PDA

View Full Version : உன்னை பிரிந்த நாட்கள்.



நம்பிகோபாலன்
03-04-2008, 12:16 PM
கண்கள் பார்த்துகொள்ள
இதயம் இடமாற
திருமண தம்பதிகளாய்
புதுவீடு புகுந்தோம்.

இல்லறமே நல்லறமாய்
உன் உருவிலேயே அழகான
குழந்தையுடன்
நம் வாழ்க்கை.

சந்தோஷம் இருந்தால்
சோகம் வரும்
நாமும் விதிவிலக்கல்ல
பொருளாதார நிலைமைக்கு.

இருவரும் வார கடைசியில்
வாழ அரம்பித்தோம்.

கருத்து வேறுபாடுகள்
அதிகரிக்க
நீ உன் வீட்டில்
வாழா வெட்டியாய்
நான் வாழ்ந்தும்
வெட்டியாய் இருக்கிறேன்.

அமரன்
03-04-2008, 05:46 PM
கண்கள் கலந்து, இருவரும் ஒருவராகி, மூவராகும் தூரம் கடக்கும் வரையான காலத்தில், புரிந்துகொண்ட நாட்கள் குறைவானதுதான் பிரிந்த நாட்களுக்கு ஏதுவானவையோ..

ஒற்றைச் சக்கரம் உருண்டும் வாழ்க்கை நகரும். இரட்டைச் சக்கரம் சுழன்றும் வாழ்க்கை நகரும். தற்கால உலகில், இரட்டைச் சக்கர சுழற்சியின் அவசியம் அதிகமானதில் தப்பில்லை. அதனால் தலை எடுக்கும் நீ பெரிதா நான் பெரிதா என்பதே இலக்கடையாதிருக்க பெரிதும் தடையாகிறது.

kavitha
04-04-2008, 11:02 AM
கருத்து வேறுபாடுகள்
அதிகரிக்கநீ உன் வீட்டில்
வாழா வெட்டியாய்
நான் வாழ்ந்தும்
வெட்டியாய் இருக்கிறேன்.
இதுதான் காதல்திருமணத்தில் வருத்தமளிக்கிறது. காதலிக்கும்போது தெரியாமலா காதலிக்கிறார்கள்? இல்லை திருமணத்திற்குப்பிறகு பொருளாதாரம் நலியாது என்பது எவ்வகையில் நிரந்தரம்?

குணம்நின்ற காதல்
பணம் தன்னால் பிரிந்திடுமோ?
இருக்கும் துயரிலே
நானும் உன் துயராய் சேர்ந்திடவோ
என்றுதானே வந்தேன்.
வசந்தகாலம் நெருங்குகின்றது
தலைவா... நாம் சேர.
மழலை நடக்கட்டும்..
நானும் உன் தோள் சேர்ந்தே
சுமை குறைத்திடுவேன்.

குறையொன்று
உன்னில் நீ கண்டாலே
பொறுத்துகொள்ளமாட்டேன்.
நான் காண்பேனா?

கருத்து வேறுபாடுகள்
காலத்தால் வேறுபடும்.
காலம் நம்மைச்சேர்த்துவைக்கும்
வசந்தகாலமே விரைவில் வா....