PDA

View Full Version : விடியல் தேடி...!!



பூமகள்
01-04-2008, 08:07 AM
http://img32.picoodle.com/img/img32/4/4/1/poomagal/f_peacockkolam_5f2254a.jpg

அதிகாலை பனியில்
இருள் தலைதுவட்டி
இமை திறக்காமல்
காத்திருந்தது.!!

மெல்ல கண் மலர்கிறேன்.!
முகத்தோடு புன்னகை
ஒட்டும் ரோஜாவனத்துக்கு
தண்ணீர் ஊற்றுகிறேன்..!!

வாசலின் முகம் கழுவி
தென்னங்கீற்றால் தலைவாரி
பச்சை வண்ணமிட்டு
வெண் பொட்டிடுகிறேன்..!!

புள்ளிகள் தானே
கோடிட்டு கோலமாகின்றன
கற்பனை முகடில்!!

எண்ணத் திரையை
மண் தரையில்
பிரதி பதிக்கிறேன்..!!

புரிந்து போடப்படும்
இக்கோலமும் பல
ராஜகுமாரர்களுக்கு
புரியா கடவுளின் கோலம்
போலவே இன்னமும்..!!

அமரன்
01-04-2008, 08:14 AM
எண்ணத் திரையை
மண் தரையில்
பிரதி பதிக்கிறேன்..!!

கலைவது மாக்கோல இயல்பு.
கலையாதது அடக்கோலம்.
இரண்டையும் புரிய
அவகாசம் அவசியம்.(?)!!!
இன்னும் பழுது பார்க்கலாமோ
கவிதையை.

பூமகள்
01-04-2008, 08:19 AM
கலைவது மாக்கோல இயல்பு.
கலையாதது அடக்கோலம்.
மாக்கோலம் யாமறிவோம்..!
அதென்னங்க
அடக்கோலம்?? புரியலையே..!! :confused::confused:
அகக்கோலமா??:icon_ush:

இன்னும் பழுது பார்க்கலாமோ
கவிதையை.
பாருங்கள் சொல்லுங்கள்..!!:icon_rollout:

நன்றிகள் அமரன் ஜீ..!!:)

சுகந்தப்ரீதன்
01-04-2008, 08:31 AM
வாழ்த்துக்கள் பூ..!!

சிக்கல் கோலங்கள் போடுவதில் நீங்கள் சிறந்தவர் என்று உங்கள் கவிதையிலேயே தெரிகிறது. அதனால்தான் எனக்கு கவிதையின் கரு இன்னும் சிக்கவே மறுக்கிறது..!!

புள்ளி வச்சி கோலம் போடவும் புரியாத கவிதை எழுதவும் தனித்திறமை வேணும். நமக்கு அது ரெண்டுமே கிடையாது. அதனால் உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தொடருங்கள்..!!

பூமகள்
01-04-2008, 09:13 AM
ஹூம்.. ஹூம்.. சுகந்தப்ரீதன்.. இதானே வேணாங்கறது..!!
பாராட்டற மாதிரி பாராட்டிட்டு... கடைசில அழகா கவுத்துட்டு போயிட்டயில.... இரு இரு..... அப்புறமா கவனிச்சிக்கிறேன்..!!

யாராச்சும் வந்து கரக்டா அர்த்தம் சொல்லுங்கப்பா.. எனக்கே மறந்துட்டது என்ன சொல்ல வந்தேன்னு..!! ;)

poornima
01-04-2008, 09:24 AM
மாக்கோலத்தை விட மனக்கோலம் பிரமாதம்...
வரைந்த வர்ணங்களை விட வார்த்தை ஜாலங்களில் தெரிகிறது அழகியல்
பாராட்டுக்கள்

கண்மணி
01-04-2008, 09:29 AM
வாழ்த்துக்கள் பூ..!!

சிக்கல் கோலங்கள் போடுவதில் நீங்கள் சிறந்தவர் என்று உங்கள் கவிதையிலேயே தெரிகிறது. அதனால்தான் எனக்கு கவிதையின் கரு இன்னும் சிக்கவே மறுக்கிறது..!!



புரிந்து போடப்படும்
இக்கோலமும் பல
ராஜகுமாரர்களுக்கு
புரியா கடவுளின் கோலம்
போலவே இன்னமும்..!!


ராஜ குமாரர்னு சொல்லிக்க முயற்சி பண்ணுறீங்களோ!

