PDA

View Full Version : அலைகளின் ரசிகன் அவன்



ஆதி
09-04-2008, 06:03 PM
அலைகளின் ரசிகன்
அவன்

மெல்ல துள்ளி
மீதூறி கரையில்
உள்ளூற ஈரச்சுவடுகளைப்
பதிக்கும் அலைகளை
உற்றுப் பார்த்திருப்பான்..

அற்ப அவகாசங்களில்
அழியும் அலைகளே
ஆறாத தடம் பதிக்கும்
அற்புதம் அவனுக்கு அதிசயம்

வாழ்ந்தால் அலைப்போல்
வாழ வேண்டும்
வாழ்ந்த தடம் மண்ணில்
ஆழ்ந்து பதித்துப் போக வேண்டும்
என்றேத் தனக்குள்
என்றும் சொல்வான்..

மண்ணுண்டு
வாழும் அலைகளின்
வாயில் தான் உலகமிருக்கிறது
என்பது அவனுக்கு
மற்றொரு வியப்பு..

அஞ்சி உள்ளொளிந்து
அலைப் போனதும்
மீண்டும் எட்டிப்பார்த்து
வெளிவரும் நண்டுகளின்
நடனங்களில் நாழிகை கழிவது
தெரியாது அவனுக்கு..

வெளிச்சம் விரவி
மேலெழுந்து முன்வந்து
கரைகளின் செவிகளில் எதையோ
கத்திவிட்டு போகிற அலைகளின்
மொழிகளை புரிந்தறியத்தான்
முயற்சித்து கொண்டிருந்தான்..

நுரைகளோடு வந்து
ஈரத்தை அப்பிவிடும்
அலைகளில் கால் நனைத்திருந்த
தருணம் ஒன்றில்
திமிங்கிலமாய் கவ்வி சென்றது
அலைத் தன் காதலனை..

kavitha
11-04-2008, 11:11 AM
எத்தனை முறை படித்தாலும் அலுக்காதது கடல் கவிதைகள்.
கடல் கொலையோ, தற்கொலையோ! அதில் அலையாய் கவிதை விளைந்தது.

சிவா.ஜி
11-04-2008, 11:44 AM
ரசித்தவனையே புசித்தன அந்த அலைகள். விரும்பி ஏகினானா..எதிர்பாரா தருணத்தில் அலைக்குணவு ஆகினானா...தெரியவில்லை.
இருந்தும் ஓர் அலைகளின் ரசிகனாய் எனக்கும் இந்த அலைகள் ஓர் ஆச்சர்யம்தான்.

மிக அழகான வரிகள் ஆதி. அதிலும்

மண்ணுண்டு
வாழும் அலைகளின்
வாயில் தான் உலகமிருக்கிறது
என்பது அவனுக்கு
மற்றொரு வியப்பு.

இநத வரிகளில் ஒரு மலைப்பு. வாழ்த்துகள் ஆதி.

ஷீ-நிசி
11-04-2008, 02:52 PM
அலையினைப்பார்த்து விளைந்த கவிதைகள் கொஞ்சமல்ல....
நன்றாக உள்ளது ஆதி!

ஆதி
14-04-2008, 08:37 AM
எத்தனை முறை படித்தாலும் அலுக்காதது கடல் கவிதைகள்.
கடல் கொலையோ, தற்கொலையோ! அதில் அலையாய் கவிதை விளைந்தது.

உண்மைதான் அக்கா எத்தனைக் கவிதைகளை எழுதித்தீர்த்தாலும் அலைகளின் மீதான் காதலும் மோகமும் தணிவதே இல்லை..

ஆதி
14-04-2008, 08:46 AM
ரசித்தவனையே புசித்தன அந்த அலைகள். விரும்பி ஏகினானா..எதிர்பாரா தருணத்தில் அலைக்குணவு ஆகினானா...தெரியவில்லை.
இருந்தும் ஓர் அலைகளின் ரசிகனாய் எனக்கும் இந்த அலைகள் ஓர் ஆச்சர்யம்தான்.

மிக அழகான வரிகள் ஆதி. அதிலும்

மண்ணுண்டு
வாழும் அலைகளின்
வாயில் தான் உலகமிருக்கிறது
என்பது அவனுக்கு
மற்றொரு வியப்பு.

இநத வரிகளில் ஒரு மலைப்பு. வாழ்த்துகள் ஆதி.


எனக்கும் பிடித்த வரிகள் இவைத்தான் அண்ணா, கோகுலக் கிரிஷ்ணனை நினைத்துதான் இந்த வரிகளை எழுதினேன் அண்ணா..

வாழ்த்துக்கு நன்றி அண்ணா..