PDA

View Full Version : தேவதைகளின் இல்லம்நம்பிகோபாலன்
04-04-2008, 09:29 AM
விளையாட்டாய்
பறந்தது
முப்பது வருடங்கள்

அன்று எப்படி
இருவரும் இருந்தோமோ
அப்படியே இருக்கிறோம்
இன்னும் அதிகமாய்
நம்மிடம் காதல்

குழந்தைகளில்லை
எண்ணும்பொழுதெல்லாம்
விழியோர நீரில்
குழந்தையாய் மாறி
நீ எனக்கும்
நான் உனக்கும்
புன்னகைத்து மறைப்போம்.

தத்தெடுக்க புறப்பட்டு
மழலைகளுடன் மழலாய்
மாறி
ஒன்று வேண்டாம்
அனைவரையும் வளர்ப்போம்
சொன்ன பொழுதுதான்
உதயமானது
என் தேவதை இருக்கும்
தேவதைகளின் இல்லம்...

இனி யார்
சொல்லுவார்
நமக்கு குழந்தைகள் இல்லையென்று....

ஆதி
04-04-2008, 10:19 AM
எனக்கும் இந்த ஆசை உண்டு நம்பி.. ஒரு குழந்தையை ஏனும் தத்தெடுக்க வேண்டும் என்று..

நல்லக் கரு வாழ்த்துக்கள்..

அன்புடன் ஆதி

நம்பிகோபாலன்
04-04-2008, 10:27 AM
ஆதி, இது என்னுடைய நீண்ட நாள் ஆசை, கண்டிப்பாக நிறைவேரும் என நினைகிறேன்.

செல்வா
04-04-2008, 10:42 AM
நெஞ்சைத் தொட்ட கவிதை நம்பி.... குழந்தையல்லாதோர் அனைவரும் இப்படி ஒரு முடிவெடுத்தால் அனாதை என்பதே இல்லாமல் போகும்... அருமையாக எழுதுகிறீர்கள்.. தொடருங்கள் நம்பி

ஆதி
04-04-2008, 10:46 AM
[QUOTE=செல்வா;339476] குழந்தையல்லாதோர் அனைவரும் இப்படி ஒரு முடிவெடுத்தால் அனாதை என்பதே இல்லாமல் போகும்... /QUOTE]

சரியானச் சொன்னடா..

அன்புடன் ஆதி

kavitha
04-04-2008, 10:55 AM
குழந்தையல்லாதோர் அனைவரும் இப்படி ஒரு முடிவெடுத்தால் அனாதை என்பதே இல்லாமல் போகும்... குழந்தையல்லோதோர் மட்டுமல்ல (வசதி) இருப்பவர்கள் கூட ஒன்றேனும் தங்கள் வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளலாம். நல்ல கவிதை நம்பி. எனக்கும் இந்த ஆசை உண்டு. காலம் பதில்சொல்லும் கடைசி ஆசை அது.

அமரன்
04-04-2008, 02:06 PM
நல்ல கருத்துள்ள கவிதை. தொடர்ந்து நெகிழவைத்த உயர்ந்த உள்ளங்களை உறவாகப் பெற்றதால் பெருமை. தத்து எடுப்பதிலும் கறுப்புப் பக்கம் ஒன்று சிறிதாக உளதே. நல்ல மனவாதிகளை வை(த்)து குற்றச்செயல்களைப் பெருக்கும் நிழல் உலகமும் உண்டே.

யாரோ செய்த தப்புக்கு வேறு யாரையோ தண்டிப்பதும் தப்பு. குற்றவாளிகளை ஊக்குவிப்பதும் தப்பு..

அநாதைகள் மேல் எனக்கும் கரிசனை உண்டு.. ஏன்.. தத்தெடுக்கும் எண்ணமும் உண்டு.. கூடவே நல்ல சமுதாயம் உருவாகாதிருக்க துரோகம் செய்கிறேனா என்ற நெருடலும்..

வாழ்த்துகள்.

பூமகள்
04-04-2008, 02:58 PM
அனாதைக் குழந்தைகள் தத்தெடுப்பதில் காட்டும் ஆர்வம். .அனாதைகளாக குழந்தைகள் மாறாமல் அவ்வகை இல்லங்கள் உருவாகாத நிலையை உருவாக்கவும் முனையலாமே..!!
நல் சிந்தனை அவ்வகையிலும் கொஞ்சம் வேர் விடுமானால் அழகிய நல் சமூகம் உருவாகுமே..!! ;)
-------------------------------------------
நம்பி அண்ணா கவிதை அருமை. பாராட்டுகள்.
கவிப் பொருள் பலர் மனத்தில் குடியிருக்கும் நல் விதை தான்..!! அமரன் அண்ணா சொன்னது போல.. கருத்த பக்கமும் உண்டே..!!

இவ்விரு வெள்ளைக் கருத்த பக்கங்களுடன் அப்பக்கமே இல்லாத பக்கமும் உள்ள நல்ல புத்தகம் உருவாக்குவோமே..!!