பூமகள்
01-04-2008, 09:46 AM
மாக்கோலத்தை விட மனக்கோலம் பிரமாதம்...
வரைந்த வர்ணங்களை விட வார்த்தை ஜாலங்களில் தெரிகிறது அழகியல்
பாராட்டுக்கள்
ஆஹா புதுவரவு..!! வாங்க சகோதரி..!! :icon_rollout:
வாங்க பூர்ணிமா...! மன்ற குடும்பத்தில் இணைந்து இன்னும் தமிழமுது சுவைக்க தாருங்கள்..!!:)

உங்களின் விமர்சனப்பின்னூட்டத்துக்கு மிக்க நன்றிகள்.

ராஜ குமாரர்னு சொல்லிக்க முயற்சி பண்ணுறீங்களோ!
சரியா சொன்னீங்க கண்மணி அக்கா..!! :icon_b::icon_b:
இப்படி சொல்லி பந்தா காட்டலாம்னு நினைக்கிறாரு சுபி..!!:D:D
விட மாட்டேனே..!! :lachen001::lachen001:

சுகந்தப்ரீதன்
01-04-2008, 09:47 AM
ராஜ குமாரர்னு சொல்லிக்க முயற்சி பண்ணுறீங்களோ!
அம்மணி கண்மணி ஏன் ஏன் ஏனம்மணி இப்படியெல்லாம்...?!:sprachlos020:

நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் நாங்க எல்லாம் ராஜ்ஜியமில்லாத ராஜகுமாரனுங்கதான்..:aetsch013:



சரியா சொன்னீங்க கண்மணி அக்கா..!! :icon_b::icon_b:
இப்படி சொல்லி பந்தா காட்டலாம்னு நினைக்கிறாரு சுபி..!!:D:D
விட மாட்டேனே..!! :lachen001::lachen001:



ஹி..ஹி.. யாரு யாருக்கு அக்கா...??!

பூவு அப்புறமா கவனிக்கறன்னு சொல்லிட்டு அக்கா(?) வந்ததும் உடனே கூட்டணி போட்டு தலையில குட்டுறீயே நியாயமா இது..?!

கண்மணி
01-04-2008, 10:24 AM
சம்பிரதாயமா பார்க்கப் போனா மதியத்திற்குள்(ஏறு வெய்யிலில்) பெண் பார்க்கணும் னு பெரியவங்க சொல்வாங்க.. இதுவும் ஒரு காரணமா இருக்கலாம் பூ!

பெண்ணின் சுறுசுறுப்பு, மலர்ச்சி, மனவமைவு எல்லாம் காலையில் அவள் போடும் மாக்கோலத்தில் விரித்து வைக்கப் பட்டு விடுகிறது,,

சொஜ்ஜி பஜ்ஜி கைப்பற்ற படையெடுத்து வரும் பல ராஜகுமாரர்கள் ஒரு நொடியேனும் அந்தக் கோலத்தைக் காண்பதில்லை.

இந்தக் காலத்தில எந்தப் பொண்ணு கோலம் போடுகிறாள் என்று ஒரு அசட்டை வேறு..

மயில் கோலம் போடும் மயில் அன்பு மழைக்காய் காத்திருக்கிறாள்..

பூக்கோலம் போடும் பூ மகிழ்ச்சியாய் பூத்திருக்கிறாள்

நெளிகோலம் போடும் மங்கை, புதிராய் இருக்கிறாள்..!!

ராசகுமாரர்களே! உங்கள் குதிரைகளை சற்று தள்ளி நிறுத்தி விட்டு கோலங்களை சற்று கவனியுங்கள்..

பூமகள்
01-04-2008, 10:40 AM
ஓராயிரம் அர்த்தம் சொல்லும்
ஒவ்வொரு கோலமும்..!!!

கோட்டுக்கோலம் வரைமுறைகள்
பகருமென்றால்..
நெளிக் கோலம்.. புதிர்களை
புனையும்..!!
பூக்கோலம்.. புத்துணர்வு
பிறப்பிக்கும்..!!
வண்ணக்கோலம்.. எண்ணங்களை
பிரதிபலிக்கும்..!!

இப்படி ஆயிரம் வகை கோலமிட்டாலும்...
பச்சரிசிப் பொடி கொண்டு..
வெண் புள்ளிகள் நட்டு..
எறும்புக்கு உணவூட்டும்
கோலம்.. மறக்கலாமோ நாம்??!!

