PDA

View Full Version : இந்த மெல்லிய இரவில்shibly591
02-04-2008, 06:10 AM
தூக்கம் இருண்டுபோன
இந்த மெல்லிய இரவில்
விழித்திருக்கும் என்
உணர்வுகளைச்சுட்;டி
எதைப்பற்றி நான்
பாடப்போகிறேன்…?

பாசம், மனசு, நட்பு
எல்லாமே பொய்யாகிவிட்ட
வாழ்க்கையை இனியும்
வாழ்ந்து எதை
சாதிக்கப்போகிறது
எனது எதிர்காலம்..

வலிக்கிறது
என் விரல்களும் இதயமும்..

கருகிப்போன கனவுகளை
மீண்டும் யாசிக்கிறது
என் கண்கள்..
உருகிப்போன நினைவுகளை
மீண்டும் தாகிக்கிறது
என் கணங்கள்…

வலிகளில் நிறைந்து போன
என் விழிகளைப்பற்றி
ரணங்களில் புதைந்து போன
என் ஆத்மார்த்தம் பற்றி
துயரப்பாடல்கள் உச்சரிக்கும்
என் பேனா பற்றி
காயங்களின் சுவடுகளை ஏந்தி நிற்கும்
என் பாவப்பட்ட இதயம் பற்றி
இனிப்பேச யாருமில்லையா…?

உலுக்கி எடுக்கும்
அதிர்வுகளைத்தாங்கி
வாழ்தல் மீதான பயணம்
நீள்வது அத்தனை எளிதில்லை

இனியும் என்ன இருக்கிறது?

சேரத்து வைத்த ஆசைகள்
அநாதையான பின்பும
நம்பியிருந்த உறவுகள்
சுக்கு நு}றான பின்பும்
தேக்கி வைத்த நம்பிக்கை
வேரிழந்த பின்பும்

இனியும் என்ன இருக்கிறது?

காலியாகிப்போன பாசப்பைகளில்
இனி நான் இடப்போவதில்லை
சில்லறை மனிதர்களை..

எல்லா இதயங்களிலும்
போர்வைகள்..
எல்லா முகங்களிலும
முகமூடிகள்..
எல்லா புன்னகைகளிலும்
விஷங்கள்..
எல்லா பார்வைகளிலும்
வக்கிரங்கள்..

உறவென்னும் தேசத்தில்
அகதியாக்கப்பட்டவன் நான்

மனிதர்களைத்தேடிய
என் நித்திய பயணத்தில்
எப்போடு நிகழும்
திடீர் திருப்பம்?

யாரையும் குற்றம் சாட்டவில்லை
காரணம் முதல் குற்றவாளி
நான்தானே…?

தூக்கம் இருண்டுபோன
இந்த மெல்லிய இரவில்
விழித்திருக்கும் என்
உணர்வுகளைச்சுட்;டி
இன்னும்
எதைப்பற்றி நான்
பாடப்போகிறேன்…?

ஆக்கம்:-
நிந்தவுர் ஷிப்லி
தென்கிழக்குப்பல்கலை
இலங்கை

ஆதவா
02-04-2008, 04:33 PM
மற்றவர்களின் கவிதையை இலக்கியங்கள் பகுதியில் இடவேண்டும் நண்பரே! இனி அடுத்தடுத்து வரும் கவிதைகளை (தங்கலுடையது அல்ல என்றால்) அவ்வாறு இடுங்கள்

shibly591
04-04-2008, 05:01 AM
எனக்கு உங்கள் கருத்து புரியவில்லை.சற்று விளக்கவும்....

அமரன்
04-04-2008, 10:34 AM
எல்லா இதயங்களிலும்
போர்வைகள்..
எல்லா முகங்களிலும
முகமூடிகள்..
எல்லா புன்னகைகளிலும்
விஷங்கள்..
எல்லா பார்வைகளிலும்
வக்கிரங்கள்..