ஆதி
04-04-2008, 03:11 PM
அமரன் நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன், தத்தெடுக்கப் படுகிறவர்கள் இயற்கையின் சீற்றத்தாலோ, இல்லை போரின் காரணமாய் தாய்தந்தையரை இழந்து நாடு பிரிந்து வரும் இளம்பிஞ்சுகளாகவோ இருக்கும் பட்சத்தில் அவர்களை தத்தெடுத்தல் சரிதானே..

நான் தத்தெடுக்க நினைப்பது இப்படிப் பட்டவர்களைத்தான்..

அமரன்
04-04-2008, 03:21 PM
அதேதான்.. ஆதி.. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாயிடக்கூடாது இல்லியா.. இந்த விஷயத்தில் உன்னிப்பாக செயல்படவேண்டும்..

அதே நேரம் தனி ஒருவருக்கு செய்வதைக் காட்டிலும், அந்த குழுமத்துக்கே ஏதாச்சும் நல்லதை இயலுமானால் செய்யலாம்.. ஆகக்குறைந்தது அநாதை சாதியையே இல்லாமல் செய்யவும் முயலுவோம்..

ஒரு பெண்ணை தத்தெடுத்து ஆளாக்கி, கல்யாணம் கட்டுவதுக்கு ஆகும் செலவில், ஐந்து பெண்களை படிக்க வைக்கலாம்.. கைத்தொழில்க் கல்வியாவது புகட்டலாம்.. அந்தக்கோணத்திலும் சிந்திப்பது உண்டு.. நடைமுறைப்படுத்த முடியுமா, முடிந்தாலும் நாளாகும் போன்ற காரணிகளால் அதிகமான நேரம் இதற்காக செலவிடுவதில்லை.. இப்படியான கவிதைகளை வாசித்து முடித்த சில நிமிடங்கள்தான் எனது கருத்து தேடும் காலம்..

ஆதி
04-04-2008, 03:32 PM
ஒரு பெண்ணை தத்தெடுத்து ஆளாக்கி, கல்யாணம் கட்டுவதுக்கு ஆகும் செலவில், ஐந்து பெண்களை படிக்க வைக்கலாம்.. கைத்தொழில்க் கல்வியாவது புகட்டலாம்.. அந்தக்கோணத்திலும் சிந்திப்பது உண்டு.. நடைமுறைப்படுத்த முடியுமா, முடிந்தாலும் நாளாகும் போன்ற காரணிகளால் அதிகமான நேரம் இதற்காக செலவிடுவதில்லை.. இப்படியான கவிதைகளை வாசித்து முடித்த சில நிமிடங்கள்தான் எனது கருத்து தேடும் காலம்..

இதை சில வருடங்களா செய்து வருகிறேன் அமரன், ஒரு பகுதி என் சம்பளத்தில் இருந்து இதுக்காக ஒதுக்கி வைத்துவிடுகிறேன், அப்பறம் போனஸ் ஹைக் என்று வரும் பொழுது அந்த மாதத்தின் முழுச்சம்பளமும் கொடுத்துவிடுவேன் வெறும் படிப்புக்குதான் தருகிறேன், நான் எதோப் படிச்சதால தானே கொஞ்சம் நல்லா இருக்கேன் இதுப் போல மற்றவங்களும் படிச்சா அவங்களும் நல்லா இருப்பாங்க இல்ல.. என்னைப் போலவே என்னுடைய நண்பர்கள் சிலரும் இப்படி செய்கிறார்கள்.. இது இல்லாமல் ஒரு குழந்தையையாவது தத்தெடுக்க ஆசை அவ்வளவுதான்.

அமரன்
04-04-2008, 03:35 PM
உங்களை நண்பனாக அடைந்ததில் பெருமிதம் கொள்கிறேன் ஆதி.

நம்பிகோபாலன்
04-04-2008, 05:54 PM
ஆதி நான் உங்கள் கட்சி,உதவி செய்வதில்.
அனைவருக்கும் நன்றி.

பென்ஸ்
04-04-2008, 06:50 PM
நம்பி...
உங்கள் வித்தியாசமான கவிதைகளை வாசித்து வருகிறேன்.... நல்ல கருத்து மிக்கவை....

இந்த கவிதையும் அப்படியே... பூ கூறியதுபோல் அனாதைகள் வராமல் இருக்கவேண்டும்...

ஆனால் இன்று இருக்கும் குழந்தைகளை என்ன செய்வது... காப்பகத்திலும் அவர்கள் தனியே...
இவர்களுக்கு ஒரு நேர சாப்பாடும் நன்கொடையில்...!!!! ஏன்...???

குழந்தைகளை தத்தேடுக்க எல்லோருக்கும் விருப்பம்தான்... ஆனால் நமது சமுதாய மற்றும் குடும்ப கட்டுபாடுகள் அனுமதிப்பதில்லை....

ஆனாலும் பலர் குழந்தைகளின் படிப்புக்கும், உடைக்கும், உணவிற்க்கு மட்டும் பலர் தத்தேடுத்து உதவி வருவது இன்றும் வழக்கம். முழுமையாக செய்யமுடியாதவர்கள் இப்படியாவது செய்கிறார்கள்....