---------------------------
என் கவியின் கருவை பிடிச்சிட்டீங்க கண்மணி அக்கா..

ஆனாலும்.. இத்தனை நேரம் யாருமே கண்டுபிடிக்கலையேன்னு ஒரு வேதனை இருந்தது..!!

பாராட்டுகள் கண்மணி அக்கா. :)

இனியாவது குதிரையின்
வரும் ராஜகுமாரர்கள்
கொஞ்சம்..
கோலத்தில் அந்த
கோதையையும் காணட்டும்..!!

அழகிய கோலமிடும்
நங்கை நல்லாள்..-அவன்
வாழ்க்கை அழகாக்கும்
மங்கை மாண்பாள்..!!

புரிந்தால்
இளவரசிகள்
கிட்டுவது நிச்சயம்..!! :)

கண்மணி
01-04-2008, 10:43 AM
எல்லாம் சகவாச தோஷ பரிகாரம் செய்தா சரியாயிடும்.

உங்க அண்ணாவோட சேர்ந்து நீங்களும் மறைபொருள் வைக்க ஆரம்பிச்சிட்டீங்க.. பாவம் மாப்பிள்ளைகள்..!!

பூமகள்
01-04-2008, 10:58 AM
எல்லாம் சகவாச தோஷ பரிகாரம் செய்தா சரியாயிடும்.
மாத்தி சொல்றீங்க கண்மணி அக்கா..!!:D:D
என்ர கூட சேர்ந்தா தான் எல்லாரும் உளற ஆரம்பிப்பாங்க...! :lachen001::lachen001:

உங்க அண்ணாவோட சேர்ந்து நீங்களும் மறைபொருள் வைக்க ஆரம்பிச்சிட்டீங்க.. பாவம் மாப்பிள்ளைகள்..!!
நாங்க எல்லாம் ஒரே "மறைபொருள்" பேமிலிம்மா('உக்மா' பேமிலி மாதிரி) கண்மணி..!! :icon_b::icon_b:

நம்பிகோபாலன்
01-04-2008, 11:11 AM
கோலங்கள் மிக அழகானவை.ரசிக்ககூடியவை.
எங்க ஊரில் என் சகோதிரியிடம் கோல புத்தகத்தை பார்த்து நானும் சில கோலங்கள் கற்றுகொண்டது உண்டு.
இன்று அபார்ட்மென்ட் வாழ்க்கையில் கோலங்கலே சின்னதாக போய் விட்ட நிலையில் சகவாச தோஷம் பண்ணினாலும் அழகான கோலங்களை பார்ப்பது மிக அரிது.

ஆர்.ஈஸ்வரன்
01-04-2008, 11:31 AM
புரியா கடவுளின் கோலம்
போலவே இன்னமும்..!!

அருமை

பூமகள்
01-04-2008, 11:44 AM
கோலங்கள் மிக அழகானவை.ரசிக்ககூடியவை.
உண்மை தான் நம்பியண்ணா..!!
ஆனாலும். கோலங்கள் போடுவதும் ஒரு வகை யோகா என்று எங்கோ படிச்ச நினைவு..
குனிந்து கோலம் போடுவதால்.. பெண்களின் உடம்புக்கு சிறந்தது என்றும் கேள்விப்பட்டிருக்கேன்.
இன்றைய அடுக்குமாடி குடியிருப்புகளில் அரிதாகிவரும் பண்பாட்டுச் சின்னத்தில் கோலமும் ஒன்றாகிவிட்டது. இது வேதனையளிக்கும் ஒன்று தான்.
உங்க பின்னூட்டத்துக்கு நன்றிகள் அண்ணா. :)

புரியா கடவுளின் கோலம்
போலவே இன்னமும்..!!அருமை
மிக்க நன்றிகள் அன்புச் சகோதரர் ஈஸ்வரன். :)

கண்மணி
01-04-2008, 12:18 PM
ஆனாலும். கோலங்கள் போடுவதும் ஒரு வகை யோகா என்று எங்கோ படிச்ச நினைவு..


பாபா சினிமா சினிமா

அமரன்
02-04-2008, 06:52 AM
"ஆண்களை விட பெண்களின் மனது சுத்தமானது.காரணம், அவர்கள் தங்கள் எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்".. அண்மையில் மன்ற உறவு ஒருவரின் ஜி-டாக்கில் ஸ்டேட்டஸ் மெசேஜ் இது. இதில் அதிகளவு உண்மை இல்லாமல் இல்லை.

