PDA

View Full Version : இது



நாகரா
12-04-2008, 02:57 AM
கனலின்
விதைகள் விழுந்து
இருண்ட பூமியின்
கதவுகள் திறந்து
முளைக்கும்
ஒளிக் குருத்து
இது.

மனவெளிகள்
இரவுகளைத் துறந்து
யதார்த்தப் பகல்களை
மேயத் தொடங்கும்
புதுயுக நிஜம்
இது.

இமைகளோடு
கனவுகளும் ஒதுங்க
விழிகள்
வழிகளைத் தேடும்
விழிப்புத் தவம்
இது.

சிறகுகள் இருந்தும்
இது வரை
சிறையின் உறவில்
வளர்ந்த சிந்தை
பூண்ட
சுதந்திரத் துறவு
இது.

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

ஆதி
12-04-2008, 07:11 AM
வெகு நாளுக்கு பிறகு பழையப் புதுக்கவிதைப் பாணியில் ஒரு கவிதையை வாசித்ததில் மகழ்ச்சி..

ஒவ்வொருப் பத்திக்கும் ஒருக் கருத்தைச் சொல்வதுதானே அன்றையப் புதுக்கவிஞர்களின் வழக்கம்..

முளைத்து மெல்ல வளர்ந்து, கிளைத்து விரிகிறது ஞானம் வாழ்த்துக்கள் ஐயா..

நாகரா
12-04-2008, 10:30 AM
உம் வாழ்த்துக்களுக்கு நன்றி ஆதி.

அனுராகவன்
13-04-2008, 07:23 AM
நன்றி நாகரா..
மிக தெளிவான கவி..
என் வாழ்த்துக்கள்!!

நாகரா
13-04-2008, 07:25 AM
உம் வாழ்த்துக்களுக்கு நன்றி அனு.