PDA

View Full Version : சத்யராஜ் பேச்சு: ராம.கோபாலன் கண்டனம்..!



ராஜா
06-04-2008, 12:52 PM
தமிழ் திரையுலகினரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, இந்து மதக் கடவுள்கள் குறித்து சத்யராஜ் பேசியதற்கு இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒகேனக்கல் விவகாரம் தொடர்பாக தமிழ் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் சத்யராஜ், இந்து தெய்வங்களுக்கு விரோதமாக பேசியதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் முருகன் இருக்கும்போது, கேரளத்து ஐயப்பனையும், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உள்ள தெய்வங்களை ஏன் வழிபட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முருகன் புகழ்பாடும் சத்யராஜ் எத்தனை முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியிருக்கிறார். நாத்திகர் என்று கூறிக்கொள்ளும் இவர் முருகக் கடவுள் இருப்பதை ஒத்துக்கொள்கிறாரா?

இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்தி பேசும் சத்யராஜை நடிகர் சங்கம் கண்டிக்க வேண்டும்.

தமிழ் உணர்வுள்ள சத்யராஜ், தமிழகத்து நடிகைகளுடன் மட்டும் தான் நடிப்பேன். வேறு மாநில நடிகைகள் வேண்டாம் என்று சொல்வாரா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)

டவுட்டு தனபாலு : கோபாலனய்யா.. இத்தோட ஏன் விட்டுட்டீங்க..?

தமிழ் கலாச்சாரம் பற்றி பேசும் சத்யராஜ், படத்தில் நடிக்கும் நடிகைகளையெல்லாம் படத்தோட கழற்றிவிடாம வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து குடும்பம் நடத்தத் தயாரான்னு கூட கேட்டுருக்கணுமுங்க..!

சுகந்தப்ரீதன்
06-04-2008, 12:55 PM
டவுட்டு தனபாலு : கோபாலனய்யா.. இத்தோட ஏன் விட்டுட்டீங்க..?

தமிழ் கலாச்சாரம் பற்றி பேசும் சத்யராஜ், படத்தில் நடிக்கும் நடிகைகளையெல்லாம் படத்தோட கழற்றிவிடாம வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து குடும்பம் நடத்தத் தயாரான்னு கூட கேட்டுருக்கணுமுங்க..!
ம்ம்ம்ம்..நியாயமான டவுட்டு போலத்தான் இருக்குது..:fragend005::confused::fragend005:

அய்யா
06-04-2008, 01:04 PM
ஒகேனக்கல் பிரச்னையைக் கொளுத்திப் போட்ட 'இடையூற'ப்பாவுக்கு ஒண்ணும் கண்டனம் தெரிவிக்கலையாமா..?

எவன் குடி எப்படி வேணாலும் கெட்டுப் போகட்டும்.. என் பொழப்புல மண் விழக்கூடாதுங்கற நெனப்பு..!

பூமகள்
06-04-2008, 01:26 PM
நல்லா டவுட்டு கேட்டீங்க ராஜா அண்ணா..!! :D:D

இன்னொரு பெரியார் வந்துட்டார்னு நினைக்கும் படி அமைஞ்ச பேச்சு சத்தியராஜ் பேசியது..!!

தமிழ் உணர்வுள்ள எவரும் இதை மறுக்க முடியாது. இதையும் அரசியல் பண்ண கிளம்பிட்டாங்கப்பா கேள்வி கேட்டுட்டு..!!

சிவா.ஜி
06-04-2008, 01:33 PM
இராம கோபாலனெல்லாம் ஒரு ஆளா....சரியான சந்தர்ப்பவாதி. அரசியலையும், ஆன்மீகத்தையும்...சொந்த நலத்துக்கு பயன்படுத்திக்கறவர். அவர் பேச்சையெல்லாம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளக்கூட்டாது.

அமரன்
06-04-2008, 03:21 PM
அவரவர் பொழைப்பு அவரவருக்கு முக்கியமாக போயிட்டுது. அதனால புதுசு புதுசாக ரிலீஸ் பண்றாங்க பிரச்சினைகளை..