இந்த நிலையில், அதுவும் அழகான திமிர் உள்ள பெண்கள் வீட்டு வாசலில் ஒரே விதமான கோலம் எப்படி இருக்கும். அதிகாலை நேரத்து மனோநிலையை வேண்டுமானால் அவர்கள் போடும் கோலங்கள் பிரதிபலிக்கலாம். அதை வைத்து அன்றைய தினம் பெண் பார்க்கும் படலம் அவசியமா இல்லையா என்று முடிவு செய்யலாம். அந்தப்பெண்ணே வேண்டாம் என்று முடிவு செய்வது நியாயமானதல்ல. இன்னொரு பக்கமாக, வீட்டுக்கார அம்மா மயில்கோலம்/பூக்கோலம் போட்டிருந்து பெண் நெளிகோலப் பிரிஜையாக இருந்து விட்டால் பஞ்சாயத்துக்கு வேலை வந்துவிடாது.. மாறாக அம்மா நெளிகோலமும் பொண்ணு பூக்கோல மயிலாகவும் இருந்தால் கனிவரை கன்னியாகவே இருந்து விடமாட்டாளா.. வெட்கச்சிவப்புக்கு பதிலாக கன்னிச் சிவக்காதா அவள் வதனம் நிதம்.

மாக்கோலம் கலைத்து கலைத்து போடுவது. விதம் மாறும் இதனால் மணக்கோலம் காணலாமா?
அட என்று சொல்லுமளவுக்கு, அடமான கோலம் இருந்தால் இந்த விஷயத்தில் அனுகூலமானது.

கவிதையின் வாசலில் தடம் பதித்த சில நொடிகள் ராஜகுமாரன் ஆகிவிட்டேன். நனைந்த தலை துவட்டி, கண்கள் சொக்க உறங்குவது வழக்கம். பனியில் நனைந்தபடி, தலைதுவட்டியபடி, இருள் கண்குவித்திருந்தது.. என்ற வர்ணனை ரஜாகுமாரனாக்க, அதே மிதப்பில் உள்ளாரப் போய், பேசி, அலசி, அலப்பறை செய்து கவிதையை புரிந்துகொள்ள முடிகிறது. பஜ்ஜி, சொஜ்ஜி கிடைத்தது.. ஏறு வெயிலில் வந்திருந்தால் மதியபோசனம் கிடைத்திருக்குமோ..

கண்மணி
02-04-2008, 07:00 AM
:lachen001:
"ஆண்களை விட பெண்களின் மனது சுத்தமானது.காரணம், அவர்கள் தங்கள் எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்".. இதில் அதிகளவு உண்மை இல்லாமல் இல்லை.

இந்த நிலையில், அதுவும் அழகான திமிர் உள்ள பெண்கள் வீட்டு வாசலில் ஒரே விதமான கோலம் எப்படி இருக்கும். அதிகாலை நேரத்து மனோநிலையை வேண்டுமானால் அவர்கள் போடும் கோலங்கள் பிரதிபலிக்கலாம். அதை வைத்து அன்றைய தினம் பெண் பார்க்கும் படலம் அவசியமா இல்லையா என்று முடிவு செய்யலாம். அந்தப்பெண்ணே வேண்டாம் என்று முடிவு செய்வது நியாயமானதல்ல. இன்னொரு பக்கமாக, வீட்டுக்கார அம்மா மயில்கோலம்/பூக்கோலம் போட்டிருந்து பெண் நெளிகோலப் பிரிஜையாக இருந்து விட்டால் பஞ்சாயத்துக்கு வேலை வந்துவிடாது..

மாக்கோலம் கலைத்து கலைத்து போடுவது. விதம் மாறும் இதனால் மணக்கோலம் காணலாமா?
அட என்று சொல்லுமளவுக்கு, அடமான கோலம் இருந்தால் இந்த விஷயத்தில் அனுகூலமானது.

