PDA

View Full Version : வாழ்க்கையின் மௌன ஓவியம்...!



shibly591
12-04-2008, 05:24 AM
வாழ்க்கையின் மௌன ஓவியம்...!
எம்.ரிஷான் ஷெரீப்

எதனாலும் நிற்காமலும்
எதுவாகவும் ஆகாமலும்
எப்படிப் போகிறது வாழ்க்கை...?

சடுதியாய்ச் சந்திப்புகள் - குருதிச்
சகதியாய் விபத்துகள்,
எவராலும் தடுக்க முடியாதவையாக
அன்றாடம் நிகழ்கின்றன.

விரும்பியபடியே வாழ்க்கையெனினும்,
வாழ்க்கையின் மௌன ஓவியத்தை
விரும்பிய நிறங்களைக் கொண்டு
வரைய முடிவதேயில்லை !

வாழ்க்கை போகிறது
அதனுடனே நானும்...
சிலவற்றைப் பெற்றுக் கொண்டும்...
நிறைய இழந்து கொண்டும்...

எனது நண்பரது கவிதை இது...நீங்களும் இரசியுங்கள்

M.Rishan Shareef
12-04-2008, 05:24 AM
எதனாலும் நிற்காமலும்
எதுவாகவும் ஆகாமலும்
எப்படிப் போகிறது வாழ்க்கை...?

சடுதியாய்ச் சந்திப்புகள் - குருதிச்
சகதியாய் விபத்துகள்,
எவராலும் தடுக்க முடியாதவையாக
அன்றாடம் நிகழ்கின்றன.

விரும்பியபடியே வாழ்க்கையெனினும்,
வாழ்க்கையின் மௌன ஓவியத்தை
விரும்பிய நிறங்களைக் கொண்டு
வரைய முடிவதேயில்லை !

வாழ்க்கை போகிறது
அதனுடனே நானும்...
சிலவற்றைப் பெற்றுக் கொண்டும்...
நிறைய இழந்து கொண்டும்...

Keelai Naadaan
12-04-2008, 03:06 PM
யதார்த்த வாழ்க்கையை சுருக்கமாய் சொல்கிறது.
பாராட்டுகள்.

M.Rishan Shareef
15-01-2009, 07:09 AM
கருத்துக்கு நன்றி நண்பர் கீழை நாடான்

M.Rishan Shareef
15-01-2009, 07:10 AM
இணையத்தில் எழுதிய முதற்கவிதை இது. தமிழ்மன்ற நண்பர்களுக்காக இங்கிட்டமைக்கு நன்றி நண்பர் ஷிப்லி !

அறிஞர்
15-01-2009, 01:06 PM
விரும்பியபடியே வாழ்க்கையெனினும்,
வாழ்க்கையின் மௌன ஓவியத்தை
விரும்பிய நிறங்களைக் கொண்டு
வரைய முடிவதேயில்லை !

அழகான கவிதை ரிஸ்வான்...
இறைவன்!! தான் விரும்பிய நிறங்களால்
சித்திரம் தீட்டிக்கொண்டிருக்கிறார்...
இதில் நாம் என்ன செய்ய.....

அக்னி
15-01-2009, 03:23 PM
ஷிப்லி அவர்களாற் பதியப்பட்ட இக்கவிதை,
எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள் மன்றத்தில் இணைந்துகொண்டதையடுத்து,
கவிஞரின் திரி ஆக்கப்படுகின்றது.
அத்தோடு, திரி உரிய இடத்திற்கும் மாற்றப்படுகின்றது.

ஷிப்லி அவர்களும் இதனை வரவேற்பார், என்றே நம்புகின்றோம்.

நன்றி!

பொறுப்பாளர்
~அக்னி

M.Rishan Shareef
16-01-2009, 06:15 AM
அன்பின் அறிஞர்,
கருத்துக்கு நன்றி நண்பரே !

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
17-01-2009, 02:58 PM
அருமையான கவிதை. உங்கள் இணைய தளத்தில் உங்கள் கவிதைகளை நிறைய படித்திருக்கிறேன். உங்கள் தமிழ் மன்ற விஜயம் எனக்கு மிகுந்த மகிழ்வை தருகிறது.

நேசம்
17-01-2009, 06:51 PM
வாழ்க்கை இறைவனின் நியதிப்படி தான் நடக்கிறது.அதை (எதார்த்ததை) உணர்த்தும் கவிதை.வாழ்த்துக\ல்

சிவா.ஜி
17-01-2009, 08:38 PM
வாழ்க்கையை அதன் போக்கில் போகவிட்டு, சிலதை பெற்றுக்கொண்டும், சிலதை இழந்துகொண்டும் செல்லும் கவிஞரின் வரிகள் அனைத்தும் அருமை. எதார்த்தமான வரிகளை சிலாகிக்கிறேன். வாழ்த்துகள் மன்ற புதுக்கவி ரிஷான்.

M.Rishan Shareef
25-01-2009, 11:59 AM
அன்பின் ஜுனைத் ஹஸனீ,
உங்களை இங்கு சந்திக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி.
நன்றி நண்பரே !

M.Rishan Shareef
25-01-2009, 11:59 AM
அன்பின் நேசம்,
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef
25-01-2009, 12:00 PM
அன்பின் சிவா,
உங்கள் கருத்துக்கள் ஊக்கம் தருகின்றன. நன்றி நண்பரே !

ஓவியன்
26-01-2009, 07:12 AM
முதலில் அழகிய கவிதைக்கு என் மனதார்ந்த பாராட்டுக்கள் றிஷான்..!!

வாழ்க்கையென்ற ஆற்று வெள்ளத்தில் சிக்குண்ட துரும்பாக இல்லாது, விரும்பியவாறு நீந்தும் தகமையுள்ள மீனாக இருக்க எல்லாச் சந்தர்பங்களும் இடம் கொடுப்பதில்லைத்தான் றிஷான் ஷெரீப்...

இருந்தாலும், அலை அள்ளிப் போகும் துரும்பாக இல்லாது, வேண்டும் போது அலையின் திசையிலும் வேண்டாத போது எதிர் நீச்சல் போட்டும் வாழ்க்கையை வகுத்துக் கொள்ளும் புத்திசாலி மீனாக இருக்க போராடுவோம் றிஷான்..!! :)

M.Rishan Shareef
05-02-2009, 02:56 PM
அன்பின் ஓவியன்,
//முதலில் அழகிய கவிதைக்கு என் மனதார்ந்த பாராட்டுக்கள் றிஷான்..!!

வாழ்க்கையென்ற ஆற்று வெள்ளத்தில் சிக்குண்ட துரும்பாக இல்லாது, விரும்பியவாறு நீந்தும் தகமையுள்ள மீனாக இருக்க எல்லாச் சந்தர்பங்களும் இடம் கொடுப்பதில்லைத்தான் றிஷான் ஷெரீப்...

இருந்தாலும், அலை அள்ளிப் போகும் துரும்பாக இல்லாது, வேண்டும் போது அலையின் திசையிலும் வேண்டாத போது எதிர் நீச்சல் போட்டும் வாழ்க்கையை வகுத்துக் கொள்ளும் புத்திசாலி மீனாக இருக்க போராடுவோம் றிஷான்..!!//

பெயரைப் போலவே அழகான, ஆழமான, சிந்தனையைத் தூண்டும் கருத்தினைத் தந்திருக்கிறீர்கள். மிகக் காத்திரமான கருத்து. நன்றி நண்பரே :)