PDA

View Full Version : பெங்களூரில் கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்



thamilan2007
31-03-2008, 07:51 PM
பெங்களூரில் கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர் கன்னட வேதிகே என்ற அமைப்பு மற்றும் பாஜக
தமிழ் படம் ஓடிய திரைஅரங்கம் அடித்து நொருக்கப்பட்டுள்ளது,மிகவும் நாகரீகமற்ற முறையில் நடந்துள்ளனர்
தமிழர்கள் பகுதிகளில் சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது,

எடியூரப்பா வீரப்பா இன்று இருந்தால் நீ உள்ளே வருவீயாப்பா என்று விஜய டி.ராஜேந்தர் அடுக்கு மொழியில் மதுரையில் கூறியது தான் நினைவில் வருகிறது


தமிழ் நாட்டில் உள்ள ஓகனேக்களில் கூட்டு குடிநீர் திட்டத்தை நிரைவேற்றினால் கன்னடர்களுக்கு என்ன வந்தது
முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம் தேட பாஜக செய்த சதி,விரைவில் கர்னாடகா மாநில தேர்தல் வருவதால் தான் இந்த கூத்து

தமிழக முதல்வர் மிகவும் வருத்ததுடன் இந்திய ஒருமைப்பாட்டிற்க்கு ஊறு விளைவித்து விடாதீர்கள் என்று கூறி உள்ளார்
மற்ற நாடுகளில் உள்ள ஒற்றுமையை பார்த்தாவது கன்னடர்கள் திருந்தட்டும்,
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது மாநிலங்களின் ஒற்றுமை,


இனியாவது விரைவில் பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பும் என்று நம்புவோம்.

ஆதி
31-03-2008, 08:06 PM
start music........ போட்டாச்சா..

டீ.ஆர் சொன்னது உண்மைதான் வீரப்பன் இருந்த வரை ஒகேனாக்கல் பற்றி அவர்கள் மூச்சுவிடவே இல்லை...

சிலவிடயங்களில் தமிழ் நாட்டுக்கு வேலியா வீரப்பன் இருந்தார் என்றால் அது மிகையாகாது..

அன்புடன் ஆதி

சாலைஜெயராமன்
31-03-2008, 08:32 PM
சுதேசி இயக்கத்தில் நம்பிக்கை கொண்டுள்ள ஒரு அகில இந்தியக் கட்சி இப்படி பிரித்தாளும் செயலுக்கு துணைபோவதை அகில இந்திய பா.ஜ,க நிர்வாகிகள் தடுத்திருக்க வேண்டும். இதைச் செய்ய முடியாத பட்சத்தில் தமிழ்நாட்டில் தேசியம் பேசுவதால் எந்தப் பயனும் பா.ஜ.க விற்கு ஏற்படப் போவதில்லை. ஆட்சிக் கட்டிலும், பதவியும் படுத்தும் பாடு இந்த அரசியல் ஓரங்க நாடகம். வேறு ஒரு காரணமும் இல்லை திரு எடியூரப்பாவிற்கு.

தங்கவேல்
01-04-2008, 01:27 AM
பாஜாகாவின் கொள்கைகள் கோட்பாடுகள் அனைத்தும் வீதியில் வீசப்படுகிறது. வேடிக்கை பார்க்கும் தலைமை செயலற்று விட்டது. இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் கர் நாடக பாஜாகவினரை என்னவென்று சொல்லுவது.

சுகந்தப்ரீதன்
01-04-2008, 04:08 AM
எடியூரப்பா வீரப்பா இன்று இருந்தால் நீ உள்ளே வருவீயாப்பா என்று விஜய டி.ராஜேந்தர் அடுக்கு மொழியில் மதுரையில் கூறியது தான் நினைவில் வருகிறது.

ம்ம்ம்.. எல்லோருக்கும் புரிந்தால் சரி..!!

இந்தியாவிற்குள் தமிழர்களுக்கு எதிரானபோக்கை கடைப்பிடிப்பதில் கர்நாடகர்கள் எப்போதும் முன்னிலையே வகிக்கின்றனர் அதுதான் ஏனென்று தெரியவில்லை.

குடகு நீரைதான் குறுக்கே அணைக்கட்டி தடுத்துவிட்டார்கள். எங்கள் பகுதியில் இருக்கும் நீரை எடுத்துக் குடிக்கவும் எங்களுக்கே தடையா..?? இந்த முறை என்னசெய்ய போகிறது நமது இந்திய அரசு..?!

தங்கவேல் அண்ணா ஏற்கனவே சொன்னதுபோல் இதில் எத்தனை அப்பாவி மக்கள் பாதிக்கபட போகிறார்களோ தெரியவில்லை இந்த சுயநல அரசியல்வாதிகளால்..?!

சிவா.ஜி
01-04-2008, 04:18 AM
காவிரி நீர் என்று தமிழர் யாராவது உச்சரித்துவிட்டாலே.....அவர்களை அடித்து நொறுக்கும் இந்த கன்னடியர்களை...எந்த ரகத்தில் சேர்ப்பது...?
எங்கள் ஊரில் உள்ள மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 20 சதவீதம் பேர் கன்னடியர்கள் இருக்கிறார்கள்...ஆயிரம் தமிழன் பெங்களூருவில் அடிவாங்கும்போது...இங்கிருக்கும் கன்னடியருக்கு சிறு கீறல்கூட விழாமல் தமிழர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.அடிக்கு அடி,உதைக்கு உதை என்று நாங்களும் இறங்கினால்....இந்திய ஒரே நாடு என்ற நிலை நீடிக்குமா...?

இது முழுக்க முழுக்க மத்திய அரசின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.இந்த நாட்டில்,நீதிமன்றங்கள் செயலிழந்து விட்டதா....சட்டம் ஒழுங்கு அடியோடு அழிந்துவிட்டதா....?

வீரப்பனால் காப்பாற்றப்பட்டு வந்த அடர்ந்த காடுகள் இப்போது அரசியல் கொள்ளையர்களால் மொட்டையடிக்கப்பட்டு வருகிறது...அதே போல ஹொகேனக்கல் காவிரியும் இன்று ஆபத்தில் இருக்கிறது.

ஊருக்கு ஊர் மென்பொருள் மையத்தை திறப்பதில் காட்டும் ஆர்வத்தை தமிழக அரசு இந்த விஷயத்திலும் காட்ட வேண்டும்.வெறும் அறிக்கை விடுவது கையாலாகாத்தனம்.