PDA

View Full Version : ஹட்சன் விரிகுடா



அனுராகவன்
05-04-2008, 01:54 AM
ஹட்சன் விரிகுடா (Hudson Bay)

கனடாவின் வட பகுதியிலுள்ள ஒரு பெரிய குடா.
இதன் நீளம் 850 மைல்கள். அகலம் 600 மைல்கள்,
பரப்பளவு 472.000 சதுரமைல்.

இதில் பல தீவுகள் இருக்கின்றன. அவற்றுள் சதாம்ப்டன் கோற்ஸ்,
மான்செல், ஒட்டாவா, போன்றவை முக்கிய தீவுகள்.

இதில் சுமார் 30 ஆறுகள் வந்து கலக்கின்றன. நெல்சன், சேர்ச்சில்
என்பன முக்கிய ஆறுகள் கழிமுகங்களில் அமைந்த
போர்ட் நெல்சன், சேர்ச்சில் என்பன நல்ல துறை முகப்பட்டிங்கள்.

குளிர் காலத்தில் கப்பல்கள் செல்ல முடியாது.
ஆண்டில் ஆறுமாத காலம் இதன் நீர் பனிக்கட்டியாகி விடும்.
வட துருவத்திற்கு மிக அருகிலிருப்பதாக அதன் காந்த சக்தி
கப்பலிலுள்ள திசை காட்டியின் காந்த முள்ளைக் கவர்ந்து
இழுத்துத் தவறான திசைகளைக் காட்டும். எனவே கப்பல்கள்
இங்கு செல்வது அபாயகரமானது.

ஓவியன்
05-04-2008, 02:15 AM
தகவல் பரிமாற்றத்திற்கு நன்றிகள் அனு.....!!

இதோ ஹட்சன் வளைகுடாவின் புவியியல் நிலை காட்டும் விளக்கப் படம்....!!


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/Cobra.jpg

அன்புரசிகன்
05-04-2008, 04:54 AM
தகவல் பகிர்வுக்கு நன்றிகள்.

mukilan
13-07-2008, 11:46 PM
கனடாவின் தலைவிதியை நிர்ணயித்ததில் ஹட்சன் வளைகுடா பெரும்பங்கு ஆற்றியுள்ளது. ஆரம்பத்தில் வெறும் தோல் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் கனடாவை ஆக்கிரமித்தது ஹட்சன் வளைகுடா நிறுவனம் (Hudson Bay Company) என்ற தோல்வியாபாரம் செய்யும் நிறுவனம் மூலம்தான். இன்னமும் கனடா எலிசபெத் மகாராணியின் ஆட்சிக்குட்பட்டதுதான். அந்த நிறுவனம் இன்றும் The Bay என்ற பெயரில் இயங்குகின்றது. அதன் பதிவுப்பெயர் Hudson Bay Company தான். தகவல்களைப் பகிர்ந்து கொண்ட அனுவிற்கும், ஓவியனுக்கும் நன்றி.

aren
14-07-2008, 02:03 AM
The Bay என்ற கம்பெனிதான் உலகின் மிகவும் பழைமையான கம்பெனி. இன்னும் இருக்கிறது. இப்பொழுது தோல் வியாபாரத்தில் இல்லை. இப்பொழுது டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மாதிரி நடத்துகிறது.

பாலகன்
14-07-2008, 02:51 AM
என் மனதிற்கு பிடித்த தகவல் இது

புவியியல் மற்றும் கடல் சார் தகவல்களை நான் மிகவும் விரும்புபவன்

நன்றி அனு தகவலுக்கு

நன்றி ஓவியன் வரைபடத்திற்கு

அன்புடன்

mukilan
14-07-2008, 02:54 PM
The Bay என்ற கம்பெனிதான் உலகின் மிகவும் பழைமையான கம்பெனி. இன்னும் இருக்கிறது. இப்பொழுது தோல் வியாபாரத்தில் இல்லை. இப்பொழுது டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மாதிரி நடத்துகிறது.

ஆமாம் ஆரென் அண்ணா. அனைத்துப் பொருட்களும் அநியாய விலை சொல்லுவார்கள்.:eek: அதே தரமுள்ள பொருட்கள் சியர்ஸில் சற்றே குறைவான விலைக்கு கிடைக்கும் (அதுகூட அதிக விலைதான்):D