PDA

View Full Version : 1 யூனிட்டில் இருந்து 10 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்கிறார் தேனி மெக்கானிக்ராஜா
07-04-2008, 11:18 AM
http://bp0.blogger.com/_ocmkuexCYUk/R9vblB_zOlI/AAAAAAAAADM/477bSyfs72c/s400/karant.jpg

குறைந்த செலவில் அதிக அளவு மின் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை தேனியைச் சேர்ந்த சல்லடை தயாரிப்பாளர் கண்டுபிடித்துள்ளார்.

தேனி சிட்கோ தொழிற்பேட்டையில் ராதா ஜெனரல் இன்டஸ்ட்ரீஸ் எனும் பெயரில் அரைவை மில்களுக்கு தேவையான சல்லடை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துபவர் வரதராஜன் (67).

இவர் மரபு சாரா எரிசக்தி மூலம் ஒரு எச்.பி. (குதிரை சக்தி) மின் சக்தியை கொண்டு 10 எச்.பி. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். 12 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து பல லட்ச ரூபாய் செலவழித்து தற்போது 1 யூனிட் மின்சாரம் மூலம் 10 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து வரதராஜன் மேலும் கூறியதாவது:

இதற்கான பார்முலாவை பயன்படுத்தி நாட்டுக்கு தேவையான மின்சாரத்தை மிக எளிதில் உற்பத்தி செய்து விடலாம். இதன்மூலம் வாகனங்கள், கப்பல் ஆகியவற்றை இயக்க முடியும், இதற்கு பெட்ரோலோ, டீசலோ தேவையில்லை. வாகனங்கள் இயக்கப்பட்டால் சத்தமோ, புகையோ ஏற்படாது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

என்னுடைய பார்முலா மூலம் ஒரு மடங்கு குதிரை சக்தி திறன் மின்சாரத்தை செலுத்தி 10 மடங்கு மின்சாரம் பெற முடியும். இதற்கான காப்புரிமையைப் பெற பதிவு செய்ய உள்ளேன். விற்பனை நோக்கில் இயந்திரம் கண்டுபிடிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்து எனது கண்டுபிடிப்பை காட்டி விளக்குவேன்.

இவ்வாறு வரதராஜன் கூறினார்.

aren
07-04-2008, 11:27 AM
இது பாராட்டப்படவேண்டிய விஷயம்.

பார்முலா என்கிறாரே அப்படியானால் இது என்ன பயோ முறையில் எரிபொருள் எடுத்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரமா?

இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதினால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

ராஜா
07-04-2008, 11:33 AM
சல்லடை தயாரிப்பாளர் கண்டுபிடிப்பாயிற்றே..!

விவரங்களை வடிகட்டித்தான் கொடுத்திருக்கிறார்..

வேறு விவரம் கிடைத்தால் தருகிறேன் மாட்டிரிக்ஸ்..!

க.கமலக்கண்ணன்
07-04-2008, 02:16 PM
அருமை... நாட்டுக்குத் தற்போது மிக தேவையான கண்டுபிடிப்பு

அரசியல்வாதிகளிடம் இருந்து பிழைத்தால்தான் மக்களை சென்றடையும்

அது என்னை ஆண்டுகள் ஆகுமோ...

praveen
07-04-2008, 02:29 PM
மேலே கொடுத்த தகவல் அடிப்படையில் எனது கருத்து :

இம்மாதிரி மின்சாரம் மூலம் மின்சாரம் கண்டு பிடிக்கும் உத்திகள் நடைமுறைக்கு ஒத்து வராது. ஏட்டளவில் சோதனை அளவிலே சரியாக இருக்கும் நடைமுறையில்(லோடு கொடுத்து ஒர்க் செய்கையில்) செயலிழந்தத போகும்.

இம்மாதிரி பலர் முயன்று உள்ளனர், இறுதி முடிவு 0. ஒரு சக்தியை இன்னொரு சக்தியாக மாற்றும் போது கன்வர்சன் லாஸ் என்பது நிச்சயம் உண்டு, பின் திரும்ப அதே சக்தியாக மாற்றும் போது இன்னும் உண்டு.

