PDA

View Full Version : உடலுக்கு உறுதி



SathyaThirunavukkarasu
06-04-2008, 01:04 PM
1 இஞ்சியை நன்கு தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நிழலில் சற்று உலர்த்தவும், பின்பு அதனை ஒரு கண்ணாடி குடுவையில் இட்டு மூழ்கும் அளவு தேன் விட்டு ஒருவாரம் ஊரவிட்டு நன்கு ஊரியபின் தினமும் ஒரு தேக்கரண்டி அளவு தேனும் இஞ்சியும் சேர்த்து தொடர்ந்து தினமும் காலை (அ) மாலை சாப்பிட்டால் உடலில் ஏற்படும் சிறு சிறு உபாதைகள் அறவே நம்மிடம் வராது
2 இதே முறையில் நெல்லிகணியிலும் செய்து சாப்பிடலாம் வாழ்நாள் நோயின்றி நீடிக்கும்
கை படாமல் பயண்படுத்தினால் ஒருவருடம் வரை கூட கெட்டுபோகாது

சிவா.ஜி
06-04-2008, 01:38 PM
தகவலுக்கு நன்றிங்க சத்யா. எத்தை திண்ணால் பித்தம் தெளியும்ன்னு கவலைப் பட்டுக்கொண்டிருக்கும் காலம் இது. இதைப்போன்ற இயற்கை வைத்தியங்கள் நல்லதுதான்.

அனுராகவன்
10-04-2008, 08:39 AM
அடடே !!
மருத்துவ பகுதியில் ஒரு குழந்தை வைத்தியர்..
நான் கண்ணாடி குடுவைக்கு எங்கு போவேன்..
நீங்களே செய்தது தான் சொல்கிறீகளா..
நன்றி சத்தியா..
தொடர்ந்து வளரட்டும் மருத்துவ பகுதி..

SathyaThirunavukkarasu
21-04-2008, 12:51 PM
அடடே !!
மருத்துவ பகுதியில் ஒரு குழந்தை வைத்தியர்..
நான் கண்ணாடி குடுவைக்கு எங்கு போவேன்..
நீங்களே செய்தது தான் சொல்கிறீகளா..
நன்றி சத்தியா..
தொடர்ந்து வளரட்டும் மருத்துவ பகுதி..
அனு இந்த குறிப்பு விளையாட்டல்ல
இதை தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தி பாருங்கள்,அப்புறம் நீங்க என்றும் இளமைதான். என்ன கண்ணாடி குடுவைதானே வேனும் நானே உங்களுக்கு வாங்கித்தறேன் கவலைப்படாதீங்க

அனுராகவன்
22-04-2008, 03:26 AM
அனு இந்த குறிப்பு விளையாட்டல்ல
இதை தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தி பாருங்கள்,அப்புறம் நீங்க என்றும் இளமைதான். என்ன கண்ணாடி குடுவைதானே வேனும் நானே உங்களுக்கு வாங்கித்தறேன் கவலைப்படாதீங்க
தங்கையே அப்பரம் வேறு என்ன செய்யனும்..
தொடர்ந்து குறிப்புகள் தரனும் சரியா..

arun
31-07-2008, 07:53 PM
பயனுள்ள தகவல்கள் மேலும் பல தகவல்களை இது போல கொடுங்கள் பகிர்வுக்கு நன்றி

அறிஞர்
31-07-2008, 08:15 PM
வாய்வு பிரச்சனை இது நல்ல மருந்து என கூற கேள்விப்பட்டிருக்கிறேன்..
நன்றி சத்யா..

துளசி
10-02-2009, 09:05 PM
இஞ்சி குரலுக்கும் நல்லது, சளிக்கும் நல்லது. வாழ்நாள் நோயின்றி நீடிக்குமென்றால் நான் இதை முயன்று பார்க்கிறேன். நன்றி சத்தியாதிருநாவுகரசு.