் ஆவலோடு...

கவிதா