SathyaThirunavukkarasu
06-04-2008, 04:29 PM
சத்யராஜின் பேச்சு மிகவும் காட்டமாகதான் இருந்தது. நடிகர்களின் பெயர் சொல்லி கை தட்டல் வாங்கியவர்கள் என்று சொல்லி பின் சத்யராஜே நடிகரின் பெயர் சொல்லி கை தட்டல் வாங்கினார்.:fragend005:

ஷீ-நிசி
07-04-2008, 10:32 AM
சத்யராஜின் பேச்சை நன்றாக ரசித்தேன்.. ஆனா பாருங்க.. இதெல்லாம் பிரச்சினைக்கு தீர்வல்ல...

மத்திய அரசு இதில் தலையிடனும்... வேற வழியே இல்லை..

aren
07-04-2008, 11:23 AM
நதிகளை தேசியமயமாக்கினால் மட்டுமே இதற்கு தீர்வு.

நம் ஊரில் இருக்கும் நெய்வேலியில் கிடைக்கும் நிலக்கரி மட்டும் தேசியமயமாக்கப்பட்டுவிட்டது. அப்படியானால் ஏன் இந்த ஓரவஞ்சனை தண்ணீருக்கு மட்டும். அது நம்மிடம் இல்லையென்பதலா.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு - கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மட்டுமே!!!

இதயம்
07-04-2008, 12:06 PM
சிவா சொன்ன மாதிரி இராம. கோபாலன் ஒண்ணும் சாதாரண ஆள் கிடையாது. அவர் சொல்றதை எல்லாம் கேட்கிறதுக்குன்னு ஒரு க்ரூப் பின்னாடி அலையுது..!! இந்த மாதிரி ஆளுங்களுக்கு இப்ப கொஞ்சம் நேரம் சரியில்லை..!! மக்கள் நிறைய முழிச்சிக்கிட்டதால இவங்கள்லாம் கல்லா கட்டுறது இப்பல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. அது மாத்திரம் இல்லாம ஆன்மீகவாதிகள்(!!) எல்லாம் வரிசையா ஜெயிலுக்கு போறதால நிறைய பேர் அடக்கியும் வாசிச்சிட்டிருக்காங்க..!! இராம. கோபாலனுக்கு எப்பவும் ஒரு பயம் உண்டு. அவரை யாரும் மறந்துடக்கூடாதுங்கிறது தான் அந்த பயம்..!! அதான் இப்படி ஏதாவது வாயில் வர்றதை எல்லாம் சொல்லி அவர் இருக்கார்ங்கிறதை மக்களுக்கு நினைவுபடுத்திட்டிருக்கார். கடவுள் நம்மை காப்பாத்துற காலமெல்லாம் போயி, இப்ப இராம. கோபாலன் மாதிரியான ஆளுங்க தான் கடவுள்களை காப்பாத்த எடுத்த அவதாரங்களா தங்களை நினைச்சிட்டிருக்கிறது பெரிய காமெடி..!!

சினிமாத்துறையினர் நடத்தும் எந்த வகையான போராட்டத்திலும அதுல உண்மையை விட சினிமா ஸ்டண்ட் தான் அதிகம் இருக்கும். குறிப்பா இதுக்கு இவங்க உண்ணாவிரதத்துல குதிக்க முக்கிய காரணம் தமிழ் சினிமா படங்கள் கர்நாடகவுல ஓடுறது தடை பட்டதும், அந்த தியேட்டர்கள் தாக்கப்பட்டதும் தான்..!! அவங்க பிழைப்பில் மண்ணைப்போடுற எந்த விஷயத்தையும் பார்த்துக்கிட்டு சினிமாக்காரங்களால சும்மா இருக்க முடியாது. ஆனா அதில் கலந்துக்கிட்ட சிலருக்கு மட்டும் தமிழுணர்வு இருந்தது கொஞ்சம் ஆறுதல். குறிப்பா சத்யராஜ்..!!


