PDA

View Full Version : காதல் துலாபாரம்!



ப்ரியன்
07-04-2008, 10:10 AM
நீ பறித்து சூட
பூத்திருக்கிறது
என்னுள் காதல்!
*
குடை விட்டெரி!

உன்னில்
நனைந்திடத்தான் பொழிகிறது
மழை.
*
காய்வதேயில்லை!

நீ தந்த
முத்தங்களின் ஈரங்கள்!
*
காதுகளுக்கு
உன் பேச்சிசை!
கண்களுக்கு
உன் பேரழகு!
நாசிக்கு
உன் சுகந்தம்!
தேகத்திற்கு
தொடுகை!
என்ன பாவம் செய்தது
உதடுகள் மட்டும்;
வா!முத்தம் தந்துவிட்டுப் போ!
*
நான் ஒரு பக்கம்
உன் உடைந்த
கண்ணாடி வளையல் துண்டுகள்
ஒரு பக்கம்!

சமனாகி விடுகிறது
காதல் துலாபாரம்!

- ப்ரியன்.

அமரன்
07-04-2008, 02:28 PM
மின் மினி அழகு..
மின்மினிகள் சிலவின் அணிவகுப்பு பேரழகு.
காதலில் தோய்த்த மொழிகள் கண்டாலே
எல்லாமே மறந்து விடுகிறது..
பதிலெழுத வார்த்தைகளும்..
பாராட்டுகள் ப்ரியன்!

சிவா.ஜி
07-04-2008, 02:45 PM
சின்னச் சின்ன வார்த்தைகளில் காதல் பேசும் கவிதை.
ஐம்புலன்களில் ஒன்றுமட்டும் என்ன பாவம் செய்தது எனக்கேட்கும் காதலனின் ஆதங்கம் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் அவள் தந்த முத்தங்களின் ஈரம் காய்வதேயில்லையெனச் சொல்லிவிட்டு...அடுத்த வரிகளில் முத்தம் யாசிக்கும் முயற்சிதான் விளங்கவில்லை.

மொத்தத்தில் ப்ரியனின் அக்மார்க் காதல் கவிதை அசத்தல்.
வாழ்த்துகள் ப்ரியன்.