PDA

View Full Version : தமிழைக் கொலைபண்ணும் தமிழ்ப்பட பாடலாசிரியர்களுக்கு....ஒரு தெனாவட்டுக்கடிதம்rambal
04-04-2003, 11:57 AM
தமிழைக் கொலை பண்ணும் தமிழ்ப்பட பாடலாசிரியர்களுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்

என் அருமை தங்கிலிஷ் (tanglish) பாடலாசிரியர்களுக்கு,
நொந்து போன தமிழ்க்காதலன் எழுதிக்கொள்வது,

எதுகை மோனைகளும் இரட்டைக்கிளவிகளும்
அழகான சந்தங்களும் அடுக்குத்தொடருமாய் இருந்த
தமிழ்ப்பாடல்கள்
கோக்கக்கோலா குடிச்ச நிலாவாகவும்
புரியாத ஆங்கில ரேப் பாடல்களின் இடைச்சொருகல்கள் நிறைந்ததாகவும்,
இப்படி தேங்கிய குட்டையாக
சீர்கெட்டுப் போய்விட்டது...

தமிழுக்கு தண்ணீர் ஊற்றினேன்,
தமிழுக்கு சோறு போட்டேன்
என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு சில கவிகள்...

கவியரசுவின் தமிழ்த்திரைப்பாடல்களில்
இலக்கியம் வாழும்...
தமிழ் துள்ளும்...
பட்டுக்கோட்டையின் பாடல்களில்
ஒரு கம்யூனிச வாசம்..
இருந்த போதும் அழகுத்தமிழ்...

சரி,

ஆங்கிலத்தை சொருகுனீங்க...
அதுக்காக தமிழை ஏன் கொலை
பண்ணுனீங்க...

புரியாத வார்த்தைகள்...
உட்டாலக்கடி...
முக்காலா முக்காப்புலா...
இப்படி
புதிய கண்டுபிடிப்புகள்...

சரி தமிழைக் கொலை பண்ணியாச்சு...
அதோட நிறுத்தியிருந்தாப் பரவாயில்லை...

காமமும் காதலைப் போன்று
அழகானது...
வள்ளுவன், கம்பன், இளங்கோ
இவர்கள் வரிசையில்
இவர்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும்
தனக்குத் தெரிந்த வகையில்
கண்ணதாசன், மற்றும் பலர்...
அதைக் கொச்சப்படுத்தி...
இலை மறை காயாக இருந்தால் தான் அழகு...
எல்லாத்தையும் அவுத்தாச்சுன்னா?

சரி,
காமத்தையும் கொச்சைப்படுத்தியாச்சு...

அதற்கு அப்புறம்...
நம் நாட்டுப்புறப்பாடல்கள்...
அது என்ன பண்ணுச்சு உங்களை...
உருப்படியா இருந்ததையும்
தேடிப்பிடிச்சு கொண்டு வந்து
துரியோதனன் சபையில் நின்ற பாஞ்சாலியாக்கிட்டீங்க....
இதோட நின்றிருந்தாப் பரவாயில்லை...

நல்ல கவிஞர்கள் நாலு பேரு..
அவங்க பாட்டுக்கு ஒதுங்கி இருந்தாங்க...
அவங்களையும் வம்புக்கிழுத்து
சினிமாக்கு பாட்டெழுதத் தெரியுமான்னு ஒரு நையாண்டி வேற...
இந்தக் கண்றாவியெல்லாம் வேண்டாம்னுதானே
அவங்க ஒதுங்கி இருக்கிறாங்க...
அவங்களையும் சினிமாக்கு கொண்டு வந்து
உங்களைப் போல ஆக்கனுமா?

முடிந்தால் எழுதுங்கள்..
இல்லை நிறுத்திக் கொள்ளுங்கள்...

மற்றவை அடுத்த கடிதத்தில்...

சரி வர்ட்டா...

இப்படிக்கு,
நொந்து போன தமிழ்க்காதலன்..

இளசு
04-04-2003, 12:54 PM
காலமாற்றம், கடும்போட்டி
(விக்கிரமன் எல்லாம் ஒரு காட்சிக்கு ஒன்பது பேரை எழுத வைத்து
கவிஞர்களை மிட்டாய்க்கு அலையும் சிறுவர்களாய்ச் சிறுமைப்படுத்தியவர்களில் ஒருவர்)
பொருளாதார, ஜெயித்துக் காட்டவேண்டிய ஒப்பந்தம்....இவை பா.விஜய், பழனிபாரதி, நா. முத்துக்குமார், கபிலன் போன்ற நல்ல இளம் கவிஞர்களையும்
கூவ நடைக்கு அடிக்கடி இழுத்துவிடுகிறது.
ஆனாலும், விகடன், கவிதைத் தொகுப்புகளில் இவர்களின் ஆழ்மன வேட்கை, லட்சியம், பற்று நிரம்பிய பாடல்களைப் படிக்கும்போது....

சிலை வடிக்கும் உளி அம்மிக்கொத்த போன..கவிக்கோவின் வரிதான் நினைவுக்கு வருகிறது...
சரவணபவனே ஆம்பூர் பிரியாணியும் ஒருபக்கம் போடுவது போல, இது நெருடினாலும்
வாரம் முழுக்க சைவம், வார இறுதியில் அசைவம் என்று சாப்பாட்டில்
வகைபிரித்த ருசி மாதிரி, "சரியான" மனநிலையில் இந்த அலம்பல் பாட்டுகளையும் அவ்வப்போது மனம் ரசிப்பதை இல்லை என்று மறுக்கமாட்டேன்.
குரங்கும், கவரிமானும் ஒன்றாய் வாசம் பண்ணும் விசித்திரக் காடு என் மனம்....

மேலும்,பொருளாதார, வெற்றி நிர்ப்பந்தங்களுக்கு
அயல்நாடு வந்த என்னைத் தாண்டியும் எடுத்துக்காட்டு வேண்டுமா....
ராம்.....
சொல்லுதல் யார்க்கும் எளிய.....

rambal
04-04-2003, 02:55 PM
அப்படியானால்
கவிக்கோ ஏன் போகவில்லை..
வைரமுத்து
அத்தனை சவால் விட்டும்
அம்மி குத்த சிற்பி எதற்கு?
என்று ஒதுங்கி இருக்கவில்லையா?
கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், மனுஷ்யபுத்திரன்..
இன்னும் இந்தப் பட்டியல் தொடரும்...
இவர்கள் கவிஞர்கள் இல்லையா.
திரைப்படங்களுக்கு எழுதாமலே
புகழ் அடையவில்லையா?
சரி..
கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை...
இவர்கள் எல்லாம் திரைப் படங்களுக்கும்
பாடல் எழுதினார்கள்..
அதில் ஏதும் விரசமோ அல்லது தமிழைக் கொல்லும்
வரிகளோ இல்லை..
அவர்கள் பாடலாசிரியர்கள் இல்லையா?
பின் இவர்கள் மட்டும் ஏன்?
இதுதான் என் கேள்வி..
நாரசாரமாய் வந்து விழும் வார்த்தைகள்...
அநியாயத்திற்கு ஆங்கிலக் கலப்பு...
திரையரங்குகளுக்குத்தான் குடும்பத்துடன் சென்று
படம் பார்க்கமுடியவில்லை என்றால்
பாட்டும் கேட்க முடியாத சூழ்நிலை.
எல்லா படத்திலும் ஒரு காமரசமான பாட்டு.
அதை சொல்லும் விதம் கொச்சையாக பச்சையாக..
அதைத்தான் இந்தக் கடிதத்தில் புலம்பி இருக்கிறேன்..மேலும்,பொருளாதார, வெற்றி நிர்ப்பந்தங்களுக்கு
அயல்நாடு வந்த என்னைத் தாண்டியும் எடுத்துக்காட்டு வேண்டுமா....
ராம்.....
சொல்லுதல் யார்க்கும் எளிய.....

நான் வெளி நாடு வந்தது தனிக்கதை.
அது ஒரு நிர்பந்தம்.
இன்று கூட நான் திரும்பிப் போகவே ஆசைப்படுகிறேன்..

rambal
04-04-2003, 02:58 PM
தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற எண்ணத்தில் தான் இந்த பதிலை எழுதினேன்..
மற்றபடி தவறிருந்தால் இந்த சிறியவனை மன்னிக்கவும்..

Narathar
07-04-2003, 12:30 PM
தமிழ் என்ன மரமா நான் தண்ணீர் ஊற்றி வளர்க்க....
என்று கேற்கிறார்களே சினிக்கவிகள்!!

gankrish
07-04-2003, 12:44 PM
ஐயோ ராம்பால் இதில் நான் இல்லையே..... :lol: :lol:

rambal
07-04-2003, 04:38 PM
ஐயோ ராம்பால் இதில் நான் இல்லையே..... :lol: :lol:
கண்டிப்பாக நீங்கள் இல்லை..
நீங்கள் ஏன் உட்டாலக்கடியாக
திரைப் பாடல்களை மாற்றி எழுதக் கூடாது? (கவிப்பேரரசு காத்தவராயன் மாதிரி.. நான் எழுதினால்தான் பிரச்சினை. நீங்கள் எழுதலாமே?)

மன்மதன்
11-04-2004, 07:42 AM
டேக் இட் ஈஸி ஊர்வசி..