PDA

View Full Version : சொல்றாங்க... கொல்றாங்க.. !



ராஜா
08-04-2008, 10:11 AM
''"ரஜினிகாந்த் பிறப்பால் கன்னடராக இருந்தாலும் ஓகேனக்கல் குடிநீர் திட்ட விஷயத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார். இது போன்ற விஷயங்களை ரஜினிகாந்திடம் இருந்து அமிதாப் பச்சன் கற்றுக் கொள்ள வேண்டும்'' "

(3 நாட்களுக்கு முன் சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கையில் பால் தாக்கரே எழுதியது)
_________________________________________________________________________
''"குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டுமல்ல. இந்தியாவிற்கே, அமிதாப் பச்சன் தான் சூப்பர் ஸ்டார். மிகப் பெரிய நடிகரை குறுகிய அரசியல் பிரச்னைகளுக்குள் தேவையில்லாமல் இழுக்க கூடாது.'' "

(அதே அமிதாப்பைப் பற்றி அதே சாம்னா இதழில் அதே தாக்கரே....... நேற்று...!
_________________________________________________________________________
பிரபலங்களின் லொள்ளுகள் தொடரும்...

ஆதி
08-04-2008, 10:31 AM
சிவசேனா இப்போ இரண்டா போட்டுதண்ணா, உண்மையான சிவசேனா எதுனு இப்போ பெரிய சந்தேகம் வேற வந்துட்டுது, காரணம் பால் தாக்ரே அவரோட அண்ணன் மகந்தான் சிவசேனா வளரப் பெரிய காரணமாய் இருந்தார், ஆனா பால் தாக்ரே கட்சிக்காக ஒன்னுமே செய்யாத தன் மகனிடம் கட்சியை கொடுத்துட்டார், இதில் கடுப்பான பால் தாக்ரே அண்ணன் மகன் கட்சியைவிட்டு வெளியேறி தாந்தான் உண்மையான சிவசேனா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.. சிவசேனா மராட்டியர்களை குறிவைத்து ஆரம்பித்தக் கட்சி ஆனால் மும்பையில் என்னக் கொடுமைனா மராட்டியரின் எண்ணிக்கை மிக குறைவு அதனால் இப்போ ஹிந்தி எங்கள் மொழி என்று புதுஸுலோகத்தை எழுதிக்கொண்டு பால் தாக்ரே கும்பல் அங்குள்ள கேரல ஹோட்டல்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது..
சிவசேனா என்றால் சிவாஜியின் சேனைகள் என்று பொருள்.. மராட்டிய சிவாஜியை வைத்துக்கொண்டுதான் மக்கள் மனதில் நான் மராடியன் என்கிற வெறியை ஏற்றிக் கட்சி வளர்த்தது சிவசேனா.. அங்கு பள்ளிப் பாடதிட்டத்தில் இந்திய சட்டமேதை அம்பேத்கர்ப் பற்றியப் பாடமிருக்கோ இல்லையோ சிவாஜிப் பற்றியும் அவர் செய்த சாகசங்கள் பற்றியும் பாடம் எல்லா வகுப்பிலும் இருக்கும்.. காரணம் சிவாஜியை வைத்துதான் சிவசேனா தங்கள் ஆட்சி சக்கரத்தை சுழற்றிக் கொண்டிருக்கிறது..

ராஜா
26-04-2008, 09:50 AM
சாராயம்... உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு தராது...

ஆனால்.. பிரச்சினைகளை மறந்துவிட்டு நிம்மதியாக இருக்க வைக்கும்..!

சாராய அதிபர் விஜய் மல்லையா.

உதயசூரியன்
13-12-2012, 08:25 AM
பைபிள் கதை படித்து நல்லொழுக்கங்களுடன் வளர்ந்தேன்- ஜெ.////

யாராவது சிரிச்சிடீங்கன்னா.. அவங்க அவுட்...!!!
விஜய் டிவியில் வரும் அது இது எது என்ற ஷோவில் இதை சொல்லி சிரிக்க வைக்கலாம் இனி..
அய்யோ அய்யோ...