கவிதையின் வாசலில் தடம் பதித்த சில நொடிகள் ராஜகுமாரன் ஆகிவிட்டேன். நனைந்த தலை துவட்டி, கண்கள் சொக்க உறங்குவது வழக்கம். பனியில் நனைந்தபடி, தலைதுவட்டியபடி, இருள் கண்குவித்திருந்தது.. என்ற வர்ணனை ரஜாகுமாரனாக்க, அதே மிதப்பில் உள்ளாரப் போய், பேசி, அலசி, அலப்பறை செய்து கவிதையை புரிந்துகொள்ள முடிகிறது. பஜ்ஜி, சொஜ்ஜி கிடைத்தது.. ஏறு வெயிலில் வந்திருந்தால் மதியபோசனம் கிடைத்திருக்குமோ..


அது ஒரு வார இதழில் பிரசுரமான கவிதை வரிகள் அமரன் அண்ணா!!


அக்கா என்ன சொல்றாங்கன்னா சுறுசுறுப்பா அதிகாலையில நீங்க ஜாக்கிங் போங்க :lachen001::lachen001: தொப்பையைக் குறைங்க அப்படின்னு.. அப்படியே பொண்ணும் பார்த்திடுங்க.. நீங்க என்னன்னா வேட்டையன் மஹாராசாவா போயி பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு வந்திருக்கீங்க..

பொண்ணு பார்த்துகிட்டு இருக்கீங்கன்னு நாசூக்கா சொல்லி, உங்க ஆசையையும் சொல்லிட்டீங்க.. அதுவும் அழகான திமிர் உள்ள பெண் வேணும்னு..

இதுக்கு பேர்தான் சைக்கிள் கேப்பில ஆட்டோ ஓட்றதுன்னு சொல்வாங்க..
ம்ம் ஜமாய்ங்க.. வாழ்த்துக்கள்.. :lachen001::lachen001::lachen001:

சிவா.ஜி
02-04-2008, 07:13 AM
புள்ளி வைத்துக் கோலம் போட்டுவிட்டுக் காத்திருக்கிறாள் ராஜகுமாரி.
புள்ளி மட்டும் வைத்துவிட்டு இணைக்கும் கோடாக யாரைத் தெரிவு செய்து வைத்திருக்கிறான் இறைவன் ராஜகுமாரனாக...?

ரத,கஜ,துராதிப் படையோடு வரும் ராஜ குமாரன் போகும்போது துவம்சம் செய்துவிட்டுப் போவது ராஜகுமாரியின் கற்பனைக் கோட்டையை.

ஒவ்வொரு நாளும் கோலமிட்டக் கையோடு கோட்டையையும் கட்டிவைத்துக் காத்திருக்கும் ராஜகுமாரிகளுக்கு, சூடிவிட வாய்ப்பே கிடைக்காமல்,வாடிவிட்ட மாலையோடு நிற்கவேண்டியதுதான் விதியாகிப் போகிறது.
சிக்கல் கோலங்களின் சிக்கல் தீர்வதெப்போது....?

அழகிய கவிதைக்கு வாழ்த்துகள் பூ.

அமரன்
02-04-2008, 10:48 AM
:lachen001:


அது ஒரு வார இதழில் பிரசுரமான கவிதை வரிகள் அமரன் அண்ணா!!


அக்கா என்ன சொல்றாங்கன்னா சுறுசுறுப்பா அதிகாலையில நீங்க ஜாக்கிங் போங்க :lachen001::lachen001: தொப்பையைக் குறைங்க அப்படின்னு.. அப்படியே பொண்ணும் பார்த்திடுங்க.. நீங்க என்னன்னா வேட்டையன் மஹாராசாவா போயி பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு வந்திருக்கீங்க..

பொண்ணு பார்த்துகிட்டு இருக்கீங்கன்னு நாசூக்கா சொல்லி, உங்க ஆசையையும் சொல்லிட்டீங்க.. அதுவும் அழகான திமிர் உள்ள பெண் வேணும்னு..

இதுக்கு பேர்தான் சைக்கிள் கேப்பில ஆட்டோ ஓட்றதுன்னு சொல்வாங்க..
ம்ம் ஜமாய்ங்க.. வாழ்த்துக்கள்.. :lachen001::lachen001::lachen001:

தொப்பை குறைக்க எனக்கும் விருப்பந்தாங்க. பக்கத்து பார்க்குகுகளில் இயற்கை சீரழிவு. நமக்கு கடல்கரைதான் பொருத்தமானது. அதுலயும் சிக்கல். இருக்கும் இடத்தில் இருந்து தூரத்தில் கடல். அங்கே போய்ச்சேருவதுக்குள் தொப்பை குறையுதோ.. ஆளே இளைச்சு எப்படி இருந்தனான் இப்படி ஆயிட்டேன்னு சொல்லும் நிலைமையோ. போனாப்புறம் அண்ணியைப் பார்த்து தினம் தண்ணியில் மூழ்கலாமோ.

