PDA

View Full Version : கவிஞனின் காதலி



rocky
31-03-2008, 03:34 PM
நீ அழகென்று ஆயிரம்
கவிதைகள் சொல்வேன்
உன்னிடம்,

நீ வெட்கப்பட்டு சிரிக்கும்போது
கவிதைக்கு பொய்தான் அழகு
என்றுகூறி பரிகாசம்
செய்வேன்,

நீ உடனே கொள்ளும்
ஊடலையும், செல்லச் சண்டையையும்,
ஐந்து நிமிடங்கள் மட்டும்
ரசிப்பேன்,

பின் அதற்காக அறைமணி
நேரம் கெஞ்சுவேன், நீ
சிரித்தால் ஆறுமணி நேரம்கூட
கொஞ்சுவேன்,

நீ கொஞ்சிக் கொஞ்சியே
என்னைக் கொல்லப்போகிறாய்
என்பாய்

இல்லை உன்னைக் கொஞ்சிக்
கொஞ்சித்தான் காதலை சாகாமல்
காப்பேன் என்பேன்
நான்,

கவிஞனின் மனைவி வறுமையால்
கஷ்டப்படுவாளென்று செல்லம்மாவாள் உலகம்
அறியும்,

கவிஞனின் காதலியும் காதலால்
கஷ்டப்படுவாளென்று உன்னால்தான் உலகம்
அறியும்.

poornima
31-03-2008, 04:20 PM
கொஞ்சம் கொஞ்சம் செதுக்கினால் இன்னும் நன்றாக வரக்கூடிய கவிதை
இது பாராட்டுக்கள்.

கவிஞர்கள் காதல் கவிதைகள் மட்டுமே எழுதுகிறார்கள்.
அதை வாங்கிப் படிப்பவர்கள் தான் காதலிக்கிறார்கள் என்று ஒரு
சொலவடை உண்டு..

கவிஞனின் காதலியாய் இருப்பதில் கொஞ்சம் சிக்கலும் இருக்கிறது..

எல்லோருக்குமான வார்த்தைகளும்,வர்ணனைகளும் தான் எனக்குமா
என்று அவள் செல்லம்மா(வா)ய் கோபித்துக் கொள்ளும்ப்போது வறுமையாவது ஒண்ணாவது..

செல்வத்தை தேடுவதை விட புதிய வார்த்தைகளை தேடுவதிலேயே கழியும்
காதல் காலம்..

எழுதுக இன்னும் விசாலமாய்..