"காயமே இது பொய்யடா - வெறும்
காற்றடித்த பையடா"
நிறைகுறையாத உண்மை என்று தெரிந்தும் எத்தனை வகை திரவியங்கள், மூச்சுக்கள், புனஸ்காரங்கள் நிதமும் அழகுபடுத்துகின்றன.. தாயகத்தின் வெக்கையில் முக, உடல்பூச்சுகளை கண்கொண்டும் பார்க்காதவன். குளிர் பிரதேசத்தை வாழிடமாக்கிய பின்னர் அத்தியாவசியமாகிவிட்டன.. சூழலுக்கு ஏற்ப முகமூடிகள், போர்வைகள், அவசியமாகிறன..

தினமும் சிறிதளவு விஷம் உட்கொண்டால், நாளடைவில் அதுவே விஷமுறிவு நிவாரணியாகிவிடுமாம். எங்கோ படித்த ஞாபகம். சுருக்கமாக சொன்னால் இசைவாக்கம். இறந்தகாலங்களும், நிகழ்காலங்களும் இசைவாக்கத்தை எம்முள் புகுத்தி, நிச்சயமாக எதிர்காலமெனும் கனவை நிஜமாக்கும்.

பொய்யில் மெய் கலந்திருக்கும்.. பிரிகை செய்து பார்க்க நாம் முயல்வதில்லை. முயலும் சிலரின் மெத்தனத்தால் முடிவதில்லை..

நீங்கள் உணர்வுகளை கூட்டிப் பாடவேண்டியதில்லை. எமது தேக தேசத்தில் முழுமையான மக்களாட்சி இன்னும் அமுலில் இல்லை. அதனால அவ்வபோது கிளர்ச்சி கிளம்பும். அந்நேரத்தில் உணர்சுகள் சுயமாக இசைக்கும்.. அதை சரியாக பதிவு செய்து கொடுத்துவிடுங்கள்..

வாழ்த்துக்கள்.

அனுராகவன்
04-04-2008, 10:46 AM
மற்றவர்களின் கவிதையை இலக்கியங்கள் பகுதியில் இடவேண்டும் நண்பரே! இனி அடுத்தடுத்து வரும் கவிதைகளை (தங்கலுடையது அல்ல என்றால்) அவ்வாறு இடுங்கள்

அடடே!! நண்பரே ஆதவா..
இந்த கவிக்கு சொந்தகாரர் ...
இங்கே பாருங்கள்..

ஆக்கம்:-
நிந்தவுர் ஷிப்லி
தென்கிழக்குப்பல்கலை
இலங்கை
இந்த பெயர் சிப்லி அதாவது அவர் சொந்த பெயர்தான்..
ஆக்கம் என்றவுடன் நீங்கள் மற்றவருடையது என்று தவறாக புரிந்துக் கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்..
என் நன்றி


எனக்கு உங்கள் கருத்து புரியவில்லை.சற்று விளக்கவும்....
என்ன சிப்லி நான் விளக்கம் தந்துள்ளேன் ..
இப்ப புரியும் என நினைக்கிறேன்.

kavitha
04-04-2008, 11:24 AM
என் பாவப்பட்ட இதயம் பற்றி
இனிப்பேச யாருமில்லையா…?
உங்கள் கவிதைகள் பேசுகின்றனவே ஷிப்லி.


காலியாகிப்போன பாசப்பைகளில்
இனி நான் இடப்போவதில்லை
சில்லறை மனிதர்களை..
அருமையான வரிகள்.மனிதர்களைத்தேடிய
என் நித்திய பயணத்தில்
எப்போடு நிகழும்
திடீர் திருப்பம்?

யாரையும் குற்றம் சாட்டவில்லை
காரணம் முதல் குற்றவாளி
நான்தானே…?
இப்படி ஏதாவது ஒரு கணத்தில் ஒவ்வொருவரும் நினைத்திருப்போம்.
நாம் எப்படி இருக்கிறமோ அப்படியே மற்றவர்களும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் இந்த ஏமாற்றத்திற்கு காரணம்.

