PDA

View Full Version : என் வாழ்க்கை ஒரு பார்வை(அனு)!!



அனுராகவன்
05-04-2008, 07:00 AM
பாகம்-1:

என் பெயர் அனு. என் வீட்டில் என்னை ”அம்மு” (அ) ”அனுஷா” என்றே அழைப்பார்கள்..
நான் என் வீட்டில் மொத்தம் நான்கு குழந்தைகள்; அதில்
என் பெற்றோர் பெயர்:ராஜா,ராணி
என் கூட பிறந்தவர்கள் அனைவரும சகோதரிகளே.. எனக்கு அண்ணன் ,தம்பி கிடையாது..
என் வீட்டில் நான் தான் மூத்த பிள்ளை; அதனால் என் வீட்டில் சாப்பிட்டுக்கே பஞ்சமாக இருந்தது..
என் அப்பா ஒரு கூலி தொழிலாளி..
அம்மா வீட்டில் வேலை செய்வார்கள்..
நான் பிறந்தபோது வறுமை தழைவிரித்து ஆடியது..
என் அப்பா ஒரு கொத்தனார் வேலை..
அவர் வெளியில் சென்று பணம் கொண்டு வந்தால்தான் வீட்டில் உலை கொதிக்கும்..
நான் படித்தது பத்தாவது தான் அதற்கு மேல் ஒரே ஒரு கம்பியூட்டர் கோர்ஸ் மட்டுமே என் வாழ்வில் நான் படிக்க கடவுள் அருளியது.. நானும் படிக்க நினைத்தால் முடியுமா என்றே யோசிக்க தோன்றியது ..காரணம் என் சகோதரிகளை நினைத்து நினைத்து தினமும் வீட்டில் அழுவதும்..எனக்கு நானே ஆறுதல் கூறி..
நான் அழுதால் யார் அவர்களுக்கு ஆறுதல் மற்றும் உற்ற துணையும் கூட..நான் இல்லையின்றால் சாப்பாடு கூட சப்பிட மாட்டார்கள் என் சகோதரிகள்..
அவர்கள் பெயர் நளினி,கீதா,சீதா
நான் படித்த காலம் 1980-ல் எனது பத்தாவது தேர்வு எழுதினேன்..
நான் ஒன்றும் படிப்பில் கெட்டிகாரி இல்லை ..எனக்கு என் டிச்சர் ஒருவர் உதவுவார். மிகவும் நல்லவரும்,கண்ப்பானாவரும் கூட..
அவர் பள்ளியில் நுழைந்தால் வகுப்பறையே அமைதியாகிவிடும்..
என் ஊர் தஞ்சை மாவட்டம் ; ஒரத்தநாடு வட்டம்
ஈச்சங்கோட்டைதான் என் ஊர்..அது ஒரு சிறிய கிராமம் கூட..
கிராமம் என்றால் கடைகள் இரண்டும்,ஒரு பள்ளியும் சில வீடுகளும் தவிர தஞ்சையின் வழியாக காவரி நீர் பாசனம் தான் என் ஊரை செழுமை படுத்தியது..
நான் எனது பள்ளி படிப்பை முதலில் என் பால்வாடி என்கிற சிறு கூடாம் போட்ட அரசாங்க கூடம்..
அதில் நிறைய என்னை போன்ற ஏழை குழைந்தைகள் படித்து வந்தனர்.
பள்ளீக்கு வருவதோ காரணமமும் உண்டு . வீட்டில் சாப்பிட உணவு கிடையாது.. அதனால் மதிய உணவு கிடைக்குமே.. அதில் சனி மற்று புதன் கிழமை முட்டை என்பதால் சில மாணவர்கள் அன்று மட்டுமே வருவார்கள்.அப்போது என் வயது 5 இருக்கும். நான் மற்றவர்கள் போல என்னால் பள்ளிக்கு போக முடியல..என் அம்மாவிற்கு சில மயக்கம் வரும் அந்த சமயம் என் பாட்டி மற்றும் தாத்தாதான் வீட்டில் இருந்து பார்த்துக்கொள்வார்கள்..நான் பள்ளி போக பயந்து விளையாட போகிவிடுவேன்..என் அப்பா என்றால் எனக்கு பயம் ..காரணம் அவர் கண்டிப்பானவர்..கோபக்காரரும் கூட..
என் சிறுவயதில் ஒரு நாள் என் அம்மாவிற்கு உடம்புக்கு முடியல ..எனக்கு ஒன்றும் தெரியாத வயதும் கூட எப்பபார்த்தாலும் விளையாட்டு ,ஆற்றில் குளிப்பதும் வழக்கம்..
அப்படி ஆற்றில் குளித்து அன்று சயங்காலம் வீடு திரும்பினேன் . அப்போது வயது 12. என் அப்பா மாட்டை அடிக்கும் சாட்டையே கையில் வைத்துக்கொண்டு எனக்காக் வரவேற்று இருந்தார்..
நான் ஏதாவது போய் சொல்லி சமாளிப்போம் என்று அன்று வீட்டில் நடக்க இருந்ததை அறியாமல்..
என் அப்பா “எங்க போன கழுதை “ என்று கேட்டார்..நான் “அது வந்து விளையாட போனேன்” என்று சொல்லி முடிப்பற்க்குள் ஒரு பளார் அடி..
”அப்பா நான் இனி விளையாட போக மாட்டேன்” என்று அழுதேன்..
அவர்” ஒரு பொம்புல புள்ளை விளையாட போன வீட்டுல யாரு வேலை செய்யுறது” என்று கத்தினார்...
..
இந்த பகுதில் வரும் பெயர்கள் உண்மையல்ல ..
பெயர் மாற்றப்பட்டுள்ளது..

க.கமலக்கண்ணன்
05-04-2008, 08:35 AM
அன்புள்ள அனு உங்களின் ஆரம்பகால வாழ்க்கை

அழுத்தமாக இருக்கிறது உங்களின் வாழ்க்கை போலத்தான் என்னுடைய

அன்பு இல்லாத வாழ்க்கை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் காலம் கடந்துவிட்டது

அதனால்தானோ என்னவோ உங்களை சந்திக்க வைத்திருக்கிறது

அனு கவலை வேண்டாம் காலம் உங்களுக்கு விரைவில் பதில் சொல்லும் சரியா...

அடுத்ததையும் சொல்ல வேண்டுகிறேன்...

இதயம்
05-04-2008, 08:49 AM
அனு அக்காவின் படைப்புகள் மூலம் நான் உணர்ந்தது அவரின் கள்ளம் கபடமற்ற வெள்ளந்தி மனம்.!! அதன் உறுதிச்சான்றாக அவரின் இந்த சுயசரிதை அமைகிறது. சுயசரிதையில் 2 வகை இருக்கிறது. தன் வாழ்க்கை பாடம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக அமைய தன் சுய அடையாளங்களை மறைத்து வாழ்க்கையில் நடந்த போராட்டம், துன்பம் எல்லாவற்றையும் சொல்லி அதை எப்படி போராடி வெற்றி கொண்டு உயர முடிந்தது என்பதை சொல்வது ஒரு வகை. இதில் பொது நலம் கலந்திருக்கிறது. இன்னொன்று வகை தன் வாழ்க்கையில் நடந்த நல்லது, கெட்டது அனைத்தையும் ஒன்று விடாது பகிர்வது. இது சம்பந்தப்பட்டவரின் ஆத்ம திருப்திக்காக எழுதுவது. அக்கா தன் குடும்ப விபரங்கள் முதற்கொண்டு எழுதியிருப்பதை காணும் போது இதை இரண்டாவது வகையோ என்று கருதுகிறேன்.

மன்றத்தில் சொந்த பெயரை கூட வெளிப்படுத்த விரும்பாமல் புனைப்பெயர் கொண்டு முகமுடி தரிப்பவர்களுக்கு மத்தியில், அனைத்தையும் அப்படியே நம்மிடம் கொட்டத்தொடங்கியிருக்கும் அக்காவின் பண்பு வியக்க வைக்கிறது. அவருக்குள் வேதனையின் இரணங்கள் அதிகம் இருக்கும் போல் தெரிகிறது. இதை எழுதி, நாம் படிப்பதன் மூலம் அவர் மனக்காயத்துக்கு மருந்து கிடைத்தால் மகிழ்ச்சியே. அதே நேரம் ஒரு பெண்ணாக தன் சுய விபரங்களை பொது மன்றத்தில் எழுதுவதால் தொந்தரவுகள் ஏதும் எழ வாய்ப்புள்ளதா என்பதை இன்னொரு முறை சிந்திக்க வேண்டுகின்றேன்.

உங்கள் சுய வாழ்க்கைத்தொடரை ஆவலுடன் படிக்க காத்திருக்கின்றேன்..!! தொடருங்கள் அக்கா..!!!!

அனுராகவன்
05-04-2008, 09:08 AM
அப்பாவின் கண்டிப்பு என்னை ஒருகணம் என்னை சிந்திக்க வைக்கும்..காரணம் நாங்கள் ஏழை என்பதாலா..அப்படியென்றால் என்னை போன்று எத்தனை எழை குழந்தைகளை அரசாங்க பள்ளிகளில் படித்தனர்..நான் என்னை சமாதணம் செய்துக்கொண்டு பள்ளிக்கு செல்வேன்..
அந்த காலத்தில் சில கண்டிப்பான ஆசிரியரும்,சில நடத்தை க்குறைவாக நடத்தும் ஆசிரியரும் இருக்கதான் செய்தனர்,..
என்னை மிகவும் கவர்ந்தவர் சுலோச்சனா மேடம்தான்..
அவர் மிகவும் கண்டிப்பானவர் அதிலும் நேர்மையானவரும் கூட..
நான் பள்ளிக்கு கிழிந்த ஆடைகளை அணிந்து செல்வேன்..
அப்போது ஆறாவது அரசு உயர் நிலை பள்ளியில் படித்தேன்..
என் வீட்டில் நல்ல துணிமணிகள் கூட வாங்கி தர வசதி கிடையாது..
என் தந்தை செய்வது கொத்து வேலை..அதாவது கொத்தானார் என்று சொன்னேன் அல்லவா..
ஆமாம் ,அவர் சம்பாதியத்தில்தான் அன்றைய உலை பொங்கும்..
என் தாய் கூலி வேலைக்கு செல்வார்..
நான் பள்ளியில் சேர்ந்த விசியமே ஆச்சிரியம்தான்..
அதாவது என் ஐந்தாவது முடித்து என்னுடைய சர்டிவிக்கேட்(Certificates)எல்லாமே வீட்டில் உள்ள மாடு தின்று விட்டது..
நான் அழுது புலம்பிதான் பள்ளியில் சேர்ந்தேன்..
என் தாயும்,தந்தையும் என்ன செய்வது என்று திகைத்தனர்..
அப்போது எனக்கு உதவியவர் நான் குறிப்பிட்ட மேடம் தான்..
அவர்தான் நான் படிக்க பொருப்பு எடுத்து என் ரேசன் கார்டு கொண்டு என் பிறந்த தேதியே பள்ளியில் சேர்த்தனர்..
என் பெற்றோர் கல்வி அறியாதவர்கள் என்பதால் என்னை படிக்க வைக்க பல கஸ்டம் பட்டனர்..
அது கொஞ்சம் நெஞ்சம் அல்ல..
என் பள்ளியில் என் மேடம் என் மீது காட்டிய அந்த நிகழ்ச்சிகள் என்னால் எப்பவும் மறக்க முடியாது..
பள்ளியில் அவரது பாடம் கணிதம் மற்றும் ஆங்கிலம் .அதற்கு தனி வகுப்பு சனி ,ஞாயிறு போன்ற தினங்களில் தவறாமல் நடக்கும். அதற்கு தவறிய மாணவர்கள் இப்போது கஸ்டபடுகிறார்கள் என்று சொல்லாம்..
அவர் தனது சொந்த செலவில் எங்கள் அனைவருக்கும் ஸ்வீட் வாங்கி தருவார்..அவரது உங்கள் ஊக்கம் அனைவரையும் நிகிழ செய்யும்..
என் பள்ளி வாழ்க்கையில் இப்படியாக பத்தாவது பொது தேர்வை எழுதினேன்..
அதில் ஒரு பாடம் தேர்ச்சி அடையவில்லை..
ஆனால் மதிப்பெண் மற்ற பாடங்களில் 40 மேல் அறிவியலில் 29 மார்க் வாங்கி வீட்டில் சில நாள் சொல்லாமல் என் பாட்டி வீட்டிற்கு சென்றேன்..
என் அம்மாவும்,அப்பாவும் என்னை படிக்க வைக்க படும் காட்சிகள் இப்போது நினைத்தால் கண்ணீர் வரும்....
அப்போது விளையாட்டு புத்திதான் அதிகம்..
அதனால் நான் அறிவியலில் தவறினேன்...என் மார்க் லிஸ்டே பெறும்போது என் ஆசிரியர் (அறிவியல்)மற்றும் மேடம் சுலோச்சாவும் இருந்தனர்..
நான் பயத்தோடு வந்தேன்..எனக்கு அவர் செய்த அந்த பழைய ஞாபகம் வந்தது..
”சாரி மேடம் ” என்று சொன்னேன். அவர்கள் என்னை தட்டி கொடுத்து ”நீ பத்தாவது வரை படித்தே மிக பெரிய வெற்றி ”என்றார்..
பின்பு என்னை மறுபடியும் தேர்ச்சி விட்ட பாடத்தில் தனியார் நிலையத்தில் எழுத சொன்னார்.
அப்போது பயத்தில் சில எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது ..
தீராத ஜூரம் ,காய்ச்சல் என அடுக்காக வந்தது..
என்னால் கல்வியே தொடர முடியல..
எனக்கு படிப்பு வேண்டாம் என்று என் பெற்றோர் சொன்னர்..
என் பெற்றோர் என்னை விட படிப்பு முக்கியம் வேண்டாம் என்று சொல்லி என் உடல் நிலைதேர கடன் வாங்கி மருத்துவரை பார்த்தனர்..
அதனால் கடன் மிகுதியால் நான் பள்ளிக்கு போகாமல் என் அம்மாவுடன் வயல் வேலைக்கு சென்றேன்..
அப்படியே என் பள்ளி படிப்பு முற்றும் பெற்றது..
தொடரும்...

