PDA

View Full Version : பாக்கீஸ்தானுக்கு கடிதம்

ஆதி
30-03-2008, 05:41 PM
ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் எழுதியக் கவிதை, எல்லையில் நடந்த ஒரு கொடுமையின் பாதிப்பால் எழுதியது

தங்கையே பேரெழில் நங்கையே - என்
தங்கமே எனைப்பிரிந்த அங்கமே
சொந்தமே இசைச் சந்தமே - தேன்
சிந்துமே நமுயர் பந்தமே

வெள்ளையர் பிரித்திட்டார் எல்லையை - அதிலுன்
பிள்ளையர் கொடுக்கிறார் தொல்லையே
அண்டையே போதுமிந்த சண்டையே - வேண்டாமே
இரண்டகம் கொண்ட வஞ்சகம்

இரத்தமும் கடும் யுத்தமும் - வெடிச்
சத்தமும் கேட்குது நித்தமும்
அயல்தேசமே போதுமுன் வேசமே - உன்
மோசத்தால்நீ தேடுவாய் நாசமே

அச்சமோ எமக்கில்லை சத்தியம் - அன்பு
அகிம்சையே எங்கள் லட்சியம்
இச்சாப் பத்தியம் எமக்கு முக்கியம் - இதை
அறிவது உனக்கு அவசியம்

இணைந்திருந்த காலங்களில்
என்னவாய் மகிழ்ந்திருதோம் - நம்
மைந்தர்களின் செயல்களால்
மகிழ்ச்சியில் களிப்படைந்தோம்
ஒருமனப் பான்மையிலே
அன்னியரை அகற்றினோம் - இன்று
இருமணப் பான்மையில்
வேறுப்பட்டு வாழ்கிறோம்

சகோதரி என்னில்
பிறந்தவள் தானேநீ - என்
எண்ணங்கள் ஒருசில
உன்னில் பதிந்திருக்களாம்
அவற்றை முன்வைத்து
இவற்றைக் கூறுகிறேன் - மடமையை
ஒழி மறைமுகத்
தாக்குதலை நிறுத்து!

போர்முனைப் புதிதல்லஎன் மைந்தருக்கு - அது
ஓர்பொழுது போக்கே எமக்கு
வீரமரபினில் வந்தவர் என்னோர் - சிறு
சலசலப்புக்கு அஞ்சுவார் இல்லை!

வந்தே மாதரமென
வாளெடுத்து வருவோம்
தந்தோம் ஆயிரம்
உயிரெனத் தருவோம்
சிந்தாபாத் என்றே
குருதியும் சிந்துவோம்
அசையும் ஜெயக்கொடி
ஜெயஹிந்தே சொல்லும்

கயமையைவிடு கட்டுப் பாடாயிரு - உடன்பிறப்பே
களமழைத்து காணாமல் போய்விடாதே
இந்திய ராணுவம் திரண்டு வந்தால்
உந்தன் ராஜ்ஜியம் இருண்டு போகும்!

அன்புடன் ஆதி

ஓவியன்
30-03-2008, 05:49 PM
ஒன்றாய் பிறந்து சொத்துப் பிரிப்பில் சொந்தம் மறந்து சண்டையென கோலெடுத்து நிற்கும் சகோதரர்களின் நிலையை உணர வைத்தது உங்கள் வரிகள் ஆதி...!!

எந்தவொரு விட்டுக் கொடுப்புக்கும் ஒரு எல்லையுண்டு...
அந்த விட்டுக் கொடுப்புக்களை பயன்படுத்திடும் காலக் கெடுவுக்கும் ஒரு எல்லையுண்டு...

எல்லை மீறினால், புழுவும் புயலாகும்...
புழுவே புயலாகையில் புயல்.........???

இது உங்கள் கவி வரிகளுக்கும் பொருந்துகிறது
நம் வாழ்க்கையில் பல இடங்களுக்கும் பொருந்துகிறது...!!

பாராட்டுக்கள் ஆதி.....!!

செல்வா
30-03-2008, 05:53 PM
ஒன்பதாம் வகுப்பிலேயே இளம் பாரதியாய் இந்த ஆதி.......

செந்தமிழரசி
31-03-2008, 05:00 AM
வார்த்தைகளைக் கைப்பிடிக்க படிப்படியாய் நீங்கள் முயன்றிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கடைசி வரிகள் கவர்ந்தது என்னை. வாழ்த்துக்கள்.

நன்றி

ஆதி
31-03-2008, 07:44 AM
ஒன்பதாம் வகுப்பிலேயே இளம் பாரதியாய் இந்த ஆதி.......

இளம் நிதியரசர் நு சொல்லிருந்தான் இன்னும் சந்தோசப்பட்டிருப்பன்டா.. :D

பாரதி பா ரதி அவர ஏன்டா என்னோட சேக்குற.. :)

அன்புடன் ஆதி

சுகந்தப்ரீதன்
31-03-2008, 07:51 AM
எந்தவொரு விட்டுக் கொடுப்புக்கும் ஒரு எல்லையுண்டு...
அந்த விட்டுக் கொடுப்புக்களை பயன்படுத்திடும் காலக் கெடுவுக்கும் ஒரு எல்லையுண்டு...
எல்லை மீறினால், புழுவும் புயலாகும்...
புழுவே புயலாகையில் புயல்.........???.....!!