நடிப்பு தாண்டி சத்யராஜை எனக்கு பிடிக்க காரணம் அவர் இமேஜுக்கு பணியாத ஆளு, மனசுல பட்டதை பட்டுன்னு போட்டு உடைக்கிற ஆளு, பகுத்தறிவு பேர்வழி..!! இந்த போராட்டத்தில் சத்யராஜோட பேச்சு தான் ஹைலைட்டான சமாச்சாரம். அவர் சொன்ன கருத்துல சில விஷயங்கள் சபை நாகரீகத்துக்கு சரி வராதுன்னாலும் ஒரு சினிமாக்காரன் இத்தனை உண்மையா, நேர்மையா இருக்கிறது பெரிய விஷயம். அதுவும் ரஜினியை தாக்கோ, தாக்குன்னு தாக்கி ரஜினியை ரொம்பவே நெளிய வச்சிட்டார்..!!
அவர் பேசியது கீழே: (அவர் பேசியவற்றில் சபை நாகரிகம் மீறியவை தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது..!)

இங்கு யாருடைய பெயரைச் (ரஜினி) சொன்னால் எனக்குக் கைத்தட்டல் கிடைக்குமோ, அந்தப் பெயரைச் சொல்வதை விட, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவேன். கர்நாடகத்தில் தமிழனை கன்னடக்காரர்கள் தாக்கிக் கொண்டுள்ளனர். அதைப் பற்றி மட்டும்தான் இங்கு பேசுவேன்.

இதுவரை என்னை மனிதன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் இன்று முதல் என்னை தமிழன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

அப்படியானால் தமிழன் மனிதன் இல்லையா என்ற சந்தேகம் வரும். தமிழன் மனிதன் இல்லை, வெறும் மரம் என்றுதான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மரமாக இருந்தால் என்ன நடக்கும்? நாய் வந்து ஒண்ணுக்கு அடிக்கும். பிறகு எவனாவது வந்து மரத்தை வெட்டி எடுத்துக் கொண்டு போய் கட்டில் செய்து கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டிருப்பான். டேபிள் செய்து அதில் உட்காருவான். மொத்தத்தில் அந்த மரத்திற்கு மரியாதையே இல்லாமல் போய் விடும். எனவே தமிழா, நீ மரமாக இருக்காதே, மனிதனாகவும் இருக்காதே, தமிழனாக இரு என்று சொல்கிறேன்.

காந்தி சொன்னார் கண்ணுக்கு கண் என்று ஆரம்பித்தால் உலகில் உள்ள 600 கோடி பேரும் குருடனாகத்தான் இருப்பார்கள். கடைசியில் உலகில் அத்தனை பேரும் குருடனாகி விடுவார்கள் என்றார். ஆனால் தமிழனுடைய கண்ணை 40 ஆண்டுகளுக்கு முன்பே பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

முதலில் மகாராஷ்டிரத்தில் பால்தாக்கரே என்ற ஆள் பிடுங்கினார். பின்னர் மலேசியாவில் பிடுங்கினார்கள். ஈழத்தில் பிடுங்கினார்கள். இன்று கர்நாடகத்திலும் பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

எனவே காந்தி சொல்வதை இன்று கடைப்பிடிப்பதாக இருந்தால் உலகில் உள்ள 10 கோடித் தமிழர்களும் குருடனாக இருப்பார்கள். மற்ற 690 கோடி பேரும் பார்வையுடன் திரிவார்கள். ஏற்கனவே தமிழன் சிந்தனைக் குருடனாக, கருத்துக் குருடனாக இருக்கிறான். கண்ணும் போய் விட்டால் ம*ரு மாதிரிதான் இருக்கும் அவனது வாழ்க்கை.

40 வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர், தமிழக முதல்வராக இருந்தபோது, கர்நாடகத்தில் குண்டுராவ் முதல்வராக இருந்தார். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். ஒருமுறை குண்டுராவ் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். போயிருந்தார். மட்டன், சிக்கன் என அனைத்தும் செய்து போட்டார்கள் எம்.ஜிஆரும் சாப்பிட்டார்.

