PDA

View Full Version : மரணித்து போன மனிதாபிமானம்



நம்பிகோபாலன்
03-04-2008, 07:34 AM
எழுந்திரு
அடி மனதின் குரல்
காதோரம் ஒலித்துகொண்டேயிருக்கிறது
வேடிக்கை பார்க்கும்
கூட்டம் கூட
உனக்கு கூடவில்லயே
நான் தான் எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலி.
என் கண்முண்ணாடி நிறைய பேர்
வந்தார்கள் போனார்கள்
அடிபட்ட ரணமோ மரணத்தை
நெருங்குகிறது....

வியர்வை துளிகளுடன்
விழிதெழுந்தேன்.
சாலையில் அடிபட்டவனை
பார்த்தும் அலுவலகம் சென்றது
மனதில் ஓடின
என் மனிதாபிமானமும்
அடிபட்டவனுடன் மரணித்து போனதோ.

kavitha
03-04-2008, 10:31 AM
வியர்வை துளிகளுடன்
விழிதெழுந்தேன்.
கனவு கண்டீர்களா? நிஜத்திலேயும் இப்படி நடக்கின்றன. ரயிலில் அடிபட்டுக் காப்பாற்றப்படாமல் உயிர்போகிறவர்கள்தான் அதிகம்.
அவசரத்தொலைபேசியில் அழைத்தாலே இப்போழுதெல்லாம் ஆம்புலன்ஸ் வருகின்றன. போலிஸ், கோர்ட் இன்னும் எத்தனை நாளைக்கு பயப்படும் இந்த மானுடம்?


எழுந்திரு
அடி மனதின் குரல்
காதோரம் ஒலித்துகொண்டேயிருக்கிறது
மிக ரசித்தேன் இந்த வரிகளை.

நம்பிகோபாலன்
03-04-2008, 10:56 AM
மிகவும் உண்மைதான் கவி.
நம்மிடையே மனிதாபிமானம் ஏன் குறைந்து போனது என்று என்மனதில் ஒரு அழமான கேள்வியாகவே இருக்கிறது.

meera
07-04-2008, 11:25 AM
உண்மை நம்பிகோபாலன், சிங்கையில் நான் கண்ணெதிரில் கண்ட ஒரு நிகழ்ச்சி. ஒரு பச் நிலையத்தின் ஒரு இடத்தில் ஒரு சிறு கூட்டம் அந்த கூட்டதில் இருந்த அனைவரும் தமிழ் முகங்கள்.கூட்டத்தில் அருகில் சென்றபோது தான் அங்கே ஒருவர் வலிப்பு நோயால் அவதிபடுவது தெரிந்தது.அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்தனரே தவிர உதவவில்லை. நானும் அவரது நிலை கண்டு பயத்தில் வேகமாய் அங்கிறுந்து சென்றுவிட்டேன். ஆனால் மனம் மட்டும் ஒருவித தாக்கத்தால் புலம்பி கொண்டிருந்தது. என் கணவரிடம் சொல்லும் போது அழுகை தான் வந்தது. அவர் எனக்கு ஆறுதல் கூறினாலும் அவர் சொன்னது இது தான்.மற்றவர் போல் நாமும் இருக்க வேண்டாம் உன்னால் அருகில் இருந்து உதவமுடியாவிட்டால் ஆம்புலென்ஸை அழைத்து தகவலாவது சொல்லிவிட்டு வா என்றார்.
அன்று நானும் மனிதாபிமானத்தை தொலைத்து தான் இருந்தேன்.

அக்னி
07-04-2008, 12:01 PM
மனித அபிமானம் இழக்கும்
மனிதாபிமானம்...
தருணத்தால் விலகுவது
தவிர்க்க முடியாதது...
தருணம் பார்த்து விலகுவது
தவிர்க்கக் கூடியது...

சிறந்த கவிதையொன்று... சிந்தையில் முழைக்கவேண்டிய விதையொன்று...
பாராட்டுக்கள் நம்பிகோபாலன் அவர்களே...

*****
சிலர் திடீர் அசம்பாவிதங்களில் செயலற்றுப் போய்விடுவார்கள். அந்த செயலறு நிலையை மீரா அவர்களின் பதிவு தெளிவுறுத்துகின்றது. எம்மேல் படரும் பதட்டம், எம்மைச் செயலற்றதாக்கிவிடுகின்றது. செய்வதறியாது திகைத்து ஸ்தம்பித்துப் போகின்றோம் அல்லது விலத்திச் செல்ல விழைகின்றோம். இது தவிர்க்க முடியாதது.
ஆனால், பின்னர் ஏற்படக்கூடிய அலைச்சல்களைத் தவிர்க்கும் நோக்குடன், தவிக்க விட்டுச் செல்வது மரணத்திற்குத் துணை போகும் நிலையே...

*****
கண்முன்னே பனி போர்த்திய தடாகத்தில் எம்மோடு வந்த இரு உறவுகளை, எம்மால் இயலாநிலையில் மரணத்திற்குக் காவு கொடுத்ததை நினைக்கையில், இப்போதும் என் மனது துடிப்பதுண்டு...

ராஜா
07-04-2008, 12:14 PM
திறனாய்வுப் புலியின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்..

உதவாமைக்கு பலநேரங்களில் சட்டத்தின் பின்விளைவுகளே காரணிகளாக அமைகின்றன.

நான் கண்ட ஒரு பதைப்புக் காட்சி...

சென்னை நெடுஞ்சாலை.. இராப்பொழுது.

சரக்குந்தில் மோதி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது ஒரு குவாலிஸ் வண்டி. அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து ஓடோடி வந்த "மிருகங்கள்", உயிருக்குப் போராடிக்கொண்டிருப்போரின் நகைகளை பிய்த்தெடுக்கின்றன.. ஒரு மூதாட்டியின் தோடு, காதுத் துணுக்குகளோடு கவரப்பட்ட கொடூரத்தைப் பார்த்ததும் எனக்கு இறைவன் இருக்கின்றானா என்றே தோன்றியது..

என்னாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை.. அவசர உதவிக்கு தொடர்பு கொண்டிருக்கும்போதே நகைகள் தீர்ந்து போக, காரின் விலை உயர்ந்த பொருட்கள் களவாடப் பட்டுக்கொண்டிருந்தன..

நாமெல்லாம் மனிதர்கள்...!

நம்பிகோபாலன்
07-04-2008, 12:29 PM
தங்கள் கருத்துக்கள் என்னை மேலும்
சிந்திக்க வைக்கிரது.
மக்கள் மாக்களாகி போனதற்க்கு
சட்டம் மட்டும்தான் காரணமா

அக்னி
07-04-2008, 01:38 PM
நாமெல்லாம் மனிதர்கள்...!
(பிணம்) மெல்லும் மனிதர்கள்...
இப்படியானவர்களைப் பிணந்தின்னிகள் என்று சொல்வதை விட வேறெப்படிச் சொல்லுவது...???

திறனாய்வுப் புலி என்று உங்கள் குரல் கேட்டு (பார்த்து) எத்தனை நாளாயிற்று... :)