சில சமயங்களில் புள்ளிகள் வைக்காத கோலம் அழகுதான். அழகான திமிர் உள்ள பெண் கோலத்தில் அழகானவுக்கு அடுத்து (காற்)புள்ளி இருந்தால். நினைக்கவே பயமாக இருக்குங்க. அழகுக்கு பின்னால் ஆபத்து என்பதும் இதுதானோ.

நிஜம் நிலையாயிருக்க படும் ஒளியால் நிழல் நிலை மாறுகிறது. ஆனாலும் நிஜமே வெல்கிறது. இங்கேயும் அப்படித்தான் நடந்திருக்கிறது போலும்.

ஷீ-நிசி
02-04-2008, 11:19 AM
நல்ல கவிதை பூமகள்.. வாழ்த்துக்கள்!

(என்ன கருத்துன்னு தெளிவா புரியலை.. நான் கொஞ்சம் மக்கும்மா :) )

மதி
02-04-2008, 11:27 AM
அருமையான கவிதை. வாழ்த்துகளும் பாராட்டுகளும் பூமகள்.

கண்மணி
02-04-2008, 12:49 PM
தொப்பை குறைக்க எனக்கும் விருப்பந்தாங்க. பக்கத்து பார்க்குகுகளில் இயற்கை சீரழிவு. நமக்கு கடல்கரைதான் பொருத்தமானது. அதுலயும் சிக்கல். இருக்கும் இடத்தில் இருந்து தூரத்தில் கடல். அங்கே போய்ச்சேருவதுக்குள் தொப்பை குறையுதோ.. ஆளே இளைச்சு எப்படி இருந்தனான் இப்படி ஆயிட்டேன்னு சொல்லும் நிலைமையோ. போனாப்புறம் அண்ணியைப் பார்த்து தினம் தண்ணியில் மூழ்கலாமோ.

சில சமயங்களில் புள்ளிகள் வைக்காத கோலம் அழகுதான். அழகான திமிர் உள்ள பெண் கோலத்தில் அழகானவுக்கு அடுத்து (காற்)புள்ளி இருந்தால். நினைக்கவே பயமாக இருக்குங்க. அழகுக்கு பின்னால் ஆபத்து என்பதும் இதுதானோ.


நிஜம் நிலையாயிருக்க படும் ஒளியால் நிழல் நிலை மாறுகிறது. ஆனாலும் நிஜமே வெல்கிறது. இங்கேயும் அப்படித்தான் நடந்திருக்கிறது போலும்.

திமிரும் அழகுதானுங்களே அமரரே.. வீட்டு வாசல் வழியா ஜாக்கிங் போகச் சொன்னா பீச்சுப் பக்கம் ஓடறீங்களே!

ஒளி நிஜம் நிலையாயிருக்க படுதா?)..நிழல் நிலை மாறுதா?
(நீங்களும் தான் காற்புள்ளி போடலை, அதான் காலை நான் வாங்கி(றி)ட்டேன்

அழகான பெண்கள் பின்னால் போவது நீங்கதானுங்களே! அப்போ நீங்க ஆபத்தா?

நீங்க நிழலா பின்னால் போக நிஜமாய் அவள் போக, அவள் மீது படும் ஒளி உங்களைச் சலனப் படுத்துதா? அவள் உங்களை (உங்கள் மனசை) ஜெயித்து விட்டாளா?

கூட்டிக் கழிச்சுப் பார்த்தா... நீங்க சொன்னது...

