Log in

View Full Version : வாட் வரி - இரண்டு ஆணி கதை!



க.கமலக்கண்ணன்
01-04-2008, 05:11 AM
இரண்டு ஆணி கதை!
வாட் வரி வசூல்முறை ஆரம்பத்தில் எதிர்ப்பைச் சந்தித்தது, இந்தியாவில் மட்டுமல்ல! உலக நாடுகள் பலவற்றிலும் இதுதான் நடந்திருக்கிறது. பின்னர் அது எளிமையாகப் புரியும்படி எடுத்துரைக்கப்பட்டதும், எல்லோராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதுதான் வரலாறு. இதற்கு டென்மார்க் நாட்டில் நடந்தது என ஒரு சம்பவத்தை சொல்கிறார்கள். குட்டிக் கதையாக நீளும் சுவையான சம்பவம் அது.
அந்த நாட்டிலும் வாட் வரி விதிப்புக்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதாம். ஆனால், பிரச்னை என்ன என்பதைப் புரிந்துகொண்ட அந்த நாட்டு வரி வசூல் கமிஷனர், ‘‘வாட் என்றால் என்ன என்பதை நான் புரியும்படி நிதானமாக விளக்குகிறேன். அதற்கு பிறகும் இந்த முறை வேண்டாம் என்று நினைப்பவர்கள் அதை சின்ன துண்டு சீட்டில் எழுதி, அலுவலகப் பெட்டியில் போட்டுவிட்டு செல்லலாம். அதன்படிதான் முடிவு இருக்கும்’’ என்று சொல்லி எல்லாரையும் ஒரு கூட்டத்துக்கு அழைத்தாராம்.

கூட்டத்தின்போது எல்லோரையும் கொஞ்ச நேரம் காத்திருக்க வைத்துவிட்டு, அதன் பின் எல்லாருக்கும் இரண்டு ஆணியைக் கொடுக்கச் சொன்னாராம். அதைப் பெற்றுக் கொண்டவர்கள் ஒன்றும் புரியாமல் ஆணியுடன் இன்னும் சிறிது நேரம் ஆவலோடு காத்திருந்தார்களாம். அதன்பிறகு சபைக்கு வந்த அந்த கமிஷனர், ‘‘நீங்கள் இந்த இரண்டு ஆணிகளையும் உங்கள் வீட்டில் அருகருகே அடித்து வையுங்கள். உங்கள் வியாபாரம் தொடர்பான பொருட்கள் வாங்கும் எல்லா ரசீதுகளையும் ஒரு ஆணியிலும், செலவு தொடர்பான எல்லா ரசீதுகளையும் இன்னொரு ஆணியிலும் மாட்டி வையுங்கள். மாத இறுதியில் இரண்டு ஆணியிலும் உள்ள மொத்த ரசீதுகளின் தொகையையும் தனித்தனியாகக் கூட்டி அவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் எவ்வளவோ, அந்தத் தொகை மீது உரிய வரி கட்ட வேண்டியிருக்கும். அதாவது ஒரே ஒரு வரி. இதுதான் வாட் வரி வசூல் விதிப்பு முறை’’ என்றாராம். பலவிதமான வரிகள் கட்டி வெறுத்துப் போயிருந்த மக்களுக்கு விஷயம் பளிச்சென புரிய, மறுநாள் அவரது அலுவலகப் பெட்டியில் ஒரு துண்டு சீட்டுக்கூட இல்லையாம். எல்லாரும் 'வாட்' வரி கட்ட சம்மதித்துவிட்டார்களாம்.

நன்றி : விகடன் வாரஇதழ்

தமிழ்
01-04-2008, 09:06 AM
நெத்தியடி விளக்கம். எனக்கும் அதன்மீதிருந்த சந்தேகத்தை தீர்த்துவைத்ததற்க்கு நன்றி..

சுகந்தப்ரீதன்
01-04-2008, 10:02 AM
கமல் அண்ணா... நல்லாவே விளக்கம் கொடுத்துருக்காங்க.. அதை நீங்களும் இங்க விரிவாவே கொடுத்திருக்கீங்க... அந்த மக்களை மாதிரி புரியாம இருந்த வாட் வரி இப்போ எனக்கும் அந்த மக்களை மாதிரியே புரிஞ்சுடுச்சு.. நன்றி அண்ணா..!!

க.கமலக்கண்ணன்
01-04-2008, 10:20 AM
நன்றி தமிழ்...

நன்றி சுகந்தப்ரிதன்...

thamilan2007
07-04-2008, 10:16 PM
திரு.கமலகண்ணண் அவர்களுக்கு வணக்கம்

வாட் வரி விதிப்பை பற்றி விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் நன்றி

ஆனால் உண்மை என்ன என்பதை பற்றி அறியாமல் ஆனந்த விகடன் கட்டுரையை கொடுத்துள்ளீர்கள்

தற்போதய விஷம் போல் ஏறி வரும் விலை உயர்வுக்கு முதல் காரணம் இந்த வாட் வரி தான்.


மக்கள் கடும் துன்பத்தில் இருக்கிரார்கள்,உணவு பொருட்கள் முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளது
உதாரணம்- நல்லெண்னைய் 80 ரூபாய் இருந்தது சில மாதங்களுக்கு முன்பு தற்பொழுது 160 ரூபாய்.
இது ஒரு உதாரணம் தான்.பிறகு ஒரு முழு கட்டுரை புள்ளி விபரங்களுடன் தருகிரேன்... நன்றி

விஜி
25-04-2008, 01:57 PM
பகிர்வுக்கு நன்றி. தமிழன் சீக்கிரம் தாருங்கள்...

அனுராகவன்
25-04-2008, 03:50 PM
நன்றி கமல் அவர்களே..
பகிர்வுக்கு என் நன்றி..

க.கமலக்கண்ணன்
26-04-2008, 02:27 PM
நன்றி அனு...