PDA

View Full Version : மனதில் உந்தன் முகம்



நம்பிகோபாலன்
08-04-2008, 12:33 PM
எட்டே மாதத்தில்
நீ பிறந்தாய்
அதனால்தானோ
இருபது வயது
ஆனாலும் உன்னை
கண்ணுகுள்ளேயே வைத்திருந்தோம்.

நீ நன்றாக
வரவேண்டும் என்று
ஒவ்வொரு நாளும்
உன் உயர்வை
எண்ணியே வாழ்ந்தோம்..

உனக்கு எந்த குறை
இருக்ககூடாது
ஆதலால்
இருவரும் வேலைக்கு
சென்றோம்
உன்னை நான்
வளர்ந்த இடத்தில்
விட்டபடி...

செல்லமும்
செல்வமும் குறைவில்லை
நீ கேட்டு
நாங்கள் இல்லையென்று
கூறியதுமில்லை...

வளர்ந்தநீயோ
தூக்கியெரிந்து
பேசுகிறாய்
தோளிலேதூக்கி வளர்த்தவனிடம்

காதல் பெரியதுதான்
படித்து முடித்துகொள்
நட்புடன் கூறினோம்
புரியாமல் எதிர்க்கிறோம்
என்று
எங்கள் மனதை
மரணித்து சென்றாய்

இன்றும்
பேருந்தில் செல்லும் பொழுது
உன்னை போல் சிலரை
பார்க்கும் பொழுது
எங்கள் மனதில்
நிழலாடிபோகிறது
உன் முகம்
விழியோர நீருடன்...

அமரன்
10-04-2008, 03:32 PM
பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு என்று
சும்மாவா சொன்னார்கள்.

வயதுக்கேற்ற இரத்த வேகத்தில்
இம்சைகளாகத் தெரிந்தவை
கேடயமென அறியும் காலம் கனியும்..
சுழலும் பூமி கனியவைக்கும்!

சொல்ல வந்ததை குழப்பும் விதத்தில் சில பகுதிகள் அமைதுள்ளதாகப் படுகிறது.

கஷ்டப்பட்டு வளர்த்தோம்.. உன்னுடன் கூட இருக்கும் ஆசையைக்கூட துறந்து உன்னை வளர்த்தோம்.. என்று சொல்லும் போது சிந்தனை திசைமாற்றப்படுவதை தவிர்க்க முடியவில்லை.

வாழ்க்கையில் இருக்கும் இன்னும் பல உணர்வுகள் நோக்கியும் திரும்பட்டும் உங்கள் கவிமனம்.


வாழ்த்துகள்!.

kavitha
11-04-2008, 11:06 AM
தோளிலேதூக்கி வளர்த்தவனிடம்



நீ கேட்டு
நாங்கள் இல்லையென்று
கூறியதுமில்லை...

பிறகேன் இந்த முடிவு?

நம்பிகோபாலன்
11-04-2008, 11:46 AM
கவி திருத்தியிருக்கிறேன்.

"நீ கேட்டு நாங்கள் இல்லையென்று கூறியதுமில்லை... "
பிறகேன் இந்த முடிவு?

கவி, தந்தை படிப்பை முடி திருமணம் செய்துகொள் என்கிறார், ஆனால் மகனோ பிரித்துவைக்கும் முயற்சி என்று திருமணம் செய்து கொண்டு பிரிந்து செல்கிறான்....
என் நெருங்கிய நண்பரின் இன்றைய நிலை இது.