PDA

View Full Version : திட்டு..



நம்பிகோபாலன்
31-03-2008, 10:34 AM
நீ உதடு கடித்து
பேசும் அழகுக்காகவே
உன்னிடம் திட்டு வாங்க
தப்பு செய்கிறேன்
எங்கே இன்னுமொருமுறை
என்னை திட்டு....

அறிஞர்
31-03-2008, 01:27 PM
காதலியின் கோபத்தில்
எத்தனை அழகு....
அதை ரசிக்க....
ஒரு காதலன்....

அருமை அன்பரே...

அமரன்
01-04-2008, 08:22 AM
திட்டுத் திட்டாய் வாங்க தயாரா இருக்கீங்க போல..
வாழ்த்துகள்!

தொடர் தப்புக்குப்பின்
தட்டும் கிடைக்கலாம்..
சம்மதமா நம்பியாரே!