ம்ம்ம்ம்...அண்ணா நீங்கள் கூறுவதை இன்னும் உலகம் உணராததால் உதிர்ந்து கொண்டிருக்கின்றன இன்றைக்கும் உயிர்கள்...!!

ஆதி அசத்தல் ரகம்... ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு கவிதையா..??
வாழ்த்துகளும் பாராட்டுகளும்... தொடரட்டும் உன் கவிப்பயணம்..!!

ஆதி
31-03-2008, 12:45 PM
ஒன்றாய் பிறந்து சொத்துப் பிரிப்பில் சொந்தம் மறந்து சண்டையென கோலெடுத்து நிற்கும் சகோதரர்களின் நிலையை உணர வைத்தது உங்கள் வரிகள் ஆதி...!!

எந்தவொரு விட்டுக் கொடுப்புக்கும் ஒரு எல்லையுண்டு...
அந்த விட்டுக் கொடுப்புக்களை பயன்படுத்திடும் காலக் கெடுவுக்கும் ஒரு எல்லையுண்டு...

எல்லை மீறினால், புழுவும் புயலாகும்...
புழுவே புயலாகையில் புயல்.........???

இது உங்கள் கவி வரிகளுக்கும் பொருந்துகிறது
நம் வாழ்க்கையில் பல இடங்களுக்கும் பொருந்துகிறது...!!

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, நாடுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், மாவட்டத்திற்கு மாவட்டம், வட்டத்திற்கு வட்டம், ஊருக்கு ஊர், தெருக்கு தெரு, வீட்டுக்கு வீடு என்று எங்கும் இந்த வேற்றுமை இருக்கதான் செய்கிறது, புரிந்து உணர்ந்து மாற்றம் உறுவரோ மக்கள்..

பாராட்டியப் பின்னூட்டத்திற்கு நன்றி ஓவியரே

அன்புடன் ஆதி

அறிஞர்
31-03-2008, 12:59 PM
அருமையான கடிதம்...
பாகப்பிரிவினை எப்படியாய்..
பலர் வாழ்வில் விளையாடுகிறது.....

செல்வா
31-03-2008, 02:35 PM
இளம் நிதியரசர் நு சொல்லிருந்தான் இன்னும் சந்தோசப்பட்டிருப்பன்டா.. :D

பாரதி பா ரதி அவர ஏன்டா என்னோட சேக்குற.. :)

அன்புடன் ஆதி
இந்த கவிதைய படிச்சதும் அவரோட பாடல்தான் நினைவுக்கு வந்ததடா....

ஷீ-நிசி
31-03-2008, 03:00 PM
ஒன்பது வயதிலேயே வரியமைப்புகள் பிரமாதம்...
வாழ்த்துக்கள்! ஆதி!

poornima
31-03-2008, 04:27 PM
//இணைந்திருந்த காலங்களில்
என்னவாய் மகிழ்ந்திருதோம் - நம்
மைந்தர்களின் செயல்களால்
மகிழ்ச்சியில் களிப்படைந்தோம்
ஒருமனப் பான்மையிலே
அன்னியரை அகற்றினோம் - இன்று
இருமணப் பான்மையில்
வேறுப்பட்டு வாழ்கிறோம்
//

உண்மையான வரிகள். பாராட்டுக்கள். பிரிவினைகளால் உறவுகள் முறிந்த
வலி உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது.

அமரன்
01-04-2008, 08:42 AM
இரண்டகம் கொண்ட வஞ்சகம்

என்ன பொதித்து எழுதினீர்களோ.
இரு வித நேரெதிர் அகம் காட்டுபவர்களால்த்தான் பல பிரச்சினைகள் இன்னும் இயற்கை எய்தவில்லை.
சொல்வதற்கு இப்படிப் பல கவிதையில்..
பாராட்டுகள் ஆதி!

ஆதி
01-04-2008, 09:34 AM
வார்த்தைகளைக் கைப்பிடிக்க படிப்படியாய் நீங்கள் முயன்றிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கடைசி வரிகள் கவர்ந்தது என்னை. வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கு நன்றி அரசி..

அன்புடன் ஆதி

ஆதி
01-04-2008, 09:38 AM
ஆதி அசத்தல் ரகம்... ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு கவிதையா..??

இல்லை சுகந்தா.. எட்டாம் வகுப்பு மொத்தமே 3 கவிதைதான் எழுதினேன்..

ஒன்பதாம் வகுப்பில் இன்னும் கொஞ்சம் அதிகமாய் ஆனால் எத்தனை என்று நினைவில் இல்லை.. பத்தாம் வகுப்பில் எனக்கு பிடித்தவைகளை என்னைப் பாதித்தவைகளை என அதிகமாய் எழுத ஆரம்பித்தேன், அதுப்போல் கவிதைகள் நன்றாக உள்ளது என்று அங்கீகாரமும் கிடைத்தது அந்த பருவத்தில்தான்..

பாராட்டுக்கு நன்றி சுகந்தா..

அன்புடன் ஆதி