PDA

View Full Version : இலங்கையில் குண்டுவெடிப்பு : அமைச்சர் உள்பட 11 பேர் பலி



ராஜா
06-04-2008, 07:16 AM
கொழும்பு (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2008 ( 11:08 IST )


http://www.aol.in/tamil/news/2008/04/06/lankan-minister-jayaraj-fernandopulle-killed.html
கொழும்பு அருகே இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இலங்கையின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்பட 11 பேர் பலியாயினர்.

இலங்கை தலைநகர் கொழும்புக்கு அருகே 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கம்பகா மாவட்டத்தின் வெலிவெரியாவில் நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெலிவேரியாவில் இன்று காலை 7.30 மணியளவில் சிங்களப் புத்தாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் பெர்னாண்டோபுள்ளேவைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில், சம்பவ இடத்திலேயே பெர்னாண்டோபுள்ளே உயிரிழந்தார். மேலும், 10 பேர் கொல்லப்பட்ட நிலையில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளே காரணம் என்று இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.

விடுதலைப் புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகளின்போது, இலங்கை அரசு குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே இருந்தவர் ஆவார்.

இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையும் இலங்கை அரசு விலக்கிக் கொண்டபிறகு, அந்நாட்டு அமைச்சர் டி.எம்.தஸனாயகே கொல்லப்பட்டார் என்பதும், இன்று நடந்த சம்பவத்துடன் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை இரண்டு அமைச்சர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)

அய்யா
06-04-2008, 11:50 AM
தினந்தோறும் தீபாவளி கொண்டாடும் நாடு உலகத்திலேயே இலங்கை மட்டும்தான்..

என்ன ஒரு வேற்றுமை என்றால், நரகாசுரன் அங்கே இன்னும் உயிரோடு இருப்பதுதான்.!

அமரன்
06-04-2008, 03:04 PM
சித்திரைப் புத்தாண்டை ஒட்டி நடைபெற இருந்த வீதி ஓட்டத்தை துவக்கி வைக்கப்போனபோது அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. இவருக்கு வைத்த கிளைமோரிலேயே திசாநாயக்கா துர்ரதிட்டவசமாக சிக்கிகொண்டார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.. எப்போதுதான் ஈழமக்கள் அமைதியை நுகர்வார்களோ.. அன்னாரின் மறைவுக்கு அனுதாப அஞ்சலிகள்..

அன்பர்களே..!!!
துயர் பகிரும் இவ்விழையில் துட்டத்தனங்கள் வேண்டாமே...

mgandhi
06-04-2008, 06:19 PM
அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த... அஞ்சலிகள்..