ஆனால் அவர்கள் வைத்த தண்ணீரை மட்டும் குடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார். எனது மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். எனக்கு மட்டும் எதற்கு உங்கள் தண்ணீர் என்று கூறி விட்டார்.

சாய்குமார் என்று ஒரு நடிகர். உனக்குப் பிடித்த நடிகர் யார் என்று அவரிடம் கர்நாடகத்தில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று கூறி விட்டார். அவ்வளவுதான் அவரை உதை உதை என்று உதைத்து ராஜ்குமார் என்று சொல் என்று கூறியுள்ளனர். இதற்குப் பெயர்தான் கன்னட வெறி.

நான் வீரப்பன் செய்த செயல்களை எல்லாம் கேள்விப்பட்டு முன்பு அவன் மீது கோபப்பட்டிருக்கிறேன், ஆவேசப்பட்டிருக்கிறேன். ஆனால் பல வீரப்பன்களை உருவாக்கும் நிலையை இப்போது உருவாக்கி விடாதீர்கள் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் தமிழகத்திற்கு லாபம் கிடைக்கும். ஆனால் கர்நாடகத்திற்கு ஒரு நஷ்டமும் கிடையாது.

அங்கு வாட்டாள் நாகராஜ் என்கிற ஒரு பெரிய காமெடியன் இருக்கிறார். நல்லவேளை அவர் சினிமாவுக்கு வரவில்லை. வந்திருந்தால் வடிவேலுவை எல்லாம் மிஞ்சியிருப்பார். அவர் சொல்கிறார் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி எல்லாம் கர்நாடகத்தோடு சேர வேண்டியதாம். விட்டால், மெட்ராஸ், பீச் எல்லாமும் எங்களுக்குத்தான் எல்லாம். நாம் என்ன வாயில் விரல் வைத்து கொண்டு போகனுமா.

நமக்கு சம்பந்தப்பட்ட ஒருவரே வாட்டாள்தான் எனக்குப் பிடித்த பேச்சாளர் என்று கூறியுள்ளார். என்னத்தைச் சொல்ல.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று பேசிக் கொண்டிருக்காதீர்கள். அப்படியே பேசிக் கொண்டிருந்தால் நீ கேன.... ஆகி விடுவாய். வாலாட்டினால் ஒட்ட நறுக்கவும் தெரியணும். அவன்தான் தமிழன். குனிந்து கொண்டே இருந்தால் குதிரை ஏறிக் கொண்டுதான் இருப்பார்கள். குனியாதே, நிமிர்ந்து நில்.

தமிழனுக்கு எங்கிருந்தும் தண்ணீர் வரக் கூடாது என்கிறார்கள். பாலாறில் தண்ணீர் இல்லை. முல்லைப் பெரியாறில் தண்ணீர் இல்லை, சேது சமுத்திரத் திட்டத்தையும் எதிர்க்கிறார்கள்.

கடவுளுக்காக இனிமேல் வெளியில் போகாதீர்கள். தமிழ்க் கடவுள் முருகன் இருக்கிறான். அவனைக் கும்பிடுங்கள். மதுரை வீரனைக் கும்பிடுங்கள், சுடலை மாடனை கும்பிடுங்கள். நமக்கு ராமனும் வேண்டாம், ராகவேந்திராவும் வேண்டாம் (ரஜினியை திரும்பிப் பார்த்தபடி), அய்யப்பனும் வேண்டாம்.

உலகில் தமிழன் எங்கு அடிபட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தில் அடிபட்டாலும் குரல் கொடுக்க வேண்டும். அங்கு இருப்பவன் உனது சகோதரன், உனது சகோதரி. தமிழனை உலகில் எங்குமே நசுக்க முடியாது. அதை விட மாட்டோம். அவ்வளவுதான்..!!