அவள் அழகு.. அவளுக்குப் பின்னால் ஆபத்தாய் நீங்க.. :sport009:

காலைக் கதிரவன் உதிக்கும் வேளையில் அவல் கடல் நோக்கிப் போகிறாள்.. ;);)

நீங்கள் பின்னால் நிழலாய் போகிறீர்கள்.. காலைச் சூரியன் அவள் மீது பட்டுத் தெரிப்பதில் நீங்கள் நிலை குலைகிறீர்கள் :lachen001::lachen001:

அவள் உங்களை வென்றுவிட்டாள்.. :rolleyes::rolleyes:

அவர் இப்ப எனக்கு அண்ணியாகிவிட்டார் ஏனென்றால் உங்கள் மனசில் இடம் பிடிச்சிட்டார். அவளை எண்ணி காதல் கடலில் (தண்ணியில்) விழுந்திட்டீங்க :D:D

எப்புடி இருந்த நீங்க இப்பிடி ஆயிட்டீங்க!! :eek::eek:



பலே ஆளுதான் அமரன் நீங்க,, :lachen001::lachen001:

அமரன்
03-04-2008, 02:15 PM
அய்யோ.. அய்யோ.. போட்டு வாங்குறீங்களே.. திரைப்பட்ட இயக்குனர் சீன் சொல்றாபோல இருக்குங்கோ. என்னை நாயகனாக்கினீங்கன்னு ஒருபக்கம் சந்தோசம்; காமெடி கலந்த ஹீரோவாக்கினதுல சூப்பர்ஸ்டாரான பெருமகிழ்ச்சி. கூடவே காவியும் ஓரமாக தெரிகிறது.. அடிக்கடி மலை ஏறுவேன்பதுக்காக இப்படி எல்லாம் சொல்லப்படாது..

காதல் கடல்னு சொன்னதுக்குப் பதிலா... காதல் வைகை நதின்னு சொன்னாக்கா, இன்னும் மகிழ்ந்திருப்பேன்.. அள்ளிப்பருக அமிர்தமாக இருக்கும் இல்ல..

கண்ணுக்குள் எட்டிப்பார்த்து நினைவகத்தில் பதிவாகுவது நிழல்தானுங்களே. அதை நம்பித்தானே பலர் ஏமாறுங்க. பதிவானதை கழுவி (பிரின்ட்போட்டு) பார்க்க முயலுவதில்லையே. அதனாலதான் கடைசீல பலபடத்துக்கு மாலை போடுறாங்க..

இப்பகூடப் பாருங்க... கவிதையை தொடர்பாக ஆளாலுக்கு சந்தேகம்.எத்தனை பேர் கேட்டு இருக்காங்க. எத்தனை பேர் யாராவது சொல்வாங்கன்னு காத்திட்டிருக்காங்க.. அப்பப்போ வந்து எட்டிப்பார்த்துட்டுப் போய் இருக்காங்க.. சரி.. நாமளாவது சொல்லுவோம்னு உரிமையாளருக்காவது தோன்றி இருக்கா. (இதை நீ சொல்லக்கூடாதுன்னு யாரோ சரமாரியாக திட்டுறது புரியுது)..

நுதல் முகட்டிலும்
புருவங்களுக்கு நடுவிலும்
சிவப்பு பொட்டு காணாது
கரும்புள்ளியுடன்
பல கழுதை வயதாகியும்
விடியலுக்காக
வாசலில் கோலமிடும் கன்னியை போல்
இந்தக்கவிதையும் ஆகிடுமோ?

(நம்மூரில் கன்னியர் திலகம் கறுப்பு.. மணமான மங்கையர் நெற்றி நிறைப்பது சிவப்பு பொட்டு.)

செந்தமிழரசி
04-04-2008, 04:04 AM
பின்னவீணத்துவ சாயல் ஊடுருவும் கவிதைப் போல தெரிகிறது.

சில இடங்களில் சிலவார்த்தைகளுக்கு கூடுதலாய் முக்கியத்துவம் கொடுத்து படித்தால் கவிதை எளிமையாய் புரியும்.

எழில் கவிதை தோழி...............

பாராட்டுக்கள்.

நன்றி

kavitha
04-04-2008, 10:39 AM
முதலில் என்னை மன்னியுங்கள் பூமா. இந்தப்பக்கம் எட்டிப்பார்த்தும் என்னால் முழுவதும் படிக்கமுடியாமல் போனதற்கு. மன்றத்தில் எனது முதல் கவிதையின் பெயரும் "விடியலைத்தேடி"... அந்த ஆச்சரியத்தில் உள்ளே நுழைய முயன்று, பக்கம் படிக்கமுடியாமல் போகவே திரும்பி விட்டேன்.

எத்தனை அழகான உவமைகள்! கற்பனை வளம் உங்கள் எண்ணம் போலவே வண்ண வண்ணமாய்....



அதிகாலை பனியில்
இருள் தலைதுவட்டி
இமை திறக்காமல்
காத்திருந்தது.!!