எனக்குத்தெரிந்து தமிழன் கண்டுபிடித்த ஒரே உருப்படியான மின்சாதனம் இட்லி கிரைண்டர் தான் :)

சுகந்தப்ரீதன்
07-04-2008, 02:46 PM
எனக்குத்தெரிந்து தமிழன் கண்டுபிடித்த ஒரே உருப்படியான மின்சாதனம் இட்லி கிரைண்டர் தான் :)
நோ கமெண்ட்ஸ்...:smilie_abcfra:

அறிஞர்
07-04-2008, 02:46 PM
கண்டு பிடிப்பு அருமைதான்.

செயல் வடிவில் செயல்படுத்தினால்... மட்டுமே நன்றாக இருக்கும்...

முதலில் ஒரு கிராமத்தை எடுத்துக்கொண்டு சோதனை செய்து பார்த்து... படிப்படியாக செயல்படுத்தலாம்.

மனோஜ்
08-04-2008, 03:16 PM
நல்ல முயற்சி பாரட்டபடவேண்டியது

ஷீ-நிசி
08-04-2008, 04:33 PM
கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்...

ஆனா அதுக்கு உரிமை வாங்கி நடைமுறைக்கு வருவதற்குள்ள.. ஐயாவுக்கு 200 வயசு ஆகிடுமே :)

reader
09-04-2008, 06:45 AM
நிச்சயமாக மக்களுக்கு உபயோகப்படும் அளவில் இருந்தால் சந்தோஷம் தான்

சிவா.ஜி
09-04-2008, 09:22 AM
எனக்குத்தெரிந்து தமிழன் கண்டுபிடித்த ஒரே உருப்படியான மின்சாதனம் இட்லி கிரைண்டர் தான் :)

சர் சி.வி ராமனையும், சந்திரசேகர்ஐயும், ராமானுஜத்தையும் நினைத்து வேதனைப் படுகிறேன்.

SathyaThirunavukkarasu
09-04-2008, 11:23 AM
கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்...

ஆனா அதுக்கு உரிமை வாங்கி நடைமுறைக்கு வருவதற்குள்ள.. ஐயாவுக்கு 200 வயசு ஆகிடுமே :)

இதுதான் நம் நாட்டின் உண்மை நண்பரே

தாமரை
09-04-2008, 07:45 PM
ஆற்றல் அழிவின்மை விதிப்படி பார்த்தால் இது சாத்தியம் இல்லை.,.,

படத்தைப் பார்த்தால்..

ஒரு மோட்டார் ஒரு டைனமோவுடன் இணைக்கப் பட்டுள்ளது.. ஆக டைனமோவில் உள்ள காந்தம் மோட்டாரினால் சுழற்றப்பட் அதில் உள்ள காயில்களில் மின்னோட்டம் ஏற்படுகிறது..

அனைத்து வகை மின்சார உற்பத்தியிலும் இதுவே அடிப்படை.. காந்தம் சுழற்றப்பட காயில்களில் மின்சாரம்..

காந்தப் புலத்திற்கும் காயிலுக்கும் சுழற்சி வேகத்திற்கும் உள்ள சமன்பாடு மாறாதது.. ஆக வலிமை உள்ள காந்தமும் காயிலின் இண்டக்ஷனுக்கும் மத்தியில் ஒரு சமன் பாடு..


இதனோடு திறனுயர்வு கப்பிகளை இணைக்க (அதாங்க கிணத்தில தண்ணி சேந்துற ராட்டிணம் பத்தி படிச்சிருப்பீங்களே, மூணு ராட்டினம் 5 ராட்டினம் போட்டால் அதிக பளு வை எளிதா தூக்கலாம்னு)..
சாத்தியமுண்டு இது பலிக்க.. டைனமோ சமன்பாடு தெரிந்தால் எளிதாக செய்து விடலாம்.. என் சிறுவயதில் என் தந்தை டைனமோ காயில் பற்றிச் சொன்னது கொஞ்சம் நினைவும் இருக்கிறது,,

சரி பார்த்தால் நாமே செய்து விடலாம்.. எளிதான வழிதான்.. கொஞ்சம் எலக்ட்ரிகல் தியரி.. மோட்டார் மற்றும் டைனமோ படிச்சு பார்த்தால் சாத்தியக் கூறு புரிந்து விட்டும்..

