PDA

View Full Version : நேரடியாக DOS MODE க்குள் செல்ல - உதவி

meera
02-04-2008, 10:32 AM
கணிணியை ஆன் செய்யும் போதே, நேரடியாக DOS MODE க்குள் செல்ல வேண்டும். எனது கணிணியில் ஏற்கனவே OS-WINDOWS செட்டப் இருக்கிறது. அந்த செட்டப்பை தொந்தரவு செய்யாமல் எப்படி DOS MODE க்குள் செல்வது.

அறிந்தவர்கள் யாரேனும் சொல்லுங்கள்.

ஆதி
02-04-2008, 10:39 AM
கணினி பூட்டாகும் போது F8 கீயை அழுத்தவும்..

அதில் COMMAND-PROMPT என்னும் option வரும் cursor யை அங்கு நகர்த்தி HIT செய்தால் நேரடியாக DOS MODE செல்லலாம்..

அன்புடன் ஆதி

meera
02-04-2008, 11:04 PM
நன்றி ஆதி. ஆனால் நான் அதை முயற்சி செய்துவிட்டேன். ஆனால் செட்டிங்கில் COMMAND PROMPTஎன்ற OPTION இல்லையே என்ன செய்வது?

அக்னி
02-04-2008, 11:09 PM
மீரா அவர்களே திரியின் தலைப்பை மாற்றியுள்ளேன்.
(இதனால் பதிலளிக்கக் கூடியவர்கள் இலகுவில் கண்டறிந்து கொள்வார்கள் என்பதனால்...)

meera
02-04-2008, 11:14 PM
மிக்க நன்றி அக்னி.

அன்புரசிகன்
03-04-2008, 02:20 AM
நேரடியாக செல்லமுடியாவிட்டாலும் boot ஆகிவரும் போது F8 ஐ அழுத்தி வருவதில் command prompt ற்கு மாற்றி உள்ளே செல்லலாம்.

praveen
03-04-2008, 04:04 AM
கணிணியை ஆன் செய்யும் போதே, நேரடியாக DOS MODE க்குள் செல்ல வேண்டும்.

ஆன் செய்தவுடன் நேரடியாக டாஸ் செல்ல வேண்டும் என்றால் மிக சிம்பிளான வழி ஒன்று உள்ளது. ஒரு விண்டோஸ் 98 ஸ்ட்ரப் டிஸ்க் ஒன்று செய்து அதனை பிளாப்பி டிஸ்கில் இட்டு, பூட்டிங் வரிசை பிளாப்பியிலிருந்து ஆரம்பிக்கும்படி செய்யலாம்.

எனது கணிணியில் ஏற்கனவே OS-WINDOWS செட்டப் இருக்கிறது. அந்த செட்டப்பை தொந்தரவு செய்யாமல் எப்படி DOS MODE க்குள் செல்வது.
அது என்ன ஓ.எஸ் விண்டோஸ். விண்டோஸில் நிறைய பதிப்பு உள்ளது என்ன என்பதை தெளிவாக குறிப்பிட்டு கேளுங்கள். என்ன காரணத்திற்காக உங்களுக்கு டாஸ் தேவைப்படுகிறது என்றும் கூறுங்கள்.

அறிந்தவர்கள் யாரேனும் சொல்லுங்கள்.

உங்கள் கேள்வியை நீங்கள் தந்தி (வார்த்தை சுருக்கி)போல தந்ததால் தெரியமுடியவில்லை, தெரிந்தவரை பதில் தந்திருக்கிறேன். நேற்றே பார்த்து விட்டேன். வேலைப்பளுவால் இவ்வளவு டைப் செய்ய இயலவில்லை.

meera
04-04-2008, 09:54 AM
ஆன் செய்தவுடன் நேரடியாக டாஸ் செல்ல வேண்டும் என்றால் மிக சிம்பிளான வழி ஒன்று உள்ளது. ஒரு விண்டோஸ் 98 ஸ்ட்ரப் டிஸ்க் ஒன்று செய்து அதனை பிளாப்பி டிஸ்கில் இட்டு, பூட்டிங் வரிசை பிளாப்பியிலிருந்து ஆரம்பிக்கும்படி செய்யலாம்.

அது என்ன ஓ.எஸ் விண்டோஸ். விண்டோஸில் நிறைய பதிப்பு உள்ளது என்ன என்பதை தெளிவாக குறிப்பிட்டு கேளுங்கள். என்ன காரணத்திற்காக உங்களுக்கு டாஸ் தேவைப்படுகிறது என்றும் கூறுங்கள்.

உங்கள் கேள்வியை நீங்கள் தந்தி (வார்த்தை சுருக்கி)போல தந்ததால் தெரியமுடியவில்லை, தெரிந்தவரை பதில் தந்திருக்கிறேன். நேற்றே பார்த்து விட்டேன். வேலைப்பளுவால் இவ்வளவு டைப் செய்ய இயலவில்லை.

நன்றி பிரவீன். எனது கணிணி WINDOWS XP HOME EDITION. சூபர் மார்கெட் போன்ற கடைகளில் அவர்கல் பில் போடுவதற்க்கு உபயோகிக்கும் கணிணி DOS MODEல் தான் இருக்கும் இல்லையா?. அதே காரணத்திற்க்காகவே நானும் கேட்கிறேன். எனக்கு கணிணியை ஆன் செய்யும் போதே DOS MODE வரவேண்டும். மற்ற செட்டிங் நான் செய்து கொள்வேன்.இதுவே என் பிரசனை சகோதரா.

meera
04-04-2008, 09:59 AM
நேரடியாக செல்லமுடியாவிட்டாலும் boot ஆகிவரும் போது F8 ஐ அழுத்தி வருவதில் command prompt ற்கு மாற்றி உள்ளே செல்லலாம்.

