PDA

View Full Version : வணக்கம் நண்பர்களே



indiran
08-04-2008, 04:48 AM
நான் இந்திரன், வழக்கம் போல் புனைபெயர்தான். விவேகானந்தர் சொன்னது போல இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்து இந்திய நாட்டை, நான் பிறந்த தமிழ் மண்ணை என் தாய்த் தமிழை நேசிக்கும், ஆசிக்கும் ,மனம் நிறைய வாசிக்கும் ஒரு தமிழன்.தஞ்சைத் தரணியின் ஒரு பகுதியான திருமுனைப்பாடி நாடென பெயர் பெற்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன்..திருமணமாகி இரு பெண்மக்களுக்குத் தந்தை. தமிழ்த்தேனைத் தாங்கி நிற்கும் இந்த இணையதளத்தை என் போன்ற வண்டுகளுக்கு தேடுவதென்பது ஒரு சிரமமல்ல.கண்டேன் இணைந்தேன். இனி நண்பர்கள்தான் சொந்தங்கள்.மீண்டும் சந்திக்கிறேன் நண்பர்களே!

சிவா.ஜி
08-04-2008, 05:12 AM
வாருங்கள் இந்திரன். தமிழ்தேடும் வண்டுகளுக்கு இந்த நந்தவனம் சிக்காமல் போய்விடுமா...? நீங்கள் வந்து இணைந்த இடம் உங்கள் சொந்தவனம்...நாங்கள் அனைவரும் உங்கள் சொந்த இனம். வாருங்கள். படியுங்கள்,பதியுங்கள்..இணைந்திருங்கள். வாழ்த்துகள்.

RRaja
08-04-2008, 06:15 AM
இந்திரன் அண்ணனை வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறேன்.

அமரன்
08-04-2008, 06:31 AM
வாருங்கள் இந்திரன்..
மன்றமெங்கும் பறந்து ரீங்கார எழுத்துகளை பரப்புங்கள்.
வாழ்த்துகள்.

ஆதி
08-04-2008, 06:36 AM
வாருங்கள் இந்திரன், வண்டென தேன் மொண்டு உண்டு திளைத்து, கற்றதைக் கண்டதை எங்களுக்கு விண்டு பகிர்ந்து மகிழ்ச்சி ஆழியில் மூழ்கடியுங்கள்.

இதயம்
08-04-2008, 06:41 AM
அழகு தமிழில், அசத்தல் அறிமுகத்தோடு மன்றம் புகுந்திருக்கும் இனிய நண்பர் இந்திரனை இதயம் மகிழ்ந்து வரவேற்கிறேன்.

நாகரா
08-04-2008, 06:49 AM
வாருங்கள் இந்திரன், தமிழ் மன்றத்தில் உம்மை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

அன்புரசிகன்
08-04-2008, 01:39 PM
அழகான ஒரு அறிமுகத்தை அருளியுள்ளீர்கள்.... தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள் இந்திரன். உங்களை வருக வருக என வரவேற்பதில் பெருமிதம் எனக்கு.

செல்வா
08-04-2008, 01:49 PM
வாருங்கள் இந்திரன் அவர்களே... தங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

சுகந்தப்ரீதன்
08-04-2008, 01:52 PM
வாருங்கள் இந்திரரே..!!

மன்றத்தின் சார்பாக எனது வாழ்த்துக்களும் வரவேற்ப்புகளும்..!!

மன்றவிதிகளை மதித்து மன்றத்தில் என்றும் நிலைத்து மனம் மகிழ்ந்திருக்க வேண்டுகிறேன் நண்பரே..!!

அறிஞர்
08-04-2008, 01:55 PM
கடலூர் மாவட்ட நண்பரை இங்கு காண்பதில் மகிழ்ச்சி... வாருங்கள்...
படியுங்கள்... கருத்துக்களை கொடுங்கள்....

அனுராகவன்
10-04-2008, 01:31 AM
வாருங்கள் நண்பரே!!
என்றும் தமிழை பேணி ,வளர்க்க வரவேற்கிறேன்.
உங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி..

அக்னி
10-04-2008, 09:45 AM
நான் இந்திரன்,
வருக இந்திரன் அவர்களே...
அனைத்துத் தமிழர்களை இணைக்கும் மன்றத்தில் நீங்களும் என்றும் இணைந்திருக்க, மகிழ்ந்திருக்க,
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

சாலைஜெயராமன்
10-04-2008, 09:49 AM
வருக வருக வண்டினங்காள். உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பங்கெடுங்கள். உங்கள் முத்தான பதிவுகளைத் தாருங்கள்.

மனோஜ்
12-04-2008, 08:37 AM
வாங்க இந்திரன் தொடர்ந்து மன்றம் வாருங்கள்

meera
12-04-2008, 09:28 AM
வாங்க அண்ணா. அன்பான வரவேற்புகள்.

ஓவியன்
12-04-2008, 03:07 PM
வாருங்கள் இந்திரன், உங்கள் மந்திரப் பதிவுகளை இங்கே விதையுங்கள்..!! :)

சூரியன்
12-04-2008, 03:12 PM
வாருங்கள் நண்பரே.

Keelai Naadaan
12-04-2008, 03:59 PM
அன்புடன் வரவேற்கிறோம் நண்பரே.

விகடன்
14-04-2008, 10:59 AM
வணக்கம் இந்திரன்
மன்றத்தின் சார்பில் நானுமுங்களை வரவேற்கிறேன்.

lolluvathiyar
16-04-2008, 06:00 AM
வாருங்கள் இந்திரன் அவர்களே வரும் போதே தமிழ் மீது உங்கள் ஆர்வத்தையும், தமிழ் திறமையையும் காட்டி விட்டீர்கள். இனி நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்களோடு கலந்திருங்கள்