ரொம்பக் காத்திருக்க வேண்டியதில்லை மக்கா.. எலக்ட்ரிகல் புக்கை பரணிலிருந்து தூசு தட்டி எடுங்க படிங்க.. அப்படியே அந்த 5 வது 6 வதில படிச்ச நெம்புகோல்கள், மாதிரி அடிப்படை அறிவியலும் படிங்க
(எங்கிட்ட இல்லையே..!!!)

rekha
09-04-2008, 09:10 PM
சும்மா உதாரணத்துக்கு ஒரு சிறிய கணக்கு எனது வீட்டில் இப்படி ஒரு இயந்திரம் இருந்தால் நான் 10 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும். இரண்டு இயந்திங்கள் இருந்தால் 100 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும்.... இப்படியே.... 5 இயந்திரங்கள் இருந்தால் ஒரு லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும்....

மதிப்புக்குரிய வரதராஜன் அவர்கள் தற்போது எத்தனை வீடுகளுக்கு இம்மாதிரி மின்சாரம் வழங்குகின்றார்?

சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பது விஞ்ஞானம்...

இப்படித்தான் ஒருவர் முன்பு மூலிகை பெட்ரோல் என்று.... ஞபகம் வருதா....

எல்லாம்.... கப்ஸா.....

பாரதி
10-04-2008, 01:01 AM
அந்த நண்பரின் முயற்சியைப் பாராட்டுகிறேன்.

ஆனால் இது உண்மையிலேயே சாத்தியமா என்று யோசித்தால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அவர் கூறியபடியே பார்த்தால் வெறும் ஒரு யூனிட் மின்சாரம் மட்டுமே மூலதனமா...? ஒன்றை வைத்து பத்து! அந்த பத்திலிருந்தும் ஒவ்வொரு யூனிட்டிலிருந்தும் மேலும் மேலும் பத்து யூனிட்டுகள்!! இப்படியே போனால் .... ஒரு யூனிட் மின்சாரம் கொண்டு உலகத்திற்கே மின்சாரம் தர இயலும் போலும்.

தாமரை
10-04-2008, 01:44 AM
மூலிகைப் பெட்ரோலை விட இதை தியரியாக எளிதில் சரி பார்க்கலாம் என்பதையே சுருக்கமாய் சொல்லி இருக்கிறேன். பாரதி..

இதுதான் நம் பலவீனமே.. இவர்கப்ஸா விட்டாலும் தியரிப் படி சிறிது சாத்தியம் இருந்தாலும் நல்ல ஒரு கண்டுபிடிப்பு இருக்கும். சாத்தியமே இல்லை என்றால் இது சாத்தியம் இல்லை என எளிதாய் சொல்லி விடலாமே!

பாரதி
10-04-2008, 07:51 AM
அன்பு தாமரை,
ஒரு வேளை நேரமும் வாய்ப்பும் கிடைக்குமெனில் அவரை நேரடியாக சந்திக்கப்பார்க்கிறேன். அப்போது ஓரளவுக்கு நமக்கு தெளிவாகும்.

அனுராகவன்
03-05-2008, 07:36 AM
நன்றி நல்ல தகவல் நண்பரே!!
ம்ம் என் வாழ்த்துக்கள்!!!