சிவா.ஜி
05-04-2008, 02:19 PM
அடடா...எவ்வளவு சோதனைகளைத் தாண்டி வந்திருக்கீங்க அனு. சகோதரர்கள் இல்லாமல், நல்ல வருமானமும் இல்லாமல் வாழும் இளமைப் பருவம் கொடுமையானது. இதில் சகோதரிகள்தான் ஒருத்தருகொருத்தர் ஆறுதல்.

வெளிநாட்டு வேலை என்று ஆசைக்காட்டி பணத்தைக் கொள்ளையடிக்கும் கூட்டத்திடம் நீங்களும் ஏமாந்து விட்டீர்களா..?

அத்தனை வறுமையில் அவ்வளவு பணத்தை இழப்பதென்றால் எவ்வளவு பெரிய இழப்பு அது...மனம் வேதனைப் படுகிறது சகோதரி.

உங்கள் துயரங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வதை நினைத்து மனம் நெகிழ்கிறது. என்றும் உங்களுக்கு ஆதரவாய் இருப்போம் இந்த மன்றத்து உறவுகள்.

மனோஜ்
05-04-2008, 03:01 PM
வருத்தங்கள் தங்கலின் வாழ்வு
மிகவும் கடினமான ஒன்றாக அமைத்துவிட்டது கொடுமைதான்
சொல்லுங்க அக்கா அப்பரம் என்ன ஆச்சு

க.கமலக்கண்ணன்
05-04-2008, 03:57 PM
மனது மிகவும் கணக்கிறது உங்களின்

மனம் லேசாக மட்டும் அல்ல

மற்றவர்களும் புரிந்து கொள்ள தொடருங்கள்...

நுரையீரல்
06-04-2008, 08:50 AM
ஏழை குழைந்தைகள் படித்து வந்தனர்.
பள்ளீக்கு வருவதோ காரணமமும் உண்டு . வீட்டில் சாப்பிட உணவு கிடையாது.. அதனால் மதிய உணவு கிடைக்குமே.. அதில் சனி மற்று புதன் கிழமை முட்டை என்பதால் சில மாணவர்கள் அன்று மட்டுமே வருவார்கள்.
மேலே quote செய்யப்பட்டிருக்கும் வரிகள் எனக்கும் சொந்தமானவை தான்.

முதல் நாள் இரவு சோறு கொஞ்சம் மீதமானால், அதில் தண்ணீர் ஊற்றி வைத்து, மறுநாள் காலையில் பழைய சோறாக்கி சாப்பிடுவது வழக்கம். அப்படி சாப்பிடும் சோற்றில் கூட சோற்றுப் பருக்கைகள் குறைந்த அளவிலும், தண்ணீர் அதிக அளவிலும் தான் இருக்கும். எங்கூர் சிறுவாணி தண்ணியோட டேஸ்டோ, இல்லை போதும் என்ற மனம் காரணமோ தெரியவில்லை - பழைய சோற்றுக்கு இருக்கும் டேஸ்ட் இன்றுவரை வேறெந்த சோற்றிலும் கண்டதில்லைங்க அனு.

அப்புறம் ஸ்கூலுக்கு போனவுடன் எப்படா சத்துணவு போடுவான் என்று காத்துக்கிடந்து, அந்த சத்துணவில் உடல் பசியையும், வகுப்பறையில் அறிவுப்பசியையும் தீர்த்துக் கொள்வேன்.

எப்படியோ நம்மெல்லாம் சத்துணவு ஃபேமிலி ஆயிட்டோமா சகோதரி. சத்துணவு சாப்பிட்டதை வெளிப்படையா சொன்னதுல ஒன்னும் எனக்கு பெரிய விஷயமா தெரியலை உங்களப்பத்தி.

ஆனா அதுக்கப்புறம் உங்க ஃபேமிலிக்காக நீங்க உழைச்சதையும், கஷ்டப்பட்டதையும் சொன்னீங்க பாருங்க. அங்க நிக்குறீங்கங்க நீங்க. மெய்யாலுமே திடமானமான மனிதர் நீங்க. வாழ்க்கையில் எல்லாருக்கும் கஷ்டம் வரும், சிலருக்கு பணத்தால் வரும், சிலருக்கு நோயால் வரும், சிலருக்கும் உறவுகளால் வரும். இப்படி எல்லாரும் ஏதோ ஒரு வகை கஷ்டங்களால் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

உங்களுடைய கஷ்டங்களும், அதை நீங்கள் வெற்றி கொண்டமையும் பலருக்கு பாடமாக அமையும். மனத்தெம்பினை தரும், ஆறுதல் தரும், கண்டிப்பாக தொடருங்கள். உங்கள் மனசுக்கு போதும் என்று நினைக்கும் வரை தொடருங்கள்.

உங்களது இந்த படைப்புக்காக 2000 இ-பணம் எனது அன்பளிப்பாக தருகிறேன். வாழ்த்துக்கள் சகோதரி.

அய்யா
06-04-2008, 12:07 PM
'அனு'பவங்கள் தொடரட்டும்

யவனிகா
06-04-2008, 12:34 PM
மனம் கனத்துப் போகிறது படிக்கப் படிக்க...

தொடருங்கள் அனு அக்கா...

ஓவியா
06-04-2008, 12:35 PM
நான் வேலைக்கு சிங்கைக்கு அழைத்து சென்று வேலை கிடையாது என்று....மறுநாளே அனுப்பிவிட்டார்கள்..(இந்தியாவிற்க்கு)
நான் என்ன செய்வேன்....

என் வருத்தங்கள் அனு.

இருப்பினும் ஒரு கேள்வியுண்டு நீங்கள் சிங்கபூரில் ஒரு மாதகாலம் இருந்துதானே எங்களுடன் மன்றத்தில் உரையாடினீர்கள்.
அப்ப மறுநாளே இந்தியாவிற்க்கு அனுப்பி வைத்து விட்டனர் என்று எப்படி சொல்கிறீர்கள்??? :confused::confused: விளங்கவில்லையே!!

எது எப்படியோ, இனி நல்ல காலம் பிறக்கும். கடவுள் துணை இருப்பார். .

பூமகள்
06-04-2008, 01:05 PM
துயரங்கள் சிதறிக் கிடக்கின்றன..!!
சிதறாமல் பதறாமல் பகிருங்கள் அனு அக்கா..!!

நல்லதே நடக்கும்..!!

சுகந்தப்ரீதன்
06-04-2008, 01:30 PM
ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒவ்வொருவிதமான சோகங்களும் சுமைகளும் இருக்கத்தான் செய்கிறது. சிலரது துயரங்களை அறிகையில் நம்துயர் நமக்கு பெரிதாக தெரியாது.. அதுபோலத்தான் அனு அக்காவின் சொந்த வாழ்க்கை அனுபவங்கள் எங்களுக்கு...!!

தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள் அக்கா...!!
மனது இளகுவாகி இன்னும் வலிமை பெறும்..!!
இதுவரை எப்படியோ இனி உறுதுணையாய் நம் மன்ற உறவுகள் என்றென்றும் இருக்கும் உங்களுடன்..!!

சிவா.ஜி
06-04-2008, 01:35 PM
என் வருத்தங்கள் அனு.

இருப்பினும் ஒரு கேள்வியுண்டு நீங்கள் சிங்கபூரில் ஒரு மாதகாலம் இருந்துதானே எங்களுடன் மன்றத்தில் உரையாடினீர்கள்.
அப்ப மறுநாளே இந்தியாவிற்க்கு அனுப்பி வைத்து விட்டனர் என்று எப்படி சொல்கிறீர்கள்??? http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/ விளங்கவில்லையே!!

எது எப்படியோ, இனி நல்ல காலம் பிறக்கும். கடவுள் துணை இருப்பார். .

தங்கையே...அனு விவரித்திருப்பது...முதல்முறை அவர் சிங்கை சென்ற போது நடந்ததை. மீண்டும் முயற்சித்து இரண்டாவது முறையாக சிங்கப்பூர் போயிருக்கிறார். இப்போது அங்கிருந்தும் வந்துவிட்டார்.

பூமகள்
06-04-2008, 01:44 PM
சிவா அண்ணா...!!
அங்கொன்றும் இங்கொன்றுமாக பகிர்ந்தமையால் சரியாக கோர்க்கப்படாத சம்பவங்கள் சிதறலாகிவிட்டன.. ஆகையால் ஓவியா அக்கா போலவே எனக்கும் சந்தேகம் வந்தது..!!

தொடராக்கும் பொழுது.. சம்பவங்களைக் கோர்வையாக்கினால் தானே புரியும்.. அனு அக்கா கவனத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

ஓவியா
06-04-2008, 03:27 PM
தங்கையே...அனு விவரித்திருப்பது...முதல்முறை அவர் சிங்கை சென்ற போது நடந்ததை. மீண்டும் முயற்சித்து இரண்டாவது முறையாக சிங்கப்பூர் போயிருக்கிறார். இப்போது அங்கிருந்தும் வந்துவிட்டார்.

ஓ அப்படியா!! விளக்கதிற்க்கு நன்றி



சிவா அண்ணா...!!
அங்கொன்றும் இங்கொன்றுமாக பகிர்ந்தமையால் சரியாக கோர்க்கப்படாத சம்பவங்கள் சிதறலாகிவிட்டன.. ஆகையால் ஓவியா அக்கா போலவே எனக்கும் சந்தேகம் வந்தது..!!

தொடராக்கும் பொழுது.. சம்பவங்களைக் கோர்வையாக்கினால் தானே புரியும்.. அனு அக்கா கவனத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.


பகிர்தலுக்கு நன்றி பூ.
நான் நினைக்கிறேன் அனு அக்கா மிகவும் துன்பப்பட்டுதான் வாழ்க்கையைக் கடந்து வந்துள்ளார் போல்.


இதயம் அண்ணா,
மலேசியாவிலும் முன்பு சத்துணவு திட்டத்திம் இருந்தது அதில் வரிசையில் நிற்க்காத ஒரே ஏழை மாணவி நான் தான் மிகவும் கௌரவ குறைச்சலாக நினைப்பேன். ஆனாலும் சரஸ்வது பூஜை அன்று அஸ்கிறீம் கொடுப்பார்ர்கள் அன்று மட்டும் வரிசையில் முதல் மாணவி நாந்தான்.

சாலைஜெயராமன்
06-04-2008, 04:19 PM
மனக்குறைகளையும், பாரங்களையும், இறக்கி வைப்பதில் எத்தனையோ லாபங்கள் இருக்கிறது சகோதரி அனு. கல்விக் கூடங்கள் கற்றுத்தராத பல விஷயங்களை அனுபவங்கள் நமக்குக் கற்றுத் தரும் சகோதரி. உறவின் மேன்மையை உணருவதற்கு வாய்ப்பில்லாத மிக மிக அவசரமான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்னிலையில் மன்ற உறவுகளை உங்கள் சொந்தமாக்கிக் கொண்டு உங்கள் உள்ளக்கிடக்கையை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

இளமையில் வறுமை என்பது மிகக் கொடுமை, அதுவும் நம்மைச் சுற்றி உள்ள பொறுப்புகளைக் கண்டு சுயநலத்தால் அதை விட்டு ஒதுங்காமல் அப் பொறுப்புகளை செம்மையாய் நிறைவேற்ற நம்மைத் தயார் படுத்திக் கொண்டு வலிய ஏற்றுக் கொள்வதற்கு ஒரு நெஞ்சுறுதியும் திடமும் வேண்டும். ஆண்களுக்கு நிகராக அந்த வைராக்கியத்தால் இப் பொறுப்புகளை சுமந்து அதன் பாரத்தையும் வலியையும் பிறருக்கு உணர்த்திக் கஷ்டப்படுத்தாமல் இதுகாலம் மனதிற்குள் வைத்துக் கொண்டு ஆறுதலும் அன்பும் நம் மன்றத்தில் கிடைக்கும் என இறக்கி வைத்தது நிச்சயம் உங்களுக்கு சற்றே மன இறுக்கத்தைக் குறைத்திருக்கும்.