இப்படி பேச வேற எந்த நடிகனுக்கும் தைரியம் வரும்னு எனக்கு தோணலை. என்னைக்கேட்டா தமிழனுக்கு அங்க ஏற்பட்ட பிரச்சினைக்கு ரொம்ப வேதனைப்பட்டவர் நடிகர்கள்ல சத்யராஜா தான் இருக்க முடியும். காரணம், பேச்சில் அத்தனை காரம்..!! அவரோட பேச்சில் அங்க இருந்தவங்கள்லாம் அதிர்ச்சியானது நிஜம்..!! விஜய்காந்த் வரும் போதே அரசியல்வாதியா தான் வந்தார். ரஜினி எழுந்திரிச்சி விஜய்காந்துக்கு கை கொடுக்கும் போது புத்தம்புது அரசியல்வாதி சரத்குமார் தனக்கு கை குடுப்பாரா மாட்டாராங்கிற குழப்பத்தில் எழுந்தும், எழாமலும் இரு தலைக்கொள்ளி எறும்பா தவிச்சது சூப்பர் காமெடி. அவர் சந்தேகப்பட்ட மாதிரியே சரத்தை அவர் கண்டுக்கவே இல்லை. விஜய்காந்த் பேச்சில் அரசியல் நுழைக்க ரொம்பவே சிரமப்பட்டார். ஆனாலும், ஏறக்குறைய யாருக்கு ஓட்டுப்போடக்கூடாதுன்னு சொல்லிட்டு பேச்சை முடிச்சிட்டுக்கிட்டார். சரத் ஒவ்வொருத்தரையும் அவர்களேன்னு நீட்டி முழக்கினதும், என் அருமைச்சகோதரர்னு வலிய பேசியதும் ஒரு அரசியல்வாதியாக தன்னை மாத்திட்டிருக்கார்னு புரிஞ்சது. ரஜினி வழக்கம் போல வெண்டைக்காய் வழ, வழ.. ஆனா கண்டனத்தை வேற வழியே இல்லாம ஸ்ட்ராங்கா சொன்னார். வைரமுத்து வரலாறை இழுத்து அதன் படி நமக்கு தான் பிரச்சினைக்குரிய பகுதி சொந்தம்னார். கமல் தேசிய நடிகர்ங்கிறதாலோ என்னவோ அதிகமா கன்னடர்களை தாக்காம பேசினார். நிறைய கூத்து நடந்தது..!!

சினிமாக்காரங்களால இந்த பிரச்சினைக்கு தீர்வு ஒண்ணும் காணமுடியாது. ஆனா, சினிமாக்காரங்களெல்லாம் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபடுறவங்கங்கிற தோற்றத்தை ஏற்படுத்த இந்த போராட்டம் ரொம்பவே பயன்பட்டிருக்கு..!! அவ்ளோ தான் மேட்டர்..!!!

ராஜா
07-04-2008, 12:24 PM
ராம.கோபாலன், சுப்பு.சாமி, இவங்க எல்லாம் அரசியல் படத்தில் சம்பளம் வாங்காத இலவச [ கௌரவ ] காமெடியன்கள்.

அவங்க பெர்பார்மன்ஸ் பார்த்து சிரிச்சுட்டுப் போயிடணும்.. சீரியஸ் ஆகக்கூடாது..!

உண்ணாவிரத நாடகத்தின் சாராம்சத்தை அழகா சுருக்கமா, சூப்பரா தந்திருக்கீங்க இதயம்..!
பாராட்டுகள்..!

svenkat
07-04-2008, 12:37 PM
கைதட்டலுக்காகவே பேசிப் பழக்கப்பட்டவர்கள், முடிந்தால் கை தட்டுவோம், இல்லையேல் (புறங்) கையால் ஒதுக்குவோம்

தங்கவேல்
07-04-2008, 04:50 PM
காமெடியன்கள் பேசினால் சிரித்து வைக்க வேண்டும்.