MURALINITHISH
03-05-2008, 08:26 AM
5 வது 6 வதில படிச்ச நெம்புகோல்கள், மாதிரி அடிப்படை அறிவியலும் படிங்க


எல்லம் படித்ததுதான்
ஆனாலும் இபோது மறந்து விட்டது
ஏட்டில் இருக்கும் ஒரு விசயம் முழுவதுமாக செயல்படும்போதுதான் அதை ஏற்று கொள்ள முடியும் ஏன் எனில் அதை செயல் படுத்தும் போதுதான் அதில் வரும் பிரச்சனைகள் தெரியும்

அறிஞர்
06-05-2008, 01:08 PM
அன்பு தாமரை,
ஒரு வேளை நேரமும் வாய்ப்பும் கிடைக்குமெனில் அவரை நேரடியாக சந்திக்கப்பார்க்கிறேன். அப்போது ஓரளவுக்கு நமக்கு தெளிவாகும்.
விரைவில் பாரதியின் கட்டுரையை (நேரில் சந்தித்த) எதிர்பார்க்கிறேன்.

தாமரை
06-05-2008, 02:03 PM
இயந்திர நெம்புகோல்களின் எந்திரலாபம் 1 க்கு மேல் இருக்கும். கப்பிகளின் மூலம் 10 கிலோ எடையை 1 கிலோ எடையால் தூக்குவது போல பல மாதிரிகள் உண்டு. கிரேன்கள் போன்றவை இதன் அடிப்படையிலேயே வடிவமைக்கப் படுகின்றன.

மின்னழுத்ததிற்கு காந்தப் புலத்தின் வலிமை, மற்றும் மின்சுருளின்(காயில்) அமைப்பும் முக்கிய காரணம் என்பதால், காந்தப் புலமே மின்னோட்டத்தை தூண்டுகிறது. ஆக நாம் மின்சாரம் தயாரிக்க உதவும் காந்தப் புலம் உருவாக்கப் பட்டால் இது சாத்தியம்..

இருக்கும் மின்சாரத்தை மின்காந்தமாக்கி மறுபடி மின்சாரமாக்கினால் இழப்பு..

பாரதி
09-05-2008, 01:06 AM
விரைவில் பாரதியின் கட்டுரையை (நேரில் சந்தித்த) எதிர்பார்க்கிறேன்.
அன்பு அறிஞரே,
அவரை சந்திக்க நான் இருமுறை சென்றேன். நான் சென்ற நேரத்தில் அவர் இல்லை.
எனது பணியிடத்தில் இருந்து முன்னதாக வருமாறு அழைப்பு வந்ததால் இப்போது பணியிடத்திற்கு வந்து விட்டேன். அடுத்த முறை விடுமுறைக்கு செல்லும் போது மறுபடியும் முயற்சி செய்கிறேன். நன்றி.

namsec
05-11-2008, 07:13 AM
வெற்றிபெற வாழ்த்துக்கள்

அமரன்
05-11-2008, 08:33 AM
வெற்றிபெற வாழ்த்துக்கள்

சித்தரே!
அவருடனான பாரதி அண்ணாவின் சந்திப்பு இங்கே உள்ளது. படியுங்கள்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17897 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17897)

raj144
08-03-2009, 07:29 PM
திரு.வரதராஜன் அவர்களின் பேட்டியை படித்தேன் அவர் கூறுவது அதிக வேகத்தில் ஓடும் மோட்டாரை(1kva) வைத்து அதன் வேகத்தை கியர் பாக்ஸில் குறைத்து வேகம் குறைந்த(5kva) அல்டர்னட்டொரை ஓட்டுவதக கூறியிருக்கிறார்.ஆதே சமயம் அதனை லோடு கொடுத்தால் அதனை ஓட்டும் மோட்டார் டிரிப் ஆகிவிடும்(அதன் லோடு கரண்ட் அதன் முழு கரண்ட்டைக்கட்டிலும் பல் மடஙக்கு கூடி விடும் (அதற்கு தகுநத கரண்ட் MCB இல்லவிட்டல் காயில் எரிந்துவிடும்).அவர் கூறுவது ஒரு புதிரகவே உள்ளது,படத்தைப்பார்த்தால் பிளை வீல் டெக்னிக் (with timer control) ஆக இருக்காலாம்,அடுத்த விடுப்பில் அவரை சந்திக்க முயற்சிகிரேன்.இன்னும் சில மோட்டர் , கியர் இல்லமல் சிலர் சில கண்டுபிடிப்புக்களை கண்டு பிடித்துள்ளனர் (us ல் $5000 மதிப்பில்)ஆனல் அதனை அங்கு மட்டுமே இன்ஸ்டால் செய்வதக கேட்விப்பட்டேன்.அது எந்த அளவில் உண்மை என்று தெரியவில்லை.ஆனால் அது சாத்தியமே என்பதும் என் கருத்து.எனக்கும் அதில் அதிக ஆர்வம் உள்ளது.திரு.வரதராஜன் அவர்கள் இக்கண்டுபிடிப்பை வேகத்தில் முடித்து அதனை பேட்டண்ட் செய்தால் மிகவும் நல்லது. தகவலுக்கு மிக்க நன்றி

