PDA

View Full Version : இன்னொரு பாப்பா!lenram80
09-04-2008, 10:44 PM
கற்பக மரம் இல்லை!
காமதேனு இல்லை!

இருந்தும்..

பார்த்தவை எல்லாம்
கேட்ட உடனே எனக்குச் சொந்தம்!

கேட்டவை எல்லாம்
பார்த்த உடனே எனக்கு பந்தம்!

ஒரே மகளாய் உலாவி வந்தேன்!
ராஜ குமாரியாய் பவனி வந்தேன்!

அம்மா அப்பாவின் நான்கு விழிகளில்
ஒரே மீனாய் தவழ்ந்து வந்தேன்!

என் கண்ணே! என் உயிரே! என் செல்லமே!
உன்னால் தானடி என் நாள் கூடுதடி!
உன் சிரித்த முகத்தை பார்த்தால்
என் துக்கம் சொல்லாமல் ஓடுதடி!

என்று சொல்லும் அம்மாவை கட்டி அணைத்து தூங்குவேன்!
என்று சொல்லும் அப்பாவை எட்டி முத்தம் வாங்குவேன்!

ஒரு நாள் கண் விழிக்கையில்
நான் கட்டி அணைத்திருந்தது
என் அம்மை இல்லை! பொம்மை!

எட்டிப் பார்த்தால் என் அம்மா அப்பா
அணைத்துக் கொண்டு இன்னொரு பாப்பா!

நான் என்ன தவறு செய்தேன்?
எனை விடுத்து எதற்கு இன்னொன்று?

அப்பா அருகில் வந்து
கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்!
அந்த பாப்பாவின் கன்னத்தில்!

என் திசை பார்த்து "அக்கா பாரு" என்றார்!
நானும் திரும்பி பார்த்தேன்!
அக்கா நான் ஆனேன் என்று தெரியாமல்!

என் கண்ணே! என் உயிரே! என் செல்லமே!
உன்னால் தானடி என் நாள் கூடுதடி!
உன் சிரித்த முகத்தை பார்த்தால்
என் துக்கம் சொல்லாமல் ஓடுதடி!
இப்போது அந்த தங்கை பாப்பாவிடம்!

அம்மாவை கட்டி அணைத்திட ஏங்குகிறேன்!
அப்பாவை எட்டி முத்தமிட பெருமூச்சு வாங்குகிறேன்!

இனியவள்
10-04-2008, 08:12 AM
கவிதையில் ஓரு வித ஏக்கம்
சேர்ந்த்து விளையாடிட
பிஞ்சு விரல் பிடித்து நடந்திட
ஓரு துணை கிடைத்ததை எண்ணி
மகிழ்ந்திட மறந்து மனம் தவிக்கிறது
பாசத்தினை பங்கு போட்டிட ஓரு
குஞ்சுப் பறவை வந்ததை எண்ணி..

வாழ்த்துக்கள் லெனின் அழகிய கவிதைப் படைப்புக்கு :)

kavitha
11-04-2008, 12:08 PM
அப்பா அருகில் வந்து
கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்!
அந்த பாப்பாவின் கன்னத்தில்!

அழகிய இந்த மூன்று வரிகள் மொத்த கவிதையின் ஹைக்கூ..

இந்த நிலை என் மகளுக்கு வேண்டாமென்றே ஒரே செல்லக்குழந்தையாம்.

ஷீ-நிசி
13-04-2008, 02:37 AM
குழந்தை அக்காவாய் மாறிவிட்டது.... இன்னொரு குழந்தை பிறந்தவுடனே... அன்பும் பாசமும் தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதாய் ஒரு உணர்வு பிஞ்சு அவள் உள்ளத்திலே... அந்த உணர்வுகளை கவிதையாக்கியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்!

லெனின்... உங்க கவிதைகளை ஒருவித எதிர்பார்ப்போடே படிப்பேன்...
ஆனால் இந்த கவிதையில் உங்க ஸ்டைல் காணவில்லை..உங்களின் முந்தைய கவிதைகளோடு ஒப்பிடும்போது.....

எனினும் வாழ்த்துக்கள்..

அனுராகவன்
13-04-2008, 06:09 AM
ஆகா !!அற்புதமான கவிதை..
நல்ல வரிகள்..!!
வாழ்த்துக்கள் லெனின் அழகிய கவிதைப் படைப்புக்கு... !!~~
என்றும் அன்புடன்
அனு..