உங்கள் மனதிற்கு ஆறுதல் தரும் பொருட்டாய் உங்கள் நிலையில் இருந்த என் சகோதரியின் கதையையும் இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்வதில் இன்புறுகிறேன் சகோதரி.

வறுமையிலும் அதன் கோரம் தெரியாமல் என்னை வசதியான குடும்பப் பிண்ணணியில் வைத்துக் காப்பாற்றியதில் என் இரண்டாவது தமக்கையார் திருமதி. ஜெயலெட்சுமி என்ற மங்கையர் குல மாணிக்கத்திற்கு பெரும் பங்கு உண்டு. நீங்கள் உங்கள் கதையைக் கூறவும் எனக்கு என் அக்காவின் ஞாபகம்தான் உடன் வந்தது.

12 பேர் கொண்ட குடும்பத்தில் நான் கடைசிப் பையன். இன்று நான் உண்ணும் உணவின் ஒவ்வொரு பருக்கையிலும் அவர்களின் தியாகத்தைத் தான் பார்க்கிறேன்.

எங்கள் குடும்பமும் மிகப் பெரிது. என் தந்தையார் திடீரென்று படுத்த படுக்கையில் கிடந்த ஒரு துரதிருஷ்டமான காலத்தில் வலிய எங்களைக் காப்பாற்றும் ஒரு பெரும் பொறுப்பை என் அக்கா அவர்கள் தாங்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். அதற்காக அவர்கள் பட்ட பாடும் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் ஏட்டில் எழுத இயலாது,

மூன்று வருடம் என் தந்தையார் படுக்கையைவிட்டு நகரமுடியாத காலத்தில், வேடிக்கையும் விளையாட்டுமாயிருந்த என் வாழ்க்கையில் குடும்பத்தின் பிண்ணணி அப்போதுதான் ஏதோ விளையாட்டாகப் புரிந்தது. தந்தையாருக்கு உடல்நிலை சரியில்லை என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதன் பின்ணணியில் என் மூத்த சகோதரியின் திருமணம் அப்போதுதான் முடிந்திருந்த நிலையில் அதன் பாதிப்புதான் அவரை படுக்கையில் இட்டது என்பதை சற்று காலதாமதமாகத்தான் அறிந்து கொள்ள முடிந்தது.

அப்போதுதான் எனது இரண்டாவது அக்கா அவர்கள் வலிய குடும்பச் சுமையை தந்தையின் இடத்திலிருந்து எடுத்துக் கொண்டு வேலைக்குச் செல்லலாம் என்ற முடிவை எடுத்தார்கள். அதற்கான ஆயத்தங்களை அவர்கள் செய்து கொண்டிருக்கும்போது, வேலை கிடைக்கும் வரை இருந்த இடைப்பட்ட காலத்தில் எங்களுக்கு ஏற்பட்ட வறுமை அனுபவம் இன்றுவரை என் நினைவுகளை விட்டு அகல மறுக்கிறது.

என்னுடைய மூத்த சகோதரர் கல்லூரிப் பட்டப்படிப்பின் முதலாண்டு நிறைவு செய்திருந்தார். எனக்கு நேர் மூத்த இன்னொரு சகோதரி பள்ளி இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்கள். திருமணம் ஆன முதல் அக்காவின் திருமணச் சம்பிரதாயங்களும் ஒன்றும் குறைவில்லாமல் கடன் வாங்கி நிறைவேற்றப் பட்டு வந்தது. அவ்வமயம் நான் 9ம் ஆண்டு பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். 7 குழந்தைகளைப் பறி கொடுத்துவிட்டு இருக்கும் 5 குழந்தைகளையும் மற்றும் உடல் சுகவீனமான கணவரையும் பார்த்துக் கொள்ளும் பெரும் பொருப்பில் என் தாயார் எப்போதும் கவலை தோய்ந்த முகத்தோடு வாழ்க்கையைக் கழித்து வந்தார்கள். இறுக்கமான குடும்பச் சூழல் இளமையை சற்று புரட்டிப் போட்டது.

அண்ணணின் பட்டப் படிப்புக் கான செலவுகளுக்காக அக்காதான் அக்கம் பக்கம் சொந்த பந்தங்களில் கடன் பெறுவதற்காகச் சென்று அங்கு கிடைக்கும் அவமானங்களை வெளியில் சொல்லிக் கொள்ளாமல் தானும் டைப்ரைட்டிங், ஷார்ட்காண்ட் போன்ற தொழில் சார்ந்த கல்வியைக் கற்றுக் கொண்டு மிகப் பொறுப்பு மிக்கவராய் இருந்து வந்தார்கள். கடவுள் அருளால் அவர்களுக்கு போஸ்டல் டிபார்ட்மென்டில் வேலைகிடைத்தது.

வேலை கிடைத்த அந்த நாளிலிருந்து இன்று வரை எங்கள் அனைவரையும் இன்னும் தன் குழந்தைகளைப் போல்தான் அன்பைக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள். சினிமாக்களில் கூட இந்தமாதிரியான ஒரு அக்கா கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்களா என்று பார்த்தால் சந்தேகமே.

என் அண்ணன் படிப்பில் மிகக் கெட்டிக்காரர். அவருக்கு மேற்படிப்பு படித்து ஆடிட்டராக வேண்டும் என்ற முழு வைராக்கியத்தில் புஸ்தகங்கள் கூட வாங்கக் காசில்லாத அக்காலகட்டத்தில் அனைத்து புஸ்தகங்களையும் கைப்பட எழுதி வைத்துக் கொண்டு படிப்பார். இதற்காக மலிவுவிலையில் கிடைக்கும் வேஸ்ட் பேப்பர்களை உபயோகப்படுத்திக் கொள்வார். இந்த உத்தியெல்லாம் என் அக்கா ஊட்டியது. பின் என் அண்ணனை சமாதானப்படுத்தி படிப்பு முடிந்ததும் குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தை அவருக்கு எடுத்துவைத்து பின் அவரது மேற்படிப்பு ஆசையை பின் நிறைவேற்றுவதற்காக எல்லா முயற்சிகளையும் செய்யலாம் என்ற யோசனையின் அடிப்படையில் அண்ணனின் படிப்பைப் பார்த்துக் கொண்டார்கள்.

என் அண்ணனுக்கு ஒரு வேலை கிடைத்து குடும்பத்துக்கு உதவி செய்யும் நிலை வரும்வரை தான் திருமணம் செய்து கொள்வதில்லை என்ற ஒரு உறுதியான முடிவினை எடுத்து அதேபோல் தன்னுடைய 37 ஆவது வயதில் என் அண்ணனுக்கு கனராவங்கியில் வேலை கிடைத்தவுடன் தான் அப்பாவின் நிர்ப்பந்தத்தினால் திருமணம் செய்து கொண்டார்கள்.

வருடத்திற்கு இரண்டு செட் டிரஸ் எடுத்துக் கொடுப்பார்கள். எந்த வீணான செலவும் செய்யாமல் கிடைக்கும் ஒவ்வொரு நயாபைசாவிலும் தன் உழைப்பைக் கொட்டி எங்களுக்காக அனைத்தையும் சேமித்து வைப்பார்கள். தினமும் பஸ்ஸுக்காகவும் அலுவலகத்தில் காபி சாப்பிடுவதற்காகவும் அப்பா தரும் ஒரு ரூபாயை சேமித்து மாதா மாதம் ஏதாவது ஒரு செலவினை ஈடுகட்டிவிடுவார்கள். அலுவலகத்திற்கு நடந்தே சென்று நடந்தே திரும்பி வருவார்கள். எந்த ஆடம்பரச் செலவும் செய்யாமல் எங்களைத் தாயைப் போல் கவனித்துக் கொண்டு வந்ததில் என் தாயிடம் கிடைக்காத அத்தனை அன்பையையும் நான் என் சகோதரியிடம் பெற்று வந்தேன் அன்புச் சகோதரி.

அதனாலேயே இளமை காலத்திற்கே உண்டான காதல் வீணாடல் போன்ற எந்த விஷயமும் என்னை ஈர்க்கவில்லை. எல்லாப் பெண்களையும் என் அக்காவின் இடத்திலேயே பார்ப்பேன். குடும்பத்திற்காக வேலைக்கு செல்லும் சகோதரிகள் என்றால் என் அக்காதான் என் முன் நிற்பார்கள்.

37 வயதிற்குப் பின் திருமணம் செய்து கொண்டு கணவரிடமும் எங்கள் குடும்ப கஷ்டத்தினால் தன் உதவி எங்களுக்கு எப்படியெல்லாம் தேவை என்பதை எடுத்துச் சொல்லி திருமணத்திற்குப் பிறகும் எங்கள் குடும்பத்தைப் பராமரித்து வந்தார்கள். இந்த இடத்தில் என் அக்காவின் கணவரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவரும் இதே உதவிப் பிண்ணணியில்தான் என் தமக்கையைத் திருமணம் செய்து கொண்டார்.
அப்போது அவருக்கு வயது 40. பிராமண குடும்பத்தில் இந்த அவலங்கள் அதிகமாகவே உண்டு.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளையை இறைவன் வளர்ப்பான் என்பதற்கிணங்க என் சகோதரியின் இரண்டு பிள்ளைகளும் அவர்களாகவே படித்து பட்டம் பெற்று இன்று ஒவ்வொருவரும் மாதம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அக்கா வழக்கம்போல் தனக்கு வரும் பென்ஷன் தொகையை மிச்சம் பிடித்து இன்றும் எனக்கு புதுத் துணி எடுத்துத் தருகிறார். ஏனென்றால் இன்னும் நான் அவர்களுக்கு
குழந்தைதான்.

இன்னொரு அக்காவிற்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகளில் அவர்களின் கணவரின் அகால மரணத்தினால் என் அக்கா துவண்டுவிடாமல் இன்றளவும் அவர்களையும் தன்னோடு வைத்துக் கொண்டு அவர்களின் ஒரே பையனை நன்கு படிக்கவைத்து இன்று அவனும் மிக் பெரிய உத்தியோகத்தில் நல்ல முறையில் இருக்கிறான்.

அன்பிற்கும் தியாயத்திற்கும் அத்தனை வலிமை. தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் மனதிலிருத்தி அவர்களின் நியாயமான அபிலாஷைகளுக்காக தன்னலம் கருதாது நம் வாழ்வை அர்ப்பணிப்போமேயானால் நிச்சயம் இறையருள் நம்பக்கம்தான். எனவே நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் இத்தியாக வாழ்வுக்காக பெருமைதான் படவேண்டும்.

எக்காலமும் உங்களையும் உங்கள் விதியையும் நொந்து கொள்ளாதீர்கள். துன்பம் தரும் வாழ்வியலில் அது தரும் வலியை உகந்து ஏற்றுக் கொள்ளும்போதுதான் தங்கத்தின் தகைமை இயல்பாக நமக்குள் வரும்.

எதையும் நான் சமூக அக்கறையோடுதான் பார்ப்பேன். தன்னலத்தோடு கூடிய எந்த ஒரு விஷயத்திற்கும் முக்கியத்துவம் தருவதில்லை. என்னால் இயன்ற உதவிகளை என்னைச் சார்ந்தவர்கள் பயன் பெறும் நோக்கோடு செயல்படுவது என் தமக்கையாரின் தன்னலமற்ற தியாக வாழ்வு எனக்குக் கற்றுத் தந்த பாடம்தான் என்றால் அது பொய்யில்லை.

எனக்கு வங்கியில் வேலை கிடைத்து சென்னை சென்று வேலைக்கு ஒப்புக் கொண்டு அலுவலகம் சென்றவுடன் முதலில் எனக்கு வந்தது என் தமக்கையாரின் 300 ரூபாய் மணி ஆர்டர் பணம்தான். வேலைக்குச் சென்ற இடத்தில் வெளியூரில் யாரிடம் உதவி பெறமுடியும் என்பதை கணித்து என் அலுவலக முகவரியை எப்படியோ பெற்று என் முதன் மாதச் சம்பளம் வரும் முன்னே அவர்களின் 300 ரூபாய் தான் முதலில் பெற்றேன். அதைச் செலவு செய்யாமல் இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அந்தப் பணத்தைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு தியாத்தின் விலைமதிக்க முடியாத அன்பு முகம் தான் அதில் தெரியும். அதில் அவர்களையே நான் தெய்வமாகக் காண்கிறேன்.

மற்றபடி நான் கோவில் குளம் இறைவழிபாடு என்ற எதையும் செய்வதும் இல்லை. அதில் நம்பிக்கையும் இல்லை.

இதையெல்லாம் ஏன் இங்கு முன் வைக்கிறேன் என்றால் திரைப்படங்கள் கற்பனையான விஷயங்களை மிகைப்படுத்திச் சொல்லும். வாழ்வில் அப்படி ஒரு நிலை ஒவ்வொருவருக்கும் வந்தால் என்ன தீர்வு என்பதை அது சொல்லாது. ஏனெனில் சென்டிமென்ட் அங்கே விலைபோகும்.
வாழ்க்கை ஓடத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவங்கள் வாய்க்கப் பெற்றிருப்போம். கஷ்ட்டப்பட்ட காலத்தில் நமக்கு உதவி செய்தவர்களின் னினைவே நமக்கு வராமல் போகலாம். அல்லது கஷ்டங்கள் இன்னும் தொடர்ந்து இருக்கலாம். இது ஏதோ நமக்கு மட்டும் இறைவன் தந்தது என்று தாழ்வாக நினைப்போமேயானால் அந்த நினைவே மேலும் பல துன்பங்களுக்கு முகாந்திரமாகிவிடும்.