அதிகாலையையே பனியில் குளிக்கச் செய்துவிட்டீர்கள்.



மெல்ல கண் மலர்கிறேன்.!
முகத்தோடு புன்னகை
ஒட்டும் ரோஜாவனத்துக்கு
தண்ணீர் ஊற்றுகிறேன்..!!
இதுதான் தினசரி வேலையோ?


வாசலின் முகம் கழுவி
தென்னங்கீற்றால் தலைவாரி
பச்சை வண்ணமிட்டு
வெண் பொட்டிடுகிறேன்..!!
தென்னங்கீற்றால் (துடைப்பத்தை சீப்பாக்கி ஜென்ம சாபல்யம் தந்திருக்கிறீர்கள்) தலைவாரி... பச்சை வண்ணமிட்டு ... சபாஷ்(இந்த காலத்தில் சாணம் தெளிப்பது எத்தனை வீட்டில்?)


புள்ளிகள் தானே
கோடிட்டு கோலமாகின்றன
கற்பனை முகடில்!!

கற்பனை ரங்கோலிக்கோலம்


எண்ணத் திரையை
மண் தரையில்
பிரதி பதிக்கிறேன்..!!

கோட்டுக்கோலம், நெளிக்கோலம், பின்னல்கோலம்...இது எந்தவகை பூமா?



புரிந்து போடப்படும்
இக்கோலமும் பல
ராஜகுமாரர்களுக்கு
புரியா கடவுளின் கோலம்
போலவே இன்னமும்..!!

பெண்களில் பெருவிரல் கோலத்திற்குக்கூட அர்த்தம் சொல்லும் ராஜகுமாரர்கள் உண்டு. விரைவில் மணக்'கோலம்' கண்டிட என் வாழ்த்துகள் பூமா.

பூமகள்
06-04-2008, 07:40 AM
சிக்கல் கோலங்களின் சிக்கல் தீர்வதெப்போது....?
அழகிய கவிதைக்கு வாழ்த்துகள் பூ.
சிவா அண்ணா.. அழகான பின்னூட்டம்..!!
என் கவிதை இன்னும் மின்னுகிறது உங்களின் பின்னூட்டத்தால்..!!:icon_rollout:
மிக்க மகிழ்ச்சி அண்ணா.:icon_b::icon_b:
இதையே கவிதையா வடிச்சிருக்கலாம் போல இருக்கே..!:rolleyes: (அண்ணா.. அப்பப்போ இப்படி ஏதும் சொல்லுங்க அதையே கவிதையா வடிக்க வருதான்னு பார்க்கறேன்..!!:icon_rollout: இது நமக்குள்ளேயே இருக்கட்டும்.. யாருக்கும் சொல்லிராதீங்க..:lachen001::lachen001:)
கலக்கலா சொல்லிட்டீங்க சிவா அண்ணா. :icon_b::icon_b:ரொம்ப நன்றி அண்ணா.

நல்ல கவிதை பூமகள்.. வாழ்த்துக்கள்!
(என்ன கருத்துன்னு தெளிவா புரியலை.. நான் கொஞ்சம் மக்கும்மா :) )
நன்றிகள் ஷீ..!! என்னது ஷீ-க்கு புரியலையா?? :eek::eek:
என்னங்க ஷீ..:icon_ush: இப்படி சொல்லிட்டீங்க..:frown::frown: கண்மணி அக்கா சரியா விளக்கம் கொடுத்திருக்காங்களே... பின்னூட்டங்கள் பாருங்க.. புரியும்னு நினைக்கிறேன்.:icon_rollout:

அருமையான கவிதை. வாழ்த்துகளும் பாராட்டுகளும் பூமகள்.
அப்போ மதிக்கு புரிஞ்சிட்டது.. அப்பாடா.. நிம்மதி மதி..!!:icon_rollout:
எங்கே நீங்க வந்து புரியலையோன்னு ஒரு வெங்காய பாய்ஸோடு பாட ஆரம்பிச்சிருவீங்களோன்னு பயந்துட்டேன்..!!:p:cool: :aetsch013:
நன்றிகள் மதி. :)

பூமகள்
06-04-2008, 07:41 AM
எழில் கவிதை தோழி...............பாராட்டுக்கள்.
நன்றி
பாராட்டுக்கு நன்றிகள் செந்தமிழரசி அக்கா.:icon_rollout: