PDA

View Full Version : சிகரெட்டைக் காட்டிலும் கொடியது செல்பேசி!'



ராஜா
06-04-2008, 01:24 PM
புற்றுநோய்க்கான முக்கியக் காரணிகளில் ஒன்றுதான் 'புகைப்பிடித்தல்' என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், சிகரெட்டைக் காட்டிலும் செல்பேசிகளை உபயோகித்தல் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என்று இங்கிலாந்து வாழ் இந்திய மருத்துவ ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.

செல்பேசிகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சானது, மூளையில் கட்டிகளை ஏற்படுத்தும் அபாயம் உண்டு என்றும், அதன் காரணமாக மூளை புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகம் என்றும் அண்மையில் வெளியான டாக்டர் குரானாவின் மருத்துவ ஆய்வு தொடர்பான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடித்தலால் ஏற்படும் புற்றுநோய் காரணமாக, உலக அளவில் ஆண்டுக்கு ஒரு கோடி பேர் மரணமடைவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆனால், செல்பேசி உபயோகிப்போர்களில் அதிகமானோர் புற்றுநோய்க்கு பலியாகியிருப்பதாக டாக்டர் குரானா தனது ஆய்வின் மூலம் எடுத்துரைத்துள்ளார்.

செல்பேசியால் ஏற்படும் விளைவுகள் குறித்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளைக் கொண்டு டாக்டர் குரானா தனது ஆய்வினை மேற்கொண்டு, செல்பேசியில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு மிகவும் ஆபத்தானது என்பதைக் கண்டறிந்துள்ளார்.

மூளைகளில் கட்டி ஏற்படுவதற்குக் காரணமான செல்பேசியில் இருந்து கதிர்வீச்சுகளின் பாதிப்பைக் குறைப்பதற்கு, செல்பேசி நிறுவனங்களும், அரசுகளும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், இதை உதாசீனப்படுத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

அதேநேரத்தில், இதனை தனியொரு அறிவியல் அறிஞரின் கருத்து என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், டாக்டர் குரானாவின் கருத்தை எவரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றும் செல்பேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

(மூலம் - வெப்துனியா)

அய்யா
06-04-2008, 01:32 PM
கொஞ்ச நேரம் பேசினதுமே காது சூடாகுதே அதுகூட அந்தக் கதிர்களால்தானோ?

பூமகள்
06-04-2008, 01:34 PM
உண்மை தான் ராஜா அண்ணா..:icon_ush:
செல்லிடப் பேசியால் விளையும் தீமையை இப்படி சதா எல்லா அறிவியலாளர்களும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள்... அவர்களின் குரல்.. அலைபேசி நிறுவனங்களின் விளம்பரக் கூவலில் அடிபட்டுப் போகின்றன.. ஒன்றிரண்டு மீறி வந்தாலும்.. நடவடிக்கை எடுக்க இயலாத சூழல்.. :confused::confused: :eek::eek:

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம்.
அரை மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து செல்லிடப் பேசியில் பேசுவது ஆபத்து என்றும்.. இடப் புறக் காதில் வைத்துத் தான் பேச வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.:icon_ush: :frown:

ஆக மொத்தம்.. புறா விடு தூது தான்.. சிறந்ததாகப் படுகிறது ராஜா அண்ணா. எல்லாரும் புறாக்களை வளருங்கள் என்று ஒரு அறிக்கை அரசு விடுத்தாலும் இனி ஆச்சர்யப்படுவதற்கில்லை..!! :D:D

ராஜா
06-04-2008, 01:43 PM
புறாவா..?

அப்போ எஸ்.எம்.எஸ்ஸுக்கு சிட்டுக்குருவியா..?

பூ... ஒத்துவருமாம்மா..?

பூமகள்
06-04-2008, 01:59 PM
ஹீ ஹீ..!! :D:D
சும்மா சொன்னேன் அண்ணா..!!
பெரியவங்க நீங்க பார்த்து ஒரு முடிவு சொல்லுங்க..!!

அமரன்
06-04-2008, 02:58 PM
சமீபகால சலசலப்பு செல்லிடப்பேசி கதிரியக்க தீ விளைவுகள்தான். இச்சலசலப்பு, எழும் வேகத்திலே அடங்கிப் போவதும் வழக்கமாகிவிட்டது. பூதாகரமாக கிளம்பினால், செல்லிடப்பேசியிலேயே ஆபத்து எச்சரிக்கை பொறித்து சந்தையில் விடுவார்கள் என்றே படுகிறது..

தங்கவேல்
08-04-2008, 10:15 PM
எனது அறிவியல் ஆராய்ச்சி நண்பர் ஒருவர் செல்லிடப்பேசிகளால் புற்று நோய் வருவது உண்மை தான் எனவும், அடிக்கடி மறதி ஏற்படும் எனவும், திடீரென்று கோபம் வரும் என்றும், மனச் சோர்வு ஏற்படும் என்றும் சொன்னார்.

என்று பிபில் மார்கெட்டில் நுழைந்ததே அன்றிலிருந்து செல் போன் பயன்படுத்தி வருகிறேன். கொடுமை.

மிகவும் விலை உயர்ந்த கலர் செல்போன்களால் இன்னும் ஆபத்து அதிகம் என்றார். புளூடூத் மற்றும் இன்பிரா ரெட் என்றால் சொல்லவே வேண்டாம்.

அனுராகவன்
09-04-2008, 03:59 AM
ஆமாம் இது உண்மைதான் ராஜா அவர்களே..
எல்லாம் நவீன யுகம்தானே..
இந்த காலத்தில் செல்பேசி தவிர்க்க முடியாது..
எங்கும் எதிலும் செல்பேசிதான் என்று செல் அரிப்பதுப்போல நச்சரிப்புதான்..
பட்டித்தொட்டி முதல் அதன் தாக்கம் கூடுது..
ஆனால் அதன் பாதிப்பை யாரும் உணர்ந்தாக தெரியல..
முதலில் அதன் பாதிப்பை விஞ்ஞானிகள் நிறுப்பிக்கும் வரை நாமும்
காத்துயிருப்போம்...

lenram80
10-04-2008, 12:10 PM
நேற்று முன் தினம் வெளியான செய்தி அறிக்கையின் படி, ஆபத்து என்பது இன்னும் நிரூபிக்கப் படவில்லை. (20 ஆண்டுகள் ஆகியும்). என்னைப் பொருத்தவரையில், இது ஒன்றும் ஆபத்து இல்லை என்றே தேன்றுகிறது.

மனோஜ்
10-04-2008, 03:39 PM
ஆபத்து என்றாலும் அவசியமாயிட்றே
உபயோகத்தை குறைநத்தல் நலம்