இறைவன் என்பது மனித ரூபத்தில்தான் வரவேண்டும். ஆகாயத்திலிருந்து திடீரென்று குதித்து வந்துவிடுவதல்ல தெய்வம். மனிதனும் தெய்வமாகலாம் என்ற தத்துவமே உங்களைப் போன்ற என் சகோதரியைப் போன்ற மாமனிதர்களால்தான் வந்திருக்க வேண்டும்.

எனவே உங்கள் தியாகங்கள் ஈடு இணை இல்லாதது. இந்த உயரிய குணம் உங்களுக்கு வாய்த்தது இறைவனே உங்கள் உள்ளத்தில்
இறங்கியிருப்பதால்தான். எனவே நீங்கள்தான் உங்கள் குடும்பத்திற்கு கடவுள் மற்றும் எல்லா சக்திமயமான செல்வங்கள் எல்லாம். ஒப்பற்ற உங்கள் உள்ளம் உங்களை உயர்வுக்கே இட்டுச் செல்லும். மனந்தளராமல் வைக்கும் ஒவ்வொரும் அடியிலும் இறைவனின் அருளைப் பெறுவீர்கள்.

இது சத்தியம்.

சாலைஜெயராமன்
06-04-2008, 04:47 PM
உங்களுடைய கஷ்டங்களும், அதை நீங்கள் வெற்றி கொண்டமையும் பலருக்கு பாடமாக அமையும். மனத்தெம்பினை தரும், ஆறுதல் தரும், கண்டிப்பாக தொடருங்கள். உங்கள் மனசுக்கு போதும் என்று நினைக்கும் வரை தொடருங்கள்.


ஹாய் மிஸ்டர் நுரை.

ஏதோ பொழுது போக்கிற்காக படித்தோம் எழுதினோம்னு இல்லாமலும், பிறருடைய அந்தரங்கத்தினை வம்பிற்காக கேட்காமல் உண்மையில் ஆறுதல் தரும் நோக்கத்துடனும், அன்புடனும் வடித்த உங்கள் பின்னூட்டம் மிக அருமை,

அதிலும் உங்கள் "மனசுக்குப் போதும் என்று னினைக்கும் வரை தொடருங்கள்" என்று சொன்னதில் இயல்பான மனிதநேயமும் கண்ணியமும், அதீத நாகரீகமும் தெரிகிறது அன்பரே.

அன்பால் கட்டுண்ட அருமையான சொந்தங்கள் நம்மன்றத்தில்.

வாழ்க வளர்க.

சாலைஜெயராமன்
06-04-2008, 04:50 PM
அதே நேரம் ஒரு பெண்ணாக தன் சுய விபரங்களை பொது மன்றத்தில் எழுதுவதால் தொந்தரவுகள் ஏதும் எழ வாய்ப்புள்ளதா என்பதை இன்னொரு முறை சிந்திக்க வேண்டுகின்றேன்.
!!!!

இதயம் ஒரு நல்ல முக்கியமான விஷயத்தை முன் வைத்திருக்கிறார். கூடியவரை உங்கள் சொந்த வாழ்க்கையின் பாதிப்புகளை மட்டும் முன்வையுங்கள். அதிகமான தனிப்பட்ட தகவல்களைத் தருவதை தவிருங்கள் அனு அவர்களே.

இதயம் நிஜமாகவே பாரட்டப் பட வேண்டிய கருத்து.

இதயம்
07-04-2008, 04:46 AM
சாலை ஜெயராமன் அவர்களின் பின்னூட்டம் படித்ததில் இதயம் நெகிழ்ந்தது. வாழ்க்கையை போராடி வென்ற ஒரு அற்புத வாழ்வியல் நிகழ்வை அவர் ஒரு தனித்திரியாக இட்டிருந்தால் அவருக்கும், அவரின் உயர்வுக்காக உழைத்த (நம்) சகோதரிக்கும் மேலும் பெருமை சேர்த்திருக்கும். ஆனால், தன் வாழ்க்கைப்பாடம் இங்கே வேதனையை பகிர்ந்து கொள்ள இத்திரியை தொடங்கிய அனு அக்காவின் வேதனைக்கு வடிகாலாக அமைய அதை இங்கே பின்னூட்டமாக கொடுத்த ஜெயராமன் அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். அவரை பாராட்ட, வாழ்த்த வயதோ, அனுபவமோ எனக்கில்லை என்றாலும் அவரின் நற்குணம் என்னை மிகவும் கவர்ந்திழுக்கிறது. நன்றி ஜெயராமன்..!!

வாழ்க்கையில் யாருக்குத்தான் தோல்வி, வேதனை, கவலை இல்லை...? இதெல்லாம் இல்லாத வாழ்க்கை எப்படி ருசிக்கும்..?!! புடம் போட்டால் தான் தங்கம் மின்னும் என்பது போல் வாழ்வில் ஏற்படும் போராட்டங்கள் தான் நம்மை உயர்த்தும். எதிலும் நிலை பெறாத மனித மனதிற்கு நீடித்த மகிழ்ச்சி கூட ஒரு எல்லைக்கு மேல் அலுத்துவிடும். துன்பமும், இன்பமும் மாறி மாறி வருவது தான் சுகமான வாழ்க்கை..! அதே போல் இன்பம், துன்பம் என்பவை யாருக்குமே நிலை கிடையாது. எனவே இந்த இரு நிலைகளில் இருப்பவர்கள் அதற்கு அடுத்த எதிர் நிலையை எப்போதும் எதிர்பார்த்திருக்க வேண்டும். அந்த நிலை அனு அக்காவுக்கும் உண்டு. காத்திருக்க வேண்டுகிறேன்..!!

ஜெயராமன் அவர்களுடைய சகோதரியின் தியாகம் எழுத்தில் வடிக்க முடியாதது. பெண்களுக்கே உரிய தாயுள்ளத்தை கற்பனைக்கு கூட எட்டாத வகையில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். தியாகம் என்பது போற்றப்படத்தக்கது, அது எந்த உறவில், எந்த வடிவில் இருந்தாலும் சரியே..!! தன் சகோதரனை தன் பிள்ளையாகவும், சகோதரியை தாயாகவும் கண்ட இருவரும் என் கண்களுக்கு மனிதர்களாக தெரியவில்லை, மாமனிதர்களாக தெரிகிறார்கள். நன்றிக்கடன் என்பது ஒரு எல்லைக்குள் அடக்க முடியாதது. அதை பொருளை கொடுத்து ஈடு செய்தல் என்பது தியாகத்தை இழிவுபடுத்தும் செயல். ஆனால், ஜெயராமன் அவர்கள் இப்போது இலட்சக்கணக்கில் சம்பாதித்தாலும், வறுமையில் கோரப்பிடியில் சிக்கித்தவித்த அந்த காலத்தில் தன் சகோதரி அனுப்பிய பணத்தை இன்னும் செலவு செய்யாமல் வைத்திருப்பது உருக்கத்தின் உச்சக்கட்டம்.!!

அனு அக்காவின் கடந்த கால இரணங்களுக்கு ஜெயராமன் அவர்களின் பின்னூட்டத்தை விட வேறு எதுவும் தேவையில்லை என்று தோன்றுகிறது. என்ன அக்கா..சரி தானே..? உங்கள் வாழ்க்கை பயணத்தை தொடருங்கள். ஆதரவாய் எப்போதும் உங்களுடன் நாங்களிருக்கிறோம்..!!!

நம்பிகோபாலன்
07-04-2008, 05:11 AM
ஒவ்வொருத்தர் வாழ்விலும் ஏற்றமும் இறக்கமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது...பகிர்தல் மட்டுமே மனதை கொஞ்சம் இதமாக்க செய்யும்.தொடருங்கள்.

மதி
07-04-2008, 05:11 AM
பலரின் வாழ்க்கை அனுபவங்கள் படித்தல் என்னைப் போன்றவர்களுக்கு நல்ல பாடமாகும்..பகிர்தலுக்கு நன்றி அனு அக்கா மற்றும் ஜெயராமன் ஐயா..
அனு அக்கா..
இதயம் அண்ணா சொன்ன கருத்தை நானும் ஏற்கிறேன்.

ஷீ-நிசி
07-04-2008, 09:57 AM
அனு அவர்களின் சோகங்கள் இங்கே வெளிப்படையாய்... உண்மையில் ஒவ்வொருவருக்குள்ளும், மலையளவு சோகங்கள் இருக்கத்தான் செய்கிறது. அவற்றையெல்லாம் நாம் எப்படி போராடி வெற்றிக்கொள்கிறோம் என்பதில்தான் நம் வாழ்க்கை அடங்கியிருக்கிறது. அனு அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள், பலருக்கும் இங்கு பாடமாய், வாழ்க்கையின் போராட்டங்களை சந்திக்கும் துணிவைத் தரும் என்பதில் சந்தேகமில்லை..

தொடருங்கள்... பயணிக்கிறோம்.

@ சாலைஜெயராமன்.

உங்கள் அக்காவின் உழைப்பின் பலன் இங்கே உங்களின் ஒவ்வொரு எழுத்துக்களிலும் மின்னுகிறது.


அதனாலேயே இளமை காலத்திற்கே உண்டான காதல் வீணாடல் போன்ற எந்த விஷயமும் என்னை ஈர்க்கவில்லை. எல்லாப் பெண்களையும் என் அக்காவின் இடத்திலேயே பார்ப்பேன். குடும்பத்திற்காக வேலைக்கு செல்லும் சகோதரிகள் என்றால் என் அக்காதான் என் முன் நிற்பார்கள்.

வறுமை வாழ்க்கையில் போராடவும் கற்றுக்கொடுக்கிறது. வாழ்வியல் ஒழுக்கங்களையும் கூட கற்றுக்கொடுக்கிறது.

வாழ்த்துக்கள்!

சுகந்தப்ரீதன்
07-04-2008, 02:20 PM
வறுமை வாழ்க்கையில் போராடவும் கற்றுக்கொடுக்கிறது. வாழ்வியல் ஒழுக்கங்களையும் கூட கற்றுக்கொடுக்கிறது. !

அச்சடித்ததுபோல் கூறிவிட்டீர்கள் கவிஞரே....!! என் அனுபவத்தில் உணர்ந்த விடயமிது நண்பரே..!!

சாலை அண்ணாவின் பின்னூட்டம் மிகவும் ஆழமாக மனதில் பதிந்துவிட்டது... பெரும்பாலும் தன்னை பற்றியே சிந்திக்கும் சமூகத்தில் பிறர்நலன் கருதி பாடுபட்ட தங்கள் சகோதரியை வாழ்த்த வயதில்லை எனக்கு... அதை விவரித்தவிதத்தில் மனதில் விசாலத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் அண்ணா...!! தொடரட்டும் உங்கள் அனுபவங்கள் பின்னூட்டங்களாய் மன்றத்திலும் எங்கள் மனதிலும்..!!

அனுராகவன்
09-04-2008, 03:56 AM
சம்பவம்-1

என் வாழ்வில் மறக்க முடியாத பல விசிங்கள்...
நான் அதை பகிர்ந்துக்கொள்ள ஆசையாக உள்ளது..
நான் சிங்கைக்கு வேலைக்கு செல்லும் முதல் நாள் அந்நாளை என்னால் மறக்க முடியாது..
காரணம் நான் வேலைக்கு சிங்கைக்கு அழைத்து சென்று வேலை கிடையாது என்று..
மறுநாளே அனுப்பிவிட்டார்கள்..(இந்தியாவிற்க்கு)
நான் என்ன செய்வேன்..
நான் கட்டிய பணம் எல்லாமே ஏஸெண்ட் எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டான்..
விபரமாக இப்போது தருகிறேன்,... அது மற்றவருக்கு எச்சரிக்கையாக இருக்கட்டுமே...

