PDA

View Full Version : இணையம் குறித்த சில தகவல்கள்



அனுராகவன்
10-04-2008, 09:33 AM
இணையம் குறித்த சில தகவல்கள்

1957ல் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்கை ரஷ்யா விண்ணில் ஏவியது. இது அமெரிக்க அரசாங்கத்தின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அறிவியல் துறையிலும், ராணுவத் துறையிலும் தனது மேலாண்மையை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. இதற்காக ஆர்பா (ARPA) என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்தியது. இந்நிறுவனம் வான்வழியாக அமெரிக்க ராணுவ மையங்களின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்ற ஆராய்ச்சியில் இறங்கியது. அமெரிக்காவின் ஒரு பகுதியில் இருக்கும் ராணுவ மையம் தாக்கப்பட்டால், அதில் இருக்கும் முக்கிய தகவல்கள் அழிக்கப்பட்டு விடும். அதே நேரத்தில் எதிர்த் தாக்குதல் கொடுக்க அந்த தகவல்கள் மற்ற ராணுவ மையங்களுக்கு தேவைப்படும். எனவே ராணுவ மையங்களுக்கு இடையே ஒரு தொடர்பு வலையை ஏற்படுத்தி அதில் தகவல்களைப் போட்டு வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.

சோதனை முயற்சியாக 1969 அக்டோபர் மாதம் இரண்டு கல்வி நிறுவனங்களில் இருக்கும் கணினிகள் தொடர்பு வலை மூலம் இணைக்கப்பட்டன. படிப்படியாக இந்த ஆராய்ச்சி முன்னேற்றமடைந்து, அமெரிக்க ராணுவ மையங்களுக்கிடையே ஒரு முழுமையான தொடர்பு வலை ஏற்படுத்தப்பட்டது. 1990ல் வட அமெரிக்காவில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தொடர்பு வலைக்குள் கொண்டு வரப்பட்டன. இந்த தொழில்நுட்பம் ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது. 1990களுக்குப் பின் ஏற்பட்ட கணினித் துறையில் ஏற்பட்ட அசுர வளர்ச்சிக்குப் பின், இணையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை தன்னிச்சையான அமைப்புகளிடன் அமெரிக்க அரசு வழங்கியது. இதற்குப் பிறகுதான் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இணையமும், இணையதளங்களும் உருவாயின.