PDA

View Full Version : நட்பா - காதலா



நம்பிகோபாலன்
02-04-2008, 11:30 AM
நம்மிடையே இருப்பது
நட்பா காதலா
என்று
நீ என்னிடம் கேட்ட பொழுதெல்லாம்
நட்பு என்று கூறும் உதடு
மறுக்கும் என் மனது...
ஒருவேளை நான் காதல்
என்று கூறியிருந்தால்
உடைந்துதான் போயிருக்கும்
உனக்கு நட்பு
எனக்கு வாழ்க்கை
ஆதலால்
என்றுமே சொல்லப்போவதில்லை
என் காதலை
உனது நட்பிலேயே வாழ்ந்துவிடுகிறேன்.

ஆதி
02-04-2008, 11:51 AM
காதற் பாற்கடலை
மன மேருவால் கடையும் பொழுது
முதலில் வெளிவருவது
அமுதமானாலும்
அதில் விஷமும் கலந்திருக்கும்..

அன்புடன் ஆதி

நம்பிகோபாலன்
02-04-2008, 12:03 PM
நன்றி ஆதி. அந்த விஷம் அவளின் எதிர்பார்ப்பை
மரணித்து விட்டால் வேண்டாம். எனக்கு அவளின் நட்பே போதும்

ஆதி
02-04-2008, 12:08 PM
நன்றி ஆதி. அந்த விஷம் அவளின் எதிர்பார்ப்பை
மரணித்து விட்டால் வேண்டாம். எனக்கு அவளின் நட்பே போதும்

எறியப் படலாம் என்பதால்
எரிய துணிந்துவிட்டீர்கள்
புரிந்தது..

என் பதில் இருவருக்கும் பொருந்தும் நம்பி..

அன்புடன் ஆதி

சிவா.ஜி
02-04-2008, 02:35 PM
இந்த மதில் மீது நடக்கும் பூணையாகத்தான் பல நட்புகள் நகர்கின்றன. சில மௌனம் உடைத்து மலரும்....சில உடைக்கப்படாமலேயே...உள்ளுக்குள் உருகும்.

வாழ்த்துகள் நம்பி.

ஷீ-நிசி
02-04-2008, 02:45 PM
ரொம்ப நல்லாருக்கு நம்பி..

உனக்கு வேண்டுமென்றால் இது நட்பாகவே இருக்கட்டும்.
எனக்கு இது காதல் மட்டுமே...

என் காதல் ஒருபோதும் நட்பாக மாறாது.
உன் நட்பு காதலாகும் அந்த நாளுக்காக

காத்திருக்கிறேன்....
இதழில் நட்பென்ற பொய்யுடனே..

இதயம்
02-04-2008, 02:55 PM
நட்பு காதலாய் இருவர் மனதிலும் கனிவதில் தவறில்லை. காதலை வாயால் சொல்லி தான் அறிய வேண்டிய அவசியமில்லை. பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள், பார்க்கும் பார்வை, செய்யும் செயல்கள் எல்லாம் உணர்த்தி விடும். காதலென்றால் அதை புரிந்து இருவரும் சம்மதித்தால் சுபம் + சுகம். நட்பு காதலாய் உருவெடுக்கும் போது இருவரில் ஒருவருக்கு சம்மதமில்லை என்றால் அதை உதறுவது சிறந்தது. ஏற்றே ஆக வேண்டும் என்ற வலியுறுத்தலால் வீணான வேதனைகள் தான் மிஞ்சும். அதுமட்டுமல்லாமல் அந்த நிலை நட்பை கொன்று விட வாய்ப்பிருக்கிறது. காதலில் நட்பை காட்டுவது இயல்பு. ஆனால், நட்பில் காதலை காட்டுவது முரண். !!

நல்லதொரு கவிதைக்காய் நம்பிகோபாலனுக்கு நன்றிகள்..!!

சாலைஜெயராமன்
02-04-2008, 03:14 PM
பால் பேதமற்ற நல்ல நட்பை காதலிக்க முடியாதா திரு,நம்பி?

காமத்தின் பங்குதான் காதலில் முக்கிய இடம் வகிக்கிறது.

ஊன் இச்சையற்ற காதல் என்றால் ஒரே பாலில் உள்ள நல்ல நட்பில் மட்டும்தான் அந்த அனுபவத்தைப் பெறமுடியும். உருகி உருகிக் கவிதையெல்லாம் அதற்குத் தேவையில்லை.

ஒத்த அறிவுடைய எதிர்மறைபால் கலக்காத நல்ல நட்புதான் காதலிக்கச் சிறந்தது. இது என் கருத்து.

கவிதை வரிகள் அருமை. கற்பனைக்கு ஏது காவல்.

நம்பிகோபாலன்
03-04-2008, 05:07 AM
தங்களின் கருத்துக்கள் என்னை மேலும் எழுத தூண்டுகிறது. பயமும் இருக்கிறது நன்றாக எழுத வேண்டும் என்று. அனைவருக்கும் என் நன்றிகள்.

அமரன்
03-04-2008, 07:29 AM
சில கதவுகளினூடாக கவிதை கவர்ந்தாலும், லேசாக ஒரு உறுத்தல்..

உறவு உடைந்துந்துவிடக் கூடாது என்பதுக்காக சில விடயங்களை மறைக்கலாம். அதற்காக உறவுக் கட்டடத்தின் அத்திவாரம் பழுதாகி விட்டதை மறைக்க கூடாது. பலத்த சேதத்தை உண்டுபண்ணும்.

எதிர்மறைப் பால் நட்பு நிலைக்காது என்பதை வலியுறுத்தி ஏகப்பட்ட ஆக்கங்கள். (நானும் விதி விலக்கல்ல). நிலைக்கும் என்பதை வலியுறுத்தும் விதமாக மாற்றக் காரியதரிசிகள் அவதரிப்பது எப்போது?

பாராட்டுகள் நம்பி.

kavitha
03-04-2008, 11:00 AM
நிலைக்கும் என்பதை வலியுறுத்தும் விதமாக மாற்றக் காரியதரிசிகள் அவதரிப்பது எப்போது? :)

அன்பு அதிகரிக்கும்போது உரிமை அதிகரிக்கும். உரிமை அதிகரித்தால் மேலாண்மை அதிகரிக்கும். உள்ளம் உடைபடும் ஒரு நாளில்.
காதல் வந்தால் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும்.
நட்பு என்ற பொய்யை விட காதல் என்ற 'மெய்' இனியது.
விரைவில் காதலை "சொல்லவைத்துவிடுங்கள்"