இதோ சில நிகழ்ச்சிகள்


பள்ளி படிப்பை பாத்தியில் விட்ட நான் பிழைப்பிற்காக வெளிநாடு செல்லும் ஆசையில் என் மாமாவிற்கு தெரிந்த இடைதரகரை நாடினேன்..அதனால் அவரிடம் என் முழு விபரம் அடங்கிய பாஸ்போட் மற்றும் இதர ஆவனங்குடன் தேடி சென்றோம்..
அப்போது ஏஸெண்ட் மூலம் சிங்கைக்கு பணிப்பெண்ணாக போகும் வாய்ப்பு கிடைத்தது..
பணத்தை என் அம்மாவின் தம்பி(என் முறை மாமன்)எங்கோ அலைந்து திரிந்து பணத்தை கட்டினார்..
என் வாழ்நாளில் நான் ஒரு தினமும் கூட முழு சோறு தின்றது கிடையாது..
அப்படிப்பட்ட நிலையில் இந்த வாய்ப்பு எனக்கும்,குறிப்பாக என் சகோதரிகளுக்கு ஒரு படிப்பு செலவும்,,அம்மாவின் மருத்துவ செலவையும் பார்க்க கடவுள் கொடுத்த வாய்ப்பாக கருதினேன்..
அந்த தினமும் வந்தது; அதாவது நான் சிங்கை செல்ல இடைதரகர் சொன்ன நாளும் வந்தது..
என்னை சென்னை ஏர்ப்போட்டில் என் மாமன் மற்றும் என் அப்பாவும் வழியனுப்ப என் எஸெண்ட் முழு பணத்தை பெற்றுக்கொண்டு என் டிக்கெட்டையும்,பாஸ்போர்ட்டையும் ஒரு சாரிடம் கொடுத்து வழியனுப்பினர்..
எனக்கோ பல கனவுகள் இருந்தன. என் பிடித்த அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்று என் மனதில் பல நாள் துக்கம் விளகியதாக உணர்ந்தேன். அந்த சந்தோசம் நீண்ட நேரம் நிலைக்க வில்லை.. அன்று இரவு மணி 12.05 விமான நிலையத்தில் உள்ளே சென்றேன்..ஒரு கணம் என் அப்பாவிற்க்கு நீங்கா வணக்கம் செய்து டிக்கேட் வாங்கி என்னை போன்று சில பணிபெண்கள் சென்றிக்க கூடும்.. அவர்கள் பின்னால் சென்று விமானத்திற்க்குள் நிழைந்தேன்..
அப்போது என் வாழ்க்கையில் விமானத்தை பார்த்தது கூட கிடையாது.. ஆனால் நான் இருப்பது விமானத்திலா ஆச்சிரியமாக இருந்த்தது.. பயமும் தொற்றிக்கொண்டது..
சில படங்களில் விமானம் வெடிப்பதை பார்த்த ஞாபகம் வந்து சென்றத்து..
ஒருவழியாக மறுநாள் நான் சிங்கை சாங்கி விமான நிலையம் அடைந்தேன்....
என்ன நடக்கும் என்று பெருமூச்சுடன் அனைத்து செக்கிங் முடித்து வெளியில் ஒரு வண்டியில் சிலர் என்னையும் என்னை போன்ற இதர பணிபெண்களையும் அழைத்து சென்றனர்...
வண்டி ஒரு பெரிய கட்டிடம் கண்டேன்..அந்த பயணம் என்னுடன் வந்த அனைவருக்கும் புது என்று நினைக்கிறேன்..
அனைவரும் Maid Agenciesயில் அடுக்காக கொண்ட இடம் தான் அது..
அந்த இடம் புக்கி திமா என்று பெயர் .
அப்போது என்ன இடம் என்றே தெரியாது..
அங்கு பல நாட்டு பணிபெண்கள் இருந்தனர். அதில் பிளிப்பென்ஸ்(Philphens),இந்தோனோசியா,இந்தியா மற்றும் சீன பெண்களும் இருந்தனர்.
எனக்கு தமிழ் தவிர ஆங்கிலம் சில வார்த்தைதான் தெரியும்..
அதனால் என் மனத்தில் மொழிப்பிரச்சனையும்,யார் நம்மை அழைத்து செல்வார்கள் என்று கவலையும்,பயமும் வந்தது..
மறுநாள் காலையில் பல நாட்டு வீட்டு உரிமையாளர்கள் வந்தனர்..
அவர்கள் எங்களை ஒரு துணிகடையில் உள்ள பொம்மையே போல் கருதி என் ஜாதகத்தை அதாங்க என் முழு விபரம் ,மற்ற திறமைகளியும் பார்த்தனர்..
அதற்கு அரைநாள் பயிற்ச்சியும் அளித்தனர்..
அதில் கலந்துக்கொண்டும் பிறகு என்னை ஒரு இந்திய குடும்பம் அழைத்து சென்றனர்,,.
அவர்கள் கார் மூலம் வீட்டை அடைந்தேன்..
வீடு போட்டோம் பாசிரில் இருந்தது..
அடுத்தது...
தொடரும்...
குறிப்பு:
சிங்கைக்கு நான் வருவதும் ,போவதும் இது புதிதல்ல..
நான் இது என் வாழ்வில் நான்காவது தடவையாக சிங்கையில் அடி வைக்கிறேன்..
அதில் நான் முதல் வேலை மூன்று மாதம் தான் இருக்க முடிந்தது...
அது என் துரதஸ்டத்தை தான் குறிக்கிறது..
மூன்று மாதம் இருந்து எதோ ஒரு காரணம் என வந்து என் பர்மீட் காலாவதி ஆகிடும்..
அந்த காரணம் தொடரும்..

ஜெயாஸ்தா
09-04-2008, 07:17 AM
திசை தெரியாமல் வாழ்க்கை என்னும் நடுக்கடலில் தத்தளிக்கும் என் போன்ற எத்தனையெத்தனையோ உள்ளங்களுக்கு உங்களின் வாழ்க்கையைப் படிக்கும்போது நம்பிக்கை பிறக்கிறது. அந்த வகையில் சிவா அண்ணனின் வாழ்க்கைத் தொடர் எனக்கு பெரிதும் நம்பிக்கையூட்டிற்று. இதோ இப்போது சாலையண்ணா மற்றும் அனு ஆகியோரின் வாழ்க்கைச் சம்பவங்களும்....! தொடர்ந்து எழுதுங்கள் அனு.

அனுராகவன்
10-04-2008, 02:07 AM
அன்புள்ள அனு உங்களின் ஆரம்பகால வாழ்க்கை

அழுத்தமாக இருக்கிறது உங்களின் வாழ்க்கை போலத்தான் என்னுடைய

அன்பு இல்லாத வாழ்க்கை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் காலம் கடந்துவிட்டது...
நன்றி நண்பரே!!
எல்லாருக்கும் ஏதோ ஒரு வேதனை தரும் சம்பவம் வரும்..
நல்ல பாடங்களை தரும்..
எனக்கு உங்களை போன்ற நணபர்களிடம் நான் பகிர்வது போல
நீங்களும் சொல்லாமே...
அப்போது பாரம் குரையட்டுமே..


அதனால்தானோ என்னவோ உங்களை சந்திக்க வைத்திருக்கிறது

அனு கவலை வேண்டாம் காலம் உங்களுக்கு விரைவில் பதில் சொல்லும் சரியா...

அடுத்ததையும் சொல்ல வேண்டுகிறேன்...
ஆமாம் கஸ்டம் கஸ்டத்தைதான் நாடும் போல..
ஏனெனில் அங்குதான் தீர்வு உள்ளதுபோல..
இதோ தொடர்ந்து வாங்க..

அனுராகவன்
10-04-2008, 02:23 AM
அனு அக்காவின் படைப்புகள் மூலம் நான் உணர்ந்தது அவரின் கள்ளம் கபடமற்ற வெள்ளந்தி மனம்.!! அதன் உறுதிச்சான்றாக அவரின் இந்த சுயசரிதை அமைகிறது. சுயசரிதையில் 2 வகை இருக்கிறது. தன் வாழ்க்கை பாடம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக அமைய தன் சுய அடையாளங்களை மறைத்து வாழ்க்கையில் நடந்த போராட்டம், துன்பம் எல்லாவற்றையும் சொல்லி அதை எப்படி போராடி வெற்றி கொண்டு உயர முடிந்தது என்பதை சொல்வது ஒரு வகை. இதில் பொது நலம் கலந்திருக்கிறது. இன்னொன்று வகை தன் வாழ்க்கையில் நடந்த நல்லது, கெட்டது அனைத்தையும் ஒன்று விடாது பகிர்வது. இது சம்பந்தப்பட்டவரின் ஆத்ம திருப்திக்காக எழுதுவது. அக்கா தன் குடும்ப விபரங்கள் முதற்கொண்டு எழுதியிருப்பதை காணும் போது இதை இரண்டாவது வகையோ என்று கருதுகிறேன்.
நன்றி தம்பி அவர்களே!!
நான் நம் மன்ற நணபர்களை நம்புகிறேன்.
அதனால் எனக்கு மாற்றார் போன்று தோனவில்லை..
நான் உள்ளதை அப்பிடியே பகிரும் மனதினை கடவுள் கொடுத்துள்ளார்..
நான் என் வாழ்வில் பட்ட பல விசிங்கள் பகிர என் மனபாரம் குரைய வேண்டும் ..
அதனால் எனக்கு சில சங்கடமும் உண்டு..
ஆனால் அதை எப்படி கேட்பது..
நாம் ஒரு குடும்பம் தானே!!
அதானால்தான் நான் பகிர விரும்புகிரேன்..


மன்றத்தில் சொந்த பெயரை கூட வெளிப்படுத்த விரும்பாமல் புனைப்பெயர் கொண்டு முகமுடி தரிப்பவர்களுக்கு மத்தியில், அனைத்தையும் அப்படியே நம்மிடம் கொட்டத்தொடங்கியிருக்கும் அக்காவின் பண்பு வியக்க வைக்கிறது. அவருக்குள் வேதனையின் இரணங்கள் அதிகம் இருக்கும் போல் தெரிகிறது. இதை எழுதி, நாம் படிப்பதன் மூலம் அவர் மனக்காயத்துக்கு மருந்து கிடைத்தால் மகிழ்ச்சியே. அதே நேரம் ஒரு பெண்ணாக தன் சுய விபரங்களை பொது மன்றத்தில் எழுதுவதால் தொந்தரவுகள் ஏதும் எழ வாய்ப்புள்ளதா என்பதை இன்னொரு முறை சிந்திக்க வேண்டுகின்றேன்.

உங்கள் சுய வாழ்க்கைத்தொடரை ஆவலுடன் படிக்க காத்திருக்கின்றேன்..!! தொடருங்கள் அக்கா..!!!!
சொந்த பெயர் சிலருக்கு கொடுக்க மனம் வராது..
அதுவே மிக பெரிய பிரச்சனையாக கூட ஆகலாம்.
புனைபெயர் அவருக்கு பெருமையே சேர்க்க பயன்படுத்தலாம்..
எது எப்படியோ நான் ஒரு கள்ளம் கடமற்ற தூய உள்ளம்..
நீங்கள் அதில் ஆருதல் கைகள்..
அதனால் நான் மறைக்க என்ன வேண்டும்...
இது என்னுடைய பாணி அவ்வளவே...

அனுராகவன்
10-04-2008, 02:35 AM
அடடா...எவ்வளவு சோதனைகளைத் தாண்டி வந்திருக்கீங்க அனு. சகோதரர்கள் இல்லாமல், நல்ல வருமானமும் இல்லாமல் வாழும் இளமைப் பருவம் கொடுமையானது. இதில் சகோதரிகள்தான் ஒருத்தருகொருத்தர் ஆறுதல்.
நன்றி சிவா.ஜி அவர்களே!!
எனக்கு அண்ணன் என்ற குறையே இனி இல்லை ..
நான் ஒரு தனி ஆள் என்று நினைத்தேன்.
எனக்கு பல சகோதரர்கள் கிடைத்தர்கு இறைவனுக்கு என் நன்றி..


வெளிநாட்டு வேலை என்று ஆசைக்காட்டி பணத்தைக் கொள்ளையடிக்கும் கூட்டத்திடம் நீங்களும் ஏமாந்து விட்டீர்களா..?

அத்தனை வறுமையில் அவ்வளவு பணத்தை இழப்பதென்றால் எவ்வளவு பெரிய இழப்பு அது...மனம் வேதனைப் படுகிறது சகோதரி.

உங்கள் துயரங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வதை நினைத்து மனம் நெகிழ்கிறது. என்றும் உங்களுக்கு ஆதரவாய் இருப்போம் இந்த மன்றத்து உறவுகள்.

ஆமாம் அண்ணா..
என்ன செய்வது நான் உழைத்தால் மற்றவர்கள் வாழ வேண்டும் என்பதற்காக எத்துனை எத்துனை கஸ்டங்கள்..
இடைதரகர்கள் இப்படி இடையிலெ செய்யும் அசிங்கம் ..
என்ன செய்வது பெண்ணாக பிறந்தால் எல்லாம் தியாகம் செய்ய வேண்டும் அண்ணா...
உங்கள் ஆறுதலுக்கு என் மனம் நெகிழ்ந்த மகிழ்ச்சி அண்ணா..

அனுராகவன்
10-04-2008, 02:45 AM
இருப்பினும் ஒரு கேள்வியுண்டு நீங்கள் சிங்கபூரில் ஒரு மாதகாலம் இருந்துதானே எங்களுடன் மன்றத்தில் உரையாடினீர்கள்.
அப்ப மறுநாளே இந்தியாவிற்க்கு அனுப்பி வைத்து விட்டனர் என்று எப்படி சொல்கிறீர்கள்??? :confused::confused: விளங்கவில்லையே!!
.

