PDA

View Full Version : ஒக்கேனக்கல் பிரச்சனையில் கவிப்பேரரசர் வைரமுத்துவின் பேச்சு



பூமகள்
10-04-2008, 01:42 PM
மன்ற சொந்தங்களே..!!

ஒக்கேனக்கல் பற்றிய விவாதம் சூடாக பொதுவிவாதங்களில் போய்க்கொண்டிருக்க, பூவும் புதிதாக ஆரம்பிச்சிருச்சா என்று நினைக்க வேண்டாம்.

கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி, தமிழ் திரையுலக கலைஞர்கள் குழுமி, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தி, கர்னாடகா அரசின் ஒக்கேனக்கல் தண்ணீர் தர மறுக்கும் முடிவுக்கு கடும் கண்டனம் அளித்தது யாவரும் அறிந்ததே..!!

அதன் நேரலையை கலைஞர், இசையருவி மற்றும் சன் நியூஸ் அலைவரிசைகள் ஒளிபரப்பின.

அந்த சமயத்தில், கவிப்பேரரசு வைரமுத்துவின் பேச்சு நிச்சயம் வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களையும் தாங்கி வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் நான் அவரது பேச்சை ஒலிப்பதிவாக்கினேன்.

இதை மன்றத்தில் பதிய கடந்த சில நாட்களாக முயன்று நேரமின்மையால் செய்ய முடியவில்லை.

இன்று.. அந்த அற்புதமான சந்தர்ப்பம் வாய்த்துவிட்டது.

கவிப்பேரரசர் வைரமுத்து அவர்களின் உரையாடலை ஒலி வடிவில் இங்கே பதிவிறக்கிக் கேளுங்கள்.

பதிவிறக்க சுட்டிகள்:

ஏ.எம்.ஆர் வடிவம் (http://www.megaupload.com/?d=7UBKYO6U)
எம்.பி.3 வடிவம் (http://www.megaupload.com/?d=YY6V1UYY)

இங்கே மொழிகளும் தேசங்களும் கடந்து நேசங்கள் இருக்கும் தமிழ் மன்றத்தில் எல்லாரும் இதைத் தனித்துப் பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

தண்ணீர் பிரச்சனை உலகலாவிய பிரச்சனை என்ற ரீதியில் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஷீ-நிசி
10-04-2008, 02:00 PM
நான் இதை செய்திதொகுப்பில் கேட்டேன்... மிகப் பிரமாதமாகவே பேசினார்.

பூமகள்
10-04-2008, 05:16 PM
நான் லைவ் ஓடிட்டு இருக்க இருக்க பதிவாக்கினேன் ஷீ..!!
அதனால் இன்னுமே எதிர்பார்ப்போடு கேட்டுக் கொண்டே பதிவாக்கினேன்.

பின்னூட்டமிட்டமைக்கு நன்றிகள் ஷீ..!

இதயம்
10-04-2008, 05:23 PM
அன்றைய தினம் கவிஞரின் நிதான, அழகான, விளக்கங்களை உள்ளடக்கிய பேச்சு மிகவும் அற்புதமாக இருந்தது. கவிஞர்கள் எழுதும் கவிதைகள் தான் அற்புதம் என்றால் அவர்கள் பேசுவதும் கவிதை போல இருக்கிறது. வழக்கமாக வைரமுத்துவின் பேச்சில் குரல், சொல், பொருள் எல்லாம் அற்புதமாக இருக்கும்...! அன்று அந்த அனல் சூழ்நிலையில் அழகு தமிழில் அலங்காரமாய் பேசி சூட்டை தணித்த பனிக்கட்டிகள் கவிஞரின் வார்த்தைகள்..!!

அதை இரசித்து, பதிவு செய்து இங்கு அளித்த தங்கைக்கு என் நன்றிகளும், பாராட்டுக்களும்..!!

பூமகள்
10-04-2008, 05:30 PM
உண்மை தான் இதயம் அண்ணா..!!

இயக்குநர் சேரனும் வெகுண்டு எழுந்து பல நல் செய்திகளைச் சொன்னாரென்று அறியப் பெற்றேன்..!!

எப்படியோ நல்ல தீர்வு வந்தால் சரி தான்..!!

உங்களின் பாராட்டுதலுக்கு நன்றிகள் அண்ணா.
உங்களின் ஊக்கமே.. இன்னும் இன்னும் நல்ல விசயங்களைப் பதிவாக்கிப் பதியச் செய்கிறது. :)