jk12
29-03-2009, 04:24 PM
இத்தகவல் இங்கு பதியபட்டு சுமார் ஓருவருடம் ஆகபோகிறது..
இன்னும் இதை பற்றி எந்த ஓரு செய்தியும் வேறு எந்ததகவல்களை எந்த தளங்களிலும் படிக்கவில்லை.

இப்போழுது இந்த கண்டுபிடிப்பு என்ன நிலையில் உள்ளது?
விபரம் அறிந்தவர்கள் இதை பற்றி பதிக்கவும்

நூர்
29-03-2009, 06:16 PM
இது நடைமுறைக்கு சாத்தியபடாத ஒன்று.அப்படிகண்டுபிடித்துவிட்டால்,அது அமுதசுரபிதான். 1யுனிட்க்கு 10 யுனிட். ஆக அந்த 10யுனிட்டில் செலவு 1யுனிட் போக மீதி 9யுனிட் கிடைத்தால்,மின்சாரத்திற்கு,விலை இல்லை,பிரீதான்.
நன்றி.

விகடன்
29-03-2009, 06:27 PM
இக்கண்டுபிடிப்பை பாராட்டியே ஆகவேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் பயனடைந்தால் உலகத்தினையே ஆட்டி வைக்கும் பெற்றோலியத்தின் தேவை நலிந்து போகும். அதன் பின்னர் இந்தியாவின் வளர்ச்சியை நினைத்துக்கூட பார்க்க முடியாது (விரைவாக தன்னிறைவை அடைந்துவிடும் என்று சொல்ல வந்தேன்).

கௌதமன்
18-09-2010, 03:29 PM
இயற்பியல் விதிப்படி இது சாத்தியமே இல்லாதது
முயற்சி பாராட்டத்தக்கது...

ஜிங்குசாங்கு
18-09-2010, 07:13 PM
பலரும் கூறியதை போல, இது சாத்தியமில்லை என்பதுதான் எனது கருத்தும். பொறியியல் கல்லூரியில் மோட்டார், காயில், ஜெனரேட்டர் பற்றி படித்த போது அறிந்ததெல்லாம் சக்தி இழப்பு என்பது தவிர்க்க முடியாதது ஆகும். அதுவும் சக்தி ஒரு உருவில் இருந்து இன்னொன்றிர்க்கு மாறுகையில் இழப்பு அதிகமாக வாய்ப்புகள் உள்ளன.

பாரதி அவர்களின் (திரு வரதராஜனுடனான) சந்திப்பையும் படித்தேன். இன்னொரு மூலிகை பெட்ரோல் ராமன் கதை போல ஆகிவிடுமோ என்றுதான் தோன்றுகிறது.
ஆனால் அவர் உண்மையில் சொத்துக்களை விற்று ஆராய்ச்சி செய்கிறார் என்றால், அவர் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது!!

karikaalan
19-09-2010, 02:42 PM
நமக்குத் தெரிந்தது எல்லாம் 10 யூனிட்டுகள் உபயோகித்துவிட்டு, ஒரு யூனிட் உபயோகித்ததாகக் கணக்கு காட்டுவதுதானே!!

===கரிகாலன்