ஓ..இதோ ஓவியா அவர்களே!!
நான் சிங்கை வந்து சில நாள் என் உறவினர் வீட்டில் இருந்தேன்..
தரகர் என்னை நேர்முக தேர்விற்க்கு அனுப்பினார்.
கூட அவர் வரவில்லை..நானும் என் ஊரு நண்பரின் உதவியுடன் நேர்முகதேர்விற்கு சென்றேன்.
அங்குதான் எனக்கு வேலை இல்லை என்று தெரிந்தது..
விபரம் பின்பு தருகிறேன்..
அப்படி முடிந்து சில நாள் என் உறவினர் வீட்டில் தற்சமயம் தங்கி உள்ளேன்..
என் நண்பரின் உதவியுடன் Special Pass எடுத்து தங்கியிருக்கிறேன்..

அனுராகவன்
10-04-2008, 02:48 AM
சிவா அண்ணா...!!
அங்கொன்றும் இங்கொன்றுமாக பகிர்ந்தமையால் சரியாக கோர்க்கப்படாத சம்பவங்கள் சிதறலாகிவிட்டன.. ஆகையால் ஓவியா அக்கா போலவே எனக்கும் சந்தேகம் வந்தது..!!

தொடராக்கும் பொழுது.. சம்பவங்களைக் கோர்வையாக்கினால் தானே புரியும்.. அனு அக்கா கவனத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.


அப்படியே தருகிறேன் ..
சில நாள் பொறுத்து காத்திருங்கள்..
தொடர்கிறேன்..

அனுராகவன்
10-04-2008, 11:10 AM
என் வாழ்க்கை வரலாறு படிக்க முதலிலிருந்து படிங்க ..
அப்பதான் புரியும்..
நான் திருத்தியுள்ளேன்...
என் வாழ்நாளில் ஏற்பட்ட அனைத்தும் ஒரே கோர்வையாக உள்ளது..
அதற்கு முதலிருந்து வாருங்கள்..
மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க செய்துள்ளேன்.
என் நன்றி.

kavitha
10-04-2008, 11:12 AM
அன்பு அனு பெரிய எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு எழுதுவது என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் சுயசரிதை எழுதும் அளவிற்கெல்லாம் எனக்கு துணிவில்லையம்மா.. அந்தவிதத்தில் உன்னைப்பார்க்கையில் எனக்கு பெருமிதமாக இருக்கிறது. முழுப்பதிவையும் படித்தபிறகு எழுதுகிறேன். இத்திரியை படிக்கக்கொடுத்த சாலையண்ணனுக்கு நன்றிகள்.

அனுராகவன்
10-04-2008, 11:18 AM
அன்பு அனு பெரிய எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு எழுதுவது என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் சுயசரிதை எழுதும் அளவிற்கெல்லாம் எனக்கு துணிவில்லையம்மா.. அந்தவிதத்தில் உன்னைப்பார்க்கையில் எனக்கு பெருமிதமாக இருக்கிறது. முழுப்பதிவையும் படித்தபிறகு எழுதுகிறேன். இத்திரியை படிக்கக்கொடுத்த சாலையண்ணனுக்கு நன்றிகள்.

நன்றி கவிதா!!
நானும் எதோ நினைவுக்கு வந்ததைதான் எழுதிகிறேன்..
தொடர்ந்து வாங்க..
நானும் பகிர ஆவலாக உள்ளேன்..
என் நன்றி -சாலைராமனுக்கு..
இந்த வரலாற்றை எழுத உதவிய கமலகண்ணனுக்கும் என் நன்றிகள்

சாலைஜெயராமன்
10-04-2008, 11:19 AM
அனு உங்கள் போராட்ட குணம் எனக்கு உங்களை வியப்புடன் பார்க்க வைக்கிறது. எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தனிமைதரும் சோகங்களுக்கு இரையாகாமல் இப்படி இணையதளத்தில் ஒரு நல்ல ஆரோக்கியமான உறவுகளுடன் இணைத்துக் கொண்டு அனைத்தையும் பிறர் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு பங்கு கொள்ளும் உங்களுக்கு எந்தக் குறையும் வராது.

ஒரு அந்நிய நாட்டுக்கு வந்து மனத்துணிவுடன் வாழ்வது என்பது அசாத்தியமான உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. வாழ்க்கையில் உங்களுக்கு இனிமேல் வெற்றிதான்.

அனுராகவன்
11-04-2008, 01:16 AM
அதே நேரம் ஒரு பெண்ணாக தன் சுய விபரங்களை பொது மன்றத்தில் எழுதுவதால் தொந்தரவுகள் ஏதும் எழ வாய்ப்புள்ளதா என்பதை இன்னொரு முறை சிந்திக்க வேண்டுகின்றேன்.


என் அன்பு தம்பியே!! நான் என் வாழ்க்கையே அதில் உள்ள விசியங்களே சொல்லவே ஆசை படுகிறேன்..காரணம் நான் பல இடங்களில் மற்றவர்களால் ஏமாந்தும்,ஏமாற்றப்பட்டும் பல சோதனைக்கு ஆளானேன்..முடிந்தளவு என் சொந்த விபரங்களை தாராமல் கொடுக்க முயல்கிறேன்..
நான் இங்கு மன்றம் வருவது என் கணவருக்கே தெரியாது..
ஒரு முறை என்னை அங்கு (மன்றத்திற்கு) போக கூடாது என்று சண்டையே வந்தது..
நிச்சயம் என் விபரங்கள் ,பெயர்கள் மாற்ற பட்டு தருவேன்..இல்லை நடந்த விசிங்கள் மட்டுமே வரும்..
நான் பலதடவை இடைதரகர்களால் ஏமாற்ற பட்டேன்..
அதை என் வரலாற்றில் காணலம்..
உங்கள் கருத்தை ஏற்கிறேன் தம்பி..
நான் மன்றத்தில் இணைவது மிக பெரிய காரியமும் கூட..
என் குடுமப சூழ்நிலைக்கு நான் செய்வது மிக பெரிய காரியம் பணம் கிடைத்து பொது இணையதளத்தில் வேண்டாத பல தளங்கள் இருந்து போகாமல் இங்கு என்னை ஈர்த்தது இந்த மன்றம் என்றால் அது மிகையாகாது..
நான் நண்பர்கள் இன்றி ஒரே சோகம் கலந்த சூழ்நிலையில் யாரிடம் என் கஸ்டங்களை சொல்வது என்று திரிந்த அந்த நிலையில் எனக்கு கிடைத்த அரபிரசாதம் இந்த மன்றம்..
நான் இந்த மன்றத்தில் இருப்பது எவ்வளவுகாலம் என்பதை விட என்னால் இந்த மக்கள் நன்மையடைந்தனர் என்பது தான் முக்கியம்..
நானே இங்கு உள்ள Member List பார்த்தால் பலர் தன் பெயரை மட்டுமே பதித்து இங்கு வருவதேயில்லை..
அதாவது தனக்கு என்ன கிடைக்கும் என்று இங்கு உலாவுபர்கள் அதிகம் என்று நினைக்கிறேன்..
காரணம் என்னிடம் ஒரு நணபர் தனி மடலில் பாரதியார் வாழ்க்கை குறிப்பினை கேட்டார்..
நான் சொன்னேன் “இங்கு வந்து பல நண்பர்கள் உள்ளனர்” என்று..
ஆனால் அதை அவர் என்னிடம் மூன்று முறை அனுப்பினார்.
நணபர்களே எனக்கு எதையும் மறைக்க தெரியாது..
அதனால் இங்கு என் வாழ்க்கை வரலாறு எழுதும் பாக்கியம் ,நண்பர் கமலகண்ணன் மற்றும் கவிஞர் சிப்லியே சாரும்..
நான் என் நண்பர்களே உயிரினும் மேலாக நினைத்து இங்கே எழுதுவது என முடிவெடுத்தேன்...
என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட தோல்விகள் ,வலிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளை பகிர்ந்தால் எனக்கு ஒரு ஆறுதலும்,மனதிற்க்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் ,கருத்துகள் புது தெம்பையும் தரும் ..அதேபோல் என்னை போன்று யாரும் ஏமாரவேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறேன்..
இடைதரர்கள் இடையிலே தன் வேலை கண கட்சிதமாக முடித்து எத்தனை பேரை நடுத்தெருவிற்கு கொண்டு வந்துயுள்ளனர் என்று எடுத்துக்காட்டவே இங்கு நான் என் வாழ்க்கை கதையே போட தீர்மானித்தேன்..
பெண்கள் இந்த சமுதாயத்தில் இன்னும் ஒரு போக பொருளாகவே கருதி இடைதரர்கள் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி வாழ்க்கை சின்னாபின்னாக்கி விடுகின்றனர்...
தொடர்ந்து என் வரலாற்றில் இணைந்து எனக்கு ஊக்கம் தர வேண்டிக்கொள்றேன்...
என் நன்றியும்,வாழ்த்தும்..
தொடர்ந்து வந்து கருத்து தாருங்கள்...

அனுராகவன்
11-04-2008, 07:19 AM
தொடர்ச்சி...
என்னை ஒரு இந்திய குடும்பம் பணிப்பெண்ணாக அழைத்து தன் வீட்டிற்கு உள்ளே நுழைந்தோம்..
அந்த வீடு மிக பெரிய ஐந்து ரூம் பிளாட் என்று நினைக்கிறேன்..
அதில் அவர்கள் தன் வேலை உண்டு .வீடுயுண்டு இருக்கவே மாட்டார்கள்..
இங்காவது சென்று வீடு திருப்புவது இரவு 12 கூட ஆகும்..
அதுவரை நான் சிலநாட்கள் காத்திருந்தேன்..அவர்கள் என்னை ஒரு வேலைகாரி அதிகம் உரிமைகிடையாது என்று ஏழனமாக நடத்தினர்..
எனக்கு ஒரு ஐந்து நிபந்தனைகள் போட்டனர்..
அதில் வீட்டை விட்டு எந்தகாரணம் கொண்டு வெளியில் போக கூடாது..
தங்க ஒரு மூளையில் சிறிய இடம் ...எனக்கும் அது போதும் என்றே தோன்றியது...
வேலை எந்த வேலையும் முடித்துதான் தூங்க வேண்டும்..
காலையில் ஆறு மணிக்கு சமைக்கனும்,ஒரு வயது கைகுழந்தையும்,ஒரு வயதான தாத்தாவையும் பார்த்துக்கொள்ள வேண்டும்..
செலவு எதனை செய்ய கூடாது...உணவுகள் செய்ய பட்டியல் முன்னதாகவே கொடுக்க வேண்டும் என்று நீண்டுக் கொண்டே...
நான் அப்போது ஒரு வாரம் எந்த வித பிரச்சனையின்றி சென்றது..
வீட்டின் முதியவர் ஒரு நாள் காணாம போகவே எனக்கு பயமும் ,பதற்றமும் அதிகரித்து என்ன செய்வது என்று கைகுழந்தையோடு வீட்டில் இருந்தேன்..
அவர்கள் போன் மேல் போன் நான் எங்கு கண்டு தேடுவது,..
நான் எப்படி முதியவரை தேடுவேன்.. அன்று இரவு முதியவர் வீடுத்திரும்பினார்..
அப்போதுதான் எனக்கு மூச்சே வந்தது..அதுவரை என் வேலை போயிடுமே என்று அழுது புலம்பினேன்..
கடவுள் என் பக்கம் இருந்தார் போல..
அவர்கள் வந்தவுடன் முதயவரை கேட்டதற்கு லாட்ரி(TOTO) சீட் வாங்க சென்றதாக சொன்னார்..
வீட்டில் என்னையே குறைகூறினார்கள்..ஏன் அவரை பார்த்துக்கொள்ளவில்லையென்று..
நான் சொல்வதை கேட்டவேயில்லை யாருமே..
உடனே என் ஏஸென்சிக்கு போன் அடித்து உடனடியாக மாற்ற சொன்னார்கள்..
அந்த வீட்டின் அப்பா என்னை இப்படி இனி நடக்க கூடாது என்று எனக்கு சாதகமாக சொன்னார்..நானும் தலையாட்டினேன்..
அதற்கு அப்பரம் இரண்டு மாதம் சென்றது..மூன்றாவது மாத துவக்கத்திலே மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்தது.
அந்த வீட்டில் பணம் காணாம போயிருந்தால் எல்லாரும் வீட்டில் கூட்டும் போது நான் எடுத்திருப்பேன் என்று அனைவரும் ஒருவர்மேல் ஒருவராக குற்றம் சாட்டினர்..
நான் என் விதியெ நினைத்து நொந்து அழுதேன்..
எடுக்கவேயில்லை என்று சத்தியம் செய்யும் அளவிற்க்கு போயிவிட்டேன்..
உடனே அந்த மாதயிறுதில் என் வேலையே முடிக்கும் முடிவே என்னை கேட்காமாலே ஏஸெண்டும்,உரிமையாளரும் அழைத்து என்னை ஏஜெண்ட் ஆபிஸில் விட்டு நாளை பயணம் நீ ரெடியாக விமான நிலையம் செல்ல வேண்டும் கூறி அனுப்பினர்..
அதோடு என் முதல் வேலை ஒரு முடிவிற்க்கு வந்தது..
நான் என்ன குற்றம் செய்தவளா..
அடுத்த தினம் ஊரை அடைந்தேன்..
அதற்கு பிறகு ......
தொடரும்.................

