PDA

View Full Version : சூழ்நிலை கைதி

சுகந்தப்ரீதன்
31-03-2008, 08:07 AM
எனக்குள் எத்தனையோ
குறைகளும் குற்றங்களும்..!!
மூடிவிட மூடியில்லை
மூடவும் நான் முயலவில்லை..!!

எனக்கே நன்றாக தெரிகிறது
நான் ஒரேநிலையில்
இல்லையென்று....!!

என்செய்வது சூழ்நிலைகள்
சூறாவளியாய் வீசியபோது
பற்றிக்கொள்ள பாவியெனக்கு
யாருமில்லையே...?!!

தனியே தத்தளிக்கும் என்னை
மீட்டெடுக்க என்னில் பாதியை
நானே பறிக்கொடுத்தேன்...!!

மீண்டுவந்த என்னில்
மீளாத சில மாற்றங்கள்..!!
மற்றவர்களுக்கு அவை
கசக்கலாம் புளிக்கலாம்
ஏனோ எனக்கு
அதுதானே இனிக்கிறது..!!

poornima
31-03-2008, 04:34 PM
ஆக சூழ்நிலை கைதியாய் இருப்பதை விரும்பி ஏற்கிறீர்கள். அப்படித்தானே..

//என்னில் பாதியை
நானே பறிக்கொடுத்தேன்...!! //

கொஞ்சம் மீமெய்மையியல்(Surrialism) தொனிக்கும் வரிகள்.கனமான கவிதைகள் பல எழுதுபவர் போல் தெரிகிறது..

சுகந்தப்ரீதன்
01-04-2008, 10:39 AM
கொஞ்சம் மீமெய்மையியல்(Surrialism) தொனிக்கும் வரிகள்.கனமான கவிதைகள் பல எழுதுபவர் போல் தெரிகிறது..
ஆமாம்.. ஆமாம்... கனமா எழுதுவேன் ஆனா அதுல ஒன்னு ரெண்டுதான் உருப்படியா தேறுது..!!:icon_rollout:

surrialism என்பதன் தமிழ்வார்த்தை வடிவத்தை இதுவரை அறியாமல் இருந்தேன். அறியவைத்தமைக்கு மிக்க நன்றி பூர்ணிமா அவர்களே..!!

ஆதி
01-04-2008, 10:42 AM
surrialism என்பதன் தமிழ்வார்த்தை வடிவத்தை இதுவரை அறியாமல் இருந்தேன். அறியவைத்தமைக்கு மிக்க நன்றி பூர்ணிமா அவர்களே..!!

சுகந்தா அப்துல் ரகுமானுக்கு புகழ் தேடித்தந்த பால்வீதி தமிழின் மீமெய்மைத் தொகுப்பு.. நீ படித்ததில்லையா ?

அன்புடன் ஆதி

சுகந்தப்ரீதன்
01-04-2008, 10:46 AM
சுகந்தா அப்துல் ரகுமானுக்கு புகழ் தேடித்தந்த பால்வீதி தமிழின் மீமெய்மைத் தொகுப்பு.. நீ படித்ததில்லையா ?

அன்புடன் ஆதி
இதுவரை இல்லை நண்பா..!!
இன்னும் நான் தமிழில் படிக்க வேண்டியதும் கற்க வேண்டியதும் நிறைய இருக்கிறது ஆதி.
சூழ்நிலைகள் சுகநிலைகள் ஆகும்போது எல்லாவற்றையும் கற்கவேண்டும் என்ற பேராசை எனக்குள் இன்னும் இருக்கு நண்பா..!!பார்க்கலாம் காற்று மாற்றுதிசையில் வீசுகிறதா என்று..!!

ஓவியன்
14-05-2008, 12:32 PM
சூழ்நிலைகளை நமக்கு ஏற்ற வகையில் சாதகமாக மாற்றியமைக்க வேண்டியது நம் திறமையில் தங்கியுள்ளது...!! :)

இந்த சூழ்நிலை சுமூக நிலையாக மாற என் பிரார்த்தனைகளும் சுகந்தா..!!

சுகந்தப்ரீதன்
16-06-2008, 01:17 PM
சூழ்நிலைகளை நமக்கு ஏற்ற வகையில் சாதகமாக மாற்றியமைக்க வேண்டியது நம் திறமையில் தங்கியுள்ளது...!! :)
உண்மைதான் மறுப்பதற்க்கில்லை..!!

இந்த சூழ்நிலை சுமூக நிலையாக மாற என் பிரார்த்தனைகளும் சுகந்தா..!!
மிக்க நன்றி ஓவியண்ணா..!!

kavitha
17-06-2008, 04:52 AM
மற்றவர்களுக்கு அவை
கசக்கலாம் புளிக்கலாம்
ஏனோ எனக்கு
அதுதானே இனிக்கிறது

ஒரு மனிதன் எல்லோருக்கும் நல்லவனாக எல்லா சமயங்களிலும் இருக்கமுடியாது என்பது உண்மை. அத்தகைய சமயங்களில் இத்தகைய சமரசங்கள் தேவைதான்.

கவிதை நன்றாக இருக்கிறது சுகந்தா. தொடர்ந்து எழுதவும்.

ஆதவா
24-06-2008, 01:09 PM
நாம் எப்படி இருக்கவேண்டுமோ அப்படித்தான் இருக்கவேண்டும். நமக்காக வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை,

பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்று தலைவர் பாடுவார். அவர் சொன்ன அர்த்தம் வேறு.. ஆனால் பிறருக்காக வாழ்ந்திடாதே என்ற மறைபொருளும் உண்டு.

நான் நல்லவனா கெட்டவனா என்பதைக் காட்டிலும் என் மனத்திற்குத் தகுந்தவனா என்பதே மிக முக்கியம். நமது மனம் என்றுமே ஓரிடத்தில் நிற்காது. அதற்கு ஓய்வொழிச்சல் கிடையாது. அதற்குத் தீனியே நமது சூழ்நிலைகள்.

வாழ்த்துகள் சுபி

சுகந்தப்ரீதன்
28-06-2008, 03:03 PM
நான் நல்லவனா கெட்டவனா என்பதைக் காட்டிலும் என் மனத்திற்குத் தகுந்தவனா என்பதே மிக முக்கியம். நமது மனம் என்றுமே ஓரிடத்தில் நிற்காது. அதற்கு ஓய்வொழிச்சல் கிடையாது. அதற்குத் தீனியே நமது சூழ்நிலைகள்.

வாழ்த்துகள் சுபி

நன்றி ஆதவரே.. நயமான பின்னூட்டமிட்டு வாழ்த்தியமைக்கு..!!:mini023: