PDA

View Full Version : சாகும்நாள் தெரியுமா??அனுராகவன்
05-04-2008, 05:05 AM
உங்களுடைய பிறந்தநாள் உங்களுக்கு தெரியும்... நீங்கள் சாகும்நாள் உங்களுக்கு தெரியுமா...??
இதோ இங்கே...

http://www.deathclock.com/

இதை என் நண்பர் எனக்கு அனுப்பியது..
எப்படி உள்ளது..

சுகந்தப்ரீதன்
05-04-2008, 06:54 AM
Sunday, November 7, 2055

ம்ம்ம்ம்... என்னோட இறப்புதேதி இதுதானாம்.. அந்த கடிகாரம் சொல்லுது...!!

யக்கா... ஏங்காக்கா இப்பிடி அனுகுண்டு சேதியல்லாம் போட்டு ஆளை பயமுறுத்துறீங்க...!! நல்லசேதி ஏதுனா இருந்தா போடலாம்ல.. இப்ப இறப்ப தெரிஞ்சி என்னாகாப்போகுதாம்... அதுபாட்டுக்கு வரநேரத்துல வந்து கூட்டிட்டு போகட்டுமே..!!

ஓவியன்
05-04-2008, 07:00 AM
அட இப்படி வேற கிளம்பிட்டாங்களா, தங்கள் கடிகாரம் காட்டுவது சரியாக இருக்க வேண்டுமென்பதற்காக கொலை கூட பண்ணுவாங்களாமே, உண்மையா அனு......?? :D:D:D

அமரன்
05-04-2008, 07:45 AM
புகைப்பிடித்தல் ஆயுளைகுறைக்கும் என்று எடுத்துச் சொல்றாங்க. புகைப்பிடித்தலுக்கு எதிரான நல்நடவடிக்கை என்று நினையுங்கள்..

பென்ஸ்
05-04-2008, 08:15 AM
எனக்கும் இந்த கடிகாரம் காட்டும் நாள் வரை வாழ ஆசைதான்..
அதுவரை இந்த உலகம் இருந்தால்...
அதுவரை கடவுள் விதித்து இருந்தால்....

இதயம்
05-04-2008, 08:28 AM
சாகுற நாள் தெரிஞ்சி போய்ட்டா, வாழ்ற நாளெல்லாம் நரகமாயிடும் என்பது எத்தனை சத்திய வார்த்தைகள்..!! இந்த கடிகாரம் காட்டும் நாளுக்கு முன்பே இறக்கும் வாய்ப்பிருந்தும், அந்த வாய்ப்புகளை தாண்டி அதிகம் காட்டும் நாட்கள் கூட மனிதனை நிச்சயம் மரணம் கிலிப்படுத்தும்..! உலகில் மரணம் என்பது தவிர்க்க முடியாததது என்பது மட்டும் இல்லாது போனால் உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். நிறைய பேரை மரண பயம் நல்லவர்களாக நடக்க வைக்கிறது. அதற்கும் அடங்காத சிலரை அந்த மரணமே இறுதியில் அடக்கி விடுகிறது.

மனிதனின் மரண பயத்தை கிளறி விட்டு நல்வழிப்படுத்த அமைக்கப்பட்ட ஒரு யுக்தியாகவே இந்த மரண கடிகாரத்தை கருதுகிறேன்..!! சுட்டிக்கு நன்றி அக்கா.!!

சிவா.ஜி
05-04-2008, 11:20 AM
நானும்தான் பலவகையிலும் முயற்சி செஞ்சிப் பாத்தேன்....சாகற நாளைத் தெரிஞ்சிக்கலாம்ன்னு....எல்லா விவரத்தையும் பூர்த்தி செய்தும் விடை வரமாட்டேங்குதே....கடிகாரமே கன்ப்யூஸ் ஆயிடிச்சா....சரிதானே
பிறந்த தேதியே தெரியாது.....அப்புறம் உனக்கெதுக்கு இறக்கும்தேதின்னு சொல்லுதோ...?

ஆதி
05-04-2008, 01:05 PM
நான் சாக இன்னும் 3 நாள் இருக்காம்..

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு :D

பூமகள்
05-04-2008, 01:27 PM
நான் இந்த விளையாட்டுக்கே வரலை..!!
சாகுறதப்பத்தி யோசிப்பது கூட நேர வீணடிப்பு தான்..!!
இயற்கை எப்போது என்னை தன்வயமாக்குமோ... அது அதன் படி செய்யட்டும்..!!
இடையில் நாம் யார் இதனை கணிக்க??!!

பூ எஸ்கேப்...!!

அன்புரசிகன்
05-04-2008, 01:35 PM
சாகும் நாள் தெரிஞ்சா வாழும் நாள் நரகமாயிடும்..........

இது நான் சொன்னதல்ல.... ஆனாலும் அதில் முழு உண்மையும் உண்டு.............

மனோஜ்
05-04-2008, 03:27 PM
என்ன கொடுமையிது சாகுரத்துக்கு இன்னும் 100 வருடம் இருக்காம் யாருகேட்டா 100 வருடம் ஹஹஹ சும்மா

அறிஞர்
06-04-2008, 10:14 PM
வாழும் வரை.. சந்தோசமாக இருப்போம்..

இறப்பு நாள் தெரிந்து என்னச் செய்யப்போகிறோம்.

ஆமாம் அனு.. உங்களுக்கு என்ன தேதி வந்தது...

reader
08-04-2008, 01:51 PM
சாகுற நாள் தெரிஞ்சுட்டா வாழுகிற நாட்கள் நரகமாயிரும் இதை யாரோ ஒரு அறிவாளி சொன்னது.. அதனால இதை எல்லாம் நாம் அப்படியே ஸ்கிப் பண்ணிட்டுப் போயிகிட்டெ இருக்கலாம்

இதயம்
08-04-2008, 02:29 PM
சாகுற நாள் தெரிஞ்சுட்டா வாழுகிற நாட்கள் நரகமாயிரும்
இதை இந்த திரியில் இன்னும் எத்தனை பேரு சொல்வாங்கன்னு நானும் பார்க்கிறேன்...!!!

அக்னி
08-04-2008, 08:54 PM
அண்மையில் மரணித்த ஒருவரின் விபரங்களைச் சோதனை செய்தேன். விபரங்களை மாற்றியும் பரிசோதித்தேன். பரிசோதித்ததில், மரணக் கடிகாரத்தின் கூற்றுப்படி, குறைந்தது இன்னமும் 8 ஆண்டுகளேனும் அவர் உயிர் வாழ வேண்டும். ஒரு வேளை மறுபிறவி எடுத்துவிட்டாரோ...?
அமரன் கூறியது போல, புகைத்தலுக்கு எதிரான ஒரு வித்தியாசமான பிரச்சாரம் என்பதே உண்மை...

ஓவியா
08-04-2008, 09:06 PM
மக்களே இந்த திரியின் தலைப்பை பார்த்ததுமே, இந்த திரிய திறக்கவே கூடாதுனு நினைத்தேன்..... ஆனாலும் மனிதன் மனம் ஒரு குரங்கள்ளவா!!!! அதுவும் வாலு ஓவியின் மனம் சுட்டிக்குரங்கள்ளவா :D:D

திரியை திறந்தேன் ஆனால் அப்பக்கம் செல்ல வில்லை காரணம், உன் மனதை நீ கட்டுப்படுத்த முடியுமா என்று என்னுள் எழுந்த கேள்வி.... அனேகமாக வெற்றிப்பெற்றும் விட்டேன்..

சாகும் திகதி தெரியாமலே நரகத்தில் வாழும் மக்களுக்கு சாகும் நாள் தெரிந்தால் என்னவாகும்??
தற்ப்பொழுது சொட்டுகிற சோகமே போதுமடா சாமி. :redface::redface:

ஓவியா
08-04-2008, 09:17 PM
இதை இந்த திரியில் இன்னும் எத்தனை பேரு சொல்வாங்கன்னு நானும் பார்க்கிறேன்...!!!

அண்ணா,
இப்ப நான் இந்த திரியில் இதை சொன்னேனே பார்த்தீர்களா??? :eek::eek:


ம்ம்ம்கூம் பார்க்க வில்லையா, ஆமாம் சொல்வதை எப்படிலே பார்க்க முடியும். :D:D
.
.
.
.
.
.
.
வேண்டுமென்றால் எழுதுகிறேன் படித்துக்கொள்ளுங்கள்.


இதோ:
சாகும் நாள் தெரிஞ்சா வாழும் நாள் நரகமாயிடும்.


மூளை என்று பெயர் மாற்ற காத்திருக்கும்
- ஓவியா

பூமகள்
09-04-2008, 06:23 AM
திரியை திறந்தேன் ஆனால் அப்பக்கம் செல்ல வில்லை காரணம், உன் மனதை நீ கட்டுப்படுத்த முடியுமா என்று என்னுள் எழுந்த கேள்வி.... அனேகமாக வெற்றிப்பெற்றும் விட்டேன்..
நானும் தான் அக்கா..!! :icon_b::icon_b:
எப்படி இப்படி??!!! :sprachlos020::sprachlos020: :icon_rollout:

ஆச்சர்யத்துடன் அன்புத் தங்கை,

aren
09-04-2008, 06:54 AM
எனக்கு இதில் நம்பிக்கையில்லை, ஆகையால் இதை திறக்கவில்லை.

எத்தனைபேர் நம்பிக்கையுடன் இணைப்பை கிளிக் செய்திருக்கிறார்கள்.

ஜெயாஸ்தா
09-04-2008, 07:38 AM
மரணத்தைப் பற்றி தினமும் ஒரு முறையாவது சிந்திக்க வேண்டும். அது மனிதன் மனிதானக வாழ்வதற்கு வகை செய்யும். (ஹை நமக்கு 2058 வரை கெடு இருக்கு.... பென்ஸ் சொன்ன மாதிரி அது வரைக்கு இந்த பூமி உயிரோடிருக்குமா....)

சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடுமாம்..... (நானும் சொல்லிட்டேனே....) நமக்கு சாகுற நாள் முன்கூட்டியே தெரிஞ்சிபோச்சின்னு வச்சிக்கோங்களேன். ஒரு கற்பனைக்குத்தான். என்னவெல்லாம் செய்வோம் தெரியுமா?
விமானத்தில் பயணச்சீட்டு வாங்காமல் பிரயாணம் செய்வோம். செக்கிங் வந்தா அப்படியே மேலேயிருந்து கீழே குதிச்சிடுவோம்ல...!

யானை நடந்து வரும் போது எதிரே போய் நின்று அதன் தந்ததைத்ப் பிடித்து நெட்டித் தள்ளுவோம்.

தீபாவளிக்கு அமெரிக்கா போய் அணுகுண்டு வெடிப்போம். (சிவகாசி வெடிகுண்டு இல்லீங்கோ... கலாமின் உண்மையான அணுகுண்டுத்தைதான் சொன்னேன்)

வாட்டாள் நாகராஜிடம் சென்றும், 'நாம் இருவரும் ஒகேனேக்கல் நீர்வீழ்ச்சியிலிருந்து குதிச்சு, செத்து செத்து விளையாடலாமான்னு கேட்போம்....! :lachen001: :lachen001: :lachen001:

shajeen
25-08-2011, 02:12 PM
adappavigala

Ravee
26-08-2011, 01:34 AM
நான் சாக இன்னும் 3 நாள் இருக்காம்..

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு :D


தகஸ் இதை கேட்க சந்தோசமா இருக்கா .... இனிமேல துணி துவைக்கிற எபெக்ட் கொடுத்து தொல்லை பேசி வழியா பேச ஆள் இருக்காது .... ஹா ஹா ஹா ... :lachen001: :D :lachen001:

Ravee
26-08-2011, 01:37 AM
நானும் தான் அக்கா..!! :icon_b::icon_b:
எப்படி இப்படி??!!! :sprachlos020::sprachlos020: :icon_rollout:

ஆச்சர்யத்துடன் அன்புத் தங்கை,


அட பயந்தாங்கொல்லிகளா ..... :D :lachen001: :D

seguwera
26-08-2011, 10:28 PM
ஏன் இப்படியெல்லாம் கெளம்பிட்டாங்க? அமைதி படை சத்யராஜ் போல சொல்லனும்னா முதல்ல கடிகாரத்தோட பேட்டரிய கலட்டுனா கடிகாரமே செத்துப்போகும் அப்புறம் இது எங்க அடுத்தவங்க சாவப்பத்தி சொல்றது

saguna
27-08-2011, 02:33 AM
சாகும் நாள் தெரியாது...ஆனால்..வாழும் நாள் இன்பமானது...

shajeen
02-09-2011, 11:28 AM
nalla kandu pedippu .ippvay kanna kattudhay:sprachlos020:

அனுராகவன்
03-08-2012, 03:47 PM
என் நண்பன் இதை பார்த்து மிரமித்து போயிட்டான்....
சாகும் நாள் உண்மைதான் போல..