அன்பு அண்ணா, நீங்கள் சொன்ன வழியை நான் முயற்சித்து முடியாமல் போகவே இங்கு வந்தேன். நீங்கள் சொல்லுவது போல் செய்தால் ஒவ்வொரு முறை கணிணியை ஆப் செய்து ஆன் செய்யும் போதும் இதை செய்ய வேண்டும். எனக்கு ஒரு முறை செட் செய்தால் மீண்டும் ஆன் செய்யும் போது கணிணி DOS MODEல் வரவேண்டும்.

ஆதி
04-04-2008, 10:14 AM
windows-XP இல் நேரடியாக DOS ல் நுழைய வழி இருக்கிறதா தெரியவில்லை, ஆனால் windows 98 ல் இது சாத்தியம்..

autoexec.bat என்னும் file லில் command.com என்று ஒரு entry போட்டுவிட்டால் கணினி Boot ஆகும் போதெல்லாம் நேரடியாக DOS mode க்கு சென்றுவிடும்.

அன்புடன் ஆதி

விகடன்
04-04-2008, 10:14 AM
உங்களுடைய தேவையை தெளிவாக கூறினால்த்தான் எதையும் திறம்பட சொல்ல முயற்சிக்கலாம் அன்பரே...

உங்களுக்கு டொஸ்மட்டுந்தான் வேண்டுமென்றால் ஓஎஸ் இனை தூக்கிவிடுங்கள். பின்னர் டொஸ் ஓஎஸ் இனை போட்டுவிடுங்கள். அதன் பின்னர் எல்லாமே டொஸ் மயந்தான்!!!

praveen
04-04-2008, 02:54 PM
தகவலுக்கு நன்றி

நான் சொன்னபடி பிளாப்பி இல்லாவிட்டால் பூட்டபிள் CD மூலம் விண்டோஸ் 98 ஸ்டார்டப் டிஸ்க் செய்து அதன் மூலம் உங்கள் வேலையை நிறைவேற்றி கொள்ளலாம்.

இல்லாவிட்டால் கொஞ்சம் சிக்கலான வழி இது. கொஞ்சம் தவறாக செய்தால் உள்ளதும் போய்விடும். கணிப்பொறியாளர் ஒருவரிடம் கீழே கண்டபடி செய்ய சொல்லுங்கள்.

1) விண்டோஸ் 98 ஸ்டார்ப்-அப் டிஸ்க் மூலம் பூட் செய்து, சி டிரைவிற்கு சிஸ்டம் டிராண்ஸ்பர் செய்ய சொல்லுங்கள், (அது என்.டி.எப்.எஸ் பார்மேட்டில் இருந்தால் அந்த டிரைவே 98 ஸ்டாரப் டிஸ்கில் பூட் ஆகி சென்றால் கண்ணில் தட்டுப்படாது)

2)அடுத்து விண்டோஸ் எக்ஸ்.பி CDயை உள்ளிட்டு ரீப்பேர் ஆப்சனை தேர்ந்தெடுத்து ரிக்கவரி கன்ஸோல் சென்று பூட்சிஎப்ஜி(bootcfg) என்ற கமண்ட் மூலம் திரும்ப வரவழைத்து கொள்ளலாம்.

மேலே சொன்னபடி இல்லாவிட்டால், கம்ப்யூட்டரில் உள்ளவற்றை பேக்கப் எடுத்து, புதிதாக பார்மேட் செய்து முதலில் 98 பதிந்து அடுத்த டிரைவில் எக்ஸ்பி பதியுங்கள். பின் 98ல் சென்று F8 அழுத்தி கமண்ட் புராம்ப்ட் செல்லுங்கள்.

meera
06-04-2008, 05:14 AM
உங்களுடைய தேவையை தெளிவாக கூறினால்த்தான் எதையும் திறம்பட சொல்ல முயற்சிக்கலாம் அன்பரே...

உங்களுக்கு டொஸ்மட்டுந்தான் வேண்டுமென்றால் ஓஎஸ் இனை தூக்கிவிடுங்கள். பின்னர் டொஸ் ஓஎஸ் இனை போட்டுவிடுங்கள். அதன் பின்னர் எல்லாமே டொஸ் மயந்தான்!!!

நன்றி விராடன்.

நீங்கள் சொல்வது போல் OS எடுக்க முடியாது.அதில் சில FILES இருக்கு.அந்த FILES எங்க பாஸ்க்கு வேணுமாம்.அதனால் OS தொந்தரவு செய்யாமல் எப்படி DOS MODE பொடுவது என்பதெ என் சந்தேகம்.

ஆனால் இப்போது கடைகளுக்கு உபயோகிக்கும் பிரத்தியேக கணிணியே உபயோகிக்க முடிவு செய்யப்பட்டுவிட்டது.

meera
06-04-2008, 05:16 AM
நன்றி ஆதி உங்களின் பதில் எனக்கு பயனுள்ளதாய் இருந்தது.

meera
06-04-2008, 05:18 AM
நன்றி பிரவீன்.

இப்போதைக்கு எனது பிரச்சினை தீர்ந்தாலும் நீங்கள் சொன்ன வழியை முயற்சிக்கிறேன் ஏதேனும் சந்தேகம் வந்தால் மீண்டும் உங்களிடம் கேட்கிறேன். தொந்தரவுக்கு மன்னிக்க சகோதரா.