சாலைஜெயராமன்
13-04-2008, 07:49 AM
நிலையற்றதுதானே மனித மணம். அதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றுவருகிறோம். அனைத்தையும் நமது சொந்தமாக்கிக் கொள்ளவிரும்பும் சுயநலநோக்கு தரும் குணம் இது. கவிதை வரிகள் இயல்பாக இதை எடுத்தியம்பியது

போட்டியாக நினைத்த அக்குழந்தைக்கு சற்றே வயது ஏறும் போது உடன் விளையாட துணை இல்லாத நிலையில் மனம் ஒரு தம்பியோ தங்கையோ வேண்டுமே என ஏங்க ஆரம்பித்துவிடும்.

சுயநலம் ஏதோ ஒரு ரூபத்தில் மனதினைப் பிடித்து ஆட்டும் குரங்காகிவிடுகிறது. இத் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை விடுவதே இல்லை.

உலகமே நமது சொந்தம் என்ற பார்வை குழந்தைகளுக்கு வரச் செய்வதில் பெற்றோர்களுக்கு ஒரு பெரும் பங்கு இருக்கிறது.

நல்ல கவிதைக்கு நன்றி. பாராட்டுக்கள்

lenram80
15-04-2008, 12:48 AM
நன்றி இனியவள், கவி, ஷீ-நிசி, அனு, சாலை ஜெயராமன்,

lenram80
15-04-2008, 01:07 AM
நான் என் வீட்டில் கடைசி குழந்தை ஆதலால் எனக்கு இந்த கவிதையில் வரும் குழந்தையின் ஏக்கம் தெரியாது. இருந்தாலும், சில நாடகங்கள் மூலம் அதை தெரிந்து கொண்டேன். (உ.ம்: Everybody loves Raymond) . தம்பிய பாத்துக்கோ, தங்கையெ பாத்துக்கோ- என்று சொல்லும் பெற்றொர்களிடம் "உன்னையும் பாத்துக்கோ" என்று கேட்க, ஏங்கும் நெஞ்சங்கள் எத்தனையோ!! மூத்தவனாக பிறந்தற்காகவே பொறுப்புக்கள் கூடி, பெற்றோர்களின் அன்பையும் இழந்து தவிக்கும் எத்தனையோ அண்ணன்களுக்கும், அக்காக்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.

நன்றி இனியவள், கவி, ஷீ-நிசி, அனு, சாலை ஜெயராமன்,

சுகந்தப்ரீதன்
15-04-2008, 10:30 AM
மூத்தவனாக பிறந்தற்காகவே பொறுப்புக்கள் கூடி, பெற்றோர்களின் அன்பையும் இழந்து தவிக்கும் எத்தனையோ அண்ணன்களுக்கும், அக்காக்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.,

அற்புதம் அண்ணா..!!

என்னை பார்த்துக் கொள்ள வேண்டி படிப்பை பாதியில் விட்ட என் மூத்த சகோதரிக்கு என்னால்கூட இதுவரை இப்படி ஒரு கவிதையை சமர்ப்பிக்க முடியவில்லை..!! ஆனால் நீங்கள் ஒட்டுமொத்தமாக சமர்ப்பித்துவிட்டீர்கள்..!!

கவிதையில் உணர்வுகள் பொங்கி வழிவதை வார்த்தைகளில் காணமுடிகிறது... தொடருங்கள் வாழ்த்துக்கள் அண்ணா..!!

lenram80
18-04-2008, 12:59 PM
நன்றி சுகந்தப்ரீதன்

poornima
21-04-2008, 10:05 PM
இந்த கவிதை உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்டது எனில் உடனே தேவை அந்த குழந்தைக்கு உளவியல் அரவணைப்பும் கொஞ்சம் ஆறுதல்களும்.. இதெல்லாம் புதிய உயிர் உலகத்திற்கு அறிமுகம் ஆவதற்கு முன்னரே முந்தைய குழந்தையை அதற்கு தயார்படுத்த வேண்டும்.

lenram80
22-04-2008, 02:53 AM
நன்றி பூர்ணிமா. இது ஒரு நாடகத்தைப் பார்த்து நான் எழுதிய கவிதை.