thamilan2007
07-04-2008, 11:04 PM
இந்து தெய்வங்களை ஒரு சினிமா நடிகன் வாய்க்கு வந்தபடி திட்டி இருக்கிரான் அது முக்கியமானதாக யாருக்கும் படவில்லை
தமிழன் கர்நாடகாவில் தாக்கபடுவதை பற்றி பேசுவதை விட்டு விட்டு மற்றவர்களின் மனதை புண்படுத்ததான் அந்த மேடையை சத்யராஜ் பயன்படுத்தி உள்ளார்.
முதலில் சத்யராஜ் அவரது மனைவி மக்களை சாமி கும்புடுவதை நிறுத்த சொல்லி செயலில் காண்பித்து விட்டு மேடையில் இந்த மாதிரி உளரட்டும்
ரஜினியை தாக்கவேண்டும் என்று நினைத்து கோடிக்கணக்கான
இந்துக்களின் மனதை காயப்படுத்திவிட்டார் சத்யராஜ்
உலகில் தமிழன் எந்த மூலையில் பாதிக்கப்பட்டாலும் நமது தமிழக தமிழன் கொதித்து எழத்தான் செய்வான்.
அதற்க்காக இந்து மதத்தை கொச்சைபடுத்தவேண்டும் என்று எந்த தமிழன் சத்யராஜ் க்கு சொன்னது தலைவா,
என்னமோ அவர் மட்டும் தான் தமிழன் நாங்கள் எல்லாம் இங்கிலீஷ் காரன்கள் என்று நினைத்தாராக்கும்,உண்மையில் சத்யராஜ் ஒரு நவரச காமெடியன்

ஒரு வேண்டுகோள் குறிப்பிட்ட மதத்தை பற்றி துவேசம் வேண்டாம்,
நாம் அனைவரும் தமிழர்கள் அவ்வளவே. தற்போதய தேவை ஒற்றுமை மட்டுமே.

முதலில் திருவாளர் சத்யராஜ் தமிழ் கதா நாயகிகளுடந்தான் நடிப்பேன் என்று உறுதி அளிக்கட்டும்.தமிழ் கலாசாரத்தை கொச்சை படுத்தி ஆபாசமாக சினிமாவில்
நடிக்க மாட்டேன் என்று உறுதி அளிக்கட்டும்.

பெரியார் சினிமாவில் நடித்தால் மட்டும் போதாது, வாழ்க்கையில் அவரை போல் வாழவேண்டும்.
அவர் கருத்துக்கள் மற்றும் போதனைகளை பின்பற்ற வேண்டும்.


ஆகக்கூடி இந்த உண்ணா விரதமே நடிகர்கள் சங்கத்தால் நடத்தப்பட்ட ஒரு அரசியல் நாடகம்

pathman
08-04-2008, 05:40 AM
உலகில் தமிழன் எங்கு அடிபட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தில் அடிபட்டாலும் குரல் கொடுக்க வேண்டும். அங்கு இருப்பவன் உனது சகோதரன், உனது சகோதரி. தமிழனை உலகில் எங்குமே நசுக்க முடியாது. அதை விட மாட்டோம். அவ்வளவுதான்..!!



ஈழ தமிழனுக்காக குரல் கொடுக்கின்றாயே

"உன் நாட்டில் இருந்து வந்து 250 வருடங்களாக கண்கள் பிடுங்கபட்டு கல்வி, சுகாதாரம் சக வாழ்வு,பொருளாதார வசதி இல்லாமல் கொத்தடிமையாய் அடிமை சாசனத்தோடு தேயிலை தோட்டங்களிலும், கொழும்பு மற்றும் புற நகரங்களிலும் அவல வாழ்க்கை வாழும் உனது இரத்தம் இந்திய வம்சாவளி தமிழனுகாக என்றாவது குரல் கொடுக்கின்றாயா. "

இப்படி ஒரு ஜீவராசி இருப்பதே தமிழ் நாட்டில் யாருக்கும் தெரியாது. இவர்களுக்கு பிரான்ஸ்,ஜேர்மன்,இத்தாலி,சுவிஸ்,லண்டன்,அவுஸ்ரேலியால் இருந்தது பணம் வருவதில்லை

தன் இரத்ததை அட்டைகளுக்கு உணவாக வழங்கி ஒரு நாளைக்கு 50 கிலோவுக்கு மேலே தேயிலை கொழுந்து எடுத்தால் தான் 250 ரூபா கிடைக்கும் அதுவும் மாததிற்கு 20 நாட்கள் தான் வேலை.