Keelai Naadaan
11-04-2008, 08:37 AM
சகோதரி,
உங்களின் வெள்ளை மனம், போராட்ட குணம், பரந்த மன்ப்பான்மை இவையெல்லாம் உங்கள் மேல் மதிப்பை கூட்டுகிறது.

க.கமலக்கண்ணன்
11-04-2008, 10:50 AM
அனு நீங்கள்

அடைந்த வேதனைக்கு

அளவே இல்லை போலிருக்கறது

அத்தனையும் மிக

அசர கால மனிதர்களால்

அவசியம் இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவு

அதனால் சிரமபடுவது

அவர்கள் மட்டும்

அல்ல மற்றவர்கள் மிகமிக

அதிகமாக நீங்கள் இங்கு இறக்கி வைக்கும் போது துன்பத்தின்

அளவு சிறிது குறைந்தாலும் எங்களுக்கு

அது மிக்க மகிழ்ச்சியே... கவலை வேண்டாம் காலம் மாறும் உங்களுக்கு...

kavitha
11-04-2008, 11:01 AM
கனத்த மனத்துடன் திரும்புகிறேன் அனு. நீங்கள் பட்ட இன்னல்கள் கண்ணீரை வரவழைக்கிறது. மற்றவர்களும் இத்தகைய இன்னல்கள் படாதிருக்கவும், உங்கள் மனப்புண் ஆறவும் தொடர்ந்து எழுதுங்கள்.


நான் இங்கு மன்றம் வருவது என் கணவருக்கே தெரியாது..
ஒரு முறை என்னை அங்கு (மன்றத்திற்கு) போக கூடாது என்று சண்டையே வந்தது..

உங்கள் சொந்த வாழ்க்கையையும் மிகவும் கவனத்தில் கொள்ளவும் அன்பு அனு.

சிவா.ஜி
11-04-2008, 12:32 PM
உங்கள் சொந்த வாழ்க்கையையும் மிகவும் கவனத்தில் கொள்ளவும் அன்பு அனு.
மிக மிக அவசியமானதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதுமான கருத்து.
தங்கை அனு...நீங்கள் அனுபவித்த துயரங்கள் ஒருபுறம் எங்கள் மனதை வாட்டினாலும், அத்தனை துயரங்களிலும், துவண்டுவிடாமல் நீங்கள் செயல்பட்டதை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது. வாழ்க்கையயை தைரியத்துடன் எதிர்நோக்கி வெற்றியடையும் உங்களை ஒரு உதாரண மகளாகப் பார்க்கிறேன். மென்மேலும் உயர்ந்து நல்ல வாழ்க்கையை என்றும் அடைய வாழ்த்துகிறேன்.

சாலைஜெயராமன்
11-04-2008, 04:39 PM
நீங்கள் திறந்த மனதோடு அனைத்தையும் கூறினாலும் ரொம்பவும் உணர்ச்சிகளைக் கொட்டாதீர்கள் சகோதரி அனு. ஏனென்றால் எழுத்தில் வடிப்பதில் கவனம் தேவை. என்னதான் இது சகோதரப் பாசத்துடன் நட்பு வட்டத்துடன் நீங்கள் பகிர்ந்து கொண்டாலும் . சில சமூக விரோத சக்திகள் பார்க்கும் வாய்ப்பும் இருப்பதால் தேவையில்லாத பிரச்சனைகளும் எழக் கூடும்.

எனவே நீங்கள் எவ்வாறு ஏஜண்டுகளால் ஏமாற்றப்பட்டீர்கள் மற்றும் சிங்கப்பூர் வேலைக்காகச் சென்று வருவது என்பது அவ்வளவு எளிதல்ல என்ற அறிவுரை நோக்கங்களை நிறைவேற்றும் சம்பவங்களை மட்டும் கொடுக்கவும்.

தேவையற்ற உங்கள் குடும்ப விஷயங்கள் உங்கள் உறவு சம்மந்தபட்ட விஷயங்கள் மிகவும் அந்தரங்கமான விஷயங்கள் போன்றவற்றை கூடியவரை தவிர்த்து எழுதவும்.

உள்ளத்துப் பாரங்களைக் கொட்டப் புறப்பட்டால் அறிவு சற்று மந்தமாகி சுயப் பச்சாதாபத்தினால் எல்லாவற்றையும் கொட்டிவிடுவோம்.

தைரியமாக இருங்கள். எல்லா அனுபவங்களிலும் பாடங்களைப் பெறுங்கள். பொதுவான இதுபோன்ற அரங்கங்களில் கொஞ்சம் கவனமாக விஷயங்களை முன்வைக்க வேண்டுகிறேன்.

என்னடா இவன் அறிவுரை சொல்லப் புறப்பட்டு விட்டான் என நினைக்காதீர்கள். ஏனெனில் பூ சொன்னது போல இது ஒரு நெடுஞ்சாலை. இங்கே நன்மையும் உண்டு தீமையும் உண்டு. விபத்துக்கள் நேரா வண்ணம் பங்கெடுப்பதுதான் அறிவுடைய செயல்.

பல அன்பர்கள் புனைப்பெயரில் இரண்டு மூன்று பேர்களின் அடையாளங்களோடு உலாவருவதாக ஏற்கனவே பொறுப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கவனம் தேவை சகோதரி.

அனுராகவன்
12-04-2008, 11:10 PM
சகோதரி,
உங்களின் வெள்ளை மனம், போராட்ட குணம், பரந்த மன்ப்பான்மை இவையெல்லாம் உங்கள் மேல் மதிப்பை கூட்டுகிறது.

நன்றி கீழைநாடன் அவர்களே!!
எல்லாம் நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள்தான் காரணம்..
நன்றி நண்பரே!!
தொடர்ந்து வாங்க..

அனுராகவன்
12-04-2008, 11:37 PM
மிக மிக அவசியமானதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதுமான கருத்து.
தங்கை அனு...நீங்கள் அனுபவித்த துயரங்கள் ஒருபுறம் எங்கள் மனதை வாட்டினாலும், அத்தனை துயரங்களிலும், துவண்டுவிடாமல் நீங்கள் செயல்பட்டதை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது. வாழ்க்கையயை தைரியத்துடன் எதிர்நோக்கி வெற்றியடையும் உங்களை ஒரு உதாரண மகளாகப் பார்க்கிறேன். மென்மேலும் உயர்ந்து நல்ல வாழ்க்கையை என்றும் அடைய வாழ்த்துகிறேன்.

அண்ணா சிவா அவர்களே!!
எனக்கு கண்களில் அழுகியாக வருது அண்ணா..
வாழ்க்கையில் பல கஸ்டங்கள் வந்தலும் அதை நான் வெற்றிக்கொள்ள என்னால் முடிந்த செயல்களை தொடர்ந்து செய்வேன்..
உங்கள் அன்புக்கு எத்துனைக்கொடுத்தாலும் ஓப்பாகாது..
எனக்கு ஏன் அண்ணா எவ்வளவு துயங்கள்..
அதுவும் அடுக்கடுக்காய் வருகின்றன... நான் ஒரு சில விரக்கியாகவும் உள்ளது...
கவலைகள் என்னை துன்புறுத்துகின்றன..நான் இங்கு வராமல் இருந்தால் ஒரு மனநோயாளியாகதான் இருந்திருப்பபேன்..
நான் மன்றம் வருவதே பல கஸ்டங்களுகிடையில் வருகிறேன்..
எனக்கு தனி கணினி கிடையாது..
நான் மன்றம் வருவது என் மாமாவின் கணினிதான் இது..
சில பொது இடத்தில் பணம்செலவு செய்துதான் வருவேன்..
நான் என் கதை சொன்னதில் கஸ்டம் குறைந்ததாக உணர்கிறேன்..
நான் வெளிபடியாக சொல்வது என் சுபாவம் அண்ணா...
தவறான செய்தியினை தந்திருந்தால் என்னை மன்னிங்கள் ..
இனி மற்றவருக்கு தொந்தரவு தர மாட்டேன்..
இது என் அன்பான வேண்டுகொள்..

அனுராகவன்
12-04-2008, 11:53 PM
நீங்கள் திறந்த மனதோடு அனைத்தையும் கூறினாலும் ரொம்பவும் உணர்ச்சிகளைக் கொட்டாதீர்கள் சகோதரி அனு. ஏனென்றால் எழுத்தில் வடிப்பதில் கவனம் தேவை. என்னதான் இது சகோதரப் பாசத்துடன் நட்பு வட்டத்துடன் நீங்கள் பகிர்ந்து கொண்டாலும் . சில சமூக விரோத சக்திகள் பார்க்கும் வாய்ப்பும் இருப்பதால் தேவையில்லாத பிரச்சனைகளும் எழக் கூடும்..
நன்றி சாலைஜெயராமன் அவர்களே!!
நீங்கள் சொவது உண்மைதான் சகோதரே!!..
நான் இத்துடன் என் வாழ்க்கை வரலாற்றை முடித்துவிடுகிறேன்..
நான் ஒரு அப்பராணி போல் சொல்லிவிட்டேன்..
என்ன செய்து என்றே தெரிய நண்பரே!!
முடிந்தளவு தவிற்கிறேன்;
தொடந்து உங்கள் அன்பு தேவை...


எனவே நீங்கள் எவ்வாறு ஏஜண்டுகளால் ஏமாற்றப்பட்டீர்கள் மற்றும் சிங்கப்பூர் வேலைக்காகச் சென்று வருவது என்பது அவ்வளவு எளிதல்ல என்ற அறிவுரை நோக்கங்களை நிறைவேற்றும் சம்பவங்களை மட்டும் கொடுக்கவும்..
சரி அவ்வாரே தருகிறேன்..
எனக்கு பல அனுபவம் இருக்கு ..
அதை அறிவுயாக தர முயல்கிறேன்..



தேவையற்ற உங்கள் குடும்ப விஷயங்கள் உங்கள் உறவு சம்மந்தபட்ட விஷயங்கள் மிகவும் அந்தரங்கமான விஷயங்கள் போன்றவற்றை கூடியவரை தவிர்த்து எழுதவும்.

உள்ளத்துப் பாரங்களைக் கொட்டப் புறப்பட்டால் அறிவு சற்று மந்தமாகி சுயப் பச்சாதாபத்தினால் எல்லாவற்றையும் கொட்டிவிடுவோம். .
மன்னித்து விடுங்கள்..
கொஞ்சம் ஆத்திரமும்,கவலைதான் காரணம்..
இனை அப்படி செய்யமாட்டேன்..
நான் மந்தமாக இருக்க மாட்டேன்...
சாரி ..


தைரியமாக இருங்கள். எல்லா அனுபவங்களிலும் பாடங்களைப் பெறுங்கள். பொதுவான இதுபோன்ற அரங்கங்களில் கொஞ்சம் கவனமாக விஷயங்களை முன்வைக்க வேண்டுகிறேன்.

என்னடா இவன் அறிவுரை சொல்லப் புறப்பட்டு விட்டான் என நினைக்காதீர்கள். ஏனெனில் பூ சொன்னது போல இது ஒரு நெடுஞ்சாலை. இங்கே நன்மையும் உண்டு தீமையும் உண்டு. விபத்துக்கள் நேரா வண்ணம் பங்கெடுப்பதுதான் அறிவுடைய செயல்.

பல அன்பர்கள் புனைப்பெயரில் இரண்டு மூன்று பேர்களின் அடையாளங்களோடு உலாவருவதாக ஏற்கனவே பொறுப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கவனம் தேவை சகோதரி.

அப்ப நான் மூன்று பெயர்கள் வருகிறேனா..
ஓ அடுத்தவர்கள் அப்படி வருதை கண்டுபிடிக்க முடியாதா..
அவர்களை உடனே நீக்க வேண்டும்..
என் நன்றி..
நீங்கள் அறிவுரை சொல்லுங்க..
அதில் நான் திருந்த எதாவது இருந்தால் அதுவே போதும்..
நான் புரிந்து கொண்டேன்..
அப்படியே ஆகட்டும்..