ஒரு பொன்மொழி உண்டு: "நீ மற்றவர்கள் உனக்கு எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி நீ இரு"


இந்த மெல்லிய இரவில்
விழித்திருக்கும் என்
உணர்வுகளைச்சுட்;டி
எதைப்பற்றி நான்
பாடப்போகிறேன்…? இதேபோல் இன்னொரு நல்லபாடல் ஒன்று. :)

shibly591
05-04-2008, 03:38 AM
நன்றி நண்பி அனு....உங்கள் விளக்கம் எனக்கு உதவியது.மிக்க நன்றி..இது ஒரு இரவில் கைகளும் மனசும் வலிக்க வலிக்க எழுதியது.விமர்சனங்கட்கு நன்றிகள்

நாகரா
05-04-2008, 05:56 AM
தூக்கம் இருண்டுபோன
இந்த மெல்லிய இரவில்
விழித்திருக்கும் என்
உணர்வுகளைச்சுட்;டி
எதைப்பற்றி நான்
பாடப்போகிறேன்…?

பாசம், மனசு, நட்பு
எல்லாமே பொய்யாகிவிட்ட
வாழ்க்கையை இனியும்
வாழ்ந்து எதை
சாதிக்கப்போகிறது
எனது எதிர்காலம்..

வலிக்கிறது
என் விரல்களும் இதயமும்..

கருகிப்போன கனவுகளை
மீண்டும் யாசிக்கிறது
என் கண்கள்..
உருகிப்போன நினைவுகளை
மீண்டும் தாகிக்கிறது
என் கணங்கள்…

வலிகளில் நிறைந்து போன
என் விழிகளைப்பற்றி
ரணங்களில் புதைந்து போன
என் ஆத்மார்த்தம் பற்றி
துயரப்பாடல்கள் உச்சரிக்கும்
என் பேனா பற்றி
காயங்களின் சுவடுகளை ஏந்தி நிற்கும்
என் பாவப்பட்ட இதயம் பற்றி
இனிப்பேச யாருமில்லையா…?

உலுக்கி எடுக்கும்
அதிர்வுகளைத்தாங்கி
வாழ்தல் மீதான பயணம்
நீள்வது அத்தனை எளிதில்லை

இனியும் என்ன இருக்கிறது?

சேரத்து வைத்த ஆசைகள்
அநாதையான பின்பும
நம்பியிருந்த உறவுகள்
சுக்கு நு}றான பின்பும்
தேக்கி வைத்த நம்பிக்கை
வேரிழந்த பின்பும்

இனியும் என்ன இருக்கிறது?

காலியாகிப்போன பாசப்பைகளில்
இனி நான் இடப்போவதில்லை
சில்லறை மனிதர்களை..

எல்லா இதயங்களிலும்
போர்வைகள்..
எல்லா முகங்களிலும
முகமூடிகள்..
எல்லா புன்னகைகளிலும்
விஷங்கள்..
எல்லா பார்வைகளிலும்
வக்கிரங்கள்..

உறவென்னும் தேசத்தில்
அகதியாக்கப்பட்டவன் நான்

மனிதர்களைத்தேடிய
என் நித்திய பயணத்தில்
எப்போடு நிகழும்
திடீர் திருப்பம்?

யாரையும் குற்றம் சாட்டவில்லை
காரணம் முதல் குற்றவாளி
நான்தானே…?

தூக்கம் இருண்டுபோன
இந்த மெல்லிய இரவில்
விழித்திருக்கும் என்
உணர்வுகளைச்சுட்;டி
இன்னும்
எதைப்பற்றி நான்
பாடப்போகிறேன்…?

ஆக்கம்:-
நிந்தவுர் ஷிப்லி
தென்கிழக்குப்பல்கலை
இலங்கை

அருமையான் கவிதை, வாழ்த்துக்கள் ஷிப்லி.


