PDA

View Full Version : நிவிடா பிரச்சனை ( nv4_disp )



rajaji
09-04-2008, 05:05 AM
நண்பர்களே சில நாட்களாக நான் நிவிடா பிரச்சனையைச் சந்திக்கிறேன்..........

முதலில் பிரச்சனையைப் பற்றி விளக்கி விடுகிறேன்.............

என்னிடம் nivida fx 5200 VGA Card (128 MB ) உள்ளது........

சில நாட்களுக்கு முன் செஸ்மாஸ்டரின் பிந்திய பதிப்பான க்ராண்ட் மாஸ்டரைப் என் கணனியில் பதிந்தேன்.......

முதல் நாள் நன்றாகத்தான் இயங்கியது........

மறுநாள் நான் mp3 பாடல் ஒன்றை தரவிறக்கம் செய்யும் போது திடீரென்று மொனிட்டர் கறுப்பாக ( Blank ) மாறிவிட்டது.......

சிறிது நேரத்தின் பின் BIOஸS திரையில் nv4_disp என்ற ஒரு எரர் செய்தி இருந்தது......

அந்த எரர் செய்தியில் என் VGA Card இல் அல்லது என் VGA Card இற்கான சாப்ட்வெயாரில் பிரச்சனை என்று வந்தது................

முதன் முறை என்பதால் ரீஸ்ராட் செய்தேன்........ ஆனால் தொடர்ந்தும் இந்தப் பிரச்சனை இருக்கின்றது...........

ஆனால் இவ்வாறு மானிட்ர் blank ஆக இருந்தாலும் கணினி இயங்குகிறது......

அதனால் நான் என் external வ்கா கார்ட்டை துண்டித்து விட்டேன்.... பின் மதர் போட்டின் VGA க்கு மாற்றிவிட்டேன்.......

அதன் பின்னர் வழமைபோல் இயங்குகிறது..........

மானிட்டரில் எந்தத் தவறும் இல்லை.......

இந்த nv4_disp பிரச்சனையை யாகூவின் பதில்கள் பகுதியில் தேடிய போது பலர் இந்தப் பிரச்சனையால் அல்லற்படுவது புரிந்தது......................

அவற்றில் இதைச் சரிசெய்ய பல வழிமுறைகளைச் சொல்கின்றனர்...............

இவற்றில் எதைச் செய்யலாம்.....................

இந்த nv4_disப் பிரச்சனையைப் பற்றி அறிந்த நம் மன்ற நண்பர்களிடம் இருந்து மேலதிக தகவல்களை எதிர்பார்க்கின்றேன்...............

யாஹூ பதில்களில் இந்த பிரச்சனையைப் பற்றி அலசியிருக்கிறார்கள்.....
அந்தச் சுட்டி இதோ.................

http://answers.yahoo.com/search/search_result;_ylt=AskVbD1h0vmTIXMrehkfc.EjzKIX;_ylv=3?p=nv4_disp

முடிவில் யாஹூவின் பதில்களின் படி இப் பிரச்சனை 100% தீர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை.....................

அதனால்தான் இப் பிரச்சனையை நம் மன்றத்திற்கு எடுத்து வருகிறேன்......