PDA

View Full Version : எல்லோரையும் போலவேshibly591
07-04-2008, 08:59 AM
எல்லோரையும் போலவே
நானும் தோற்றுக்கொண்டிருக்கிறேன்
நட்பில்...
காதலில்...
முக்கியமாக வாழ்வில்....

meera
07-04-2008, 11:10 AM
தொலைத்தவர்கள் அல்லவா தேடவேண்டும். நீங்கள் என்ன தேடுகிறீர்கள் ஷில்பி

சிவா.ஜி
07-04-2008, 12:31 PM
ஷிப்லியின் கவிதை என்றால் வாசிக்காமலேயே தெரிந்து கொள்ளலாம், கண்டிப்பாக புலம்பலாகத்தான் இருக்குமென்று.

சுய கழிவிரக்கம் விடுத்து வெளியே வாருங்கள் ஷிபிலி. உற்சாகமானவை இந்த உலகத்தில் எத்தனையோ இருக்கின்றன.

பிரபல மனநல மருத்துவர் மாத்ரூபூதம் அவர்கள் தன் வாழ்வின் கடைசி அத்தியாயங்களில் மிகவும் உடல்வேதனைக்குள்ளாகி மரணமடைந்தார். ஆனாலும் தன் இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து,இன்னும் பல உபாதைகளுக்கு நடுவிலும், கடைசிவரை நகைச்சுவையாகப் பேசி உற்சாகமாக இருந்தார். எழுத்தாளர் சுஜாதா அவர்களும் அப்படியே.

எனவே கவலை விடுங்கள். உற்சாகமாக உலகத்தைப் பாருங்கள்.
வாழ்த்துகள்.

shibly591
09-04-2008, 03:18 AM
உங்கள் கருத்து என்னை சிந்திக்க வைக்கிறது.

சாலைஜெயராமன்
09-04-2008, 05:24 AM
மனநல மார்க்கத்தின் முதல் படியே தோல்வியை எதிர் கொள்வதுதான். வெற்றி என எதைக் கருதுகிறோம். உலக சம்பத்துக்களைப் பெற்று சுகபோக வாழ்க்கை, மற்றும் இளவயது காதல் வெற்றி இவைகளைத்தானே.

இதில் பெறும் வெற்றியை நிஜமான வெற்றிதானா என்று நோக்கினால். வெற்றிபெற்றதாகக் கருதப்படும் மக்களின் மன நோக்கினை அறிந்தால் தெரிந்துவிடும். அவர்கள் நிஜமாகவே தோல்வியைத் தான் தழுவியிருக்கிறார்கள்.

மாறாக உலக சம்பத்துக்களில் தோல்வியுற்றதாக நினைப்பவர்கள் அறிவின் முகடைக் கண்டு பிறருக்கு முன் உதாரணமாகத் திகழும் யுக புருஷர்களாகவே இருப்பார்கள். அவர்களின் அனுபவங்கள்தான் நிஜ வெற்றியடைந்த சம்பவங்களின் தொகுப்பான நிறைவான வாழ்வைத் தந்திருக்கும் நிகழ்வுகளால் நிரம்பப் பெற்றிருக்கும். மன ஆரோக்கியம் பெறுதலே வெற்றி பெற்ற நிலையான வாழ்வு என்பது என் கருத்து.

நாகரா
09-04-2008, 05:40 AM
அலைபாயும் மனத்தை வெல்ல
அடங்க வேண்டும் இருதயத்தில்.
இருதயத்தில் அடங்கக் கிட்டும் அருள்.
அருள் கிடைத்தால் எல்லாங் கிட்டும்.
"என் கிருபை உனக்குப் போதும்"
என்ற கடவுளின் வேதாகம வாக்கை
ஞாபகங் கொள்வீர், ஷிப்லி,
நன்றி

shibly591
09-04-2008, 05:51 AM
உண்மைதான் நண்பரே...எனக்கு இது போன்ற புலம்பல் கவிதைகள்தான் இலகுவில் எழுத வருகிறது..இருந்தாலும் எழுத்தாளன் என்றால் காலத்தின் கண்ணாடிகளாக இருக்கவேண்டும் என்பார்கள்...இனி நேரியல் அழகியல் சிந்தனைகளை வரைய முனைகிறேன்...தட்டிக்கொடுங்கள் தவறு செய்தால் குட்டிவிடுங்கள்.ஏனெனில் வளர்த்து விடுபவர்களுக்கே அடிக்கும் உரிமையும் இருக்கிறது.நன்றி மறப்பது நன்றன்று.

சுகந்தப்ரீதன்
15-04-2008, 10:14 AM
எல்லோரையும் போலவே
நானும் தோற்றுக்கொண்டிருக்கிறேன்
நட்பில்...
காதலில்...
முக்கியமாக வாழ்வில்....

உங்கள் கவிதையிலேயே தெரிகிறது
நீங்கள் ஜெயித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று..!!
தோற்காமல் வெற்றி பெற முடியாது நண்பனே..!!

இழந்த விடயங்களை நோக்கும் நாம் சற்று திரும்பி அந்தபக்கம் பார்த்தால் வேறுவிடயங்களில் வென்றிருப்போம்..!!
நட்பில், காதலில் முக்கியமாக வாழ்வில் வெற்றிப் பெற்றவர்கள்கூட வேறெங்காவது தோற்றிருப்பார்கள்..!!

ஜெயராமன் அண்ணா சொன்னது போல இதுதான் வாழ்க்கை இதுதான் சந்தோசம் என்ற ஒருகுறுகிய வட்டத்தில் நோக்கும்போதுதான் நாம் எப்பவுமே தோற்றவர்களாகத்தான் நமக்கு நாமே தோன்றுகிறோம்..!!

மாற்றி சிந்தித்தால் மனது இலகுவாகிவிடும்...
வெற்றிபெற்ற விடயங்கள் விழிகளுக்கு தெரிந்துவிடும்..!!

கவிதை அருமை வாழ்த்துக்கள்..!!
இவ்வகை கவிதை அவ்வப்போது வந்தால் போதும்..
எப்போதும் வேண்டாம் நண்பா..!!

kavitha
15-04-2008, 10:47 AM
இனி நேரியல் அழகியல் சிந்தனைகளை வரைய முனைகிறேன்...தட்டிக்கொடுங்கள் தவறு செய்தால் குட்டிவிடுங்கள்.ஏனெனில் வளர்த்து விடுபவர்களுக்கே அடிக்கும் உரிமையும் இருக்கிறது எதையும் இத்தனை இலகுவாக எடுத்துக்கொள்ளும் தன்மையே உங்கள் வெற்றிக்கு முன்னோடி.

தோல்விகள் தான் வெற்றிக்கு முதல்படி என்பது நாம் கேட்டறிந்ததுதானே!

ஒருமுறை தாமஸ் ஆல்வா எடிசன் தனது உதவியாளரிடம் கேட்டாராம்...
இது வரை ஆயிரத்து முன்னூற்றி நான்கு முறை முயற்சி செய்தோம். இந்த முறை தான் நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? என்று...
உதவியாளர் சொன்னாராம்... "ஆயிரத்து முன்னூற்றி மூன்று முறை நாம் தோல்வியுற்றிருக்கிறோம்" என்று..
அதற்கு ஆல்வா எடிசன் சொன்னாராம்...
"இல்லை. ஆயிரத்து முன்னூற்றி மூன்று தவறான செய்முறைகளைக் கண்டுபிடித்திருக்கிறோம். இனி இதைப்படிப்பவர்கள் எப்படி அணுகக்கூடாது என்பதைத் தெரிந்துக்கொள்வார்கள்" என்றாராம்.

என்னைப்பொறுத்தவரை வாழ்வில் நிகழும் ஒவ்வொரு சம்பவமே ஒரு படிப்பினை தான். ஒவ்வொரு முறையும் அதிலிருந்து ஏதோ ஒன்று நாம் கற்றுக்கொள்கிறோம். எனவே தோல்விகளுக்காக வருந்தத்தேவையில்லை. அந்தப்படிப்பினைக்காக நன்றிகள் சொல்லிவிட்டு அதனால் கிடைத்த பாடத்தை மனதில் நிறுத்தி அடுத்த நிமிடத்தை வாழக்கற்றுக்கொண்டால் போதும்.

என் கையிருப்பில் உள்ள ஒவ்வொரு நொடியும் கரைகிறது அதில் நான் உபயோகமாக என்ன செய்தேன் என்று எண்ணினாலே அடுத்த செயலுக்கான உந்துதல் தானே வந்துவிடும்.

எல்லோரையும் போலவே
நானும் தோற்றுக்கொண்டிருக்கிறேன்
நட்பில்...
காதலில்...
முக்கியமாக வாழ்வில்....

தினநாட்குறிப்பில் இன்று படித்த செய்தி : முயற்சிக்காதவர்கள் தோல்வியுறுவதே இல்லை.
இதிலிருந்து நீங்கள் உழைக்கிறீர்கள் என்று தெரிகிறது. வேலையில் உழைப்பில் ஓரளவிற்கு எதிர்பார்ப்பு வையுங்கள். அன்பு கொள்பவர்களிடம் அதுவும் வேண்டாம். இனி எல்லாம் சுகமே!

ஆதவா
15-04-2008, 10:58 AM
எல்லோரையும் போலவே
நானும் தோற்றுக்கொண்டிருக்கிறேன்
நட்பில்...
காதலில்...
முக்கியமாக வாழ்வில்....

ஷிப்லியின் கவிதை என்றால் வாசிக்காமலேயே தெரிந்து கொள்ளலாம், கண்டிப்பாக புலம்பலாகத்தான் இருக்குமென்று.

சுய கழிவிரக்கம் விடுத்து வெளியே வாருங்கள் ஷிபிலி. உற்சாகமானவை இந்த உலகத்தில் எத்தனையோ இருக்கின்றன.

பிரபல மனநல மருத்துவர் மாத்ரூபூதம் அவர்கள் தன் வாழ்வின் கடைசி அத்தியாயங்களில் மிகவும் உடல்வேதனைக்குள்ளாகி மரணமடைந்தார். ஆனாலும் தன் இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து,இன்னும் பல உபாதைகளுக்கு நடுவிலும், கடைசிவரை நகைச்சுவையாகப் பேசி உற்சாகமாக இருந்தார். எழுத்தாளர் சுஜாதா அவர்களும் அப்படியே.

எனவே கவலை விடுங்கள். உற்சாகமாக உலகத்தைப் பாருங்கள்.
வாழ்த்துகள்.

மிகச்சிலரைப் போலவே
நான் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன்
நட்பில்...
காதலில்...
முக்கியமாக வாழ்வில்....
0000000000000000000
தோற்றுவிட்டேன்
நட்பில்,
காதலில்,
மிக முக்கியமாகத் தோல்வியில்..
000000000000000

இந்த சித்திரை இதழில் இறுதிப் பக்கத்தில் வெற்றி எனும் கவிதை கூட்டுக்கவிதையாக இருக்கிறது,............ அதைப் படித்துப் பாருங்கள்..

நன்றி.
ஆதவன்.

நாகரா
15-04-2008, 11:03 AM
கவிதாவின் பின்னூட்டம் அருமையிலும் அருமை, இருள் மயமான வேளைகளிலும் ஒளி மயமான எண்ணங்களைக் கைக்கொண்டால் வெற்றி நிச்சயம்.

தோல்விகளே படிகளாக
வெற்றியை நோக்கி
சலியாமல் துவளாமல்
ஏறிக்கொண்டே இருக்கிறேன்
நான்
என் வாழ்வின்
எல்லாக் களங்களிலும்.

ஆதவா
15-04-2008, 11:16 AM
எதையும் இத்தனை இலகுவாக எடுத்துக்கொள்ளும் தன்மையே உங்கள் வெற்றிக்கு முன்னோடி.

தோல்விகள் தான் வெற்றிக்கு முதல்படி என்பது நாம் கேட்டறிந்ததுதானே!

ஒருமுறை தாமஸ் ஆல்வா எடிசன் தனது உதவியாளரிடம் கேட்டாராம்...
இது வரை ஆயிரத்து முன்னூற்றி நான்கு முறை முயற்சி செய்தோம். இந்த முறை தான் நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? என்று...
உதவியாளர் சொன்னாராம்... "ஆயிரத்து முன்னூற்றி மூன்று முறை நாம் தோல்வியுற்றிருக்கிறோம்" என்று..
அதற்கு ஆல்வா எடிசன் சொன்னாராம்...
"இல்லை. ஆயிரத்து முன்னூற்றி மூன்று தவறான செய்முறைகளைக் கண்டுபிடித்திருக்கிறோம். இனி இதைப்படிப்பவர்கள் எப்படி அணுகக்கூடாது என்பதைத் தெரிந்துக்கொள்வார்கள்" என்றாராம்.

தினநாட்குறிப்பில் இன்று படித்த செய்தி : முயற்சிக்காதவர்கள் தோல்வியுறுவதே இல்லை.
இதிலிருந்து நீங்கள் உழைக்கிறீர்கள் என்று தெரிகிறது. வேலையில் உழைப்பில் ஓரளவிற்கு எதிர்பார்ப்பு வையுங்கள். அன்பு கொள்பவர்களிடம் அதுவும் வேண்டாம். இனி எல்லாம் சுகமே!

நல்ல பின்னூட்டம் கவிதா அக்கா.. உங்களுக்குப் பின்னர் பதிவு கொடுத்தும் நான் பார்க்கவில்லை.....

தாமஸ் எ:கா சரியான உதாரணம்.. எந்த ஒரு கருத்துக்கும் மாற்றுக் கருத்து உண்டல்லவா.,

முயற்சிக்காதவர்கள் தோல்வியுறுவதே இல்லை. - தினக்குறிப்புகளை நம்பாதீர்கள்............. அதே மாற்றுக் கருத்துதான்........... முயற்சிக்காதவர்கள்தான் அதிகம் தோல்வியுறுவார்கள்.........

ஓவியன்
17-04-2008, 06:25 AM
எவன் ஒருவன் தோற்பதாக நினைக்கத் தொடங்கிறானோ, அப்போதே அவன் வெற்றிக்கு தொலைவாகிவிடுகிறான்.... :frown:

அனுராகவன்
24-04-2008, 04:29 AM
சிப்லியின் கவி சோகம் கலந்து எதையோ தேடுது..
சின்ன சின்ன தோல்விக்கு மன வருத்தம் வேண்டாம்..
சிறப்பான வெற்றி பல தோல்விகள் கண்ட மனம் பெறும்..
சிப்லிக்கு என் நன்றியும்,வாழ்த்தும்..