க.கமலக்கண்ணன்
13-04-2008, 01:40 AM
அனு மிகவும் கவனமாக உங்களை யாரு நேரடியாக தொடர்பு கொள்ள முடியாதபடி உங்களது வாழ்க்கை பாடம் அமையட்டும். தங்களை அடையாளம் கண்டு கொண்டால் விளைவுகள் எப்படி வேண்டுமாளாலும் இருக்கலாம். பூ சாலைஜெயராமன் சொன்னது போல கவனமாக எழுதுங்கள் தோழி... உங்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம்...

kavitha
26-04-2008, 07:11 AM
எனக்கு ஏன் அண்ணா எவ்வளவு துயங்கள்..
அதுவும் அடுக்கடுக்காய் வருகின்றன... நான் ஒரு சில விரக்கியாகவும் உள்ளது...
கவலைகள் என்னை துன்புறுத்துகின்றன..நான் இங்கு வராமல் இருந்தால் ஒரு மனநோயாளியாகதான் இருந்திருப்பபேன்..
நான் மன்றம் வருவதே பல கஸ்டங்களுகிடையில் வருகிறேன்..
எனக்கு தனி கணினி கிடையாது..
நான் மன்றம் வருவது என் மாமாவின் கணினிதான் இது..
சில பொது இடத்தில் பணம்செலவு செய்துதான் வருவேன்..
அன்பு அனு,
துயரங்கள் கவலைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. அடுக்கடுக்காய் உங்களுக்கு நேர்வது உங்களைப்பக்குவப்படுத்துவதற்கே என்று ஏன் நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது?
ஒரு சிலருக்கு பணக்கஷ்டம், ஒரு சிலருக்கு மனக்கஷ்டம், ஒரு சிலருக்கு உடல் உபாதைக் கஷ்டங்கள் என ஏதேனும் இருக்கும். தன் குழந்தையின் இதய அறுவைச் சிகிச்சைக்காக அல்லாடுகையில் பணியீட்டுத்தொகையும் கிடைக்காமல் அழுத என் தோழி இன்னும் என் கண்முன்னே நிற்கிறார்.
வேலை போய், பணமும் கையில் இன்றி கண்முன்னே தன் குழந்தை படும் துயரம் எத்தனை கொடியது நினைத்துப்பாருங்கள். நண்பர்கள், குடும்பத்தினர் உதவியுடன் ஒரு அறக்கட்டளை அறுவைச்சிகிச்சைக்கு பாதி பணம் வழங்க குழந்தையின் உடல்நலம் இப்போது பரவாயில்லை.
உங்கள் உடல்நலனை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள். அது முதல் பலம். உங்களது தேவைகளைப்பூர்த்தி செய்யுமளவிற்காவது பணம் கிடைக்கும் நல்ல வேலை விரைவில் கிடைத்துவிடும். நிச்சயம் எங்களோடு மனமகிழ்வோடு நீங்கள் உரையாடும் அந்த நாளை எதிர்ப்பார்த்துக்காத்திருக்கிறேன். அதுவரை இணையதள சென்டர்களுக்கு சென்று பண விரயம் செய்யவேண்டாம். தாளில் மட்டும் எழுதிவையுங்கள். இது என் அன்பு ஆலோசனை.

அனுராகவன்
28-04-2008, 03:16 AM
இணையதள சென்டர்களுக்கு சென்று பண விரயம் செய்யவேண்டாம். தாளில் மட்டும் எழுதிவையுங்கள். இது என் அன்பு ஆலோசனை.
நன்றி கவிதா அவர்களே!!
அவ்வாரே செய்ய விரும்புகிறேன்..

பாலகன்
03-05-2008, 10:39 AM
அன்புள்ள அனு

வார்த்தைகள் வரவில்லை- கண்கள் குளமாயின

வருத்தத்துடன்
பில்லா

பூமகள்
03-05-2008, 11:48 AM
அனு அக்கா,

துயரங்கள் ஏராளம்.. அதை கிளறக் கிளற மேலும் உயரமாகி நம்மை அமுக்கப் பார்க்கத்தான் செய்யும்.. அப்படியே விட்டுவிடுங்கள்..!! நல்சிந்தனையூட்டும் படைப்புகளைப் படியுங்கள்..!!
மெல்லிசை கேளுங்கள்..
அந்த துன்பங்கள் உரமாகி அதில் பூங்காவனம் மலரும்..!!

பொதுவான இடங்களில் நம் சொந்த வாழ்வுக்கு இடையூறு வராத சம்பவங்களைப் பகிர்ந்து மன ஆறுதல் பெறலாம். ஆனால், சுயசரிதை என்று ஒரு முழு வாழ்க்கையையும் எழுத இன்னும் காலமிருப்பதாகவே நான் எண்ணுகிறேன்..!!

ஏனெனில், நாம் எழுதும் படைப்பு... சரித்தரமாக வேண்டும் இல்லையா??!!:rolleyes: அப்போது சரித்திரம் முதலில் வாழ்க்கையில் நாம் படைக்கனுமே.....!! :icon_ush:

சரித்திரம் படைப்போம்.. தானாக சரிதம் பிறக்கும்..!!:icon_b::icon_b:

இப்படி சொல்வதால், எழுத வேண்டாம் என்று சொல்வதாக எண்ண வேண்டாம் அனு அக்கா.

துயரங்கள் எல்லோருக்குமே உண்டு... அதைப் பற்றியே நினைத்து நிகழ்காலத்தை வீணாக்க வேண்டாமே என்று சொல்கிறேன்..!!

எத்தனை பெயரில் ஒருவர் வந்தாலும்..(கவனிக்க.. வரக் கூடாது என்ற மன்ற விதிமுறை இருக்கிறது.. பொறுப்பாளர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் அந்த குறிப்பிட்ட நபர்கள் மேல்) அவரின் மனம் பொறுத்தே நன்மை தீமை விளைகிறது..!!

வினை விதைத்தவன்.. வினை தானே அறுப்பான்??!!

அனு அக்கா,
கவலை விடுத்து.. சுயபச்சாதாபம் வரக் காரணமான பதிவுகளைத் தவிருங்கள். புதுத் தெம்புடன் முன்னேறுங்கள்..!!

நம் வாழ்க்கை முழுக்க நமக்கு வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் பாடங்கள் ஏராளம்.. நமக்குத் தேவை..
நிதானம்...
கற்கும் பக்குவம்..
அவதானிப்பு..!!

வெற்றியும் சந்தோசமும் உங்களுடையதாக வாழ்த்துகள் அனு அக்கா.

சாலைஜெயராமன்
03-05-2008, 01:06 PM
அப்ப நான் மூன்று பெயர்கள் வருகிறேனா..


பூமகள்

சகோதரி அனு என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் மேலே எழுதியிருப்பதில் எனக்கு சற்றுக் குழப்பம் விளைகிறது.

அனுவும் இரண்டு மூன்று பெயர்களில் எழுதுகிறார்களா? சற்று விளக்கவும்,

பெண்களுக்கு எக்காலத்திலும் சுயபச்சாதாபம் வரக்கூடாது. அப்படி வந்தாலும் ஆண்களிடம் எக் காரணம் கொண்டும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பது என் கருத்து. நல்ல ஒரு பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.

சகோதரி அனு அவர்களின் வாழ்க்கை வளம் பெற அனைவரும் வாழ்த்துவோம்.

பூமகள்
03-05-2008, 01:53 PM
பூமகள்

சகோதரி அனு என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் மேலே எழுதியிருப்பதில் எனக்கு சற்றுக் குழப்பம் விளைகிறது.

அனுவும் இரண்டு மூன்று பெயர்களில் எழுதுகிறார்களா? சற்று விளக்கவும்,
அன்பின் ஜெயராமன் ஐயா,
அனு அவர்கள் தங்களின் பதிலை தவறாக புரிந்து கொண்டார்கள் என்று நம்புகிறேன். எனக்குப் புரிந்த வரையில் சொல்கிறேன். இது தவறாயின் மன்னியுங்கள் அனு அக்கா. :icon_rollout:

ஜெயராமன் ஐயா, தாங்கள் சொல்லியது, "ஒருவரே பல பெயரில் உலவுவதாக தெரிகிறது. ஆகையால், சொந்த வாழ்க்கை பற்றி அதிகம் சொல்லி, ஆபத்தை விலைக்கு வாங்காதீர்கள்" என்று உங்கள் பாணியில் பொதுவாக பாசத்துடன் சொன்னீர்கள். அதை அனு அவர்கள், தன்னைச் சொல்வதாக தவறாக புரிந்து கொண்டார்கள் என நினைக்கிறேன்.:icon_ush:

மேலும், எத்தனை பெயர்களில் வருகிறார்கள் என்பது பற்றி பொறுப்பாளர்கள் தான் கண்டறிய இயலும். நானும் தங்களைப் போலவே புரியாமல் நிற்கிறேன்...!! :icon_ush:

விகடன்
03-05-2008, 02:15 PM
என் பெயர் அனு. என் வீட்டில் என்னை ”அம்மு” (அ) ”அனுஷா” என்றே அழைப்பார்கள்..
[/B][/COLOR]

அனு என்னும் பெயரை விரித்து அனுஷா என்று கூப்பிடுவது சற்று வித்தியாசமாகத்தன் இருக்கிறது. உங்கள் வாழ்க்கையை பற்றி சொல்கிறீர்கள். கட்டாயம் சோகமும் சாதனைகளுக் இருக்கும் என்று நினைஇக்கிறேன். முழுவதுமாக படித்துமுடித்துவிட்டு பின்னூட்டமிட அரம்பித்தால் நன்றாக இருக்கும். இது சும்ம ஒரு "டச்" இற்குத்தான் :)

அமரன்
03-05-2008, 02:28 PM
எப்படித்தான் திட்டமிட்டாலும், நிதானமாக நடந்தாலும் வாழ்க்கை திசைமாறிச்செல்லும் சாத்தியங்கள் உள்ளது. நம்மை அறியாமல் நாம் இழைக்கும் சிறுதவறும் இதற்குக் காரணமாக இருக்கலாம். அப்படியான நிகழ்வுகளையும் உள்ளடக்கியதுதான் வாழ்க்கைச் சரிதம். தவறுகளையும், அவமானங்களையும் இன்னபிற கௌரவக்குறைச்சல் என்று வரையறுக்கப்பட்ட விடயங்களையும் சபையில் போட்டுடைக்க எல்லாராலும் முடியாது. அப்படியானவையை கடந்து செல்லாதொரும் கிடையாது. மனச்சாட்சிக்கு துரோகமிழைக்க ஒப்பாத காரணத்தாலாலேயே பலர் சுயசரிதம் எழுதுவதில்லை. (இது பொதுவான என் கருத்து. யாரையும் காயப்பட்டுத்தினால் மன்னிக்க). உண்மையை எழுதும் அனுவுக்கு வந்தனம். உங்களை அடையாளம் காணக்கூடிய வகையில் எழுதி இருந்தால், நீங்கள் பாதிப்படையக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் எனது கண்டனம்.

அனுவின் சுயசரிதையைப் படித்து, நெகிழ்ச்சியுடன் சகோதர பாசத்துடன் அரவணைக்கும் உள்ளங்களுக்கு அனு கொடுக்கும் பதில்களும், அப்பதில்களுக்கு மன்ற உறவுகள் கொடுக்கும் பதில்களும் திரியின் பயணப்பாதையை திசை திருப்பாதிருக்க வேண்டும். இலக்கை எட்ட தடையாக இருக்கக் கூடாது. இரகசியங்கள் சில இரகசியங்களாகவே மடிவது அனுகூலமானது.

Keelai Naadaan
03-05-2008, 06:58 PM
அனு அக்கா,

கவலை விடுத்து.. சுயபச்சாதாபம் வரக் காரணமான பதிவுகளைத் தவிருங்கள். புதுத் தெம்புடன் முன்னேறுங்கள்..!!

நம் வாழ்க்கை முழுக்க நமக்கு வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் பாடங்கள் ஏராளம்.. நமக்குத் தேவை..
நிதானம்...
கற்கும் பக்குவம்..
அவதானிப்பு..!!

வெற்றியும் சந்தோசமும் உங்களுடையதாக வாழ்த்துகள் அனு அக்கா.


பூமகளே நீங்கள் சொன்னதையே நானும் வழி மொழிகிறேன்.

(பூமகளே உங்களை இளையவர் என்றுதான் நினைத்திருந்தேன்.
இங்கே யார் வயதில் மூத்தவர்கள் இளையவர்கள் என்றே தெரியவில்லையே.. யாரையாவது மரியாதை குறைவாக குறிப்பிட்டு விடுவோமா என்ற அச்சம் ஏற்படுகிறது. தயவு செய்து பெயர் சொல்லி அழைப்பதை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்)

வெற்றியும் சந்தோசமும் உங்களுடையதாக வாழ்த்துகள் அனு அக்கா.

விகடன்
03-05-2008, 08:31 PM
உங்கள் பதிவுகளை தகுந்த நேரம் எடுத்து இப்போதுதான் படித்து முடித்தேன். பணிப்பெண்கள் என்று வேலைக்குப்போய் பலர் வாழ்க்கைகள் சின்னாபின்னமாக்கப்படுவதை நானும் அறிந்திருக்கிறேன். பல பத்த்ஹிரிகைகளிலும் படித்திருக்கிறேன். பலர் வாழ்க்கை அழிக்கப்பட்டாலும் அவர்களில் மிகச் சொற்பளவிலானோரே உங்களைப்போல முன் வந்து தாங்கள் அடைந்த இன்னல்களை மனம் விட்டுச் சொல்லி மற்றவர்களையும் எச்சரிக்கின்றனர். இது ஒரு வகையில் பொது நலமும் கூட.

தொடருங்கள். ஆனால் காக்கப்பட வேண்டிய இரகசியங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

அனுராகவன்
04-05-2008, 12:18 AM
நன்றி நண்பர்களே!!
உங்கள் ஆறுதல் வார்த்தைகள்,கருத்துக்களை முழுமையாக ஏற்கிறேன்..
என் வாழ்க்கை மற்றவருக்கு ஒரு எடுத்துக்காட்டு அவ்வலவே!!
இனிநான் என் இரகசியங்களை போடவோ ,காட்டவோ மாட்டேன் என உறுதிகூறுகிறேன்..
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,நன்றிகள்..