PDA

View Full Version : தூயதமிழை பயன்படுத்துங்கள்



மீனாகுமார்
09-04-2008, 03:56 PM
தோழர்களே

இந்த மன்றம் தூயதமிழை பயன்படுத்துவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதே போல் தமிழிருக்கும் இடமெல்லாம் தூயதமிழாக மாற்றிவிட விருப்பம். அதற்காக, தமிழர்கள் அனைவரையும் தூயதமிழ் பயன்படுத்திட ஊக்குவியுங்கள். இதற்காக, நான் தூயதமிழ் முத்திரையை உருவாக்கியுள்ளேன். இந்த முத்திரைகளை உங்கள் தமிழ் தளங்களில் உபயோகித்து தூயதமிழின் பயன்பாட்டை ஊக்குவியுங்கள்.

முத்திரைகள்

http://meenakumar.googlepages.com/muthiraio.jpg

http://meenakumar.googlepages.com/muthiraib.jpg

http://meenakumar.googlepages.com/muthiraiorange.jpg

http://meenakumar.googlepages.com/muthiraiblue.jpg

தமிழ் வெல்க.

சாலைஜெயராமன்
09-04-2008, 04:06 PM
புது முயற்சி. வித்தியாசமான அணுகுமுறை. செயல்படுத்தக் கூடியதுதானே? நிர்வாகிகள் கவனத்தில் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்ச்சூரியன்
09-04-2008, 04:23 PM
மிகவும் அருமையான ஒரு முயற்சி. வாழ்க, வளர்க உங்கள் தமிழ்த் தொண்டு.

அமரன்
09-04-2008, 07:32 PM
நீண்ட நாளாக காணாத மீனாகுமாரை கண்டதில் மகிழ்ச்சி. தூய தமிழை பயன்படுத்துவது, பயன்படுத்துபவர்களை ஊக்குவிப்பது இரண்டுமே வரவேற்கத்தக்கது. பாராட்ட தகுந்தது. தூய தமிழ் என்பதிலேயே சில சர்ச்சைகள் உலாவருகிறன. அவற்றை ஒருப்பக்கம் தள்ளிவிட்டு, மன்ற மென்பொருள் ஒத்துழைத்தால் பயன்படுத்த முடியுமா எனப்பார்க்கின்றோம்.. உங்கள் இப்பணிக்கு இதயம் கனிந்த பாராட்டுகள். தொடரட்டும் உங்களது சீரிய தமிழ்ச்சேவை..

மீனாகுமார்
10-04-2008, 03:41 PM
நன்றி அமரன். நான் பொதுவாக எல்லோருடைய சொந்த வலைதளங்களிலும் பயன்படுத்துமாறு வேண்டிக்கொண்டேன். இல்லை இது போன்ற வாசகங்களையும பயன்படுத்தலாம். நன்றிப்பா.

மனோஜ்
10-04-2008, 04:04 PM
நல்ல முயற்சி
எங்கும் தூய தமிழ்
எதிலும் தூய தமிழ்
கடினம் எனினும் முயற்சி திருவினையாக்கும்

தமிழநம்பி
24-08-2009, 01:10 PM
இயன்ற வரையில் தூயதமிழ் எழுத முயல்வோம். இயலாத நிலையில் அறிஞர் துணையோடு முயல்வோம். தமிழை மீட்டு வளப்படுத்தும் முயற்சியை வரவேற்போம்.

பாராட்டும் நன்றியும்!

இளசு
24-08-2009, 07:33 PM
அன்பு மீனாகுமார்

நலமா நண்பரே?

உங்களை அடிக்கடிக் காணமுடிவதில்லையே!

இப்பதிவை இன்றுதான் கண்டேன்..

நல்ல முயற்சி... பாராட்டுகள்!

aren
25-08-2009, 01:45 AM
தூய தமிழ் என்பது நடைமுறைக்கு ஒத்துவருமா என்று முதலில் பார்க்கவேண்டும். நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன். அங்கே வெறும் தூய தமிழில் மட்டும் பேசினால் நம்மை ஏதோ ஒரு ஜந்துபோல் பார்ப்பார்கள்.

புகைவண்டி நிலையத்திற்கு எப்படி செல்லவேண்டும் என்று கேட்டுப்பாருங்கள் உங்களுக்கு நான் சொல்வது புரியும்.

இருந்தாலும் உங்கள் முயற்சி வரவேற்கத்தக்கது. அதற்கு என் வாழ்த்துக்கள்.

நானும் முடிந்தவரை தமிழிலேயே எழுதப்பார்க்கிறேன். ஆனால் பேசுவதில் பாதி வார்த்தைகளுக்கு எனக்கு தமிழில் அதன் தமிழ்வார்த்தை என்ன என்று உடனே தெரிவதில்லை. ஒரு சில தடவைகள் சுத்த தமிழ் வார்த்தைகளை உபயோகித்தேன், உடனே என் மனைவி, உங்களுக்கு என்ன ஆகிவிட்டது, இப்படி உளருகிறீர்கள் என்றாள். முதலுக்கே மோசமாகிறதே என்று கப்சிப் ஆகிவிட்டேன்.

இதுதான் இன்றைய உலகம் என்ன செய்வது.

கௌதமன்
10-12-2010, 05:01 PM
ஆங்கில அல்லது பிறமொழி வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்த உதவி கிட்டுமா?
கிட்டுமெனில் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

பாலகன்
10-12-2010, 05:04 PM
முயன்றால் முடியாதது என்று ஒன்று உண்டோ?

பாராட்டுக்கள் மீனாக்குமார்