தங்கவேல்
08-04-2008, 10:41 PM
தமிழன் உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. காரணம் நான் ஒரு தமிழன் என்பதால்.

முதலில் தமிழ்க் கடவுள்களை எடுத்துக் கொள்ளலாம். ராமரும், கிருஷ்ணரும் வந்தது எப்போது என்று உங்களுக்கு தெரியுமா ? அதற்கு முன்பு தமிழ் நாட்டில் எந்தக் கடவுள் வழிபாடு நடந்தது என்று தெரியுமா ? திருப்பதியில் உள்ள பெருமாள், பெருமாளே அல்ல என்று சீனிவாச தத்தாச்சாரியார் நக்கீரனில் கட்டுரை எழுதினார். அது பத்ரகாளி என்று. அதை எவராவது மறுத்தார்களா ? இல்லவே இல்லை. தமிழ்க் கடவுளை கும்பிடுவதை விட்டு விட்டு ஏன் கேரளா, கர்னாடகா சென்று பணத்தை கொட்டுகின்றீர்கள் என்றார் சத்யராஜ். இதில் என்ன தவற்றைக் கண்டு பிடித்தீர்கள். சாமி கும்பிடுவதும் கும்பிடாததும் அவரவர் விருப்பம். தமிழ் திரை உலகில் செலிபிரட்டி என்ற வகையில் அவர் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

ஒகேனக்கல் பிரச்சினை முழுவதும் பிஜேபியின் அரசியல். பாதிக்கபடுவது பொது மக்கள். ஆ என்றால் அடி கிடைக்கிறது தமிழனுக்கு. அடுத்த தாக்குதல் சினிமா தியேட்டர்கள் மீது. திரைப்பட உலகினரின் போராட்டம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிரச்சினையினை கொண்டு செல்ல நடத்தப்பட்டது என்று தான் நினைக்க வேண்டும்.

விதண்டாவாதமாக சத்யராஜை களங்கப்படுத்துவதில் எந்த ஆதாயமும் கிடைக்காது. விசிலடிச்சான் குஞ்சுகளின் அன்றைய கூத்தைப் பார்த்து அவர் கோபமாக பேசினார். எதுக்கு இங்கு வந்திருக்கிறோம். எதுக்கு கை தட்டி கூச்சல் போடுகிறார்க்ள் என்று அவர் கோபப்பட்டதில் என்ன தவறினைக் கண்டீர்கள்.

மேலும் தமிழ் கதா நாயகிகளுடன் நடிக்கட்டுமே என்று வாசகம். ஏன் உங்கள் தமிழ் சமூகத்தில் எவராவது நடிகைகளே நடிக்காமல் படம் எடுத்தால் தியேட்டருக்கு சென்று ரசிப்பார்களா ? தமிழனுக்கு தொப்புளும், இடையும், தொடையையும் பார்க்க வில்லை என்றால் அது படமே இல்லை என்பது உங்களுக்கு தெரியும் தானே...

சரி அதை விடுங்கள். நிர்வாணமாக காட்டினால் ஆபாசம் அதுவே மார்பையும் , இடுப்பையும் காட்டினால் கலை என்று சொல்லும் தமிழ் சமூகத்தை பார்த்து சத்யராஜ் கோபத்தில் பேசியது ஒன்றும் தவறில்லை என்பது என் கருத்து.

அறிஞர்
08-04-2008, 11:18 PM
பிரச்சனை சரியான தீர்வு காண யார் முயன்றாலும் தவறில்லை.

தேவையற்ற வாதம்.... கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஆதாயம் தேடும் நபர்களை விட்டு விலகுவதே சிறந்தது.

ஜோய்ஸ்
15-04-2008, 02:40 PM
அதாவதுங்க,
தமிழ் நாடு தமிழனுக்கே என்று சொல்வதற்க்காக ஒரு பல்நோக்கு பேச்சாக நடிகர் ரஜினியை விளாசுவதர்க்காக அவர் பேசியதை இப்படி பலர் கருத்து மாறி புரிந்து கொண்டார்கள் போலும்.