தூக்கம் இருண்டுபோன
இந்த மெல்லிய இரவில்
விழித்திருக்கும் என்
உணர்வுகளைச்சுட்;டி
இன்னும்
எதைப்பற்றி நான்
பாடப்போகிறேன்…?

உம் கேள்விக்கு உறுதியான பதிலாய் என் கவிதை இதோ! நன்றி ஷிப்லி.

மருட்டும் இரவில்

மருட்டும் இரவில்
ஒளியாய் விழித்திருந்து
நவயுக விடியலைப் பாடுகிறேன்

பொய்யுறவுகளை உதறி விட்டு
அருட்பெருங்கடவுளின் மெய்யுறவில்
மனம் லயிக்க
களிக்கிறது இருதயம்

கனவுகளனைத்தும் கலைந்து
திறக்கிறது என் ஞான விழி.
நினைவுகள் கழன்று
இருப்பில் கரைகின்றன கணங்கள்

ரணங்களைக் குணப்படுத்தும்
ஆன்ம ஒளி
என் விழிகளில் வீசுகிறது.
இருதயக் களிப்பு
காயங்களை ஆற்றும் களிம்பாய்
என் விரல்களில் வழிகிறது

சிதையில் எரிகிறது மரணம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15056).
நிதர்சனமாய்த் தெரிகிறது
நித்தியப் பெருவாழ்வு

பற்றுகளனைத்தும்
பற்றற விட்டு
வள்ளலைப் பற்றியதால்
ஒருமைப் பெருநிலையில்
ஓங்கி நிற்கிறேன்
நான்

அருட்பையின் காலியான அகண்ட வெளியில்
உலக உயிர்த்திரள் பத்திரமாய்

மனப் போர்வைகள் களைந்த
இருதயம்
பொய்ம்முகங்களைக் களைந்த
மெய்யகம்
அமுதப் புன்னகை
துகளளவும் துரிசற்ற தூய நோக்கு

அகண்டவெளி தேசத்தில்
அருளொளியாய் விழித்திருக்கிறேன்
நான்

வள்ளலோடு ஓன்றிய
என் நித்தியப் பயணத்தில்
ஒவ்வொரு கணமும்
ஒப்பிலா அற்புதம்

அருட்பெருங்கடவுளின் செல்லக்கொழுந்துகளாம்
உலக உயிர்த்திரளில் ஒன்றாய்
நானும்

மருட்டும் இரவில்
ஒளியாய் விழித்திருந்து
நவயுக விடியலைப் பாடுகிறேன்

shibly591
05-04-2008, 10:44 AM
நன்றி நாகரா....சரியான பதில்

பூமகள்
05-04-2008, 02:05 PM
கருகிப்போன கனவுகளை
மீண்டும் யாசிக்கிறது
என் கண்கள்..
உருகிப்போன நினைவுகளை
மீண்டும் தாகிக்கிறது
என் கணங்கள்..!
கருகிய கனவுகளை
யாசிக்க வேண்டாம்..!
காலமேகம் தரும்
வர்ணஜாலமே கனவாகி
நிறைவேறட்டும்..!!

உருகிப்போன ஊறல்களில்
ஊறியபடியா இன்னும்??
அதிக ஊறல் நினைவுகளை
பதிவாக்கும் இரட்டிப்பாய்
மனக்கிடங்கில்..
ஊறலைக் குறையுங்கள்..
குமைந்து கொண்டிருக்கும்
மனத்திற்கு தேவை
ஒரு நல் வித்து..!!
விதைத்து பாருங்கள்..
மனம் பூங்காவாகும்..!!
-----------------
கவிதையின் பொருளில் கலந்தோம்.. வியந்தோம்..!!
பாராட்டுகள் ஷிப்லி..!! :)

shibly591
05-04-2008, 02:33 PM
நன்றி நண்பி

shibly591
05-04-2008, 02:54 PM
விமர்சனங்கட்கு நன்றி